World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Up to a million people on May Day protests

பிரான்ஸ்: ஒரு மில்லியன் மக்கள் வரை மே தின ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பு

By Antoine Lerougetel
2 May 2009

Use this version to print | Send feedback

பிரான்சின் அனைத்துப் பகுதியிலும் நேற்று நடைபெற்ற மே தின ஆர்ப்பாட்டங்களில் ஒரு மில்லியன் மக்கள் வரை பங்கெடுத்துக் கொண்டனர். ஊடகங்களால் "ஜி8" என்று குறிப்பிடப்படுகின்ற பிரான்சின் எட்டு பிரதான தொழிற்சங்க அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த இந்தப் பேரணி இந்த வருடத்தின் மூன்றாவது பாரிய பேரணியாகும். மந்தநிலை சரிவாக மாறி, சமூக பதட்டங்கள் ஆழமுறும் சூழ்நிலைகளின் கீழ் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.

மிகப்பெரிய பிரெஞ்சு தொழிற்சங்கமான CGT (பொது தொழிலாளர் கூட்டமைப்பு, கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானது), "நெருக்கடிக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், பொருளாதார மற்றும் சமூக மாற்றம் கோரி" 283 ஒன்றுபட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக தெரிவித்தது.

450,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக போலிசார் தெரிவித்தனர், முன்னதாக மார்ச் 19 அன்று நடந்த கடைசி ஆர்ப்பாட்டத்தில் 1.2 மில்லியன் பேர் பங்கேற்றதாக மதிப்பிட்டிருந்தனர். மார்ச் 19 ஆர்ப்பாட்டத்தில் 2.4 மில்லியன் பேர் வரை பங்கேற்பார்கள் என்று மதிப்பிட்டிருந்த CGT இந்த முறை அதில் பாதி எண்ணிக்கையிலானோர் தான் பங்கு பெறுவார்கள் என்று மதிப்பிட்டது.

மார்ச் 19 ஆர்ப்பாட்டத்தை காட்டிலும் குறைந்த எண்ணிக்கையிலானோரே வருவர், ஏனென்றால் இது விடுமுறை தினம் என்று சங்கங்கள் காரணம் கூறின. பொருளாதார நெருக்கடியின் சுமையை உழைக்கும் வர்க்கத்தின் தலை மீது சுமத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கான எதிர்ப்பு மற்றுமொரு முறை பாரிய அளவில் வெளிப்பட்டிருக்கிறது, என்றாலும், பங்கேற்றோர் எண்ணிக்கை குறைந்திருப்பதானது இத்தகைய ஒருநாள் நடவடிக்கைகள் இறுதியில் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுவதைத் தான் இலக்காகக் கொண்டிருப்பதால் அவற்றின் பயன் குறித்து தொழிலாளர்களிடையே அவநம்பிக்கை அதிகரித்து வருவதை பிரதிபலிக்கிறது.

CGT கூற்றுப்படி, பாரிஸ் நகரில் 160,000 பேர் பேரணியில் கலந்து கொண்டனர் (போலிசார் மதிப்பீடு 65,000). சென்ற முறையுடன் ஒப்பிட்டால் இது பெரும் சரிவாகும். பிற நகரங்களிலும் இதே நிலை தான். "அவர்கள் தான் நெருக்கடி, நாங்கள் தான் தீர்வு", "சார்க்கோ எங்களுக்கு வாக்குறுதியளித்தார், சார்கோ பொய்யுரைத்தார்", மற்றும் "வங்கிக்காரர்களுக்கு நாங்கள் பணம் கொடுக்க முடியாது" என்ற பதாகைகளின் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்து வந்தனர்.

மார்செயில், 35,000 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர் (போலிசார் மதிப்பீடு 10,000), லியோனில் 15,000 (போலிசார் மதிப்பீடு 10,000), போர்டோவில் 33,000(போலிசார் மதிப்பீடு 13,500).

முக்கிய கல்விச் சங்கமான FSU இன் ஒரு உள்ளூர் அதிகாரியான ஜில்பேர் தொமாசி ஊடகங்களிடம் பேசும்போது தொழிற்சங்கங்களின் பொதுவான முன்னோக்கினை பிரதிபலித்தார்: "அழுத்தம் அளிக்கும் பொருட்டு நாங்கள் ஒரு அணிதிரட்டும் நிகழ்முறையில் இருக்கிறோம். அரசாங்கம் எப்போதும் செவிமடுக்காமல் இருந்து கொண்டே இருக்க முடியாது".

பிரான்சில் வேலைவாய்ப்பின்மை 2009ல் ஒரு மில்லியன் வரை அதிகரிக்க இருக்கிறது, வேலைநேரம் குறைப்பு, பாரிய வேலையிழப்புகள், தனியார் நிறுவன ஆலைகள் மூடல் காரணமாக, குறிப்பாக வாகனத்துறை மற்றும் இரும்புத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் பல பகுதிகள் உலகெங்கிலும் ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றன.

பரவலான வேலைநிறுத்தங்கள், ஆக்கிரமிப்புகள், மற்றும் "உயரதிகாரிகளை கடத்துதல்" ஆகியவற்றின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகிறார்கள். கட்டர்பில்லர், கொன்டினென்டல், மொலெக்ஸ், ஃப்ரீஸ்கேல் மற்றும் பிற ஆலைகளில் தொழிற்சங்கங்கள் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் அளவுக்கு எதிர்ப்பு போராட்டங்கள் சென்று விட்டன. பாதி தனியார்மயப்பட்ட மின்சக்தி பயன்பாடு தொழிலாளர்கள் திடுதிப்பென்று மின்தடை ஏற்படுத்தி விட்டு போய் விடுவதும் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.

பிரெஞ்சு மக்களில் 70 சதவீதம் பேர் மே தின ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளித்தனர் என்றும் 10 சதவீதம் பேர் மட்டுமே அதன் மீது வெறுப்பை வெளிப்படுத்தினர் என்றும் ஏப்ரல் 30 அன்று வெளியான இரண்டு கருத்துக் கணிப்புகள் கண்டன.

இந்த ஒருநாள் அணிதிரட்டல்கள் எல்லாம் தொழிற்சங்கங்களால் நெருக்கமாகக் கட்டுப்படுத்தப்படுபவை. இந்த தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்படுபவை என்பதோடு முதலாளித்துவ ஊடகங்களில் பொதுவாக சாதகமான அணுகுமுறையை பெறுபவை. நடப்பு நெருக்கடிக்கு செலவிடுவதை நோக்கி தொழிலாளர்களும் இளைஞர்களும் காட்டும் பெருவாரியான கோபத்தை சேதமில்லா வண்ணம் சிதறடிப்பதற்கான ஒரு முக்கியமான வழிமுறையாக இந்த கால இடைவெளிக்குட்பட்ட "செயல்பாட்டு-தினங்களாக" பிரான்சின் அரசியல் ஸ்தாபனம் காண்கின்றது.

லு மொன்ட் நாளிதழ் தனது ஏப்ரல் 30 பதிப்பில் குறிப்பிடுகிறது, "ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையும், தனியார் மற்றும் அரசாங்க துறைகளில் வேலைநிறுத்தங்களுடனோ அல்லது அவை இல்லாமலோ, பிரமாண்டமான ஆர்ப்பாட்ட தினங்களைத் திட்டமிடுவது என்பது, நெருக்கடியில் மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையினதாக இருப்பதில்லை. தங்கள் மூத்த அதிகாரிகளை சிறைவைக்குமளவுக்கு சில பிரச்சினைகள் தீவிரப்பட்டிருப்பதானது, தேசிய அமைப்புகள் தேர்ந்தெடுத்திருக்கும் வேகம் சில தொழிலாளர்கள் செயல்படும் வேகத்திற்கு ஈடுகொடுப்பதாய் இல்லை என்பதைக் காட்டுகிறது". அந்த பத்திரிகை மேலும் கூறியது: "ஒன்றுபட்ட மே 1, அடுத்து என்ன நடக்கும் என்கிற கேள்விக்கு விடையிறுப்பதாய் அமையவில்லை".

பிரான்சின் அரசியல் மற்றும் நிதிரீதியான மேல்தட்டினரின் நிலைப்பாடானது, மே தினத்தன்று பிரான்சின் பிரதான வர்த்தக நாளிதழான லெஸ் எக்கோ நாளிதழில் ஏப்ரல் 30 கட்டுரையில் தெளிவுற வெளிப்பட்டது. அது "சமூக காய்ச்சல்" ஐ கட்டுப்படுத்தப்பட விரும்புகிறது. "உழைப்புக்கான செலவை அதிகரிப்பது" அல்லது பணக்காரர்கள் மீதான வரிகளை அதிகரிப்பதன் மூலமாக சமூக சிக்கல்களில் இருந்து விடுவிப்பதான எண்ணம் எதுவும் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசிக்கு இல்லை என்பதை அது புரிந்து கொண்டிருக்கிறது.

மே தின ஆர்ப்பாட்டங்களை எப்படி கையாள வேண்டும் என இந்த பத்திரிகை பிரான்சின் அரசியல் மற்றும் நிதி மேல்தட்டினருக்கு ஆலோசனை வளங்குகின்றது: "தொழிற்சங்கள் அவமதிப்பாகக் கருதிவிடாத வகையில், அதேசமயம் அதற்கு வெகுகுறைவான முக்கியத்துவமே அளிக்க வேண்டும். (பிரதமர்) பிரான்சுவா பிய்யோனும் (தொழிலாளர் துறை அமைச்சர்) Brices Hortefeux ம் தொழிற்சங்க தலைவர்களின் 'பொறுப்புணர்வு' குறித்து தளர்ச்சியின்றி புகழ்மாலை பாடியிருக்கிறார்கள். ஒட்டு மொத்த மூலோபாயமும் நெருக்கடியால் பாதிப்புற்றுள்ள பிரான்சு மக்களுக்கு அரசாங்கம் "அவர்கள் பக்கம் இருக்கிறது" என்று நம்ப வைப்பதை அடக்கியிருக்கிறது. குறிப்பாக கட்டர்பில்லர் பிரச்சினை போன்றவற்றில் மத்தியஸ்தம் செய்வது, அதே சமயத்தில் அதிகாரிகளை கடத்துவது அல்லது சூறையாடுவது ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் மீது நம்பிக்கை இழக்கச் செய்வது ஆகியவை இதில் அடக்கம்".

எப்படியிருந்தாலும், புறநிலை சமூக பதட்டங்கள் அரசாங்கமும் ஊடகங்களும் ஒத்துக்கொள்ள விரும்புவதைக் காட்டிலும் வெகு தூரம் செல்கிறது என்பதை லெஸ் எக்கோ அறிந்து வைத்திருக்கிறது. தொழிற்சங்க அதிகாரத்துவங்களை "பெரும் தலைவர்கள்" என்று வர்ணிக்கும் இது, "ஒரு புரட்சிக்கு முந்தைய அல்லது கிளர்ச்சி சூழ்நிலை குறித்து பேச விரும்பாத புத்திசாலித்தனத்திற்காக" அவர்களை பாராட்டுகிறது.

பாரிஸ், மார்சை, நான்சி மற்றும் அமியான் ஆகிய இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது "தொழிற்சங்கங்களுக்கு எதிராக கட்டர்பில்லர் தொழிலாளர்கள் கிளர்ச்சி" என்னும் கட்டுரையின் ஆயிரக்கணக்கான அச்சு நகல்களை WSWS ஆதரவாளர்களின் குழு விநியோகித்தது.