World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

European elections

French New Anti-Capitalist Party promotes Keynesian reformism

ஐரோப்பியத் தேர்தல்கள்

பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி கீன்சிய பொருளாதாரச் சீர்திருத்தத்தை ஆதரிக்கிறது

By Antoine Lerougetel and Alex Lantier
6 June 2009

Use this version to print | Send feedback

சீர்திருத்தவாத வழியிலான பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) உடைய ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம், பெப்ருவரி 2009ல் இக்கட்சியின் நிறுவன மாநாட்டு நேரத்தில் இதைப்பற்றி உலக சோசலிச வலைத் தளம் அளித்த மதிப்பீட்டை உறுதிசெய்கிறது.

NPA-ல் தன்னையே கரைத்துக் கொண்டுவிட்ட LCR ன் தூண்டுதலில் துவக்கப் பெற்ற NPA-ன் முன்முயற்சியானது மார்க்சிசம் பற்றிய குறிப்பு எதையும் நிராகரிக்கும் எல்.சி.ஆரின் முயற்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் பிரெஞ்சு அரசியல் நடைமுறையில் தன்னையே ஒருங்கிணைத்துக் கொள்கிறது.

NPA ஸ்தாபக மாநாட்டிற்கு முன்பாகவே நீண்ட கால PS உறுப்பினரும், 1997-2002 காலத்தில் சோசலிஸ்ட் கட்சியின் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் உடைய பன்முக இடது அரசாங்கத்தில் மந்திரியாகவும் இருந்த Jean-Luc Mélenchon கட்சியில் இருந்து பிரிந்து நவம்பர் 2008ல் இடது கட்சியை ஆரம்பித்தார். PCF எனப்படும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற "இடது" கட்சிகளுடன் சேர்ந்து NPA யும் ஐரோப்பிய தேர்தல்களுக்காக இடது முன்னணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். LCR மூத்த தலைவர் கிறிஸ்தியான் பிக்கே தலைமையிலான NPA க்குள் உள்ள ஒரு செயலூக்கமான சிறுபானமைப் பிரிவு, இடது கட்சி மற்றும் PCF இன் இடதுமுன்னணியுடன் வெளிப்படையான கூட்டை வலியுறுத்தியது.

இம்முன்மொழிவுகள் தன்னுடைய உறுப்பினர்களை எதிர்ப்பு அரசியல் அடிப்படையில் இருந்தும் LCR இன் ஜனாதிபதி வேட்பாளர் ஒலிவியே பெசன்ஸநோ பற்றிய ஊடகத் தோற்றத்தின் அடிப்படையிலும் ஆட்சேர்க்கும் NPA கடின நிலைக்குத் தள்ளின. இடது முன்னணியில் சேர்வது என்றால் பகிரங்கமாக NPA வை Mélenchon உடன் சேர்த்தல் என்றும் PCF இன் சிக்கனக் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்தல் என்றும் பொருள் ஆகும். மாறாக, இடது முன்னணியில் சேர மறுப்பது Mélenchon மற்றும் PCF உடன் ஒற்றுமையை முறித்தல் என்ற குற்றச்சாட்டை பிக்கே மற்றும் பரந்த உறுப்பினர்களிடம் இருந்து வெளிப்படுத்தும்.

NPA இறுதியில் இடது முன்னணியில் இருந்து தனித்து இருப்பது என்ற முடிவிற்கு வந்தது; ஆனால் இப்பிளவிற்கான பொறுப்பு NPA இடம் என்பதற்குப் பதிலாக இடது முன்னணிமீதுதான் உள்ளது என்பதை உத்தியை கையாண்டு முடிவு செய்தது. "சமூக-தாராள" சிக்கனக் கொள்கைகளுக்காக PS ஐ குறைகூறி, இடது முன்னணி இந்த ஆண்டு ஐரோப்பிய தேர்தல்களுக்கு மட்டும் இல்லாமல் 2010 பிரெஞ்சு வட்டாரத் தேர்தல்களுக்கும் PS ல் இருந்து தனித்த பிரச்சாரத்தை அமைக்க வேணடும் என்று கோரியது.

PCF நிதி அடிப்படையில் அதன் PS உடனான தேசியக் கூட்டணியில்தான் தப்பிக்க முடியும் என்பதை அறிந்தும் இத்தகைய கோரிக்கையை அது முன்வைத்தது. சட்ட மன்ற இடங்களை PS பிரிக்கும் முறை PCF க்கு தேசிய சட்டமன்றத்தில் ஒரு சிறு குழுவைத் தக்க வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து அதையொட்டிய நிதி உதவித்தொகையையும் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

NPA, இடது கட்சி மற்றும் PCF தலைவர்களை மார்ச் 2 அன்று சந்தித்து ஐரோப்பிய தேர்தல்களுக்கான கூட்டணி பற்றி விவாதித்தது. ஆனால் இக்கட்சிகள் எதிர்பார்த்த விதத்தில், PS இடம் இருந்து தனித்த பட்டியல்கள் கொடுப்பது பற்றி உறுதியாக ஏதும் கூறவில்லை. மார்ச் 8ம் தேதி தன்னுடைய குழுவான Unitary Left ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல்களுக்காக இடது முன்னணியில் சேர்ந்துவிட்டதாக கிறிஸ்தியான் பிக்கே அறிவித்தார்; அதே நேரத்தில் NPA விலும் தன் உறுப்புத்தன்மையை தக்க வைத்துக் கொண்டார்.

இடது முன்னணியில் தனக்கு "விரோதிகள் கிடையாது" என்று வலியுறுத்திய பெசன்ஸநோ தான் எப்பொழுதும் அதற்கு "சகோதரத்துவ கரத்தை நீட்டத் தயார்" என்றும், ஆனால் PS இடத்தில் இருந்து சுதந்திரம் என்னுடைய தன் தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ளுவதற்காக மார்ச் 9ம் தேதி NPA தன் இடது முன்னணியில் இருந்து தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்ததாகவும் கூறினார். "இடதுமுன்ணி PS உடன் வரவிருக்கும் தேர்தல்களில் உறுதியான கூட்டணியை ஒதுக்கிவிட மறுத்துள்ளது," என்பது இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.

மே 18ம் தேதி NPA யின் தேசியத் தலைமைக்குள் இருக்கும் Convergences and Alternatives பிரிவு இடது முன்னணிக் கட்சிகளுக்குள் "ஒன்றுபட்ட போராட்டத்தை" வாதிடுவதற்கு அமைக்கப்பட்டது. இக்குழுவின் செய்தித்தொடர்பாளர், தொழிற்சங்க வாதி யான் கோச்சின் Agence France-Presse இடம் கூறினார்: "போராட்டங்களிலும், தேர்தல்களிலும், நாங்கள் ஒரு ஒற்றுமையான முன்னணி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்." ஏற்கனவே, NPA க்கும் இடது முன்னணிக்கும் இடையே "கோரிக்கைகளில் இணக்கம்" இருப்பதாக அவர் தெரிவித்தார். தன்னுடைய குழு NPA உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 10 சதவிகிதத்தினரை பிரதிபலிப்பதாகவும் Cochin கூறினார்.

NPA மாநாட்டிற்கு பெரிய அளவில் செய்தி ஊடகம் ஆதரவு கொடுத்ததால், குறிப்பாக பெசன்ஸநோவிற்கு, NPA தன்னுடைய பிரச்சாரத்தில் 9 சதவிகித வாக்குகளைப் பெறக் கூடும் என்று கணிக்கப்பட்டது. நடைமுறை இடது ஐரோப்பிய பிரச்சாரத்தில் மோசமான விளைவுகளை கொண்டிருந்ததால், இது பெரும்பாலான வாக்குகளில் 6-7 சதவிகிதம் என்று குறைந்துள்ளது.

இடது முன்னணி தனக்குக் கிடைக்கக் கூடிய வாக்குகளை அதிகரித்துள்ளது; NPA வாக்காளர்களை ஈர்த்த வகையில், இதற்கு கிடைக்கக் கூடிய எண்ணிக்கை 4.5 முதல் 6 சதவிகிதம் என்று இருக்கக்கூடும்.

NPA பிரச்சாரக் கூட்டங்களின் முக்கிய தளம் இன்னும் எதிர்ப்புக்கள், வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றிற்கு அழைப்பு விடுப்பதற்கும், பொருளாதார நெருக்கடியின் காரணமாக தொழிலாளர்களின் போராட்டங்களின் எழுச்சியில் இருந்து, குறிப்பாக கார்த் தொழில், கார் உதிரிபாகத் தொழில் பிரிவுகளில் இருந்து பயன் பெறும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

பிரான்சில் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள பிரச்சினை போர்க்குண நடவடிக்கை இல்லாதது அல்ல. தொழிலாளர்களின் போராட்டங்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வேண்டிய அமைப்பிற்கான தேவைதான் முக்கியம்; மேலும் அவர்களை பிரான்சின் தொழிற்சங்கங்களுக்கு எதிராக சுயாதீனமான மற்றும் உண்மையான சோசலிச அரசியல் முன்னோக்கில் அவர்களை ஆயதபாணியாக்கல் வேண்டும்.

விமர்சனமற்ற வகையில் NPA மூன்று ஒரு நாள் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் என்று இந்த ஆண்டு ஜனவரி 29, மார்ச் 19, மே1 ஆகிய தேதிகளில் (G8 என்று அறியப்பட்ட) பிரான்சின் எட்டு முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்ததற்கு ஆதரவைக் கொடுத்தது. இத்தகைய எப்பொழுதாவது நடைபெறும் ஒரு நாள் வேலைநிறுத்தங்கள் மூலம் சார்க்கோசி பயப்படத் தேவையில்லை என்று வெளிப்படையான அரசியல் உணர்வை NPA செய்யவில்லை.

2007ல் இருந்து ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி தொழிற்சங்கங்களின் நெருக்கமான ஒத்துழைப்புடன் அவருக்குத் தேவையான ஓய்வூதியக் குறைப்புக்கள், தொழிலாளர் பிரிவு "சீர்திருத்தங்கள்" அனைத்தையும் பெற்றுள்ளார். தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் தினம் மக்கள் எதிர்ப்பை மாற்றும் வகையில் இலக்குக் கொண்டவை மற்றும் சார்க்கோசியுடனான அவர்களுடைய ஒத்துழைப்பிற்கு அரசியல் மறைப்பை அளித்தன.

இந்தத் துரோகத்தை அம்பலப்படுத்துவதற்கு பதிலாக, NPA ஆனது PS, PCF, இடது கட்சி மற்றும் பிற "இடது குழுக்களுடன்" தொழிற்சங்கங்களுக்கு ஆதரவிற்கான கூட்டு முறையீடுகளில் கையெழுத்திட்டுள்ளது.

உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைகள் ஆகியவற்றால் எற்பட்டுள்ள சமூக நெருக்கடிக்கு எதிரான எதிர்ப்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் "இடது" ஒற்றுமையை வழிபடுதலை NPA கவனமாக வளர்த்து வருகிறது. சில சமயம் தொழிற்சங்க கூட்டமைப்புக்களை போர்க்குண முயற்சிகள் இல்லாததற்காக குறைகூறினாலும்--அவற்றின் முக்கிய கூறுபாடுகளாக PCF உடன் இணைந்த CGT, PS உடன் இணைந்த CFDT ஆகியவை உள்ளன--பிரெஞ்சு அரசுடன் அவை இணைந்தது மற்றும் சார்க்கோசி வாழ்க்கைத் தரங்கள், தொழில் நிலைமை மற்றும் ஜனநாயக உரிமைகளை அழிப்பதற்கு தயார் செய்ததில் ஒத்துழைத்தது ஆகியவை பற்றி NPA கண்டனம் தெரிவித்தது கிடையாது.

தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு உடந்தையாக இருப்பதற்கு NPA இன் விடையிறுப்பு அதிகாரத்திற்கான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்திற்கு வழிநடத்தும் ஒரு புரட்சிகர கட்சியை அமைப்பது என்று இல்லை. மாறாக, பெசன்ஸநோ "ஒரு புதிய 1968 மே" வேண்டும் என்று பலமுறையும் கூறியுள்ளார்; இது ஊதியச் சலுகைகளுக்காக PCF, CGT இரண்டாலும் விற்றுவிட்ட பொதுவேலை நிறுத்தம், மாணவர் எதிர்ப்புக்கள் ஆகியவற்றை குறிக்கிறது.

இப்படி புதிய 1968க்கு அழைப்புவிடுவது பெசன்ஸநோ உணர்வதைவிட அதிகம் புலப்படுத்துகிறது. புதிய 1968க்கு அழைப்பு என்பது கேட்கிறது: 1968 அனுபவத்தின் விளைவுகள் என்ன?

10 மில்லியன் பங்கு பெற்ற வலுவான 1968 ம் ஆண்டு வேலைநிறுத்தம், தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சக்தியை நிரூபணம் செய்த அதேவேளை, அதற்குப் பின்னர் இருந்து பிரெஞ்சு வரலாறானது அரசியல் முன்னோக்கு இல்லாத வேலைநிறுத்தத்தின் நசுக்கும் விளைவுகளைத்தான் முக்கியமாக எடுத்துகாட்டி உள்ளது. வேலைநிறுத்ததத்தின் இறுதித் தோல்வி மற்றும் முன்னாள் மாணவர் தீவிரப்போக்குப் பிரிவு, PCF ஆகியவை பிரெஞ்சு நடைமுறையில் இணைந்துவிட்டது, நான்கு தசாப்தங்களாக அரசியல் தேக்கத்தையும் தொழிலாள வர்க்கத்திற்கு தோல்விகளையும் கொண்டுவந்துவிட்டது.

முழுத் தொழில்களும்--குறிப்பாக ஜவுளி, எஃகு--சரிந்துவிட்டன; இது நாட்டின் பல பிரிவுகளையும் பேரழிவிற்கு உட்படுத்திவிட்டது. வேலைக் குறைப்புக்களும் தனியார் மயமாக்குதலும் பொதுப்பணித் துறையை சீரழித்துவிட்டன. PS, PCF ஆகியவற்றின் உதவியுடன் நடைமுறை பிரான்சில் எந்த முக்கிய அரசியல் செல்வாக்கையும் செலுத்தும் ஒரு சக்தியாக மார்க்சிசம் இல்லாமல் இருப்பதற்கு வெற்றிகரமாக ஒதுக்கிவிட்டது.

பெசன்ஸநோ முற்றும் உணர்ந்தாலும் உணராவிட்டாலும், அவருடை எதிர்ப்பு அரசியல் அவருடைய எதிர்ப்பு அரசியல் பொது நிலையில் பிரான்சில் முழு உணர்வுடன் கூடிய தொழிலாள வர்க்க அரசியல் வெளிப்படுவதை தடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக உள்ளது; அத்துடன் வருங்காலத்தில் தொழிலாளர்கள் இதேபோல் தோல்வியுறவும் வழிவகுக்கும். எனவேதான் முதலாளித்துதுவம் அவருக்கு தொலைக்காட்சி முன்னுரிமை கொடுக்க ஆர்வம் காட்டுகிறது.

ஒரு முதலாளித்துவ சார்பு முன்னோக்கு

இந்த முதலாளித்துவ சார்பிற்கு மே 2009 Contretemps --நீண்டகால LCR உறுப்பினர்கள் மற்றும் NPA இன் குட்டி முதலாளித்துவ அறிவுஜீவிகள் மற்றும் புதிய தாராளவாத உறுப்பினர்கள் படைப்புக்களை வெளியிடும் ஏடு-- பதிப்பில் ஒரு முக்கிய NPA உறுப்பினரான François Sabado கொடுத்துள்ள அரசியல் அறிக்கையைவிட வேறு ஏதும் மிகத் தெளிவான குறிப்பு அல்ல. "ஐரோப்பாவில் புதிய முதலாளித்துவ மாற்றீடு" என்ற தலைப்பு இருந்தாலும், சபடோவின் கட்டுரை NPA ஐரோப்பிய முதலாளித்துவத்தை பிணை எடுப்பதற்கு முதலாளித்துவத்தின்மீது அழுத்தம் கொடுக்கும் ஒரு கருவியாக செயல்படும் என்று கூறியுள்ளார்.

அவர் எழுதுகிறார்: "ஐரோப்பா ஒரு கீன்சிய பிணை எடுப்பிற்கு செயல்முறை விளக்கத்தை கொடுக்க இயலும். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் ஆளும் வர்க்கங்கள் அத்தகைய மாற்றத்தை கொண்டுவருவதற்கு திறன் அற்றைவை என்பதைத்தான் தெளிவாகக் காட்டுகிறது." ஆளும் வர்க்கங்கள் "பொருளாதார நடவடிக்கைகளை மீட்பதற்கு கடன்கள் வழங்குவதை திறமையுடன் கட்டுப்படுத்துவதற்கான புதிய, நிதிய கணக்குத் தரங்களை சுமத்தவும் விரும்பவில்லை" என்று புலம்புகிறார்.

தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கை முதலாளித்துவத்தை கீன்சிய வேலைத்திட்டத்திற்கு தள்ளும் என்றும் சபடோ உட்குறிப்பாகக் கூறுகிறார். அவர் எழுதுவதாவது: "மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கங்களுக்குள் நடந்த சிந்தனைப்போக்கு விவாதத்திற்குள் கீன்சிய முறை செயல்பாடு ஒன்றும் சமூகப் பொருளாதார கட்டமைப்பு வகையாக தேர்ந்தெடுக்கப்படவில்லை." அது அதிகாரத்தின் உறவுகளால், தொழிலாளர் போராட்டங்களின் உயர்ந்து வரும் அலையால் திணிக்கப்பட்டது.

இந்த வரிகள் புரட்சிகர அரசியலை சபடோ மற்றும் NPA பகிரங்கமாக நிராகரிப்பதை உள்ளடக்கியுள்ளன. முதலாளித்துவ அரசால் பற்றாக்குறை செலவீனமானது, பொருளாதார நெருக்கடியால் தொழிலாளர்களின் வாங்கும் திறன் அழிவதை சமநிலைப்படுத்துவதற்கு சந்தையில் இருக்கும் மொத்த தேவையை உயர்த்துவததை- கீன்சிய அரசியல் குறிக்கிறது. இத்தகைய தேசிய சார்பு கொள்கைகள் பல முதலாளித்துவ அரசாங்கங்களினாலும் செயல்படுத்தப்படுகின்றன. இவை 2008 நிதியச் சரிவை எதிர்கொள்ளும வகையில் தற்காலிக அடிப்படையில் பல முக்கிய சக்திகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 1930களில் அவை நாஜி ஜேர்மனியில் மிகப் பெரிய இராணுவச் செலவினம், அமெரிக்காவில் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் புதிய உடன்பாடு என்ற விதத்தில் நடைபெற்றன.

கீன்சிய கொள்கைகள் முதலாளித்துவத்தை அகற்ற முற்படவில்லை; தளைகள் அற்ற தடையற்ற சந்தை செயல்பாடு பொருளாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி, சமூகப் புரட்சி வெடிப்பை கொண்டுவரம் சூழலை ஏற்படுத்தும்போது முதலாளித்துவத்தை காப்பதற்காக அது உள்ளது. கீன்சியக் கொள்கைகள் வேண்டும் என்று கூறுபவர்கள், சபடோ உட்பட, ஒரு கீன்சிய திட்டத்தின்பின் தொழிலாளர்கள் போராட்டங்களை திசைதிருப்ப விரும்புகின்றனர்; அவை "முதலாளித்துவ எதிர்ப்பு" அல்ல, மாறாக முதலாளித்துவத்தை காப்பவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறது.

முக்கிய சக்திகள் ஏற்றுள்ள ஊக்கப் பொதிகள் பொருளாதார நடவடிக்கையில் முக்கிய சரிவை தடுக்க ஆற்றல் இல்லா மிகச் சிறிந நடவடிக்கை என்று சபடோ குறைகூறுகிறார். "நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனர் போல் க்ரக்மன் கருத்தின்படி, 2009 GDP யில் 5 சதவிகிதத்தை கொண்டுள்ள ஒபாமா ஊக்கப் பொதி மந்தநிலையின் பெரும் தன்மையை பாதிதான் குறைப்பதில் வெற்றி காணும். அப்படியானால் ஐரோப்பிய ஊக்கப் பொதித்திட்டங்களை பற்றி நாம் என்ன கூறமுடியும்? அவை முற்றிலும் குறைவான தன்மை உடையவை: இங்கிலாந்தில் 1.3 சதவிகிதம், பிரான்சில் 1 சதவிகிதம், ஜேர்மனியில் 0.8 சதவிகிதம், இத்தாலியில் 0.1 சதவிகிதம்."

விலை ஏற்றத்தை, ஐரோப்பிய மத்திய வங்கி போன்று எதிர்க்கும் மத்திய வங்கிகள், பணத்தை அச்சிடுவதன் மூலம் முதலாளித்தவ அரசு அடிக்கடி நிதியளிக்கும் பிணை எடுப்பு ஊக்கப்பொதிகளுக்கு குரோதமாக இருக்கும் என்று என்று சபாடோ அறிவார். அவர் கூறுகிறார்: "ஐரோப்பிய மத்திய வங்கியின் சுயாதீனத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; ஐரோப்பிய மக்கள் தங்களுக்காக நிறுவும் அரசியல் நிறுவனங்களின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் பொது வங்கியாக இருக்க வேண்டும்."

ஒரு பக்கமாக, 1930 களில் வந்த கீன்சிய கொள்கைகள், தனிப்பட்ட முதலாளித்துவ அரசுகளை அடிப்படையாகக் கொண்டவை போல, "அடிப்படைரீதியாக ஆயுதமாக்கல் பொருளாதாரத்தின் அடிப்படையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன." என்று சபடோ குறிப்பிடுகிறார். இரண்டாம் உலகப் போருக்கான அஸ்திவாரங்களை தயாரிப்பதில் கீன்சிய கொள்கைகள் பங்கு பெற்றன என்பதை உட்குறிப்பாக ஒப்புக் கொள்ளும் சபடோ தான் அவற்றிற்காக வாதிடுவது பற்றி மறு பரிசீலனை செய்யவில்லை.

முதலாளித்துவ சீர்திருத்தம் நிலைக்கும் என்ற கருத்துடன் இணைந்தவிதத்தில், சபாடோ தொழிலாள வர்கக்த்தின் செயல்பாடு பற்றி முழு சோர்வினைத்தான் காட்டுகிறார். பொதுத் துறைகள், பல்கலைக்கழகங்கள், பல ஆண்டுகளாக வேலைநிறுத்தங்களில் ஈடுபடாத தனியார் துறைகளின் முக்கிய பிரிவுகள் (கார்த்தொழில் போன்றவை) ஆகியவற்றை அதிர்விற்கு உட்படுத்தும் வேலைநிறுத்தங்கள் பற்றி அவருடைய ஆவணம் ஏதும் கூறவில்லை. முதலாளித்துவ அரசியல் வாதிகள் PS தலைவர் செகோலீன் ரோயால், கோலிச தலைவர் டொமினிக் டு வில்ப்பன் ஆகியோர்கூட பிரான்சில் "ஒரு புரட்சிக்கான" ஆபத்து உள்ளது என்று எச்சரித்துள்ளனர். ஆனால் சபடோ, "பொருளாதார நெருக்கடிக்கும் வர்க்கப் போராட்டத்திற்கும் இயந்திர ரீதியிலான தொடர்பு ஏதும் இல்லை" என்ற கருத்தைக் கூறுகிறார்.

தொழிலாள வர்க்கத்தின் பெருகிய பிரிவுகள் போராட்டத்தில் நுழைந்து, உலக வணிகம் மற்றும் தொழில்துறை உற்பத்தி சரிகையில், சபடோ LCR ன் பழைய சொற்றொடர்களான, "சமூக மற்றும் சுற்றுச் சூழல் அவசரத் திட்டம்" பற்றி மீண்டும் பேசுகிறார்: அதில் அரசாங்கம் வேலைநீக்கங்கள் சட்டவிரோதம் என்று அறிவிக்கும். இவருடைய ஆவணத்தில் இது ஒன்றுதான் சிறப்பாக உள்ளது: இத்தகைய போலித்தன முற்போக்கு சொற்றொடர்கள், பல காலமும் LCR ஆவணங்களில் பலமுறை கூறப்பட்டவை, ஒரு கீன்சிய, முதலாளித்துவ சார்பு உடைய கொள்கையுடன் இயைந்தவை என்று ஆகின்றன. இவற்றில் சோசலிச, புரட்சிகர, உண்மையில் முதலாளித்துவ எதிர்ப்புத் தன்மை ஏதும் இல்லை.

எவ்வித அரசியல் பிரேரணைகளையும் போராட்டத்தில் நுழையும் பெருகிய தொழிலாள வர்க்க அடுக்குகளுக்கு கொடுக்கும் நிலையில் இல்லாத சபடோ புதிய பாசிஸ்ட்டுக்களிடம் தன் செல்வாக்கை NPA இழக்கக்கூடும் என்ற அச்சத்தை வெளியிடுகிறார். அவர் எழுதுவதாவது: "வரலாற்றுக் காலங்களுக்கு --1930 மற்றும் தற்காலம்-- இடையே உள்ள வேறுபாடு தெளிவு ஆகும். ஆயினும் கூட தொழிலாளர்கள், சமூக இயக்கங்கள், தொழிலாளர்கள் இயக்கங்கள், ஜனரஞ்சகமாக பேசுபவர்கள், சர்வாதிகாரத்தனம் மற்றும் நாட்டுவெறி தூண்டும் வலதுகள் ஆகியோருக்கு இடையே பந்தயம் நடைபெறுகிறது."

NPA இன் அரசியல் நடவடிக்கைக்கான முன்னோக்கு பற்றி, குறிப்பாக NPA ஏன் PS அல்லது PCF பிரிவுகளுடன் வெளிப்படையான தேர்தல் உடன்பாட்டை கட்டமைக்கவில்லை, சபடோ NPA பற்றி விவாதித்து முடிவுரை கூறுகிறார். இந்த வினா, NPA உறுப்பினர்களின் கணிசமான பகுதிகளே தங்களைத்தாங்களே கேட்டுக்கொள்கின்றனர், ஏனெனில் சபடோ ஒரு கீன்சிய கொள்கையை முன்மொழிகிறார்--அதாவது அரசு அதிகாரத்துவத்தின் உயர்மட்ட பிரிவின் ஒத்துழைப்புடன் மட்டும்தான் ஒருவரால் செயல்படுத்தப்பட முடியும். இத்தகைய கொள்கைக்கு முதலாளித்துவ இடதின் நடைமுறைக் கட்சிகளுடைய ஆதரவு தேவை.

சபடோ எழுதுகிறார்: "தீவிரப் போக்குடைய இடதுகள் சமூக ஜனநாயகம் அல்லது மைய-இடதுடன் ஒரு அரசாங்கத்தில் பங்கேற்கக் கூடிய அனைத்து நாடுகளிலும், இது தடையற்ற சந்தையின் இடதின் அரசியல் செயற்கைக் கோளாக மாறியது." உதாரணங்களாக அவர் சமூக சிக்கன கொள்கைகளை சுமத்திய PS அரசாங்கங்களில் PCF பங்கு பெற்றதால் அதன் செல்வாக்கு சரிந்தது; 1990 களின் தொடக்கத்தில் ஈராக்கிற்கு எதிரான வளைகுடாப் போரில் PS சேர்ந்தது; 2006-08ல் ரோமனோ பிரோடியின் இத்தாலி நாட்டு Unione அரசாங்கத்தில் Rifondazione Communista பங்கு பெற்றது; அப்பொழுது அது ஓய்வூதிய குறைப்புக்களை செயல்படுத்தியது, ஆப்கானிஸ்தானின்மீது அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பில் பங்கு பெற்றது.

NPA இன் பிரச்சாரம் மற்றும் சபடோவின் முன்னோக்கு ஆவணம் காட்டுவதுபோல், NPA யும் இதேபோல் ஆளும் கட்சிகளுடைய செயற்கைக் கோள்தான்; அதன் சுற்றுவழியின் தான்தோன்றித்தன முறையில்தான் இது PCF மற்றும் Rifondazione ஆகியவற்றில் இருந்து வேறுபடுகிறது. அவருடைய அரசியல் முன்னோக்கில் உட்குறிப்பாக இருக்கும் கருத்தான PS, PCF ஆகியவற்றின் உடன்பாடுகள் வெளிப்படையாக முழு நிலையை அடைதல் என்பதைக் கூறாமால் விடுகிறார் என்றால், PCF, Rifondazion ஆகியவற்றிற்கு நேர்ந்தகதி NPA க்கும் மக்கள் ஆதரவுச் சரிவு என்பதற்கு வழிவிடும் என்ற அச்சத்தினால்தான்.

அவை தொடர்பாக சபடோ பெறும் முடிவு NPA க்கும் அதே அளவிற்குப்பொருந்தும். "முதலாளித்துவ நிறுவனங்களின் ஈர்க்கும் சக்தி தடையற்ற சந்தை எதிர்ப்பு அறிக்கைகள் அனைத்தையும்விட வலுவாக இருந்துள்ளது."