World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Origins and consequences of the 1989 Tiananmen Square massacre

1989 தியனன்மென் சதுக்கப் படுகொலை : தோற்றங்களும் விளைவுகளும்

பகுதி 1

By John Chan
4 June 2009

Use this version to print | Send feedback

இரு தசாப்தங்களுக்கு முன்பு 1989 ஜூன் 4ம் தேதி பெய்ஜிங் ஒரு போர்க்களத்தை ஒத்திருந்தது; ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாயின, தொடர்ந்து துப்பாக்கி வெடிச் சத்தம், டாங்குகள் தெருக்களில் சென்றது, தெருக்களில் சடலங்கள் நிறைந்து காணப்பட்டன. முந்தைய வாரங்களில், மக்கள் விடுதலை இராணுவம் (PLA -People's Liberation Army) ஐ சேர்ந்த 200,000 துருப்புக்கள் இராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டதை அடுத்து தலைநகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சீனாவில் பெரும் தலைவர் டெங் ஜியாவோபிங் உத்தரவின்பேரில் ஸ்ராலினிச சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) எதிராக நீடித்த இரு மாத கால தொழிலாளர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை இராணுவம் நசுக்கியது.

ஜூன் 3-4 நிகழ்வுகள் பொதுவாக தியனன்மென் சதுக்கப் படுகொலைகள் என்று குறிக்கப்பட்டாலும், பெரும்பாலான கொலைகள் பலமான ஆயுதம் ஏந்திய 40,000 துருப்புக்கள் ஜூன் 3 மாலை மற்றும் மறுநாள் காலை தியனன்மென் சதுக்கத்தை அடைவதற்காக நெருக்கமாக மக்கள் நிறைந்திருந்த தொழிலாள வர்க்க பகுதிகளூடாக செல்வதற்காக சுட்டதில்தான் பெரும்பாலான இறப்புக்கள் ஏற்பட்டன. சாலைத் தடைகள் சுற்றியிருந்த புறநகர்ப்பகுதிகளில் எழுப்பப்பட்டிருந்துடன், தொழிலாளர்களுக்கும் ஆயுதபாணிகளான மக்கள் விடுதலை இராணுவத்திற்க்கும் இடையே கடுமையான தெரு மோதல்கள் நிகழ்ந்திருந்தன.

ஜனநாயக சீர்திருத்தங்கள் தேவை என்று ஏப்ரல் 1989ல் பெய்ஜிங்கில் மாணவர்கள் எதிர்ப்புக்களை தொடங்கினர். இவை நாடு முழுவதும் வெள்ளமென நகர்ப்புறத் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியை ஏற்படுத்தின. தொழிலாள வர்க்கத்தினர் இன்னும் கூடுதலான தீவிரமான சமூக கோரிக்கைகளை முன்வைத்தனர். நாட்டின் உயர்கல்வி அமைப்புக்கள் முழுவதிலும் உள்ளடங்கியவர்கள், நாட்டின் தொழில்நுட்ப பள்ளிகளில் பாதி, கணக்கிலடங்கா ஆலைகள், சுரங்கங்கள் மற்றும் 400 நகரங்களில் அலுவலங்கள் ஆகியவற்றிலுள்ள கிட்டத்தட்ட 100 மில்லியன் மக்கள் ஏதேனும் ஒரு விதத்தில் எதிர்ப்புக்களில் பங்கு பெற்றன. பெய்ஜிங்கில் இயக்கத்தை நெரித்து, பல ஆயிரக்கணக்கான பங்குபற்றியவர்களை கைது செய்தல் உட்பட பின் நாடு முழுவதும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்த விதத்தில், அரசு புரட்சிகர நெருக்கடியில் இருந்து தப்பியது.

மக்கள் எதிர்ப்புக்களை எதிர்கொண்ட அளவில், ஆட்சி ஆழ்ந்த பிளவையும் கண்டது. தன்னுடைய சந்தைச் சீர்திருத்த செயல்பட்டியலுக்காக மாணவர்கள் மற்றும் தாராளவாத அறிவுஜீவிகளுக்கு ஆதரவு கொடுத்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஷாவோ ஜியாங் பதவி நீக்கம் பெற்று, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். மக்கள் விடுதலை இராணுவத்தின் ஒரு பிரிவினர் எதிர்பாளர்களுக்கு ஆதரவு காட்டி உள்நாட்டுப் போர் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை உருவாக்கினர். புதிய எதிர்ப்பு இயக்கங்களின் வெடிப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் 1989 க்குப் பின்னர் எவ்வித ஜனநாயகச் சீர்திருத்தம் பற்றிப் பேசுவதையும் பெய்ஜிங் நிறுத்திவிட்டது.

உத்தியோகபூர்வமாக இறந்தவர் எண்ணிக்கை 241 தான் என்று ஆட்சி கூறியது. இதில் இராணுவத்தினரும் அடங்குவர் எனப்பட்டது. படுகொலை பற்றி ஆய்வு மேற்கொண்ட சுயாதீன அமைப்புக்கள் அனைத்தும் இந்த எண்ணிக்கையை வினாவிற்கு உட்படுத்தியுள்ளன. மதிப்பீடுகள் 2,000 முதல் 7,000 இறந்தவர் என்று கூறுகின்றன. சீன மக்களை மிரட்டும் நோக்கத்தை மட்டும் அடக்குமுறை கொண்டிருக்கவில்லை. உலக முதலீட்டாளர்களுக்கு சீன போலீஸ்-அரசாங்கக் கருவி தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்கிற்குள் வைக்க முடியும் என்ற தெளிவான செய்தியை கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

ஜூன் 2, 1989 அன்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்குழு கட்சியின் "மூத்தவர்களுடன்" டெங் தலைமையில் கூடி தியனன்மென் சதுக்க ஆக்கிரமிப்பை பலாத்காரத்தை பயன்படுத்தி அகற்றுவது என்று முடிவெடுத்தது.

இக்கூட்டத்தில் மாவோவின் விவசாய தளபதிகளில் ஒருவரான வாங் ஷென் இருந்தவர்களுடைய உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் பேசினார்: "அந்த உருப்படா முட்டாள்ப்பயல்கள்! தங்களை என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், தியனன்மென் போன்ற புனித நிலத்தில் இத்தனை நேரம் ஆக்கிரமித்து நின்று! உண்மையில் வம்பை எதிர்பார்க்கிறார்கள்! இந்த எதிர்புரட்சி எழுச்சியாளர்களை பிடிப்பதற்கு நான் உடனே துருப்புக்களை அங்கு அனுப்ப வேண்டும் தோழர் ஜியாவோபிங் அவர்களே! எதற்காகத்தான் மக்கள் விடுதலை இராணுவம் உள்ளது? இராணுவச் சட்டத் துருப்புக்கள் எதற்காக உள்ளன? வெறுமே உட்கார்ந்து கொண்டு உணவு உட்கொள்ளுவதற்கு இல்லை! ...நாம் ஏதேனும் செய்ய வேண்டும், இல்லாவிடின் சாதாரண மக்கள் எழுச்சியுறுவர்! கம்யூனிஸ்ட் கட்சியை அகற்ற முயலும் எவருக்கும் மரணம்தான், ஒழுங்கான புதைப்பும் கிடையாது! [1]

வாங் ஷென்னின் கருத்துக்கள் நகர்ப்புற தொழிலாள வர்க்கத்திடம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி காட்டிய வெளிப்படையான வர்க்க விரோதத்தை நிரூபித்தன. 1949ல் மாவோவின் விவசாயிகள் இராணுவத்தால் பதவிக்கு வந்த ஆட்சி, சோசலிச அல்லது கம்யூனிஸ்ட்டோ அல்ல. நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் 1989 ஐ ஒட்டி, உலக ஏகாதிபத்தியத்தின் சார்பில் சீனத் தொழிலாள வர்க்கதிற்கு எதிராக போலீஸ்-அரச கருவியாக செயல்பட்டது.

மாவோயிசத்தின் பரிணாமம்

உலக ஏகாதிபத்தியத்தின் கையாள் என்று ஸ்ராலினிசத்தை ட்ரொட்ஸ்கிசம் குறைகூறியதை தியனன்மென் சதுக்கப் படுகொலைகள் உறுதி செய்துள்ளன. 1925-27 சீனப் புரட்சிக் காலத்தில் தொழிலாள வர்க்கம் பெரிதும் நசுக்கப்பட்டதற்கு பின்னர் ஸ்ராலினிசத்தின் ஒரு பிரிவாக மாவோவிசம் வெளிப்பட்டது. இது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை முதலாளித்துவ கோமின்டாங் (KMT) க்கு அடிபணிய செய்த ஸ்ராலினிச வர்க்க ஒத்துழைப்புக் கொள்கையின் நேரடி விளைவு ஆகும். இதன் பின்னர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் ஒரு பிரிவு ட்ரொட்ஸ்கிசத்திற்கு திரும்பி நகர்ப்புறத் தொழிலாளர்களுடனான தனது நிலைநோக்கை தக்க வைத்துக் கொண்டது. ஆனால், மாவோ சேதுங் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தகமை பற்றி ஆழ்ந்த அவநம்பிக்கை கொண்டிருந்து, விவசாயிகளிடம் சார்பு கொள்ள வேண்டும் என்றும் ஒரு "சிவப்பு இராணுவத்தால்" கிராமப்புற கெரிலா போர் முறை தேவை என்ற முன்னோக்கையும் வலியுறுத்தினார்.

மாவோயிசம் ஒரு கொலைகார, தொழிலாள வர்க்க-எதிர்ப்பு நிறைந்த ஆட்சியாக பரிணாமம் அடைந்தற்கான காரணம், சர்வதேச சோசலிச முன்னோக்கை நிராகரித்து ஸ்ராலினிச முன்னோக்கான தேசியப்பாதையில் சோசலிசத்தை அடைதல் என்பதில் அதனது மூலங்களை கொண்டிருந்தது. ஸ்ராலினின் "இரண்டு கட்ட" கோட்பாட்டின்படி சீனா போன்ற பின்தங்கிய நாடுகள் முதலில் நீடித்த முதலாளித்துவ வளர்ச்சிக் காலத்தை கடந்து, பெரும் தொழில்துறை ஒருங்கிணைப்பு மற்றும் தொழிலாள வர்க்க வளர்ச்சிக்கு வகை செய்யும். இது சோசலிசப் புரட்சியை ஒரு நெடுங்காலத்திற்கு பின்தள்ளிவிடும். இந்தக் கோட்பாடுதான் 1927 சீனப்புரட்சியை நெரித்துவிட்டது.

இருபதாம் நூற்றாண்டில் "இரண்டு-கட்ட" கோட்பாடு தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவைத்தான் தோற்றுவித்தது. ஆசியா முழுவதும் ஒவ்வொரு ஸ்ராலினிச கட்சியும் ஏதேனும் ஒருவிதத்தில் தங்கள் தேசிய முதலாளித்துவத்தின் நலன்களுக்குத்தான் ஆதரவைக் கொடுத்துள்ளது. 1965ம் ஆண்டு பாரிய இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்தின் நலன்களை தேசிய முதலாளித்துவ சுகர்னோவிற்கு அடிபணிய செய்தது. அந்த நேரத்தில் தளபதி சுகார்ட்டோ தலைமையில் இராணுவம் அமெரிக்க ஆதரவு கொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அரை மில்லியன் தொழிலாளர்கள், விவசாயிகளை படுகொலை செய்தது. 1975ல் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் "வெற்றி" நாடு இன்று குறைவூதியத் தொழிலாளர் அரங்காக மாறியிருப்பதற்கு வழிவகுத்தது போல், 1949ல் மாவோவிஸ்ட்டுக்கள் அதிகாரத்திற்கு வந்தது சீனா பின்னர் 1990களில் உலகத்தின் மோசமான சுரண்டல் ஆலையாக வெளிப்படக் காரணம் ஆயிற்று.

1930 களின் ஆரம்பத்தில் லியோன் ட்ரொட்ஸ்கி மாவோவின் கீழ் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி என்பது "புரட்சிகர குட்டி முதலாளிகளின் இயக்கம்" என்று எச்சரித்திருந்தார்; இவருடைய திட்டம் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பிரதிபலிக்காமல் முதலாளித்துவத்தை பிரதிபலிக்கிறது என்றும் இவருடைய விவசாயிகள் இராணுவம் நகரங்களைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றால் தொழிலாள வர்க்கத்திடம் ஆழ்ந்த விரோதம் காட்டும் என்றும் கூறியிருந்தார். கோமின்டாங் ஆட்சியை 1949 ல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அகற்றியது ட்ரொட்ஸ்கியின் ஆய்வை நிரூபித்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாளித்துவம், குட்டி முதலாளித்துவம், விவசாயிகள், தொழிலாள வர்க்கம் கொண்ட "நான்கு வர்க்கங்களின் முகாமை" நிலைநிறுத்த மாவோவின் படைகள் நகர்ப்புறத் தொழிலாளர்களின் சுயாதீன நடவடிக்கைகளை அடக்கி சீன ட்ரொட்ஸ்கிச இயக்கத்தையும் அழித்து விட்டன. மக்கள் விடுதலை இராணுவத்தின் கட்டுப்பாட்டு பிரிவினர் புதிய அரசாங்கத்திற்கு தயார் நிலையில் இருந்த அதிகாரத்துவத்தினை கொடுத்து மக்கள் முன்னெடுப்புகளை அடக்க உதவியது.

ஸ்ராலினிச கோட்பாடான "தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமைத்தல்" என்பதை மாவோ தழுவினார். தொழில்களை தேசியமயமாக்குதல், அதிகாரத்துவ முறையில் திட்டமிடுதல் என்பவற்றிற்கு அவர் மாறியது ஜனநாயக முறையில் தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாடு உள்ளடங்கிய ஒரு சோசலிசக் கொள்கை அல்ல. மாறாக 1950-53 ல் கொரியப் போரின் பொருளாதார நெருக்கடியினால் தூண்டப்பட்டதும், மற்றும் சீனா சோவியத் முகாமில் இணைந்ததன் பிரதிபலிப்பாகும். ஹங்கேரிய மற்றும் போலந்து தொழிலாளர்கள் 1956 இல் எழுச்சிகள் நடத்தியது பற்றி ஆழ்ந்த அச்சம் கொண்டிருந்த மாவோ கிழக்கு ஐரோப்பாவில் மாஸ்கோ இராணுவ வன்முறை பயன்படுத்தியதற்கு ஆதரவு கொடுத்து சீனாவில் அத்தகைய எழுச்சியை முன்கூட்டித் தடுக்கும் வகையில் அரை மில்லியன தொழிலாளர்களையும் புத்திஜீவிகளையும் 1957ல் தண்டனைக்கு உட்படுத்தினார்.

பெரிய தொழிற்துறை வளர்ச்சி நகர்ப்புற தொழிலாள வர்க்கத்தை விவசாயிகளின் இழப்பில் வலுப்படுத்த உதவும் என்ற உண்மையைக் கண்டு மாவோ எப்பொழுதும் அஞ்சினார். 1950 களின் கடைசிப் பகுதியில் அவர் ஒரு புதிய ஐந்தாண்டுத் திட்டத்தை நிராகரித்து, அதற்குப் பதிலாக "பின்புற தொழில்நுட்ப" அடிப்படையில் "சோசலிச" கிராமப்புற கம்யூன்களை கட்டமைக்கும் தொடர்ச்சியான கற்பனாவாத சோதனைகளை நடைமுறைப்படுத்தவும் முயன்றார். இதன் விளைவு ஒரு பொருளாதாரப் பேரழிவு ஆகும். அது லியூ ஷாவோக்கி மற்றும் டெங் ஜியாவோபிங் ஆகியோரின் தலைமையில் வெளிப்படையாக முதலாளித்துவ சார்புடைய பிரிவுகளின் தோற்றத்திற்கு காரணமாகி, கூட்டுபண்ணைகளை அகற்றிய சந்தை சார்புடைய செயற்பட்டியலுக்கு ஊக்கம் கொடுத்து, அரசாங்க துறைகளுக்கு சுதந்திரத்தையும் மற்றும் வணிகத்திற்கும் ஊக்கத்தையும் கொடுத்தது. தன்னுடைய நிலையை தக்க வைத்துக் கொள்வதற்கு மாவோ "கலாச்சார புரட்சியை" 1966ல் தொடக்கி, மில்லியன் கணக்கான இளைஞர்களை "முதலாளித்துவ வழிகோலுவோருக்கு எதிரான பிரச்சாரத்தில் திரட்டினார். இதன் பிற்போக்குத்தன தன்மை நகர்ப்புற கலாச்சாரத்துடன் தொடர்புடைய அனைத்தும் "முதலாளித்துவம்" என்று தாக்கப்பட்டதில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.

1989ம் ஆண்டு தியனன்மென் படுகொலை ஒன்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது மக்கள் விடுதலை இராணுவம் கட்டவழித்துவிட்ட முதல் செயல் அல்ல. 1967ல் அரசாங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான தங்கள் வெறுப்பை, அதை உடைப்பதற்கான கோரிக்கையை மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் எழுப்பி வெகுஜன தொழில்துறை எழுச்சிக் குழுக்களை அமைத்தபோது மாவோ இராணுவத்தை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கானவர்களை கொன்று, அதை நசுக்கத் தயங்கவில்லை. 1960 களின் கடைசியிலும் 1970 களின் தொடக்கத்திலும், "சிவப்பு சீனா" என்பது அடக்குமுறை இராணுவ ஆட்சியின் மேலாதிக்கத்தை கொண்டிருந்தது. மதிப்பற்ற மாவோவாத தனிநபர் வழிபாட்டு முறை மற்றும் பொருளாதார தேக்கங்கள்தான் அப்பொழுது அதிகமாக இருந்தன. 1971ல் இன்னும் கூடுதலான அரசியல் கொந்தளிப்பைத் திசை திருப்புவதற்காக மாவோ அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நட்பை சீராக்க முயன்று அவருடைய ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனரஞ்சக சொற்களை கேலிக்கூத்து ஆக்கினார்.

ஆனால் பொருளாதார அரசியல் நெருக்கடி சீனாவிற்கு பிரத்தியேகமானது அல்ல. அதே ஆண்டு, பிரெட்டன் வூட்ஸ் நிதிய முறையின் சரிவு போருக்குப் பிந்தைய எழுச்சியின் முடிவைக் கண்டது. 1968ல் இருந்து 1975 வரை உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்கள் அலையென நடந்தன. தன்னல ஆட்சிக் குழுக்களின் ஸ்ராலினிச ஆட்சிகள் அதிகரித்துவந்த பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி முறையின் சூழலில் ஆபத்திற்கு உட்பட்டன. மாவோவின் கொள்கைகள் சீனாவில் பொருளாதார அழிவைத் தோற்றுவித்தது போல், சோவியத் ஒன்றியம் பொருளாதார தேக்கம் என்ற சகதியில் உழன்றது. தோழமையாக இருந்ததாகக் கருதப்பட்ட இரு ஆட்சிகளும் அவற்றின் தேசியவாத மற்றும் நாட்டுவெறியின் விளைவாக இராணுவத் தாக்குதலுக்கு வந்தன. இது பெய்ஜிங்கை தன் பக்கம் ஈர்க்க வாஷிங்டனை அனுமதித்தது.

சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அரசியல் ஆதரவைப் பெறுவதற்காக ஒன்றும் வாஷிங்டன் சீனாவை நோக்கி திரும்பவில்லை. சர்வதேச மூலதனம் வீழ்ச்சியடையும் இலாப விகிதங்களை உயர்த்த புதிய குறைவூதிய தொழிலாளர் பிரிவுகளையும் மற்றும் முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர்களின் சமூக நிலைமையை தாக்குவதற்காகவும் மிக அவசியமாக தேடுகையில் சீனா திறக்கப்படுவது என்பது புதிய பொருளாதார வாய்ப்புக்களை கொடுத்தது.

1976ல் மாவோவின் மரணத்திற்கு முன்பே மேலை பெருநிறுவனங்கள் சீனாவிற்கு திரும்பத் தொடங்கின. 1971-74ல் இருந்து சோவியத் முகாம் இல்லாத பகுதிகளுடன் சீனா கொண்டிருந்த வணிகம் மும்மடங்கு ஆயிற்று. 1975ல் இருந்தே அப்பொழுது சீச்சூன் மாநிலத்தின் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த ஜாவோ ஜியாங், கூட்டுப்பண்ணைகளை அகற்றினார். இது அவருக்கு அரசியல் முக்கியத்துவத்தை கொடுத்தது. மாவோவிற்குப் பின் உடனடியாக பதவிக்கு வந்த ஹுவா குவோபெங் "ஐந்து ஆண்டுத் திட்டம்" ஒன்றை தொடக்கினார். இதில் பாரிய முறையில் வெளிநாட்டு முதலீடு மற்றும் தொழில்நுட்பம் இறக்குமதி செய்யப்பட்டன. டெங் ஜியோவோபிங், ஹுவாவை நகர்த்திவிட்டு முற்றுமுழுதான சந்தை செயற்திட்டத்தை 1978ல் ஆரம்பித்தது ஒன்றும் தீவிரமான உடைவல்ல மாறாக மாவோவிசத்தின் தர்க்கரீதியான பரிணாமமாகும்.

சந்தைச் சீர்திருத்தத்தின் நெருக்கடி

ஒரு தனிநலக்குழுவின் ஆட்சியில் இருந்து முதலாளித்துவ சந்தைக்கான மாற்றம் தனிமைப்படுத்த முறையில் செய்யப்படவில்லை. மே மாதம் வெளியிடப்பட்ட நினைவுக் குறிப்புக்களில் காலம் சென்ற ஜாவோ ஜியாங் பெய்ஜிங் ஆரம்பத்தில் ஹங்கேரி, யூகோஸ்லாவியாவில் இருந்த "சந்தை சோசலிச" சோதனைகள் பற்றி ஊக்கம் கொண்டது. தெற்கு கொரியா, தைவானால் செயல்படுத்தப்பட்டிருந்த "ஆசியப் புலிகள்" மாதிரியை இது நகல் எடுத்தது. அவை இராணுவச் சர்வாதிகாரங்களின்கீழ் குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு அரங்குகளாக மாறியிருந்தன. ஜாவோ தான் தயாரித்த திட்டத்தின்படி 100முதல் 200 மில்லியன் மக்கள தொடர்பு இருக்கும் ஏற்றுமதி பொருளாதாரப் பகுதிகள் தோற்றுவிக்கப்படும் என்றார். அவருடைய திட்டம் 1989 தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு நசுக்கப்பட்ட பின்னர்தான் நிறைவேற்றப்பட்டது.

தன்னுடைய புத்தகத்தில் தான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான 1987 ஐ ஒட்டி தான் "சோசலிச சந்தைப் பொருளாதாரம்" போன்ற சொற்றடர்களை கண்டுபிடித்ததாகவும், இவை அவருடைய கொள்கைகளின் உண்மை உட்குறிப்புக்களை மறைத்தன என்றும், "முதலாளித்துவ பாதையை" அவர் எடுக்கிறார் என்ற குறைகூறலை தவிர்க்க அவ்வாறு செய்யப்பட்டதாகவும் நினைவு கூர்ந்துள்ளார். "சிந்தனைப் போக்கு தடைகளினால்தான் "சுதந்திர சந்தை" என்பது பயன்படுத்தப்படவில்லை" என்று அவர் எழுதினார். [2]

ஆரம்பத்தில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் வாழ்க்கைத் தரத்தில் சீனாவிற்கு வெளிநாட்டு தொழில்நுட்பம், சர்வதேச தொழில் பகுப்பு முறை ஆகியவை கிடைத்ததால் விளைந்த உயர் உற்பத்தித்திறனால் முன்னேற்றம் ஏற்பட்டது என்றாலும், சந்தை சக்திகள் விரைவில் பாரிய சமூகப்பிளவுகளையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தின. ஒரு புதிய முதலாளித்துவ வர்க்கம் வெளிப்பட்டு மக்களின் இழப்பில் தங்கள் நிலைமையை உறுதிபடுத்திக் கொள்ளத் தலைப்பட்டது.

ஒரு வரலாற்றாளர் எழுதியுள்ளது போல்: "டெங் ஆட்சியின் கீழ் வளர்ச்சியுற்ற சீன முதலாளித்துவத்தின் வினோதமான நிகழ்வுகளுள் ஒன்று ஆரம்ப மூலதனக்குவிப்புக்களுள் கணிசமான பகுதி உத்தியோகபூர்வ ஊழல்களுக்கு இலாபமாக போனதுதான். சீனாவின் புரட்சிக்கு பிந்தைய புதிய "முதலாளித்துவத்தினருக்குள்" உள்ளூர் அதிகாரிகள் (அவர்கள் நண்பர்கள், உறவினர்கள்) இருந்தது ஆகும். இவர்கள் பொருட்களை குறைந்த அரசாங்க விலைகளில் வாங்கி கூடிய சந்தை விலைகளுக்கு விற்றனர். இதேபோல் வெளிப்படையான அரசியல் உணர்மையில் குறிப்பிடத்தக்க வகையில் முக்கியமாக இருந்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் குழந்தைகள் ஆவர். இவர்கள் 1980களில் வெளிநாட்டு முதலாளிகளுக்கும் அரசாங்க நிறுவனங்களுக்கும் இடையே பெரும் இலாபமீட்டும் தரகர் பங்கினை வகிக்க அரசியல் பதவிகளில் இருத்தப்பட்டனர். வதந்திகள் கூறியது போல், அதிகாரத்துவ ஊழலின் சில பலன்களை ஐயத்திற்கு இடமின்றி ஸ்விஸ் வங்கிகளுக்கு சென்றாலும், பெரும்பாலனவை மிக அதிக இலாபம் தரும் உள்நாட்டு நிதிய, தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டன. அவைதான் அசாதாரண முறையில் விரைவான மூலதனக் குவிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வகை செய்தன."[3]

1987-88 ஐ ஒட்டி சந்தைச் சீர்திருத்த செயற்பட்டியல் கட்டுப்பாட்டை மீறிச்சென்றது. இதற்குக் காரணம் விலைகள் கட்டுப்படுத்தாதது, கூடுதல் கடன் அளித்தல் மற்றும் சொத்துக்கள் பிரிவில் ஊக வணிகம் ஆகியவை. இதனால் 1988 இலையுதிர் காலத்தில் பணவீக்கம் 30 சதவிகிதத்தை எட்டியது. ஜாவோ நினைவு கூர்ந்தார்: "வங்கிகளில் பணம் எடுக்க கூடியதும், பொருட்களை பதுக்கி வைக்கும் செயல்களும் மொத்த பீதியை ஏற்படுத்தின. இவை ஒரு பேரலையின் சக்தியுடன் வெளிவந்தன. ஒவ்வொரு பெரிய நகரமும் அழுத்தம்மிக்க நிலைமையில் இருந்தது." [4]

சமூக நெருக்கடியை அதிகரிக்க வைத்த நிலையில், ஜாவோ கடன் கொடுப்பதைக் கடினமாக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டார். இது பரந்த முறையில் ஆலைகள் மூடலை ஏற்படுத்தியது. இவர் முன்னதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த வேலைவாய்ப்பை நிறுத்தியது ஏற்கனவே வியத்தகு முறையில் ஆலைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு இன்மையை அதிகரித்தது அதே நேரத்தில் மில்லியன் கணக்கான கிராமப்புறத் தொழிலாளர்கள் கூட்டுப் பண்ணைகளில் இருந்தும் பணிநீக்கப்பட்டனர். வருமானங்கள் பணவீக்கத்தால் மதிப்பை இழந்தன. 1988 ல் மூன்றாம் ஆண்டு தொடர்ச்சியாக விவசாய உற்பத்தி சரிந்தது. அதற்குக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாட்டிற்குள் இருந்த குறைந்த தானியவிலை மற்றும் உரங்களில் உயர்ந்த சந்தை விலையும் ஆகும். பல மில்லியன் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் நகர்ப்புறங்களில் வேலையை நாடி வந்தனர். இது குற்ற விகிதத்தில் நிலையான ஏற்றத்தைக் கொடுத்தது. எதிர்ப்புக்கள், வேலைநிறுத்தங்கள் கலகங்கள் ஆகியவை பெருகின. மார்ச் 1989ல் திபெத்தில் அரசியல் புயல் ஒன்று உருவாகியது.

மாணவர் இயக்கத்தின் எழுச்சி

ஏப்ரல்-மே 1989 ல் வெடித்த அரசியல் நெருக்கடியின் வேர்கள் ஆட்சி சமூக ஆதரவுத் தளம் விவசாயிகளிடத்தில் பெற்றிருந்தது குறைந்து விட்டது என்பதையும் தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு புதிய சமூக தடையை அமைக்க அது தோல்வி அடைந்துவிட்டதிலும் உள்ளன.

சந்தைச் சீர்திருத்தத்தை நெறிப்படுத்துவதற்காக டெங் அறிவார்ந்த, கல்வியாளர்கள் வட்டங்களில் ஆதரவைத் திரட்ட முற்பட்டு, அதற்காக ஹு யாவோபாங்கை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் நியமித்தார். மேலை முதலாளித்துவ சமூக மற்றும் தத்துவச் சிந்தனைகள் சீன கல்வி வளாகங்களில் ஊக்கம் பெற்றன. இதில் மாவோ மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகார ஆட்சியின் குற்றங்களுக்கு காரணமாக தொல்சீர் மார்க்சிச கருத்துக்களை வெளிப்படையாக குறைகூறும் கருத்துக்களும் உலவின. பல தசாப்தங்களாக நீடிக்கும் அதிகாரத்துவ கட்டுப்பாடு இளைஞர்கள் நடவடிக்கைகள்மீது இருப்பதற்கு விரோதப் போக்கை கொண்ட பல மாணவர்களின் நடைமுறையில் இருந்த அமைப்புக்கான எதிர்ப்பிற்கு இப்புதிய படைப்புக்களால் ஈர்க்கப்பட்டனர்.

1986-87ல் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு அலைகள் டெங்கை அச்சுறுத்தின; அவர் ஹு யாவோ பாங்கை "முதலாளித்துவ தாராளவாதத்தை" எதிர்ப்பதற்காக பதவியில் இருந்து அகற்றினார். ஆனால் அரசியல் குழுவில் அவருடைய உறுப்பினர் தன்மை நீடித்தது. மாணவர் அமைதியின்மை இன்னும் பெரிய சமூக இயக்கத்தைத் தூண்டும் திறனைக் கொண்டிருந்தது என்று டெங் ஏற்கனவே கவலை கொண்டிருந்தார்.

1980-81 போலந்தின் ஸ்ராலினிச எதிர்ப்பு "ஒற்றுமை" இயக்கம் ("Solidarity" Movement) ஏற்கனவே சீன ஆட்சியின் சிந்தனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. 1982ல் சீன அரசியல் அமைப்பில் இருந்து வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை அகற்றியிருந்தது. அடுத்த ஆண்டு சந்தைச் சீர்திருத்தம் நகர்ப்புற தொழில்களுக்கு விரிவாக்கப்பட்டோது, மக்கள் ஆயுதமேந்திய போலீஸ் என்ற 400,000 படையினர் அடங்கிய துணை இராணுவப் படையை உள்நாட்டு அடக்குமுறையில் சிறப்புப் பயிற்சி கொடுப்பதற்குத் பெய்ஜிங் தோற்றுவித்தது.

ஹுவிற்கு பதிலாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ஜாவோ ஜியாங் வந்தார். ஆனால் விரைவில் பெருகியமுறையில் செல்வாக்கு இழந்த சந்தைச் சீர்திருத்தச் செயல்பட்டியலுக்கு ஆதரவுத் தளத்தை கொடுப்பதற்கு அறிவுஜீவிகளை பயன்படுத்துவதும் அதே அணுகுமுறையைத்தான் ஏற்றார். இத்தகைய நடவடிக்கைகள் முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஏற்கனவே செயல்பட்டு வந்தன. அங்கு சமூக, பொருளாதார நெருக்கடிகள் வெடிக்கும் தன்மையில் இருந்தன. சோவியத் ஒன்றியத்தில் ஜாவோவிற்கு இணையாக பதவியில் இருந்த மிகைல் கோர்பச்ஷேவ் கிலாஸ்நோஸ்ட் என்னும் ("glasnost"-வெளிப்படையாக இருத்தல்) கொள்கையை ஆரம்பித்து வைத்தார்; இது ஜாவோவின் கருத்தாய்வான டிரான்ஸ்பரென்ஸி ("transparency"-வெளிப்படை) என்பதை ஒத்திருந்தது. இரண்டுமே "அரசியல் சீர்திருத்தம்" ஸ்ராலினிச ஆட்சியின் சர்வாதிகாரத்தன்மைக்கு எதிராக இருந்த பரந்த மக்கள் சீற்றத்தை பன்படுத்தி தடையற்ற சந்தை முறை தளைகளற்று மறு அறிமுகப்படுத்தப்படும் பிற்போக்குத்தன முன்னோக்கை முன்வைத்தனர்.

தாராளவாத அறிவுஜீவிகள் மத்தியதரவர்க்கத்தின் ஒரு அடுக்கைப் பிரதிபலித்தனர். இவர்கள் சந்தைச் சீர்திருத்தத்தில் இருந்து தாங்கள் போதுமான முறையில் பலன் பெறவில்லை என்று உணர்ந்தனர். அவர்கள் செய்தி ஊடகச் சுதந்திரத்தைக் கோரி நல்ல தொடர்புகள் நிறைந்திருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களின் குழந்தைகளுடன் இணைந்திருந்த ஊழல்களை தடுக்குமாறும் கோரினர். அதனால் தொழிலாளர்கள் தோற்றுவிக்கும் செல்வத்தில் கூடுதல் பங்கைப் தாங்கள் பெறமுடியும் என்று நினைத்தனர். 1987ல், தான் சீன கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலளராக வந்த பின்னர் ஜாவோ நினைவு கூர்ந்தார்: "கட்சிக்கும் அறிவுஜீவிகளுக்கும் இடையே உள்ள உறவில் காணப்படும் அழுத்தங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்ற வலுவான நம்பிக்கை என்னிடம் வளர்ந்தது. ஆயினும்கூட, அறிவுஜீவிகள் அரசியலில் பங்கு பெறாவிடில், உறவை அடிப்படையாக மாற்றுவது இயலாது." [5]

"முதலாளித்துவ தாராளவாதத்தை" டெங் அடக்கியது அறிவுஜீவிகளுக்குள் இருந்த பெரும் ஏமாற்றத் திகைப்பை உயர்த்தியது. பின் 1989 ஏப்ரல் 15 அன்று ஹு யாவோபாங் ஒரு அரசியற்குழு கூட்டத்தில் திடீரென மாரடைப்பினால் மரணம் அடைந்தார். அவருடைய கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெய்ஜிங்கில் இருந்த பல்கலைக்கழக மாணவர்கள் புகழாரம் சூட்டினர். ஆனால் இவருடைய பண்புகளைப் புகழ்ந்த நினைவுக் கூட்டங்கள் விரைவில் இன்னும் தீவிரமாக ஜனநாயக உரிமைகள் கோருவதற்கு பயன்படுத்தப்பட்டன. அணிவகுப்புக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கு பெறலாயினர்.

ஏப்ரல் 17ம் தேதி ஹு விற்கு துக்கம் கொண்டாட விரும்பிய மாணவர்கள் பிரிவுகள் வளாகங்களில் இருந்து பெய்ஜிங் நகரத்தின் மையத்திலுள்ள தியனன்மென் சதுக்கும் வரை படர்ந்திருந்தன. இது வரலாற்றுரீதியாக எதிர்ப்புக்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கான இடம் ஆகும். 1919 மே நான்காம் தேதி ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் கூட இங்குத்தான் நடைபெற்றது. மறுநாள் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பீக்கிங் பல்கலைக் கழகம் மற்றும் மக்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து உள்ளிருப்பு எதிர்ப்பு ஒன்றை Great Hall of the People க்கு முன்பு நடத்தி, தேசிய மக்கள் காங்கிரஸ் ஹு யாவோபாங்கின் ஜனநாயகம், சுதந்திரம் பற்றிய கருத்துக்கள் உரிய மதிப்புப் பெற வேண்டும் என்றும், உயர்மட்டத் தலைவர்களின் வருமான விவரங்கள் வெளியிடப்பட வேண்டும், செய்தி ஊடகத்திற்கு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும், கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகப்படுத்தப்பட வேண்டும், ஆர்ப்பாட்டங்கள் மீதான தடைகள் அகற்றப்பட வேண்டும் மற்றும் "மோசமான" அரசாங்க அதிகாரிகளை மாற்றுவதற்காக ஜனநாயகத் தேர்தல்கள் வேண்டும் என்று கோரப்பட்டன.

ஏப்ரல் 19ம் தேதி அரசாங்க அதிகாரிகள் இக் கோரிக்கைகளை வழங்க மறுத்தவுடன், மாணவர்கள் சீனத் தலைமை அலுவலக வளாகத்தின் Xinhua Gate ஐ முற்றுகை இட்டு சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைக்கு எதிராகவே அரசியல் அமைதியின்மை என்ற விடயத்தை எழுப்பினர். ஏப்ரல் 23ம் தேதி 21 பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் பெய்ஜிங் பல்கலைக்கழக சுயாதீன மாணவர் கூட்டமைப்பை ஏற்படுத்தி, அது மாணவர்களுடைய வேலைநிறுத்தங்களை ஒருங்கிணைக்கும் என்று கூறியதுடன், சாதாரண மக்களையும் தங்கள் எதிர்ப்பில் சேருமாறு அழைப்பு விடுத்தனர்.

தொடரும்...

Notes:

1. ஜிலீமீ ஜிவீணீஸீணீஸீனீமீஸீ றிணீஜீமீக்ஷீs: ஜிலீமீ சிலீவீஸீமீsமீ றீமீணீபீமீக்ஷீsலீவீஜீs பீமீநீவீsவீஷீஸீ tஷீ usமீ யீஷீக்ஷீநீமீ ணீரீணீவீஸீst tலீமீவீக்ஷீ ஷீஷ்ஸீ ஜீமீஷீஜீறீமீவீஸீ tலீமீவீக்ஷீ ஷீஷ்ஸீs ஷ்ஷீக்ஷீபீs, நீஷீனீஜீறீவீமீபீ தீஹ் ஞீலீணீஸீரீ லிவீணீஸீரீ, மீபீவீtமீபீ தீஹ் கிஸீபீக்ஷீமீஷ் யி. ழிணீtலீணீஸீ ணீஸீபீ றிமீக்ஷீக்ஷீஹ் லிவீஸீளீ, லிவீttறீமீ, ஙிக்ஷீஷீஷ்ஸீ ணீஸீபீ சிஷீனீஜீணீஸீஹ், 2001, ஜீ.357

2. Prisoner of the State: The Secret Journal of Premier Zhao Ziyang, Simon & Schuster, 2009, p.124

3. Mao's China and After: A History of the People's Republic Third Edition, Maurice Meisner, The Free Press, 1998, p.458

4. Prisoner of the State, p.223

5. Ibid., p.257