World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian election campaign enters final phase

இந்தியத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை அடைகிறது

By Keith Jones
11 May 2009

Use this version to print | Send feedback

புதனன்று இந்தியாவின் 543 லோக் சபா தொகுதிகளில் 86ல் உள்ள வாக்காளர்கள் ஒரு மாத கால தேசிய தேர்தல்களின் ஐந்தாம், இறுதிக் கட்டத்தில் வாக்களிக்க உள்ளனர். மூன்று நாட்களுக்கு பின்னர், நாட்டின் தேர்தல் ஆணையம் ஐந்து கட்டங்களிலும் நடைபெற்ற வாக்குகளைப் பிரித்து அறிவிப்பதுடன், தென் மாநில ஆந்திரப் பிரதேசம் மற்றும் கிழக்கு மாநில ஒரிஸ்ஸா ஆகியவற்றின் சட்ட மன்ற முடிவுகளையும் அறிவிக்கும்.

தேர்தல் காலத்தில் கருத்துக் கணிப்புக்கள் மற்றும் வாக்களித்தபின் மதிப்பீடு ஆகியவற்றை வெளியிடக்கூடாது. ஆனால் அடுத்த அரசாங்கம், தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை (UPA) ஐப் போல், ஒரு பல கட்சிக் கூட்டணியாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. 1984ல் தான் கடைசித் தடவையாக ஒற்றைக் கட்சியின் பெரும்பான்மை கொண்ட ஆட்சி நடைபெற்றது.

தேசிய கட்சிகள் எனப்படும் இரண்டும்--இரண்டிற்குமே நாட்டின் பெரும்பகுதிகளில் ஆதரவு கிடையாது--150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி அடையலாம் என்று எதிர்பார்க்கின்றன; இதன் பொருள் அடுத்த அரசாங்கத்திற்கு நிறைய மாநில மற்றும் சாதி அடிப்படை கொண்ட கட்சிகளின் ஆதரவு தேவை என்பதாகும். 2004 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 145 இடங்களை பெற்று மொத்த வாக்குகளில் 26.7 சதவிகிதத்தையும் திரட்டியது. இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி அல்லது பிஜேபி 138 தொகுதிகளை வென்று மொத்த வாக்குகளில் 22.2 சதவிகிதத்தை கொண்டிருந்தது.

இந்திய அரசாங்கத்தின் உறுதியற்ற தன்மையை சேர்ப்பதாக இருப்பது காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகியவற்றின் பல கட்சிக் கூட்டுக்கள் ஆகும்; அதே போல் ஸ்ராலினிசத் தலைமையில் இடது முன்னணி, முன்னாள் காங்கிரஸ் மற்றும் பிஜேபி நட்பு கட்சிகளை ஒன்றாக கொண்டுவந்து மூன்றாம் அணி என அழைக்கப்படுவதை ஏற்படுத்தியிருப்பதும் ஆகும்.

ஒரு சிதைவுற்ற தேர்தல் முடிவுகளை எதிர் நோக்கி, பாராளுமன்றத்தில் நடக்கவிருக்கும் பேரம் பேசல், அதன் செயல்திறன் ஆகியவற்றை அடுத்து இந்தியாவின் அடுத்த அரசாங்கம் அமைக்கப்பட இருப்பதையும் எதிர்பார்த்து, ஏராளமான வட்டாரக் கட்சிகள் முகாம்களை மாற்றிக் கொண்டன அல்லது தேர்தல் முடிந்த பின் பாராளுமன்ற கூட்டல் கழித்தலை அடுத்து என்ன செய்யக்கூடும் என்பதாகவும் கூறியுள்ளன.

காங்கிஸ் கட்சியை வடக்கே இந்தி பேசும் பகுதி மாநிலங்களான உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் மூன்று கட்சிகள் கைவிட்டுவிட்டன. புதிய அரசாங்கம் அமைப்பதில் இந்த மாநிலங்கள் முக்கிய பங்கை கொள்ளும்; ஏனெனில் இவை 250 மில்லியன் மக்களுக்கும் மேலானவர்களுக்கு தாயகம் ஆகும்.

பல வலதுசாரிக் கட்சிகள், முன்பு BJP உடன் கூட்டு வைத்திருந்தவை--தமிழ்நாட்டின் AIADMK, ஆந்திரப் பிரதேசத்தில் TDP, தற்போது ஒரிஸ்ஸாவில் அரசாங்கம் அமைத்துள்ள BJD-- ஆகியவை மூன்றாம் அணியின் நிறுவன உறுப்புக் கட்சிகளாக வருவதற்கு ஸ்ராலினிஸ்ட்டுக்களின் கோரிக்கையை ஒப்புக் கொண்டுள்ளன. வகுப்புவாத BJP உடன் முன்பு கூட்டு சேர்ந்திருந்தது ஒரு சுமை என்ற கணக்கீட்டில் அவை இவ்வாறு செய்து, இடது முரசிடும் இவர்களுடைய "மக்கள் சார்பு" மற்றும் "மதசார்பற்ற" தன்மை, கூடுதல் வாக்குகளைப் பெற உதவும் என்றும் நம்புகின்றன. TDP, BJD இரண்டுமே இதே நேரத்தில் மாநில சட்டமன்றத் தேர்தல்களையும் எதிர்கொள்ளுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தலின் "ஆறாம் கட்டம்" எனப்படும்--வாக்குகள் எண்ணப்பட்டவுடன் பரபரப்புடன் கூட்டு சேர்த்தல், முறித்தல் என நடப்பவை--நிகழ்வு பற்றி செய்தி ஊடகத்தில் அதிகமாக இருப்பது CPM மற்றும் அதன் இடது முன்னணி கொள்ளக்கூடிய முக்கிய பங்கைப்பற்றி உள்ளது. மே 2004 தேர்தல்களுக்கு பின்னர் இடது மற்ற கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு ஒரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவைக் கொடுத்தது. அது UPA இல் சேராவிட்டாலும், "வெளியில்" இருந்து ஆதரவு கொடுப்பதை விரும்பினாலும், குறைந்த பட்ச பொது வேலைத்திட்டம், UPA யின் வெளிப்படையான அரசாங்கத் திட்டம் இயற்றப்பட CPM உதவியது.

மே 2004 முதல் ஜூன் 2008 வரை இடது முன்னணி UPA ஐ அதிகாரத்தில் தொடர வைத்தது; ஆனால் அரசாங்கம் செயல்படுத்திய வலதுசாரி சமூகப் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் அதற்கு முன்பு இருந்த BJP தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் கொள்கைகளில் இருந்து அதிகம் வேறுபடவில்லை என்பதை ஸ்ராலினிஸ்ட்டுக்கள் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. அக்கூட்டணி இந்தியாவை 1998ல் இருந்து 2004 வரை ஆட்சி செய்தது.

இந்திய-அமெரிக்க சிவிலிய அணுசக்தி ஒப்பந்ததத்தில் கையெழுத்திடுவதற்காக இறுதியில் காங்கிரஸ் கட்சி ஸ்ராலினிஸ்ட்டுக்களுடன் உறவை முறித்துக் கொண்டது; புதுதில்லி மற்றும் வாஷிங்டன் இரண்டுமே அந்த உடன்பாட்டை இந்திய-அமெரிக்க உலக மூலோபாய பங்காளித்துவத்தை உறுதிபடுத்தும் என்று விளம்பரப்படுத்தின. ஆனால் காங்கிரஸ் தலைமை பலமுறையும் அது ஸ்ராலினிஸ்ட்டுக்களுடன் தேர்தலுக்குப் பின் பிணைப்பிற்கு தயார் என்று அடையாளம் காட்டியுள்ளது.

கடந்த வாரம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நேரு-காந்தி குடும்ப வம்சாவளியின் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, தன்னுடைய கட்சிக்கும் இடதிற்கும் இடையே "நிறைய பொது உணர்வுகள்" உள்ளன என்று அறிவித்தார். "இடது [பிரதம மந்திரி] மன்மோகன் சிங்கிற்கும் UPA அரசாங்கத்திற்கும் ஆதரவு கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.

தன்னுடைய பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி தான் "விரைவான இன்னும் அனைத்தையும் அடக்கும்" பொருளாதார வளர்ச்சியை கொடுக்க இருப்பதாகக் கூறியுள்ளது.

ஆனால் இந்தக் கருத்து ஆழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடியினால் குறைமதிப்பிற்கு உட்பட்டுவிட்டது. ஆரம்பத்தில் அரசாங்கம் இந்தியா பொருளாதார நெருக்கடியில் இருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் இருப்பதாகத்தான் கூறியது. ஆனால் அக்டோபர் மாதம் 8 சதவிகித வளர்ச்சியை தொடரவைக்கும் என்று அரசாங்கத்தால் கூறப்பட்ட இந்திய ஏற்றுமதிகள், கணிசமாகக் குறைந்துவிட்டன. ஆண்டு அடிப்படையில் ஏற்றுமதிகள் மார்ச் மாதம் 33 சதவிகிதம் சரிந்துவிட்டன.

இந்திய அரசாங்கம், இந்திய முதலாளித்துவத்தின் பிற்போக்குத்தனத்தின் அப்பட்ட அடையாளமாக வேலை பற்றிய புள்ளிவிவரங்களை முறையாக சேகரிப்பதில்லை. மார்ச் மாதம் அரசாங்கம் அரை மில்லியன் இந்தியர்கள் தங்கள் வேலைகளைப் பொருளாதார நெருக்கடியினால் இழந்துவிட்டதாக ஒப்புக் கொண்டது; ஆனால் சில மதிப்பீடுகள் பொருளாதார வல்லுனர்கள், வணிக அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து திரட்டிய விதத்தில் இன்னும் அதிகமான வேலை இழப்புக்களை, பல மில்லியன் கணக்கில் தெரிவிக்கின்றன.

உலக நிதிய நெருக்கடி கடந்த செப்டம்பரில் வெடிப்பதற்கு முன்னரே, சாதாரண இந்திய மக்கள் தீவிர உணவு, எரிபொருட்சக்தி விலை உயர்வினால் பெரும் பாதிப்பிற்கு ஆளாயினர்.

காங்கிரஸ் பிரச்சாரம் UPA- ன் வறுமை எதிர்ப்புத் திட்டங்களை எடுத்துக்கூறி, அவை இந்தியாவின் முதலாளித்துவ வர்க்கத்தின் மரபு கட்சியின் அரசாங்கம் எப்படி சாதாரண மக்களின் நலனைத் தன் இதயத்தில் கொண்டிருக்கிறது என்பதற்கு நிரூபணம் என்றும் தெரிவித்துள்ளது. முன்னோடியில்லாத வகையில் இருந்த பொருளாதார விரிவாக்கம் மற்றும் பெருத்த வருவாய் வந்த நிலையில், UPA அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டில் கணிசமாக இல்லை என்றாலும், ஓரளவு சமூக செலவினங்களை அதிகரித்திருந்தது.

ஆனால் "ஒரு மனிதாபிமான முகத்துடன் முதலாளித்துவம்" என்னும் காங்கிரஸின் கூற்றுக்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் வறுமை தாண்டவம் ஆடுகிறது. மக்களில் முக்கால் வாசிப் பேர் நாள் ஒன்றுக்கு 50 சென்டுக்களுக்கும் குறைவான (20 ரூபாய்க்கும் குறைவாக) பணத்தில்தான் வாழ்கின்றனர் (வாங்கும் திறனில் $2 க்கும் குறைவாக). காங்கிரஸால் விரைவான வளர்ச்சிக்கு உதவும் எனக் கூறப்படும் உறுதிமொழிகளுடன் இந்திய முதலாளித்துவம் 1991ல் இருந்து தொடரும் பொருளாதார "சீர்திருத்தங்கள்", -- அரசாங்க வருவாயை பெருவணிகம் ஆதரிக்கும் கட்டுமான திட்டங்களுக்கு ஆதரவு கொடுக்க திசை திருப்புதல், விவசாயத்திற்கு அரசாங்க உதவியைக் குறைத்தல், விலை ஆதரவிற்கு உதவி கொடுத்தது குறைக்கப்படல், சில மானியத் தொகைகளைக் குறைத்தல் போன்றவை -கிராமப்புற இந்தியாவை அழித்துக் கொண்டிருக்கும் நெருக்கடியின் வேர்கள் ஆகும்.

பயங்கரவாதத்தின் மீது அது மிருதுவாக இருப்பதாகவும் அதற்குக் காரணம் "முஸ்லிம் வாக்கு வங்கியை" இழக்க விரும்பவில்லை என்னும் BJP வகுப்புவாதத் தன்மையில் எழுப்பிய குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் விடையிறுக்கும் வகையில், அதன் வலதுசாரி கணைகளை விட்டுள்ளது. கட்சித் தலைவர் சோனியா காந்தி மன்மோகன் சிங் மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பல முறையும் BJP பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்பட்டதாகவும் அவர்களை "விருந்தாளிகள் போல் நடத்தியதாகவும்" கூறியுள்ளனர். ஏனெனில் 1999ம் ஆண்டு அப்பொழுது இருந்த BJP தலைமையிலான அரசாங்கம் கடத்தப்பட்ட விமானம் விடுவிக்கப்படுவதற்காக பேச்சு வார்த்தைகளை நடத்தியது. விடையிறுப்பின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் UPA அரசாங்கத்தின்கீழ் இராணுவ செலவு எப்படி மிக அதிகமாக்கப்பட்டுள்ளது என்றும், அடிப்படை உரிமைகளையும் பாதிக்கும் புதிய கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன என்றும் கூறியது.

BJP பிரச்சாரம் இந்து பேரினவாத முறையீடுகளை அதிகமாகக் கொண்டிருப்பதுடன் இந்தியாவின் முக்கிய விரோத நாடான பாக்கிஸ்தான் மீது பெரும் அச்சுறுத்தல்களைக் கொண்ட விதத்திலும் உள்ளது. BJP எல்.கே. அத்வானியை பிரதம மந்திரி வேட்பாளராக, ஒரு வலுவான தலைவர் என்று முன்னிறுத்தியுள்ளதுடன் வலுவற்ற "மன்மோகன் சிங்"கிற்கு எதிராகவும் அவரை ஒப்பிட்டுக் காட்டியுள்ளது.

பாசிச RSS ன் வாழ்நாள் உறுப்பினரான அத்வானி மக்களை திருப்திப்படுத்திப் பேசும் அரசியல் வாதியாவார். அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்கும் பிற்போக்குத்தன நடவடிக்கைக்கு அவர் தலைமை தாங்கினார்--அது 1992-93ல் பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவில் மிக மோசமான வகுப்புவாதக் கலவரத்தின் உச்சக்கட்டத்தை அடைந்தது.

காங்கிரஸை போலவே BJP யும் பல மக்களை திருப்திப்படுத்தும் திட்டங்களை அறிவித்துள்ளது; இதில் ஒவ்வொரு வறிய குடும்பத்திற்கும் மாதம் 35 கி.கிராம் கோதுமை அல்லது அரிசி, கிலோ 2 ரூபாய்க்குக் கொடுக்கப்படும் என்பதும் அடங்கியுள்ளது.

ஸ்ராலினிஸ்ட்டுக்கள் வாடிக்கையாக காங்கிரஸை, அதன் புதிய தாராளவாதக் கொள்கைகளுக்காகவும், அது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான நட்பிற்கு ஆதரவாக இந்தியாவின் "சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை" கைவிட்டதற்காகவும் கண்டித்து வருகின்றனர்.

ஆனால் மூன்றாம் அணியில் உள்ள அதன் தோழமைக் கட்சிகள் வலது சாரிக் கட்சிகள் ஆகும்; அவை அனைத்தும் இந்திய முதலாளித்துவத்தின் உந்துதலான இந்தியாவை ஒரு குறைவூதிய உழைப்பு கிடைக்கும் பாதுகாப்பான இடமாக உலக முதலாளித்துவத்திற்கு மாற்றியதில் உதவியவர்கள். அப்படிப் பார்த்தால் மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுராவில் உள்ள ஸ்ராலினிச மாநில அரசாங்கங்களும் அப்படித்தான் இருந்துள்ளன. மேற்கு வங்கத்தில் இடது முன்னணி இந்திய மற்றும் வெளி முதலீட்டிற்காக போலீசாரையும், குண்டர்களையும் பயன்படுத்தி வன்முறையில், இரக்கமற்ற முறையில் நிலங்களை எடுத்துக் கொண்டதில் வெளிப்பட்டிருந்த, அதன் முதலீட்டாளர் ஆதரவுக் கொள்கைக்கு ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பின் விளைவாக, கணிசமான தேர்தல் இழப்புக்களை அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CPM பொதுச் செயலாளர் பிரகாஷ் காரட் ஸ்ராலினிஸ்ட்டுகள் ஒரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு தரமுடியாது என்று உறுதியளித்துள்ளார். ஆனால் கட்சியின் மற்ற தலைவர்கள், குறிப்பாக CPM மேற்கு வங்கக் கோட்டையில் உள்ளவர்கள் ஒரு தெளிவற்ற நிலையைத்தான் கொண்டுள்ளனர். மே 3ம் தேதி CPM ன் அரசியற்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்: "மக்கள் எங்களை நாங்கள் மறுபடியும் காங்கிரஸை ஆதரிப்பீர்களா எனக் கேட்கின்றனர்? ஒரு அரசியல் போர் நடந்து கொண்டிருக்கிறது, நாங்கள் காங்கிரஸ், BJP இரண்டையும் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் தோற்றால் என்ன செய்யப்போகிறோம் என்பதைக் கேட்டால், போரிடுவதால் பயன் என்ன என்றுதான் கூறவேண்டும்." அடுத்த நாள் யெச்சூரி இன்னும் வெளிப்படையாக கூறினார்: "காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு என்னும் தேவை வராது என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்."

முதலாளித்துவ இந்திய நடைமுறையில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் முக்கிய பகுதியாக உள்ளனர். தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி வர்க்கப் போராட்டத்தை அடக்கி இந்திய தொழிலாளர்களின் எதிர்ப்பை முதலாளித்துவ அரசியல் அமைப்பின் ஏதேனும் ஒரு பிரிவிற்குப் பின்னே தள்ளிவிடுகின்றனர்; அது காங்கிரஸாக இருக்கலாம் அல்லது உறுதியற்ற வட்டார, சாதிக் கட்சிகளின் கூட்டாக இருக்கலாம், பிஜேபி, காங்கிரஸின் கடந்த கால அல்லது வருங்கால தோழமைக் கட்சியாகவும் இருக்கலாம்.