World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India's election ends, horse-trading begins

இந்தியத் தேர்தல் முடிவடைந்து, பேரம்பேசல் ஆரம்பமாகிறது.

By Deepal Jayasekera
14 May 2009

Use this version to print | Send feedback

இந்தியாவின் ஒரு மாத கால பொதுத் தேர்தலில் ஐந்தாம் மற்றும் இறுதிச் சுற்று நேற்று முடிந்தது.

ஆரம்ப மதிப்பீடுகள் மொத்தத்தில் வாக்குப்பதிவு 60 சதவிகிதமாக இருக்கும் என்று கூறுகின்றன; இது 2004 தேர்தலில் பங்கு பெற்ற சதவிகிதமான 58.1 சதவிகிதத்தை விட சற்றே கூடுதல் ஆகும்.

வாக்குகள் எண்ணுதல் சனிக்கிழமையன்று தொடங்கும்; நாளின் இறுதிக்குள் 15வது லோக் சபா (மக்கள் மன்றத்தின்) அமைப்பு எப்படி இருக்கும் என்பது பெரும்பாலும், இல்லாவிடில் முழுமையாக, தெரிந்துவிடும்.

ஆனால் புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு சில நாட்கள், ஏன் சில வாரங்கள் கூட ஆகலாம்.

இரு முக்கிய கட்சிகளான வெளியேறும் ஐக்கிய முன்னணிக் கூட்டணி (UPA) அரசாங்கத்தில் மேலாதிக்கம் கொண்ட காங்கிரஸ் கட்சியோ அல்லது இந்து வெறிகொண்ட பாரதிய ஜனதாக் கட்சியோ (BJP) 543 லோக் சபா இடங்களில் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாக பெறும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

காங்கிரஸ் மற்றும் BJP இரண்டுமே சிறிய, மாநில, சாதித் தளத்தைக் கொண்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு ஏற்பாடுகளைக் கொண்டிருந்தன; ஆனால் இவை வாக்குப் பதிவு முடிந்த பின் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதற்கான பரபரப்பு வேகத்தில் துண்டிக்கப்பட்டுவிடக்கூடும். "ஒவ்வொரு கட்சியும், குழுவும் பேச்சு வார்த்தை நடத்துகிறது; ஒவ்வொருவரும் பிறரின் மூலோபாய உத்தியில் அடங்கியுள்ளனர்" என்று தற்போது NDA உடன் கூட்டு கொண்டுள்ள, பீகாரை தளமாகக் கொண்ட ஐக்கிய ஜனதா தளத்தின் தைலவர் செவ்வாயன்று அறிவித்தார்.

இப்பொழுது இருக்கும் நிலையில் UPA அல்லது BJP தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியோ இன்னும் கூடுதலான கட்சிப் பங்காளிகளை அடையாமல் அரசாங்கத்தை அமைக்கப் போதுமான பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்காது.

நான்கு ஆண்டுகளாக ஸ்ராலினிஸ்ட்டுகள் தலைமையாலான இடது முன்னணி, கடைசிப் பாராளுமன்றத்தின் மூன்றாம் மிகப் பெரிய குழுவாக இருந்தது, காங்கிரஸ் தலைமையிலான சிறுபான்மை UPA ஐ பதவியில் தக்க வைக்கத்திருந்தது. ஆனால் இந்திய அமெரிக்க சிவிலிய அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கும், ஒரு அமெரிக்க இந்திய "உலகளாவிய மூலோபாயப் பங்காளித்தனத்தை" உருவாக்குவதற்காகவும் காங்கிரஸால் ஒதுக்கப்பட்ட பின், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் ஒரு மூன்றாம் அணியை சேர்த்துள்ளனர்: இதில் "வட்டாரக் கட்சிகள்" அடங்கியுள்ளன; இவை அனைத்தும் முன்பு காங்கிரஸ் அல்லது BJP உடன் இழிவான வலதுசாரி பதிவுச்சான்றைக் கொண்டிருப்பவை ஆகும்.

இடது முன்னணியின் முக்கிய கூறுபாடுகளான மார்க்ஸிஸ்ட் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், வாக்குப்பதவிற்கு பிந்தைய மாற்றங்களில் மூன்றாம் அணி தற்பொழுதைய BJP, காங்கிரஸ் கூட்டாளிகளை ஈர்க்கும் என்றும், அதையொட்டி "BJP இல்லாத, காங்கிரஸ் இல்லாத", "மதசார்பற்ற", "மக்கள் சார்பு" உடைய அரசாங்கம் அமைக்கப் போதுமான எண்ணிக்கை கிடைக்கும் என்றும் கூறுகின்றன. முன்பு ஸ்ராலினிஸ்ட்டுக்கள் UPA க்கான தங்கள் ஆதரவை இதேபோன்ற அடிப்படையில்தான் நியாயப்படுத்தினர்; அதாவது காங்கிரஸ் ஒன்றுதான் BJP தலைமையிலான அரசாங்கத்திற்கு "மதசார்பற்ற" மாற்றீடு என்றும் "மக்கள் சார்பு" உடைய கொள்கைகளை செயல்படுத்த அழுத்தம் கொடுக்கப்படலாம் என்றும் கூறியது.

ஸ்ராலினிஸ்ட்டுக்களின் கூற்று இருந்தபோதிலும்கூட, மூன்றாம் அணி விரிவடையாமல் சுருக்கத்தைக் காணும் என்ற குறிப்புக்கள்தான் உள்ளன. ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கானா பகுதியை தனி மாநிலமாக தோற்றுவிக்க வேண்டும் என வாதிடும் தெலுங்கான ராஷ்ட்ர சமிதி இந்த வாரம் தான் மூன்றாம் அணியில் இருந்து BJP தலைமையிலான NDA யில் சேர்வதாகக் கூறியுள்ளது. நேற்று முன்னாள் கர்நாடக முதல் மந்திரியும் மற்றொரு மூன்றாம் அணிக்கூறுபாடான ஜனதா தளம் (மத சார்பற்றது) தலைவரும் ஆன, H.D. குமாரசாமி, ஒரு புகைப்படத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டிற்குள் இரகசியமாக நுழைந்தது தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டை தளமாகக் கொண்ட மற்றொரு மூன்றாம் அணி உறுப்பினரான AIADMK உடைய தலைவர் ஜெ.ஜெயலலிதா, தன்னை காங்கிரஸ், BJP இருவரும் நாடியுள்ளனர் என்றும் தன் போக்கு வாக்குகள் எண்ணிக்கை முடிந்தபின்தான் தெரியப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

புதன் மாலை வாக்குப் பதிவு முடிந்தபின், முடிவிற்குப் பின் கருத்துக் கணிப்பின்மீது இருந்த தடை அகற்றப்பட்டது; பல தொலைக்காட்சி நிலையங்களும் தங்கள் கணிப்பு முடிவுகளை ஒளிபரப்ப விரைந்தன. அனைத்து கணிப்புக்களும் சிதைந்த முடிவைத்தான் குறிக்கின்றன; காங்கிரஸ் சற்று கூடுதலாக BJP ஐ விட இடங்களைப் பெறும் என்று தெரிகிது; UPA மிகக் குறைந்த எண்ணிக்கையில் பாராளுமன்றத்தில் அதிக இடங்களைக் கொண்ட முகாம், ஆனால் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம் என்று தெரிகிறது; மூன்றாம், இடது முன்னணிகள் மொத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கு இடத்தைப் பெறக்கூடும்.

இத்தகைய கருத்துக் கணிப்புக்கள் இதுவரை நேர்த்தியாக இருந்ததில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டும். 2004ம் ஆண்டு BJP தலைமையிலான NDA மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும் என்று கணிப்புக்கள் கூறின. மாறாக காங்கிரஸ்தான் மிகப் பெரிய கட்சியாக வந்தது; அதன் முழக்கமான "சீர்திருத்தம், ஆனால் மனித முகத்துடன்" என்பது, உலக முதலாளித்துவத்திற்கு குறைவூதிய தொழிலாளர் தொகுப்பை அளித்து, தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்தியாவை காந்தம் போல் ஆக்கும் முதலாளித்துவ முறையின் உந்ததுலால் விளைந்துள்ள சமூக சமத்துவமின்மை மற்றும் பெருகிய பொருளாதாரப் பாதுகாப்பின்மை ஆகியவற்றின் மீது மக்கள் கொண்டுள்ள சீற்றத்தை தணிக்கும் விதத்தில் உள்ளது.

ஏற்றுமதிகளில் சரிவு

தற்போதைய தேர்தல் பிரச்சாரம் ஆழ்ந்த பொருளாதர சரிவிற்கு இடையே அரசாங்கம் முதலில் கூறிய இந்தியா உலகப் பொருளாதார நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சி இவற்றில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது என்ற கூற்றுக்களை சிதைத்துவிட்டது. கடந்த அக்டோபர் மாதம் இந்திய ஏற்றுமதிகள் மிக ஆபத்தான சரிவைக் கண்டன. புள்ளிவிவரங்கள் கடைசியாகக் கிடைத்துள்ள மார்ச் மாதத்தில் ஏற்றுமதிகள் 33.3 சதவிகிதம் முந்தைய ஆண்டைவிடக் குறைந்தது; $17.25 பில்லியனில் இருந்து $11.5 பில்லியன் என்று குறைந்தது.

ஏப்ரல் மற்றும் செப்டம்பர் 2008க்கு இடையே ஏற்றுமதிகள் 30 சதவிகிதம் கூடின; ஆனால் பின்னர் ஏற்றமதி பெரும் சரிவைக் கண்டதும், மார்ச் 31, 2009 நிதிய ஆண்டில் ஏற்றுமதிகளின் டாலர் மதிப்பில் மொத்த கூடுதல் 3.4 சதவிகிதம்தான் இருந்தது.

செவ்வாயன்று வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ கவல்கள் தொழில்துறை உற்பத்தி மார்ச் மாதம் தொடர்ந்து இரண்டாம் மாதமாக சுருக்கத்தை அடைந்தது, இது 2.3 என 16 ஆண்டுகளில் மிகக் குறைவானது ஆகும். மூலதனப் பொருட்கள் பிரிவு, அதாவது உற்பத்திக்குத் தேவைப்படும் புதிய இயந்திரம் மற்ற கருவிகளைத் தயாரிக்கும் பிரிவு 8 சதவிகித சுருக்கத்தைக் கண்டது. பொருளாதார வல்லுனர்கள் இத்தகைய தீவிரச் சரிவு வணிக முதலீட்டில் இருப்பது, சரிவு தொடரும் என்பதைக் காட்டுகிறது என்று எச்சரித்துள்ளனர்.

இந்திய அரசாங்கம் வேலை பற்றி தகவல்களை முறையாக சேகரிக்கவில்லை; இது இந்திய முதலாளித்துவத்தின் மகத்தான பிற்போக்குத்தனத்திற்கு அடையாளம் ஆகும். ஆனால் ஏற்றுமதிகளில் சரிவு மற்றும் தொழில்துறை உற்பத்தியில் சரிவு என்பது வேலையின்மை கடந்த ஆறு மாதங்களில் அரசாங்கம் ஒப்புக் கொண்டிருக்கும் அரை மில்லியனை விட மிக அதிகமாகத்தான் போயிருக்கும் என்பதைக் காட்டுகிறது.

பொருளாதார நெருக்கடி எத்தகைய பாதிப்பை தேர்தலில் கொள்ளும் என்பதை அனுமானிப்பது கடினம் ஆகும். மக்களின் பெரும் பிரிவுகளிடையே BJP பெரு வணிக நலன்களுக்குக் கட்டுப்பட்டது இந்தியாவின் உழைக்கும் மக்களின் நலன்களையும் கவலைகளையும் புறக்கணிக்கிறது என்ற சரியான கருத்து நிலவுகிறது. இடது முன்னணி மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும், அதன் கோட்டைகளில், வலிமை இழக்கக்கூடும் என்று காட்டப்படுகிறது. ஏனெனில் அதுவே இரக்கமற்ற முறையில் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை தொடர்ந்தது--அதில் தகவல் தொடர்புத் துறையில் வேலைநிறுத்தம் தடைசெய்யப்பட்டது, விவசாயிகளிடம் இருந்து நிலத்தைப் பறிப்பதற்கு போலீஸ், குண்டர்களை பயன்படுத்தி, நிலங்களை சிறப்புப் பொருளாதார பகுதிகளை அமைக்க பெருவணிகத்திற்கு கொடுப்பது போன்றவை இருந்தன; இவை அதன் மரபார்ந்த தொழிலாள வர்க்கம், விவசாய ஆதரவாளர்கள் ஆகியோரிடையே விரோதப் போக்கை சம்பாதித்துக் கொடுத்தது.

ஆனால் நெருக்கடியினால் உடனடித் தேர்தல் பாதிப்பு எப்படி இருந்தாலும், இந்திய உயரடுக்கின் விழைவுகளுக்கு அது நல்ல தாக்குதலைக் கொடுக்கிறது; ஏனெனில் அது இந்தியாவை ஒரு உலக சக்தியாக ஏற்றுமதி நிறைந்த வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு மூலதனம் மகத்தான முறையில் வருதல் ஆகியவற்றின் மூலம் மாற்றுவதில் பணயம் வைத்துள்ளது.

சாதாரண மனிதனின் கட்சி என்று காங்கிரஸ் காட்டிக் கொள்ளுதல்

எதிர்பார்த்தது போல், பதவியில் இருக்கும் காங்கிரஸ் எப்படியும் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பை குறைத்துக் காட்ட முயன்று, முந்தைய நான்கு ஆண்டுகளில் அதன் ஆட்சி எப்படி இந்திய வரலாற்றில் மிகப் பெரிய பொருளாதார விரிவாக்கத்தை கொண்டுவந்தது என்பதை பறைசாற்றுகிறது.

ஆனால் மிக வெளிப்படையாக செல்வத்தின் வளர்ச்சி, இந்திய பெருவணிகத்தின் சர்வதேச முயற்சிகள் பற்றி அதிகம் கொண்டாடாமல் இருப்பதில் காங்கிரஸ் கவனத்துடன் உள்ளது. BJP 2004 தேர்தலில் "இந்தியா ஒளிர்கிறது" என்றவிதத்தில் தேர்தல் பிரச்சாரம் நடத்தியதில் மக்களுடைய எதிர்மறை விடையிறுப்பில் இருந்து தேர்தல் படிப்பினைகளைக் கொண்டுள்ளது.

காங்கிரஸ் தன்னை "உள்ளடங்கிய" பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு கொடுப்பது, மற்றும் அனைத்து இந்தியர்களுடைய கட்சி என்று காட்டிக் கொள்ள முற்பட்டுள்ளது; குறிப்பாக சாதாரண மனிதர்களுடைய கட்சி என்று. "சாதாரண மனிதன் முன்னேறுகிறான்" என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் தலைப்புப் பக்கம் கூறுகிறது, "அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு தப்படியும் இந்தியாவை வலிமை ஆக்குகிறது."

இப்படிக் காட்டிக் கொள்வதில் காங்கிரஸ் பிரச்சாரம் UPA உடைய மிகக் குறைந்த வறுமை அகற்றும் மற்றும் கிராமப் புற வளர்ச்சித் திட்டங்களை உயர்த்திக் காட்டியுள்ளது; இதைத்தவிர தேர்தல் உறுதிமொழியாக 25 கிலோ அரிசி அல்லது கோதுமை ஒவ்வொரு மாதமும் ஏழைக் குடும்பத்திற்கு 3 ரூபாய் கிலோ என்ற விலையில் (10 சென்ட்டுகளுக்கும் குறைவு) வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இத்திட்டங்கள்--NREG எனப்படும் தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதத்தின் கீழ் கிராமப்புற வீடுகளில் ஒரு உறுப்பினராவது 100 நாட்கள் உடல் உழைப்பு செய்ய உத்தரவாதம் கொடுக்கப்படும்; அதற்கு அவர் நாள் ஒன்றுக்கு $1.25 பெறுவார்; இதைத் தவிர கடன் தள்ளுபடி திட்டமும் மிக அதிக அளவில் விவசாயிகள் தற்கொலையினால் உந்ததுதல் பெற்றதும் உள்ளது--கிராமப்புற இந்தியாவில் சமூக நெருக்கடியின் ஆழத்திற்கு உரிய சாட்சியங்கள் ஆகும். ஒரு சமீபத்திய அரசாங்க அளவையின்படி இந்தியர்களில் 77 சதவிகிதத்தினர் நாள் ஒன்றுக்கு 20 ரூபாயில்தான் காலம் கழிக்க வேண்டும் என்று தெரிய வந்துள்ளது (இதன் வாங்கும் திறன் $2 ஆகும்.)

"சாதாரண மனிதனுக்கு" தன்னுடைய பற்றைக் கூறுகையில், காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம் இரக்கமற்ற முறையில் இந்தியப் பெருவணிகத்தின் செயற்பட்டியலை செயல்படுத்தியது; சிறப்புப் பொருளாதர பகுதிகள் என்பவற்றை பரந்த அளவில் அதிகரித்தது; பொருளாதாரத்தின் புதிய துறைகளை, சில்லறை விற்பனை போன்றவற்றை வெளிநாட்டார் முதலீட்டுக்கு திறந்தது; இந்த ஆண்டு ஜனவரி மாதம் எண்ணெய் தொழிலாளர்கள், டிரக் டிரைவர்கள் வேலைநிறுத்தத்தை முறியடிக்க இராணுவத்தைப் பயன்படுத்தியது, இராணுவச் செலவினங்களை அதிகப்படுத்தியது (மிகச் சமீபத்திய பட்ஜேட்டில் இது 33% அதிகம் ஆக்கப்பட்டது). இந்தியாவின் பெரு வணிக உயரடுக்கு, வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளை பிணைத்துக் கொண்ட UPA அரசாங்கம் பற்றி களிப்படைந்தது; இது உலக அரங்கில் முக்கிய பங்கை அடைய வேண்டும் என்னும் அதன் விழைவுகளை விரைவுபடுத்தும் என்று கணக்கிடுகிறது.

வாக்குகளை நாடி, தன்னை வர்க்கத்திற்கு அப்பால் அனைத்து இந்தியர்களுடைய கட்சி என்று காட்டிக் கொள்ளும் விதத்தில் காங்கிரஸ், BJP மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் காட்டும் நச்சு வாய்ந்த வனப்புரை, வகுப்புவாதக் கொடுமைகளை கண்டிப்பது பயனுடையது என்று நினைக்கிறது. ஆனால் காங்கிரஸே நீண்ட வரலாற்றை இந்து வலதுடன் இணைந்து செயலாற்றியதில் கொண்டுள்ளது. கடந்த நவம்பர் மும்பை மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பின், காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம் BJP உடன் சடுதியில் சேர்ந்து கொண்டு கடுமையான புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைக் கொண்டு வந்தது; இது அடிப்படை குடி உரிமைகளை சிதைக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது சோனியா காந்தி, பிரதம மந்திரி மன்மோகன் சிங் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் பலமுறையும் BJP பயங்கரவாதிகளுடன் ஒத்துழைப்பதாக குற்றம் சாட்டினர் (ஏனெனில் 1999 ல் NDA அரசாங்கம் ஒரு கடத்தப்பட்ட விமானத்தை விடுவிக்க பேச்சு வார்த்தைகளை நடத்தியது); அதே நேரத்தில் 1984ல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அமிருதசரஸில் இருக்கும் சீக்கிய தங்கக் கோயிலைத் தாக்கும்படி உத்தரவிட்டது, காங்கிரஸின் பயங்கரவாத எதிர்ப்பின் உண்மைத் தன்மையைக் காட்டுகிறது.

"ஞாயிறு Economic Times-Synovate கருத்துக் கணிப்பு" மார்ச் மாதக் கடையிசில் 198 இந்திய தலைமை நிர்வாக அதிகரிகள் மீது நடத்தப்பட்டது, அவர்களுக்குள் 68 சதவிகிதத்தினர் UPA அரசாங்கம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆதரவு கொடுத்ததாக தெரிவிக்கிறது.

இந்திய முதலாளித்துவத்தின் மரபார்ந்த கட்சியான காங்கிரஸ் இந்திய உழைக்கும் வர்க்கத்தை முதலாளித்துவத் திட்டத்திற்கு பிணைப்பதில் தேர்ச்சி பெற்றதாக நிரூபித்துள்ளது; அவ்வாறு செய்கையில் அது அடிக்கடி ஸ்ராலினிஸ்ட்டுக்களிடம் ஊடாடி நின்று அவர்களை பயன்படுத்தியுள்ளது.

தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தின்போதும், காங்கிரஸ் கட்சியின் தலைமையிடம் பலமுறையும் இடது முன்னணியை UPA அமைத்தல், செயல்பாட்டிற்கு செய்த உதவியைப் பல முறை பாராட்டியுள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டவுடன் அதிகாரத்தைப் பெறுவதற்கு காங்கிரஸ் ஸ்ராலினிஸ்ட்டுக்களின் ஆதரவைப் பெறுவது என்பது ஒதுக்கப்பட்டுவிடவில்லை.

ஸ்ராலினிஸ்ட்டுக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக இந்தியா ஆக்கப்படுதல், மற்றும் புதிய தாராளக் கொள்கைகளை தொடர்தல் ஆகியவற்றிற்கு காங்கிரஸை கண்டித்துள்ளனர். ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்டுக்கள்) தலைமை இதுவரை காங்கிரஸுடன் கூட்டு இல்லை என்று உறுதியாகக் கதவுகளை மூடிவிடவில்லை. உண்மையில் அதன் இடது-மூன்றாம் அணி அரசாங்கத்திற்கான உத்தி பாராளுமன்றத்தில் அது பெரும்பான்மை அடைவதற்கு காங்கிரஸின் வாக்குகளை பெறுவதில் நம்பியுள்ளது.

உடன்பாட்டை காங்கிரஸுடன் இல்லாவிடின், பல வட்டார முதலாளித்துவக் கட்சிகளுடன் தயாரிப்பதில், CPM இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. முன்னர் இந்த ஒப்பந்தம் தூக்கியெறியப்பட வேண்டும் என்று இது அழைப்பு விட்டிருந்தது; இது இந்தியாவை ஒரு பிறரை நம்பியிருக்கும் உறவில் இது தள்ளிவிடும் என்று கூறிய கட்சி இப்பொழுது அந்த ஒப்பந்தம் மறு பேச்சுவார்த்தைகளுக்கு உட்படலாம் என்று தெரிவித்துள்ளது.

செவ்வாய் இரவு ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தோன்றிய CPM பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், CPM பாரக் ஒபாமா மற்றும் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் இவர்களின் கீழான அமெரிக்கா பற்றி முற்றிலும் நியாப்படுத்தப்பட முடியாத வேறுபாட்டை குறிப்பாகக் காட்டினார். "இந்திய அமெரிக்க உறவுகள் ஒரு புதிய தரத்தில் வளர்க்கப்படலாம் என்று நினைக்கிறேன். ஒபாமா ஜனாதிபதிக்காலம் இந்தியாவை எமது உறவை சீர்திருத்த உதவும் என்று நினைக்கிறேன். ...அமெரிக்காவுடனும் புதிய நிர்வாகத்துடனும் பல பிரச்சினைகளில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்....ஒரு ஜனநாயக நிர்வாகம், ஒபாமா நிர்வாகம் இருக்கும்போது, இந்த உடன்பாட்டை மாற்றுதல் குறித்தும் பேச முடியும்."