World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

UN chief calls for inquiry into Sri Lankan war crimes

ஐ.நா. செயலாளர் இலங்கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அழைப்பு விடுக்கின்றார்

By K. Ratnayake
10 June 2009

Use this version to print | Send feedback

ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் பான் கீ-மூன், மேற்கத்தைய சக்திகள் மற்றும் ஊடகங்களிடமிருந்து நெருக்குவாரம் அதிகரித்துவரும் அறிகுறிகளின் மத்தியில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளைத் துடைத்துக் கட்ட இராணுவம் முன்னெடுத்த தாக்குதல்களின் இறுதிக் கட்டத்தில் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் பற்றிய, சர்வதேச கண்காணிப்பிலான விசாரணைக்கான அழைப்பை கடந்த வெள்ளிக் கிழமை மீண்டும் விடுத்துள்ளார்.

"இலங்கை தொடர்பாக பாதுகாப்புச் சபை உறுப்பினர்களுடன் உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல் ஒன்றுக்கு" ஐ.நா. அழைப்பு விடுத்த பின்னர், ஐ.நா. ஆதரவிலான விசாரணை ஒன்றுக்கு உடன்படுமாறு இலங்கைக்கு பான் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெற்காசியாவில் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களுக்கான பெரும் வல்லரசுகளின் போட்டியுடன் பிணைந்தவாறு, இலங்கை நிலைமை தொடர்பாக அவர்களுக்கு இடையில் தோன்றிய மோதல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதையே அவரது அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

மே 22-23ம் திகதிகளில் அவர் இலங்கைக்கு மேற்கொண்ட வருகையின் விளைவுகள் பற்றிய பாதுகாப்புச் சபை கூட்டத்தின் பின்னர், "இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் சரியாக பின்பற்றுவது தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்தது," என பான் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். "கணக்கு கொடுத்தல் மற்றும் தெளிவுடைமைக்கான சர்வதேச அழைப்பை இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். மனிதாபிமான சட்டங்களை மீறியமை பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுக்கள் எங்கு எப்போது முன்வைக்கப்பட்டாலும், தக்க விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்," என அவர் தெரிவித்தார்.

இராணுவத்தாலும் மற்றும் புலிகளாலும் மனித உரிமைகளும் சர்வதேச சட்டங்களும் மீறப்பட்டமை தொடர்பான ஒரு விசாரணைக்கு அழைப்பு விடுத்து அமெரிக்க ஆதரவுடன் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் தலைமையில் ஐரோப்பிய அரசாங்கங்கள் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் (யூ.என்.எச்.ஆர்.சி) மே 27 அன்று முன்வைத்த தீர்மானம் சீனா, ரஷ்யா, இந்திய மற்றும் ஏனைய நாடுகளால் தோற்கடிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கள் பான் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ஐ.ந. பங்களிப்புடனான விசாரணை ஒன்றுக்கு தான் அழைப்பு விடுப்பதாக பான் உறுதிப்படுத்தினார். "அர்த்தமுள்ள எந்தவொரு விசாரணையும் ஐக்கிய நாடுகளின் உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும், மற்றும் அது நடுநிலையானதும் பாரபட்சமற்றதாகவும் இருக்க வேண்டும்," என அவர் கூறினார்.

பானின் இந்த நகர்வு, யூ.என்.எச்.ஆர்.சி. வாக்கெடுப்பை கண்டனம் செய்து மேற்கத்தைய ஊடகப் பகுதிகளின் பிரச்சாரத்தை பின் தொடர்கின்றது. முர்டொக்குக்கு சொந்தமான டைம்ஸ் ஒஃப் லண்டன் பத்திரிகையே அதிக தீவிரம் காட்டுகிறது. வடக்கில் "பாதுகாப்பு வலயத்தில்" இறுதி இராணுவ தாக்குதலின் போது 20,000 பொது மக்கள் கொல்லப்பட்டது பற்றிய மதிப்பீட்டை ஐ.நா. புதைத்து விட்டதாக அது குற்றஞ்சாட்டியுள்ளது. டைம்ஸ்சின் உயிர்ச்சேத மதிப்பீடு, ஐ.நா. தரவுகளையும், யுத்த வலயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் கண்கண்ட சாட்சிகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இராணுவத்தின் ஷெல் மற்றும் குண்டுத் தாக்குதலின் காரணமாக ஜனவரி 20ம் திகதி முதல் 7ம் திகதி வரை 7,000 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக முன்னர் ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.

மே 29 அன்று வெளியான அதன் ஆசிரியர் தலைப்பில், யூ.என்.எச்.ஆர்.சி. யில் இலங்கையால் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கண்டனம் செய்த டைம்ஸ், "முழு வெட்கக்கேடு" என விவரித்துள்ளது. அந்த ஆசிரியர் தலையங்கம், "விளைவின் திகைப்பூட்டும் ஆதாரங்களை மறைப்பதற்கு சதி செய்யும் உரிமை ஐ.நா. வுக்கு கிடையாது" என மேற்கத்தைய தலையீடுகள் நெருக்கிய அல்லது கோரிய மற்றும் பிரகடனம் செய்த "ஸ்ரேப்ரெனிகா, டர்ஃபுர் மற்றும் ஏனைய மனிதப் படுகொலைகளுடன் இலங்கையில் நடந்த அட்டூழியங்களை குறிப்பாக ஒப்பிட்டுள்ளது.

அந்த ஆசிரியர் தலைப்பு, தமிழ் சிவிலியன்களின் அவலம் பற்றி மனிதாபிமான கவலையை வெளிப்படுத்தும் அதே வேளை, அதனுடன் சம்பந்தப்பட்டுள்ள பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான உண்மையான முரண்பாடுகளை சுட்டிக் காட்டுகிறது. யூ.என்.எச்.ஆர்.சி. வாக்கெடுப்பைப் பற்றி குறிப்பிட்டு அது பிரகடனம் செய்ததாவது: "தமது சொந்த அல்லது எந்தவொரு நாட்டிலும் மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரிப்பதில் இருந்து சபையை நிரந்தரமாக தடுக்க உறுதி பூண்டுள்ள சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆசிய மற்றும் இஸ்லாமிய தேசங்களின் தொகுதிகள் போன்ற வழமையான சந்தேகத்துக்குரிய நாடுகளே, இந்த குறைபாடு நிறைந்த தீர்மானத்தை ஆதரித்தன."

மேற்கத்தைய சக்திகள் யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு நெருக்குவாரம் கொடுப்பது யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதான அனுதாபத்தினால் அல்ல என்பதை அந்த ஆசிரியர் தலைப்பு சுட்டிக் காட்டுகிறது. அவை அனைத்தும் இராணுவத் தளபாடங்கள், நிதி மற்றும் அரசியல் ஆதரவும் வழங்கி கொழும்பு அரசாங்கத்தின் யுத்தத்தை ஆதரித்தன. அவ்வாறு செய்த பின்னர், அவர்கள் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த விதத்தில் அமைந்துள்ள தீவில் தமது சொந்த நலன்களை வலுப்படுத்தவும் சீனாவின் வளர்ச்சி கண்டுவரும் செல்வாக்கை தடுப்பதற்கும் முயற்சிக்கின்றனர்.

கடந்த வெள்ளிக் கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், பான் சில தீர்க்கமான கேள்விகளை எதிர்கொண்டார். "நீங்கள் தொடர்ந்தும் இலங்கையிடம் ஒரு மனுதாரர் போல் செல்கிறீர்கள், இலங்கை நெருக்கடி தொடர்பான ஐ.நா. வின் சாதனைகள் ஐக்கிய நாடுகள் சபையின் பக்கத்தில் வெட்கமின்மையின் அளவை காட்டுகிறதா?" என ஒரு நிருபர் கேட்டார். "இங்கு [ஐ.நா. வில்] எந்தவொரு 'பாதுகாப்பதற்கான உரிமையும்' வலியுறுத்தப்படுவதாக தெரியவில்லையே -நீங்கள் பிரச்சினையை தாமதமாக அனுகுகிறீர்கள்- 20,000 பேர் அளவுக்கதிகமாக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற குற்றச் சாட்டுக்கள் இருக்கின்றதே?" என அந்த நிருபர் தொடர்ந்தும் கேட்டார்.

குற்றச் சாட்டைத் தவிர்க்க முயன்ற பான், மனித உரிமைகள் பிரச்சினை தொடர்பாக தான் ஆரம்பத்தில் இருந்தே இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை தொடர்புகொண்டதன் மூலம் செயற்பட்டதாக தெரிவித்தார். இலங்கையில் இருந்த போது, இராஜபக்ஷவுடன் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை பான் விடுத்தார். அந்த அறிக்கை தமிழ் சிறுபான்மையினர் சம்பந்தமாக ஒரு "நிலையான அரசியல் தீர்வை" அடைவது பற்றி பேசியது.

பான் கொழும்பு அரசாங்கத்தை எச்சரிப்பதற்காக இந்த ஊடகவியலாளர் மாநாட்டை பயன்படுத்திக் கொண்டார். "இந்த இராணுவ மோதலின் பின்னர், வெற்றி கிடைத்தவுடன் வெற்றியாரவார ஆபத்துக்கு எதிராக நான் எச்சரித்தேன். இது காயங்களை ஆற்றுவதற்கு உதவுவதில் இலங்கை அரசாங்கமும் மக்களும் மற்றும் சர்வதேச சமூகமும் மேற்கொள்ளும் தற்போதைய முயற்சிகளுக்கு உண்மையில் முட்டுக்கட்டையிடும்."

யுத்த வெற்றியின் இனவாதப் பண்பை மட்டுமே கோடிட்டுக் காட்டும் கொழும்பு அரசாங்கத்தின் முடிவில்லாத கொண்டாட்டங்களையே பான் சுட்டிக் காட்டினார். இராஜபக்ஷ அரசாங்கத்தின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என சொல்லப்படுவது, உண்மையில் சிங்கள முதலாளித்துவ வர்க்கத்தின் சவால் செய்ய முடியாத அதிகாரத்தின் கீழ் முழு நாட்டையும் கொண்டுவருவதற்கே முன்னெடுக்கப்பட்டது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும், தமிழ் முதலாளித்துவ தட்டுக்கு கொஞ்சம் சலுகைகளை வழங்குவதை அர்த்தப்படுத்தும் ஒரு "அரசியல் தீர்வையே" பிரேரித்துள்ளன. இதற்கும் இலங்கையில் தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இராஜபக்ஷ அரசாங்கத்தின் வழிமுறைகள் நாட்டில் இனவாத முரண்பாடுகள் தொடர்வதை விளைவாக்குவதோடு அயலில் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்கும் என இந்த சக்திகள் கவலையடைந்துள்ளன.

இலங்கை யுத்தத்தின் விளைவு ஒரு "உள் விவகாரம்" என பிரகடனம் செய்யும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஆதரவாக யூ.என்.எச்.ஆர்.சி. யில் சீனா, ரஷ்யா மற்றும் இந்தியாவும் ஆதரவளித்தன. இந்த நாடுகள் சிறுபான்மையினரை நசுக்குவதற்கு தமது சொந்த யுத்தங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களையும் முன்னெடுக்கும் அதே வேளை, கொழும்பில் தமது சொந்த செல்வாக்கை வலுப்படுத்தவும் முயற்சிக்கின்றன.

சீனா இலங்கையுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றது. குறைந்த செலவு வீடுகளை சீன கம்பனிகளின் மூலம் கட்டுவதற்காக, பணப் பற்றாக்குறை கொண்ட கொழும்பு அரசாங்கத்துக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்க நேற்று பெய்ஜிங் உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திட்டது. 1.9 பில்லியன் டொலர் உதவியை கோரி சர்வதேச நாணய நிதியத்துக்கு விடுத்த விண்ணப்பத்துக்கு இலங்கை இன்னமும் பதிலை எதிர்பார்த்திருக்கும் நிலையிலேயே சீன உதவி கிடைத்துள்ளது. சர்வதேச நாணய நிதிய உதவியை தடுப்பதற்கு பிரிட்டனும் அமெரிக்காவும் அச்சுறுத்தி வருகின்றன.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கடந்த வாரம் சிங்கப்பூரில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் பொது அதிகாரிகளின் உப தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் மா செயோடெயினை சந்தித்து, கொழும்பின் பராட்டுக்களை தெரிவித்தார். இருவரும் பிராந்திய பாதுகாப்புக் கூட்டமொன்றில் பங்குபற்றுகின்றனர்.

ஜூன் 5 அன்று நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்விகளுக்கு பதிலளித்த பான், தான் "இந்த விவகாரம் [யுத்தக் குற்ற விசாரணை] தொடர்பாக இலங்கை ஜனாதிபதிக்கு வலியுறுத்தியதாகவும் இதற்கு [முன்னெடுப்புக்கு] அவர் கணக்கு வழங்குதல் மற்றும் தெளிவுடைமையை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஏற்படுத்துவதாகவும் எனக்கு உறுதிப்படுத்தினார்," என தெரிவித்தார்.

எவ்வாறெனினும், யூ.என்.எச்.ஆர்.சி. தீர்மானத்திற்கு கிடைத்த ஆதரவால் துணிவுகொண்டுள்ள கொழும்பு அரசாங்கம், விசாரணை பற்றிய எந்தவொரு புதிய யோசனைகளையும் அலட்சியத்துடன் நிராகரித்தது. வெளியறுவுச் செயலாளர் பாலித கோஹன கொழும்பில் வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவித்ததாவது: "உள்நாட்டிலும் மற்றும் வேறு விதத்திலும் அத்தகைய விசாரணைகள் இடம்பெறாது என்ற தனது முன்னைய நிலைப்பாட்டில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது.

பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ மிகவும் உறுதியாக இருந்தார். சண்டே டைம்ஸ்சுக்கு வழங்கிய செவ்வியில், "நாங்கள் அத்தகைய விடயத்தை அனுமதிக்கப் போவதில்லை என்பதால் நான் கவலைப்படவில்லை. உலகில் மிக மோசமான பயங்கரவாத அமைப்பை இலங்கை தோற்கடித்துள்ளதோடு நாம் அவர்களை தண்டிப்பதற்கு மாறாக அவர்களை பாராட்ட வேண்டும் என சர்வதேச சமூகம் ஒரே குரலில் தெரிவித்த ஒரு சர்வதேச சபையில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது," என பிரகடனம் செய்தார்.

ஜனாதிபதியின் சகோதரரான இராஜபக்ஷ மேலும் கூறுகையில், "எங்களுக்கு நேரம் இல்லாததால் அவர்கள் இத்தகைய விசாரணைகளைப் பற்றி பேசி எங்ளது நேரத்தையும் பணத்தையும் வளங்களையும் வீணாக்கக் கூடாது... அதற்கு காரணங்கள் இல்லாததால் நாங்கள் இத்தகைய எந்தவொரு விசாரசணைக்கும் ஒத்துழைக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ போவதில்லை," என்றார்.

எவ்வாறெனினும், யுத்தக் குற்ற விசாரணைகளுக்கான அழைப்பு மீண்டும் எழுந்திருப்பது, அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளும் இலங்கையிலும் மற்றும் தெற்காசிய முழுவதிலும் வளர்ச்சி கண்டுவரும் பூகோள-அரசியல் பகைமையில் தமது மூலோபாயத்தின் பாகமாக இந்த விவகாரத்துக்காக தொடர்ந்தும் அழுத்தக் கொடுக்கவுள்ளன என்பதையே சுட்டிக்காட்டுகிறது.