World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

US Army chief sees Iraq, Afghanistan occupations continuing for a decade

அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி ஈராக், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புக்கள் ஒரு தசாப்தம் நீடிக்கும் என்று கருதுகிறார்

By Bill Van Auken
29 May 2009

Use this version to print | Send feedback

அமெரிக்க இராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் ஜோர்ஜ் கேசி இந்த வாரம் அமெரிக்க இராணுவம் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அதன் தலையீடுகள் குறைந்தது இன்னும் ஒரு தசாப்தத்திற்கு நீடிக்க தயாரித்து வருவதாக கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிருபர்கள் மற்றும் சிந்தனைக்குழு பிரதிநிதிகளுக்கு மட்டும் அழைப்புவிடப்பட்டு வழங்கப்பட்ட பேட்டி ஒன்றில், இரு நாடுகளிலும் நீடித்த அமெரிக்க ஆக்கிரமிப்பு ஒரு தேவை என்றும் அதுதான் "மத்திய கிழக்கில் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தொடர்ந்து போராட அமெரிக்காவில் பங்கினை பூர்த்தி செய்யும்" என்றும் கேசி கூறினார்.

ஈராக்கை அமைதிப்படுத்தும் அமெரிக்க முயற்சிகள் செவ்வனே இல்லை என்று பெருகியிருப்பதின் அடையாளத்திற்கு இடையே கேசியின் கருத்துக்கள் வந்துள்ளன. ஒபாமா நிர்வாகமும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் படைகளின் எண்ணிக்கையை இருமடங்காக, 68,000 துருப்புகளாக அதிகரிக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

மேலும் இரண்டு அமெரிக்க இராணுவப் படையினர் இந்த வாரம் கொல்லப்பட்டனர். இது மே மாத இறப்பு எண்ணிக்கையை கடந்த செப்டம்பருக்கு பின்னர் உயர்ந்த அளவு என்று கொண்டுவந்துள்ளது. புஷ் நிர்வாகம் மார்ச் 2003ல் இருந்து ஈராக்கிய படையெடுப்பை தொடங்கியபின் கொல்லப்பட்ட அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கை 4,302 என உயர்ந்துள்ளது.

இதற்கிடையில் ஈராக்கியர்களைப் பொறுத்தவரை, கடந்த மாதம் ஓராண்டில் மிக அதிக இரத்தம் சிந்தப்பட்ட மாதமாகும். 500 பேருக்கும் மேலானவர்கள் தொடர்ச்சியான தற்கொலை குண்டுகள், குறுங்குழுவாத குழுக்களால் கொலையுண்டனர்.

இச்சமீபத்திய தாக்குதல் ஒரு அமெரிக்க படையினர் மற்றும் நான்கு ஈராக்கிய சிவிலியர்களின் உயிரைக் குடித்தது. புதனன்று ஒரு சாலையோர குண்டு அமெரிக்க வாகன வரிசை பாக்தாத் மாவட்ட மேற்குப் புறத்தில் உள்ள அமெரிக்க காவல் மையமான அபு கிரைப் வீதியில் சென்றபோது வெடித்ததில் இது நிகழ்ந்தது. இந்த இடத்தில்தான் ஈராக்கியர்கள் முறையாக சித்திரவதைக்கும் தவறாக வகைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையம் பின்னர் ஈராக்கிய பாதுகாப்பு படைகள் நடத்துவதற்கு கொடுக்கப்பட்டு விட்டது.

செவ்வாயன்று கொல்லப்பட்ட மற்றொரு அமெரிக்க படையினனின் பெயரையும் பென்டகன் வெளியிட்டது. கடற்படை கொமாண்டரான 54 வயதான Duane Wolfe, ஈராக்கின் அன்பர் மாநிலத்தில் இராணுவ பொறியியல் வல்லுனர்கள் பிரிவின் தலைவராக இருந்தவர். மற்றும் இருவருடன் பல்லுஜா நகரத்தில் அவருடைய வாகனத்தின்கீழ் வைக்கப்பட்டிருந்த ஒரு குண்டு வெடிப்பில் இறந்து போனார்.

இதற்கிடையில் 2007ம் ஆண்டு புஷ் நிர்வாகத்தால் எழுச்சி என்று அழைக்கப்டுவதின் முக்கிய தூண்களில் ஒன்று சரியத் தொடங்கியுள்ளது என்பதற்கான அடையாளங்கள் உள்ளன. "விழித்தெழும் இயக்கம்" அல்லது சஹ்வா என்பது அதிக சுன்னி போராளிகளைக் கொண்டுள்ளது. இவர்களில் பலர் முன்னாள் எழுச்சியாளர்களும், இந்த அமைப்பு அப்பகுதியின் காவல் படையாகவும் இருந்தது. இதன் உறுப்பினர்கள் அமெரிக்க இராணுவத்தால் மாதம் $300 வரை ஊதியம் பெற்றனர்.

கடந்த இலையுதிர்காலத்தில் வாஷிங்டன் அதிகம் ஷியைட்டுக்கள் உடைய ஈராக்கிய அரசாங்கத்திடம் போராளிகளுக்கான பொறுப்பை அளித்தது. அரசாங்கம் ஊதியங்களை நிறுத்தி வைத்து போராளிகளில் 20 சதவிகிதத்தினரை நாட்டின் பாதுகாப்புப் படைகளில் மற்றும் அரசாங்கத் துறைகளில் வேலைக்கு அமர்த்தும் தன்னுடைய உறுதிமொழியைக் கைவிட்டது.

மேலும் விழித்தெழும் இயக்கத் தலைவர்கள் கைது செய்ய இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளதுடன், அதன் உறுப்பினர்களுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே மோதல்கள் வந்துள்ளன. வியாழனன்று ஈராக்கிய இராணுவம் போராளிக் குழுக்களின் தலைவர் ஒருவரை அவருடைய பாக்தாத்திற்கு வடகிழக்கில் இருக்கும் பக்குபா இல்லத்தில் கைது செய்தது.

"அமெரிக்கர்கள் சஹ்வா போராளிகள் அல் கைதாவை எதிர்த்துப் போரிட ஏற்பாடு செய்து, பின்னர் அவர்களை கைவிட்டுவிட்டனர்" என்று மற்றொரு விழித்தெழும் இயக்கத் தலைவரான ஷேக் அலி ஹாடெம் சுலைமான் USA Today இடம் கூறினார். "சஹ்வாவின் தலைவர்கள் அல் கைதாவுடனேயே இருந்திருக்கலாம் என்று சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்."

அசோசியேட்டட் பிரஸ் கருத்தின்படி செவ்வாயன்று கேசி அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் மற்றும் ஒரு பத்து ஆண்டுகள் தொடரும் என்று வலியுறுத்தியது "ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு முரணானது என்று பொருள்படாது" எனத் தெரிவித்துள்ளது.

ஆனால் இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரி வெள்ளை மாளிகை முன்வைத்த திரும்பப் பெறும் திட்டத்தை கேலிக்கு உரிய விதத்தில் விவாதிக்கிறார். பெப்ருவரி மாதம் ஜனாதிபதி ஒபாமா அறிவித்த கால அட்டவணையின்படி அமெரிக்க "போரிடும் துருப்புக்கள்" அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டிற்குள் நீங்கும்; 2011 க்குள் மொத்த அமெரிக்க துருப்புக்களும் நாட்டை விட்டு நீங்கிவிடும்.

இது ஒன்றும் வியப்பைக் கொடுக்கவில்லை. பல மாதங்களாகவே உயர்மட்ட இராணுவத் தளபதிகள் ஈராக்கில் உள்ள நிலைமை அந்த அட்டவணையை பொருளற்றதாக ஆக்கிவிடும் என்றுதான் குறிப்புக் காட்டியுள்ளனர்.

ஏற்கனவே அமெரிக்க தளபதிகள், ஈராக் நகரங்களில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறுவதற்கு குறித்த கெடுவான ஜூன் 30 உண்மை என்பதைவிட போலித் தோற்றம் என்பதை தெளிவாக்கியுள்ளனர். அமெரிக்கத் துருப்புக்கள் மொசூலின் வடபகுதியில் போர் நடவடிக்கைகளை தொடரும்; அங்குதான் அரேபியர்களுக்கும் குர்திஸ்களுக்கும் இடையே உள்ள மோதல்கள் உள்நாட்டிப் போரில் புதிய கட்டமாக வெடிக்கும் போல் உள்ளது.

ஆயிரக்கணக்கான துருப்புக்கள் பாக்தாத் மற்றும் தலைநகருக்கு வடக்கே இருக்கும் தியாலா மாநிலத்தில் தொடர்ந்து செயல்படும். தளங்களுக்கு துருப்புக்கள் பின்வாங்கப்பட்டுவிட்ட மற்ற இடங்களில் அவை ஈராக்கிய நகர்களில் தொடர்ந்து சோதனைகளை நடத்துவதுடன், அதே நேரத்தில் ஈராக்கிய ஆட்சியின் ஒப்பதலைப் பெற்றுத்தான் தாக்குதல்கள் நடக்கின்றன என்று பொதுவாக கூறிக்கொள்ளும்.

இரண்டாம் கட்டத்தை பொறுத்தவரையில், ஆகஸ்ட் 2010 க்குள் "போரிடும் துருப்புக்களை" திரும்பப் பெறுதல் என்பதில், பென்டகன் அதிகாரிகள் போரிடும் துருப்புக்கள் என வகைப்படுத்தப்பட்டவற்றை மறு ஒழுங்குபடுத்த இருப்பதாகக் கூறியுள்ளனர். இப்பொழுது போரிடும் துருப்புக்கள் என்று இருப்பவை ஆதரவு கொடுப்பவை அல்லது பயிற்சிப் பிரிவுகள் என்று அழைக்கப்படும். அப்பொழுதுதான் நாட்டில் கணிசமான ஆக்கிரமிப்புப் படைகள் நிறுத்திவைக்கப்பட முடியும்.

இதற்கிடையில் படைகளின் கூட்டுத் தலைவர் அட்மைரல் மைக்கேல் முல்லன் 2011 ல் இறுதியாக அனைத்துப் படைகளும் திரும்பப் பெறும் என்ற கெடுவை ABC News நிகழ்ச்சியான கடந்த ஞாயிறு "This Week" பேட்டி ஒன்றில் கேள்விக்குரியதாக்கினார். "அடுத்த 12, 18 மாதங்கள் அதைப்பொறுத்த வரையில் மிகவும் முக்கியமானதாகும். பொறுத்திருந்து பார்ப்போம்" என்று முல்லன் கூறினார்.

ஈராக்குடன் ஒரு "நீண்டகால உறவை" வாஷிங்டன் ஏற்படுத்திக்கொள்ளும் என்றும் முல்லன் வலியுறுத்தினார்; "படைகள் அங்கு நீண்ட காலம் இருக்கக்கூடும் என்பது அந்த பார்வையின் ஒரு பகுதியாகும்--ஈராக்கிய மக்கள், ஈராக்கிய அரசாங்கத்தின் முடிவு அது."

திரும்பப் பெறும் தேதிகள் வாஷிங்டன் மற்றும் பாகாத்தின் படைகள் நிலை பற்றிய உடன்பாட்டில் எழுதப்பட்டவை ஆகும். பிரதம மந்திரி நூரி அல் மாலிக்கி பல முறையும் இந்த கெடுக்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால் இது பொதுவாக ஈராக்கிய மக்களைத் திருப்தி செய்யக் கூறப்படுவதாகத்தான் கருதப்படுகிறது. அங்கு பெரும்பாலான மக்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பைத்தான் காட்டியுள்ளனர். திரைக்குப் பின்னே அமெரிக்க, ஈராக்கிய அதிகாரிகள் காலக்கெடுவை தள்ளிப்போடும் வகையிலும் அமெரிக்கப் படைகளை தொடர்ந்து நிறுத்தி வைப்பது பற்றியும் உடன்பாட்டைத்தான் கொண்டுள்ளனர்.

Christian Science Monitor ஏட்டின் Jane Arraf கடந்த வாரம் ஈராக் நகரங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறும் காலக்கெடு கடைபிடிக்கப்படுகிறது என்ற கட்டுக்கதையைத் தக்க வைக்கும் விதத்தில், ஈராக்கிய ஆட்சியும் அமெரிக்க ஆக்கிரமிப்புத் தளபதிகளும் பாக்தாத்தின் வரைபடத்தை வேறுவிதமாக வரைய ஒப்புக் கொண்டுள்ளனர். பாக்தாத்தின் ரஷித் பகுதியில் உள்ள Base Falcon நகரத்திற்கு வெளியே இருக்கும் பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு உள்ள 3,000 துருப்புக்கள் பதட்டம் நிறைந்த தலைநகரத்தின் தெற்குப் பகுதியில் தொடர்ந்து ரோந்து சுற்றலாம்.

"சாத்தியமான நிலைமை" என அவரால் பகிரங்கமான கூறப்படுவது, "10 தரைப்படை, கடற்படை பிரிவுகள்" கொண்ட 50,000 துருப்புக்களுக்கும் மேலாக ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஒரு தசாப்தமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தால் "நாம் வரையறுத்துள்ள அட்டவணைக்கு நெருக்கமான வகையில் ஈராக்கை ஈர்ப்பது" இயலாது என்ற கவலையைத் தெரிவித்தார்.

"தற்போதைய உறுதி கூறப்பட்ட அளவுகளை தொடர்ந்து நீடிப்பது என்பது மிகக் கடினமாக இருக்கும் " என்ற தளபதி கூறியுள்ளார்; இது ஈராக்கில் உள்ள படையினர், கடற்படைப் பிரிவினர் என்று 139,000 பேர் இருப்பதை குறிக்கிறது.

ஆப்கானிஸ்தானில் போரை ஒபாமா நிர்வாகம் விரிவுபடுத்தியிருக்கையில்--"தெற்கில் ஒரு பெரிய போர் வரவுள்ளது" என்று கேசி எச்சரித்துள்ளார்--மற்றும் பாக்கிஸ்தானில் விரிவாக்கத்தை அதிகரித்திருக்கையில், அமெரிக்க இராணுவத்தின்மீது அழுத்தம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாக இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் கூடுதல் படைகளுடன் இப்பொழுது இராணுவம் 10,000 அதிக துருப்புக்கள் புஷ் நிர்வாகத்தின் இரு போர்களில் இருந்ததைவிட அதிகம் கொண்டுள்ளது.

இத்தகைய அளவுகளில் படைகளை தொடர்ந்து வைத்திருப்பது, தொடர்ச்சியாக படையினரை முன்னிலையில் நிறுத்துவது என்பது "இராணுவத்தை மண்டியிடச் செய்துவிடும்" என்றும் அவர் எச்சரித்தார்.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக நடந்துவரும் போர், மற்றும் ஆப்கானிஸ்தானிய ஆக்கிரமிப்பு, ஈராக்கில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் போர் ஆகியவற்றின் பாரிய இழப்புக்களைப் பற்றிய அப்பட்டமான அடையாளம் இராணுவத்தில் மிக அதிகமாக இருக்கும் தற்கொலை விகிதம் ஆகும். இது 2004ல் இருந்ததைவிட இரு மடங்காகியுள்ளது. மேலும் அதிகரித்துள்ள மனநோய் பிரச்சினைகள், 13,000க்கும் மேற்பட்ட அதிர்ச்சிக்குப் பிந்தைய நோயாளிகளின் மனக்குழப்பநிலை இராணுவ வைத்தியர்களால் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. (See "US: Army base ordered on stand-down after multiple suicides")

இம்மாதம் முன்னதாகக்கூறிய கருத்துக்களில் கேசி இராணுவத்தின்மீது இதே அழுத்தம் இருப்பதை சுட்டிக்காட்டி "ஒரு மெல்லிய சிவப்புக் கோடு" உள்ளது என்றும் அது தாண்டப்பட்டுவிட்டால், அது இராணுவத்தை "முறித்துவிடும்" என்றார் அவர். "இருவிதங்களில் இதைத் தீர்க்க முடியும். படைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்; அல்லது தேவையைக் குறைத்துக் கொள்ளலாம்."

பீரங்கிக்கு பலிக்கடாவாக்குவதன் என்பதின் தேவை குறையாது என்பது வாஷிங்டன் தன் இராணுவ குறுக்கீடுகளை அதிகமாக்கியிருப்பதில் இருந்து தெளிவாகிறது. படைகள் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிப்பது என்பது "சுயவிருப்பத்துடன்" இராணுவத்தில் சேர்வது என்பதின் தன்மையை மாற்றி, இராணுவக் கட்டாய சேவை என்பதை மீண்டும் கொண்டுவரக்கூடும்.

அமெரிக்கா காலனித்துவமுறை வகையில் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அடுத்த 10 ஆண்டுகள் போரைத் தொடரும் என்று சர்வ சாதாரணமாக வந்துள்ள கேசியின் அறிவிப்பும் மற்றும் அவரே குறிப்பிட்டுள்ளபடி உலகில் புதிய போர்களை மற்ற இடங்களிலும் மேற்கொள்ளும் என்பதும் "முக்கிய" செய்தி ஊடகம் எதிலும் தீவிரமாக வெளியிடப்படவில்லை என்பதுதான் முக்கியமானதகும். அரசியல் ஆளும்வர்க்கத்தினுள் இருந்து எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

அமெரிக்க மக்களின் ஆழ்ந்த போர் எதிர்ப்பு உணர்வுகள் பெரும் அளவிற்கு ஒபாமா ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற உதவியிருக்கையில், அவருடைய நிர்வாகம் அமெரிக்க இராணுவவாதத்தை அதிகப்படுத்தி, அமெரிக்கத் துருப்புக்கள் போருக்கு செல்வதையும் அதிகமாக்கப்பட்டுள்ள நடவடிக்கை, அமெரிக்காவின் ஆளும் உயரடுக்கிடமும் மற்றும் அதன் முக்கிய கட்சிகளிடமும் ஆதரவைக் கொண்டுள்ளது.

அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர்கள் தொடர்தல், விரிவாக்கம் அடைதல் இவற்றிற்கான ஒருமித்த உணர்வு அமெரிக்க செனட்டில் மிகப் பெரிய அளவில் 86-3 என்ற கணக்கில் ஐயத்திற்கு இடமில்லாத ஒப்புதல் வெளிப்பட்டதிலும், செப்டம்பர் வரை இரு போர்களைத் தொடர செனட் $91 பில்லியன் அளித்துள்ளதிலும் வெளிப்பட்டுள்ளது.

எதிர்ப்பு இல்லாத நிலை வெளிப்படையான வினாவை எழுப்புகிறது. ஜனநாயகக் கட்சிக்குள் புஷ் நிர்வாகத்தின் போர்க் கொள்கையில் இருந்து விலகி நிற்பதாக போலித்தனமாகக் கூட எதுவும் காட்டப்படவில்லை என்பதுதான் அது. ஆக்கிரமிப்புப் போர்கள் மற்றும் ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கைக்கான எதிர்ப்பு என்ற பிரச்சினை இதில் இல்லை என்பது தெளிவு. இரு போர்களின் இலக்கை அடையவேண்டும் என்ற உறுதியை ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் கொண்டுள்ளன. அதாவது அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதாரச் சரிவை ஈடுகட்டும் வகையில் அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்தி பூகோள-மூலோபாய வகையில் உலகின் முக்கிய எண்ணெய் வளம் உடைய பகுதிகளில் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிபடுத்துவது என்பதே அது.

அங்கு எவ்விதமான வேறுபாடுகள் இருந்தாலும் அவை பெரும்பாலும் தந்திரோபாயம் பற்றியவையே அன்றி மூலோபாயம் பற்றி அல்ல; செயல்படுத்தப்படும் முறை பற்றியதே அன்றி சாராம்சத்தை பற்றியது அல்ல.

ஒபாமா நிர்வாகத்தைப் பயன்படுத்தி உத்தியோகபூர்வ வாஷிங்டனுக்குள் அமெரிக்க இராணுவவாதம் பற்றி ஒரு ஒருமித்த அரசியல் உணர்வைத் தோற்றுவிக்க ஆளும் வர்க்கம் முயல்கையில், இப்போர்களுக்கு விரோதப்போக்கு என்பது தொழிலாளர் மக்களின் பரந்த பிரிவுகளில் ஆழ்ந்துதான் உள்ளது. இன்னும் அதிகமாக இந்த எதிர்ப்புக்கள் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக இணைந்து வருவதுடன், அவை அமெரிக்காவிலேயே சமூக, அரசியல் வெடிப்புக்களுக்கான சூழலை ஏற்படுத்தும்.