World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Berlin meeting launches SEP European election campaign

பேர்லின் கூட்டம் சோசலிச சமத்துவகட்சியின் ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறது

By Our correspondent
30 April 2009

Use this version to print | Send feedback

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Partei fur Soziale Gleihheit- PSG) வரவிருக்கும் ஐரோப்பிய தேர்தலுக்கான அதன் பிரச்சாரத்தை கடந்த ஞாயிறு அன்று பேர்லினில் வெற்றிகரமாக ஆரம்பித்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொழிலாளர்கள், வேலையின்மையில் உள்ளவர்கள் மற்றும் மாணவர்கள் முக்கிய சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களுடன் ஒரு சோசலிச முன்னோக்கு பற்றி விவாதித்தனர்.

PSG வேட்பாளர் கிறிஸ்டோப் வான்ட்ரீயர் கூட்டத்தில் பேசுகிறார்

கட்சி வேட்பாளர்களில் ஒருவரான கிறிஸ்டோப் வான்ட்ரீயர், அதன் தேர்தல் பிரச்சாரத்தின் முதல் கட்டங்களில் கட்சி பெற்ற அனுபவங்களை விளக்கிப் பேசிக் கூட்டத்தைத் ஆரம்பித்தார். கடந்த சில வாரங்களில் நடந்த நூற்றுக்கணக்கான விவாதங்களில் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் PSG வாக்குச்சீட்டில் பதிவு செய்வதற்கு தேவையான ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை சேகரிக்கையில், தொழிலாளர்கள் ஜேர்மனிய அரசாங்கம் வங்கிகளுக்கு அளிக்கும் பில்லியன் கணக்கான யூரோக்கள் பற்றி பரந்த சீற்றத்தை வெளியிட்டதை அவர் தெரிவித்தார். "முக்கிய சமூக மோதல்கள் நிகழ்ச்சிரலில் உள்ளன என்பதை தொழிலாளர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் எவ்வாறு தங்கள் நலன்களை பாதுகாப்பது என்பது பற்றி அவர்கள் உறுதியாக இல்லை" என்றார் அவர்.

சமூகத் துருவப்படுத்தல் அடுத்த மாதங்களில் விரைவில் தீவிரமாகும் என்று வான்ட்ரீயர் தொடர்ந்து கூறினார். அத்தகைய காலங்களில் அரசியல் அமைப்புக்கள் தங்கள் உண்மை வண்ணத்தை வெளிப்படுத்தும் கட்டாயத்திற்கு உட்படுகின்றன. "எவருக்கு ஆதரவாக அவர்கள் உள்ளனர்? ஆளும் உயரடுக்கின் அதிகாரம், சலுகைகள் ஆகியவற்றை பாதுகாத்து நெருக்கடியை மக்கள் இழப்பில் தீர்க்க முற்படுகின்றனவா அல்லது தொழிலாளர்களின் நலன்களை அவை பிரதிபலிக்கின்றனவா?" என்பது தெரியவரும்.

பெரும்பாலான தொழிலாளர்கள் இடது கட்சியையும் தொழிற்சங்கங்களையும் தாங்கள் நம்ப முடியாது என்ற உண்மையில் தெளிவாக உள்ளனர். ஆனால் வங்கிகள், பெருநிறுவனங்கள் ஆகியவற்றிற்கு எதிராக தங்கள் நலன்களை எப்படிக் காப்பது என்பது பற்றி அவர்கள் ஒரு தெளிவான முன்னோக்கைக் கொண்டிருக்கவில்லை. "ஒன்று மிகத் தெளிவாகிக் கொண்டு வருகிறது: ஒரு புதிய அரசியல் முன்னோக்கு தேவைப்படுகிறது, அது தற்போதைய அரசியல் நடைமுறையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அடிப்படையில் இருந்து தொடங்க வேண்டும். இந்த முன்னோக்கைத்தான் நாம் இன்று விவாதிக்க விரும்புகிறோம்."

இதன் பின் வான்ட்ரீயர் PSG யின் தலைவரும் முக்கிய வேட்பாளருமான உல்றிக் ரிப்பேர்ட்டை அறிமுகப்படுத்தினார். ரிப்பேர்ட் தன்னுடைய உரையை இன்றைய நிலைமையை இருபது ஆண்டுகளுக்கு முன்பு பேர்லின் சுவர் தகர்க்கப்பட்டு கிழக்கு ஐரோப்பிய ஸ்ராலினிச ஆட்சிகள் சரிந்த நிலைமையுடன் ஒப்பிட்டுப் பேசிய வகையில் ஆரம்பித்தார். "1989 வசந்த காலத்தில் ஒரு சில மாதங்களுக்கு பின்னர் உலகம் முற்றிலும் வேறுவிதமாகக் காட்சியளிக்கும் என்று எவர் நினைத்திருக்க முடியும்?"

"நாம் மீண்டும் இதே போன்ற அடிப்படை சமூகக் காலத்தை கடந்து வருகிறோம்" என்றார் ரிப்பேர்ட். "மீண்டும் வரலாறு இயக்கத்தில் உள்ளது. இம்முறை தயாரிப்புடன் இருப்பது மிகவும் முக்கியமாகும் --இருபது ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு அந்நிகழ்வுகள் பெரும் வியப்பாக இருந்தன. இம்முறை வருங்காலத்தைப் முன்னோக்கி பார்த்து, சமூக வளர்ச்சியில் உணர்மையுடன் குறுக்கிட வேண்டும்."

கட்சியின் உண்மையான வலிமை சமூக வளர்ச்சிகளை அவற்றின் வரலாற்று உள்ளடக்கத்தில் அறிந்து கொள்ள முடிகிறதா, ஒரு செயல்படுத்தக்கூடிய முன்னோக்கை வளர்த்துள்ளதா என்பதை நம்பியுள்ளது என்று ரிப்பேர்ட் வலியுறுத்தினார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரந்த அரசியல் போக்குகள் ஸ்ராலினிச ஆட்சிகள் கவிழ்ந்ததை முதலாளித்துவத்தின் வெற்றி என்று களித்து மகிழ்ந்தாலும், ட்ரொட்ஸ்கிச உலக இயக்கம் ஸ்ராலினிசத்தின் சரிவு உலக முதலாளித்துவ வரலாற்று நெருக்கடியின் ஆரம்பக்கட்டம்தான் என்று சுட்டிக் காட்டியது; அது இன்று மிக வெளிப்படையாக வந்துள்ளது.

தவறான கொள்கைகள் மற்றும் தடையற்ற கூடுதல் செயல்கள் ஆகியவற்றின் விளைவாக நெருக்கடி வந்துள்ளது என்று கூற முற்பட்டுள்ள கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு விடையிறுக்கும் வகையில் பொருளாதார சரிவு முதலாளித்துவ முறையின் வரலாற்று நெருக்கடியின் வெளிப்பாடு ஆகும் என்று வலியுறுத்தினார். "நெருக்கடி ஒன்றும் அசாதாரணமானது அல்ல, மற்றபடி உறுதியாக இருக்கும் முறையின் தற்செயல் முறிவும் அல்ல; மாறாக இது தவிர்க்கமுடியாத வரலாற்று வீழ்ச்சியின் விளைவு ஆகும். முழு முதலாளித்துவ சமூக ஒழுங்கின் திவால்தன்மையின் தவிர்க்க முடியாத விளைவு ஆகும்."

இந்த நெருக்கடிக்கு ஆளும் உயரடுக்கு தொழிலாள வர்க்கத்தின் மீதான தீவிரத் தாக்குதல்கள் மற்றும் அதன் ஏகாதிபத்திய போட்டியாளர்களுடன் பெருகிய பூசல்களை என்ற விதத்தில் எதிர்கொள்ளுகிறது. ஆளும் உயரடுக்கின் வர்க்கத் தன்மை இப்பொழுது மிகத் தெளிவாக உள்ளது; இது Jens Peter Neumann உதாரணத்தில் இருந்து அறியப்படலாம். Dresdner Bank என்று அவர் வேலை பார்த்திருந்த நிதிய அமைப்பின் பில்லியன் கணக்கான இழப்பில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தாலும், வேலையில் இருந்து நீக்கப்பட்ட நியூமன் தனக்கு மிகப் பெரிய மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இழப்பீட்டு தொகைகைள் வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இத்தகைய திமிர்த்தனம் நிதிய உயரடுக்கிடம் இருப்பதுதான் தவிர்க்க முடியாமல் வன்முறையான சமூகமோதல்களுக்கு வகை செய்யும் என்று ரிப்பேர்ட் கூறினார்.

PSG வேட்பாளர் பின்னர் கட்சியின் திட்டத்தை மூன்று அடிப்படை அரசியல் கொள்கைகளின் தன்மையில் விவரித்தார். முதலாவதாக PSG என்பது ஒரு சர்வதேசக் கட்சி, இது அனைத்து எல்லைகளையும் கடந்து தொழிலாளர்களை சுரண்டல், போர் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களில் ஐக்கியப்படுத்துகிறது. இரண்டாவதாக PSG என்பது முதலாளித்துவ அமைப்புமுறையை அகற்ற விழைகிறது; உற்பத்தி முறை ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. தொழிலாளர்கள் அரசியல் நிகழ்வுகளில் ஒரு சுயாதீன சமூக சக்தியாக குறுக்கிட்டு வங்கிகள் மற்றும் முக்கிய நிறுவனங்கள் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் இருக்க வேண்டும் என்பதற்குப் பொறுப்பை மேற்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, PSG தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக போராடுகிறது. இதற்கு, எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக ஜனநாயகக் கட்சி (SPD), இடது கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ஆகியவற்றுடன் முறித்துக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக PSG ஐக் கட்டமைப்பது முக்கியம்.

இந்த அடிப்படையில்தான் PSG அதன் வேட்பாளர்களை இடது கட்சி போன்ற அரசியல் சக்திகளுக்கு எதிராக உறுதியுடன் நிறுத்துகிறது. ஆளும் உயரடுக்கு ஜேர்மனியில் இருக்கும் இடது கட்சி அல்லது அது போன்ற அமைப்புக்களுடன் நெருக்கமாக உள்ளது, இதற்குக் காரணம் தொழிலாளர்களின் சுயாதீன அரசியல் இயக்கத்தை தடுத்து முதலாளித்துவ அமைப்பை மீட்பது ஆகும். தொழிலாள வர்க்கம் உணர்மையுடன் கூடிய அரசியல் விரோதப் போக்கை அத்தகைய அமைப்புக்கள்மீது கொள்ள வேண்டும்.

தன்னுடைய உரையை முடிக்கும் வகையில் தொழிலாளர்களின் இயக்கத்தின் வளர்ச்சி ஒரு சர்வதேச வடிவமைப்பை பெற வேண்டும் என்று விளக்கிய வகையில் ரிப்பேர்ட் கூறினார். "பூகோளமயமாக்கல் சமூக வளர்ச்சியில் பண்புரீதியான ஒரு புதிய கட்ட அறிமுகப்படுத்தியுள்ளது; இதில் தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச வர்க்கமாக செயல்பட்டு உண்மையான ஒற்றுமையை தளமாகக் கொண்ட ஒரு புதிய சமூகத்தை கட்டமைக்கலாம். நம் உலகக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் தொழிலாளர்கள் இயக்கத்தை ஒரு சர்வதேச, சோசலிச அடிப்படையில் வளர்க்கும் கருவிகள் ஆகும். உங்களை அனைவரையும் இப்பணியில் தீவிரமாக ஈடுபடுமாறு வலியுறுத்துகிறேன்."

ரிப்பேர்ட்டின் உரைக்குப் பின்னர் பல கேள்விகள், அவற்றிற்கு பதில் மற்றும் பசுமைக் கட்சியின் பங்கு பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் ஆகியவை நிகழ்ந்தன. விவாதத்தில் பங்கு பெற்ற ஒருவர் கட்சியின் வலதுநோக்கிய மாற்றத்தில் இருந்து என்ன முடிவுகள் எடுக்கப்படலாம் என்று வினவினார். PSG வேட்பாளர்கள் பசுமைக் கட்சியினர் பிடிவாதமாக விஞ்ஞானபூர்வ சோசலிசத்திற்கு விரோதமாக உள்ளனர் என்றும் தொடக்கத்தில் இருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை எதிர்க்கின்றனர் என்றும், அவர்களுடைய செயலை இருக்கும் சமூக ஒழுங்கிற்குள் தீவிரவாத எதிர்ப்பு அரசியலோடு நிறுத்திவிடுவதாகவும் விளக்கினர். முறையை மாற்றுவதற்கு பதிலாக அவர்கள் முறையினால் மாற்றப்பட்டுவிட்டனர், ஜேர்மனிய நடைமுறை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல் தடவையாக இராணுவத்தை போருக்கு அனுப்புவதில் கட்சி முக்கிய பங்கு கொண்டதில் முடிவடைந்துள்ளது.

இடது கட்சியின் பங்கு பற்றியும் விவாதம் இருந்தது. இடது கட்சி மக்களின் இடது நிலைநோக்கின் ஒரு வெளிப்பாடு அல்ல என்று ரிப்பேர்ட் வலியுறுத்தினார். "மாறாக, இக்கட்சி அதன் வேர்களை தொழிலாளர்கள் ஒரு சுயாதீன இயக்கத்தை பெறுவதைத் தடுக்க வேண்டும் என்னும் ஆளும்வர்க்கத்தின் ஆரம்ப முயற்சிகளில்தான் வேர்களை கொண்டுள்ளது." இடது கட்சி எப்படி நடைமுறைக்கு வந்தது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியது முக்கியமாகும். நீண்ட கால சமூக ஜனநாய கட்சியின் ஒஸ்கார் லாபொன்டைன் கிழக்கு ஜேர்மனியில் இருந்த முன்னாள் ஸ்ராலினிச அமைப்புடன் இணைந்து வகையில் இது வந்தது என்று ரிப்பேர்ட் விளக்கினார். சமூக ஜனநாய கட்சி விரைவில் சரியத் தொடங்கிய சூழ்நிலையில் அரசியல் அமைப்புமுறையை உறுதிசெய்வதற்கு இது மேற்கொள்ளப்பட்டது.

எனவேதான் "இடது" அமைப்புக்கள் என்று அழைக்கப்படுவதில் இருந்து தொழிலாள வர்க்கம் சுயாதீன அரசியலுக்கு போராடவேண்டும் என்னும் PSG போராட்டம் முக்கியமானது ஆகும். PSG யின் கொள்கையுடைய இயக்க சக்தி "ஒரு பரந்த இடது கூட்டணி அல்ல" மாறாக தொழிலாள வர்க்கத்தினை புறநிலை தர்க்க வளர்ச்சிகளைப் புரிந்து கொள்ளுதல், அதற்கென ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டமைத்தல் என்பதனூடாக தயாரிப்பினை செய்வது ஆகும்.

கட்சித் தேர்தல் நிதிக்கு வெற்றிகர பண வசூலுடன் கூட்டம் முடிவிற்கு வந்தது. PSG யின் ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்திற்கு பெருகும் ஆதரவு பற்றி இது அடிக்கோடிட்டுக் காட்டியது.