World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: The affairs the Clearstream trial aims to suppress

பிரான்ஸ்: கிளியர்ஸ்ட்ரீம் குற்றவழக்கு நசுக்கிவிட இலக்கு வைக்கும் விவகாரங்கள்

By Alex Lantier
7 November 2009

Use this version to print | Send feedback

முன்னாள் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனுக்கு எதிராக ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி தொடர்ந்துள்ள Clearstream விவகார வழக்கில் ஒரு தசாப்தமாக தொடர்ச்சியாக இருந்த எண்ணெய் மற்றும் ஆயுத பேரங்கள் பற்றிய இலஞ்ச ஊழல் அவதூறு சட்டப் பின்னணியாக பிணைந்துள்ளன.

வழக்கின் முக்கிய நோக்கம் 2007ல் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பின் சார்க்கோசி வலதுசாரிக் கொள்கைகளுக்கு மாறிவிட்ட தன்மையை நெறிப்படுத்தி, உறுதிப்படுத்துவதும் ஆகும்; இத்துடன் தொடர்புடைய மற்றொரு இலக்கு இந்த விவகாரங்கள் வெளிப்படுத்தியுள்ள அதிர்ச்சியளிக்கும் ஊழலை மறைப்பதும் ஆகும். இந்த "அரசியல்-நிதிய விவகாரங்களின்" பரந்த பின்னணியை தெளிவாக்குவதற்கு பதிலாக, வழக்கு விசாரணை வில்பன் போலி நிதியப் பட்டியல்களை தயாரித்ததின் மூலம் சார்க்கோசி மீது அவதூறு கொண்டுவர முயற்சித்தாரா என்ற குறுகிய குவிப்பை மட்டும் காட்டுகிறது. இந்த ஜனவரி மாதம், ஊழல்களை கண்டுபிடித்த விசாரணை நீதிபதிகளின் பதவிகளையும் இல்லாதொழிக்க முடிவெடுத்துள்ளார்.

பணம் கையாடல் ஆதாரம், பெரிய அளவு மோசடி மற்றும் கொலை ஆகியவற்றிற்கான சான்றுகளைக் கண்டுபிடித்துள்ள நிலையில் இந்த விவகாரங்களில் மிகக் குறிப்பிடத்தக்க அம்சம், தொடர்புடைய அரசியல்வாதிகளும் வணிகர்களும் பெற்றுள்ள சட்டபூர்வ விலக்கு ஆகும்- ஐரோப்பிய முதலாளித்துவத்தின் உறுப்பினராக இருப்பதின் பொருள் வருந்துகின்றேன் என்று ஒருபோதும் சொல்லக்கூடாது என்று உள்ளது.

எல்ப் விவகாரம்

எல்ப் எண்ணெய் நிறுவனத்தின் --இப்பொழுது பிரான்சின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமாக Total உடன் இணைக்கப்பட்டுவிட்டது-- விவகாரம் அதன் உயர்மட்ட நிர்வாகம் மிகப் பெரிய அளவில் கணக்குகளைத் திரித்து பணத்தை அபகரித்ததுதான். உயர்மட்ட நிர்வாகிகள் கொழிப்பதற்கு வகை செய்ததுடன், நிதியங்கள் பிரான்சின் ஆதரவு பெற்ற ஆபிரிக்க ஆட்சியாளர்களுக்கு கொடுப்பதற்கும், ஆபிரிக்க துணை சகாராப் பகுதி போர்களுக்கு நிதி கொடுக்கவும் பயன்பட்டன; அங்கு பிரான்ஸ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் 1990 களிலிருந்து தனது முகவர் பிரதிநிதிகளை முன்னிறுத்தி தொடர்ந்து போர்களில் ஈடுபட்டுள்ளன.

எல்ப், 1963ம் ஆண்டு அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த சார்ல்ஸ் டு கோலினால் Pierre Guillaumat பொறுப்பின் கீழ் நிறுவப்பட்டது. அவர் பிரான்சின் முன்னாள் அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்தார்; அதுதான் அவருடைய பொறுப்பின்கீழ் பிரான்சின் அணுவாயுதங்களைத் தயாரித்தது; அவர் இரண்டாம் உலகப் போரின்போது ஒரு முன்னாள் கோலிச உளவுத்துறை அதிகாரியாகவும் இருந்தார். எல்பின் தலைமை நிர்வாக அதிகாரி Loïk Le Floch-Prigen 2003 விசாரணையின் போது விளக்கியபடி, "1962ல் [டு கோலை] Guilaumat உண்மையான எண்ணெய் தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு ஒரு இணை அமைப்பு உருவக்கப்பட வேண்டும் என்று நம்ப வைத்தார். கோலிஸ்டுகள் ஆபிரிக்காவில் ஒரு உண்மையான மதசார்பற்ற அரச ஆயுதப்பிரிவு ஒன்றை விரும்பினர்... அது கிட்டத்தட்ட ஒரு நிரந்தர எண்ணெய் அமைச்சரகம் போல் இருக்கும் ....எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளைப் பற்றி உளவுத் தகவல்களை சேகரிக்கும்."

1994 ம் ஆண்டு எல்ப் விவகாரம் பற்றிய தகவல்கள் Bidermann ஜவுளி நிறுவனத்திற்கு எல்ப் சட்டவிரோதமாக பணம் கொடுத்தது பற்றி நீதிபதி Eva Joly விசாரணை நடத்தியபோது வெளிவந்தன. எல்பில் நிறைய சட்டவிரோத வலைப்பின்னல் இருப்பதை Joly கண்டுபிடித்தார்; அவை ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனின் இரண்டாம் பதவிக்காலத்தில் (1988-1995)ல் நிகழ்ந்தவை, குறைந்தது 305 மில்லியன் யூரோக்களேனும் நிதிய மோசடிக்கு உட்பட்டன. இந்த நிதிகள் காபோனிய ஜனாதிபதி Omar Bongo அங்கோலா, கமருன், கொங்கோ-பிராஸ்சவில் ஆகியவற்றின் அரசாங்கங்களுக்குக் கொடுத்தார். எல்ப் பணம் அப்பொழுது ஜேர்மனிய அதிபராக இருந்த ஹெல்முட் கோலுக்கும் அப்பொழுது ஸ்பெயின் நாட்டு பிரதம மந்திரியாக இருந்த Felipe Gonzales க்கும் கூட கொடுக்கப்பட்டது.

அவருடைய விசாரணைகளையடுத்து Joly அரச மிரட்டலை எதிர்கொண்டார். 2004ல் வெளிவந்த Is That the World We Wasnt to Live In என்ற புத்தகத்தில் ஜொலி தன்னுடைய தொலைபேசி ஒற்றுக் கேட்டலுக்கு உட்பட்டது, அவருடைய வீடு கண்காணிப்பிற்கு உட்பட்டது என்று கூறியுள்ளார். அவருடைய அலுவலகக் கதவில் மரண அச்சுறுத்தல்கள் ஒட்டப்பட்ட பின் அவருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. நம்பிக்கை கொடுப்பதைவிட அச்சுறுத்தலாகத்தான் போலீஸ் பாதுகாப்பு இருக்கிறது என்ற முடிவிற்கு வந்த அவர் அதை அகற்றுமாறு கோரினார்; ஆனால் அவருடைய கோரிக்கை மறுக்கப்பட்டு, அவருக்கு நிரந்தரமாகப் போடப்பட்டிருந்த பாதுகாவலர் எண்ணிக்கை 2 என்பது இருமடங்கு அதிகரிக்கப்பட்டது.

Le Floch-Prigent மற்றும் எல்ப் நிர்வாகிகள் Alfred Sirven, Andre Tarallo ("திருவாளர் ஆபிரிக்கா எனப்பட்டவர்) இறுதியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். Le Floch-Prigent குறைந்தபட்சம் பிரான்சின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு "மிகக் குறைந்த பட்சம்" 5 மில்லியன் யூரோக்களாவது கொடுக்கப்பட்டன என்றும் எலிசே ஜனாதிபதி அரண்மனையுடன் எல்ப் விவகாரம் பற்றி "அன்றாடத் தொடர்பை" கொண்டிருந்ததாகவும் சாட்சியம் அளித்தார். ஆனால் எல்ப் விவகாரத்தில் எந்த அரசியல்வாதி மீதும் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட குற்றம் சுமத்தப்படவில்லை.

Le Floch-Prigent, Sirven மற்றும் Tarallo அனைவரும் குறைந்த சிறைத் தண்டனை பெற்றனர். குறிப்பாக டாரல்லோவிற்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 2 மில்லியன் யூரோக்கள் அபராதம் என்பது செயல்படுத்தப்படவில்லை. இரண்டு மாதங்களில் அவர் சிறையில் இருந்து வெளியேறிவிட்டார், அபராதத்தையும் கட்டவில்லை.

எல்ப் விவகாரத்துடன் தொடர்புடைய கூறுபாடு முன்னாள் சோசலிஸ்ட் கட்சியை (PS) சேர்ந்த வெளியுறவு மந்திரி Ronald Dumas பற்றியது ஆகும். 1990களின் தொடக்கத்தில் எல்ப் ஏராளமான பணமும், ஒரு வீடும் மற்றும் ஆடம்பரப் பொருட்களையும் Christine Deviers-Joncour எனப்பட்ட எல்ப் ஊழியர் ஒருவருக்கு கொடுத்ததாக 1998ல் தகவல் வந்தது; அவர் டுமாவின் காதலர் என்று கூறப்பட்டது; அவர் டுமாவிற்கு பரிசுகளும் கொடுத்தார். டுமாவுடனான இந்த உறவுகள் பற்றி எல்பின் முக்கிய இலக்குகளில் ஒன்று தைவானுக்கு கப்பல்களை விற்பதில் ஒப்புதல் பெறுவது ஆகும்.

தன்னுடைய சட்ட விசாரணைச் செலவிற்கு நிதி திரட்ட Deviers-Joncour அனைத்தையும் கூறும் சுயசரிதை ஒன்றை எழுதினார்; குடியரசின் விலைமாது என்று தக்க முறையில் அதற்கு தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது; இது எல்ப் டுமாவின் செல்வாக்கை வாங்க முற்பட்டது என்ற சந்தேகங்களை உறுதி செய்தது. 2001ல் டுமா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது; ஆனால் 2003ல் மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டார்--அதற்குக் காரணம் எல்பில் Deviers-Joincour உடைய ஊதியம் உயர்த்தப்பட்டது அவருடைய செல்வாக்கைப் பெறுவதற்கு என்று அவருக்குத் தெரியாமல் இருந்திருக்காலம் என்று கருதப்பட்டதுதான்.

தைவான் கப்பல்கள் விற்பனை ஊழல்

1988ல் பிரெஞ்சு பாதுகாப்புத் துறை நிறுவனம் Thomson CSF (இப்பொழுது Thales) ஆறு Lafayette வகுப்பு கடற்படைக் கப்பல்களை தைவானுக்கு $2.8 பில்லியனுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருந்தது. இதன் விலை உயர்த்தப்பட்டு, அந்த உபரிப்பணம் பிரான்ஸ் மற்றும் ஆசியாவில் உள்ள அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க எடுத்துக் கொள்ளப்பட்டது. எல்ப் விவகார விசாரணையின் போது வந்த சட்டபூர்வ அழுத்தத்தை ஒட்டி டுமா இத்தகைய இலஞ்ச தொகைகள் 2.5, ஏன் 5 பில்லியன் பிரெஞ்சு பிராங்குகளாகக் கூட இருக்கலாம் ($500 மில்லியனில் இருந்து $1 பில்லியன்வரை) என்று கூறினார்.

ஆரம்பத்தில் இந்த விற்பனைக்கு சீனாவிடம் இருந்து எதிர்ப்பு வந்தது; வெளியுறவு மந்திரி என்னும் முறையில் விற்பனையை தடை செய்தார். தொம்ஸனும் எல்பும் சீனா, தைவான் மற்றும் பிரான்சில் இந்த எதிர்ப்பைக் கடப்பதற்கு செல்வாக்கு சேகரிக்கும் வலைப்பின்னலை நிறுவினர். இந்த விற்பனையுடன் தொடர்பு கொண்டிருந்த, குறைந்தது 10 அதிகாரிகள் சந்தேகத்திற்கு உரிய முறையில் மரணம் அடைந்தனர். இவர்களுள் உடன்பாட்டை எதிர்த்த தைவானின் கடற்படை காப்டன் யின் சென் பெங், உடன்பாட்டை எதிர்த்திருந்தவர், 1993ல் Taipei Bay ல் கழுத்தில் பலத்த வன்முறைக் காயங்களுடன் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தொம்ஸனுடைய தைவான் முகவர் Andrew Wang தைவானில் இருந்து லண்டனுக்கு ஓடும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்; அவர்மீது மோசடி, பணச் சலவை, ஊழல், கொலை ஆகிய வழக்குகள் போடப்பட்டன.

தொம்சனுடைய நிர்வாகி ஜாக் மோரிசனும் பிரெஞ்சு உளவுத்துறை அதிகாரி Thierry Imbot இருவரும் பாரிசில் இருந்த தங்கள் இல்ல வளாகங்களில் மேல் மாடிகளில் இருந்து விழுந்து உயரிழந்தனர். இரு இறப்புக்களும் தற்கொலைகள் என்ற முடிவிற்கு பிரெஞ்சு நீதிமன்றங்கள் வந்தன. Thierry உடைய தந்தையும் பிரான்சின் DGSE (Direction Generale de la Securite Exterieure) உடைய வெளி உறவுத்துறைப் பணிப் பிரிவின் முன்னாள் தலைவருமான தளபதி ரேனே இம்போட் தன்னுடைய மகனின் இறப்பு தற்கொலை என்பதை முறையாக மறுத்தார். தைவான் கப்பல்கள் விவகாரம் சில நபர்களை "பெரும் செல்வந்தர்களாக" ஆக்கியுள்ளது என்றும் தான் மரண அச்சுறுத்தல்களை பெற்றுக் கொண்டிருப்பதாக தன் மகன் தன்னிடம் கூறினார் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ச்சியான பிரெஞ்சு நிதி மந்திரிகள்--2001ல் சோசலிஸ்ட் கட்சியின் Laurent Fabius, 2002 இல் UMP யின் Francis Mer --இந்த வழக்குகள் பற்றிய விசாரணையை நிறுத்த அரசாங்க இரகசியச் சலுகைகளைப் பயன்படுத்தினர். 2003ல் தைவானிய அரசாங்கம் கொடுக்கப்பட்டதாகக் கருதப்பட்ட இலஞ்சத் தொகையை மீட்பதற்கு வழக்கு தொடர்ந்தது. 2004ல் சுவிஸ் வங்கி ஆதாரங்களைப் பயன்படுத்தி தைவான் கப்பல்களின் இறுதி விற்பனை விலையில் குறைந்தது இலஞ்சத் தொகை $520 மில்லியனாவது இருந்திருக்க வேணடும் என்று நிரூபித்தது. ஜூன் 2007ல் சுவிஸ் நீதிமன்றங்கள் இந்த நிதிகளில் $34 மில்லியனை தைவானுக்கு அளித்தன.

2008 ல் பிரான்சில் பாரிசின் அரசாங்க வக்கீல் Jean-Claude Marin இந்த வழக்கு தொடர்புடைய அனைத்து விசாரணைகளும் தவறான வழக்கு விசாரணைகள் என்று அறிவித்துவிட்டார்.

EADS உள்ளிருக்கும் அதிகாரிகளே நிகழ்த்திய வணிக ஊழல்

EADS நிர்வாகம் மற்றும் உளவுத்துறை அதிகாரியான Jean-Louis Gergorin உடைய Clearstream விவகாரத்தில் உள்ள தொடர்பு 2003ல் பெரும் வணிக அதிபரான Jean-Luc Lagardère இன் மரணத்திற்குப் பின்னர் பிரான்கோ-ஜேர்மன் வான்வழி மற்றும் பாதுகாப்புத்துறை பெருநிறுவனமான EADS ஐ அதிர்ச்சிக்கு உட்படுத்திய நெருக்கடியின் ஒரு விளைவு ஆகும். மற்றொன்று EADS க்குள் பணியாற்றிய உயரதிகாரிகளே Lagardère குழு EADS பங்குகளை விற்பனையில் தொடர்பு பெற்றிருந்தனர் என்ற ஊழல் ஆகும்.

Jean-Luc Lagardère இன் மரணம் இந்தக் குழுவை அவருடைய மகன் Arnaud கீழ் கொண்டுவந்தது--இவர் பெரிதும் விளையாட்டுக்கள், விளம்பரத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாரே அன்றி பாதுகாப்புத் துறை தொழிலில் அல்ல. மேலும் EADS துணை Airbus ன் முக்கிய புதிய உற்பத்திப் பொருளான A380 ஜம்போ ஜெட் விமானங்களும் உற்பத்தி தாமதங்களுக்கு உட்பட்டன; பின்னர் அவைதான் விமானத்தின் உள் மின்கருவிகள் திட்டமிட்டதில் இருந்த குறைகள் என்று கூறப்பட்டுவிட்டன.

முக்கியமான EADS நிர்வாகிகளும் பங்குதாரர்களும் --Airbus தலைமை நிர்வாக அதிகாரி Noël Forgeard, Lagardère Group மற்றும் ஜேர்மனிய Daimler-Chrysler உட்பட-- EADS பங்குகள் 2006 வசந்தகாலத்தில் சரிவதற்கு முன் தங்கள் பங்குளை விற்றனர்; இன்னும் சில தாமதங்கள் ஆகலாம் என்ற அறிவிப்பு வந்தபின் இவ்வாறு செய்தனர். Lagardère குழு EADS பங்குகள் 2 யூரோ பில்லியன் அளவிற்கு விற்றது; அதில் பிரான்ஸ் அரசாங்கத்தின் 600 மில்லியன் யூரோக்களும் அடங்கும் (CDC எனப்பட்ட Caisse des depots et consignations): அதன் மதிப்பு பின்னர் சரியாக 125 மில்லியன் யூரோக்களாக குறைந்தது; இந்த பணம் பிரான்சின் வரிசெலுத்துவோர் இழப்பில் ஒரு இலாபமாக இவர்களால் அடையப்பட்டது.

Le Monde க்கு வழங்கிய பேட்டி ஒன்றில், "ஒரு திருட்டுத்தனம் செய்பவர் அல்லது தன்னுடைய ஆலையிலேயே என்ன நடக்கிறது என்பதை அறியாத ஒரு திறமையற்றவர் என்ற இரு பார்வையில் ஒன்றாகக் கருதப்பட்டேன்; நான் இரண்டாவது நல்லது என்று நினைத்தேன்" என்று Arnaud Lagardère கூறினார்.

நன்கு அறியப்பட்டுள்ள கேலி வார இதழான Le Canard Enchaîné இல் கசியவிட்ட தகவல்படி, AMF (Autorite des Marches Financiers என்னும் நிதியக்கட்டுப்பாட்டு நிறுவனம்) Lagardère உடைய வீட்டில் ஆவணங்களைக் கண்டது. இவர் A380 தாமதங்கள் தன்னுடைய EADS பங்குகளை விற்பதற்கு முன் அறிந்திருந்தார்; அதையொட்டி அவருக்கு 890 மில்லியன் யூரோக்கள் இலாபம் கிடைத்தன. Arnaud Lagardère மீது பங்குகள் விற்பனை என்ற தவறான செயல் குறித்து எந்தக் குற்றச்சாட்டும் கூறப்படவில்லை.