World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government blocks international aid to detention camps

இலங்கை அரசாங்கம் தடுப்பு முகாம்களுக்கான சர்வதேச உதவியை தடுக்கிறது

By Sarath Kumara
22 May 2009

Use this version to print | Send feedback

ஐ.நா. மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் வேண்டுகோள் விடுத்த போதிலும், கொழும்பு அரசாங்கம் அதன் தடுப்பு முகாம்களுக்கு தடையற்ற அனுமதியை வழங்க மறுத்துள்ளது. இந்த முகாம்களில் இப்போது குறைந்தபட்சம் 280,000 தமிழ் பொது மக்கள் பயங்கரமான நிலைமையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. அகதிகள் முகவரமைப்பான யூ.என்.எச்.சி.ஆர். குறிப்பிடுவதன் படி, கடந்த சில நட்களில் சுமார் 80,000 பேர் முகாமுக்கு வந்துள்ளனர்.

கடந்த வாரக் கடைசியில், 130,000 பேருக்கும் அதிகமான அகதிகள் தங்கியிருக்கும் வவுனியா நகருக்கு அருகில் உள்ள மெனிக் ஃபார்மில் உள்ள பிரமாண்டமான முகாமுக்கு உதவிப் பொருட்களை கொண்டு சென்ற ட்றக் வாகனங்களை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் தடுத்து, செஞ்சிலுவைச் சங்கத்தின் நடவடிக்கைகளை நிறுத்தச் செய்தது. வடகிழக்கு மாவட்டமான முல்லைத் தீவின் முன்னாள் யுத்த வலயத்துக்கு உதவி அமைப்புக்களும் பத்திரிகையாளர்களும் செல்வதைக் கூட அரசாங்கம் தடை செய்தது. அங்கு இடைத் தங்கல் ஆஸ்பத்திரிகளில் சுமார் 1,000 நோயாளர்கள் இருந்தனர்.

"பாதுகாப்பு காரணங்களுக்காக" அன்றைய தினம் "மேலதிக கட்டுப்பாடுகளை" அரசாங்கம் விதித்த பின்னர் நடவடிக்கைகளை நிறுத்துவதைத் தவிர வேறு தேர்வுகள் இருக்கவில்லை என கடந்த புதன் கிழமை செஞ்சிலுவைச் சங்க இலங்கை நடவடிக்கைகளுக்கான தலைவர் போல் காஸ்டெல்லா, அல் ஜஸீராவுக்குத் தெரிவித்தார். "பிரதேசத்துக்கு செல்ல எங்களுக்கு அனுமதி வழங்கப்படாத காரணத்தால் அந்த பொது மக்களின் தலைவிதி என்ன மற்றும் அங்குள்ள நிலைமை என்ன என்று எமக்குத் தெரியாது," என காஸ்டெல்லா மேலும் கூறினார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தண்ணீர், உணவு, சொந்த சுகாதார தேவைகள் மற்றும் ஏனைய அவசரத் தேவைகள் விநியோகிக்கப்படுவதையும் நிறுத்தியுள்ளது. முகாம்களுக்கு செல்வதற்கான அனுமதி அவசரமாகத் தேவைப்படுவதாக யூ.என்.எச்.சி.ஆர். பேச்சாளர் தெரிவித்தார். "விநியோகிக்கப்பட வேண்டிய பெருந்தொகையான மனிதாபிமான தேவைகள் எங்களிடம் இருக்கின்றன," என அவர் கூறினார்.

கடந்த வாரக் கடைசியில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்த பின்னர், உதவி விநியோகம் எப்படி "பாதுகாப்புக்கு" அச்சுறுத்தலாக இருக்கும் என விளக்க அரசாங்கம் மறுத்துள்ளது. யுத்த வலயத்தில் என்ன நடந்தது என்பதையும் தடுப்பு முகாம்களின் நிலைமைகளையும் மறைப்பதே அதன் உண்மையான நோக்கமாகும்.

அகதிகள் மத்தியில் புலி போராளிகள் இருக்கக் கூடும் என்ற பீதியின் காரணமாக, முகாம்களுக்குள் அகதிகளைப் பார்க்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது தேவையாக இருக்கிறது என மீள்குடியேற்ற அமைச்சர் ரிஸார்ட் பதூர்தீன் கூறிக்கொண்டார். "முகாம்களில் சுமார் 3,000 புலி போராளிகள் உள்ளனர் மற்றும் நாம் இன்னமும் சல்லடைப் போட்டுத் தேடுவதை முடிக்கவில்லை," என அவர் அசோசியேடட் பிரஸ்சுக்குத் தெரிவித்தார். "சல்லடைபோட்டுத் தேடுவது" என்பதையோ அல்லது அது உதவி விநியோகத்தை எப்படி தடுக்கும் என்பதையோ அவர் விளக்கவில்லை.

இன்று இலங்கைக்கு வருகின்ற ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், செவ்வாய் கிழமை இலங்கை சுகாதார அமைச்சரை ஜெனீவாவில் சந்தித்ததோடு யுத்த வலயத்துக்கு செல்ல வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்தார். ஐ.நா. மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பேச்சாளர் எலிசபத் பைர்ஸ், யுத்த வலயத்தில் இன்னமும் காயமடைந்த சிவிலியன்கள் இருப்பதற்கான எந்தவொரு தகவலும் ஐ.நா. விடம் இல்லாத போதிலும், "எஞ்சியுள்ளவர்களை அப்புறப்படுத்த" ஐ.நா. வுக்கு அல்லது செஞ்சிலுவைச் சங்கத்துக்கு வழி கொடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

யுத்த வலயத்தில் இருந்து கசிந்த மட்டுப்படுத்தப்பட்ட செய்திகளின் படி, இராணுவம் புலிகளுடன் இறுதி மோதலில் ஈடுபட்ட போது நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆகவே தான், இராணுவத்தின் யுத்தக் குற்றங்களுக்கான பிரதான சாட்சிகளான மூன்று அரசாங்க வைத்தியர்களையும் அரசாங்கம் கைதுசெய்துள்ளது. துரைராஜா வரதராஜா, தங்கமுத்து சத்திய மூர்த்தி மற்றும் வி. சன்முகராஜாவும் மோதலின் மத்தியிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

அரசாங்கம் மெளனத்தைக் கலைத்து, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றி சர்வதேச ஊடகங்களுக்கு பொய் தகவல்களை கொடுத்த குற்றச்சாட்டுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியதை அடுத்து, இந்த வைத்தியர்களின் உடல்நலன் பற்றி சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கேள்வியெழுப்பியுள்ளன.

கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு இரு வைத்தியர்களை தடுத்து வைத்திருப்பதோடு மற்றையவர் யுத்த வலயத்தில் இருந்து வெளியேறும் போது காயமடைந்ததை அடுத்து எந்தவொரு உத்தியோகபூர்வ குற்றச்சாட்டும் இன்றி ஆஸ்பத்திரியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இலங்கையில் பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டுள்ள "புலிகளுடன் அவர்களுக்கு தொடர்பு இருக்கக் கூடிய சாத்தியம்" பற்றி டாக்டர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அல் ஜஸீராவுக்குத் தெரிவித்தார்.

புலிகளுடன் தொடர்பு என்ற குற்றஞ்சாட்டை நிராகரித்த டாக்டர் சன்முகராஜாவின் மைத்துனர் சுரேஷ் குமாரிடம், "ஆஸ்பத்திரியில் நிறைய நோயாளர்கள் உள்ளனர், நான் எப்படி நோயாளர்களை விட்டுவிட்டு வரமுடியும்? என இரண்டு வாரங்களுக்கு முன்னர் வைத்தியர் கேட்டதாக, நோர்வே உதவிக் கமிட்டியின் வைத்தியர் மடாஸ் கில்பேர்ட் அல் ஜஸீராவுக்கு தெரிவித்தார். "என்ன நடந்தது, நடக்கின்றது என்பதற்கு அவர்கள் சாட்சி... அரசாங்கத்தைப் பொறுத்தளவில் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றுவது இலகுவானது... அப்போது அவர்கள் முழுமையாக மெளனித்துவிடுவர்."

புலி உறுப்பினர்கள் என சொல்லப்படுபவர்களுக்காக தடுப்பு முகாம்களில் "சல்லடைபோடும்" அரசாங்கம், முகாம்களில் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குகிறது. அரசாங்க சார்பு துணைப் படைகள், இரகசியமான உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடன் 12 வயது இளைஞனைக் கூட கடத்தி செல்கின்றன. சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளடங்கிய ஒரு குடை அமைப்பான, சிறுவர் போராளிகளை நிறுத்துவதற்கான கூட்டமைப்பு, முகாம்கள் முற்கம்பிகளால் சூழப்பட்டு ஆயுதம் தரித்தவர்களால் காவல் செய்யப்பட்ட போதிலும் கூட சிறுவர்கள் கடத்தப்படுவது பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை பெற்றிருப்பதாக தெரிவித்தது.

கூட்டமைப்பின் பேச்சாளரான சாரு லதா ஹொக் பி.பி.சி. க்குத் தெரிவித்ததாவது: "சிலர் கப்பம் பெறுவதற்காக கடத்தப்படுகின்றனர், அவர்கள் கப்பத்துக்காக கடத்தப்படுகின்றனர், மற்றும் நகைகள் வைத்திருக்கும் தாய்மார்கள் பேச்சுவார்த்தை மூலம் விடுவித்துக்கொண்டுள்ளனர் அவர்களின் விடுதலையை பற்றி முகாம்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக்கொள்ள முடியும்." வேறு சம்பவங்களில், சிறுவர்கள் புலிகளின் "முன்னால் சிறுவர் போராளிகளாக சந்தேகிக்கப்படுகின்றனர்". ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் உட்பட சில அரசாங்க சார்பு துணை ஆயுதக்குழுக்கள், முகாம்களுக்குள் தடையின்றி நுழைவது வெளிப்படையானது, என அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தோடு சேர்ந்த கொலைப் படைகளால் "புலி சந்தேக நபர்கள்" காணாமல் ஆக்கப்படுவது கடந்த மூன்று ஆண்டுகளாக பொதுவானதாக வந்துள்ளது. உதவிக் குழுக்கள் மீது கட்டுப்பாடுகளை திணிக்கும் வரை, 1,800க்கும் மேற்பட்ட முன்னால் புலி போராளிகள் செஞ்சிலுவைச் சங்கத்தில் பதிவாகியுள்ளதோடு அரசாங்கம் அவர்களது தலைவிதி பற்றி இன்னமும் தீர்மானிக்கவில்லை. இன்றைய ஐரிஷ் டைம்ஸ் பத்திரிகையின்படி, அதிகாரிகளிடம் சரணடைந்த பின்னர் பெண் புலி போராளிகள் கொல்லப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மெனிக் ஃபார்ம் முகாமூக்கு வெளியில் 11 இளம் யுவதிகளின் சடலங்கள் தொண்டை வெட்டப்பட்டு கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உதவி அமைப்புகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கும் முன்னரும் கூட, முகாம்களின் நிலைமை கொடூரமானதாக இருந்தது. யுத்த வலயத்தில் இருந்து வரும் அகதிகள் "சுகயீனமுற்று, பசியுடன் இருப்தோடு மோசமான போசாக்கின்மை மற்றும் வயிற்றுப் போக்காலும்" துண்பப்படுவதோடு "மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுடன்" முகாம்களில் "அளவுக்கு மீறிய கூட்டம் இருக்கின்றது" என யூ.என்.எச்.சி.ஆர். பேச்சாளர் ரெட்மொன்ட் தெரிவித்தார்.

கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் வரை, "யுனிசெப்பும் அதன் பங்காளி அமைப்புக்களும் மில்லியன் கணக்கான லீட்டர் தண்ணீர் வழங்குதல், மலசலகூடங்கள் அமைத்தல், தாய் சேய் நலத்துக்கு உதவுதல், போசாக்கு நிலையங்களை அமைத்தல், சிறுவர்களுக்கு கற்பதற்கான இடங்களை அமைத்தல் மற்றும் பிரிந்து போயுள்ள சிறுவர்களை மீண்டும் ஒன்றிணைத்தல் போன்ற வேலைகளில்" சுழற்சி முறையில் செயற்பட்டதாக யுனிசெப்பின் இலங்கை பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் தெரிவித்தார்.

மக்கள் "மருத்துவ பராமரிப்புக்காக ஏங்குகின்றனர்" என எல்லைகளற்ற வைத்தியர்கள் (எம்.எஸ்.எஃப்) அமைப்பு தெரிவிக்கின்றது. ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திடீரென பெருந்தொகையானவர்கள் வந்ததால் நிலைமை "மட்டுமீறியுள்ளது" என அந்த அமைப்பு கூறியது. வவுனியா சோதனை நிலையத்துக்கு 10,000 பேர் வந்தாலும், கடுமையாக சுகயீனமுற்ற 200 பேருக்கு மட்டுமே எம்.எஸ்.எஃப். சிகிச்சையளிக்க முடியும்.

அம்ஸ்டர்டாமில் உள்ள எம்.எஸ்.எஃப். இயக்க முகாமையாளர் கட்ரீன் கொப்பன் தெரிவித்ததாவது: "மிகவும் மோசமாக சுகயீனமுற்றவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் பேரில், சிகிச்சையளிக்கப்பட வேண்டிய பல நோயாளர்களால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற முடியவில்லை. சுமார் 1,900 நோயாளர்கள் தற்போது வவுனியா ஆஸ்பத்திரியில் உள்ளனர். அங்கு 450 படுக்கைகள் மட்டுமே உள்ளன. பெரும்பாலானவர்கள் நிலத்தில் போடப்பட்ட மெத்தைகளில் மற்றும் நுழைவாயில்களில் படுத்துக்கொள்கின்றனர்.

கிட்டத்தட்ட 100,000 அகதிகள் போசாக்கின்மையால் வாடுவதுடன் மேலும் 50,000 பேர் அடுத்துவரும் நாட்களில் வரவிருகின்றனர். ஒரு சர்வதேச நிவாரண அமைப்பான சேவ் த சில்ரன், மேலதிக தண்ணீர் மற்றும் உணவு உடனடியாக கிடைக்காவிட்டால், தாய்மார்களின் மற்றும் சிறுவர்களின் உயிர் ஆபத்தானதாக இருக்கும், என தெரிவிக்கின்றது. "போதுமான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவம் இன்றி, பல வாரங்களாக சிக்கியிருந்து தாய்மாரும் சிறுவர்களும் ஏற்கனவே மிகவும் துன்பப்பட்டுள்ளனர்," என அந்த அமைப்பைச் சேர்ந்த வைத்தியர் பல்வன்ட் சிங் பிரிட்டனை தளமாக்க கொண்ட டெலிகிராப்புக்குத் தெரிவித்தார்.

தமிழ் அகதிகள் மீதான அரசாங்கத்தின் அலட்சியத்தை வெளிப்படுத்திய தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் ஆனையாளர் நாயகம் லக்ஸ்மன் ஹுலுகல்ல, "அத்தகை ஒரு இடத்தில் ஐந்து நட்சத்திர ஆஸ்பத்திரியை எதிர்பார்க்க முடியாது. நாங்கள் அடிப்படைகளை வழங்குகிறோம்... நீங்கள் ஒரு ஓக்ஸ்போர்ட் கல்லூரியை எதிர்பார்க்க முடியாது," என தெரிவித்தார்.

இராஜபக்ஷ அரசாங்கம், வடமேற்கில் மன்னாரில் இருந்து வடகிழக்கில் முல்லைத் தீவு வரை முழு வட பிராந்தியத்தையும் மக்களற்ற சூனியப் பிரதேசமாக்கியுள்ளது. தமது வீடுகளுக்கு செல்ல பலர் வேண்டுகோள் விடுத்த போதிலும் பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் தடுப்புமுகாம்களில் உள்ளனர். சர்வதேச கண்டனத்தின் எதிரில், குறைந்தபட்சம் மூன்று வருடம் அவர்களை தடுத்து வைக்கும் அரசாங்கத்தின் ஆரம்பத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இந்திய அமைச்சர்கள் இராஜபக்ஷவை சந்தித்து தமது அக்கறையை வெளிப்படுத்திய பின்னர் விடுக்கப்பட்ட ஒரு கூட்டறிக்கை, பெரும்பாலான அகதிகளை 180 நாட்களுக்குள் மீறக் குடியமர்த்தும் திட்டத்தை அறிவித்துள்ளது.

எவ்வாறெனினும், உட்கட்டமைப்புத் தேவைகள் சிதைக்கப்பட்டுள்ளதால் மீளக் குடியமர்த்துதல் தாமதமாகும் என அரசாங்கம் இன்னமும் கூறிக்கொள்வதானது, தமிழ் வெகுஜனங்களை ஒட்டுமொத்தமாக தண்டிக்கும் அடிநிலையில் உள்ள நிகழ்ச்சித் திட்டத்தை சுட்டிக் காட்டுகிறது. தீவில் "விடுவிக்கப்பட்ட கிழக்கைப்" போல், பல ஆண்டுகளுக்கு வடக்குப் பிரதேசத்தையும் இராணுவ ஆக்கிரமிப்பில் வைத்திருக்க அரசாங்கம் தயாரித்துக் கொண்டிருக்கிறது.