World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany military welcomes new defence minister

ஜேர்மனிய இராணுவம் புதிய பாதுகாப்பு மந்திரியை வரவேற்கிறது

By Ulrich Rippert
7 November 2009

Use this version to print | Send feedback

கிறிஸ்துவ சமூக யூனியனை (CSU) சேர்ந்த கார்ல் தியோடர் சூ கூட்டன்பேர்க்கை புதிய பாதுகாப்பு மந்திரியாக நியமித்துள்ளமை ஜேர்மன் அதிகாரிகள் குழுவிடம் புயலென ஆர்வத்தைக் கட்டவிழ்த்துள்ளது என்று Spiegel Online கூறியுள்ளது.

பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அன்று மாலை கூட்டன்பேர்க் பேர்லினின் வரலாற்றுச் சூழ்நிலை நிறைந்த "Bendlerblock" ல் ஒரு சிறிய உரையை பாதுகாப்பு அமைச்சரக ஊழியர்களுக்குக் கொடுத்தார். அந்த இடத்தில்தான் ஹிட்லரை படுகொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்ட அதிகாரிகள் தூக்கிலிடப்பட்டனர். தன்னுடைய கருத்தில் இந்த அமைச்சரகம் "ஒரு முக்கிய துறை" என்று அவர் வலியுறுத்தினார். இவருடைய கருத்துக்கள் நீடித்த கரவொலியுடன் வரவேற்றப்பட்டன என்று செய்தி ஊடகத் தவகல்கள் தெரிவிக்கின்றன.

தங்களில் ஒருவராகவே கூட்டன்பேர்க் கூடியிருந்த இராணுவத்தினரால் வரவேற்கப்பட்டார். அவருடைய பிரபுப் பட்டம் மற்றும் 800 ஆண்டுகள் பிரபுத்துவக் குடும்ப மரபு ஆகியவை அதிகாரிகளின் பிரதிபலிப்பில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன.

உலகில் வேறு எந்த நாட்டிலும் ஜேர்மனியை போல் பிரபுக்கள் சாதியின் செல்வாக்கு இராணுவத்திலும், சமூகத்தின் பிற பகுதிகளிலும்கூட வலுவாக இருந்தது இல்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கூட்டாட்சியின் இராணுவப் படைகள் (Bundeswehr) கூட 1950 களில் இரண்டாம் பகுதியில், Wolf Stefan Traugott Count Von Baudissin, Johann Adolf Count von Kielmansegg போன்றோர் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர். இருவரும் ஹிட்லரின் இராணுவமான Wehrmacht இல் முக்கிய அதிகாரிகளாக இருந்தனர். இவர்கள் போரின் இறுதிக் கட்டத்தில்தான் நாஜித் தலைமையுடன் முரண்பாடு கொண்டனர்.

பீல்ட் மார்ஷன் வில்ஹெல்ம் ரிட்டர் வான் லீபின் அதிகாரிகளில் ஒரு பகுதியாக Ulrich de Maiziere மேற்கு முன்னணி இராணுவத்திற்கு தலைமை தாங்கியிருந்தார். அதுவோ 1950 களில் ஜேர்மனிய இராணுவத்தை மறுசீரமைத்தது. பிரெஞ்சு Hugenot குடும்பத்தைச் சேர்ந்த de Maiziere புதிய உள்துறை மந்திரி Thomas de Maiziere உடைய தந்தை ஆவார். அவர் முன்பு அங்கேலா மேர்க்கெலின் அதிபர் அலுவலகத்திற்குத் தலைவராக இருந்தார்.

ஜேர்மனிய வரலாற்றில் பிரபுத்துவ உயரடுக்கு பேரழிவு கொடுத்த பங்கைக் கொண்டுள்ளது. ஏகாதிபத்திய இராணுவமான Reichswehr, மற்றும் நாஜிகளின் Wehrmacht இரண்டிலும் அது அதிகாரிகள் குழுமத்தைக் கொண்டிருந்தது. வைமர் குடியரசில் Reichswehr அரசாங்கத்திற்குள் அரசாங்கமாக இருந்து, அரசியல் அமைப்பின் ஜனநாயக அஸ்திவாரங்களை நிராகரித்து பல இராணுவ முறை ஆட்சிமாற்றங்களில் தொடர்பு பெற்றதாகக் கூறப்படுகிறது. ஹிட்லரின் Wehrmachtல் பிரபுத்துவ தளபதிகள்தான் அழிக்கும் மற்றும் ஆக்கிரமிப்பு போரை ஒழுங்கமைத்தனர்.

நாஜி காலத்திய பீல்ட் மார்ஷல்கள் அனைவருமே கிட்டத்தட்ட உயர்குடிப் பிறப்பினர்தான். இப்பட்டியலில் Werner von Blomberg தலைமையிடம் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து Walther von Brauchitsch, Gunter von Kluge, Ritter von Leeb, Fedor von Bock, Erwin von Witzleben, Walter von Reichenau, Gerd on Rundstedt, Georg von Kuchler, Erich von Manstein, Ewald von Kleist, Maximilian von Weichs, Wolfram Baron von Richthofen, Robert Ritter von Greim மற்றும் Eduard Baron von Böhm Ermolli ஆகியோருடைய பெயர்கள் உள்ளன. Hermann Goring ஐத் தவிர பீல்ட் மார்ஷல் பட்டியலில் ஒரு சிலர்தான் பிரபுக் குடும்பங்களை சேராதவர்கள். அவர்களுள் Erwin Rommel, Albert Kesselring, Wilhelm Keitel, Friedrich Paulus ஆகியோர் இருந்தனர்.

இன்று போலவே அன்றும் பிரபுத்துவக் குடும்பங்கள் சமூக சாதி நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, மரபார்ந்த சடங்குகளையும், உரிய உயரடுக்கு பார்வையையும் கொண்டிருந்தனர். திருமணங்களும் வணிகங்களும் சமூகத்தில் உரிய சமமானவர்களுடன்தான் நடத்தப்பட்டன. Count von Baudissin Burgrave இனையும் மற்றும் சீமாட்டி zu Dohna-Schlodien ஐ திருமணம் செய்திருந்தார். Bundeswehr கட்டமைப்பில் அவருடைய பங்காளியாக இருந்த Count von Kielmansegg 1934TM Mechthild von Dincklage ஐ திருமணம் செய்து கொண்டார். அவ்வம்மையாருடைய மகன் பீட்டர் மத்தியாஸ் அலெக்சாந்தர் வான் கீர்மன்செக் பிரபு Mannheim நகரில் ஒரு சிறப்புப் பேராசியராக இருந்தவர். Countess Walpurgis von Schweinitiz und Krain ஆன Freiin vol Kauder ஐ திருமணம் செய்து கொண்டார்.

கார்ல் தியோடோர் (நாம் அவருடைய எட்டு மற்ற முதல் பெயர்களைத் தவிர்ப்போம்) Baron von und zu Guttenberg பிரபுத்துவ சாதியின் ஒரு பகுதி ஆவார், அதன் உயரடுக்கு பழக்க வழக்கங்களை தொடர்ந்து கொண்டவர். இவர் பிராங்கெனுக்கு அருகே உள்ள Kulmbach ல் கூட்டன்பேர்க் கோட்டையில் வாழ்கிறார். இதுதான் குடும்பத்தில் தலைமையிடமாக 1482ல் இருந்து இருந்து வருகிறது. பெப்ருவரி 2000 த்தில் அவர் Stephanie Countess von Bismarck-Schonhausen ஐ திருமணம் புரிந்து கொண்டார்; அவரோ இரும்பு அதிபரான ஓட்டோ வான் பிஸ்மார்க்கின் மரபில் நேரடியாக வந்தவர்.

அவருடைய தாயார் Christiane Henkell von Ribbentrop ஆவார். அவர் Jacob Count and Noble Lord von und zu Eltz (Faust vo Stromberg) மற்றும் Ladislaja Freinn Mayr von Melnhof உடைய மகள் ஆவார். 1985ல் அவர் Adolf von Ribbentrop ஐ திருமணம் செய்து கொண்டார். பிந்தையவரோ Joachim von Ribbentrop என்னும் ஹிட்லரின் வெளியுறவு மந்திரியின் மகனாவார். அவர் ஒரு போர்க்குற்றவாளி என்று 1946ல் தூக்கிலடப்பட்டார். இவ்விதத்தில் புதிய பாதுகாப்பு மந்திரியின் துணைத் தகப்பனார் ஆவார்.

இவருடைய தாய்வழிப் பாட்டனார் Jakob Count Eltz ஒரு ஜேர்மனியப் பிரபுவும், ரோமாபுரியின் Sovereing Order of the Maltese Cross உறுப்பினரும் ஆவார். அங்கு அவர் தூதர் அந்தஸ்தில் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்தார். எல்ட்ஸ் மரபின் முக்கிய வசிக்கும் இடம், 1745ல் இருந்து அவர்கள் 1944ல் நாடுகடத்தப்படும் வரை, குரோஷியாவில் இருந்த Schloss Eltz ஆகும். முன்னாள் யூகோஸ்லேவியா சிதைந்த துவக்க காலத்தில், Eltz குரோஷிய சுதந்திரத்திற்கு வாதிட்டிருந்தார். Jacob Count Eltz குரோஷியாவின் ஜனாதிபதி பிரான்ஜோ துஜ்மனுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தார். பிந்தையவர் அவரை 1991ல் "பொன் நகரில் உள்ள குரோஷியாவின் பிரதிநிதி" என்ற நியமனத்தைக் கொடுத்தார். 1992ல் இருந்து 2000 வரை குரோஷிய பாராளுமன்றத்தில் ஒரு பிரதிநிதியாக Jakob Count Eltz இருந்தார். 1430ல் நிறுவப்பட்ட Medeal of the Golden Fleece என்ற Knightly Order ஐயும் அவர் பெற்றிருந்தார். இந்த வெகுமதி ஐரோப்பிய பிரபுத்துவத்திடையே மிக அதிகமாக நாடப்படுகிறது.

கூட்டன்பேர்க்கும் ஆப்கானிஸ்தான் போரும்

37 வயதில் கூட்டன்பேர்க் ஜேர்மனிய பாதுகாப்பு மந்திரியாகப் பொறுப்பேற்ற மிக இளவயதினர் ஆவார். இவருடைய அரசியல் போக்கின் ஏற்றமும் குறிப்பிடத்தக்க வகையில் விரைவாக உள்ளது. ஓராண்டிற்கு முன் அவர் CSU வின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். மூன்று மாதங்களுக்கு பின்னர் அவர் CSU வின் மைக்கேல் கிளவுஸிற்கு பதிலாக பொருளாதார அமைச்சரகத்தில் தொடர்ந்தார். ஆறே மாதங்களில் அவர் பாதுகாப்பு மந்திரியாக வந்துவள்ளார். பல வர்ணனையாளர்கள் இந்த அரசியல் நவடிக்கை பற்றி வியப்பு அடைந்தாலும், இது ஒரு நீண்டகாலத் தயாரிப்பு ஆகும்.

"பேரவா நிறைந்த கூட்டன்பேர்க்கை அறிந்தவர்களுக்கு இது தெளிவாகும். இந்த நபர் தலைமைச் செயலர் பதவியை உயர்ந்த பதவிகளுக்கு செல்லும் தளமாகப் பயன்படுத்துகிறார் என" என்று வசந்த காலத்தில் Wirtschafts woche பத்திரிகை எழுதி, "வெளியுறவுக் கொள்கைதான் அவருடைய பொழுதுபோக்கு" என்றும் வலியுறுத்தியது. ஆனால் வெளியுறவு அமைச்சரகம் CSU அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்டது. ஏனெனில் மரபார்ந்த விதத்தில் FDP அதை உரிமை கோருகிறது. "பாதுகாப்பு மந்திரிப் பொறுப்புத்தான் மிஞ்சியுள்ளது" என்று வணிக நாளேடு பெப்ருவரியில் குறிப்பிட்டது. அதுவும் இவருக்கு நன்கு பொருந்தும் என்று Wirtschafts woche தொடர்ந்து எழுதியது: "வேறு எதற்கும் இல்லாவிட்டாலும் 2008 இலையுதிர்காலத்தில் இருந்து ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஜேர்மனிய இராணுப் படைகளை அவர் தொடர்ந்து நியாயப்படுத்தும் நிலைப்பாட்டிற்காக நன்கு அறியப்பட்டுள்ளார்."

தன்னுடைய மந்திரி பதவியை எடுத்துக் கொள்ளுமுன் பல ஆண்டுகள் கூட்டன்பேர்க் CSU நிர்வாகக் குழுவின் வெளியுறவுக் கொள்கை பற்றிய சிறப்புக் குழுவின் தலைவராக இருந்தார். ASP எனப்பட்ட வெளியுறவு, பாதுகாப்புக் கொள்கையில் செயற்குழுவின் செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் அவர் ஜூலை 2007ல் "ஆப்கானிஸ்தானத்தில் ஜேர்மனிய ஈடுபாடு" என்ற குறிப்பை எழுதினார். அதில் அவர் "ஆப்கானிய ஒருங்கிணைப்பாளர்" என்ற பதவி தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் அதன் முக்கிய பணி ஹிந்துகுஷ் பகுதியில் "வெளிப்படையாகவும் முற்றிலும்" உள்ள முக்கியமான பணிகளை எடுத்துக் கூறும் என்றும் தெரிவித்தார். "அரசாங்கத்தின் பொது, இராணுவ மூலோபாயத்தின் நோக்கங்கள் மற்றும் இடைத்தொடர்பு உடையவற்றை" அடைவதற்கு ஜேர்மனிய மக்கள் கருத்தை எதிர்கொள்ளுவது முக்கியம் என்றும் அதுவோ போர் பற்றி விருப்பம் காட்டவில்லை என்றும் கூறினார். "ஆப்கானிய ஒருங்கிணைப்பாளர் ஒரு சிறு எண்ணிக்கை ஊழியர்களுடைய உதவியுடன் அதிபர் அலுவலகத்திலேயே நேரடியாக இருத்தப்படலாம்" என்று கூட்டன்பேர்க்கின் குறிப்பு வாதிட்டது.

இது பிரச்சார அமைச்சரக நடைமுறையின் முதல் நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கிறதா என்பது உடனடியாகத் தெளிவு இல்லை. ஆனால் பொது மக்களிடையே பரந்து உள்ள போர் எதிர்ப்பு உணர்வை சமன் செய்யவேண்டும் என்ற நோக்கத்தை கூட்டன்பேர்க் கொண்டுள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை. "சிரமத்திற்குட்பட்ட பாதுகாப்பு நிலைமையை" கருதி ஜேர்மனியப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது மீண்டும் மீண்டும் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ளுகின்றன என்று அவர் குறைகூறினார். பொது விவாதங்கள் பலமுறையும் "இராணுப்பாதுகாப்பு மற்றும் பொதுகட்டமைப்பு பற்றி வேறுபடுத்திக் காண்கின்றன; ஆனால் இவை பல நேரமும் புறநிலைத் தன்மையை கொண்டிருப்பதில்லை." இது ஏற்கத்தக்கது இல்லை, ஏனெனில் "பாதுகாப்பு இல்லாமல், ஆப்கானிஸ்தானத்தில் மறுகட்டமைப்பு சமாளிக்கப்பட முடியாது" என்று அவர் எழுதினார்.

"ஆப்கானிஸ்தானத்தில் ஜேர்மனி ஒப்புக் கொண்டிருப்பதற்கு மாற்றீடு ஏதும் கிடையாது" என்று கூட்டன்பேர்க் வலியுறுத்தினார். "நம்முடைய படையினருடைய சாதனைகள் மற்றும் வளர்ச்சிக்கான உதவி ஊழியர்களின் சாதனைகள் கணிசமானவை, பாராட்டத்தக்கவை" என்றார். சான்ஸ்லரியில் ஆப்கானிஸ்தானத்திற்கு சிறப்புத் துறை நிறுவப்பட்டுள்ளதை நியாயப்படுத்தி இந்த முடிவுரைச் சொற்களைக் கூறினார்: "இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தானத்தில் ஜேர்மனியின் மொத்த ஈடுபட்டை சரியான தரத்திற்கு கொண்டுவருவதற்கு பெரிதும் உதவும். அதேபோல் மக்களிடையே நம் இராணுவத்தின் உறுதிப்பாடு ஏறக்கப்படுவதையும் உயர்த்திக் காட்டும்."

அப்பொழுது முதல் ஆப்கானிஸ்தானத்தில் நிலைமை வியத்தகு முறையில் சரிந்துள்ளது. ஜேர்மன் இராணுவம் (Bundeswehr) உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட படைகளுக்கு எதிர்ப்பு தெளிவாகப் பெருகியது. மக்கள் மீது தீவிரப்படுத்தப்பட்ட அன்றாட அறிக்கைகளினால் மனிதாபிமானப் போர் என்ற பிரச்சாரம் பொய் என நிரூபிக்கப்பட்டன. குண்டுஸ் படுகொலை இதன் அடையாளம்தான். பலமுறையும் புதிதாகக் கட்டப்பட்ட சாலைகளும் சமூக வசதிகளும் மீண்டும் நேட்டோ படைகளால் அழிக்கப்படுகின்றன. ஜேர்மனியப் படைகளும் இதைச் செய்கின்றன.

"ஜனநாயக அமைப்புக்களை" கட்டமைப்பது பற்றி பிரச்சாரங்களில் பொய்த்தன்மை பெருகிய முறையில் ஆப்கானிஸ்தான் மக்களிடையே மட்டும் இல்லாமல் படையினரிடையேயும் பெரிதும் தெளிவாகி வருகிறது. நேட்டோ துருப்புக்கள் முற்றிலும் ஊழலில் மூழுகியிருக்கும் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து வருகின்றன.

இந்த நிலைமையில், பாதுகாப்பு மந்திரி சூ கூட்டன்பேர்க் மோதலுக்கு செல்லும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். பதவி ஏற்பதற்கு சில நாட்கள் முன்பு அவர் ஆப்கானிஸ்தானில் நடைபெறுவது போர்தான் என்று வலியுறுத்தினார். இச்சூழ்நிலையில் இராணுவத்தின் பணி பற்றிய "அலங்கார மாற்றுச் சொற்களை" பயன்படுத்தவது தவறாகும் என்று அவர் குறிப்பிட்டார். Bild பத்திரிகையுடன் நடத்திய விவாதத்தில் அவர் இது ஒரு போர்ப்பணி என்று விளக்கினார். நாடுகளுக்கு இடையேதான் போர்கள் மூளலாம் என்று சர்வதேசச் சட்டம் தெளிவாக்கியிருந்த போதிலும், இத்தகைய "சட்டபூர்வ, கல்வித்துறை சார்ந்த அல்லது சொற்களின் நயம்" பற்றி ஒரு துருப்பினராவது கவலைப்படுவது தேவையில்லை என்று தான் நினைப்பதாக அவர் கூறிவிட்டார்.

பிரபுக் குடும்பத்தில் பிறந்தருடைய திமிர்ப் போக்கு ஒரு சட்டவிரோதப் போரை "உணர்வுபூர்வமான சொற்களின் நயம்" என்று ஒதுக்கி வைக்கும் தன்மையில் மிகத் தெளிவாக இதைவிட வெளிப்படுத்தப்பட்டிருக்க முடியாது.