World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistani military intensifies its offensive

தன்னுடைய தாக்குதலை பாக்கிஸ்தானிய இராணுவம் தீவிரப்படுத்துகிறது

By Keith Jones
8 May 2009

Use this version to print | Send feedback

ஒரு பெருகிய போரினால் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடி வந்துள்ளது என்ற தகவல்கள் வந்துள்ள நிலையில், பாக்கிஸ்தானின் இராணுவப் படைகள் ஸ்வாட் மற்றும் இரு அடுத்தடுத்து பாக்கிஸ்தான் வட மேற்கு எல்லைப் புற மாவட்டங்களில் பாக்கிஸ்தானிய தாலிபான் எழுச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப் படுத்தியுள்ளன. இதற்கிடையில், நாட்டின் அரசியல் மற்றும் தலைவர்கள் பஷ்டுன் பேசும் மாகாணம் முழுவதும் குருதி கொட்டியாவது அரசாங்கத்தின் மேலாதிக்கம் மீண்டும் நிலை நிறுத்தப்படும் வரையில் தாக்குதல் தொடரும் என்று தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

வியாழன் மாலையில் நாட்டிற்கு தொலைக்காட்சி உரை ஒன்றை நிகழ்த்திய பாக்கிஸ்தானின் பிரதம மந்திரி யூசுப் ராசா கிலானி, அரசாங்கம் "போராளிகளையும் பயங்கரவாதிகிளையும் அகற்றும்" என்று கூறினார். அதற்கு முன் இதே நாளில் இராணுவத் தலைமைத் தளபதி அஷ்பக் பர்வேஸ் காயானி இராணுவப் படைத் தளபதிகளிடம் "தற்போதைய பாதுகாப்பு நிலைமக்கு நாட்டின் அனைத்து அதிகாரக் கூறுபாடுகளும் பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற ஆபத்தை எதிர்த்துப் போராட நெருக்கமான ஒருங்கிணைப்புடன் வேலைசெய்ய வேண்டும்" என்றார். "இராணுவம் போராளிகளுக்கு எதிராக உறுதியான ஏற்றம் பெறுவதற்குத் தேவையான வளங்களை பயன்படுத்தும்" என்று அவர் தொடர்ந்து கூறினார்.

கிலானி மற்றும் காயானியின் உரைகள் தங்கள் பாக்கிஸ்தான் பார்வையாளர்களுக்கு இலக்கு கொண்டதைப் போலவே வாஷிங்டனையும் இலக்கு கொண்டிருந்தன. கடந்த வாரம் அமெரிக்க-பாக்கிஸ்தானிய-ஆப்கானிய ஜனாதிபதிகளின் முத்தரப்பு உச்சிமாநாட்டில் பங்கு பெறுவதற்கு சென்றிருந்த போது, பாக்கிஸ்தானில் தாலிபனின் உள்ளூர் எழுச்சியை இன்னும் ஆக்கிரோஷமாக அடக்கவும் ஆப்கன் தாலிபனின் "பாதுகாப்பான புகலிடங்களை" களைந்துவிட வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ஒபாமா நிர்வாகம், பென்டகன், தேசிய சட்ட மன்றத் தலைவர்கள் மற்றும் செய்தி ஊடகத்தில் இருந்து கடுமையான அழுத்தத்தைப் பெற்றார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள், பெரும்பாலும் வறிய கிராமவாசிகள், மிக அதிக அமெரிக்க அழுத்தத்தை ஒட்டி பாக்கிஸ்தான் இராணுவம் அதன் தாலிபான் எதிர்ப்புத் தாக்குதலை ஏப்ரல் 26 ல் ஆரம்பித்ததில் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தப்பியோடத் தொடங்கி விட்டனர். மிக அதிக பளுவான பீரங்கிப்படைகள், F-16 போர் ஜெட்டுக்கள், மற்றும் ஹெலிகாப்டர் குண்டுத் தாக்குதல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பாக்கிஸ்தானின் துருப்புக்கள் NWFP மாவட்டங்களான கீழ் டீர், புனேர் மற்றும் இந்த வாரம் ஸ்வாட் பள்ளத்தாக்கு ஆகியவற்றில் கடுமையான குண்டு வீச்சை நடத்தி, பரந்த முறையில் சாதாரண குடிமக்கள் இறப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

வியாழக்கிழமை Dawn பதிப்பின்படி அதற்கு முதல் நாள் 35 சாதாரண குடிமக்கள் "துருப்புக்களுக்கும் போராளிகளுக்கும் இடையே நடந்த குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தனர்", அல்லது "ஸ்வாட்டில் பல பகுதிகளில் [அரசாங்க] ஊரடங்கு முறையை மீறியதற்காக பீரங்கித் தாக்குதல் மூலம் இராணுவத்தால் கொல்லப்பட்டனர்" என்று தெரிகிறறது.

கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் சமீபத்திய பூசலால் இடம் பெயர்ந்துள்ளனர் என்று International Committee Red Cross நேற்று ஒரு அறிக்கையில் எச்சரித்துள்ளது. ஏற்கனவே 300,000 முதல் 600,000 என்று மதிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையோடு சேராத அதிக எண்ணிக்கையாகும் இது; அந்த உள்நாட்டில் அகதிகள் ஏற்பட்டதற்கு அண்டைப் பகுதியான தன்னாட்சி கொண்ட கூட்டாட்சி நிர்வாக பழங்குடி பகுதிகளில் (FATA) கடந்த இரு ஆண்டுகளாக நடத்தல் காரணம் ஆகும்.

பலரும் தங்கள் வீடுகளில் இருந்து புனேர், கீழ் தீர் மற்றும் ஸ்வாட்டில் இருந்து கால் நடையாக நடந்து தப்பியுள்ளனர்; மிகக் கடினமான மலைக் கணவாய்களைக் கடந்தனர்; ஆனால் இறுதியில் போர் இல்லாத சிறு நகரங்களை அடைந்தபோது அரசாங்கம் அவர்களுக்கு எந்தவித ஏற்பாடும் செய்யவில்லை. செவ்வாயன்று நியூ யோர்க் டைம்ஸில் வந்த அறிக்கை ஒன்று ஆயிரக்கணக்கான அகதிகள் மார்டனில் ஒரு மருத்துவமனைமீது பாய்ந்து நிற்கும் உள்ளத்தை உருக்கும் சித்திரத்தை கொடுத்துள்ளது.

முன்பு பாக்கிஸ்தான் அதிகாரிகள் இடம் பெயர்ந்த மக்களுக்காக ஆறு அகதிகள் முகாம்களை நிறுவி இருப்பதாகக் கூறியிருந்தனர். நாட்டுக்கு ஆற்றிய உரையில் கிலானி பெரிய தொகையான 1 பில்லியன் பாக்கிஸ்தான் ரூபாய்கள் ($12.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) இடம் பெயர்ந்தோருக்கு உதவ, மறுவாழ்விற்காக ஒதுக்கப் போவதாகக் கூறியிருந்தது.

McClatchy Newspapers ல் வந்துள்ள, "Pakistani army flattening villages as it battles Taliban" என்ற தலைப்புடைய கட்டுரை, பாக்கிஸ்தானிய இராணுவம் ஏழை விவசாயிகள், மேய்ப்பவர்கள் என்று தாலிபான் ஆதிக்கத்தில் இருந்து தான் விடுவிப்பதாகக் கூறிக்கொள்ளும் மக்களுடைய உயிர்கள், வாழ்க்கை முறை ஆகியவை பற்றி பொருட்படுத்தவதில்லை. என்று சுட்டிக்காட்டுகிறது. புனேரில் உள்ள ஒரு 45 வயது கிராமவாசி, "நாங்கள் ஒரு தாலிபானையும் இங்கு பார்த்ததில்லை. அவர்கள் மலைகளில் வாழ்கின்றர்; இருந்தபோதிலும்கூட இராணுவம் எங்கள் கிராமங்களைத் தரை மட்டம் ஆக்குகிறது" என்று மேற்கோளிட்டுத் தெரிவித்துள்ளது. புனேரில் இருந்து தப்பி ஓடிய மற்றொருவர் காவ்கா என்னும் அவருடைய கிராமத்தில் 400 வீடுகளில் 80 வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன என்றார். "ஒரு தாலிபானை கூட அவர்கள் கொன்றனர் என்று நான் நினைக்கவில்லை. சாதாரண மக்களைத்தான் கொல்லுகின்றனர்."

பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரி ஒருவர் McClatchy அறிக்கையின்படி, பாக்கிஸ்தானில் நடப்பவற்றை கண்காணிப்பவர், பாக்கிஸ்தானிய இராணுவம் "வெறும் அழிப்பு வேலையில்தான் ஈடுபட்டுள்ளது. உண்மையான பணிகளைச் செய்வதில் அதன் திறன் பூஜ்யம்தான்" என்றார்.

ஒபாமா நிர்வாகமும் அமெரிக்கச் செய்தி ஊடகமும் பாக்கிஸ்தான் இராணுவம், மற்றும் தன் இராணுவத்தின் மனித உரிமை நெருக்கடிக்கான பொறுப்பை, NWFP மற்றும் FATA பகுதிகளில் செய்யாததை மன்னிக்கும் வகையில் இராணுவம் கிளர்ச்சி எதிர்ப்பு கருவிகள், பயிற்சி ஆகியவற்றைக் கொள்ளவில்லை என்று கூறுகின்றன.

உண்மையில் இராணுவம், இகழ்வுற்ற, பல தசாப்தங்கள் பாக்கிஸ்தானிய மக்களை கொள்ளையடித்த, அடிப்படை ஜனநாயக உரிமைகளை அடக்கிய மற்றும் அவர்களுக்கு எதிராக மிருகத்தனமான வெறியைச் செலுத்திய வரலாற்றைத்தான் கொண்டுள்ளது--இவை அனைத்தும் பென்டகன் மற்றும் அமெரிக்க அரசியல் உயரடுக்கின் ஆதரவு, புரவலர்தன்மை ஆகியவற்றைக் கொண்டு நடைபெற்று வருகின்றன; அவைதான் பாக்கிஸ்தானின் மிக நேர்த்தியான திறமையான அமைப்பு இராணுவம் என்று பாராட்டுகின்றன.

ஆப்கானிஸ்தானில் நடப்பதைப் போலவே --அங்கு அமெரிக்கப் படைகள் மிக அதிகமாக சிவிலிய இறப்புக்களை ஏற்படுத்தியுள்ளளனர்-- பாக்கிஸ்தானின் இராணுவம் மேற்கொண்டுள்ள வன்முறையும் பஷ்டுன் மக்கள்மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எழுச்சிக்கு எரியூட்டுவதில் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. இந்த வன்முறையில் எழுச்சி எதிர்ப்புப் போரில் போதிய ஆதரவு கொடுப்பதில்லை என்ற கருதப்படும் பகுதிகளில் குடியேற்ற முறையில் கூட்டுத் தண்டனைகள் கிராமங்கள் மற்றும் FATA பழங்குடி மக்கள் மீது விதிக்கப்படுவது வாடிக்கையாக நடைபெறுகிறது.

பாக்கிஸ்தானுக்குள் தாலிபன் எழுச்சி என்பது பஷ்டுன் பேசும் பகுதிகளில்தான் உள்ளது. ஆனால் ஸ்வாட் பள்ளத்தாக்கில் அது சமீபத்தில் பரவியிருப்பது, தாலிபனின் உருவாகி வரும் வெற்றி என்பது, டைம்ஸ் ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருப்பது, அடக்கப்பட்ட விவசாயிகளுக்கு சமூகப் பொருளாதார குறைபாடுகள் பற்றிய முறையீட்டைக் கொண்டிருக்கிறது; இது பாக்கிஸ்தானிய உயரடுக்கின் பிரிவுகளுக்குள் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. பாக்கிஸ்தானிய வர்ணனையாளர்கள் NWFP க்கும் தெற்கு பஞ்சாப் பகுதிக்கும் இடையே இணைந்த தன்மையை குறித்துள்ளனர். இரு இடங்களிலும் பாக்கிஸ்தானிய அரசாங்கம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை கல்வி மற்றும் சமூகப் பணிகளை கொடுக்க அனுமதித்துள்ளது. தான் இதைக் கொடுக்கவில்லை. இதையொட்டி இஸ்லாமிய போர்க்குணம் வளர்ந்துள்ளது; அதன் வீரர்கள் வறிய பிரிவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; அதன் புவி-அரசியல் மூலோபாயத்திற்கு பயனுடைய கருவிகளாக அவர்கள் இருக்கின்றனர். இரு பகுதிகளிலும் ஆழ்ந்த வர்க்கப் பிளவு ஒரு சிறிய பகுதி நிலப்பிரபுத்துவ முறை பிரபுக்களுக்கும் ஒரு வறிய விவசாயிகள் தொகுப்பிற்கும் இடையே நிலவுகிறது.

பெரும்பாலான ஆயுதங்கள், எண்ணெய், உணவு என்று ஆப்கானியப் போருக்கு தேவைப்படுவதை அனுப்ப வழிகொடுப்பதற்கு பாக்கிஸ்தானை வாஷிங்டன் தொடர்ந்து நம்பியுள்ளது; தற்போதைய பாக்கிஸ்தானிய இராணுவத்தின் தாக்குதலை அது வரவேற்கிறது; வருங்காலத்திலும் இது "தொடர்ந்து நீடிக்க வேண்டும்" என்று அது எதிர்பார்ப்பதையும் தெளிவாக்கியுள்ளது.

முத்தரப்பு உச்சி மாநாட்டிற்கு பின் பகிரங்கமாக தோன்றியபோது சர்தாரியும் ஒபாமாவும் சிரிப்புக்களை உதிர்த்தனர்; ஆனால் திரைக்குப் பின் பதட்டங்கள் நன்கு மேலாதிக்கம் கொண்டிருந்தன.

உச்சிமாநாட்டிற்கு முன்பு ஒபாமாவும் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளும் பாக்கிஸ்தானின் சிவில் அரசாங்கம் தப்புமா என்ற கேள்வியை எழுப்பி தொடர்ச்சியான அறிக்கைகளை வெளியிட்ட வண்ணம் இருந்தனர்; இந்த அறிக்கைகள் மிகப் பரந்த அளவில் இஸ்லாமாபாத்திலும் வாஷிங்டனிலும் ஒபாமா நிர்வாகமும் பென்டகனும் பாக்கிஸ்தானைப் பொறுத்தவரையில் தங்கள் விருப்புரிமையை பரிசீலிக்கின்றன என்றும் மற்றொரு இராணுவ ஆட்சிக்கு மீண்டும் ஆதரவு கொடுக்கக்கூடும் என்றும் விளக்கம் காணப்பட்டது.

புதனன்று காபிடல் ஹில்லில் தோன்றிய ஒபாமாவின் ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானுக்கான சிறப்புப் பிரதிநிதி ரிச்சார்ட் ஹோல்ப்ரூக் நிர்வாகம் "B திட்டம்" பற்றி விவாதிக்கக்கூட செய்யாது என்றும் அதற்கு காரணம் சர்தாரியின் "நெறியை" குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்குமில்லை என்றும் கூறுவது உகந்தது என்று நினைத்தார்.

நியூ யோர்க் டைம்ஸில் வந்துள்ள அறிக்கை ஒன்றின்படி, வாஷிங்டனுக்கு சர்தாரி வருகை தந்தபோது, ஒபாமா நிர்வாக அதிகாரிகள் "தனிப்பட்ட முறையில் அவர்கள் ஒப்புக் கொண்டது பற்றி" அதிகம் கூறவில்லை; "அதில் மிகவும் முக்கியமானது, பாக்கிஸ்தானிய அரசாங்கம் மற்றும் இராணுவம் இரண்டையும் துருப்புக்களை கிழக்கில் இருந்து நகர்த்துவது பற்றி"

டைம்ஸின் கூற்றை நம்பலாம் என்றால், அமெரிக்கக் கோரிக்கைகள் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளன. இப்பொழுது லாகூரைத் தளமாகக் கொண்டுள்ள பாக்கிஸ்தானின் 11வது தரைப்படைப் பிரிவு, இந்திய நகரமான அமிருதசரஸ்ஸில் இருந்து அரை டஜன் மைலுக்கு அப்பால்தான் இருக்கும் இடம், வாஷிங்டனால் பாக்கிஸ்தானின் வட மேற்குப் பகுதியை விட கூடுதலான இராணுவ சிப்பாய்களைக் கொண்டிருந்தது.

குளிர்யுத்த காலத்தில் இந்தியா சோவியத் ஒன்றியத்துடன் பிணைந்திருக்கையில், பாக்கிஸ்தான் இந்தியாவுடனான அதன் வரலாற்றுப் போட்டியை தொடருமாறு அமெரிக்கா ஊக்கம் கொடுத்திருந்தது. ஆனால் பாக்கிஸ்தான் உயரடுக்கிற்கு பெரும் கவலையைக் கொடுக்கும் விதத்தில் வாஷிங்டன் கடந்த தசாப்தம் முழுவதும் சீனாவிற்கு எதிரான புவி அரசியில் எதிர் கனத்திற்கு திறன் உடைய நாடு என்று இந்தியாவை ஊடாடுகிறது. சமீபத்தில் இந்தியாவிற்கு என்று பிரத்தியேகமாக உலக அணுசக்தி வணிகத்தில் இருக்கும் நிலைப்பாட்டை மாற்றி, இந்தியா சிவிலிய அணுசக்தி பயன்படாட்டிற்கு தேவையானவற்றை இறக்குமதி செய்யும் தகுதியை கடந்த 35 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் தடவையாக பெறக்கூடிய வசதியை அளித்துள்ளது மட்டும் இல்லாமல், அதையொட்டி அதன் அணுவாயுத கிடங்குகளை வளர்க்கும் வகையில் அதன் உள்நாட்டு அணுசக்தித் திட்டத்தை அமைத்துக் கொள்ளவும் வகை செய்துள்ளது. அமெரிக்கா கொடுத்த ஊக்கத்தினால், இந்தியா ஆப்கானிஸ்தானில் உள்ள கர்சாயல் அரசாங்கத்திற்கு முக்கிய தூணாக வந்துள்ளது, நாட்டின் மிகப் பெரிய வணிகப் பங்காளியாகவும் உள்ளது.

பாக்கிஸ்தானிய உயரடுக்கின் முன்னோக்கில், இந்திய-அமெரிக்க மூலோபாயப் பங்காளித்துவம் இந்தியாவிற்கு நவீன இராணுவத் தொழில்நுட்பத்தை அமெரிக்கா விற்பனை செய்வதை தளமாகக் கொண்டிருப்பது ஒரு பெரும் அச்சுறுத்தலை காட்டுகிறது. தீவிர இந்திய அழுத்தத்தின் பேரில், ஒபாமா நிர்வாகம் பதவிக்கு வந்த பின், காஷ்மீர் பூசல் பற்றிய இந்திய பாக்கிஸ்தான் நிலைப்பாட்டை தீர்ப்பதில் அது தலையிடக்கூடும் என்று கூறியிருந்ததை கைவிட்டுவிட்டது என்பது இஸ்லாமாபாத்தில் கவனிக்கபடாமல் போகவில்லை.

பாக்கிஸ்தான் நாட்டைச் சூழ்ந்துள்ள தீவிர பொருளாதார அரசியல் நெருக்கடி பற்றி நன்கு உணர்ந்துள்ள இந்திய உயரடுக்கு இதற்கிடையில் இஸ்லாமாபாத்திற்கு எதிராக பெருகிய முறையில் ஆக்கிரோஷ தோற்றத்தைக் காட்டுகிறது. கடந்த நவம்பர் மாதம் மும்பையில் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, புது தில்லியில் இருந்து பல முறை அச்சுறுத்தல்கள் பாக்கிஸ்தானுக்குள் எல்லை கடந்து தாக்குதல் இருக்கக்கூடும் என்ற நிலை இருந்தது.

தன்னுடைய பங்கிற்கு வாஷிங்டன் மும்பை தாக்குதலை தன் நலனுக்கு பயன்படுத்தும் வகையில் புது தில்லி மீது தடுப்பை கொடுத்து, அதே நேரத்தில் இஸ்லாமாபாத் தாலிபானை அடக்குவதில் தான் சொல்வதை கேட்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.