World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The New York Times and Iran: Journalism as state provocation

நியூ யோர்க் டைம்ஸும் ஈரானும் : அரச ஆத்திரமூட்டலாக இதழியல்

By Bill Van Auken
19 June 2009

Use this version to print | Send feedback

வியாழனன்று "ஈரானில் குடியரசு இல்லாத்தன்மை" என்ற தலைப்பில் வெளியிட்ட தலையங்கத்தில், நாட்டின் ஜனாதிபதித் தேர்தல்களை நியூ யோர்க் டைம்ஸ் மீண்டும் கண்டித்து, "அரசாங்க அதிகாரிகள் அதிகாரத்தை பெரிதும் பயன்படுத்தி விளைவுகளை சமன் செய்தனர்" என்றும் பதவியில் உள்ள மஹ்மூத் அஹ்மதிநெஜாட்டின் வெற்றி "போலியானது" என்றும் கூறியுள்ளது.

அதே நேரத்தில் முதல் நாள் ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் அறிக்கையை பிரதிபலிக்கும் வகையில் செய்தித்தாள் எச்சரித்தது: "ஈரானுடனான அதன் வரலாற்றை எடுத்துக் கொண்டால், அமெரிக்கா தான் குறுக்கீடு செய்வது போல் காட்டிக் கொள்ளக்கூடாது என்பதை கட்டாயம் சிறப்பு கவனத்தில் கொள்ள வேண்டும்."

டைம்ஸின் தலையங்க ஆசிரியர் குழு தனக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் என்று நம்பவில்லை. ஜூன் 12ம் தேதி முடிவுகள் வந்ததில் இருந்து, செய்தித்தாள் ஏகாதிபத்திய நலன்களின் சேவையில் முற்றிலும் ஆத்திரமூட்டும் வேலையை, செய்தி இதழின் கொள்கையாக தொடர்ந்து வருகிறது; அவ்வாறு பின்பற்றுவதாக கட்டாயம் கருதக்கூடாது என்று உத்தியோகபூர்வ வாஷிங்டன் வலியுறுத்துகிறது.

எந்தவித செய்தி இதழ் பொதுநிலைத் தரத்தையும் டைம்ஸ் கடைபிடிக்கவில்லை; ஈரானிய தேர்தல் திருடப்பட்டது என்பது போல் எந்தவித சிறு ஆதாரமும் இல்லாமல் உண்மை போல் தகவல் கொடுத்துள்ளது. உண்மையில், அது மெளசவி முகாம் அவ்வாறு வலியுறுத்துவதை விமர்சனமற்ற சதவிகிதம் கிடைத்தது என்ற கூற்றுக்களை மறுக்கின்ற நகரம், மாநிலம் என்று ஏற்கனவே கிடைத்திருக்கின்ற மொத்த வாக்கு விவரத்தை அறிவிப்பது பற்றி பொருட்படுத்தவில்லை, அதைப்பற்றி மிகக் கு ைநிலையில் திரும்பக் கூறுகிறது.

செய்தித்தாள் வாக்குகளில் தில்லுமுல்லு செய்யப்பட்டதால்தான் அஹ்மதிநெஜாட்டிற்கு 60 றந்த பகுப்பாய்வே நடத்தியது.

இதற்கு மாறாக, அவர்கள் மெளசவி --சில இடங்களில் இரண்டிற்கு ஒன்று என்ற விகிதத்தில்--அதுவும் தேர்தல் எதிர்ப்புக்களின் மையமாக இப்பொழுது உள்ள பகுதிகளில்; அதாவது தெஹ்ரான், ஷிராஸ் மற்றும் பிற இடங்களில் செல்வம் கொழிக்கும் புறநகர்ப்பகுதிகளில் வெற்றி பெற்றார் எனக் கூறுகின்றனர்.

ஒபாமா நிர்வாகம் ஈரானின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் போர்களை நடத்திக் கொண்டிருக்கிற நிலையில் ஈரானில் அமெரிக்கா ஆழ்ந்த நலன்களைக் கொண்டுள்ளது; மேலும் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால விரோதப்போக்கு வரலாறும் உள்ளது; ஈரானையும் அதன் எண்ணெய் வளத்தையும் முன்பு வாஷிங்டன் அதன் சர்வாதிகார வாடிக்கை ஆட்சி ஷாவின் மூலம் ஆதிக்கத்தில் கொண்டது, அதற்கு பின்னர் ஒரு புரட்சி அந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததில் அது முடிவுற்றது. இந்த நலன்கள், இந்த வரலாறு இருக்கையில், குறிப்பாக அமெரிக்க செய்தியாளர்களால் ஈரானிய அரசியல் பற்றி நேர்மையான தகவல் கொடுப்பதில், பொதுநிலைத்தன்மை வேண்டும் என்பது மட்டும் அல்லாமல், ஈரான் விவகாரங்களில் வாஷிங்டன் குறுக்கீடு, அதன் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகள் பற்றிய கூருணர்வுத் திறமும் தேவை ஆகும்.

ஆனால் டைம்ஸ் தகவல் கொடுத்துள்ள விதம் அத்தகைய பொதுநிலை எதையும் காட்டவில்லை. அப்பகுதியில் இருக்கும் முக்கியமான பகுப்பாய்வாளர்களின் கருத்தை செய்தித்தாள் புறக்கணித்துள்ளது; அவர்களோ தேர்தலில் தில்லுமுல்லு இருந்தன என்பதற்கு சான்றுகள் இல்லை என்று கூறியுள்ளனர். இவர்களுள் Center for Strategic and International Studies உடைய தலைமை இராணுவ மூலோபாயம் மற்றும் மத்திய கிழக்கு பகுப்பாய்வாளர் Antony Cordesman, ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் தேசியப் பாதுகாப்புக் குவின் முன்னாள் தலைவைர் ஈரான் பகுப்பாய்வாளர் Hillary Mann Leverett, அவருடைய கணவரும் நீண்டகாலம் CIA பகுப்பாய்வாளரும், NSC அதிகாரியுமான Flynt Leverett, (இருவரும் "அஹ்மதிநெஜாட் வெற்றி பெற்றார், அதை உணர்ந்து கொள்ளவும்" என்று ஒரு கட்டுரையை எழுதியுள்ளனர்), மற்றும் Stratfor தனியார் உளவுத்துறையின் தலைவர் ஜோர்ஜ் பிரிட்மன் ஆகியோரும் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் வலதுசாரி ஜனரஞ்சக அரசியல்வாதி அஹமதிநெஜாட் ஈரானில் கணிசமான மக்கள் ஆதரவை, குறிப்பாக கிராமப்புற வறியவர்கள், கூடுதலாக ஒடுக்கப்பட்டுள்ள சமூக அடுக்குகள் இடையே தக்க வைத்துக்கொண்டுள்ளார் என்றும், ஈரானில் ஆங்கிலம் பேசும் சிறுபான்மையினர், கூடுதல் செல்வம் படைத்தவர்களுடன் தொடர்பு கொண்டு, தங்கள் விருப்பத்தை பகுப்பாய்வு என்று கூறும் "ஈரான் வல்லுனர்கள்" பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ஒரு புதிய தேர்தலுக்கான கோரிக்கையை முன்வைக்க, டைம்ஸ் தான் மோசடி என்று கூறுவதே போதும் என்று கருதுதுவது --காவலர் சபையின் மறு எண்ணிக்கைக்கான அழைப்பை "நம்பிக்கையற்ற அடையாளம்" என்று கூறியுள்ளது-- மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாக்கு மோசடியை திருத்துவதில் செய்தித்தாள் அக்கறை காட்டவில்லை; மாறாக ஈரானிய அரசாங்கத்திற்குள் ஆட்சி மாற்றம் நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதில்தான் கவனத்தை காட்டுகிறது.

இதுதான் வெளிப்படையாக வியாழனன்று டைம்ஸின் வெளி விவகாரக் கட்டுரையாளர் ரோஜர் கோஹனால் கூறப்பட்டிருக்கிறது; ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி "அஹ்மதிநெஜாட் ஒரு சுமை என்ற கருத்திற்கு வருவார்" என்று ஊகித்துள்ளார். அவர் தொடர்ந்து எழுதுகிறார்: "மெளசவியிடம் ஆட்சியைக் காப்பாற்றக்கூடிய சீர்திருத்தம் என்னும் நம்பகமான கருவியை அவர் பெறலாம்.... உயர் தலைவர் அப்போக்கை மாற்றுவதற்கு வழிவகையைக் காணக்கூடும்."

இது துல்லியமாக வாஷிங்டனின் நோக்கங்களை சுருக்கிக் கூறுகிறது--ஈரானிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து உயர்மட்டத்தில் மாற்றம் கொண்டுவரவும், அந்த ஆட்சி இப்பகுதியில் அமெரிக்க நலன்களுக்கு இணங்கும் வகையிலும் ஈரானுக்குள் அமெரிக்க மூதலீட்டிற்கு வெளிப்படை ஆதரவு கொடுக்கும் வகையிலும் செயல்படவேண்டும் என்பதே அது. மில்லியன்கணக்கான ஈரானியர்கள் ஜனநாயகம் பற்றி உண்மையில் கொண்டுள்ள கவலை, டைம்ஸைப் பொறுத்தவரையில், அமெரிக்க அரசாங்கத்தையும் பொறுத்தவரையில், ஒரு போலிக்காரணம்தான்.

ஈரானில் வாக்குப் பதிவில் தில்லுமுல்லுகள் சில இருந்திருக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உலகெங்கிலும் நடக்கும் தேர்தலில் இதுதான் நடைமுறையே அன்றி விதிவிலக்கு அல்ல. அடிக்கடி, குறிப்பாக குறைவாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் என அழைக்கப்படுபவற்றில் தேர்தல்கள் தோற்கும் கட்சியால் மோசடி என்ற குற்றச் சாட்டுகளுக்கு ஆளாவது, மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் ஆயுதமேந்திய பூசல்களையும் கூட தூண்டிவிடும்.

கடந்த ஏப்ரல்மாதம்தான் மோல்டோவாவில் தேர்தல்கள் வன்முறை எதிர்ப்புக்களில் முடிவுற்றன; தோற்ற கட்சி மோசடி என்று கூவியது, வெற்றிபெற்ற கட்சி தான் ஆட்சி மாற்ற முயற்சியின் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாகக் கூறியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிகரகுவாவில் நடைபெற்ற நாடு தழுவிய உள்ளூர் தேர்தல்களில் மோசடிகள் நடந்ததாக எதிர்க்கட்சி கூறியது மோதல்களை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் மட்டைகள், கற்கள், துப்பாக்கிகள் போன்றவற்றைக்கூட கையாண்ட நிலை வந்தது. கடந்த ஜூலை மாதம் மங்கோலியத் தலைநகரத்தில் தேர்தல் மோசடி என்ற குற்றச் சாட்டுக்களை ஒட்டி மக்கள் கலவரங்கள் ஏற்பட்டன. குறிப்பாக இந்த நிகழ்வுகள் எதைப்பற்றியும் டைம்ஸ் கவலைப்பட்டதாக சான்றுகள் இல்லை.

இதில் குறிப்பிடத்தக்கை வகையில் உணர்த்தப்படுவது மெக்சிகோவில் 2006ம் ஆண்டு சர்ச்சைக்குள்ளான ஜனாதிபதித் தேர்தல் பற்றிய செய்தித்தாளின் அணுகுமுறை ஆகும்; அப்பொழுது அங்கு பழமைவாத வேட்பாளர் Felipe Calderon --36 சதவிகித வாக்குகள், பெரும் தேர்தல் மோசடி என்று ஆதாரபூர்வமாக கூறப்பட்ட நிலையில்-- தன்னுடைய இடது தேசியவாத போட்டியாளர் Andres Manuel Lopez Obrador மீது வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறினார்.

அப்பொழுது ஒன்றும் புதிய தேர்தல்கள் தேவை என்று டைம்ஸ் கூறவில்லை; தேர்தலில் தில்லுமுல்லு நடந்தது என்பதற்கான சான்றுகளையும் பொருட்படுத்தவில்லை. மெக்சிகோ நகரத்தில் தெருக்களில் மாபெரும் மக்கள் கூட்டம் வந்தது தெஹ்ரானோடு ஒப்பிடும் வகையில் இருந்தாலும், செய்தித்தாள் எதிர்ப்பாளர்களை ஏளனம்தான் செய்தது.

ஜூலை 7 ம் தேதி, போட்டியிட்டோர் வாக்கு மொத்தங்கள் அறிவிக்கப்பட்டு ஐந்தே நாட்களில், டைம்ஸ் திமிர்த்தனமாக தலையங்கம் எழுதியது: "திரு லோபஸ் ஒப்ரடோர் சில சமயம் தன்னுடைய அரசியல் போக்கில் தன் ஆதரவாளர்கள் தெருவிற்கு வரவேண்டும் என்று அழைத்தவிதத்தில் முன்னேற்றம் கண்டுள்ளார்.... ஆனால் மக்கள் எதிர்ப்பைத் துண்டிவிடுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்; அவை மெக்சிகோவின் உறுதித்தன்மைக்கு தீங்கு பயக்கும்; அவரை முழு ஜனநாயகவாதியாகவும் காட்டாது."

மெக்சிகோவில் வாக்குகள் மோசடியினால் பாதிப்பிற்கு ஆளானவர் "ஸ்திரத்தன்மை" நலன்களுக்காக ஒதுங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்; அவருடைய ஆதரவாளர்களின் வெகுஜன எதிர்ப்புக்கள் ஜனநாயகத்திற்கு ஒரு அச்சுறுத்தல் என்று சித்தரிக்கப்பட்டது--இது ஈரானிய நிகழ்வுகள் பற்றி செய்தித்தாளின் அணுகுமுறைக்கு முற்றிலும் எதிரிடையானது. ஏன் இந்த வேறுபாடு? மெக்சிகோவில் வாஷிங்டன் விரும்பிய வேட்பாளர் வெற்றி பெற்றார், ஈரானில் வெள்ளை மாளிகை உறுதித் தன்மையை நாடவில்லை, உறுதியைக் குலைக்கத்தான் விரும்புகிறது.

இன்னும் அருகே உள்நாட்டில், ஈரானியத் தேர்தல் திருடப்பட்டது என்று கூறும் செய்தித்தாளின் அணுகுமுறை 2000ம் ஆண்டுத் தேர்தலில் குடியரசுக் கட்சி வெளிப்படையாக திருட்டு நடத்தியதற்கு முற்றிலும் மாறாக உள்ளது; இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் குடியரசுக் கட்சி போலியான பெரிய குற்ற விசாரணை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனதிபதிக்கு எதிராக, அரசியலமைப்பிற்கு முரணான வகையில் ஆட்சி அகற்றலுக்கு முற்பட்டது--அதை டைம்ஸ் பெரிதும் நெறிப்படுத்த உதவியது.

அத்தேர்தலில் புளோரிடாவில் சர்ச்சைக்கு உட்பட்ட வாக்குகள் ஓரளவு மறு எண்ணிக்கைக்கு உட்படும் என்று அரசாங்கம் முன்வருவது பொருட்டாக இருக்கவில்லை; அனைத்து வாக்குகளும் முறையாக எண்ணப்பட வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதிலும் மறு எண்ணிக்கைக்கு புளோரிடா தலைமை நீதிமன்றம் உத்தரவிட்டதை, அமெரிக்க தலைமை நீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டு நிறுத்தியது ஆகும். டைம்ஸ் மக்கள் எதிர்ப்புக்களுக்கு வாதிட்டதா அல்லது புதிய தேர்தலை கோரியதா? உறுதியாக இல்லை. செய்தித்தாளே இந்த முன்னோடியில்லாத வகையில் நாடு முழுவதும் மக்கள் வாக்கை இழந்த வேட்பாளர்களை பதவியில் இருத்துவதற்கு --வாக்குகளை நசுக்கி ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தது.

புளோரிடா வாக்கு பற்றி கடுமையான பூசலின் போக்கில், டைம்ஸ் தலையங்கம் ஒன்று "வாக்குகள் திருடப்படுதல், ஆட்சி மாற்றம் போன்ற ஆதாரமற்ற பேச்சுக்களுக்கு" முற்றுப்புள்ளி வேண்டும் என்று கூறியது--இதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க தலைமை நீதிமன்றம் புஷ்ஷை தேர்ந்தெடுத்த பின்னர், மக்கள் பெரும்பாலோரின் விருப்பத்தை மறுத்தவிதத்தில், செய்தித்தாள் இந்த முடிவு "நாட்டின் ஒற்றுமை" கருதி ஏற்கப்பட வேண்டும் என்று கூறியது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோரே நிபந்தனையற்ற முறையில் சரணடைந்தது, "ஒரு நாட்டுப்பற்று மிகுந்த கடமை" என்றும் பாராட்டியது.

டைம்ஸோ அல்லது அமெரிக்க அரசாங்கமோ ஈரானுக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ ஜனநாயகம் பற்றி படிப்பினைகள் கொடுக்கத் தேவையில்லை. மோசடிகள் நிறைந்துள்ள அமெரிக்கத் தேர்தல் முறை முற்றிலும் பெருவணிகத்தால் கட்டுப்படுத்பட்ட இரு கட்சி முறை ஆகும்; அதன் தேசிய வேட்பாளர்கள் நிதியத் தன்னலக்குழுவிற்கு கொண்டுள்ள தங்களின் விசுவாசத்தை அடுத்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

முக்கிய அமெரிக்க அரசியல்வாதிகள் --டைம்ஸில் வியாழனன்று தலையங்கத்திற்கு எதிர்ப்பக்க கட்டுரை எழுதிய ஜோன் கெர்ரி உட்பட-- ஈரானில் அமெரிக்கா அதிக ஈடுபாடு உடையதாக காட்டிக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்; ஏனெனில் 1953 ஆட்சிமாற்றத்தில் இது கொண்டிருந்த பங்கு, அதையொட்டி தேசியவாத பிரதம மந்திரி மோசடெக் அகற்றப்பட்டது, ஷாவின் 26 ஆண்டுகள் சித்திரவதை ஆட்சி தொடங்கியது ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இதே நியாயத்தின்படி டைம்ஸின் ஆசிரியர்களும் நாவை அடக்கிக் கொள்ள வேண்டும்.

1953ல் இதன் தெஹ்ரான் நிருபரான கென்னட் லவ் CIA இன் தவறான தகவல்களை பரப்ப விரும்பியது மட்டும் இல்லாமல், ஆட்சி மாற்றத்தில் நேரடிப் பங்கு பெற்றதையும் ஒப்புக் கொண்டுள்ளார். இதன் பின் அவர் ஒரு ஈரானிய இராணுவ டாங்கு படைக்கு மோசடெக்கின் வீட்டை தாக்க உத்தரவு கொடுத்தது பற்றியும் எழுதியுள்ளார். பின்னர் டைம்ஸ் ஆட்சி மாற்றத்தை பாராட்டி ஷாவின் ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கப்பட வேண்டும் என்று கோரியது.

அப்பொழுதில் இருந்து எதுவும் அதிகம் மாறவில்லை. தன்னுடைய செய்தி தருதல் மற்றும் தலையங்க அளிப்பு இரண்டிலும் டைம்ஸ் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கிய கருவியாக இருப்பது பற்றிச் சான்றுகள் கிடைப்பது கடினம் அல்ல. இதன் முக்கிய பணி அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் தொடரும் கொள்கைகளை நியாயப்படுத்துவது ஆகும்; அதே நேரத்தில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அவற்றிற்கு ஆதரவு திரட்டுவதற்கு மக்கள் கருத்தை திரிப்பதும் ஆகும். "சான்றுகள் நிறைந்த செய்தித்தாள்" என்ற முறையில் அமெரிக்க செய்தி ஊடகத்தின் செயற்பட்டியலுக்கு அது உரு கொடுக்கிறது; அவை இதன் வழியில் எதிரொலிக்கின்றன.

புஷ் நிர்வாகத்தின் "பேரழிவு தரக்கூடிய ஆயுதங்கள்" பற்றிய பொய்களை பிரச்சாரம் செய்வதில், அதன் மூத்த நிருபர் ஜூடித் மில்லர் கற்பனை செய்து எழுதுவதற்கு உதவியதின் மூலம், இந்த ஏடு குற்றம் சார்ந்த, நன்கு அறியப்பட்ட பங்கைச் செய்துள்ளது; இவைதான் ஈராக்கிற்கு எதிரான போர் நடத்தப்பட போலிக்காரணமாக பயன்படுத்தப்பட்டன.

அதற்கு பின் ஏப்ரல் 2002 ல் வெனிசுலா ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸ்க்கு எதிராக தோல்வியுற்ற ஆட்சி மாற்றத்திற்கு தன் ஒப்புதலைக் கொடுத்தது. வெனிசுலாவின் இராணுவப் பிரிவு ஒன்று, "குறுக்கிட்டு அதிகாரத்தை மதிப்புடைய வணிகத் தலைவர் ஒருவருக்கு கொடுத்தது" பற்றி டைம்ஸ் பாராட்டியது. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனதிபதியை ஆயுதமேந்திய வகையில் அகற்றியதின் விளைவாக, "வெனிசுலாவின் ஜனநாயகம் இனி ஆபத்திற்கு உட்படாது" என்று கூறியது. இதேபோல் இந்த ஆட்சி மாற்றம் "முற்றிலும் ஒரு வெனிஜூலிய விவகாரம்" என்று சிறிதும் நம்ப முடியாத தன்மையில் வாஷிங்டன் தன் ஈடுபாட்டை மறைக்கவும் இது உதவியது.

இன்னும் சமீபத்திய காலத்தில், இதன் தகவல் தரும் விதம், தலையங்கம் இரண்டிலும், செய்தித்தாள் ஆகஸ்ட் 2008 ரஷ்ய ஜோர்ஜிய போருக்கு கொடுத்த விடையிறுப்பு அமைந்தது. ஈரானிலும் அதே வழிவகைகளை பின்பற்றி--செய்தி ஏட்டு பொதுநிலைக்கு இகழ்ச்சி, வாஷிங்டன் மற்றும் அதன் நட்புநாடுகளின் கூற்றுக்களை உண்மையென்று, அதற்கு எதிராக உள்ள சான்றுகள் அனைத்தையும் புறக்கணித்து பிரச்சாரம் செய்தல்-- டைம்ஸ் ரஷ்ய ஆக்கிரமிப்பு ஒரு தூண்டுதலற்ற செயல் என்ற வகையில் சித்தரித்தது. வேண்டுமென்றே ஜோர்ஜியாவின் பிரிவினை மாநிலமான தெற்கு ஒசேட்டியாவின் தலைநகரமான ஷின்வலியில் ஜோர்ஜிய படைகள் நடத்திய தூண்டுதலற்ற, மிருகத்தனமாக தாக்குதல்களுடன் போர் தொடங்கியது என்ற மறுக்க முடியாத சான்றுகளை புறக்கணித்தது.

இப்பூசலை "ரஷ்யாவின் பேரவாப் போர்கள் என்று டைம்ஸ் சித்தரித்து, இது விளாடிமீர் புட்டின் "மீண்டும் வலிமையையும் மிரட்டலையும் பயன்படுத்தி சோவியத்தின் செல்வாக்கு மண்டலத்தை சுமத்தும் முயற்சி, இதை அவர் முடித்துவிடலாம் என்று நம்புவதாகவும்" எழுதியது. ஆனால் அங்கிருந்து கிடைத்த உண்மைத் தகவல்கள், ஜோர்ஜியாவை கண்காணித்த Organization for Secuition and Cooperation in Europe (OSCE) மற்றும் பலவும், இதன் தகவலை பொய்யாக்கி அமெரிக்கா ஜோர்ஜியாவை தனக்குப் பதிலாக ரஷ்யா மீதே ஆக்கிரமிப்புச் செயலை செய்ய தூண்டியது என்று சுட்டிக்காட்டின.

ஈரானில் உள்ள தற்போதைய நெருக்கடியை பொறுத்தவரையில், டைம்ஸ் இந்த திரித்தல், ஏமாற்றுதல் என்ற வழிவகைகளை அனைத்தையும் பயன்படுத்தியுள்ளது: தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு பெரிதும் முன்பே இதற்கான தயாரிப்புக்கள் இருந்தன.

இந்த முயற்சியின் முன்னணியில் இருப்பது நிர்வாக ஆசிரியரான பில் கெல்லர் ஆவார்; அமெரிக்காவில் வாதத்திற்கு உரியதுதான் என்றாலும் இன்று அறநெறிவழியில் பெரும் சமரசத்திற்குட்பட்டவர்; அப்படிக் கூறுவதில் பொருள் உண்டு! புஷ் நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில் கெல்லர்தான் தேசிய பாதுகாப்பு அமைப்பின் சட்டவிரோத உள்நாட்டு ஒற்று நடவடிக்கையை 2004 தேர்தல்கள் முடியும் வரை வெளியிடாமல் வைத்திருந்தவர்; அது வந்திருந்தால் புஷ்ஷிற்கு இரண்டாம் பதவிகாலம் கொடுப்பதில் அது முக்கிய பங்கைக் கொண்டிருந்திருக்கும்.

சமீபத்தில் அவர் தெஹ்ரானுக்கு "ஈரானில் இருந்து குறிப்புக்கள்" என எழுதுவதற்கு அனுப்பப்பட்டார். இந்த வேலையின் அசாதாரண தன்மை செய்தித்தாளின் மூத்த ஆசிரியர் என்று ஜூலை 2003ல் பொறுப்பு ஏற்றுக்கொள்ளுவதற்கும் ஈரான் பயணத்திற்கும் இடையே கெல்லர், சோவியத் ஒன்றியத்தின் சரிவின்போது மாஸ்கோவில் செய்தித்தாளின் பொறுப்பை கொண்டிருந்தார், டைம்ஸ் வலைத் தளத்தால் ஆறு கட்டுரைகளை துல்லியமாக எழுதியவர் என்று குறிக்கப்பட்டார்; அவை எதுவும் செய்தித் தகவல்கள் அல்ல.

ஒரு பெரிய நடவடிக்கையில் டைம்ஸ் தொடர்பு கொண்டுள்ளது என்பதற்கு கெல்லர் இருப்பதே போதுமான சான்றாகும். பலரும் அவருடன் தெஹ்ரானுக்குச் சென்றனர்; அதில் கடுமையான சோசலிச எதிர்ப்பு நிறைந்த வெளியுறவுக் கட்டுரையாளர் ரோஜர் கோஹனும் இருந்தார் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு மூத்த பிரச்சாரகராக இருக்கும் கோஹன் பால்கன்களில் அமெரிக்க குறுக்கீடு, ஈராக்கிற்கு எதிரான போர், ஜோர்ஜியாவின் அமெரிக்கக் கொள்கை, இப்பொழுது ஈரானில் உறுதிகுலைக்கும் முயற்சி அனைத்திற்கும் நியாயங்களை கற்பிக்கிறார்.

கென்னட் லவ்வின் காலத்தில், CIA செய்தியாளர்களையும் தன் சம்பளப்பட்டியலில் சேர்த்து அவர்களுடைய ஒத்துழைப்பை பெற்றது. கெல்லர், கோஹன் போன்றோர் இருக்கையில் அத்தேவை இல்லை. பெரும் ஊதியம் பெறும் டைம்ஸின் மூத்த கட்டுரையாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இலஞ்சம் கொடுக்கத் தேவையில்லை. அவர்களுடைய சமூக நலன்கள் இயல்பாகவே அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கைகளின் நோக்கங்களுடன் இயைந்துள்ளன.

அமெரிக்காவின் முக்கிய செய்தித்தாள் செய்திக்கும் கருத்துக்களுக்கும் இடைவெளி இல்லாமல் அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் ஆளும் உயரடுக்கின் நலன்களைப் பற்றி வெளியிட்டிருப்பதானது அமெரிக்காவின் ஜனநாயக வழிவகைகளின் கூடுதலான இழசரிவுற்கு பங்களிப்பு செய்யும் காரணியும் அடையாளமும் ஆகும்.

இது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய சுயாதீனமான சோசலிச ஊடகம் கட்டமைக்கப்பட வேண்டிய அவசரத் தேவையை முன்வைக்கிறது; இந்தப்பணிதான் உலக சோசலிச வலைத் தளத்தால் செய்யப்படுகிறது.