World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Australian vigil denounces Sri Lankan government atrocities

இலங்கை அரசாங்கத்தின் கொடுமைகளை ஆஸ்திரேலிய விழிப்புக் கூட்டம் கண்டிக்கிறது

By our correspondents
27 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

தமிழ் சமூகத்தை கூடுதலாக சேர்ந்த கிட்டத்தட்ட 250 பேர் ஒரு மெழுகுவர்த்தி விழித்தல் இரவுக் கூட்டம் ஒன்றில் மேற்கு சிட்னியில் நேற்றிரவு கலந்து கொண்டனர்; இலங்கை இராணுவம் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாட்டின் வடக்கின் வன்னி பகுதியில் இழைக்கும் கொடுமைகளை எதிர்த்து இக்கூட்டம் நடத்தப்பட்டது.

முழுக்குடும்பங்கள், மாணவர்கள் மற்றும் இளவயது தொழிலாளர்கள் உட்பட இதில் பங்கு பெற்றவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் சிறு பகுதியில் காணாமற்போய்விட்ட அல்லது இன்னும் அங்கு அகப்பட்டுள்ள உறவினர்கள் உள்ளனர். அப்பகுதி முழுவதும் இராணுவத்தின் போசமான பொறுப்பற்ற குண்டுவீச்சிற்கு உட்பட்டுள்ளது.

உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசிய சிலர், சிறுவர்கள் உட்பட சொந்தக்காரர்கள் பலர் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளதாக அல்லது உடல் உறுப்புக்களை இழந்துள்ளதாக கூறினர். அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு முற்றிலும் மாறாக 2,000 குடிமக்கள் கொல்லபட்டனர் என்றும் போர்ப்பகுதியில் இன்னும் 2.5 லட்சம் மக்கள் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறினர்.

மேற்கு சிட்னியில் மெழுகுவர்த்தி விழித்தல்

தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை "மனித கேடயங்களாக" பயன்படுத்தி வருகிறது என்ற அரசாங்கத்தின் கூற்றுக்களை நாங்கள் பேசிய ஒவ்வொருவரும் கோபத்துடன் மறுத்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை விட்டு அவர்களுடைய சொந்தக்காரர்கள் வெளியேறாததற்குக் காரணம் அவர்கள் அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப் படைகளினிடம் பழிவாங்கலை எதிர்பார்த்ததால்தான்; தப்பிவந்த போர் அகதிகள் அனைவரையும் படைப்பிரிவினர் பெரிய "பொதுநல கிராமங்களில்" சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

உலக சோசலிச வலைத் தளத்தின் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) ஆதரவாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்தில் சமீபத்தில் வெளிவந்த கட்டுரைகளின் பிரதிகளை வினியோகித்தனர்; அவை மனிதாபிமான தன்மையற்ற பேரழிவை அம்பலப்படுத்தியிருந்தன; அதேபோல் ஜனாதிபதி மகிந்தா இராஜபக்ச ஆட்சி செய்துவரும் போர்க் குற்றங்களையும் அம்பலப்படுத்தி இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி நடத்தி வரும் பிரச்சாரத்தை எடுத்துக்காட்டி, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து படைகள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பியிருந்தன.

முக்கிய சர்வதேச சக்திகள் ஒரு தனி தமிழ் அரசிற்கு ஆதரவளிக்கவேண்டும் என அழுத்தம் கொடுப்பதற்கான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதமேந்திய போராட்ட முன்னோக்கின் அரசியல் முட்டுச்சந்தான நிலையைப் பற்றி விளக்கிய கட்டுரைகள், சிங்களவர்கள், தமிழர்கள் உட்பட்ட இலங்கை மக்களின் கொழும்பு ஆளும் உயரடுக்கிற்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டங்கள் நடத்த ஒரு சோசலிச முன்னோக்கின் தேவையையும் விளக்கின.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் குறுக்கிட்டு உலக சோசலிச வலைத் தளத்தின் துண்டுப்பிரசுரங்களை அங்கு உள்ளவர்கள் வாங்கிக் கொள்ளக் கூடாது என்று கூறி அதைப் படிக்க தொடங்கியவர்களிடம் இருந்து அவற்றை வாங்கிக் கொண்டனர். இந்த ஜனநாயக விரோத விடையிறுப்பு சிங்கள் அரசியல் ஆளும் வர்க்கத்தினதும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் பிளவுபடுத்தும் வகுப்புவாதத்திற்கு எதிரான சோசலிச சமத்துவக் கட்சியின் சோசலிச மாற்றீடு பற்றிய விவாதம் தொடங்கிவிடுமோ என்ற உண்மையான அச்சத்தை காட்டியது.

பல மக்கள் தடையை புறக்கணித்து உலக சோசலிச வலைத் தளத்தின் துண்டுப்பிரசுரங்களின் உள்ளடக்கத்தைப் பற்றி சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்களுடன் ஆர்வம் நிறைந்த விவாதங்களில் ஈடுபட்டனர். இறுதியில் விழிப்பின் அமைப்பாளர்கள் ஒருவர் சோசலிச சமத்துவக் கட்சியின் குழுவை கூட்டத்தில் பேச அழைத்தார்.

கூட்டத்தில் தமிழ் அமைப்பு பேச்சாளர்கள் இலங்கை அரசாங்கம் உடனடியாக போர்நிறுத்தத்தை ஏற்க வேண்டும் என்றும் குடிமக்கள்-அகதிகள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்றும் முறையிட்டனர். பெரிய சக்திகள், குறிப்பாக முக்கிய பிராந்திய சக்தியாக இருக்கும் இந்தியா குறுக்கிட்டு இராஜபக்ச அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரினர்.

ஆங்கிலத்தில் பேசிய முக்கிய பேச்சாளர் தமிழ் அமைப்புக்கள் மனுக் கொடுத்தல், இந்திய, ஆஸ்திரேலிய அரசாங்கங்கள், அரசியல்வாதிகளிடம் செல்வாக்கு நாடுதல் ஆகியவை பற்றிய முயற்சிகளை விரிவாக விளக்கினார். கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் இம்முயற்சிகளில் சேரவேண்டும் என்றும் அடுத்த கூட்டாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் "அரசியல்வாதிகள் ஏதேனும் செய்யவேண்டும்" என்று கோர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர் Mike Head தன்னைப் பேச அழைத்ததற்கு பார்வையாளர்களுக்கு நன்றி செலுத்தி உரையை தொடங்கினார். இலங்கை அரசாங்கத்தால் சிறைப்படுத்தப்பட்டள்ள, கொல்லப்பட்டு, காயமுற்றுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தனது பரிவுணர்வையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினார்.

இராஜபக்ச அரசாங்கத்தின் போர்க் குற்றங்களை ஹெட் கண்டித்து, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ருட் மற்றும் இந்திய, ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் உட்பட போரை ஆதரிக்கும் பல அரசாங்கங்களையும் கண்டித்தார்.

தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர்கள் இராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் பற்றி பேச்சாளர் விளக்கினார். போரில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் மட்டும் அல்ல என்பதை வலியுறுத்திய அவர் இராணுவம் பெறும் எந்த வெற்றியும் உலகப் பொருளாதார நெருக்கடியால் எழுச்சி பெறும் சமூக அதிருப்திக்கு எதிராக முழு தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக அதே இராணுவ முறைகள் பயன்படுத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

வடக்கில் குடிமக்களின் இறப்பு எண்ணிக்கையை மூடிமறைக்கும் விதத்தில் இலங்கை அரசாங்கம் படையினரின் இறப்பு எண்ணிக்கையையும் மறைக்க முற்பட்டுள்ளது; இவர்கள் பொதுவாக சமூகத்தின் மிக வறிய அடுக்குகளில் இருந்து வருபவர்கள். குறைந்தது 3,000 பேர் அரசாங்கம் உத்தரவிட்ட தாக்குதலில் இறந்துவிட்டனர்; இது இலங்கை முழுவதும் உள்ள குடும்பங்கள் பலவற்றை பாதித்துள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியின் பேச்சாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத வேலைத்திட்டத்தை எதிர்த்தார்; இது தொழிலாள வர்க்கத்தை பிரிக்கத்தான் பயன்படும் என்றார். தமிழீழ விடுதலைப் புலிகள், மற்றும் சிங்கள வெறி கொண்ட மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆகியவற்றின் வெளிப்பாடு, முன்னாள் ட்ரொட்ஸ்கிச கட்சியான லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) 1964ம் ஆண்டு பண்டாரநாயக்கா கூட்டணி அரசாங்கத்தில் சேர்ந்த விதத்தில் நிகழ்த்திய காட்டிக் கொடுப்பினால் ஏற்பட்டது என்றும் விளக்கினார்.

1948ல் சுதந்திரம் கிடைத்த பின், லங்கா சம சமாஜக் கட்சி தமிழர்களுக்கு எதிரான அனைத்து விதமான உத்தியோகபூர்வமான இன ஒதுக்கலை எதிர்த்தது. ஆனால் 1960 களின் தொடக்கத்தில் கட்சி சிங்களத்திற்கு முன்னுரிமை என்ற பண்டாரநாயக்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) இன் அரங்கிற்கு சரணடைந்து, ஆளும் வர்க்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்தும் ஒரு சோசலிச முன்னோக்கிற்கான அடிப்படை போராட்டத்தையும் கைவிட்டது.

ஏகாதிபத்திய சக்திகள் தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் முயற்சியான தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிடும் முயற்சிக்கு ஆதரவு தருவதை பின்வாங்கசெய்ய ஏகாதிபத்திய சக்திகளை நம்பச்செய்ய வேண்டும் என்னும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னோக்கு பயன்படாதது என்பதையும் ஹெட் சுட்டிக்காட்டினார். அரசாங்கங்களை செல்வாக்கிற்கு உட்படுத்தும் நப்பாசைகளுக்கு பதிலாக, முற்போக்கான பாதை என்பது இலங்கை, தெற்கு ஆசியா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஒன்றுபடுத்த வேண்டும் என்றும், இது வர்க்க அடிப்படையில் தீவில் நடக்கும் பேரழிவுகளுக்கு பொறுப்பான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக என்று இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மக்கள் உலக சோசலிச வலைத் தளம் வழங்கும் அன்றாட செய்தித் தகவல், மற்றும் பகுப்பாய்வுகளை படிக்க வேண்டும் என்றும் இவை தமிழிலும் சிங்கள பதிப்பிலும் உள்ளன என்றும் பேச்சாளர் வலியுறுத்தித் தன் உரையை முடித்துக் கொண்டார்.

கூட்டத்திற்கு முன்னதாக உலக சோசலிச வலைத் தளத்தால் பேட்டி காணப்பட்டபோது, அனு பிரகாஷ் வன்னிப் பகுதியில் உள்ள நிலை "சாட்சி இல்லாத ஒரு போர் போல்" என்று கூறினார்; ஏனெனில் இலங்கை அரசாங்கம் சர்வதேச செய்தி ஊடகம் மற்றும் உதவி அமைப்புக்கள் அங்கு செல்லத் தடைவிதித்து விட்டது என்றார்.

"என்னுடைய கணவரின் நெருக்கமான உறவினர்கள் போர்ப்பகுதியில் உள்ளனர்; இரு குழந்தைகளும் உள்ளன. அவர்கள் தங்கள் அரசியல் கருத்துகளின் காரணமாக வெளியேற உடன்பட மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. அவர்கள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு கொடுக்கின்றனர். அரசாங்கம் வெளியே வரும் மக்கள் அனைவரும் விட்டோடிவருபவர்களா, மாற்று அரசியல் கருத்துக்களை உடையவர்களா என்று சோதிக்கிறது. அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது; "நீங்கள் எங்களுடன் உள்ளீர்கள்; அல்லது எங்களுக்கு விரோதிகள்." எனவே நீங்கள் அரசாங்கத்துடன் இல்லை என்றால் பயங்கரவாதி என முத்திரையிடப்படுவீர்கள் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின், குடிமக்கள் அனைவரையும் ஒன்றாகத்தான் பார்க்கின்றனர்."

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னோக்கான அனைத்தும் அடிப்படையில் இராஜபக்சவுக்கு ஆதரவைக் கொடுக்கும் மற்ற அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பது பற்றி கேட்கப்பட்டற்கு அவர் கூறினார்: "இது நல்ல வினா. போரில் இந்தியாவின் பங்கு பற்றி நாங்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். ...இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் என்று பெரிதும் நம்பியிருந்தோம். இப்பொழுதோ அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்குத்தான் ஆதரவு கொடுக்கின்றார்கள்.