World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The Nation's man in Tehran: Who is Robert Dreyfuss?

தெஹ்ரானில் நேஷன் உடைய நபர்: யார் இந்த ரொபேர்ட் ட்ரேபுஸ்?

By Bill Van Auken
22 June 2009

Use this version to print | Send feedback

சமீபத்திய ஈரான் அரசியல் கொந்தளிப்புக்களைப்பற்றி தகவல் கொடுக்கையில், தன்னைத்தானே முற்போக்கு அரசியலின் குரல் எனக் கூறிக் கொள்ளும் நேஷன் ஏட்டின் நிலைப்பாடு அமெரிக்க அரசியல் நடைமுறையில் இருந்து பெருகிய முறையில் வேறுபட்டிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

ஈரான் நிகழ்வுகள் பற்றி இதழின் முக்கிய நிருபரான ரொபேர்ட் ட்ரேபுஸ் --மற்றும் பொதுவாக "அரசியல் மற்றும் தேசியப் பாதுகாப்பு பற்றியும்-- ஆதாரமற்ற குற்றச்சாட்டான திருடப்பட்ட தேர்தல் பற்றிய குற்றச்சாட்டை கிளிப்பிள்ளை போல் கூறியுள்ளதுடன், பதவியில் இருக்கும் ஜனாதிபதி அஹ்மதிநெஜாட் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை "ஏறத்தாழ பாசிச இயக்கம்" ஆக சித்தரித்துள்ளார்.

ஜூன் 17ம் தேதி "ஈரானில் போர் நிலைகள்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், தெஹ்ரானில் இருந்து இப்பொழுதுதான் தேர்தல்களை பார்த்த பின்னர் திரும்பியுள்ள ட்ரேபுஸ், ஈரானிய "வெளிப்படையான சவால்" வளைவரை பற்றி ஊகம் தெரிவித்துள்ளார்.

அவர் எழுதியது: "முப்பது ஆண்டுகளுக்கு முன்பு புரட்சியாளர்களை வன்முறையின் மூலம் எதிர்கொள்ளக்கூடாது என்ற ஈரான் ஷாவின் முடிவுதான் ஷா எதிர்ப்பு இயக்கத்தை வலுவடையச் செய்து அவரையே அகற்றும் அளவிற்கு வளர்ந்தது. அப்பொழுது, இப்பொழுதைப் போலவே, ஒப்புமையில் சிறிய அளவிலான இறப்பு எண்ணிக்கை --'தியாகிகள்'-- மரபார்ந்த, ஷியைட்டுக்களின் நினைவு அணிவகுப்பு வட்டங்களையும் எதிர்ப்புக்களையும் தொடக்கிவைத்து 1978 இறுதிக்குள் மகத்தான எதிர்ப்பிற்கு வழிவகுத்தது."

இது ஒரு வியப்பிற்குரிய அறிவிப்பு ஆகும். ஷாவின் துருப்புக்கள் மற்றும் இழிந்த SAVAK இரகசியப் படைகள் கொன்ற எண்ணிக்கை விவாதத்திற்குரியது என்றாலும்--அரசாங்கம் இன்று அது 60,000 என்று கூறியுள்ளது, எதிர்த்தரப்பினர் 3,000 என்று கூறுகின்றனர்--1978-79 ல் வெடித்த ஆர்ப்பாட்டங்களில் ஒவ்வொன்றிலும் நாடெங்கிலும் நகரங்களிலும் பெற்ற நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் தானியங்கி ஆயுதச் சூட்டில் மடிந்தனர் என்பதில் சந்தேகம் இல்லை.

CIA இடம் பயிற்சி பெற்ற SAVAK உலகின் இரகசியப் போலீஸ் பிரிவுகளில் மிக இழிவான ஒன்றாகும்; பிறர் கஷ்டப்படுவதில் சுகம் அடைந்த இந்த அமைப்பு முடியாட்சிக்கு எதிராளி எனச் சந்தேக்கப்பட்ட எவரையும் முறையாக, கொடூரமாக சித்திரவதை செய்ததை அனைவரும் அறிவர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆவர்.

இத்தகைய மிருகத்தனமான சர்வாதிகாரத்திற்கு வெள்ளைப்பூச்சு கொடுக்கும் ஒரு செய்தியாளர் இப்பொழுது ஜனநாயகத்திற்கு காப்பாளர் என்று எப்படிக் காட்டிக் கொள்ளுகிறார்? இந்த மனிதர் யார்?

ரோபேர்ட் ட்ரேபுஸ்ஸிற்கு ஈரான் ஒன்றும் புதிய விஷயமல்ல. ஈரானிய புரட்சியை ஒட்டி "Hostage to Khomeini" என்ற தலைப்பில் அவர் ஒரு புத்தகத்தை எழுதினார்.

இந்தப் புத்தகத்தின் முன்னுரை "அமெரிக்க மக்களுக்கு" கூறப்படுகிறது; இந்நூல் "ஷாவின் வீழ்ச்சிக்கும் கோமேனி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் காரணமாக இருந்ததில் ஜனாதிபதி கார்ட்டரின் பங்கு பற்றி கண்டனம்" என்று விளக்கப்பட்டது.

"வரவிருக்கும் ரோனால்ட் ரேகனின் அரசாங்கம்" பற்றி அது சாதகமாக பேசி, "நிர்வாக மாற்றம் முழு கோமேனி ஆட்சியும் 1981ல் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக விவேகமுள்ள அரசாங்கத்தை இருத்துவதற்கு நல்ல வாய்ப்பை கொடுக்கிறது" என்று கூறுகிறது.

தன்னுடை வாசகர்களிடம் ஊக்கத்துடன ட்ரேபுஸ் கூறுகிறார்: "அமெரிக்க மக்கள் கோமேனி ஆட்சியை அது சட்டத்திற்கு புறம்பான தன்மை உடையது என்றவிதத்தில்தான் நம் அரசாங்கம் நடத்தும்; வேறு எதையும் ஏற்கமாட்டார்கள் என்பதை வாஷிங்டனில் உள்ள அதிகாரிகள் தெரிந்து கொள்ளட்டும்."

ஈரானிய புரட்சியை ஒரு வெறுக்கப்பட்ட சர்வாதிகாரத்தை எதிர்த்த மில்லியன் கணக்கானவர்களின் இயக்கம் என்று முன்வைக்காமல், இப்புத்தகம் அதை கார்ட்டர் நிர்வாகத்தினுள்ளிருந்து பிரிட்டிஷ், இஸ்ரேலிய, சோவியத் உளவுத்துறை ஒத்துழைப்புடன நடத்தப்பட்ட பெரும் சதி என்று சித்தரிக்கிறது.

"கார்ட்டர் நிர்வாகம் --முன்பே இருந்த தீய எண்ணங்களை ஒட்டி-- ஈரான் ஷாவை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்த இயக்கத்திற்கு உதவியை கொடுத்தது" என்று அவர் எழுதினார். "வெள்ளை மாளிகை இந்நடவடிக்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்பைக் கொண்டிருந்தது...திரைக்குப் பின் ஷாவின் இராணுவத்தில் இருந்த சதிகாரர்களுடன் உடன்படிக்கை செய்துகொண்டதில் இருந்து 1979ல் ஈரானை விட்டு நீங்குமாறு தோற்ற தலைவருக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்தவரையில். அமெரிக்க வரலாற்றில் வேறு எந்த அத்தியாயத்திலும் ஒரு நாடு தோற்றுவிக்கக் காரணமாக இருந்த சிந்தனைகளை துரோகத்துடன் காட்டிக் கொடுத்தது இதுபோல் இல்லை."

எந்த "உயர் சிந்தனைகள்" துல்லியமாக ஷாவை மயில் ஆசனத்தில் நிலைநிறுத்துவதற்கு முயற்சிக்க விரும்பாமல் வாஷிங்டனின் தோல்வியால் மீறப்பட்டன என்பது பற்றி ட்ரேபுஸ் விளக்கமாக ஏதும் கூறவில்லை.

இந்தப் புத்தகம் New Benjamin Franklin House Publishing Co. யினால் வெளியிடப்பட்டது; அந்த ஆண்டு அது வெளியிட்ட வேறு நூல்களில் "ஒவ்வொரு பழமைவாதியும் கம்யூனிசம் பற்றி அறிய வேண்டியது எனன" என்று Lyndon LaRouche எழுதியதும் அடங்கும்.

LaRouche உடைய Executive Interlligence Review வில் "மத்திய கிழக்கு உளவுத்துறை இயக்குனர்" என்ற பதவியை ட்ரேபுஸ் வகித்துக் கொண்டிருந்தார். அது 1985ல் வாஷிங்டன் போஸ்ட் "100க்கும் மேற்பட்ட உளவுத்துறை செயலர்கள் சில நேரம் பணி புரிந்த இணையதளம், தகவல் சேகரிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் போலவே செய்கிறது" என்று குறிப்பிட்டதின் முன்னோடிப் பதிப்பகம் ஆகும்.

Political Research Associates என்னும் சிந்தனைக்குழு, தீவிர வலதின் செயற்பாடுகளை ஆராய்வதில் திறமை கொண்ட அமைப்பு ட்ரேபுஸ்ஸின் முன்னாள் நிறுவனம் பற்றிக் கூறுகிறது; ":LaRouche அமைப்பும் அதன் பல முன்னணிக் குழுக்களும் பாசிச இயக்கங்கள் ஆகும்; இவற்றின் கருத்துக்கள் நாஜிச் சிந்தனைகளைத்தான் எதிரொலிக்கின்றன."

இந்த அமைப்பு "ஒரு சர்வதேச இணையத்தை ஒற்று வேலைக்கும் பிரச்சாரத்திற்கும் கட்டமைத்துள்ளது; அதற்கு அரசாங்கம், வணிகம், முறையான குற்றம் செய்பவர்கள் ஆகியோரின் உயர்மட்ட தொடர்புகள் உள்ளன. அமெரிக்காவிலும் இன்னும் பல நாடுகளிலும் உள்ள உளவுத்துறை அமைப்புக்களுடன் LaRochites தகவல் பறிமாற்றம் செய்கின்றன."

வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளின்படி அது தகவல் பறிமாற்றம் செய்து கொண்ட அமைப்புக்களுள் ஒன்று SAVAK ஆகும்; அக்காலக்கட்டத்தில்தான் அது ஈரானில் மிக கொலைகார அடக்குமுறையை ஆட்சிக்கு விரோதமான மாணவ எதிர்ப்பாளர்களை வெளிநாடுகளில் வேட்டையாடிக் கொன்று கொண்டிருந்தது.

புரட்சியினால் நாட்டை விட்டு வெளியேறியபின், ஷாவின் விதவை, பேரரசி பாரா டிபா பஹ்லவி, மேற்கு ஜேர்மனிய இதழான Bunte இடம் கூறினார்: "ஈரானில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள Executive Intelligence Review ல் ரொபேர்ட் ட்ரேபுஸ் எழுதியதைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்." அதன் விளம்பரப்பிரச்சாரத்தில் இது இந்த மேற்கோளைப் பயன்படுத்தியது. அதன் நோக்கம் பெருநிறுவன உயர்நிர்வாகிகள் மற்றும் வலது சாரி அரசியல்வாதிகளை ஈர்ப்பது ஆகும்.

"அலெக்சாந்திரியா, வர்ஜீனியா ஆகியவற்றில் விசாரணை முறை செயச்தியாளராக ரொபேர்ட் ட்ரேபுஸ் இருந்தார்; அரசியல், தேசியப் பாதுகாப்பு ஆகியதுறைகளில் சிறப்பு பயிற்சி பெற்றிருந்தார்." இதன் வாசகர்களுக்கு அது எங்கும் அதன் ஈரானில் உள்ள முக்கிய நிருபர் ஒரு முன்னாள் பாசிச அமைப்பின் உறுப்பினர், ஷாவின் சர்வாதிகாரத்தை வெளிப்படையாக ஆதரித்தவர் என்று கூறவில்லை.

இத்தகுதிகளே ட்ரேபுஸ்ஸை ஈரானில் உள்ள நிகழ்ச்சிகள் பற்றி ஏதும் கூறும் உரிமையை இழக்கச் செய்துவிடும். இந்த நபர் எழுதுவது எதற்கும் நம்பகத்தன்மை கிடையாது.

உண்மையான வினா இதுதான்: இத்தன்மை உடைய ஒரு நபர் தெஹ்ரானில் நேஷனின் நிருபராக, அதன் சர்வதேச விவகாரங்கள் பற்றிய முக்கிய கட்டுரையாளராக எப்படி இருந்தார்?