World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : கொரியா

North Korean nuclear test triggers international tensions

வட கொரியாவின் அணுவாயுதச் சோதனை சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்துகிறது

By Peter Symonds
27 May 2009

Use this version to print | Send feedback

திங்களன்று வட கொரியா வெடித்த ஒரு சிறிய அணுகுண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையினால் உடனடியான கண்டிக்கப்பட்டதுடன், வடகிழக்கு ஆசியாவில் அழுத்தங்களைத் தீவிரமாக அதிகப்படுத்தியது. பியோங்யாங் இன்னும் அதிக அணுவாயுதம் மற்றும் கண்டங்களுக்கிடையாலான ஏவுகணைகள் சோதனை பற்றி பல வாரங்களாக எச்சரிக்கை கொடுத்துள்ளதுடன், ஏப்ரல் 5 ஏவுகணை ஆய்வு நடத்தியது பற்றி குறைகூறிய அறிக்கைக்காக ஐ.நா. மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வட கொரியா வலியுறுத்தியுள்ளது. அணுவாயுதக் கருவியை சோதித்து மட்டும் இல்லாமல், வட கொரிய இராணுவம் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பல குறைந்ததூர ஏவுகணைகளையும் பரிசோதித்தது.

இச்சோதனை வட கொரியாவின் இரண்டாவது சோதனை ஆகும். அக்டோபர் 2006ல் நடந்திய முதல் பரிசோதனை தொழில்நுட்ப வல்லுனர்களால் பரந்த அளவில் ஒரு தோல்வி என்று மதிப்பிடப்பட்டதுடன், ஒரு கிலோ டன் விளைவுதான் அதில் இருந்தது. வடகொரிய அறிவிப்பு சமீபத்திய சோதனையை "வெற்றிகரமானது", "இராணுவத்திற்கும் மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிப்பு" என்று கூறியுள்ளபோது, பல ஆரம்ப மதிப்பீடுகள் விளைவை ஒரு சில கிலோ டன்கள்தான் இருக்கும் என்கின்றன. கதிரியக்க வாயுக்கள் பற்றிய கூடுதலான பகுப்பாய்வுதான் வெடிப்பின் தன்மை பற்றி இன்னும் துல்லியமான தகவலைக் கொடுக்க முடியும்.

"நாட்டையும் சோசலிசத்தையும்" காப்பதற்கு சோதனை உதவும் என்ற அபத்தமான கூற்றை வட கொரிய அறிக்கை கூறியுள்ளது. ஒரு சில தரமற்ற குண்டுகளை தயாரிக்கும் ஸ்ராலினிச ஆட்சியின் திறன் வட கொரியாவை அமெரிக்காவிடம் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல் திறன் அல்லது பெரிய சக்திகளிடம் இருந்து பாதுகாக்க உதவாது. அவை நாட்டின் ஓரிரு தொழில்துறை மற்றும் இராணுவத் திறனை முற்றிலும் தகர்க்கும் ஆற்றல் படைத்தவை. அமெரிக்காவை எதிர்த்து நிற்க முடியும் என்று காட்டிக் கொண்டாலும், பியோங்யாங்கின் பரிசோதனையின் அடித்தளத்தில் இருக்கும் நோக்கம் பெரிய சக்திகளுடன் ஒரு அரசியல் உடன்டாட்டிற்கு அழுத்தம் கொடுப்பதும் உலக முதலாளித்துவ ஒழுங்கில் ஒரு இடத்தைப் பெறுவதும்தான்.

தன்னுடைய நோக்கங்கள் எதையும் அடைவது என்பதற்கு மாறாக வடகொரியாவின் இரண்டும் அணுவாயுதச் சோதனை வாஷிங்டனின் மிக அதிக வலதுசாரி அடுக்குகளின் பிடியில் விழுவதுடன் வடகிழக்கு ஆசியாவில் ஆபத்தான ஆயுதப் போட்டியை தூண்டும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உடனடியாக இச்சோதனையை, "பொறுப்பற்ற முறையில் சர்வதேச சமூகத்தை அறைகூவலுக்கு உட்படுத்துதல்" என்று கண்டித்தார்; மேலும் அமெரிக்கா இன்னும் கூடுதலான ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தடைகள் பியோங்யாங்கிற்கு எதிராக வரவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறது.

வோல் ஸ்ரீட் ஜேர்னல் தலையங்கம் அணுவாயுதச் சோதனையைப் பயன்படுத்தி ஒபாமாவின் இராஜதந்திர நெறியைக் குறைகூறி கடுமையான நடவடிக்கை வேண்டும் என்று கூறி இது வட கொரியாவிற்கு மட்டும் இல்லாமல் ஈரான், சிரியாவிற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இத்தலையங்கம் புஷ் நிர்வாகத்தில் இருந்தவர்கள்மீதும், குறிப்பாக முன்னாள் வெளிவிவகார செயலாளர் கொண்டலீசா ரைஸ் மீதும், "வட கொரியாவை பொருளாதாரத்தில் நசுக்கும் முயற்சிகளில்" ஈடுபடாததற்காவும் கடுமையாக கண்டித்தது.

2006 அணுவாயுதச் சோதனையை தொடர்ந்து புஷ் நிர்வாகம் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா, இரு கொரியாக்கள் உள்ளடங்கிய ஆறு நாடுகள், என்று கூட்டம் நடத்தி பேச்சுவார்த்தைகள் நடத்தி வட கொரியா அணுவாயுதத்தைக் கைவிட உடன்பாட்டை ஏற்படுத்தியது. பியோங்யாங் அணுவாயுத நிலையங்களை மூடி அத்திட்டங்களையும் கைவிட்டால் அதற்கு ஈடாக வாஷிங்டன் சீரான உறவுகளை வட கொரியாவுடன் கொள்ளும் என்று ஒப்புக் கொண்டது. ஆனால் இந்த உடன்பாட்டை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், முதலில் புஷ் காலத்திலும் பின்னர் ஒபாமா நிர்வாகத்திலும், ஆறு நாடுகள் பேச்சுவார்த்தை வகைகள் என்று அழைக்கப்பட்டது முறிந்து போக முக்கியக் காரணமாயிற்று.

சமீபத்திய அணுவாயுதச் சோதனையின் அரசியல் தாக்கம் டோக்கியோ மீது அதிகமாக இருக்கக்கூடும். ஜப்பானின் தாராளவாத ஜனநாயகக் கட்சி (LDP) குறிப்பாக அதன் மீகத்தீவிர வலதுசாரிப் பிரிவுகள் "வட கொரிய அச்சுறுத்தலை" எடுத்துக் கொண்டு மக்களிடையே தாங்கள் கொண்டிருக்கும் மோசமான செல்வாக்கை மாற்றி உயர்த்த முற்பட்டு நாட்டின் ஆழ்ந்த பொருளாதார, சமூக நெருக்கடியில இருந்து கவனத்தை திசை திருப்பவும் முயலும். ஏப்ரல் மாதம் வட கொரியா அணுவாயுதம் வெடிப்பதற்கு முன்பு, அரசாங்கம் அச்ச சூழ்நிலையை உருவாக்க முற்பட்ட விதத்தில் டோக்கியோ மற்றும் வடக்கு ஜப்பானில் ஏவுகணை-எதிர் கருவிகளை நிறுத்தி ராக்கெட்டில் இருந்து விழக்கூடிய எஞ்சியதுண்டுகள் பற்றி மிகைப்படுத்தப்பட்ட எச்சரிக்கைகளையும் கொடுத்தது.

ஜப்பானின் பிரதம மந்திரி டாரோ அசோ திங்கள் அணுச்சோதனையை அணுவாயுதப் பரவல் உடன்படிக்கைக்கு "தீவிர சவால்" என்று முத்திரையிட்டார். வட கொரியா மீது ஏற்கனவே டோக்கியோ கடுமையான பொருளாதார தடைகளைக் கொண்டுள்ளதுடன், வட கொரியாவில் இருந்து இறக்குமதிகள் அனைத்தும் தடைக்கு உட்பட்டுள்ளன. போக்குவரத்து தொடர்புகள் இல்லாததுடன், ஆடம்பரப் பொருட்கள் ஏற்றுமதி தடைக்கு உட்பட்டுள்ளது. Nikkei English News அரசாங்கம் வட கொரியாவிற்கு ஏற்றுமதிகள் மீது முழுத் தடை விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

தாராளவாத ஜனநாயக கட்சி குழுவிடம் நேற்று பேசிய முன்னாள் படைத்தலைவர் தளபதி நகடானி ஜப்பான் அதன் போர்க்கப்பல்களில் க்ரூஸ் ஏவுகணைகள் பொருத்த வேண்டும் என்றும் அப்போதுதான் இராணுவம் "விரோதியின் நிலப்பகுதி, தளங்கள்மீது" தாக்க முடியும் என்றும் கூறினார். போருக்குப் பிந்தைய அமைதிவாதன அரசியலமைப்பு விதிகளின்படி ஜப்பான் பெயரளவிற்கு ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுத்தல் அல்லது ஆக்கிரமிப்பு ஆயுதங்களைப் பெறுதல் ஆகியவற்றை செய்யக்கூடாது. திங்கள் சோதனைக்கு முன்பே தாராளவாத ஜனநாயகக் கட்சி அதிகாரிகள் முந்தைய ஏவுகணைச் சோதனையை பயன்படுத்தி ஜப்பான் "வெறுமே உட்கார்ந்து மரணத்திற்கு காத்திராமல்", "முன்கூட்டி தடுக்கும் நடவடிக்கையை" எடுக்கும் ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஜப்பானை மீண்டும் ஆயுதமயமாக்க வேண்டும் என்று வாதிடுபவர்கள் பொதுவான அரசியலமைப்பு தடையை எதிர்கொள்ளுவது மட்டும் இல்லாமல், நாட்டு மக்கள் ஆழ்ந்த முறையில் 1930கள் மற்றும் 1940 களின் இராணுவ ஆட்சிக்கு கொண்டிருந்த விரோதப் போக்கு நிலைபெற்று இருப்பதையும் எதிர்கொள்ளுவதுடன், 1945ல் ஹிரோஷிமா, நாகாசாகியில் அமெரிக்கா அணுகுண்டு வீசியதால் ஏற்பட்ட கடுமையான அனுபவத்தை ஒட்டிய மக்கள் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டும். பியோங்யாங்கின் அணுவாயுதச் சோதனை தப்பிப் பிழைத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் உடனடி எதிர்ப்பை தூண்டினாலும், அதே நேரத்தில் ஜப்பான் அணுவாயுதத்தை கொண்டிருக்கவேண்டும் என்று கருதும் அரசியல் ஆளும்தட்டின் பிரிவுகளின் கரங்களையும் வலுப்படுத்தியுள்ளது.

ஜப்பான் மற்றும் அமெரிக்கா இரண்டும் வட கொரியாவை கண்டிப்பதற்கு ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுவதில் முன்னணியில் உள்ளன. ஐ.நா. அமைப்பின் கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்துவது சீனா, ரஷ்யா ஆகியவை உடன்பட்டால்தான் முடியும். பியோங்யாங்கின் முறையான நட்பு நாடாகிய பெய்ஜிங் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அணுவாயுதச் சோதனைக்கு தான் "உறுதியான எதிர்ப்பை காட்டுவதாக" கூறியதுடன் இன்னும் கூடுதலான பொருளாதாரத் தடைகள் அரசியல் சங்கடத்தை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் நடவடிக்கைகள் ஜப்பான் மீண்டும் தன்னை இராணுவமயமாக்க செய்துகொள்ளுவதற்கு காரணத்தைக் கொடுக்கும் என்பதால் சீனா சந்தகேத்திற்கு இடமில்லாமல் கவலை கொண்டுள்ளது. ஆனால், அதே நேரத்தில் பியோங்யாங் ஆட்சியின் பலமற்ற தன்மை பற்றியும் பெய்ஜிங்கிற்கு நன்கு தெரியும். வடகொரியாவில் உள்ள அரசியல் கொந்தளிப்பு அமெரிக்கா, அதன் நட்பு நாடுகளால் சீன எல்லையில் காலூன்றப் பயன்படுத்தப்படும் என்பதை அறியும். புஷ் நிர்வாகத்தின் முதல் ஆட்சிக்காலத்தில் ஈராக் போரில் மூழ்குவதற்கு முன்பு வாஷிங்டனின் அதிகம் மறைக்கப்படாத இலக்காக பியோங்யாங்கில் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதாக இருந்தது.

சீனா ஆறு நாடுகள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்து அழுத்தங்களை குறைக்க முற்பட்டு, வட கொரியா மீது தன்னுடைய அரசியல், பொருளாதார கட்டுப்பாட்டை பயன்படுத்தி 2003ல் அமெரிக்கா கூறிய விதத்தில் பேச்சுவார்த்தைகள் மேசைக்கு வடகொரியா வருமாறு கட்டாயப்படுத்தியது. பல முறையும் எந்த உடன்பாட்டிற்கும் முக்கிய தடை புஷ்ஷின் வெள்ளை மாளிகையில் இருந்து வரும் தடை ஆகும். இது துணை ஜனாதிபதி டிக் ஷென்னியை சுற்றியிருந்த குழுவின் செயல் ஆகும். அவர்கள் வட கொரியாவிற்கு மிகக் குறைவு என்றாலும்கூட எவ்விதச் சலுகைகளும் கொடுக்கப்படக்கூடாது எனப் பிடிவாதமாக எதிர்ந்து வந்தனர். உடன்பாட்டின் செயற்பாடு இறுதியில் ஒருவாறாக பெப்ருவரி 2007ல் உருப்பெற்று, டிசம்பர் 2008ல் உறைந்து நின்றது. அப்பொழுது பியோங்யாங் புதிய அமெரிக்காவின் புதிய மதிப்பிடும் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது.

ஒபாமா நிர்வாகம் தேக்கநிலையை முடிவிற்குகொண்டுவர அல்லது வட கொரியாவுடன் அழுத்தங்களை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் வட கொரியா இராஜதந்திர, பொருளாதார முறையில் முன்பு இருந்ததை போலவே தனித்துத்தான் உள்ளது. புஷ் கடந்த ஆண்டு எடுத்த ஒரே நடவடிக்கை அமெரிக்க வெளிவிவகாரத்துறை வைத்திருக்கும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தரும் நாடுகள் பட்டியலில் இருந்து வடகொரியாவின் பெயரை அடையாளமாக நீக்கியதுதான். புஷ்ஷைப் போலவே, ஒபாமாவும் வட கொரியா மீது 50 ஆண்டுகளுக்கு முன்னால் சுமத்தப்பட்ட அமெரிக்காவின் கடுமையான பொருளாதார முற்றுகையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இது அந்நாட்டின் ஆழ்ந்த பொருளாதார, சமூக நெருக்கடிக்கு ஒரு முக்கிய காரணியாகும்.

இறுதி ஆய்வில் திங்களன்று நடைபெற்ற அணுசோதனை பற்றி சர்வதேசக் கூக்குரல் வட கொரியா பற்றி அல்ல. மாறாக அமெரிக்கா, ஜப்பான், சீனா என்றும் முக்கிய சக்திகள் வடகிழக்கு ஆசியாவில் நலன்களைப் பெறுவதற்கு முனைந்து நிற்பதாகும். சீனாவின் ஏற்றம் மற்றும் ஒப்புமையில் அமெரிக்கா, ஜப்பான் ஆகியவற்றின் சரிவு, இப்பொழுது உலகப் பொருளாதார நெருக்கடியினால் விரைவுபடுத்தப்பட்டுள்ளதுடன், பெருகும் அழுத்தங்களுக்கு எரியூட்டுகின்றன. வாஷிங்டனுக்கும் டோக்கியோவிற்கும் பியோங்யாங்கின் செயல்கள் பெய்ஜிங் மீது அழுத்தும் கொடுத்து தங்கள் பொருளாதார மூலோபாய செயற்பட்டியலை இப்பகுதியில் முன்னேற்றுவிக்க வசதியான வழிவகை ஆகும்.