World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistanis challenge Clinton over drone attacks, US bullying

டிரோன் தாக்குதல்கள், அமெரிக்க மிரட்டல்களுக்கு பாக்கிஸ்தானியர்கள் கிளின்டனுக்கு சவால் விடுகின்றனர்

By Keith Jones
2 November 2009

Use this version to print | Send feedback

பாக்கிஸ்தானுக்கு கடந்த வாரம் மூன்று நாட்கள் வருகை தந்திருந்தபோது, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹில்லாரி கிளின்டன் பாக்கிஸ்தான் அரசாங்கம் மற்றும் இராணுவத்தை, ஆப்கானிஸ்தானை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கும் எண்ணெய் வளமுடைய மத்திய ஆசியாவில் மூலோபாய ரீதியாக காலடி வைப்பதற்கும் அமெரிக்காவிற்கு மேலும் ஆதரவு கொடுக்குமாறு வலியுறுத்தினார்.

இஸ்லாமாபாத் தன்னுடைய தற்போதைய தலிபான் தொடர்புடைய போராளிகளுக்கு எதிரான தாக்குதலை தெற்கு வஜீரிஸ்தானுக்கும் அப்பால் உள்ள பஷ்டுன் மொழி பேசும் பழங்குடிப் பகுதிகளிலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பாக வலியுறுத்தினார்.

வாஷிங்டனிடம் இருந்து வந்துள்ள பெரும் அழுத்தத்தை ஒட்டி பாக்கிஸ்தான் அக்டோபர் 17ம் தேதியில் இருந்து தெற்கு வஜீரிஸ்தானில் நீடித்த தாக்குதலை 30,000 துருப்புகள், ஹெலிகாப்டர் மற்றும் F-16 தாக்குதல்கள் மூலம் மூன்று புறத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது.

உதவி நிறுவனங்கள் கருத்துப்படி இந்தப் பூசல் இன்னும் 200,000 மக்களை இடம் பெயருமாறு செய்துவிட்டது; பெரும்பாலனவர்கள் வறிய கிராமத்தினர் ஆவர். பாக்கிஸ்தானிய இராணுவம், பல நேரமும் பல கிராமங்களையும் முழுமையாக தலிபான்களிம் இருந்து "விடுவிப்பதாகக்" கூறிக் கொண்டு, பீரங்கித்தாக்குதல், குண்டு வீசுதல் ஆகியவற்றில் பொறுப்பற்ற முறையை கையாள்வதாக இகழ்வு பெற்றுள்ளது.

பாக்கிஸ்தான் மக்கள் கட்சித் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் தலைவர்களும் எதிர்க்கட்சி தலைவர் நவாஸ் ஷெரிப்பும் பகிரங்கமாக கிளின்டன், ஒபாமா நிர்வாகம் மற்றும் வாஷிங்டனை புகழ்ந்துள்ளனர். வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி அமெரிக்க வெளியுறவுச் செயலரை "பாக்கிஸ்தானின் நண்பர்" என்று அழைத்துள்ளார்; அவருடைய வருகை பாக்கிஸ்தான் மக்களுடன் அமெரிக்காவின் ஒற்றுமையுணர்விற்கான "உரத்த, தெளிவான தவகல்" ஆகும் என்றும் கூறினார்.

ஆனால் பாக்கிஸ்தானை அமெரிக்க நடத்தும் முறைபற்றி (அமெரிக்கா தொடர்ச்சியாக இராணுவ சர்வாதிகாரங்களுக்கு ஆதரவு கொடுத்தல், மிரட்டுதல், பாக்கிஸ்தானிய இறைமையை பல முறையும் மீறுதல், தன்னுடைய ஆப்கானிய வெற்றிக்காக பாக்கிஸ்தானை உள்நாட்டுப் போரில் கூடத் தள்ளத் தயாராக இருத்தல் ஆகியவற்றிற்காக) பரந்த சீற்றத்தைத்தான் கிளின்டன் எதிர்கொண்டுள்ளார்.

வெள்ளியன்று GEO தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது, பார்வையாளர்களிடம் இருந்து வினாக்களை எதிர்கொண்ட கிளின்டன், இரு முறை அமெரிக்க பிரிடேட்டர் ட்ரோன் தாக்குதல்கள் பாக்கிஸ்தானுக்குள் நடத்தப்படுவது பற்றி சவாலுக்கு உட்படுத்தப்பட்டார். இத்தாக்குதல்கள் ஒபாமா ஜனாதிபதியாகிவிட்டதில் இருந்து வாடிக்கையாகவிட்ட நிலையில், பாக்கிஸ்தான் இறைமையை அப்பட்டமாக மீறுவது ஆகும். இவை அடிக்கடி பெருத்த சாதாரண மக்கள் உயிரிழப்பிற்கும் காரணம் ஆகும்; இவை சட்டவிரோத படுகொலை என்றும் எடுத்துக் கொள்ளப்பட முடியும்.

ஒரு பாக்கிஸ்தானிய பெண்மணி கிளின்டனிம் ட்ரோன் தாக்குதல்கள் "விசாரணையின்றி தூக்கிலிடப்படுவதற்கு" ஒப்பாகும் என்று கூறினார். மற்றொருவர் கிளின்டனை பயங்கரவாதத்திற்கு வரையறை கூறுமாறு சவால் விட்டார்; எந்த விதத்தில் அமெரிக்க டிரோன் தாக்குதல்கள் கிளின்டன் பாக்கிஸ்தான் வந்த அன்று ஒரு பேஷாவர் சந்தையின் மீது போடப்பட்ட குண்டைவிட மாறுபட்டது என்று வினா எழுப்பினார். "டிரோன் தாக்குதல்கள் மூலம் மக்களைக் கொல்வது [பயங்கரவாதம் இல்லையா?] என அவர் கேட்டார்.

GEO தொலைக்காட்சி பேட்டிகாண்பவர் பின்னர் கிளின்டனிடம் வடமேற்கு பாக்கிஸ்தானில் நடக்கும் போர் "எங்கள் போர் அல்ல, உங்கள் போர்" என்றார். அப்பெண்மணி "உங்கள் நாட்டில் 9/11 ஒரு முறை நடந்தது. நாங்கள் பாக்கிஸ்தானில் அன்றாடம் 9/11 ஐ கொண்டிருக்கிறோம்" என்று கூறியபோது பார்வையாளர்கள் கரகோஷம் செய்தனர்.

அன்றே சற்று முன்னதாக பாக்கிஸ்தானின் மத்திய கூட்டாட்சி நிர்வகிக்கும் பழங்குடிப் பகுதியில் இருந்து ஆறு பேர் கிளின்டனைச் சந்தித்தனர்; அவர்களில் ஒருவர் கூறினார்: "இப்பகுதியில் நீங்கள் வந்திருப்பது சமாதானத்திற்கு நல்லது அல்ல; ஏனெனில் இது பெரும் திகைப்பு, எரிச்சல் ஆகியவற்றைத்தான் இப்பகுதி மக்களுக்கு கொடுக்கிறது." பின்னர் அவர் "என்னை மன்னியுங்கள், ஆனால் உங்கள் போரை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம் எனக் கூறுவேன்" என்றார்.

கிளின்டனைப் பலமுறை பாக்கிஸ்தானியர்கள் பாக்கிஸ்தானில் இருக்கும் Blackwater/Xe Services ஊழியர்கள் பற்றியும் கேட்டனர்; அதேபோல் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா இப்பொழுது கட்டிக் கொண்டிருக்கும் மாபெரும் தூதரக வளாகம் பற்றியும் கேட்டனர்; இந்த வளாகம் பாக்தாத்தில் அமெரிக்கா கட்டியுள்ளதற்கு அடுத்தபடியாக மிகப் பெரிய வளாகம் என்று கூறப்படுகிறது.

வியாழனன்று கிளின்டன் ஒரு லாகூர்க் கல்லூரியில் பாக்கிஸ்தானின் பல பகுதிகளிலும் இருந்து சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருந்த பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்தபோது, பல முறை பாதுகாப்பாகப் பேசும் நிலை அவருக்கு ஏற்பட்டது. நியூ யோர்க் டைம்ஸ் எழுதியுள்ளபடி, "ஒருவர்பின் ஒருவராக திருமதி கிளின்டனை பாக்கிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள செயல்பாடற்ற உறவு எனக் கருதுவதைப் பற்றி துருவித்துருவிக் கேட்டனர்....மாணவர்களிடம் இருந்து செயற்கையான கைதட்டலையே அவர் பெற்றார்...அவர்களில் சிலர் அவர் அமெரிக்க கொள்கைகளை ஆதரித்து பேசியபோது துக்க முழக்கம் செய்தனர்."

கிளின்டன் "கிடைத்த வாய்ப்பின்போதெல்லாம் இராணுவத்தைப் புகழ்ந்ததாக" டைம்ஸ் அறிக்கை கூறுகின்றது.

கிளின்டன், பாக்கிஸ்தானுக்கு விஜயம் செய்த மிக உயர்ந்த ஒபாமா நிர்வாகத்தின் அதிகாரியாவார். அவருடைய பயணத்திற்கு வெளியே கூறப்பட்ட காரணம் சாதாரண பாக்கிஸ்தானிய மக்கள், அரசாங்கம், எதிர்க்கட்சி, இராணுவம், வணிகத்தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்து அமெரிக்கா-பாக்கிஸ்தானுக்கு இடையே உள்ள "நம்பிக்கைப் பற்றாக்குறையை" கடப்பது ஆகும். பாக்கிஸ்தானியர்களின் பரந்த பிரிவுகளை "சென்று அடைந்து பேசுவதில்" கிளின்டன் தற்போதைய நிர்வாகத்திற்கும்- ஜோர்ஜ் டபுள்யூ புஷ் நிர்வாகத்திற்கும் இடையே ஒரு இடைவெளியை பராமரிக்க முற்பட்டார்; அதுவோ சாதாரண பாக்கிஸ்தான் மக்கள் ஏமாற்றும் பெறும் வகையில் சர்வாதிகாரி பர்வேஸ் முஷரப்பை போற்றியது.

தன்னுடைய "சாதுரியமான தாக்குதலின்" ஒரு பகுதியாக கிளின்டன் ஒரு சில வாடிக்கையான ஒப்புதல்கள், "தவறுகள்", கவனிக்காதுவிட்டவை பற்றிக் கூறி பலமுறையும் அமெரிக்கா பாக்கிஸ்தானிய மக்களின் நலன்களைத்தான் இதயத்தில் கொண்டுள்ளது என்றார். ஒரு சமீபத்திய அமெரிக்கச் சட்டம் பாக்கிஸ்தான் 2009 சட்டம், பங்காளித்தனம் விரிவாக்கப்படுதல், என்பதின் நோக்கம், பொருள் பற்றிய சிதைவுகளை அவர் இடித்துரைத்தார்; அதே போல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமெரிக்கா பாக்கிஸ்தானுக்கு ஆண்டு ஒன்றிற்கு $1.5 பில்லியன் அளிக்க வகை செய்துள்ள கெர்ரி-லுகர் சட்ட வரைவு பற்றிய சிதைவுகளையும் சாடினார்; அச்சட்டப்படி ஆப்கானிஸ்தானத்தில் சமாதானம் மற்றும் அணுவாயதப் பரவுதல் தடுப்பு என்னும் வாஷிங்டனுடைய நோக்கங்களை பாக்கிஸ்தான் நிறைவேற்றுமானால் அத்தகைய உதவி என்று கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் பாக்கிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் எவ்விதத்திலும் தலையிடவில்லை என்று வெளியுறவுச் செயலர் உறுதியாகக் கூறினார்.

உண்மை என்னவென்றால், பாக்கிஸ்தானிய-அமெரிக்க "பங்காளித்தனம்" பல தசாப்தங்களாக பாக்கிஸ்தானிய மக்களுக்கு எதிரான ஒரு சதியாகத்தான் இருந்து வந்துள்ளது; இதில் வாஷிங்டன் பாக்கிஸ்தானிய அரசாங்கத்தை, எல்லாவற்றிற்கும் மேலாக அதன் இராணுவத்தை மத்திய கிழக்கிற்கு, மத்திய, தெற்கு ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு ஒரு அச்சாகப் பயன்படுத்தி வந்துள்ளது. வெற்றுத்தன பாக்கிஸ்தானிய முதலாளித்துவம் தன்னுடைய பணிகளை கொடுக்க பெரும் உவகையுடன் முன்வந்துள்ளது; ஆனால் எந்த கூலிப்படையையும், அது அதற்கான விலை பற்றி பேரம்பேசுகிறது; அதன் எஜமானர்களின் திமிர்த்தனம், அடாவடித்தனம் பற்றி பொறுமையின்மையையும் காட்டுகிறது.

பாக்கிஸ்தான் உயரடுக்கைப் பொறுத்தவரையில், ஆப்கானிஸ்தானை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் அமெரிக்க உந்துதலப் பற்றி எதிர்ப்பும் கவலைகளும் உள்ளன; இது ஆட்டம் கண்ட பாக்கிஸ்தான் கூட்டாட்சி அரசாங்கத்தையே இன்னும் உறுதியைக் குலைத்து, மக்களுக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் இடையே இருக்கும் பெரும் பிளவையும் அதிகரித்துள்ளது; மேலும் பாக்கிஸ்தான் இந்தியாவுடன் கொண்டுள்ள போட்டியையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. பிந்தை அச்சம் அமெரிக்கா இந்தியா மீது பேரார்வம் கொண்டிருப்பதின் மூலம் அதிகமாகியுள்ளது --இது இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இறுதி வடிவம் பெற்றுள்ளது-- எழுச்சி பெற்று வரும் சீனாவிற்கு எதிர் மூலோபாய எடையாக இந்தியாவை நிறுத்துகின்றது.

தன்னுடைய பயணத்தின் முதல் இரு நாட்களில் பெரும்பாலும் கிளின்டன் பாக்கிஸ்தானிய மக்கள் கருத்தை உன்னிப்பாக தான் கவனிப்பதாக போக்குக் காட்டி அவர்களை மகிழ்விக்க முற்பட்டார். ஆனால் மக்கள் விரோதத்தின் பரப்பு அவருக்கு எரிச்சல் ஊட்டியது போலும். வியாழனன்று பிற்பகுதியில் அவர் பாக்கிஸ்தான் நடைமுறையை தாக்கி, ஒரு செய்தியாளர் கூட்டத்தில், "உங்கள் அரசாங்கத்தில் [அல் குவைடா தலைமை] எங்கு இருக்கிறது என்பது ஒருவருக்கும் தெரியாது என்பதை நம்புவது எனக்கு கடினாமாக உள்ளது; அவர்கள் உண்மையில் விரும்பினால் அவர்களை பிடித்திருக்க முடியும் என்றுதான் நம்புகிறேன்." என்றார்.

இதற்கு அடுத்த நாள் அவர் பகிரங்கமாக தற்போதைய எழுச்சி எதிர்ப்புத் தாக்குதல் விரிவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்: "ஸ்வாட்டில் தொடக்க செயற்பாடுகளும் இப்பொழுது தெற்கு வஜீரிஸ்தானில் நடப்பதும் உள்ள நிலையில், பாக்கிஸ்தானிய இராணுவம் மற்ற பயங்கரவாதக் குழுக்களையும் அடியோடு அகற்ற வேண்டும், இல்லாவிடில் அவை மீண்டும் கிளர்த்தெழுந்து பாக்கிஸ்தானை அச்சுறுத்தும்" என்று பாக்கிஸ்தானில் உயர் வேலகளில் இருக்கும் பெண்கள் கலந்து கொண்ட நகரவை அரங்கில் கிளின்டன் கூறினார்.

கிளின்டன் பல பொருளாதார உதவி அறிவிப்புக்களை கொடுத்தாலும், பாக்கிஸ்தானிய உயரடுக்கின் நீண்ட காலக் கோரிக்கைகள் இரண்டை அவர் நிராகரித்தார். ஒன்று அமெரிக்க ஜவுளிகள் மீது காப்புவரிகளை அகற்ற வேண்டும் என்பது; இது பாக்கிஸ்தானின் முக்கிய ஏற்றுமதி ஆகும்; இரண்டாவது அது இந்தியாவை சற்று வேகமாக காஷ்மீரைப் பொறுத்தவரையில், பாக்கிஸ்தானுக்கு சலுகைகளை கொடுக்க வேண்டும் என்பதாகும்.

ஜனாதிபதி வேட்பாளராக நின்று பிரச்சாரம் நடத்திய காலத்தில் ஒபாமா ஆப்கானிய போரில் அமெரிக்கா கூறுவதை பாக்கிஸ்தான் கேட்டால் அதற்கு பிரதியாக இந்தியாவுடன் காஷ்மீர் பற்றி ஒரு ஒப்பந்தம் அடைவதற்கு பாக்கிஸ்தானுக்கு அமெரிக்கா உதவக்கூடும் என்பது போல் பேசியிருந்தார். ஆனால் இந்தியா, எந்தவிதத்திலும் அமெரிக்கா, இந்திய- பாக்கிஸ்தானிய பூசலில் தலையிடக்கூடாது என்று திட்டவட்டமாக எதிர்த்தபின், ஒபாமா நிர்வாகம் சடுதியில் பின்வாங்கியது.

இந்திய-பாக்கிஸ்தானிய பூசலைப் பற்றி கிளின்டன், "தீர்வு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி நாங்கள் கூறவேண்டியதில்லை என்பது மட்டும் தெளிவு." ஒபாமா நிர்வாகத்தின் காலனித்துவ முறையிலான பெரும் சிறப்புத் தூதர் என்பதற்கு ஏற்ப அவர் மத்திய கிழக்கிற்கு பின் பறந்து சென்றார்.