World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The tasks of the Iranian working class

ஈரானிய தொழிலாள வர்க்கத்தின் பணிகள்

By Peter Symonds
24 June 2009

Use this version to print | Send feedback

ஈரானில் ஜனாதிபதி தேர்தலை அடுத்து ஆளும் உயரடுக்கிற்குள் ஆழ்ந்த பிளவுகள் வெளிப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளின் ஆதரவைப் பெற்றுள்ள தோல்வியுற்ற வேட்பாளர் மீர் ஹொசைன் மெளசவி அதிகமான அளவில் மத்தியதர வர்க்க இயக்கத்தை "ஜனநாயகம்" என்ற பதாகையில் திரட்டி, பதவியில் உள்ள ஜனாதிபதி மஹ்முத் அஹ்மதிநெஜாட் தலைமையிலுள்ள அவருடைய எதிர்ப்பாளர்களை அகற்றிவிட முயல்கிறார்.

பூசலில் ஈடுபட்டுள்ள இரு கன்னைகளுமே தொழிலாள வர்க்க நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இரண்டுமே மத சார்பு அரசை பாதுகாப்பதுடன் தொழிலாளர்களை கடும் அடக்குமுறையில் வைத்த நீண்ட வரலாற்றை கொண்டுள்ளன. மெளசவியின் வெற்றி, அஹ்மதிநெஜாட்டை விட கொஞ்சமும் குறையாமல், தவிர்க்க முடியாமல் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை மிருகத்தனமாக தாக்குவதற்குத்தான் வழிவகுக்கும்.

தன்னுடைய வர்க்க நலன்களுக்காக போராடுவதற்கு தொழிலாள வர்க்கம் இந்த நெருக்கடியை உறுதியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் குழுக்களின் தலைமையில் வர்க்கப் போராட்ட வழிவகைகளை பயன்படுத்தி, ஆளும் உயரடுக்கின் அனைத்துப் பிரிவுகளுக்கும் எதிராக அரசியல் தாக்குதல் மூலமாகத்தான் அதைச் செய்ய முடியும். அத்தகைய இயக்கத்தின் வழிகாட்டும் முன்னோக்கு தொழிலாளர் அதிகாரம் மற்றும் சோசலிச ஈரானுக்காக போராடுதலாக இருக்க வேண்டும்.

இந்த வேலைத்திட்டமானது, ஈரானில் உள்ள நெருக்கடிக்கு மெளசவி முகாமிற்கு ஆதரவளிக்கும் தங்களின் சொந்த அரசாங்கங்களின் பின்னே அணிவகுத்து நிற்பதன் மூலம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருக்கும் பல குட்டி முதலாளித்துவ இடது போக்குகளின் வேலைத்திட்டத்தை நேரடியாக எதிர்க்கிறது.

பிரான்சின் முன்னாள் பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) ஆகியவற்றின் இரு முக்கியமான அறிக்கைகள் முதலாளித்துவ செய்தி ஊடகத்தில் இருந்து கிட்டத்தட்ட வெளிப்படையாகவே வேறுபடுத்த முடியாதவையாக உள்ளன. ஜனாதிபதித் தேர்தல்களில் தில்லு முல்லு நடைபெற்றது என்ற கூற்றை அவை விமர்சனமின்றி ஏற்றுக் கொண்டு, எதிர்தரப்பு ஆர்ப்பாட்டங்களை சிறந்த ஜனநாயக வண்ணத்தில் சித்தரிப்பதுடன் "தெருக்களில் மில்லியன் கணக்கானவர்கள் நடத்தும் இயக்கத்துடன்" அவற்றின் ஐக்கியத்தையும் அறிவித்துள்ளன.

ஈரானிய நெருக்கடி பற்றி அவர்கள் தெரிவித்துள்ளதில் முற்றிலும் காணப்படாதது, போட்டியிடும் சக்திகளை பற்றிய வர்க்கப் பகுப்பாய்வுதான். "தொழிலாளர்கள்" என்று அவர்கள் குறிப்பிடும்போதெல்லாம் அது ஆட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாகத் அணிதிரட்டும் அழைப்பு அல்ல. மாறாக, மெளசவியின் பதாகையில் குழுமியுள்ள நகர்ப்புற மத்தியதர வர்க்கங்களின் இயக்கத்திற்கு ஒரு இடதுசாரி வண்ணம் அளிப்பதாகத்தான் உள்ளது.

திங்களன்று "ஈரான் தொழிலாளர்கள் மற்றும் வெகுஜனங்களுடன்!" என்ற தலைப்பில் கொடுத்துள்ள அதன் அறிக்கையில், NPA ஈரான் கோட்ரோ கார்த்தயாரிப்பு ஆலைகளில் நடைபெற்ற குறைந்தபட்ச செயல்களை, பஸ் தொழிற்சங்கங்கள் மற்றும் கோட்ரோ தொழிற்சங்கத்தால் நடத்தப்பட்டவற்றை, ஒரு பொது வேலைநிறுத்தம் போல் பெரிதுபடுத்திக் காட்டி, "இது ஒரு புதிய புரட்சிக்காட்சியை" தோற்றுவிக்கிறது என்று கூறியுள்ளது. "ஆட்சியின் போட்டிக் குலக்குழுக்களுக்கு இடையே நடக்கும் பூசலில், பிளவுக்குள்ளே தொழிலாளர்களும் மக்களும் தங்களை நிறுத்திக்கொண்டுள்ளனர்" என்று கூறியுள்ளது.

ஈரானிய தொழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கத்தின் ஆரம்பங்களை நாம் காண்கிறோம் என்ற கூற்றை நியாயப்படுத்த மிகக் குறைவான தகவல்தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்படியே அந்த இயக்கம் தோன்றியுள்ளது என்று வைத்துக் கொண்டாலும்கூட, அது NPA யின் கொள்கையான எதிர்த்தரப்பு ஆர்ப்பாட்டங்களை விமர்சனமின்றி முன்னிலைப்படுத்துவதை இன்னும் குற்றம் சார்ந்த தன்மையில்தான் இருத்தும்.

தன்னுடைய அறிக்கையான "ஈரானிய இயக்கத்தின் வெற்றிக்கு தொழிலாளர்கள் நடவடிக்கை முக்கியம்" என்ற தலைப்பில், SWP, "தெருக்களுக்கு வந்துள்ள மக்களைப் பொறுத்தவரையில் இது வறுமை, விரோதப்படுத்துதல் மற்றும் வாழ்வதற்குப் போராடுதல்" என்பதாகும் என அறிவித்துள்ளது. தொழிலாள வர்க்கத்தின் கூட்டு வலிமை இன்னும் உணரப்படுமாறு நடக்கவில்லை என்று குறிப்பிட்டு, எந்த சுயாதீன முன்னோக்கையோ, வேலைத்திட்டத்தையோ அது முன்வைக்கவில்லை. ஆட்சிக்கும் எதிர்க்கட்சி இயக்கத்திற்கும் இடையே நடக்கும் வலிமைப் போட்டியின் விளைவு இன்னும் தெளிவாகவில்லை என்று முடிவுரையாக கூறுகிறது.

ஈரானில் நடக்கும் எதிர்ப்பு இயக்கத்தை விமர்சனமின்றி பாராட்டுவது, ஈரானிய எதிர்த்தரப்பு தலைவர்களின் வேலைத்திட்டம், அவர்களுடைய வரலாறு, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்க நலன்கள் ஆகியவற்றை தீவிர ஆய்விற்கு உட்படுத்துவதைத் தடுக்கும் உறுதியான அரசியல் நோக்கத்திற்கு உதவுகிறது.

இரண்டு அறிக்கைகளிலுமே அமெரிக்காவும் ஐரோப்பாவும் மெளசவி முகாமிற்கு கொடுக்கும் அசாதாரண ஆதரவுப் பிரச்சாரம் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. ஆயினும்கூட செய்தி ஊடகத்திலும் சிந்தனைக் குழுக்களிலும் ஈரானிய ஆட்சிக்குள் இருக்கும் உட்பூசலை ஏகாதிபத்திய சக்திகளின் மூலோபாய, பொருளாதார நலன்களுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்ற விவாதங்களை கொண்ட வர்ணனைகளுக்கு குறைவில்லை.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அரசியல் நனவுடைய பிரிவுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டுள்ள Stratfor சிந்தனைக்குழு, இந்த வாரம் மற்றொரு கட்டுரையில் "அஹ்மதிநெஜாட்டின் இரண்டாம் பதவிக்காலத்தை" ஆராய்வதாக தெரிவித்துள்ளது. ஆளும் உயரடுக்கிற்குள் உள்ள பிளவுகளை இது அஹ்மதிநெஜாட்டை வலுவிழக்கச் செய்யும் வகையாகவும், "[ஈரானுக்கு] அமெரிக்கக் கொள்கையை சிக்கலாக்கத் தேவையான உள் ஒற்றுமை அடைவதைக் கடினமாக்கும்" என்று வரவேற்றுள்ளது. மெளசவியின் தலைமைக்கு அரசியல் அளவில் தொழிலாளர்கள் கட்டுண்டு இருக்கும் வரை, எதிர்த்தரப்பு இயக்கம் வலுவடைய வேலை நிறுத்தங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கு Stratfor தயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NPA, SWP ஆகியவற்றின் அறிக்கைகளில் மிகத் தீயவை பயக்கும் கூறுபாடு மேலை உளவுத்துறை அமைப்புக்கள் மற்றும் ஈரானுக்குள் செயல்பட்டுவரும் முன்னணிக்குழுக்கள் செயல் பற்றி அவை குறிப்பிடாதுதான்; ஆனால் கிழக்கு ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஏற்பட்ட பல "வண்ணப் புரட்சிகள்" பற்றி அவை கூறுகின்றன. நியூ யோர்க்கரில் சேமர் ஹெர்ஷ் எழுதியுள்ள பல தொடர் கட்டுரைகள் மிகப் பரந்த அளவிற்குத் தவறான தகவல் மற்றும் CIA, அமெரிக்க சிறப்புப் படைகள் ஈரானுக்குள் இயங்கி, குறைந்தபட்சம் 2005ல் இருந்து செயல்படுவதைப் பற்றி பிரச்சாரம் செய்கிறது.

இந்த நடவடிக்கைகள் ஐயத்திற்கு இடமின்றி ஒபாமா நிர்வாகத்திலும் தொடர்கிறது. அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய சக்திகளுக்கும் ஈரானில் மிக அதிக அளவு பணயம் உள்ளது. நாடு தன்னுடைய பரந்த எரிபொருள் மூலவளங்களைக் கொண்டிருப்பது மட்டும் இல்லாமல், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா இரு பகுதிகளின் சந்திப்பில் உள்ளது; அவை ஏகாதிபத்தியத்தின் மூலோபாய, பொருளாதார விழைவுகளுக்கு மையத்தானம் ஆகும். மெளசவி கன்னைக்கான தற்போதைய சர்வதேச பிரச்சாரத்தின் ஆதரவு அந்த நலன்களை முன்னேற்றுவிக்கும் நோக்கத்தைக் கொண்டது.

மத்தியதர வர்க்க இடது குழுக்கள் தங்கள் உதவியை தொழிலாள வர்க்கத்தின் நலன்களை ஈரானிய முதலாளித்துவத்தின் ஒரு பிரிவிக்கு தாழ்த்தி வைக்கின்ற இந்த முயற்சிகளுக்கு கொடுக்கின்றன. SWP மற்றும் NPA இரண்டும் அத்தகைய இயக்கம் ஜனநாயக உரிமைகளுக்கான பரந்த மக்களின் அபிலாசைகளை தன்னியல்பாய் கவனிக்கும் என்ற ஆபத்தான பிரமையை ஊக்குவிக்கின்றன. அதிகாரத்தைக் கையில் எடுத்து ஒரு சோசலிச வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தங்களின் சொந்த சுயாதீன வர்க்க நலன்களுக்கான ஒரு புரட்சிகர போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட வேண்டும் என்று இரண்டுமே தொழிலாளர்களுக்கு அழைப்பு விடவில்லை.

இவர்கள் வாதிடும் மெளசவி பிரிவுக்கு வெற்றி வந்தால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும்? 1980களில் கிழக்கு ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் ஆகியவற்றின் தொழிலாளர்களுடைய அனுபவங்களை நினைவு கூருதல் முக்கியமாகும். ஒரு புரட்சிகர சோசலிச மாற்றீடு இல்லாத நிலையில், முதலாளித்துவ மீட்பை நாடிய ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் உட்பிரிவுகளுக்கு பின்னே பல தசாப்தங்களாக அடக்கி வைத்திருக்கப்படும் எதிர்ப்பும் சீற்றமும் வழிப்படுத்தப்பட்டது. அமெரிக்காவால் உருக்கொடுக்கப்பட்ட தொடர்ச்சியான "வண்ணப் புரட்சிகள்", மேலைச்சார்புடைய ஆட்சிகளை நிறுவிய தன்மை, சந்தைச் சார்புடைய செயற்பட்டியலை செயல்படுத்தும் ஆட்சிகள்தான் பதவியில் இருத்தப்பட்டது. எந்த விதிவிலக்கும் இல்லாமல் ஒவ்வொரு புரட்சியிலும் விளைவு தொழிலாள வர்க்கத்திற்கு குறைவற்ற சமூகப் பேரழிவுதான் ஏற்பட்டது.

தற்போதைய நிலைமை பற்றி ஒரு நிதானமான மதிப்பீடு தேவை. ஒரு விரிவாக்கப்பட்ட அரசியல் போராட்டம் ஈரானில் வந்துள்ளது; இது உலகப் பொருளாதார நெருக்கடியினால் எரியூட்டப்படுகிறது. தொழிலாளர்கள், மாணவர்கள், சோசலிச சிந்தனையுடைய அறிவுஜீவிகள் அனைவரும் ஒரு சோசலிச, சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாளர் நோக்குநிலையைக் கொள்ள வேண்டும். இதன் பொருள் கடந்த நூற்றாண்டு முழுவதும் ஈரானிலும், சர்வதேச அளவிலும் தொழிலாளர்களின் அனுபவங்கள் முக்கிய மூலோபாயப் பிரச்சினைகளில் பெற்ற படிப்பினைகள் உய்த்து உணரப்பட வேண்டும் என்பதுடன், நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழுவின் பகுதி ஒன்று ஈரானிலும் கட்டியமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.