World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : அயர்லாந்து

Ireland: over 100,000 march against government in Dublin

அயர்லாந்து: டப்ளினில் அரசாங்கத்திற்கு எதிராக 100,000 இற்கும் மேலானவர்கள் அணிதிரண்டனர்

By Chris Marsden
23 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

Dublin march

டப்ளின் பேரணி: டப்ளின் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியினர்

உழைக்கும் மக்கள் மீதான அரசாங்க தாக்குதல்களுக்கு எதிரான ஒரு மாபெரும் போராட்டத்தில், சனியன்று டப்ளின் ஊடாக சுமார் 120,000 பேர் பேரணி சென்றனர்.

Waterford Crystal demonstrators

Parnell சதுக்கம் மற்றும் O'Connell தெருவிற்கு இடையில் பேரணியின் எல்லா வழிகளும் ஐரிஷ் தொழிலாளர்களின் அனைத்து பிரிவுகளின் ஆர்பாட்டக்காரர்களால் நிரம்பி இருந்தது. இந்த ஆர்பாட்டத்தின் மைய பிரச்சனை பொதுதுறை தொழிலாளர்கள் மீதான ஓய்வூதியம் மீதான வரியாக இருந்தது. ஆனால் ஆசிரியர்கள், உள்ளூர் அரசாங்க மற்றும் சேவை தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் பொறியியல் வல்லுனர்கள் போன்ற தனியார் துறை தொழிலாளர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர். ஒரு பாண்டு வாத்தியத்துடன், தீயணைப்பாளர்கள் போன்ற சீருடையில் இருந்த பெரும்பான்மையினரால் இந்த பேரணி தலைமையேற்று நடத்தப்பட்டது. Waterford Crystal ஆக்கிரமிப்பில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கும், டப்ளின் விமானநிலையத்தில் ஸ்விஷ் நாட்டு ஆலை மூடல் அறிவிப்பால் வேலையிழப்பைச் சந்திக்கும் 1,100 மூத்த தொழில்நுட்ப விமான பராமரிப்பு தொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் இந்த பேரணியில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

Waterford Crystal ஆர்பாட்டக்காரர்கள்: ஆர்பாட்டத்தின் இறுதியில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த Waterford தொழிலாளர்கள்

இந்த ஆர்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பங்கெடுத்துவதை கருத்தில் கொண்டு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டது. ஐரிஷ் குடியரசு வெறும் நான்கு மில்லியன் மக்களை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில் இதற்கிணையான ஓர் ஆர்பாட்டத்தில் இன்னும் பல மில்லியன் மக்கள் பெருந்திரளாக சேர்த்திருக்க கூடும்.

தொழிலாளர்கள் கோபத்தின் மூலக்காரணம், தற்போது அயர்லாந்தைப் பிடித்திருக்கும் பெரிய பொருளாதார நெருக்கடியிலும், பசுமை கட்சி (Taoiseach Brian Cowen of Fianna Fail) மற்றும் முற்போக்கு ஜனநாயகவாதிகளின் கூட்டணி அரசாங்கத்தின் முயற்சிகளிலும் வேரூன்றியுள்ளது. பகட்டான "Celtic Tiger" பொருளாதாரத்தால் அயர்லாந்து அதன் முந்தைய மதிப்பை இழந்து விட்டிருக்கிறது. வீட்டுத்துறை மற்றும் ஊக நிதி எழுச்சி ஆகியவற்றின் பொறிவு மற்றும் தொடர்ந்து நடந்து வரும் உறவினர்களுக்கிடையிலான பொருளாதார உறவு(nepotism) பற்றிய குற்றச்சாட்டுக்கள் மற்றும் பெரியளவிலான மோசடிகளுக்கு இடையில் வங்கிகளுக்கு பிணைப்பெடுப்பு அளிப்பதற்கான அரசாங்கத்தின் சமீபத்திய முடிவுக்கு பின்னர், திவாலாகி போன ஐஸ்லாந்தைத் தொடர்ந்து அதை போலவே இருக்கும் பொருளாதாரமாக அயர்லாந்துப்பொருளாதாரம் கருதப்படுகிறது.

இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீத நிதி பற்றாக்குறையுடன், 2010க்குள் அயர்லாந்தின் பொருளாதாரம் 10 சதவீதம் குறைய கூடும் என்று Cowen தெரிவித்திருந்தது. இது நிதி விமர்சகர்கள் எச்சரிக்கைகளை வெளியிடுவதற்கு இட்டு சென்றது. பெப்ரவரி 15ல் டைம்ஸ் இதழில் சைமன் ஜோன்சன் எழுதும் போது, "என்னுடைய இன்றைய புள்ளி மிகவும் சாதாரணமானது: ஒரு முக்கிய எச்சரிக்கை அறிகுறி ஆரஞ்ச் நிறத்திலிருந்து சிவப்பு நிறத்திற்கு மாறியிருக்கிறது." என்று குறிப்பிட்டார்.

ஐரிஷ் டைம்ஸில் பொருளாதார நிபுணர் மோர்கன் கெல்லி எழுதுகையில், அரசாங்கம் ஆங்கிலோ ஐரிஷை தேசியமயமாக்கியது, கிமிஙி மற்றும் அயர்லாந்து வங்கிகள் மீண்டும் முதலீடு செய்யப்பட்டன. அவற்றின் சொத்துக்களை விரிவாக்க முடியுமா என்ற முழு விபரமும் கூட இல்லாமல் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்று குறிப்பிட்டார்.

"நிதியுதவியைத் தொடர்வதற்கான அரசின் திறன் இறுதியாக இவற்றின் கடுமையான கடன் அளவுகளைச் சார்ந்துள்ளது. அவை 1020 பில்லியனாக இருந்தால், நம்மால் தப்பிக்க முடியும். ஆனால் அவை 50-60 பில்லியனாக இருந்தால், நாம் மூழ்கி விடுவோம்." என்று அவர் எச்சரித்தார்.

உழைக்கும் மக்கள் மீதான விளைவுகள் குறித்து அவர் கூறுகையில், "பொதுத்துறை சம்பளங்களிலும், சமூக நல சலுகைகளிலும் நான்கில் ஒரு பங்கில் இருந்து மூன்றில் ஒரு பங்கு வரையிலான வெட்டுகளை நாம் எதிர்பார்க்கலாம். மேலும் இரண்டு ஆண்டுகளில் தேசிய வருமானத்தில் பற்றாக்குறையை சுமார் 5 சதவீதத்திற்கு மீண்டும் கொண்டு வர கடுமையான வரிகள் உயர்த்தப்படலாம்," என்றார்.

நிலைமை ஏற்கனவே மங்கலாக உள்ளது. 2008ல் முதன்மையாக கட்டிடத்துறையின் பொறிவின் காரணமாக வேலைவாய்ப்பின்மை 8.3 சதவீதமாக இரட்டிப்பாகியது. மீத பொருளாதாரமும் தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது 500,000ஆக திரியக்கூடும். இது அரசாங்கத்தை 5 பில்லியன் வெட்டுக்களை உருவாக்கும் நிலைமைக்கு தள்ளி இருப்பதுடன், 1.4 பில்லியனுக்கு சமமான ஓய்வூதிய நிதி போன்ற சேமிப்பு முறைமைகளிலும் வெட்டுக்களை உருவாக்கும். ஓய்வூதிய பிடிப்புகள் வெறும் 15,000 சம்பாதிப்பவர்களுக்கு மூன்று சதவீதம் உயரக்கூடும். அதே போல, 35,000 சம்பாதிப்பவர்களுக்கு 6.4 சதவீதமும், 300,000 சம்பாதிக்கும் சிலருக்கு 9.6 சதவீதமும் உயரக்கூடும். இந்த சுமை, பொதுச்சேவை தொழிலாளர்களின் வருமானத்தில் 22 சதவீதம் முதல் 27 சதவீதம் வரையிலான மொத்த பங்களிப்பை கொண்டு வரக்கூடும் என்று அயர்லாந்து ஆசிரியர்கள் சங்கம் (TUI) தெரிவித்தது.

மேலும் அடுத்த ஆண்டு ஒரு சம்பள குறைப்பும், பல்வேறு பிற வெட்டுக்களும் கூட இருக்கலாம். அதற்கு மேலும் கூட தேவைப்படும். ஐரோப்பிய ஆணையத்தின் தகவல்படி, அயர்லாந்தின் இந்த ஆண்டு மொத்த வடிவிலான பற்றாக்குறை சுமார் 14 பில்லியனாகும். இதில் 9 பில்லியன் பற்றாக்குறை தொழிலாளர் வர்க்கத்திடம் இருந்து பெறப்படவுள்ளது. ஆகவே தான் அதன் முறைமைகள் வலியுள்ளதாக இருந்தாலும் கூட அது "தேவையாகவும், நியாயமாகவும்" இருப்பதாக அறிவித்ததன் மூலம் அரசாங்கம் இந்த எதிர்ப்பிற்கு பிரதிபலிப்பு காட்டி இருந்தது. எழுபது ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் மிக ஆழ்ந்த சர்வதேச பொருளாதார நெருக்கடி என்பதை தான் இதன் மூலம் அரசாங்கம் குறிப்பிட்டிருக்கிறது.

சனியன்று நடந்த போராட்டம், "கோபத்தில் மூழ்கிய ஓர் ஆறு" என்று டைம்ஸ் பத்திரிகையால் குறிப்பிடப்பட்டது. பத்தாயிரக்கணக்கானவர்கள் பங்கெடுத்து கொண்ட அந்த போராட்டம், நிச்சயமாக அவ்வாறு தான் இருந்தது. ஆனால் அந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த தொழிற்சங்கங்களுக்கான ஐரிஷ் காங்கிரசும், அதன் நோக்கங்களும் மற்றும் கோரிக்கைகளும் அந்த சங்கங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக காட்டும் உழைக்கும் மக்களுக்கு நேரடியாக எதிரானவையாகும்.

அரசாங்கத்திற்கு எதிராக நிற்பதாக காட்டிக்கொள்வதே தொழிற்சங்கங்களின் முதன்மை நோக்கமாக தெரிகிறது. அவ்வாறு செய்யவில்லையானால், தொழிலாளர்கள் மத்தியில் கட்டுப்பாட்டை இழந்த பரந்த எதிர்ப்பு ஏற்படக்கூடிய உண்மையான பரந்த ஆபத்து அங்கு இருக்கிறது. Waterford ஆக்கிரமிப்பு இந்த ஆபத்தின் ஒரு வெளிப்பாடாக உள்ளது. ஏற்கனவே சங்கங்கள் வியாழன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இது சிவில் மற்றும் பொதுத்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் 13,000 குறைந்த சம்பள உறுப்பினர்களைப் பாதித்தது. பொதுச்சேவை செயல்பாட்டு சங்கத்தின் 10,000 உறுப்பினர்கள், 4,000 கைத்தொழில் தொழிலாளர்கள், அத்துடன் சுகாதார மற்றும் கல்வித்துறை தொழிலாளர்களால் தொழில்துறை நடவடிக்கைக்காக வாக்கெடுப்புகள் நடத்தப்படுகின்றன.

இராணுவம் மற்றும் Garda Representative Association என்ற வடிவில் போலீஸ் ஆகிய இரண்டும் ஆர்பாட்டங்களில் நிறுத்தப்பட்டிருந்ததால், இது அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பின் அளவையும், ஆழத்தையும் குறிப்பிட்டு காட்டுகிறது.

படையினரின் பிரதிநிதித்துவ அமைப்பின் தேசிய பிரிவான PDforra இன் உறுப்பினர்களும் இந்த போராட்டத்தில் இருந்தனர். PDforra இன் பொது செயலாளர் ஜெர்ரி ரூனே ஐரிஷ் டைம்ஸிடம் கூறுகையில், பாதுகாப்பு படைகளின் சாதாரண உறுப்பினர்கள் தங்களுக்கு மிக குறைவான ஓய்வூதியம் அளிக்கப்படுவதாலும், அதே சமயம் மோசமான நிதி நிலைமையைத் தீர்க்க உதவ எந்த பங்களிப்பும் அளிக்காதவர்களுக்கு மிக உயர்ந்தளவில் ஓய்வூதியம் அளிக்கப்படுவதாலும் அவர்கள் மிகவும் கோபமாக இருக்கிறார்கள்," என்றார்.

அரசாங்கத்திற்கான ஒரு நெருக்கடியை முன்வைப்பதை வேறொன்றையும் காட்டவில்லை என ஐரிஷ் டைம்ஸ் நிகழ்வுகளை விவரித்திருந்தது. அது குறிப்பிட்டதாவது, "இந்த மாத தொடக்கத்தில் பொதுத்துறை சேவகர்களின் போராட்டங்களை உடைக்க சட்டம் பயன்படுத்தப்படாது என்பதற்கான உறுதிமொழிகளை வலியுறுத்துவதற்கான PDforra இன் முடிவு, மூத்த அலுவலர்கள் மத்தியில் கணிசமான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசாங்கம் கேட்கும்பட்சத்தில் பாதுகாப்பு படைகள் அதன் கடமையைச் செய்யும் என்று இராணுவ தலைமை அதிகாரி டெர்மொட் ஈர்லே ஏற்கனவே PDforra பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தி இருக்கிறார். எவ்வாறிருப்பினும், இராணுவ தளபதி ஈர்லேக்கு கீழ் உள்ள மூத்த அதிகாரிகள், சட்டத்தின் கீழ் தங்களின் பொறுப்புணர்வு குறித்து அவர்களுக்கு கீழுள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடம் அதேபோன்று பேசி உள்ளார்கள் என்பது தற்போது புரிகிறது.

சமூக அமைதியின்மைக்கு போலீஸை தொடர செய்வதும், அயர்லாந்தை சூழ்ந்து வரும் பொருளாதார சுனாமிக்கு தேவையான தாக்குதல்கள் நடத்துவதையும் அளிப்பதே ICTUன் பொறுப்பாக உள்ளது. பல்வேறு முத்தரப்பு ஏற்பாடுகளில் ICTU, வெற்றி பெரும் அரசாங்கங்களுடனும், தொழில் வழங்குனர்களுடனும் கை கோர்த்து கொண்டுள்ளது. "சமூக கூட்டாளிகளில்" ஒன்றாக இருப்பதற்கான அதன் கோரிக்கை Fianna Failன் இணங்காமையால் நாசமாக்கப்பட்டுள்ளதாக தற்போது அது குற்றஞ்சாட்டுகிறது. இந்த பொருளாதார நெருக்கடியின் ஆரம்பம் தொழிற்சங்க தலைவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு அதிகமான தாக்கதல்களை நடாத்த கேட்கப்பட்டுள்ளார்கள் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

ஜனவரி 28ல் வெளியான ICTUஇன் சொந்த கருத்துப்படி, "காங்கிரஸ், அரசாங்கம் மற்றும் தொழில் வழங்குனர்கள் ஓர் உடன்பாட்டு கட்டமைப்பு பற்றி சமரசம் செய்துகொண்டனர். அது தேசிய மீட்பு திட்டத்தில் விரிவான பேச்சுவார்த்தைக்கான ஓர் அடித்தளத்தை அமைத்து அளிக்கக்கூடியதாகும்." ஆனால், "செல்வந்தர்களிடம் இருந்து பங்களிப்பைக் கேட்காமல் பொது நிதிகளின் மீதான ஒரு குறுகிய மனப்பான்மையால், அரசாங்கம் இந்த உடன்படிக்கைக்கு கட்டுப்பட்டு செல்ல தவறிவிட்டது."

உடன்பாடின்மை பற்றி ஓர் இணைய அறிக்கையில், சிவில் மற்றும் பொது சேவைகள் சங்க செயல் உறுப்பினர் டெர்ரி கெல்லீஹர் குறிப்பிடுகையில், ICTU பிரதிநிதித்துவத்தின் ஒரு பகுதியாக 10% சம்பள வெட்டு பரிந்துரைக்கப்பட்ட போது, ஓய்வூதிய வரிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்த CPSU பொது செயலாளரால் (பிளேயர் ஹோரன்) முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார். SIPTUன் Jack O'Connor மற்றும் பிறரால் உடன்பாட்டு பற்றி பிரச்சனைப்பட்டதால், அதில் ஈடுபட்டுள்ள சில முக்கிய விடயங்கள் வெளிவந்தன. .

தேசிய மீட்பு நடவடிக்கைகளுக்காக 10 அம்ச திட்டம் ஒன்றை ICTU வெளியிட்டுள்ளது. "சிறந்த மற்றும் அருமையான வழிகளும் உள்ளன" என்று குறிப்பிடும் முனைவுகள், உயர்ந்த சம்பளதாரர்களுக்கு 48 சதவீத வரிவிகிதம் மற்றும் இரண்டாம் தர குடும்பங்கள் மீது சுமை போன்றவற்றின் மூலம் "பணக்காரர்கள் வலியைப் பகிர்ந்து கொள்கிறார்கள்" போன்று காட்டப்பட்டது. சனிக்கிழமை போராட்டம் "தொடர் நடவடிக்கைக்கான முதல் படியாக இருக்கும்" என்றும் அவர்கள் அறிவித்திருந்தார்கள்.

போராட்டங்களை ஒடுக்கும் மற்றும் அரசாங்கத்துடனும் தொழில் வழங்குனர்களுடனும் கூடி சதி செய்யும் ICTU மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற சங்கங்களின் உண்மையான வரலாற்றை அளவிடும் போது, இதுபோன்ற கடுமையான அறிக்கைகள் மிக சாதாரணமானவையே.

O'Connell தெருவின் முடிவில் பேரணியின் முன் உரையாற்றும் போது, ICTU தலைவர் Patricia McKeown மற்றும் பொது செயலாளர் David Begg இருவரும், அயர்லாந்து முகங்கொடுக்கும் நெருக்கடியின் ஆழம் குறித்த அவர்களின் புரிதலில் தெளிவாக இருந்தார்கள். பொருளாதார செழுமையுடன் கடந்த 30 ஆண்டுகளாக நாம் அறிந்திருந்த உலகம், லெஹ்மன் பிரதர்ஸ் திவாலானதுடன் போய்விட்டது என்று David Begg தெரிவித்தார். ஒட்டுமொத்த அமைப்பும் சரிந்துவிட்டது, அவர் தொடர்ந்தார். ஆனால் அவரும், McKeownம், இது "சூதாட்ட முதலாளித்துவத்திற்கு"("Casino Capitalism")மட்டும் பொருந்தும், தொலைநோக்கு பார்வையும், சமூக திட்ட நோக்கமும் தான் தேவையாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.

McKeown தெரிவிக்கையில், தொழிலாளர்கள் அவர்கள் வசமுள்ள சக்தியை வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. தெருவிலும், தொழில் நடவடிக்கைகளிலும், ஆனால் அனைத்திற்கும் மேலாக Fianna Failக்கு வாக்களிக்க மறுப்பதன் மூலம் வாக்குபெட்டியில் தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டிய தேவை உள்ளது என்றார். கோவன் அரசாங்கத்துடன் தொடரும் எந்த பேச்சுவார்த்தையிலும் ICTU அதன் இடத்தைத் தக்க வைக்கவே இந்த அச்சுறுத்தலை அது வெளியிடுகிறது. ஆனால் இந்த நிலை தொடர சாத்தியமில்லை என்பதையே நிலைமை எடுத்துக்காட்டுகிறது. அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்தால், மீண்டும் பின்னால் திரும்பும் நிலைதான் முக்கிய எதிர்கட்சிகளுடன் செய்து கொள்ளப்பட்டிருக்கும் நடைமுறை உடன்படிக்கையாகும். சனியன்று நடந்த போராட்டத்தில் கணிசமான பிரதிநிதிகளைக் கொண்டிருந்த தொழிலாளர் கட்சி மற்றும் Sinn Fein போன்ற சாதாரண இடதுகளும் இதில் உள்ளடங்கும். இவற்றுடன் 2007 வரை தொழிலாளர் கட்சியுடன் ஆளும் கூட்டணியில் இருந்த பெருநிறுவன முக்கிய கட்சியான Fine Gaelம் இதில் உள்ளடங்கும். "ஒரு புதிய அதிகாரத்துடன் இந்த வெற்றிடத்தில் இருந்து நாட்டை ஒரு புதிய திசையில் அழைத்துச் செல்ல நான் தயாராக இருக்கிறேன்," என்று அறிவித்ததன் மூலம் Fine Gael தலைவர் Enda Kenny முன்னதாகவே ஒரு பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதையே Sinn Feinம் எதிரொலித்துள்ளது.

"நீங்கள் என்னை பிடிக்கமுடியாது, நான் சங்கத்தின் ஒரு பகுதியாவேன்", "மக்களுக்கு அதிகாரம்" மற்றும் "அந்த காலங்களுக்காக, அவர்கள் மாறுகிறார்கள்" போன்ற பாடல்கள் ஒலிபெருக்கிகளில் முழக்கமிட்டு கொண்டிருந்த போதிலும் கூட, 1970களில் இருந்தது போன்று, போராட்டத்தின் முடிவில் அவர்கள் வந்த போது பெரும்பாலானவர்கள் சிதைந்து சென்றதானது தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்களிடையே இருந்த அதிருப்தியின் வெளிப்பாடாகவே இருந்தது. தொழிற்சங்க அதிகாரவர்க்கம் அவர்களுக்குள்ளும், ஒரு நாள் தேசிய எதிர்ப்பு போராட்டத்தை தவிர வேறெதையும் வலியுறுத்ததாத பல்வேறு "இடது" குழுக்களுக்குள்ளும் பேசி கொண்டே விலகி சென்றது.