World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The AIG bonuses furor: the class issues

அமெரிக்கன் இன்டர்நேஷனலன் போனஸ் பரபரப்பு: வர்க்க பிரச்சினைகள்

By Bill Van Auken
16 March 2009

Use this version to print | Send this link by email | Email the author

மற்றைய அமெரிக்க நிதிய நிறுவனத்தையும் விட பொது பிணை எடுப்பைப் பெற்று பின்னர் திவாலாகிவிட்ட காப்பீட்டு பெருநிறுவனமான அமெரிக்கன் இன்டர்நேஷனல் க்ருப் (AIG), அமெரிக்கா மற்றும் உலகப் பொருளாதாரத்தையும் பெரும் சரிவிற்கு உட்படுத்தி மற்றும் நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்படுத்திய செயற்பாடுகளை செய்த அதே நிர்வாகிகளுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை மேலதிக கொடுப்பனவாக கொடுத்துள்ளது.

இத்தகவல் வெளிவந்துள்ளது மக்களுடைய உண்மையான சீற்றத்தை தூண்டியுள்ளது; அதே நேரத்தில் 1930களின் பெருமந்த நிலைக்கு பின்னர் மிக ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கையில் ஒபாமா நிர்வாகம் தொடரும் பொருளாதாரக் கொள்கைகளின் உண்மையான வர்க்கத் தன்மையையும் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளபடி, AIG அதன் லண்டனை தளமாகக் கொண்ட துணை நிறுவனமான AIG Financial Products இன் நிர்வாகிகளுக்கு $450 மில்லியனை மேலதிக கொடுப்பனவாக கொடுக்கிறது; அந்த அமைப்புத்தான் 2008 ம் ஆண்டு நிறுவனத்தின் $99.3 பில்லியன் பாரிய இழப்பிற்கு முக்கிய பொறுப்பைக் கொண்டது ஆகும்.

இந்த மேலதிக கொடுப்பனவுகள், 2008ம் ஆண்டு கொடுக்கப்பட்ட "ஊக்க ஊதியமான" $121.5 மில்லியனை தவிர மேலதிகமாகக் கொடுக்கப்படுவது ஆகும்; ஊக்க ஊதியம் AIG ஊழியர்களில் 6,400 பேருக்குக் கொடுக்கப்படுகிறது. மற்றும் ஒரு $600 மில்லியன் "தக்கவைத்துக் கொள்ளுவதற்கான ஊதியம்" என்று மற்றும் ஒரு 4,000 பேருக்குக் கொடுக்கப்படுகிறது; மொத்தத்தில் இது $1 பில்லியனுக்கும் மேல் வரும்.

ஏழு AIG நிர்வாகிகள் $3 மில்லியன் அதற்கும் மேலான கொடுப்பனவுகளை பெறுவர் என்று நியூ யோர்க் டைம்ஸ் கூறியுள்ளது; வாஷிங்டன் போஸ்ட் $615 மில்லியன் 400 ஊழியர்களுக்குள் பிரித்துக் கொள்ளப்பட்டது என்று கூறியுள்ளது; சராசரியாக $412,500 ஒவ்வொருவருக்கும்; அதாவது ஒரு சராசரித் தொழிலாளியின் ஆண்டு மொத்த ஊதியத்தைப் போல் இது பத்து மடங்கு பணமாகும்.

AIG யின் நடைமுறை திவால்தன்மையில், இந்த மேலதிக கொடுப்பனவுகள் முற்றிலும் மக்கள் வரிப்பண நிதியில் இருந்து கொடுக்கப்படுபவை ஆகும்; மொத்தம் $180 பில்லியன் என்பது ஏற்கனவே நிறுவனத்திற்கு வாரிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப்பணம் ஒபாமா நிர்வாகத்தின் இரத்த சோகைபடித்த பொருளாதார ஊக்கப் பொதியில் உள்ள மொத்த விருப்புரிமை செலவினத்திற்கு சமமாகும்.

தங்கள் வேலைகள் வீடுகளை இழக்கும் நிலை மற்றும் ஊதியம் பெரும் குறைப்பிற்கு நெருக்கடியினால் குறைக்கப்பட இருக்கும் தன்மையை அன்றாட அச்சுறுத்தலாக எதிர்கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான மக்களுடைய ஆழ்ந்த சீற்றத்தைத்தவிர, இந்த மேலதிக கொடுப்பனவுகள் ஒபாமா நிர்வாகத்திடம் இருந்து பயனற்ற முறையில் இசைவு கொடுக்காத தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளது.

நிதியமைச்சர் டிமோதி கீத்னர் அரசாங்கம் இருத்திய AIG தலைவரான எட்வர்ட் லிடியை அழைத்து மேலதிக கொடுப்பனவுகள் "ஏற்கத்தக்கவை" அல்ல எனக் கூறியதாகவும், அவை குறைந்தபட்சம் பெரிதும் குறைக்கப்பட வேண்டும் என்று கோரியதாகவும் தெரிகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் $85 பில்லியன் பிணை எடுப்பில் அரசாங்கம் நிறுவனத்தின் மொத்ததில் 80க்கும் மேற்பட்ட பங்குளை எடுத்திருக்கையில், கீத்னரின் வேண்டுகோள் வலுவுடையது என்றுதான் ஒருவர் நினைக்ககூடும்.

ஆனால் மீண்டும் சிந்தியுங்கள்.

பிணை எடுப்பில் பெரும்பகுதியை AIG ஊடாக காப்புறுதி ஒப்பந்தங்கள் மூலம் "வெள்ளைப் பணமாக்கப்பட்டு" வாங்கிக் கொண்டதாக நம்பப்படும் நிறுவனமான கோல்ட்மன் சாஷ்ஸின் முன்னாள் குழு உறுப்பினரான லிடி அசாதாரண முறையில் அரசாங்கத்திற்கு "உங்களைப் பற்றி எங்களுக்கு கவலை கிடையாது" என்று ஒரு கடிதம் எழுதினார்.

"வெளிப்படையாக கூறவேண்டும் என்றால் AIG யின் கைகள் கட்டப்பட்டுள்ளன" என்று அவர் எழுதினார்; மேலதிக கொடுப்பனவுகளை "கட்டுப்படுத்தும் கட்டாயங்கள்", வேலை கொடுக்கும் ஒப்பந்தத்திலேயே நிர்வாகிகள் ஊதியத்தில் ஒரு பகுதி; அவற்றில் குறுக்கிடுவது சட்ட நடவடிக்கைளை தூண்டிவிடக்கூடும். மேலும் இவை கொடுக்கப்படுவது சரியே; இப்பணத்தைப் பெறுபவர்கள்தான் பாரிய இழப்புக்களுக்குக் காரணம் என்றாலும் மேலதிக கொடுப்பனவுகளை பெறுவது முறையே. ஒரு பில்லியன் கூடுதல் ஊதியம் அளிக்காவிட்டால், "AIG வணிகங்களையே நடத்திச் செல்லக்கூடிய மிகச் சிறந்த திறைமையான நிர்வாகிகளை" AIG இழக்கும் ஆபத்திற்கு உட்பட்டுவிடும்." "தங்கள் ஊதியம் தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக அமெரிக்கக் கருவூலத்தால் நிர்ணயிக்கப்படும் என்றால் நிர்வாகிகள் விட்டுச்சென்றுவிடுவர்."

"மிகச் சிறந்தவர்களும் திறமையானவர்களும்" AIG நிதியப் பிரிவு கட்டுப்பாடற்ற கடன் உத்தரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டது; அந்த ஊழல் பெர்னி மடாப் நிறுவன ஊழல் போன்றதுதான்; இன்னும் அதிக அளவில் பேரழிவு கொடுத்தது.

வெளிப்படையான வினா இதுதான்: இந்த "மிகச் சிறந்தந திறமையான" நிர்வாகிகள் நூற்றுக்கணக்கான மில்லியன்களை மேலதிக கொடுப்பனவுகளாகப் பெறாவிடில் எங்கு செல்வர்? இவ்வித நிதிய ஒட்டுண்ணித்தனத்திற்கான சந்தை சரிந்துவிட்டது; அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வும் கீழே இழுத்துத் தள்ளப்பட்டுவிட்டன. மேலதிக கொடுப்பனவுகளை பெறுவதற்குப் பதிலாக AIG மற்றும் அதன் பங்காளி நிறுவனங்களில் இந்த நிதிய திரித்தலுக்கு பொறுப்பானவர்கள் குற்ற நடவடிக்கை விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இறுதியில் ஒபாமா நிர்வாகம் லிடியின் நிலைமையை ஏற்றது; மேலதிக கொடுப்பனவுகள் கொடுக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தது. ஞாயிறன்று வெள்ளை மாளிகளை தேசியப் பொருளாதாரக் குழுவின் தலைவர் லோரன் சம்மர்ஸ் ABC யின் This Week தொலைக்காட்சி நிகழ்வில் பின்வருமாறு கூறினார்.

"பல கொடூரமான நிகழ்வுகள் கடந்த 18 மாதங்களில் நடந்துவிட்டன. ஆனால் AIGயில் நடைபெற்றது பெரும் சீற்றத்தைத் தரக்கூடியது ஆகும்" என்று சம்மர்ஸ் அறிவித்தார்.

இப்படிப்பட்ட சீற்றம் என்பது ஒருபுறம் இருக்க, சம்மர்ஸ் அரசாங்கம் 80 சதவிகிதம் உரிமை கொண்டிருந்தாலும், மேலதிக கொடுப்பனவுகள் பற்றி ஏதும் செய்ய முடியாது என்று வலியுறுத்தியுள்ளார். "நாம் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு நாடு. இவை ஒப்பந்த விவகாரங்கள். ஒப்பந்தங்களை அரசாங்கம் தள்ளிவைக்க முடியாது." என்று அவர் அறிவித்தார்.

அரசாங்கம் ஒப்பந்தங்களை தள்ளி வைக்க முடியாதா? அதை அமெரிக்க கார்த் தொழிலாளர்களிடம் கூறப் பாருங்கள்; அவர்கள் மேலதிக கொடுப்பனவுகள் மட்டும் இல்லாமல், ஊதியம், விடுமுறைகள், ஓய்வூதியங்கள், சுகாதார நலன்கள் மற்றும் பணி நிலைமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். இவை அனைத்தும் ஒப்பந்தத்தின் பகுதிகள்தாம். அவை அனைத்தும் வெள்ளை மாளிகை அரசாங்கம் நிறுவனம் திவாலைத் தடுக்க நிதி கொடுத்தபோது சுமத்திய நிபந்தனையை அடுத்து விளைந்தவை ஆகும்.

வாஷிங்டனில் இருந்து எந்தவித அற உணர்வுடன் கூடிய அறிக்கையும் "சட்டத்திற்கு உட்பட்ட நாடு" என்றும் ஒப்பந்தத்தின் புனிதத்தில் இருந்து எழவில்லை; மாறாக அரசாங்கம் 1930களில் இருந்து நிலைமைக்கு கார்த் தொழிலாளர்களை தள்ளிவிடும் நோக்கத்தைக் கொண்ட கடுமையான தாக்குதலுக்கு ஆதரவு கொடுத்தது. இத்தொழிலாளர்கள் அனைவரும் கோரிய நிலையில் தாக்குதலுக்கு உட்பட்டு, கார்த் தொழிலாளர்கள் சங்கம் உடன்பட்ட நிலையில் தங்கள் ஒப்பந்தத்தை கிழித்து விரைவிலும் அதைச் செய்தனர்.

இதுதான் ஒபாமா நிர்வாகத்தின் பொருளாதாரக் கொள்கையின் உண்மையான பொருளுரை ஆகும். புனிதமானது சட்டமோ ஒப்பந்தங்களோ அல்ல; மாறாக செல்வம், அதிகாரம் மற்றும் அமெரிக்க சமூகத்தின் உயர்மட்ட 1 சதவிகிதத்தின் சலுகைகள் இழக்கப்பட மாட்டாது மற்றும் பொருளாதார நெருக்கடி எத்தகைய ஆழ்ந்த தன்மை பெற்றிருந்தாலும் எவரும் அதில் கைவக்க முடியாது என்பதுதான்.

சம்மர்ஸ் இன்னும் மற்றவர்கள் நிர்வாகத்தின்மீது கொண்டுள்ள உண்மையான அக்கறை AGU மேலதிககொடுப்பனவுகள் மிக ஆத்திரமூட்டும் தன்மை கொண்டதால், "பகிரப்படும் தியாகங்கள்" என்ற பெயரில் தொழிலாளர்களின் முதுகில் நெருக்கடியின் முழுச் சுமையையும் வைத்துவிடும் நோக்கம் கொண்ட கொள்கைகளை செயல்படுத்துவதற்கான முயற்சிகளுடன் தலையிட வேண்டும் என்பதுதான்.

இதுதான் மிகத் தெளிவான முறையில் ஒபாமாவின் பொருளாதார ஆலோசகர் ஆஸ்டன் கூல்ஸ்பீயினால் கூறப்பட்டது; AIG இன் நடவடிக்கை "மில்லியன் கணக்கான மக்களுடைய எரிச்சலை தூண்டும்" என்று அவர் எச்சரித்தார். அவர் மேலும் கூறியது: "நீங்கள் பின்விளைவுகளை பற்றிக் கவலைப்படுங்கள்."

இந்த அபிவிருத்திதான் துல்லியமாக, நிர்வாகமும் ஆளும் உயருடுக்கும் அஞ்சுவது ஆகும்; மக்களின் பெரும்பானவர்களின் நலனுக்கு ஏற்ற வகையில் ஆழ்ந்த பொருளாதார பேரழிவைத் தீர்ப்பதற்கு ஒரே வகை கையாளப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் பல மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் "எரிச்சல்", "பின்விளைவு" ஆகியவை திரட்டப்பட்டு தற்பொழுதைய நெருக்கடிக்கு பொறுப்பான நிதிய உயரடுக்குடன் கணக்கு தீர்க்கப்பட வேண்டும் மற்றும் அதன் பொருளாதார, அரசியல் குரல்வளைப்பிடி சமூகத்தின்மீது இருப்பது முறிக்கப்பட வேண்டும்.

இதன் பொருள் ஒரு புதிய பரந்த சோசலிச இயக்கம் பெருநிறுவனங்கள் வங்கிகள் ஆகியவை தேசியமயமாக்கப்படுவதற்காகப் போராடுவதற்குக் கட்டமைக்கப்பட வேண்டும்; அந்நிறுவனங்கள் பொது நிறுவனங்களாக மாற்றப்பட்டு, தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அந்தவிதத்தில்தான் பொருளாதார வாழ்வு மறுசீரமைக்கப்படும்; அதுதான் வெறும் ஆளும் உயரடுக்கிற்கு இலாபத்தைத் தோற்றுவிக்கும் பொருளாதார அமைப்பாக இராது மில்லியன் கணக்கான மக்களுடைய வேலைகள், வீடுகள், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றை பாதுகாக்கும்.