World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

Japan's new government seeks to refashion US alliance

ஜப்பானின் புதிய அரசாங்கம் அமெரிக்காவுடனான கூட்டை மறுவடிவம் கொடுக்க முயல்கிறது

By John Chan
4 November 2009

Use this version to print | Send feedback

நவம்பர் 12-13 தேதிகளில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா ஜப்பானுக்கு வருவதற்கு முன்னதாக பிரதம மந்திரிய யூகியோ ஹடோயமா தன்னுடைய அரசாங்கம் அமெரிக்காவுடனான நாட்டின் நீண்ட கால கூட்டை மறுசீரமைக்க முற்படுவதற்கான சமிக்கையைக் காட்டியுள்ளார். டயட் எனப்படும் ஜப்பானிய பாராளுமன்றத்தில் அவர் கடந்த வாரம் பேசுகையில் பங்காளித்தனம் இன்னும் சமத்துவமாக இருக்க வேண்டும், உடன்பாடு செயல்படுவதற்கு ஜப்பான் "இன்னும் தீவிரமான பங்கை முன்வைத்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில்" இருக்க வேண்டும் என்று கூறினார்.

ஹடயோமாவும் அவருடைய ஜப்பானிய ஜனநாயகக்கட்சியும் ஆகஸ்ட் மாத தேசியத் தேர்தல்களில் தாராளவாத ஜனநாயகக் கட்சியை (LDP) பதவியில் இருந்து அகற்றி, வெற்றி பெற்றது; பிந்தையது 50 ஆண்டுகளுக்கும் மேலாக, 1993-94ல் ஒரு குறுகிய இடைவெளியைத் தவிர, பதவியில் இருந்ததாகும். மக்களுடைய எதிர்ப்பை எதிர்கொள்ளும் வகையில் ஜனநாயகவாதிகள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு ஜப்பானின் கடற்படை எரிபொருள் கொடுக்கும் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்தல் மற்றும் ஜப்பானில் அமெரிக்கத் தளங்களை அகற்ற உடன்பாடு பற்றி மறு பேச்சு வார்த்தைகள் ஆகியவற்றிற்கு பிரச்சாரம் செய்துள்ளது.

ஆனால், இன்னும் பரந்த வகையில் ஆசிய, சர்வதேச அரசியலில் இன்னும் தீவிரப் பங்கை ஆற்ற ஜப்பான் தன்னை மறுஸ்தானத்தில் இருத்திக்கொள்ள ஜனநாயகக் கட்சி முயல்கிறது. 1951ல் கையெழுத்திடப்பட்ட அமெரிக்க-ஜப்பான் பாதுகாப்பு உடன்படிக்கை ஒரு குளிர்யுத்த கால உடன்பாடு ஆகும்; அதில் அமெரிக்கா முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவிடம் இருந்து ஜப்பானுக்கு இராணுவப் பாதுகாப்பு கொடுத்து, அதற்கு ஈடாக வாஷிங்டனின் வெளிநாட்டுக் கொள்கைக்கு ஜப்பான் தளர்வில்லா ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது. 1991ல் சோவியத் ஒன்றியத்தின் சரிவும், சீனாவின் பொருளாதார ஏற்றமும் இந்த மூலோபாய சமன்பாட்டை வியத்தகு முறையில் மாற்றி விட்டன.

தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்காவுடன் உடன்பாட்டிற்கு மறு உத்தரவாதம் கொடுத்தாலும் ஹடோயமா தன்னுடைய அரசாங்கம் சீனா, தென் கொரியா ஆகியவற்றுடன் சிறந்த உறவுகளை நாடும் என்று குறிப்புக் காட்டியிருந்தார். பதவியை எடுத்துக் கொண்டதில் இருந்து, ஜனநாயகக் கட்சியினர் ஐரோப்பிய ஒன்றிய மாதிரியை தளர்ந்த முறையில் கொண்டிருக்கும், இறுதியில் அதனுடைய சொந்த நாணயத்தை அமைத்துக் கொள்ளும் வகையிலான கிழக்கு ஆசிய சமூகம் (East Asian Community) என்ற கருத்தை வெளியிட்டுள்ளனர். இந்தக் கருத்து வெளியுறவு மந்திரி கட்சூயா ஒகடா செப்டம்பர் மாதம் பெய்ஜிங்கிற்கு சென்றபோது எழுப்பப்பட்டது; மீண்டும் ASEAN எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் கூட்டம் அக்டோபர் 24-25 தேதிகளில் தாய்லாந்தில் நடைபெற்றபோது ஹடோயமாவாலும் எழுப்பப்பட்டது.

சீனாவுடனும் தென் கொரியாவுடனும் உறவுகளை முன்னேற்றுவிப்பதற்கு ஹடோயமா யசுகுனி போர் நினைவாலயப் பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட்டுள்ளார். முன்னாள் பிரதம மந்திரி Juichiro Koizumi இந்த ஜப்பானிய இராணுவவாதத்திற்கான அடையாளத்திற்கு சென்றது சீனா மற்றும் தென் கொரியா ஆகியவற்றின் தீவிர எதிர்ப்புக்களை எதிர்கொண்டது. யசுகுனி நினைவாலயத்திற்கு செல்லவில்லை என்று ஹடயோமா உறுதி கொடுத்துள்ளதுடன் ஜப்பானியப் போர்களில் இறந்தவர்களுக்கு நிறுவப்பட வேண்டும் என்ற அழைப்பையும் கொடுத்துள்ளார்.

ஆனால் ஒரு கிழக்கு ஆசிய சமூகத்திற்கான தேவை பற்றிய ஜப்பானின் திட்டம் பல இடர்பாடுகளைக் கொண்டுள்ளது. அமெரிக்கா இல்லாமல் எந்த முகாம் அமைக்கும் முயற்சியும் டோக்கியோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடைய பதட்டங்களை ஏற்படுத்தும். மேலும் ஒரு முகாம் அமைக்கப்பட்டாலும், அதில் போட்டி முக்கிய பங்கைப் பெறும்--அதாவது ஜப்பானா, சீனாவா என்பது தொடரும்.

இந்த தீர்க்கப்படாத பதட்டங்கள் ASEAN உச்சி மாநாட்டில் செயற்பட்டியலுக்குக் கீழே இருந்தன; இதில் ஜப்பான், சீனா, தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் பங்கு பெற்றன. ஆஸ்திரேலியப் பிரதம மந்திரி கெவின் ருட் 2020 ஐ ஒட்டி ஒரு ஆசிய-பசிபிக் சமூகத்திற்கான திட்டத்தை மீண்டும் வலியுறுத்தினார்--அதில் அமெரிக்காவும் இருக்கும். கான்பெர்ராவின் நிலைப்பாட்டில் இருந்து அத்தகைய நடவடிக்கை ஆஸ்திரேலியாவின் பெரும் பொருளாதாரப் பங்காளி நாடான சீனா மற்றும் ஆஸ்திரேலியாவின் நீண்டநாள் மூலோபாய நட்பு நாடு அமெரிக்கா இரண்டிற்கும் இடையே இருக்கும் பதட்டங்களைக் குறைத்துவிடும் எனக் காணப்படுகிறது.

ஆனால் ஹடோயமா அமெரிக்க ஈடுபாடு பற்றி வேண்டுமென்றே தெளிவற்ற தன்மையைக் காட்டி, வாஷிங்டனை எதிர்த்துக் கொள்ளக் கூடாது என்ற நிலையில் ஆனால் அதை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறாமல் உள்ளார். சீனாவிற்கு எதிரிடையாக ஜப்பான் முன்பு ASEAN+3 கூட்டங்களை விரிவுபடுத்த வேண்டும் என்றது; அதில் சீனா, ஜப்பான், தென் கொரியாவும் மூன்று அமெரிக்க மூலோபாயப் பங்காளிகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகியவை அடங்கும். இத்திட்டம் ஆசியாவில் இன்னும் முக்கிய பங்கைச் செலுத்த ஒரு கருவியாக இருக்கும் என்று ஹடோயமா கருதுகிறார் என்பதில் ஐயமில்லை.

ஹடோயமாவின் திட்டத்திற்கு எச்சரிக்கையுடன் சீனா ஒப்புதல் அளித்துள்ளது; ஆனால் ASEAN+3 என்பது அத்தகைய திட்டத்தின் மையமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. சீன ஆளும் வட்டங்களின் கவலைகளைக் குறிக்கும் வகையில, சீன சமூக அறிவியல் பயிலகத்தில் கல்வியாளராக இருக்கும், Wu Huaizhong, செப்டம்பர் மாத Global Times ல் டோக்கியோ, சீனாவிற்கு போட்டியாக, "ஜப்பான் தலைமையிலான ஆசியாவை" விரும்புகிறது என்று எழுதினார். "இதில் நிறைய நாடுகளைச் சேர்ப்பது நடைமுறைக்கு ஒத்துவராது" என்றும் வூ கூறினார்; டோக்கியோ "பூஜ்யக் கூட்டல்" (zero sum) மனப் போக்கை கைவிட வேண்டும், எப்பொழுதும் ஜப்பானா, சீனாவா மேலாதிக்க ஆசிய சக்கதி என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

1991ல் முன்னாள் சோவியத் ஒன்றியம் சரிந்தது ஜப்பானிய முதலாளித்துவத்திற்கு புதிய பொருளாதார, மூலோபாய சங்கடங்களை ஏற்படுத்தியது; அவை 1990-91 வளைகுடாப் போருக்கான செலவில் பெரும் பங்கை டோக்கியோ ஏற்க வேண்டும் என்ற வாஷிங்டனின் வலியுறுத்தலில் தீவிரமாக அடிக்கோடிடப்பட்டது. அப்பொழுது முதல் தொடர்ச்சியான ஜப்பானிய அரசாங்கங்கள் இன்னும் உறுதியான பங்கை சர்வதேச அளவில் கொள்ள முற்பட்டுள்ளன; இராணுவத்தையும் நாட்டின் சமாதான அரசியலமைப்பு என்ற அழைக்கப்படுவதில் தளைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று விரும்புகின்றன.

அமெரிக்கா மீது செப்டம்பர் 11 தாக்குதல்களை அடுத்து, பிரதம மந்திரி கொய்சுமி, புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான போருக்கு" முழு ஆதரவு கொடுத்து, ஆப்கானிஸ்தானை அமெரிக்கா எடுத்துக் கொள்ள உதவும் வகையில் கடற்படை எரிபொருள் நிரப்பும் பணியையும் அனுப்பிவைத்து, ஈராக் ஆக்கிரமிப்பிற்கு ஜப்பானியத் துருப்புக்களையும் அளித்தார். அதே நேரத்தில் கொய்சுமி வடகிழக்கு ஆசியாவில் இன்னும் ஆக்கிரோஷமான நிலைப்பாட்டை கொண்டார்; இது சீனா, தென் கொரியா ஆகியவற்றுடன் பதட்டங்களுக்கு எரியூட்டியது.

டோக்கியோ கொண்டிருக்கும் பெரும் அச்சம் சீனாவின் விரைவான பொருளாதார ஏற்றம் ஜப்பானை நிழலில் தள்ளுகிறது என்பதாகும்; ஜப்பானின் பொருளாதாரமோ இரு தசாப்தங்களாக தேக்கத்தில் உள்ளது. உலக மந்த நிலை ஜப்பானுடைய பொருளாதாரப் பிரச்சினைகளை அதிகமாக்கியுள்ளது. சில பகுப்பாய்வாளர்கள் 2010, 2011 ஐ ஒட்டி, சீனா உலகின் இரண்டாம் பொருளாதாரம் என்று ஜப்பானை முந்திவிடும் என்று கணித்துள்ளனர்--ஜப்பானோ அத்தகைய நிலையில் 40 ஆண்டுகளாக உள்ளது. ஜப்பானிய முதலாளித்துவத்தின் ஒப்புமையிலான சரிவு போர்ப்ஸ் 2009 ன் 50 உயர்ந்த ஆசிய நிறுவனங்கள் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. ஜப்பான் 2005ல் அத்தகைய 13 நிறுவனங்களைக் கொண்டிருந்தது; இப்பொழுது 4 மட்டும்தான் உள்ளன. சமீபத்திய பட்டியலின்படி, சீனாவிடம் 16 நிறுவனங்கள் உள்ளன; ஹாங்காங்கில் 3ம் தைவானில் 5ம் உள்ளன.

அதே நேரத்தில் சீனா உட்பட, ஆசியாவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பு தன்னுடைய பொருளாதார கஷ்டங்களை தீர்க்க வழியாக இருக்கும் என்று ஜப்பான் நினைக்கிறது. சீனா இப்பொழுது ஜப்பானின் மிகப் பெரு வணிகப் பங்காளி நாடு ஆகும்; மேலும் ஜப்பானிய பெருநிறுவனங்களுக்கு குறைவூதிய தொழிலாளர் தொகுப்பிற்கு ஆதாரமும் ஆகும். மே மாதம் ஜப்பான் சீனா, தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்க 120 பில்லியன் டாலர் நாணயப் பரிமாற்றத்தை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் செய்வதற்கான முன்முயற்சியை எடுத்தது. ஜப்பான், சீனா இரண்டும் ASEAN உடன் தடையற்ற வணிக உடன்பாடுகளுக்கான பேச்சுவார்த்தை வழிவகையில் உள்ளன; இது 2015 ஐ கால கெடுவாக தன்னுடைய தடையற்ற வணிக முகாமிற்கு வைத்துள்ளது.

ஒரு கிழக்கு ஆசிய சமூகத்திற்கான ஹடோயமாவின் திட்டம் இவ்விதத்தில் டோக்கியோவில் நிலவும் பல போட்டி மூலோபாய நலன்கள், கவலைகளை சமன்படுத்தும் முயற்சியாகும். சீனா, தென் கொரியாவுடன் உறவுகளைச் சீரமைக்க அவர் முயல்கிறார்; அதேபோல் வாஷிங்டனைப் பொறுத்த வரை இன்னும் கூடுதலான சுதந்திர நிலைப்பாட்டையும் ஏற்க விரும்புகிறார்; அதே நேரத்தில் அமெரிக்காவுடன் உடன்பாட்டை தக்க வைத்துக் கொள்ளவும் விரும்புகிறார். இந்த முரண்பாடுகள் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்புக்களுக்கு ஜப்பானில் உள்ள பரந்த எதிர்ப்பு கூடுதல் சிரமங்களைக் கொடுக்கிறது.

ஆசியாவில் "கூடுதல் செயல்பாடு" என்பதை ஒரு முன்னுரிமையாக்கியுள்ள ஒபாமா நிர்வாகம் ஹடோயமாவின் துவக்க முயற்சிகளை சாதகமாக எதிர்கொள்ளுவது கடினம் ஆகும். ஜப்பானின் தொடர்ந்த அமெரிக்கா மீதான மூலோபாய நம்பகத்தன்மையை அடிக்கோடிட்டு வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஒரு கட்டுரையில் அடிக்கோடிட்டுக் காட்டியது. "ஜப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கூடுதல் இடைவெளி அமைக்கப்படும்" என்னும் ஹடோயமாவின் தேர்தல் உறுதிமொழி பற்றி குறிப்பிட்டு, அக்கட்டுரை வட கொரியாவின் அணுத்திட்டம் மற்றும் சீனாவின் பெருகும் இராணுவ வலிமையைச் சுட்டிக்காட்டி, "இராஜதந்திர முறை மட்டுமே ஜப்பானை காக்கும் என்று அவர் நினைக்கிறாரா?" என்ற வினாவையும் எழுப்பியுள்ளது.

இதே கண்ணோட்டத்தில் பைனான்சியில் டைம்ஸ் ASEAN உச்சிமாநாடு மற்றும் ஒபாமா ஆசியாவிற்கு பயணிப்பது "அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகியவற்றிற்கு இடையே" ஒரு "செல்வாக்கிற்கான போராட்டம்" என்று குறிப்பிட்டுள்ளது. "அமெரிக்கா இல்லாத ஒரு வட்டார சமூகக் கருத்து ஆசியாவில் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு அதைத் தடுக்க செயல்பட வேண்டியது வாஷிங்டனின் பொறுப்பு ஆகும்" என்று அது கூறியுள்ளது. டோக்கியோவில் ஒபாமா அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை நெருக்கமாக ஹடோயமா பின்பற்றுவதற்கும் அழுத்தம் கொடுப்பார்; சீனாவின் எழுச்சி பெறும் செல்வாக்கை எதிர்த்து நிற்க வாஷிங்டன் உதவி இல்லாமல் டோக்கியோவால் முடியாது என்றும் எச்சரிப்பார்.

கதவு மூடிய கூட்டங்களின் பின்னணியில்தான் பரந்த மூலோபாய விவாதம் நடக்கும் என்றாலும், இரண்டு முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன; அவை பகிரங்கமாக வெடிக்கக்கூடும். தேர்தல் நேரத்தில் ஜனநாயகக் கட்சி ஜப்பானிய கடற்படையின் எரிபொருள் கொடுத்தல் பணிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகக் கூறியது. ஆனால் தேர்தல் முடிவதற்கு முன்பே, DPJ பின்வாங்கியது--ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு வேறுவடிவில் ஆதரவு தருவதாகக் கூறிவிட்டது. பல திட்டங்கள் ஆலோசிக்கப்படுகையில்--அதில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு 5 பில்லியன் டாலர் உதவிப்பொதியும் உள்ளது--எதுவும் உறுதியாகத் தீர்மானிக்கப்படவில்லை.

ஜனநாயகக் கட்சியினர் ஓகினாவாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை மறுகட்டமைப்பது பற்றிய 2006 திட்டம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்; குறிப்பாக அமெரிக்க கடற்படை விமானத் தளத்தை Futemma வில் மாற்றிக் கொண்டு வருவது பற்றி. பென்டகன் அதன் தளத்தை தற்பொழுதைய நகர்ப்புற இடத்தில் இருந்து 2014க்குள் ஒரு கடலோரப் பகுதிக்கு மாற்றவும், சில அமெரிக்க கடற்படைப் பிரிவுகளை Guam க்கு மாற்றவும் விரும்புகிறது. கடந்த மாதம் ஜப்பானுக்கு வருகை புரிந்திருந்த அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் அத்தகைய மறு பரிசீலனைக்கு இடம் இல்லை என்று கூறியதுடன், ஒபாமா வருவதற்குள் அதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் டோக்கியோவிடம் வலியுறுத்தினார்.

இந்த இரு பிரச்சினைகளில் எதில் ஹடோயமா பின்வாங்கினாலும், அது அவருக்கு ஆதரவு இழப்பைத்தான் கொடுக்கும்; மேலும் ஜனநாயகக் கட்சியினருக்கு அதன் நட்புக் கட்சிகளுடனும் பிளவு ஏற்படும். பல முன்னாள் சோசலிஸ்ட் கட்சிப் பிளவுகள், மரபார்ந்த வகையில் அமெரிக்க ஜப்பானிய பாதுகாப்பு உடன்படிக்கை மற்றும் ஜப்பானில் அமெரிக்கத் தளங்கள் ஆகியவற்றை எதிர்ப்பவை அந்த நட்பு கட்சிகளில் உள்ளன. ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ள சமூக ஜனநாயகக் கட்சியின் பெண் தலைவர், நுகர்வுத் துறை மந்திரி Mizuho Fukushima அமெரிக்கத் தளங்கள் ஒகினாவாவில் இருந்து முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார்.