World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France opens first permanent military base in the Persian Gulf

பாரசீக வளைகுடாவில் முதல் நிரந்தர இராணுவத் தளத்தை பிரான்ஸ் திறக்கிறது

By Kumaran Ira
15 June 2009

Use this version to print | Send feedback

ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான அபு தாபியில் மே 26ம் தேதி பிரெஞ்சு இராணுவத் தளம் ஒன்றைத் திறந்தமை, பாரசீக வளைகுடாவில் பிரெஞ்சு முதலாளித்துவம் தன்னுடைய நலன்களை சாதிக்க ஆவல் கொண்டுள்ளதையும், உலக வினையாற்றுநராக அபிலாசைகளை கொண்டுள்ளதையும் எடுத்துக்காட்டுகிறது.

அமைதி முகாம் என்று அழைக்கப்படும் வரலாற்றளவில் கிரேட் பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் நெருக்கமாக இருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்டில் (UAE) உள்ள பிரான்சின் முதல் நிரந்தர இராணுவத்தளம் ஈரான் கடலோரப் பகுதியில் இருந்து 150 மைல் தூரத்தில்தான் உள்ளது. உலகின் எண்ணெய் தேவைகளின் மொத்தத்தில் 40 சதவிகிதம் கடக்கும் மூலோபாய முக்கியத்துவமிக்க ஹோமூஸ் நீரிணை (Strait of Hormuz)- ல் இருந்தும் இது அருகில்தான் உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் இராணுவ ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள பகுதியில் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் காலடி வைத்துள்ளதை இது குறிக்கிறது.

இந்தத்தளத்தில், ஒரு விமானத் தளம், ஒரு கடற்படைத் தளம் மற்றும் பயிற்சி முகாம்கள் உள்ளன; 500 பிரெஞ்சு துருப்புக்கள் இங்கு இருக்க முடியும். விமானத்தளத்தில் பிரான்சின் விமானப்படையை சேர்ந்த அல்-தாப்ராவில் உள்ள Mirage, Rafale ஜெட்டுக்கள் இருக்கும்; கடற்படைத் தளத்தில் மினா ஜாயெட் துறைமுகத்தின் (Mina Zayed port) 300 மீட்டர் பகுதி உள்ளடங்கும்; இதைத்தவிர அங்கு இந்திய பெருங்கடலுக்கு அனுப்பப்படும் கப்பல்களும் நிறுத்தி வைக்கப்படும். தரைத்தளம், பாலைவனப் பகுதியான ஜாயெட் முகாம் எமிரேட்டில் உள்ளது, நகர்ப்புற போர்களுக்கு பயிற்சி கொடுக்கும் வசதிகளைக் கொண்டுள்ளது.

ஆரம்பித்தவைத்த பின்னர் தன் முக்கிய உரையில் பிரெஞ்சு ஜனதாபதி நிக்கோலோ சார்க்கோசி கூறினார்: "அபு தாபியில் பிரான்சின் நிரந்தர தளம், நிச்சயமாக உலகம் முழுவதற்கும் மையமாக இருக்கும் இப்பகுதியில், உலக சக்தியான பிரான்ஸ், அதன் முக்கிய பங்காளிகளின் பக்கத்தில் தன் பொறுப்புக்களை ஏற்க நோக்கங்கொண்டிருப்பதைக் காட்டுகிறது." "இந்த இராணுவ நிலைகொள்ளலில் ஈடுபடும் பிரான்ஸ் ஐக்கிய அரபு எமிரேட் (UAE) உடனான பங்காளி உறவுகளில் மட்டும் ஒரு புதிய சகாப்தத்தைக் காணவில்லை, மத்திய கிழக்கில் உள்ள அதன் அனைத்து பங்காளிகளுடனும் காண்கிறது" என்று மேலும் கூறினார்.

UAE மற்றும் பிரான்ஸ் இரண்டும், ஜனவரி 2008ல் சார்க்கோசி வளைகுடா பகுதிக்கு வந்திருந்தபோது அபு தாபியில் தளம் நிறுவுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தன. இரு நாடுகளுக்கும் இடையே 1995ல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகத்தான் இத்தளத்தின் உருவாக்கம் இருக்கிறது.

அமைதி முகாம் தளம், காலனித்துவ சகாப்தம் முடிந்து 50 ஆண்டுகளுக்கு பின்னர் பிரான்சின் முதல் வெளிநாட்டுத் தளம், பிரெஞ்சு வெளியுறவுக் கொள்கையில் கணிசமான மாற்றத்தை பிரதிபலிக்கிறது. ஆபிரிக்காவில் இருக்கும் அதன் முன்னாள் காலனித்துவ பகுதிகளில் இப்பொழுது பிரான்ஸ் அதன் இராணுவத் தளங்களின் குவிப்பை மேற்கொள்கிறது. உலகில் மொத்தமாக 12,000 க்கும் மேற்பட்ட பிரெஞ்சு சிப்பாய்களை நிறுத்தியுள்ளதில், பாதிக்கும் மேலானவர்கள் ஆபிரிக்காவில் உள்ளனர்; மிக அதிக எண்ணிக்கை (2,800 துருப்புக்கள்) ஆபிரிக்க கொம்பு பகுதியான Djibouti ல் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் 3,000 துருப்புக்களை பிரான்ஸ் நிறுத்தி வைத்துள்ளது.

வளைகுடாப் பகுதியில் தளத்தை நிறுவியிருப்பது இப்பகுதிகளில் இருக்கும் விசை அளிப்புக்களை (Energy supplies) பெறுவதில் பிரான்ஸ் காட்டும் குவிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; மற்றும் பிரான்சின் பெருநிறுவனங்களுக்கான சந்தைகளின் சாத்தியங்களையும் காட்டுகிறது; குறிப்பாக இராணுவம் மற்றும் விசைத்துறை தொழில்நுட்பத்தில் ஆகும்.

கடந்த சில ஆண்டுகளாக பிரான்ஸ் முதல் வளைகுடா போர்க் காலத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட் (UAE) க்கு இராணுவ தளவாடங்களை அளிப்பதில் முதன்மையாக உள்ளது. ஜனாதிபதியின் எலிசே மாளிகை ஆதாரங்களின்படி, இன்று "அவர்களுயை இராணுவத் தளவாடங்களில் 50 சதவிகிதம் பிரான்சில் இருந்து வந்தவை." UAE உடைய உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான WAM க்கு கொடுத்த பேட்டி ஒன்றில் சார்க்கோசி கூறினார்: "இன்று UAE தான் வளைகுடா, மத்திய கிழக்கில் எங்கள் முதல் பங்காளியாக உள்ளது. இப்பகுதியில் இதுதான் எங்கள் பொருளாதாரப் பங்காளி என்பதும் உண்மையே. புள்ளிவிவரங்களே அதற்கு சாட்சி. UAE க்கு பிரான்சின் ஏற்றுமதிகள் கடந்த 10 ஆண்டுகளில் மும்மடங்கு ஆகியுள்ளன. வளைகுடா பகுதியில் பிரெஞ்சு முதலீடுகளில் பாதிக்கும் மேலானதை UAE இன்று பெறுகிறது."

சார்க்கோசியின் பயணம் பிரெஞ்சுப் பயன்பாட்டு நிறுவனங்களான Total, GDG, ஆகியவற்றிற்கு ஒப்பந்தங்களைப் பெறுவதிலும் அணுசக்தி நிறுவனம் Areva க்கு ஒரு சிவிலிய விசை ஆலையை UAE ல் கட்டமைக்கும் ஒப்பந்தத்தைப் பெறவும் இலக்கைக் கொண்டுள்ளது: இவை பல பில்லியன் யூரோக்கள் மதிப்பு உடையவை ஆகும். அமெரிக்க நிறுவனம் General Electric, மற்றும் Korea Electric Power ஆகியவற்றிடம் இருந்து போட்டியை பிரான்ஸ் எதிர்கொள்கிறது--இது UAE வின் திட்டமான அணுசக்தி விசை உற்பத்தி ஆலையைக் கட்டமைப்பதில் ஒரு பங்கு பெறுவதற்காகும்.

மே 25ம் தேதி பைனான்சியல் டைம்ஸ், Institute for Near East and Gulf Military Analysis ன் தலைமை நிர்வாகிகளுள் ஒருவரான Riad Kawaji, "அபு தாபியில் இருந்து, மற்றொரு மேலை சக்தி இப்பகுதியின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் என்ற உறுதியைப்பெற்றுள்ளது; எனவே இப்பகுதிப் பாதுகாப்பில் ஏகபோக உரிமை இனி இல்லை; தொழில்நுட்பம் மற்றும் தொழில், பொருளாதாரத் திட்டங்களுக்கு பிரான்சிடம் இருந்து கூடுதலான அளிப்புக்களை அது உறுதியுடன் எதிர்பார்க்கும்." என்று கூறியதை மேற்கோளிட்டு எழுதியுள்ளது.

சந்தேகத்திற்கு இடமில்லாத தனிப்பட்ட பெருநிறுவன நலன்கள் சம்பந்தப்பட்டுள்ளது தவிர, சக்திவாய்ந்த மூலோபாய நலன்களும் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தை இப்பகுதியில் தன்னுடைய இராணுவச் செல்வாக்கை வலுப்படுத்தச் செய்துள்ளன.

அடுத்த 15 ஆண்டுகளுக்கான அதன் இராணுவத் திட்டங்கள் மற்றும் பிரான்சின் இராணுவ துருப்புகள் நிலைநிறுத்தம் பற்றி கடந்த ஆண்டு பாரிஸ் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. இந்த வெள்ளை அறிக்கையின்படி பிரான்ஸ், அட்லான்டிக்கில் இருந்து மத்தியதரைக் கடல் பகுதிவரை, அரேபிய பாரசீக வளைகுடா, இந்தியப்பெருங்கடல் வரை குவிப்புக் காட்டும். இந்த அச்சு பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய மூலோபாய நலன்களுக்கான ஆபத்துக்கள் அதிகமாக இருக்கும் இடங்களை ஒத்து உள்ளது."

அமெரிக்க-ஈரானிய பேச்சுவார்த்தைகள் பற்றி, ஒருவேளை அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே உறவுகள் சீரடையலாம் என்று எதிர்பார்ப்புக்கள் வளர்ந்துள்ள நிலையில், குறிப்பாக, சார்க்கோசியின் நடவடிக்கை வளைகுடா பகுதியில் மூலோபாயச் செல்வாக்கு மறு பங்கீட்டுடன் பிணைந்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்க்கு பயணிப்பதற்கு முன்பு சார்க்கோசி WAM ற்கு மே 24ம் தேதி ஒரு தனிப் பேட்டியைக் கொடுத்தார். ஈரானின் அணுசக்தித் திட்டத்தைப் பற்றிப் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்: "ஈரானிய நெருக்கடி உலகப் பாதுகாப்பை அச்சுறுத்தும் பிரச்சினைகளில் ஒன்று என்பது வெளிப்படை. என்னுடைய நிலைப்பாடு தெளிவு; ஈரான் அணுவாயுதங்களை வைத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று நான் இன்னமும் கூறுவேன்.

ஆனால் ஒபாமா நிர்வாகத்தின் ஆலோசனையான ஈரானுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தக்கூடும் என்பதை அவர் வரவேற்றுள்ளார். "இந்த அணுகுமுறை சிறந்த விருப்புரிமை என்று நான் நம்புகிறேன். இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு ஒரே வழியாகக்கூட இருக்கும்." ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, ஈரானிய அதிகாரிகள் புதிய அமெரிக்க நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்த ஆர்வம் காட்டியுள்ளனர். தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஒபாமா ஈரானிய அரசாங்கத்துடன் பேசத் தயார் என்று கூறியிருந்தார்.

தளத்தில் தன்னுடைய ஆரம்ப உரையில் சார்க்கோசி பாரசீக வளைகுடாவில் ஈரானின் செல்வாக்கு பற்றி வெளிப்படையாக ஏதும் கூறவில்லை; ஆனால் UAE க்கு உறுதுணையாக பிரான்ஸ் இருக்கும் என்றார். "இந்த இராணுவத் தளம் நிறுவப்பட்டிருப்பது என்ன வந்தாலும் UAE உடன் நிற்போம் என்ற எங்கள் விருப்பத்தின் ஸ்தூலமான மற்றும் வலுவான நிரூபணம் ஆகும்." அதே நேரத்தில், "பிரான்சின் நிரந்தர இராணுவ இருப்பானது எவரையும் இலக்கு கொள்ளவில்லை." என்று சேர்த்துக் கொண்டார்.

பிரான்சின் நிரந்தர இராணுவ இருப்பு வளைகுடாவில் இருப்பது பற்றி எதிர்கொண்ட ஈரானிய அதிகாரிகள் அபு தாபியில் இராணுவ நிலைப்பாட்டை பிரான்ஸ் கொள்ளுவதற்கு UAE அனுமதித்துள்ளது, பிராந்திய பாதுகாப்பு நிலையை முன்னேற்றுவிக்காது என்றனர். ஈரானிய வெளியுறவு அமைச்சரக செய்தித் தொடர்பாளர் Hassan Qashqavi கூறினார்: "UAE உடைய முடிவு தர்க்கரீதியாக சரியல்ல; பிராந்திய பாதுகாப்பிற்கு அது முன்னேற்றம் கொடுக்கும் நடவடிக்கை அல்ல." "வெளிநாட்டுக்காரர்களை தங்கள் இராணுவ இருப்பை இப்பகுதியில் அதிகரித்துக் கொள்ள அனுமதிப்பது பாதுகாப்பு மற்றும் உறுதியின்மையை கீழறுத்து, ஆயுதப் போட்டிகளுக்கு வழிவகுக்கும்."

தன்னுடைய பங்கிற்கு, பிரெஞ்சு முதலாளித்துவ செய்தி ஊடகம், அமெரிக்கா ஈரானுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவதால் வாஷிங்டனில் செல்வாக்கு இழப்பது பற்றி ஐக்கிய அரபு எமிரேட் ஆளும் வர்க்கத்தின் அச்சத்தைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் சார்க்கோசியால் UAE யில் பிரெஞ்சு நலன்களை முன்னேற்ற முடியும் என்று கணக்கிடுகிறது.

மே 25ம் தேதி Le Figaro எழுதியது: "இச்சிறிய வளைகுடா நாடு அதன் அண்டை நாடான ஷியைட் ஈரான் அணுவாயுதத்தை ஒருநாள் பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தைக் கொண்டுள்ளது. எனவே அபு தாபி புதிய காப்பாளர்களை நாடுகிறது." தளங்கள் பற்றி பேச்சுவார்த்தைள் நடத்திய அதிகாரி ஒருவரை பெயரிடாமல் அது ".....குறிப்பாக அமெரிக்கர்கள் மீண்டும் உலகில் தங்கள் மூலோபாய விருப்பங்களை மறு-மதிப்பீடு செய்யும் நிலையில், ஒரு நண்பரை விட இருவர் இருப்பது நல்லது." என மேற்கோளிட்டுக் கூறியுள்ளது.