World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

கிustக்ஷீணீறீவீணீ: லிணீtமீst க்ஷீமீயீuரீமீமீ பீமீணீtலீstலீமீ ஸிuபீபீ ரீஷீஸ்மீக்ஷீஸீனீமீஸீts ஷிமிணிக்ஷி ஙீ

ஆஸ்திரேலியா: சமீபத்திய அகதிகள் இறப்புக்கள்--ரூட் அரசாங்கத்தின் SIEV X

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை
4 November 2009

Use this version to print | Send feedback

ஞாயிறன்று கோகோஸ் தீவுகளுக்கு வடமேற்கே 12 இலங்கைத் தமிழர்கள் சோகமான முறையில் மூழ்கியமை, நவம்பர் 2007ல் ரூட்டின் தொழிற்கட்சி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது அகதிகளுக்கும் புகலிடம் நாடுபவர்களுக்கும் எவ்வித மாற்றத்தையும் காட்டவில்லை என்பதை உறுதியாக நினைவுறுத்தும் நிகழ்ச்சியாகி விட்டது.

அக்டோபர் 2001ல் ஆஸ்திரேலியாவிற்கு உட்பட்ட நீர்ப்பகுதியை கடற்படை மூலம் எவரும் வரவிடாமல் Operation Relax என்று பெயரிடப்பட்டு ஹோவர்ட் அரசாங்கம் தடுத்து, SIEV X படகை ஆஸ்திரேலியாவின் வடமேற்கு கடலோரப் பகுதியில் கிறிஸ்துமஸ் தீவிற்கு அருகே மூழ்கடித்து 150 குழந்தைகள் உட்பட 353 புகலிடம் நாடுபவர்கள் நீரில் மூழ்கிவிடக் காரணமாயிற்று. அந்த பேரழிவு ஆஸ்திரேலிய பெருநிறுவன செய்தி ஊடகத்தால் பெரிதும் மறைக்கப்பட்டுவிட்டது. கோகோஸ் தீவுகளுக்கு அருகே கடந்த ஞாயிறு ஏற்பட்ட இறப்புக்கள் ருட் அரசாங்கத்தின் SIEV X எனக் கூறப்படலாம்.

தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்திய பேரழிவு பற்றி போலித்தனமாக கடந்த மூன்று நாட்களாக அக்கறை காட்டினர். ஆனால் அவர்களுடைய குடியேற்றக் கொள்கைகள், அவர்களுக்கு முன்பு பதவியில் இருந்த கீட்டிங்கின் தொழிற்கட்சி, ஹோவர்டின் லிபரல்-நாஷனல் அரசாங்கங்களிடம் இருந்து எவ்வித மாற்றமும் இல்லாது தொடர்கின்றன. இவைதான் சோகம் ததும்பிய முறையில் உயிரிழப்புக்களுக்கு நேரடிப் பொறுப்பு ஆகும்.

சமீபத்திய தகவல்களின்படி, இந்த அகதிகள் படகு இலங்கையில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு 39 பயணிகளுடன் புறப்பட்டு இந்தியப் பெருங்கடல் வழியே நேரே ஆஸ்திரேலியாவிற்கு வந்து சேர முற்பட்டது. ஞாயிறு அதிகாலை ஆஸ்திரேலிய நிலப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 3,000 கி.மீட்டர்கள் தொலைவில் அகதிகள் ஆஸ்திரேலிய கடல்பிரிவின் தேடுதல், மீட்பு அதிகார அலுவலகத்திற்கு தொலைபேசியில் பேசி தங்கள் படகு ஆபத்தில் இருப்பதாக அறிவித்தனர். 27 பயணிகள் பின்னர் மீட்கப்பட்டனர். சிலர் 14 மணி நேரம் கொந்தளிப்பு நிறைந்த கடலில் தத்தளித்திருந்தனர். கடலில் இருந்து ஒரு உடலும் மீட்கப்பட்டதுடன், குறைந்தது இன்னும் 11 பேராவது அகப்படவில்லை. உயிரோடு அவர்கள் மீட்கப்படுவர் என்பதற்கு வாய்ப்பு மிகக் குறைவுதான்.

ரூட்டும் மற்ற மூத்த மந்திரிகளும் உள்ளூர் செய்தி ஊடகத்திடம் "உயிர்களைக் காப்பது" தங்கள் முன்னுரிமை என்றனர். இவர்களுடைய பாசாங்குத்தனம் பெரும் வியப்பைத் தருகிறது. இந்த பெரும் சோகம் ஒன்றும் எதிர்பாராத விபத்து அல்ல. தொழிற்கட்சியின் கொள்கைகளின் தவிர்க்க முடியாத விளைவுதான்.

இலங்கையில் இருந்து முந்தைய அகதிகள் படகுகள் பாதுகாப்பான வழிகளில் வந்துள்ளன. பொதுவாக இந்தோனேசியா அல்லது மலேசியா கடற்கரையோரமாக வந்து, பின்னர்தான் தெற்கே நோக்கி பயணிக்க முயன்றிருந்தன. நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு பெருங்கடல் பாதையில் வந்து விட வேண்டும் என்று சமீபத்திய படகு முயற்சி ரூட் அரசாங்கம் புகலிடம் கோருவோர் பற்றிய நடவடிக்கைகளை மாற்றியமைத்ததின் விளைவு என்று கூறலாம்.

கடந்த பத்து மாதங்களில் தொழிற்கட்சி "எல்லைப் பாதுகாப்பு" என்று கூறப்படுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அதற்கு கிட்டத்தட்ட 650 மில்லியன் டாலர் செலவழிப்பதுடன், கூடுதலான நிதியங்கள் கூட்டுக் கண்காணிப்பிற்கு ஒதுக்கப்படுகின்றன. அதே போல் ஆஸ்திரேலிய, இந்தோனேஷிய அதிகாரிகளின் இரகசிய போலீஸ் நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முழுவதும் அரசாங்கம் இந்தோனேஷிய கடலோரப் பகுதியில் இருந்து வந்த 330க்கும் மேலான இலங்கை தமிழ் அகதிகள் நிரம்பிய இரு படகுகளை தடுத்து நிறுத்தி வைப்பதில் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தது. இதில் ஆஸ்திரேலியாவின் Oceanic Viking இலிருந்து மீட்ட 78 பேரும் அடங்குவர். இவர்கள் இப்பொழுது எதிர்ப்பிற்கு இடையே காவலில் இந்தோனேஷியாவின் Bintan தீவிற்கு அருகே உள்ள கப்பலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தோனேஷிய குடியேற்ற மையங்களில் இந்த நிரபராதியான ஆடவர், பெண்கள், குழந்தைகள் காவலில் வைக்கப்பட வேண்டும் என்று தொழிற்கட்சி அரசாங்கம் கோரியுள்ளது. இந்தோனேஷிய தீர்வு என்று அழைக்கப்படுவதின் கீழ் அது ஜாகர்த்தாவுடன் ஒரு நீண்ட கால உடன்பாட்டை காணவும் முயல்கிறது. அதன்படி ஆஸ்திரேலிய நீர்ப்பகுதிக்கு வெளியே எங்கு அகதிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், ஆஸ்திரேலியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே உள்ள சர்வதேச நீர்ப்பகுதியாக இருந்தாலும், அவர்கள் இந்தோனேசியாவில் காவலில் வைக்கப்படுவர் என்றும் கன்பெர்ரா அதற்கான செலவுகளை ஏற்கும் என்றும் உள்ளது. ரூட்டின் முக்கிய முன்னுரிமை, அவருக்கு முன்னதாக இருந்த ஹோவர்டைப் போலவே, ஆஸ்திரேலிய மண்ணில் படகு மூலம் வரும் எந்த புகலிடம் நாடுபவரையும் தடுத்துவிட வேண்டும் என்பதாகும்.

சர்வதேச புகலிட மரபுகளில் இந்தோனேசியா கையெழுத்திடாத நாடாகும். அங்கு அனுப்பப்படுபவர்கள் நெரிசல் நிறைந்த கூட்டம், சுகாதார வசதிகளற்ற காப்பகங்களில் இருத்தப்படுவர் என்ற இழிந்த உண்மை நன்கு தெரிந்ததுதான். அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையால் "உத்தியோகபூர்வ புகலிடம் நாடுபவர்" என்று கருதப்பட்டாலும் பல ஆண்டுகள் அங்கு வாட வேண்டும். (See: "Australian government's "Indonesian Solution" in disarray"). எனவே கண்டுபிடிக்கப்படும் முன்பு ஆஸ்திரேலிய நீர்ப்பகுதியை அடைவதன் மூலம்தான் புகலிடம் நாடுபவர்கள் அத்தகைய விதியைத் தவிர்க்கும் நம்பிக்கையை கொள்ள முடியும்.

பயணத்தின் அபாயகரமான தன்மையைக் கூட்டும் விதத்தில், கடுமையான சிறைத் தண்டனைக் காலமும், ஆஸ்திரேலியாவில் புகலிடம் நாடுபவர்களை அழைத்து வருபவர்களுக்கு கட்டாயமாக தண்டனை வழங்கும் ஆட்சி நிலவும் நிலையில் (இது வாடிக்கையாக "மக்களைக் கடத்துபவர்கள்" என்று அரசாங்கத்தாலும், செய்தி ஊடகத்தாலும் முத்திரையிடப்படுகிறது) புதிய பயண வழிவகைகளுக்கு இடம் கொடுத்துள்ளது. பல புகலிடம் நாடுபவர்கள் இப்பொழுது ஆஸ்திரேலிய நீர்ப்பகுதிக்கு "படகை இயக்கும் குழு" இல்லாமல் வந்து அடைகின்றனர். ஏனெனில் அனுபவப்பட்ட படகை இயக்கும் குழுவினர் ஆஸ்திரேலிய பகுதிக்கு வருமுன் வேறு கப்பலால் ஏற்றிச்செல்லப்பட ஒழுங்கு செய்துவிடுவர்.

தன்னுடைய குடியேற்றக் கொள்கைகள் "மனிதாபிமானம் உடையவை", "சமச்சீர் தன்மை உடையவை" என்று ரூட் வற்புறுத்துகிறார். ஆனால் அவருடைய அரசாங்கத்தின் புகலிடம் நாடுவோர் குற்றவிசாரணைக்கு உட்படுத்துவது வெள்ளை ஆஸ்திரேலியா எனப்பட்ட இகழ்வான நூறாண்டு கால மரபான இனவெறிக் கொள்கையைத்தான் பின்பற்றுகிறது. இந்தக் கொள்கை தொழிற்கட்சி அரசாங்கத்தால் 20ம் நூற்றாண்டு தொடக்கத்தின் முதலில் முன்வைக்கப்பட்டு 1960களின் முதற்பகுதிவரை அதன் கொள்கை அரங்கில் முக்கிய கூறுபாடாக இருந்தது.

"ஆஸ்திரேலிய கோட்டை" இனவெறி, வெள்ளை ஆஸ்திரேலியாவின் இதயத்தானத்தில் இருந்ததுடன், இளைய, போர்க்குணமிக்க ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவம் மற்றும் புதிய முதலாளித்துவ அரசாங்கத்திற்கு அடிபணியச்செய்ய ஒரு சிந்தனாரீதியாக உறுதியாகவும், அதேபோல் ஆசிய-பசிபிக் பகுதி முழுவதும் தொழிலாளர்களை பிரிப்பதற்கும் பயன்பட்டது. 1950களின் கடைசியிலும் 1960களின் முற்பகுதியிலும், வணிக விரிவாக்கம் ஆசியாவுடன் நடந்தபோது முதலாளித்துவம் இந்த கொள்கை அதன் முதல் வடிவத்தில் இனித் தொடர முடியாது என்ற முடிவிற்கு வந்தது; அதையொட்டி தொழிற்கட்சி அதிகாரத்துவம் அதை நவீனப்படுத்த முற்பட்டது.

1990களின் தொடக்கத்தில் கீட்டிங்கின் தொழிற்கட்சி அரசாங்கம் புதிய குடியேற்ற நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது; இதில் புகலிடம் நாடுவோர் கட்டாயமாக காவலில் வைப்பதும், "சட்டவிரோத குடியேறுபவர்கள்", "அனுமதிக்காலம் முடிந்து தங்குபவர்கள்" ஆகியோரை குற்ற விசாரணைக்கு உட்படுத்தி, நாடுகடத்துதலும் அடங்கியிருந்தன. இனவெறி உள்ளடக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்ததுடன், தொழிற்கட்சியின் கொள்கைகள் அடிப்படையில் மத்திய கிழக்கு, ஆசியா, ஆபிரிக்கா ஆகியவற்றில் இருந்து வரும் புகலிடம் நாடுபவர்கள் மற்றும் ஆவணமற்ற தொழிலாளர்களை இலக்கு கொண்டன.

1996ல் இருந்து 2007 வரை எதிர்க்கட்சியாக இருந்தபோதும், தொழிற்கட்சி முன்னாள் ஹோவர்ட் அரசாங்கத்தின் புகலிடம் நாடுவோர்-எதிர்ப்புக் கொள்கைகளை முழுமையாக ஆதரித்தது. இதையொட்டி கிறிஸ்துமஸ் தீவு இன்னும் பிற தீவுகளை ஆஸ்திரேலிய குடியற்றப் பகுதியில் இருந்து அகற்றியதுடன், குடியேற்றம், புகலிட வழக்குகள் பற்றி அனைத்து குடியுரிமை நீதிமன்ற முறையீடுகள் விசாரிக்க முடியாது போயிற்று. நவம்பர் 2007ல் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ரூட்டின் அரசாங்கம் ஹோவர்ட் அரசாங்கத்தின் கொள்கைகளில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தியது. இவை குறிப்பிடத்தக்க வகையில் முற்போக்கான மாறுதல் என்று முதலாளித்துவ மற்றும் தொழிற்கட்சி முன்னாள் இடது வக்காலத்துக்காரர்களால் பாராட்டப்பட்டாலும், அவை உண்மையில் அரசியல் வெறும் அலங்கரிப்பாகத்தான் இருக்கின்றன. இந்த நடவடிக்கைகள் இப்பொழுது நடைமுறையில் இருந்து கீட்டிங்-ஹோவர்ட்-ரூட் ஆகியோரின் புகலிடம் நாடுவோர் எதிர்ப்பு கொள்கையாக அமைந்துள்ளது.

இதற்கு முன்பு இருந்த அரசாங்கங்கள் போலவே, தொழிற்கட்சியும் ஆண், பெண், குழந்தைகள் என புகலிடம் நாடுபவர்களை கிறஸ்துமஸ் தீவில் தடுப்புக் காவலில் வைக்கிறது. புகலிட அந்தஸ்து கொடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவுதான். கடந்த ஆண்டு 4,750 தான். இது உலகெங்கிலும் புகலிடம் நாடும் 42 மில்லியனோடு ஒப்பிடப்பட வேண்டும். அதே நேரத்தில் நாடு கடத்தப்படுவோர் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிறது. 115 பேர் தாய்நாடுகளுக்கு இந்த ஆண்டு அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த பதினைந்து நாட்களில் ஆஸ்திரேலிய தொழிற்சங்கக் குழு (Australian Counil of Trade Unions ACTU), இன்னும் பிற தொழிற்சங்க அதிகாரத்துவ பிரிவுகள் தொழிற்கட்சி மற்றும் லிபரல்-தேசிய கட்சிகளில் இருந்து புகலிடம் நாடுவோருக்கு எதிரான வெறும் வார்த்தை ஜாலங்களுக்கு எதிராக சன்னமாக குறைகூறத் தொடங்கியுள்ளன. கன்பெர்ரா இன்னும் "கருணை நிறைந்த" கொள்கையை கடைபடிக்க வேண்டும் என்று கூறியுள்ளன.

இப்படித் தொழிற்சங்கங்கள் காட்டிக் கொள்வது புகலிடம் கோருவோரின் ஜனநயாக உரிமைகளை காப்பதுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை. மாறாக அவர்கள் அரசாங்கத்தின் குடியேற எதிர்ப்பு நிலைப்பாடு ஆசியாவில் தங்கள் பொருளாதார நலன்களுக்கு சேதம் விளைவிக்கும் என்று வணிகப் பிரிவுகள் சில கொண்டுள்ள அக்கறைக்கு இவ்விதம் விடையிறுப்பு கொடுக்கின்றன. அதே நேரத்தில் அவை ரூட் அரசாங்கக் கொள்கைக்கு எதிராக இளைஞர்கள், பெருகிய முறையில் தொழிலாளர்கள் இடையேயும் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை திசைதிருப்பி, அழுத்தம் கொடுத்தால் தொழிற்கட்சி பின்வாங்கும் என்ற போலித் தோற்றத்தை வளர்க்கின்றன.

ஆஸ்திரேலிய தொழிலாளர்களும் இளைஞர்களும் குடியேற்றம், புகலிடம் என்று அழைக்கப்படுவது பற்றிய விவாதத்தின் முழு வடிவமைப்பையும் கட்டாயம் நிராகரிக்க வேண்டும். இந்த ஒதுக்குதல், உலகம் முழுவதும் மக்கள் தங்கு தடையின்றி செல்லும் உரிமை ஆகியவற்றை தடுக்கும் பிற்போக்குத்தன கருத்துக்கள் ஆகும். மிக அடிப்படையாக உலக அகதிகள் நெருக்கடி என்பது முதலாளித்துவ இலாபமுறையின் அழிவினால் விளைவதாகும். அதாவது ஏகாதிபத்திப் போர், இனப் படுகொலைகள், பரந்துபட்ட வறுமை ஆகியவற்றால். சமீபத்திய தமிழ் அகதிகள் தப்பியோடுவது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடக்கும் உள்நாட்டுப்போரினால் ஏற்பட்ட பேரழிவின் விளைவினால்தான். கொழும்பின் அரசாங்கம் நடத்தும் இத்தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா உட்பட அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவும் உள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் மிக ஒடுக்கப்பட்ட பிரிவினரின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு ஒரு புதிய அரசியல் முன்னோக்கு தேவைப்படுகிறது. இது தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்புக்கள் அவற்றின் தேசிய, இனவெறித் திட்டத்திற்கு முற்றிலும் எதிரிடையானது ஆகும். இதன் பொருள் தொழிலாள வர்க்கம், தேசியப் பின்னணி, இனம் இவற்றிற்கும் இலாப முறைக்கு எதிராகவும் ஒரு ஒன்றுபட்ட அரசியல் இயக்கத்தை வளர்த்துப் போராட வேண்டும் என்பதாகும். அது சர்வதேச சோசலிசக் கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும். அத்தகைய இயக்கம்தான் குடியேற்றத்தின்மீது உள்ள தடைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்று வாதிட்டு, அனைத்து புகலிடம் நாடுவோருக்கும் ஆஸ்திரேலியா உட்பட எந்த நாட்டில் அவர்கள் வாழ விரும்பினாலும் அதற்கான குடியுரிமைகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதை நிலைநிறுத்தும்