World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

IMF director warns of war

சர்வதேச நாணய நிதிய இயக்குனர் போர் பற்றி எச்சரிக்கிறார்

By Joe Kishore
25 March 2009

Use this version to print | Send this link by email | Email the author

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனரான டொமினிக் ஸ்ட்ரவுஸ் கான் திங்களன்று உலகப் பொருளாதார நிலைமை "மிக மோசம்" என்றும் இது சமூக எழுச்சிகள் மற்ற் போருக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் எச்சரித்தார். நிதிய மற்றும் அரசியல் ஆளும்வர்க்கத்தின் முக்கிய சர்வதேச பிரமுகர்களிடம் இருந்து வந்துள்ள கவலைதரும் அறிக்கைகளில் இந்த அறிக்கை மிகச் சமீபத்தியது ஆகும்.

சர்வதேச நாணைய நிதியம் இந்த ஆண்டு உலப் பொருளாதாரத்தில் 1 சதவிகித சரிவு வரும் என்று கணித்துள்ளது; "50 ஆண்டுகளில் இது உலகப் பொருளாதாரத்தில் முதல் பின்னடைவு ஆகும்" என்று ஸ்ட்ரவுஸ் கான் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதிய தலைவர் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) கூட்டம் ஒன்று ஸ்விட்சர்லாந்து ஜெனிவாவில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

பொருளாதார நெருக்கடி, "பல நாடுகளிலும் வேலையின்மையை மிகமோசமான அளவில் உண்டாக்கும். இது சமூக அமைதியின்மையின் அடித்தளத்தில் இருந்து, சில சந்தர்ப்பங்களில் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகி, சில இடங்களில் இது போரில்கூட முடியக்கூடும்" என்று ஸ்ட்ரவுஸ் கான் கூறினார்.

எந்த நாடுகளையும் பற்றிக் மேற்கோளிட்டு குறிப்பிடாமல், ஸ்ட்ரவுஸ் கான் உலகின் சில பகுதிகளில் "நிதிய வீழ்ச்சி பற்றிய ஆபத்து ஏற்கனவே வந்துவிட்டது" என்று எச்சரித்தார்.

சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கான பாதிப்பு, பொருளாதாரச் சரிவினால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் இன்னமும் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளன. ஜனவரி மாதம் ILO கிட்டத்தட்ட 50 மில்லியன் வேலைகள் உலகம் முழுவதும் 2009ல் இழக்கப்படக்கூடும் என்று கணித்திருந்தது. இது குறைமதிப்பாக இருக்கும் எனத் தோன்றுகிறது; ஏனெனில் பொருளாதார நெருக்கடி கடந்த சில மாதங்களில் மிகத் தீவிரமாக அதிகமாகியுள்ளது.

பொருளாதார நிலைமை சரிவடைகளில் ஆளும் உயரடுக்கின் கொள்கைகளுக்கு எதிரான மக்கள் திரட்டின் எதிர்ப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்பது ஸ்ட்ரவுஸ் கானின் நிலைப்பாடுகளில் ஒரு கவலை ஆகும். முதலாளித்துவ நாடுகள், நெருக்கடி "வேலையின்மையைக் கொண்ட வறண்ட பகுதிகளாக" ஆவதிலிருந்து தடுக்கும் வகையில் இருக்கும் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார். முதலாளித்துவ அமைப்புமுறையின் முக்கிய அமைப்பாளர்கள், பல தசாப்தங்களாக அவர்கள் சமூக எழுச்சிகள் தரக்கூடிய ஒரு பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதை நன்கு அறிந்துள்ளனர்.

ஸ்ட்ரவுஸ் கான் போர் ஆபத்து என்றால் தான் எதைக் கருதுகிறார் என்பதைக் குறிப்பிடவில்லை என்றாலும், அவருடைய கருத்துக்கள் லண்டனில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் G20 உச்சிமாட்டில் முக்கிய பொருளாதாரங்களின் கூட்டம் வருவதற்கு முன் முக்கிய சக்திகளுக்கு இடையே பொருளாதாரக் கொள்கை பற்றி கருத்து வேறுபாடுகள் வெளிப்பட்டுள்ளதையொட்டி வெளிவந்துள்ளன.

செவ்வாயன்று, ஜேர்மனிய தலைவரும் முன்னாள் சர்வதேச நாணய நிதிய தலைவருமான ஹோர்ஸ்ட் கோஹ்லரும் ஸ்ட்ரவுஸ் கானின் சில கவலைகளை எதிரொலித்த வகையில் பேசி, G20 உச்சிமாநாட்டில் பங்கு பெறும் நாடுகள் உலக நிதிய ஒழுங்கை மறுசீரமைக்க ஒரு பொதுத் திட்டத்திற்கு உடன்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். "ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவில் இரண்டாம் பிரெட்டன் ஊட்ஸ் அமைப்பை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நான் கூறிய கருத்தை இன்னும் வலியுறுத்துகிறேன்; இதுதான் சர்வதேச பொருளாதார, நிதிய முறையில் அடிப்படைச் சீர்திருத்ததிற்கு ஒரு வழிவகை கொடுக்கும்" என்று கோஹ்லர் கூறினார். "ஜனநாயகம் முழுவதற்கும் ஒரு சோதனைக்காலம் என்று விளைவு ஏற்படக்கூடும். பல குடிமக்களும் நிலை பெயர்ந்துள்ளனர். வரவிருக்கும் மாதங்களும் மிகக் கடுமையாக இருக்கும்." என்றார்.

பல அரசாங்கத் தலைவர்கள் மற்றும் ஸ்ட்ரவுஸ் கான் போன்ற முக்கியமானவர்களின் சிந்தனையில் இருப்பது கடந்த தடவை உலகத் தலைவர்கள் லண்டனில் கூடி நிதிய நெருக்கடி பற்றி விவாதித்தது என்பதில் சந்தேகம் இல்லை. 1933 லண்டன் மாநாட்டில் முக்கிய சக்திகள் பெரும் மந்த நிலைமைக்கு ஒருங்கிணைந்த உடன்பாட்டைக் காணத் தவறின. மாநாட்டின் முறிவு பாதுகாப்புவரி முறை, மற்றும் அண்டைநாட்டை பிச்சைக்கார நாடாக்குக போன்ற கொள்கைகளை விரைவுபடுத்தியது; இதையொட்டி வீழ்ச்சி தீவிரமாயிற்று, தேசிய விரோதப் போக்குகள் அதிகரித்தன, இறுதியில் அவை இரண்டாம் உலகப் போராக வெடித்தன.

1933ஐ போலவே இன்றும் உலகத் தலைவர்கள் ஒரு சர்வதேச ஒருங்கிணைப்பு முயற்சியின் தேவை என்று கூறிக்கொண்டாலும், தங்கள் சொந்தநாட்டு நலன்களைத்தான் கடுமையாக பாதுகாக்க விரும்புவதுடன், தங்கள் நிதிய முறை, தங்கள் பெருநிறுவன உயரடுக்குகள் காப்பாற்றப்பட வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர்.

செவ்வாயன்று உலக நாளேடுகள் பலவற்றில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா "G20 நாடுகளின் தலைவர்கள் தைரியமான, விரிவான ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் பொறுப்பை கொண்டுள்ளனர்; அது மீட்பை விரைவுபடுத்த வேண்டும்; அதைத்தவிர ஒரு புதிய பொருளாதார சகாப்தத்தை தோற்றுவிக்கவேண்டும்; அதுதான் இந்த நெருக்கடி மீண்டும் வராமல் தடுக்க வழியாகும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் விரிவான ஊக்கப் பொதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்துகிறது; ஆனால் ஐரோப்பாவோ, குறிப்பாக ஜேர்மனியும் பிரான்ஸும், உச்சிமாநாடு புதிய சர்வதேச நிதியக்க கட்டுப்பாடுகளின்மீது குவிப்புக் காட்ட வேண்டும் என்று கூறுகின்றன. புதிய கட்டுப்பாடுகளை பற்றி தெளிவற்ற குறிப்பு கொடுக்கையில் ஒபாமா, முக்கிய சக்திகளின் முயற்சிகள், "வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பதற்கான விரைவான நடவடிக்கையில் தொடங்க வேண்டும்", "நிதிய ஊக்கப் பொதி வலுவானதாக, தொடர்ந்து தேவைகள் பூர்த்தி அடையும் வரை இருக்க வேண்டும்" என்று எழுதியுள்ளார்.

பிரெஞ்சு பிரதம மந்திரியான பிரான்சுவா பிய்யோன் திங்களன்று பிரான்ஸ் ஏற்கனவே போதுமான இருப்புக்களை ஊக்கப் பொதிகளுக்கு கொடுத்துவிட்டதாகவும் "பொதுக்கடனில் ஒரு குமிழைத் தோற்றுவிப்பது தவிர்க்கப்பட வேணடும்" என்றும் கூறியுள்ளார். முக்கிய ஐரோப்பிய சக்திகளும் ஊக்கப் பொதிகள் இன்னமும் விரிவாக்கப்படுதலை எதிர்க்கின்றன. இதற்குக் காரணம் பணவீக்கம் வரக்கூடும் மற்றும் யூரோ நாணயத்தின் உறுதி பாதிக்கப்படலாம் என்பதாகும்.

ஒபாமா "ஒருங்கிணைந்த நடவடிக்கை" பற்றி என்ன பேசினாலும், அமெரிக்கா தவிர்க்க முடியாத போருக்குச் சமமான நிதிய கொள்கையைத்தான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க வங்கிகளை பிணை எடுப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் பல டிரில்லியன் டாலர்களை உத்தரவாதமாகக் கொடுத்துள்ளது. இன்னும் சலுகை பெற்றிருக்கும் அமெரிக்க டாலரின் நிலையைப் பயன்படுத்தி, அமெரிக்க ஆளும்வர்க்கம் இந்த பிணை எடுப்புக்களை நடத்த பாரிய முறையில் உலகச் சந்தைகளில் கடன்களை பத்திர விற்பனை மூலம் எழுப்ப விரும்புகின்றன; அது கிடைக்கக்கூடிய நிதியத்தை உறிஞ்சி விடும். மற்ற நாடுகள் தங்கள் திட்டங்களுக்கு போதுமான நிதியை பெறுவதை கடினமாகவும், செலவுடையதாகவும் இது ஆக்கிவிடும்.

அமெரிக்கா அதன் வங்கிகளை பிணை எடுக்கத் தோற்றுவிக்கும் கடனுக்கு நிதி திரட்டும் வகையிலேயே பாரியளவு நாணயத்தை அச்சிடும் கொள்கையை தொடக்கியுள்ளது. இந்த பணவீக்கத்தை உருவாக்கும் சாத்தியப்பாட்டையுடைய கொள்கைக்கு மற்ற சக்திகளிடம் இருந்து அதிர்ச்சியான முறையில் இதற்கு விடையிறுப்பு வந்துள்ளது; குறிப்பாக, சீனா டாலர் கணக்கில் உள்ள இருப்புக்களில் $1 டிரில்லியன் வைத்துள்ளது. இச்சொத்துக்கள் டாலரிம் மதிப்பில் முக்கிய வீழ்ச்சி இருக்குமானால் உலகை பெரும் சுமையில் ஆழ்த்தும்.

சீன மத்திய வங்கியின் தலைவர் திங்களன்று உலக இருப்பு நாணயமாக டாலருக்குப் பதில் ஒரு புதிய சர்வதேச நாணயமுறை வேண்டும் என்று வாதிட்டுள்ளார். செவ்வாயன்று அரசாங்க ஆதரவுடைய சீன சமூக அறிவியல் பிரிவுகளின் பீடத்தில் இருக்கும் Li Xiangyang, மத்திய வங்கிக் கூட்டமைப்பின் புதிய கொள்கையான அமெரிக்க கருவூலப் பத்திரங்களை வாங்குதல் "பொறுப்பற்றது" என்று கூறியுள்ளார். சீன இருப்புக்களின் மதிப்பை பாதுகாக்க அமெரிக்கா "குறிப்பிட்ட நடவடிக்கைகளை" எடுக்குமாறு சீனா கேட்டுக் கொள்ளக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கொள்கை வேறுபாடுகளுக்கு பின்னால் போட்டியிடும் நலன்கள் உள்ளன. நிதிய ஆபத்துக்கள் கணிசமாக உள்ளன. நெருக்கடி தொடங்கியதில் இருந்து உலகச் சந்தைகளில் காகித மதிப்பில் பல டிரில்லயன் டாலர்கள் அழிக்கப்பட்டு விட்டன. உலகின் மொத்த பில்லியனர்களின் ஒருங்கிணைந்த சொத்து கிட்டத்தட்ட பாதியாக சரிந்துவிட்டது. இந்த இழப்புக்கள் எப்படி ஈடுசெய்யப்பட முடியும்?

ஸ்ட்ரவுஸ் கான் மற்றும் கோஹ்லருடைய நம்பிக்கைகள் சமூகப் பூசலை அகற்ற உதவக்கூடிய கூடுதலான ஒருங்கிணைந்த கொள்கை பற்றி எப்படி இருந்தாலும், இதனுள் வர்க்க நலன்களின் தர்க்கம் தவிர்க்கமுடியாமல் இருக்கும் என்பது மறுக்கப்படுவதற்கில்லை. ஒருபுறத்தில், ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கம் பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாளர் வர்க்க மக்களின் முதுகில் சுமத்துவதை இரக்கமற்ற வகையில் செயல்படுத்தும். ஏற்கனவே இது பாரிய வேலைகள் மற்றும் ஊதியக் குறைப்புக்கள், சமூக நலச் செலவினக் குறைப்புக்கள் ஆகியவற்றால் நடைபெறுகின்றன. மறுபுறத்தில் பொருளாதார நெருக்கடி பெரும் சக்திகளுக்கு இடையே மூலப்பொருட்களுக்கான போட்டிகள் அதிகரிக்கும். அந்தப் போட்டி முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் இறுதியில் போர் மூலம்தான் தீர்க்கப்பட முடியும்.