World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

International issues in the Iranian crisis

ஈரானிய நெருக்கடியில் உள்ள சர்வதேசப் பிரச்சினைகள்

By David North and Alex Lantier
25 June 2009

Use this version to print | Send feedback

ஈரானிய ஜனாதிபதித் தேர்தல்களின் விளைவுகள் மீதான எதிர்ப்புக்களை ஈரானிய அரசாங்கம் எதிர்கொண்டவிதம் பற்றி தான் "திகைப்பும், சீற்றமும் அடைந்துள்ளதாக" ஜனாதிபதி ஒபாமா அவருடைய ஜூன் 23ம் தேதி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது, தெஹ்ரானில் உள்ள மதசார்பு ஆட்சியின்மீது அமெரிக்க அழுத்தம் பெருகியிருப்பதை பிரதிபலிக்கிறது. இந்த நேரடி அறிக்கை, குடியரசு செனட்டர் ஜோன் மக்கெயின் மற்றும் கூடுதலான அமெரிக்க முதலாளித்துவ வலதுசாரிப் பிரிவுகளின் அழுத்தத்தால் உந்துதல் பெற்றது என அவர் கூறியது, அமெரிக்கச் செய்தி ஊடகத்தால் ஈரான் மீது இன்னும் கூடுதலான ஆக்கிரோஷ நிலைப்பாடு புதுப்பிக்கப்பட இருப்பதாகக் காணப்படுகிறது.

ஈரானிய தேர்தல் முடிந்த முதல் இரு வாரங்களில் வெள்ளை மாளிகை செய்தி ஊடகத்திடம் தோல்வியுற்ற வேட்பாளர் மீர் ஹோசன் மொசாவிக்கான பிரச்சாரத்தில் பெரும்பகுதியை கொடுத்துள்ளது. இப்பொழுது தெளிவாகியிருப்பது போல், ஒபாமா ஆரம்பத்தில் இப்பிரச்சினை குறித்து அதிகம் பேசப்படாத அலங்காரச் சொற்கள் இருந்தது, சாரத்தை விட உத்திமுறைதான் என்று உள்ளது.

பல அமெரிக்கப் பகுப்பாய்வாளர்கள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட் மற்றும் மிகுஉயர் அயதுல்லா அலி காமேனியின் ஈரானிய ஆட்சி தேர்தலுக்கு பின் வந்த ஆர்ப்பாட்டங்களினால் உறுதியாக சீர்குலைந்துள்ளது என எழுதி வருகின்றனர். பூசல்கள் மற்றும் ஆட்களைக் களை எடுத்தலும் பாதுகாப்புப் பிரிவுகளில் இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன; மேலும் அரசியல், பொருளாதார ஆதாயங்களுக்கான போட்டியில் ஈரானிய முதலாளித்துவத்தின் பிரிவுகள் ஈடுபட்டிருக்கையில் சீர்திருத்த தலைவர் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானியின் மகள்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

அமெரிக்க வணிக உளவுத்துறை அமைப்பான Stratfor எழுதுகிறது: "அஹ்மதிநெஜாட்டின் இரண்டாம் பதவிக்காலம் அரசியல் நடைமுறைக்கும் போட்டி பழமைவாத பிரிவினரிடையே இன்னும் கூடுதலான, அதிகமான உட்பூசல்களைக்காணும்.... ஈரான் அமெரிக்கக் கொள்கையை சிக்கலாக்குவதற்கு தேவையான உள் ஒற்றுமையை பெறுவது கடினம் என்று உணரும்.

ஒபாமாவின் அலங்காரச் சொற்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஈரானிய ஆளும் உயரடுக்கிற்குள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் பிளவுகளை முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைக்கான அடையாளங்களைக் காட்டுகிறது. தெஹ்ரானின் ஆட்சியை மாற்றுவது ஒருபுறம் இருக்க, அதில் சிறிது மாற்றத்தைக் கொண்டுவருவதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகப் பெரிய வெளிநாட்டுக் கொள்கை வெற்றியாக, கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்குப் பின்னர் இருக்கும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளைப் பொறுத்தவரையில், ஈரானிய நெருக்கடியின் விளைவுகளில் அவற்றிற்குப் பெரும் பணயங்கள் உள்ளன. உண்மையில் செய்தி ஊடகப் பிரச்சாரத்தின் தீவிரத் தன்மைதான் இதில் தொடர்புடைய நலன்களின் உண்மையான பரப்பின் அளவை--புவி அரசியல் மற்றும் நிதியங்கள் பற்றி -- தெரிவிக்கிறது. ஈரானிய நெருக்கடியின் இந்த "கூறுபாடு" பற்றி மத்திய தர வர்க்க இடதின் வெளியீடுகள் மற்றும் அமைப்புக்கள்--பயனற்ற முறையில் எளிதில் நம்பும், மடத்தனம் நிறைந்தவை--கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

ஈரானிய நிகழ்வுகளின் உலகந்தழுவிய உட்குறிப்புக்கள் ஆராயப்படுகையில், சற்று வரலாற்றைப் பரிசீலனை செய்வது உகந்தது ஆகும். இரண்டாம் உலகப் போர் முடிவில் இருந்து ஈரான் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மையப் பங்கைக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கும் இடையே முக்கிய பூசல்களில் ஒன்று வடக்கு ஈரானில் சோவியத் துருப்புக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது பற்றியதாகும். பிரிட்டனின் ஆதரவுடன் அமெரிக்காவிற்கு எதிராக ஆயுதமேந்திய மோதலில் ஈடுபடுவதைவிட தன் படைகளைத் திரும்பப் பெறுவது நல்லது என்று சோவியத் ஒன்றியம் நினைத்துவிட்டது.

ஈரானியத் தொழிலாள வர்க்கம் பின்னர் தீவிரமயப்பட்டது, உள்ளூர் டுடே (கம்யூனிஸ்ட்) கட்சியின் பெருகிய அதிகாரம் மற்றும் எண்ணெய் இருப்புக்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பிரதம மந்திரி மகம்மது மொசடேயின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக எழுந்த அமெரிக்க ஏற்பாட்டில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தன. "மயில் ஆசனத்தில்" மீண்டும் CIA ஆல் இருத்தப்பட்ட ஷா ரேஸா பஹ்லவி பாரசீக வளைகுடா மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க நலன்களை அடுத்த கால் நூற்றாண்டிற்கு கவனித்துக் கொண்டார். அவருடைய ஆட்சி இரக்கமற்ற பாதுகாப்புப்படையாக SAVAK யால் நிலைநிறுத்தப்பட்டது; அது எதிரிகளை சித்திரவதைக்கு உட்படுத்தியதுடன் கொலைகளையும் செய்தது.

அமெரிக்காவிற்கும் ஷாவின் ஆட்சிக்கும் இடைய உள்ள உறவு பெரும் மூலோபாய முக்கியத்துவத்தை கொண்டிருந்தது; அந்த புவி அரசியல் உண்மையை தன்னுடைய நினைவுக் குறிப்புக்களினான "வெள்ளை மாளிகை ஆண்டுகள்" என்பதின் முதல் பகுதியில் டாக்டர் ஹென்ரி கிஸிஞ்சரே பாராட்டி சான்றிதழ் கொடுத்துள்ளார். ஷாவின் அவமானகரமாக அகற்றப்படுதலுக்கு பின் கிஸிஞ்சர் ரேசா பஹ்லவிக்கு கொடுத்த புகழாரம் ஈரானியப் புரட்சியின் விளைவுகள் பற்றி முன்னாள் வெளியுறவு அமைச்சரின் காழ்ப்புணர்வை பிரதிபலிக்கிறது:

ஷாவின் தலைமையின் கீழ் ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கும் இடையே இருக்கும் நிலப்பகுதிப் பாலம், உலக வரலாற்றில் பல நேரமும் முக்கியமாக இருந்தது, எந்தச் சவாலும் இல்லாமல் அமெரிக்க சார்பைக் கொண்டு, மேலைச் சார்பையும் கொண்டிருந்தது. இஸ்ரேலைத் தவிர அப்பகுதி நாடுகளில் தனித்து நின்ற நிலையில் ஈரான் அமெரிக்காவுடன் நடபு கொண்டு அதன் வெளியுறவுக் கொள்கையின் தொடக்கப் புள்ளியாக வைத்துக் கொண்டது.... ஈரானின் செல்வாக்கு எப்பொழுதும் நம் பக்கம்தான் இருந்தது; அதன் இருப்புக்கள் நம்முடையதிற்கு வலிமையை சில தொலைதூர முயற்சிகளிலும் அளித்தன--1973 பாரிஸ் உடன்பாட்டு நேரத்தில் தெற்கு வியட்நாமிற்கு உதவியதில், 1970 களில் மேற்கு ஐரோப்பாவிற்கு அதன் பொருளாதர நெருக்கடியின்போது உதவியதில், ஆபிரிக்காவில் உள்ள நிதானப் போக்கு உடையவர்களை சோவியத்-கியூபா ஊடுருவலுக்கு எதிராக ஆதரவு கொடுத்ததில், பிந்தைய மத்திய கிழக்கு தூதரக நெறி காலத்தில் ஜனாதிபதி சதாத்திற்கு ஆதரவு கொடுத்ததில் ஆதரவளித்ததில் இருந்தன. உதாரணமாக, 1973 மத்திய கிழக்கு போரில், ஈரான் ஒன்றுதான் சோவியத் ஒன்றியத்தின் எல்லையில் இருந்து சோவியத்துக்களை அதன் வான் வழியைப் பயன்படுத்த அனுமதிக்காமல் இருந்தது-- இது பல நேட்டோ நட்பு நாடுகளின் செயல்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அரபு அண்டை நடுகளின் ஆற்றலை ஷா எடுத்துக் கொண்டு, அவை செளதி அரேபியா, ஜோர்டான் மற்றும் பாரசீக வளைகுடா ஆகியவற்றில் இருந்து நிதான ஆட்சிகளை அச்சுறுத்தாமல் தடுத்து நிறுத்தினார். தன்னுடைய எண்ணெய் கட்டுப்பாட்டை அவர் அரசியல் அழுத்தம் கொடுக்க ஒருபொழுதும் பயன்படுத்தியது இல்லை; மேற்கு அல்லது இஸ்ரேலுக்கு எதிரான எண்ணெய் தடையில் அவர் ஒரு பொழுதும் சேர்ந்ததில்லை. சுருங்கக் கூறின், ஷா உலகின் மிகச்சிறந்த, மிக முக்கியமான, மிக விசுவாசமான அமெரிக்க நண்பர்களுள் ஒருவராக இருந்தார் (BostonL 1979, p.1262)

1979 புரட்சியும், ஒரு தேசியவாத ஆட்சி வெளிப்பட்டதும், மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவில் மூலோபாய உறவுகளில் ஆழ்ந்த மாறுதலை ஏற்படுத்தின; இது அமெரிக்காவிற்கு எதிராகப் போயிற்று; மேலும் இஸ்ரேலுக்கு எதிராகவும் என்று குறிப்பிடப்பட வேண்டும். பாரசீக வளைகுடவின் "காப்பாளர்; நிலையை இழந்ததற்கு அமெரிக்கா சதாம் ஹுசைனால் ஆளப்பட்ட ஈராக்கிற்கு ஈரான்மீது போர் தொடுக்க ஊக்கம் கொடுத்த வகையில் எதிர்கொண்டது (தேவைக்கேற்ப அவர் அமெரிக்காவின் நண்பராக ஆக்கப்பட்டார்); 1980 களில் அமெரிக்கா ஈரான் மீது கொண்டிருந்த அணுகுமுறை ஆழ்ந்த விரோதப் போக்கு ஆகும்; ஏனெனில் மத்திய கிழக்கில் அமெரிக்க முயற்சிகளை ஈரானிய செல்வாக்கு பலமுறையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. ஆனால் மத்திய கிழக்கு, பாரசீக வளைகுடா, மற்றும் உலக அரசியலின் சிக்கல் வாய்ந்த தன்மை அமெரிக்க-ஈரானிய உறவுகளை அதிகமாக சிக்கல்படுத்தின; சில நேரம் அமெரிக்கா தெஹ்ரானுடன் கூட குறைந்த அளவேனும் ஒத்துப்போக நினைத்தது. ஆனால் முக்கியமாக, உறவுகள் விரோதப் போக்கைத்தான் கொண்டிருந்தன.

1988ல் அமெரிக்காவின் கடற்படை, குறிப்பாக பழிவாங்கும் செயலில் ஈரானிய பயணிகள் ஜெட் விமானம் ஒன்றை பாரசீக வளைகுடா வான்பகுதியில் (Vincennes Affair) சுட்டு வீழ்த்தியது: இதில் 252 ஈரானியர்களும் (38 ஈரானியர் அல்லாதவரும்) கொல்லப்பட்டனர். இக்குற்றம் ஈரான் ஈராக் போரில் ஈரானிய ஆட்சி ஈராக்கிற்கு சாதாகமாக முடிவெடுக்கும் முக்கிய பங்கைக் கொண்டது.

தெஹ்ரானின் தேசிய ஆட்சிக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பல மோதல் கருத்துக்கள் இருந்தன (இருக்கின்றன). ஈரானிய வகை ஷியைட் ஜனரஞ்சக முறை தெற்கு பாரசீக வளைகுடாவில் உள்ள ஷியைட் பெரும்பான்மை கொண்ட சுன்னி ஆட்சியாளர்களை - பஹ்ரைன், செளதி அரேபியவின் எண்ணெய் வளமுடைய கிழக்கு மாநிலம் ஆகியவற்றை. அச்சுறுத்தியது: ஆட்சியானது அமெரிக்க நிலைப்பாடுகளை ஈரானுக்குள் அனுமதிக்கவில்லை; இதையொட்டி பெருமதிப்புடைய இராணுவ தளங்கள் மற்றும் சோவியத்தின் வடபுறத்திற்கு இயக்கப்படும் ஒற்றுத் தளங்களும் அமெரிக்காவிற்கு கிடைக்காமல் போயின. இன்னும் சமீபத்தில் ஈரான் இஸ்ரேலில் இஸ்லாமிய எதிர்பாளர்களான லெபனானின் ஹெஸ்பொல்லா மற்றும் காசாப் பகுதியில் ஹமாஸ் ஆகியவற்றிற்கு பேராதரவு கொடுத்தது.

ஈரானின் அணுசக்தித் திட்டமும் அமெரிக்காவை கோபப்படுத்தியுள்ளது--தெஹ்ரானின் பிராந்திய கெளரவத்தை அது அணுவாயுதத்தை கொண்டால் அதிகப்படுத்தும் என்று அது நம்புகிறது; அது இஸ்ரேலை அச்சுறுத்தியுள்ளது; ஏனெனில் அது அணுவாயுதம் கொண்ட ஈரானை "வாழ்வு சம்பந்தமான ஒரு அச்சுறுத்தல்" என நினைக்கிறது.

அமெரிக்க-ஈரானிய உறவுகள் உலகளாவிய மற்றும் வட்டார உட்குறிப்புக்களை கொண்டுள்ளன. ஈரான் ரஷ்யா மற்றும் சீனாவுடன் தூதரக உறவுகளை வளர்த்து கணிசமான இராணுவக் கருவிகளை அவற்றிடம் வாங்கியுள்ளது; அவற்றை வாஷிங்டன் முக்கியமான மூலோபாய போட்டி நாடுகள் என்று காண்கிறது. அதன் மகத்தான எரிபொருள் வளங்கள் மற்றும் மூலோபாய இடச் சார்பின்மூலம், இது சீனா அல்லது இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கிற்கு குழாய்த்திட்டங்களுக்கு இயற்கையான இறுதியிடமாகவும், ரஷ்யாவின் ஐரோப்பிய இயற்கை வாயு அளிப்பிற்கு போட்டித் திறனையும் கொண்டுள்ளது.

9/11க்கு பின் புஷ் நிர்வாகம் அமெரிக்க ஈரான் பதட்டங்களை அதிகப்படுத்தி, தெஹ்ரான் ஆட்சியை ஈராக் மற்றும் வட கொரியாவுடன் இணைத்து "தீமையின் அச்சு" என்றழைக்கப்படுவதன் ஒரு பகுதி என்று கண்டித்தது. புஷ் நிர்வாகத்தின் முக்கிய நபர்கள் ஈரானுக்கு எதிராகப் போர் வேண்டும் என்று வாதிட்டதும் நன்கு அறியப்பட்டதுதான். ஆனால் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த இராணுவவகை பேரழிவுகள் அத்தகைய திட்டத்தை நடைமுறைக்கு ஏற்றதாக செய்யவில்லை.

ஈரான் தொடர்பான அமெரிக்க கொள்கையை புனராலோசனை செய்தலுடன் உடன் நிகழ்வாக --அதாவது ஈரான் மீது அமெரிக்க செல்வாக்கை மீண்டும் அமைப்பதற்கான நீண்ட காலக் கொள்கையை எப்படி வளர்ப்பது என்பது-- ஈரானிய அரசியல் நடைமுறையின் பிரிவுகள் தாங்கள் நெருக்கமான ஒத்துழைப்பை கொடுக்கத் தயார் என்று வாஷிங்டனுக்கு காட்டத் தொடங்கின. ஆப்கானிஸ்தானில் இருக்கும் சுன்னி தீவிரவாத தாலிபன் சக்திகளை எதிர்க்கும் விதத்திலும், ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும் சதரிஸ்ட்டு சக்திகளை தனிமைப்படுத்தும் விதத்திலும், தெஹ்ரான் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளின் இறப்பு எண்ணிக்கை குறைக்கப்படுவதற்கு உதவியுள்ளது.

ஆனால் ஈரானிய ஆட்சியின் பக்கத்தில் இத்தகைய சைகைகள் காட்டப்பட்டும், அது தன்னுடைய சொந்த தேசிய விழைவுகளை கைவிடாமல் அமெரிக்க மூலோபாய நோக்கங்களை திருப்திப்படுத்த முடியாது. இறுதிப் பகுப்பாய்வில் அமெரிக்கா 1979க்கு முன்பு ஈரானுடன் கொண்டிருந்த வகையிலான உறவை மீட்க விரும்புகிறது. ஈரானில் அது ஒரு கைப்பாவை அரசாங்கத்தைத்தான் விரும்புகிறது.

ஈரானிய ஆளும் உயரடுக்கிற்குள் அமெரிக்கவுடனான உறவுகள் பற்றிய பிரச்சினைகள் உட்பிரச்சினைகளில் பெரிதும் தலையெடுத்துள்ளன. உலகச் சந்தை கொள்கைகளின் அடிப்படையில் ஈரானிய பொருளாதாரத்தை விரைவில் மறுசீரமைப்பதற்கு ஆதரவாக இருக்கும், மெளசவியுடன் தொடர்புடைய இந்தப் பிரிவுகள், தம் திட்டத்தின் தர்க்கத்தை ஒட்டி அமெரிக்காவிற்கு கணிசமான சலுகைகளைக் கொடுக்கத் தயாராக உள்ளன. இதுதான் அவற்றிற்கு சமீபத்திய தேர்தலில் அமெரிக்க ஆதரவைத் தேடித் தந்துள்ளது என்பதுடன், அதையொட்டி அதிகாரத்திற்கான போராட்டமும் விளைந்துள்ளது.

ஈரானில் உடனடி விளைவுகள் எப்படி இருந்தாலும், நெருக்கடி குறிப்பிடத்தக்க வகையில் அரசியல் உறுதியற்ற தன்மையை தோற்றுவித்துள்ளன; இதை வாஷிங்டன் தன்னுடைய நலனுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்புகிறது. ஈரானிய முலாளித்துவத்தின் போட்டியிடும் பிரிவுகள் இன்னும் வெளிப்படையாக அவற்றின் உள் நிலைமைய வலுவாக்கிக் கொள்ள வாஷிங்டனுடன் ஒத்துப் போக முயற்சி செய்யும். அத்தகைய நவ-காலனித்துவ வகை ஈரானிய தீர்வை எதிர்க்கக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம்தான்.