World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Wall Street bonuses to rise by 40 percent

வோல் ஸ்ட்ரீட் மேலதிக கொடுப்பனவுகள் 40 சதவிகிதம் உயர்கின்றன

By Patrick Martin
6 November 2009

Use this version to print | Send feedback

உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய நிதியப் பேரழிவை தோற்றுவித்த அமெரிக்க முதலீட்டு, வணிக வங்களின் நிர்வாகிகள், வணிகர்கள் இந்த ஆண்டு முடிவில் அவர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சராசரி 40 சதவிகித உயர்வினை காண்பர் என்று புதனன்று வோல் ஸ்ட்ரீட் தளத்தைக் கொண்ட இழப்பீடு ஆலோசனை நிறுவனமான ஜோன்சன் அசோசியேட்ஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.

பங்குகள், பத்திரங்கள், பரிமாற்று பத்திரங்கள் ஆகியவற்றில் வணிகம் செய்பவர்கள் மிகக் கணிசமாக அந்த உயர்ந்த சராசரியையும் விட அதிகமாக 2008 இனை விட 60 சதவிகித மதிப்பிடப்பட்டுள்ள மேலதிக கொடுப்பனவுகளை பெறுவர் என்று நிறுவனம் கூறியுள்ளது. வோல் ஸ்ட்ரீட் இந்த ஆண்டு அதன் இலாபத்தில் பெரும் பகுதியை மரபார்ந்த வகையில் தொழில்துறை, வணிகத்திற்கு நிதிக் கடன் அளிப்பதன் மூலம் அல்லாமல் அத்தகைய நிதிய ஊகத்தில் இருந்து பெறுகிறது.

ஜோன்சன் அசோசியேட்ஸ் செய்தி அறிக்கையின்படி, "இந்த ஆண்டு முதலீட்டு, வணிக வங்கிகளில் நாம் காணும் முன்னேற்றமடைந்துள்ள வணிகச் செயற்பாடு, குறிப்பிடத்தக்க வகையில் வணிகர்களுக்கு உயர் மேலதிக கொடுப்பனவுகளாக மாறியுள்ளன." கவர்ச்சிகரமான மற்றும் உறுதியற்ற தன்மையும் நிறைந்த ஊக வாணிபமான பரிமாற்று பத்திர வர்த்தகம் "நிறைவாக இருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளது

வணிக, சில்லறை வங்கியில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் 2008 இல் இருந்ததைவிடக் குறைவான மேலதிக கொடுப்பனவுகளைத்தான் எதிர்பார்ப்பர். அதேபோல் அவர்கள் நிர்வகிக்கும் சொத்துக்கள் 2007 கடைசியில் அடையப்பட்ட உயர்ந்த கட்டத்தைவிட மிகக்குறைவாக இருக்கின்றபோது பெரும்பாலான தனியார் முதலீட்டு நிதிய இயக்குனர்களும், தனியார் பங்கு நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கும் குறைவான மேலதிக கொடுப்பனவுகளைத்தான் பெறுவர். மார்ச் 2009ல் Dow-Jones Industrial Average அதன் மிகக்குறைந்த நிலையில் இருந்து 3,500 புள்ளிகள் சராசரி அதிகத்தை அடைந்துள்ளபோதிலும் இன்னும் 2007ன் உயர்ந்த அளவான 14,000ஐ விட 4,000 புள்ளிகள் குறைவாகும்.

ஒரு கணிசமாக குறைமதிப்பிடும் முறையில் மேலதிக கொடுப்பனவுகள் அளவை வங்கிகள் "பரந்த பொருளாதாரத்தின் மீட்பை விட விரைவில் மீண்டுள்ளன" என்று மேலதிக கொடுப்பனவுகள் தொடர்பான மதிப்பீடு கூறியுள்ளது. 2008ல் வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் $20 பில்லியனுக்கும் அதிகமாக மேலதிக கொடுப்பனவுகளை 1929க்கு பின்னனரான பெரும் நிதியச் சரிவிற்கு இடையே கொடுத்தது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள மதிப்பீட்டின்படி மேலதிக கொடுப்பனவுகளின் அளவு 28 பில்லியன் டாலரை அடையக்கூடும்.

இந்த மதிப்பீடு பற்றிய அதன் கட்டுரையில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் எழுதியது: "ஒரு மூத்த நிலையான வருமானம் உடைய வணிகர் மொத்த ஊதிய தொகையாக கிட்டத்தட்ட 930,000 டாலர் ரொக்கத்திலும் பங்குகளிலும் எதிர்பார்க்கலாம். இது கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 695,000 டாலர் என்பதுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதாகும்."

முக்கியமான முதலீட்டு நிறுவனங்களில் நிர்வாகிகளுக்கான மேலதிக கொடுப்பனவுகள் ஏழு, எட்டு இலக்கம் உடையவையாக உள்ளன. உதாரணமாக கோல்ட்மன் சாஷ்ஸ் உயர் நிர்வாக அதிகாரி Lloyd Blankfein கடந்த ஆண்டு 50 மில்லியன் டாலருக்கு மேல் பெற்றார். தனியார் முதலீட்டு நிதிய செயலர்கள் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் ஊதியமாக ஓராண்டு "வேலைக்கு" பெற்றனர்.

சமூகத்தில் அனைத்து உபயோகமான தொழில்களைச் செய்யும் பெரும்பாலான மக்கள் கூட்டத்தில் வெகுஜன வேலையின்மை, தொழிலாள வர்க்கத்திற்கு ஊதியக் குறைப்பு என்ற சூழ்நிலையில், ஊகக்காரர்களுக்கு கொடுக்கப்படும் பெரும் பணத்தை நியாயப்படுத்த வங்கிகளின் செய்தித் தொடர்பாளர்கள் பெரு முயற்சி எடுத்தனர்.

இந்த வாரம் மிகப் பெரிய பிரிட்டிஷ் வங்கியான Barclays PLC உடைய உயர் நிர்வாக அதிகாரி ஜோன் வார்லே ஒரு உரையில் பின்வருமாறு அறிவித்தார்: "வங்கியாளர்களுக்கு மிக அதிக ஊதியம் கொடுக்கப்படுகிறது என்று பல தொடர்புடையவர்கள் கூறும் கருத்து பற்றி நான் மிகவும் உன்னிப்போடு உணர வேண்டியுள்ளது" என்றார். "நம்முடைய பங்குதாரர்களும் வாடிக்கையாளர்களும் Barclays மிகச் சிறந்த ஊழியர்களை கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்". "நம்முடைய இலக்கு போட்டியுடன் இயைந்த வகையில் குறைந்தபட்ச ஊதியங்களையாவது கொடுக்க வேண்டும் என்பதாகும்" என்று அவர் முடிவுரையாகக் கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக "சிறந்த ஊழியர்கள்" உலகப் பொருளாதாரத்திற்கு எதிராக நடத்திய சிதைக்கும் நடவடிக்கைக்கு பின்னர் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளுவது கடினம் ஆகும். அவர்கள் மனித இனத்திற்கு உண்மையான மதிப்பு எதையும் தோற்றுவிக்கவில்லை. ஆனால் பெருகிய முறையில் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கு அவர்களுடைய நிர்வாகத்தின்கீழ் ஒப்படைக்கப்பட்ட இருப்புக்களின் நிதியமதிப்பை குறைந்தபட்சம் தற்காலியமாகவேனும் நிதியத் திரித்தல்கள் செய்வதில் வல்லுனர்கள் ஆகிவிட்டனர்.

வாழ்வதற்கு வோல் ஸ்ட்ரீட் வணிகர்கள் என்ன உண்மையில் செய்கிறார்கள் என்பது புதனன்று JP Morgan Securities ஆல் வந்த அறிவிக்கை தெரிவிக்கின்றது. அதாவது அலபாமா (பர்மிங்ஹாம்) வில் உள்ள Jefferson பிராந்திய அதிகாரிகள் Morganனிடம் இருந்து வாங்கிய பரிமாற்று பத்திரங்களை அதன் மூலமே விற்பதற்கு அரசாங்க அலுவலர்களுக்கு அது இலஞ்சம் கொடுத்த விதத்தில் கட்டணம் அபராதமாக உள்ள $722 மில்லியனை தள்ளுபடி செய்வதாகக் கூறியுள்ளது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பாதுகாப்புக்கள் மற்றும் விகிதமாற்றக் குழுவின் இரண்டு முன்னாள் JP Morgan நிர்வாக இயக்குனர்கள் பிராந்திய ஆணையர்களின் நண்பர்களுக்கு $8 மில்லியனை கொடுத்தனர் என்று வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டியுள்ளது. ஜேபர்சன் பிராந்தியம் எஞ்சிய சொத்துக்கள் பிரிவில் $3 பில்லியன் இழப்புக்களை அடுத்து, முக்கியமாக வட்டிவிகித மாற்றங்களால் திவாலின் விளிம்பில் உள்ளது. அதே நேரத்தில் JP Morgan வாங்கப்பட்டதற்கான கட்டணமாக மற்றும் $647 மில்லியனை தருமாறு ஜேபர்சன் பிராந்தியத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது.

பிராந்தியக் குழுவின் முன்னாள் தலைவரும் தற்போது பர்மிங்ஹாமில் நகர முதல்வராக இருப்பவருமான Larry Langford, கடந்த வாரம் ஆடம்பரப் பரிசுகளையும் ரொக்கத்தையும் மொத்தம் $235,000 அளவிற்கு திட்டத்திற்கு பெற்றதற்காக தண்டனை பெற்றார். தண்டனை கொடுக்கப்பட்டவுடன் பதவியில் இருந்து இயல்பாகவே அகற்றப்பட்டார்.

ஜேபர்சன் பிராந்திய பகுதியில் தொழிலாள வர்க்க மக்கள் ஒரு சமூக பேரழிவை எதிர்நோக்கி நிற்கின்றனர். நிதியநெருக்கடி, பல பிராந்திய திட்டங்களில் குறைப்புக்கள், வேலைகள், நலன்களில் குறைப்புக்கள் ஆகியவை இதற்குக் காரணம் ஆகும். இதற்கிடையில் SEC கூறியுள்ளபடி, JP Morgan பிராந்தியத்தின் வணிகத்தை இலஞ்சம் கொடுத்து பெற்றுக் கொண்டதோடு மட்டும் இல்லாமல் அதற்கு அளித்த பணக்கோரிக்கையிலும் இலஞ்சத்தை சேர்த்துக் கொண்டது. இதனால் பிராந்திய மக்கள் தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் இலஞ்சம் பெற்ற செலவை ஏற்குமாறு திறமையுடன் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

பலமுறை காணப்பட்டுள்ளது போல், அமெரிக்க முதலாளித்துவத்தின் உண்மையான மோசடிகள் எதுவும் சட்டவிரோதம் என்பது அல்ல, எதுவும் சட்டத்திற்கு உட்பட்டது என்பதுதான். அலபாமா பர்மிங்ஹாமில் நடந்த நயமற்ற உள்ளூர் இலஞ்சம் ஒரு பிராந்தியத்தையே திவாலாக்கிவிட்டது. இன்னும் பரந்த, நயமான முறையில் நிதிய அயோக்கியத்தனம் வோல் ஸ்ட்ரீட்டிலும் உத்தியோகபூர்வ வாஷிங்டனில் நடத்தப்பட்டமை ஒரு முழுச் சமூகத்தையும் திவாலாக்கிக் கொண்டிருக்கிறது.