World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The meaning of Europe's "step change" in Afghanistan

ஆப்கானிஸ்தானில் ஐரோப்பிய "திடீர்மாற்றத்தின்" பொருள்

Chris Marsden
3 November 2009

Use this version to print | Send feedback

ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் ஒரு செயல் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் கொடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியக் கொள்கையில் "திடீர்மாற்றம்" என்று விவரிக்கப்படும் இது, வாஷிங்டனின் ஏகாதிபத்திய அபாயச்செயலுக்கு முழு ஆதரவை ஐரோப்பிய சக்திகள் கொடுக்கின்றன என்பதைத் தெளிவாக்குவதுடன் இப்பகுதியில் அமெரிக்கப் போர் இயந்திரத்திற்கு சிறு அளவில் உதவுவதின் மூலம் தங்கள் நலன்களையும் பாதுகாக்க விரும்புகின்றன.

கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மந்திரிகள் லுக்சம்பேர்க்கில் கூடியபோது அவர்களால் நியமிக்கப்பட்ட குழு அப்பகுதியில் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பதாக அறிவித்ததை அவர்கள் எதிர்கொண்டு ஆப்கானிஸ்தானுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இன்னும் உதவி அளிப்பதாக உறுதியளித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து விரைவில் வெளியேற வேண்டும் என்னும் பெரும்பாலான மக்கள் உணர்வைச் சிறிதும் மதிக்கும் விருப்பமற்ற ஐரோப்பிய அரசாங்கங்களின் நிலைதையை தெளிவாக்கும் விதத்தில் அறிக்கை கூறுகிறது: "ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமை ஐரோப்பாவின்மீது நேரடித் தாக்கத்தை கொண்டுள்ளது. இன்று நாம் எதிர்கொள்ளும் மிகத் தீவிர உலகளாவிய அச்சுறுத்தல்களில் பலவும் அப்பகுதியில்தான் உள்ளன."

ஆப்கானிஸ்தானிற்கு தொடர்ந்து ஒருங்கிணைந்த சர்வதேச ஆதரவிற்கு அழைப்பு விடுத்த அறிக்கை "பின்னர் ஆப்கானிய அரசாங்கம் முழுப் பொறுப்பையும் ஏற்கும் என்றாலும், இது ஒரு சர்வதேச "வெளியேறும் மூலோபாயத்திற்கு" சமம் ஆகாது." என்று தெரிவித்துள்ளது.

"ஐரோப்பிய ஒன்றியம் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தானில் நிலவும் சிக்கல் வாய்ந்த சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது" என்று செய்தி ஊடக அறிக்கை உறுதிமொழி கொடுக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சி தலைமையை இப்பொழுது கொண்டுள்ள ஸ்வீடனின் வெளியுறவு மந்திரி Carl Bildt ஐரோப்பியக் குழு இன்னும் கூடுதலாக 200பில்லியன் யூரோக்களை அதன் புதிய மூலோபாயத்திற்கு ஆதரவு கொடுப்பதற்கு வரும் மாதங்களில் செலவழிக்கும் என்று அறிவித்துள்ளது. இது ஏற்கனவே கடந்த ஆண்டு செலவழிக்கப்பட்ட 1 பில்லியன் யூரோவைத் தவிர மேலதிகமாக செலவழிக்கும் பணம் ஆகும். வெளியுறவு மந்திரிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய போலீஸ் பணிக்கு (EUPOL) க்கு கூடுதல் அதிகாரிகள் நியமிக்கவும் உறுதியளித்துள்ளனர். இதில் தற்பொழுது உறுதியளிக்கப்பட்டுள்ள 400 போலீஸ் அதிகாரிகளுக்கு பதிலாக 271 பேர்தான் உள்ளனர்.

இப்பகுதியில் இராணுவரீதியான தீர்வு மட்டும் உறுதியைக் கொடுத்துவிடாது என்ற ஐரோப்பிய நம்பிக்கையை இந்த ஆவணம் வலியுறுத்துகிறது. பைனான்சியல் டைம்ஸிடம் Carl Bildt கூறினார்: "ஆப்கானிஸ்தானில் செயல்படக்கூடிய ஒரு அரசாங்கத்தை நாம் நிறுவாவிட்டால், ஏதேனும் முறையான ஆட்சியை அமைக்காவிட்டால், நம்முடைய மற்ற முயற்சிகள் அனைத்தும் தோல்வியுறும்."

தன்னுடைய முக்கிய நோக்கம் பாக்கிஸ்தானுடன் "ஒரு விரிவான, வலுவான மூலோபாய உறவை" வளர்த்துக் கொள்ளுவதும், "அந்த பிராந்திய நாடுகளான இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான், துருக்கி, வளைகுடா நாடுகள் ஆகியவற்றுடன் கூடுதலான உரையாடலின் தேவையும் ஆகும்" என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

இவ்விதத்தில் அமெரிக்க கொள்கை பற்றிய உட்குறிப்பான குறைகூறல்கள் இருந்தாலும், இந்த ஆவணம் இப்பொழுது வெள்ளை மாளிகையும், பென்டகனும் நடத்தும் எழுச்சி-எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முற்றிலும் வெளிப்படையான ஆதரவைத்தான் பிரதிபலிக்கிறது. அமெரிக்கத் தலைமையிலான போருக்கு தாங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு முக்கிய, உண்மை நிபந்தனையாக ஐரோப்பிய சக்திகள் விரும்புவது அமெரிக்க படையினர் அதிகளவு போரிடவேண்டும், இறக்க வேண்டும் என்பதுதான். ஐரோப்பிய ஒன்றியத்தின் நம்பிக்கையற்ற "அரசியல் உடன்பாடுகள்" தேவை என்பது பற்றிய பேச்சுக்கள், அரசாங்கத்தை அமைப்பது, ஜனநாயக ஆட்சி முறை ஆகியவை அனைத்தும் ஆப்கானிய எழுச்சியை இராணுவத்தின் மூலம் அடக்குவதை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.

ஐரோப்பிய நாடுகள் தளபதி ஸ்டான்லி மக்கிரிஸ்டன் கோரும் ஆப்கானிஸ்தானிற்கு கூடுதலாக 40,000 துருப்புக்கள் அனுப்பப்பட வேண்டும் என்பதற்கு வெளிப்படையான ஆதரவைக் கொடுக்கின்றன என்பதை இது விளக்குகிறது. முந்தைய வாரம் நேட்டோ வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தை தொடர்ந்து Carl Bildt பின்வருமாறு அறிவித்தார்: "மக்கிரிஸ்டல் அறிக்கை மிகத் தெளிவாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் வெற்றி பெறுவதற்கு இராணுவ, பாதுகாப்பு முயற்சிகள் மிகவும் முக்கியமாகும். ஆனால் அரசியல் பொது முயற்சி இல்லாவிட்டால் இவை எந்த முடிவையும் கொடுக்க முடியாது."

"அரசியல் பொது முயற்சி" பற்றி ஐரோப்பிய ஒன்றியம் ஆக்கிரமிப்பிற்கு தேவையான "இராணுவ பாதுகாப்பு முயற்சிகளை" அமெரிக்கா எந்த அளவிற்கு செய்யுமோ அந்த அளவிற்குத்தான் முக்கியத்துவம் காட்டும். மக்கிரிஸ்டலுடைய பரிந்துரைகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வந்துள்ள 35,000 துருப்புக்களுடன் ஒப்பிடுகையில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகளை கிட்டத்தட்ட 105,000 என்ற நிலைக்கு கொண்டுவரும். இந்த எண்ணிக்கை கூட தவறான கருத்தைக் கொடுக்கக் கூடும். ஏனெனில் ஜேர்மனி, ஸ்பெயின் உட்பட பல நாடுகள் தங்கள் படையினர் போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் சில பொதுவான தடைகளைக் கொடுத்துள்ளன. இது உள்நாட்டில் போர் எதிர்ப்பு உணர்வை சமாதானப்படுத்துவதற்கான முயற்சி ஆகும்.

ஆனால் வடக்கு, வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய துருப்புக்கள் போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஒன்றும் தடுத்துவிடவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டும். அதேபோல் போரின் வரலாற்றிலேயே மிக மோசமான படுகொலைகளில் ஒன்றான குண்டுஸில் செப்டம்பர் மாதம் வான் தாக்குதல் நடத்தியதையும் தடுத்துவிடவில்லை. அதில் குறைந்தது 125 பேராவது கொல்லப்பட்டனர்.

அப்படி இருந்தும், ஐரோப்பிய சக்திகள் தவிர்க்கப்பட முடியும் என்றால் நேரடியான இராணுவ நடவடிக்கையை விரும்பவில்லை. எனவேதான் அவை ஜனாதிபதி ஒபாமாவின் கருத்துக்களை விட மக்கிரிஸ்டலின் கோரிக்கைக்கு கூடுதலான ஆதரவைக் கொடுத்துள்ளனர். அவர் ஐரோப்பாவில் இருந்து கூடுதலான துருப்புக்கள் வேண்டும் என்பதற்கான உத்தரவாதம் கிடைக்கும் வரை கூடுதல் அமெரிக்கத் துருப்புக்கள் அனுப்புதலை உறுதியான நிறுத்தி வைத்துள்ளார். இதுவரை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரெளன்தான் இன்னும் 500 படையினரை அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு எதிரிடையாக ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி அக்டோபர் 15ம் தேதி பிரான்ஸ் "ஒரு இராணுவத்தை கூட கூடுதலாக" ஆப்கானிஸ்தானிற்கு போரிட அனுப்பாது என்று கூறினார்.

சார்க்கோசியிடம் இருந்து அத்தகைய உறுதிமொழிகள் ஒன்றும் கருத்திலெடுக்க கூடியதல்ல. ஆனால் ஐரோப்பிய இராணுவப் பங்கு கூடுதலாக இருக்க வேண்டும் என்றால், கூடுதலான இராணுவத் துருப்புக்களை அனுப்ப அமெரிக்கா ஒப்புக் கொள்ளல் மிக இன்றியமையாதது, குறைந்த பட்சம் அது ஒரு முன்னிபந்தனை ஆகும் என்பதைத்தான் குறிக்கிறது.

நேட்டோ உச்சிமாநாட்டில் கூடுதலான துருப்புக்களை அனுப்புவதற்கு ஐரோப்பா மறுத்தது பற்றி கருத்து தெரிவித்த ஜேர்மனிய செய்தி ஏடு Spigel அக்டோபர் 29 அன்று பின்வருமாறு வலியுறுத்தியது: "ஒரு தடவையேனும் இந்தத் தயக்கம் ஐரோப்பாவில் போர்க்களைப்பு பரந்துள்ளது என்பதனால் அல்ல. மாறாக, நிலைமை பற்றி அமெரிக்க ஜனாதிபதி நீண்ட மெளனம் சாதிக்கிறார். ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஆப்கானியப் பிரச்சினையில் கூடுதலான அமெரிக்க வழிநடத்தல் தேவை என்றுகோருவது சரிதான்."

மக்கிரிஸ்டலின் கூடுதல் துருப்புக்கள் கோரிக்கை பற்றி ஒபாமா முடிவெடுப்பதில் தாமதத்தைக் காட்டுவதைக் குறிப்பிட்ட Spigel, "பொது மக்கள் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் கூடுதலான துருப்புக்களை அனுப்ப வேண்டும் என விரும்புகின்றனர்" என்ற அசாதாரண, பொய்க்கூற்றை அளித்துள்ளது.

"ஒபாமா நிர்வாகம் தற்பொழுது தைரியத்தை கைவிட்டுவிட்டது என்ற உணர்வை தோற்றுவித்துள்ளது" என்று ஏடு குறைகூறியுள்ளது. எனவே, "காங்கிரசின் இரு பிரிவுகளிலும் பெரும்பான்மையை கொண்டிருந்தாலும், உள்நாட்டிற்கே தெளிவான செய்தியை கொடுக்காமல் இருக்கும் ஒரு ஜனாதிபதியின் ஆடம்பர உறுதிமொழிகளை ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் ஏன் நம்ப வேண்டும்?"

அதே தினத்தில் பிரிட்டனின் கார்டியன் இராணுவப் பிரிவு வர்ணனையாளரான ரொம் ரோகன் இன் கட்டுரையை, "ஒபாமா தளபதி மக்கிரிஸ்டல் கூறுவதைக் கேட்க வேண்டும்" என்று தலைப்பிட்டு வெளியிட்டது.

ரோகன் எழுதினார்: "பணயங்கள் உயர்ந்துள்ளன. இறுதியில், ஒபாமாவின் முடிவு ஆப்கானிஸ்தான் போரின் முடிவை தீர்மானிப்பது மட்டுல்லாமல், அமெரிக்கா, பிரிட்டன், நேட்டோ ஆகியவற்றின் அறநெறித்தன்மை, மூலோபாய நிலைமையையும் தீர்மானிக்கும்."

எந்தவித உறுதியான அரசியல் கணக்குகளும் தந்திரோபாயங்களும் பேர்லின், பாரிஸ், லண்டன் ஆகியவற்றில் உள்ள கொள்கை இயற்றுபவர்களுக்கு உந்துதல் கொடுத்தாலும், ஆப்கானிஸ்தான் போருக்கும் மற்றும் அங்கு நடத்தப்படும் குற்றம்சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய சக்திகள் முழுப் பொறுப்பிலும் பங்கு உடையவர்கள். இப்பொழுதும் சரி, வருங்காலத்திலும் சரி. இந்தப் போர் ஏகாதிபத்திய முதலாளித்துவம் மற்றும் அதன் ஐரோப்பிய அமெரிக்க அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் முழுவதும் ஒருங்கிணைந்து நடத்தும் போராட்டத்தின்மூலம்தான் முடிவிற்கு வரும்