World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US-China tensions overshadow Obama's trip to Asia

ஒபாமாவின் ஆசியப் பயணம் அமெரிக்க-சீன அழுத்தங்களால் சூழப்பட்டுள்ளது

By Peter Symonds
13 November 2009

Use this version to print | Send feedback

இன்று அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அவருடைய முதல் ஆசியப் பயணத்தின் ஆரம்ப கட்டமாக டோக்கியோவிற்கு வருகிறார். அவர் தென் கொரியாவிற்கும் சென்று, சிங்கப்பூரில் நடக்கும் ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பின் உச்சிமாநாட்டிலும் (APEC) கலந்து கொள்ள இருக்கிறார் என்றாலும், பயணத்தின் முக்கியநோக்கமாக சீனாவும் மற்றும் பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கு இடையே உள்ள பொருளாதார, மூலோபாய போட்டியும் இதன் அடித்தளத்தில் உள்ளது.

திங்களன்று வெள்ளை மாளிகையில் பேசிய ஒபாமா அமெரிக்க-சீனப் பொருளாதார உறவுகள் "பெரிதும் சமச்சீரற்ற தன்மையில் உள்ளன" என்று விவரித்து, குறிப்பாக சீனாவுடன் உள்ள பாரிய அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையையும், சீனா அமெரிக்க அரசாங்க கடன்பத்திரங்களை ஏராளமாக கொண்டுள்ளது பற்றியும் குறிப்பிட்டார். "இதன் சிந்திக்கும் பகுதி நாம் இப்பிரச்சினைகளில் சிலவற்றை தீர்க்காவிட்டால் உறவுகளில் அவை பொருளாதார, அரசியல்ரீதியாக பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தும் என்பதாகும்" என்று அவர் எச்சரித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவுகளில் உடைவுகள் ஏற்கனவே இந்த ஆண்டு வெடித்துள்ளன. செப்டம்பர் மாதத்தில் ஒபாமா சீனாவில் தயாரிக்கப்பட்ட டயர் இறக்குமதிகள் மீது 35 சதவிகித காப்பு வரியைச் சுமத்தினார். இது சீனாவிற்கான அமெரிக்க கார்த்தொழில், கோழிக்குஞ்சுகள் ஏற்றுமதியில் குவிப்பு-எதிர்ப்பு விசாரணைகளை (Anti-dumping Investigtions) பெய்ஜிங்கை ஆரம்பிக்கவைத்தது. இந்த மாதம் முன்னதாக அமெரிக்கா சீன எஃகு குழாய்கள் இறக்குமதியில் 99 சதவிகித காப்புவரியை விதித்தது. இது சீனாவை தன்னுடைய முந்தைய கார்த்தொழில், கோழிக்குஞ்சுகள் விசாரணையுடன் இதனையும் சேர்த்து விரிவாக்கப்பட வேண்டும் என்று கூற வைத்துள்ளது.

அமெரிக்காவின் தண்டனை கொடுக்கும் வணிக நடவடிக்கைகள் பரந்த வணிகப் போர் ஒன்று வருமோ என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளன. இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அமெரிக்கா 5.84 பில்லியன் டாலர் மதிப்புள்ள மொத்த சீன ஏற்றுமதி தொடர்பான 14 விசாரணைகளை தொடக்கியுள்ளது. கடந்த ஆண்டு சீன எஃகு குழாய்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது 3.2 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருந்தது. சீன வணிக அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் Yao Jian இந்த முடிவினால் 90க்கும் மேற்பட்ட எஃகு நிறுவனங்கள் பாதிப்பிற்கு உட்படும் என்று குறைகூறினார்.

சீனாவுடனான வர்த்தகத்திற்கு எதிராக இன்னும் கடுமையான நிலைப்பாட்டை கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் வலுவற்ற வணிகத்தினதும் மற்றும் தொழிற்சங்கங்களினதும் அழுத்தத்தின்கீழ் ஒபாமா உள்ளார். United Steel Workers சங்கத்தின் தலைவர் லியோ கெரார்ட் Financial Times இடம் கூறினார்: "உலகில் மிக மதிப்புடைய விஷயம் அமெரிக்கச் சந்தையில் இடம் பெறுவது ஆகும் --நாம் அதை சுலபமாக விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.... எமது வேலைகளை ஆசியர்களுக்கே தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்க முடியாது."

காப்புவரி முறையும் ஆசிய-எதிர்ப்பு உணர்வை தூண்டுதலும் அமெரிக்க தொழிலாளர்களை பாதுகாப்பதுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. மாறாக, கெரார்ட் போன்ற தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் உலகிலேயே 1930 களுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே வணிகப் போர் பற்றிய வார்த்தை ஜாலங்களில் ஈடுபடுகின்றனர். இது "சர்வதேச போட்டித்தன்மை" என்ற பெயரில் வேலைகள், பணிநிலைமைகள் ஆகியவற்றை நிர்வாகத்துடனும் அரசாங்கத்துடனும் இவர்கள் ஒத்துழைத்து தகர்த்ததில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சியாகும்.

பெய்ஜிங்கில் சீன நாணயம் மறுமதிப்பீடு செய்யப்படுவதற்கு அழுத்தம் கொடுக்கப் போவதாக ஒபாமா குறிப்புக் காட்டியுள்ளார். இது அமெரிக்க சந்தைகளில் சீன இறக்குமதிகளை விலை கூடவும், சீனாவில் அமெரிக்க பொருட்களை விலை குறைக்கவும் செய்யும். யுவான் மறுமதிப்பிற்கு உட்பட வேண்டும் என்று சீனா அமெரிக்காவிடம் இருந்து மட்டும் இல்லாமல் ஜப்பான், ஐரோப்பா ஆகியவற்றிடம் இருந்தும், ரஷ்யா, பிரேசில் போன்றவற்றில் இருந்தும் அழுத்தம் பெற்றுள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு சமீபகாலத்தில் மதிப்புக் குறைந்துள்ள நிலையில், டாலரோடு பிணைக்கப்பட்டுள்ள யுவானும் மற்ற நாணயங்களுக்கு எதிராக மதிப்புக் குறைந்துள்ளது. இது மலிந்த சீனப்பொருட்களில் இருந்து வரும் நியாயமற்ற போட்டித்தன்மை தொடர்பாக எதிர்ப்புக்களை தூண்டியுள்ளது.

இந்த வாரம் யுவான் மறுமதிப்பீடு பரிசீலிக்கப்படலாம் என்று பெய்ஜிங் குறிப்புக் காட்டியுள்ளது. ஆனால் அமெரிக்க டாலரின் சரியும் மதிப்பு பற்றி சீனா தன்னுடைய கவலைகளை கொண்டுள்ளது. டாலருக்கு பதிலாக ஒரு சர்வதேச இருப்பு நாணயம் தேவை என்ற பிரச்சினையையும் எழுப்பியுள்ளது. அமெரிக்க பத்திரங்களை 800 பில்லியன் டாலருக்கும் மேல் கொண்டுள்ள சீனா, தற்பொழுது அமெரிக்காவிற்கு வெளியே அமெரிக்க அரசாங்க பத்திரங்களை மிக அதிக அளவில் கொண்டிருக்கும் நாடு ஆகும். எந்த டாலர் மதிப்புக் குறைவும் சீன இருப்புக்களை நேரடியாக பாதிக்கும். ஆனால் டாலர் உலக இருப்பு நாணயம் என்ற பங்கிற்கு முற்றுப்புள்ளி அல்லது குறைப்பு என்பது அமெரிக்க நிதிய முறையில் பேரழிவு விளைவை ஏற்படுத்தி, 1930களில் இருந்தது போல் போட்டிமிக்க நாணயமுறை முகாம்களை வெளிப்படுத்திவிடக்கூடும்.

இந்த வணிக, நாணய அழுத்தங்களுக்கு அடித்தளத்தில் கடந்த இரு தசாப்தங்களில் இரு சக்திகளுக்கும் இடையே உள்ள ஒப்புமையிலான பொருளாதார வலிமையில் வியத்தகு மாற்றமும் உள்ளது. அமெரிக்க உலகின் பெரும் பொருளாதாரமாக தொடர்கையில், சீனா அடுத்த ஆண்டு ஜப்பானை கடந்து உலகின் இரண்டாம் பெரிய பொருளாதாரமாக வந்துவிடும்.

திங்களன்று தன் கருத்துக்களில் ஒபாமா குறிப்பிட்டார்: "நான் சீனாவை ஒரு முக்கிய பங்காளியாகவும், அதே நேரத்தில் போட்டி நாடாகவும் காண்கிறேன்." போட்டி நட்புத் தன்மையுடன் இருக்கும் என்ற வெற்று நம்பிக்கையை தெரிவித்த ஒபாமாவின் கருத்துக்கள் அமெரிக்க ஆளும் வட்டங்களுக்குள் சீனா ஒரு பெரிய மூலோபாய மற்றும் பொருளாதாரப் போட்டி நாடாக வருவது பற்றிய கவலைகள் அடித்தளத்தில் இருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.

அமெரிக்க அரசியல் நடைமுறையில் பிரிவுகள் சில முந்தைய புஷ் நிர்வாகத்தை ஆப்கானிஸ்தான் போரில் குவிப்பு காட்டாததற்கு மட்டும் இல்லாமல், ஆசியாவை புறக்கணித்ததற்கும் கடுமையாகக் குறைகூறியிருந்தன. இந்த இரு பிரச்சினைகளிலும் மையமாக இருப்பது சீனாவுடன் போட்டியாகும். முதல் விவகாரத்தை பொறுத்த வரையில் மத்திய ஆசியாவில் உள்ள எரிபொருள் கொழிப்பு பகுதியில் செல்வாக்கு என்பது உள்ளது. இரண்டாவதை பொறுத்த வரையில் கிழக்கு, தென்கிழக்கு ஆசியாவில் பொருளாதார, மூலோபாய ஆதிக்கம் உள்ளது. வெளியுறவுக் கொள்கையில் ஒரு தந்திரோபாய மாற்றத்தை கொண்டுவருவதற்கான வழிவகையாகத்தான் ஜனாதிபதி பதவிக்கு ஒபாமா ஆதரிக்கப்பட்டார்.

கிழக்கு ஆசியாவை பொறுத்தவரையில், ஒபாமா நிர்வாகம் அதன் நிலைப்பாடு மாற்றத்தை அடையாளம் காட்டும் விதத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருந்த வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி கிளின்டனை பெப்ருரி மாதம் அவருடைய முதல் வெளிநாட்டுப் பயணத்தின் இலக்காக இப்பகுதியை கொண்டிருந்தது. ஒபாமாவின் தற்போதைய பயணத்தின் முக்கிய நோக்கம் இப்பகுதியில் இருக்கும் அமெரிக்க உடன்பாடுகளை வலிமைப்படுத்த உதவதும், சீனாவிற்கு விட்டுக் கொடுக்க அமெரிக்கா தயாராக இல்லை என்பதை நிரூபிக்கவும்தான். தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் அதிகாரி Jeffrey Bader வெள்ளியன்று, "ஜனாதிபதி ஒபாமாவின் பயணத்தின் மூலம், அமெரிக்கா ஆசியாவில் நிலைத்த பங்கைக் கொள்ளும் என்பது ஆசிய மக்களுக்கு மிகத் தெளிவாகும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்

சிங்கப்பூரில் APEC கூட்டத்தை ஒட்டி ஒபாமா தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ASEAN) தலைவர்களை சந்திப்பார். ஒரு அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறு செய்வது முதல் தடவையாகும். 1997-98 ஆசிய நிதிய நெருக்கடிக்காலத்திற்கு பின் சீனா பெருகிய முறையில் வணிகப் பங்காளியாக இருந்துள்ளது, பல ASEAN நாடுகளுக்கும் உதவிகள், மற்றும் முதலீடுகளைக்கும் வகை செய்துள்ளது. இதன் விளைவாக முன்பு பனிப்போர் காலத்தில் அமெரிக்க நட்புநாடுகள் முகாமாக இருந்த ASEAN இப்பொழுது பெய்ஜிங்கின் செல்வாக்கு வலையத்தினுள் வந்து கொண்டிருக்கின்றன என்ற கவலையை வாஷிங்டன் கொண்டுள்ளது.

கடந்த மாதம் நடந்த ASEAN உச்சிமாநாட்டில், இன்னும் கூடுதலான ஆசியப் பொருளாதார சமூகம் அமைப்பது பற்றி விவாதம் மையம் கொண்டிருந்தது. ஏற்கனவே ASEAN 2015 ஐ ஒட்டி ஒரு வட்டாரப் பொதுச் சந்தையை நிறுவத் திட்டமிட்டுள்ளது. ஜப்பான் ASEAN ஐ தளமாகக் கொண்ட ஒரு கிழக்கு ஆசிய சமூகத் திட்டத்தை முன்வைத்தது. அது பின்னர் பொது நாணயத்தையும் கொள்ளும் என்று கூறியது. ஏற்கனவே இப்பகுதி 70 இருதரப்பு ஒப்பந்தக்கள் மூலம் நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளது. ஒருசில நாடுகள்தான் அமெரிக்காவுடன் உள்ளன. தென் கொரியா, தாய்லாந்து, மலேசியா ஆகியவற்றுடனான பேச்சுக்கள் தடைக்குட்பட்டுள்ளன.

ஆனால், சீனாவின் பெருகிய பிராந்திய கனத்தை எதிர்கொள்ளும் அமெரிக்கத் திறன் தொடர்ச்சியான நிதிய நெருக்கடியினால் சமரசத்திற்கு உட்பட்டுள்ளது. கடன், உதவி ஆகியவற்றிற்கான ஊற்றாக இருந்த அமெரிக்கா மிகத்தொலைவில் இப்பொழுது உலகிலேயே மிகப் பெரும் கடனாளி நாடாக உள்ளது. தொடர்ந்து முதலீட்டு உட்பாய்ச்சல்கள், குறிப்பாக சீனா, ஜப்பானில் இருந்து வர வேண்டும் என்று நம்பியுள்ளது. இந்த வலுவற்ற தன்மை பெப்ருவரி மாதம் சீனாவிற்கு கிளின்டன் பயணித்தபோது நன்கு வெளிப்பட்டது; அப்பொழுது அவர் சீனா அமெரிக்கப் பத்திரங்களை தொடர்ந்து வாங்க வேண்டும் என்று கூறியதுடன் அதற்கு ஈடாக அமெரிக்க வரவு-செலவுத் திட்டத்தில் நிதானப் போக்கு இருக்கும் என்றும் கூறினார்.

பல வர்ணனையாளர்கள் "மீண்டும் ஆசியாவிற்கு" என்றும் ஒபாமாவில் செய்தி வலுவிழந்துள்ள அமெரிக்கப் பொருளாதார வலிமையினால் சமரசத்திற்கு உட்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். சர்வதேச ஆய்வுகளுக்கான மூலோபாய நிலையத்தின் (CSIS) மூத்த ஆலோசகராக இருக்கும் மைக்கல் க்ரீன், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் பின்வருமாறு கூறினார்: "வணிகச் சமூகம் மற்றும் வெளியுறவு கொள்கை இயற்றும் வல்லுனர்களிடையே பசிபிக் கடந்த தொடர்ச்சியான உடன்பாடுகளுக்கு நாம் வேகம் கொடுக்க முடியும் என்ற உணர்வு உள்ளது. அது அமெரிக்காவிற்கு மேன்மை அளிக்கும். ஆனால் இதில் பிரச்சினை அமெரிக்காவால் பதிலுக்கு ஏதும் மேசையில் வைக்கமுடியாது என்பதுதான்."

சீனாவில் பெருகிவரும் பொருளாதார வலிமையும் ஒபாமாவின் ஜப்பான் பயணத்தையும் சூழ்ந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒரு இரவுதான் ஜப்பானில் கிழக்கிறார், ஆனால் சீனாவிலோ மூன்று நாட்கள் இருப்பார் என்ற உண்மை ஜப்பானிய செய்தி ஊடகத்தில் கவலையின் குறிப்பாக உள்ளது. இது சிறு விஷயம்தான் என்று தோன்றினாலும், இந்த விவாதம் ஜப்பானிய ஆளும் உயரடுக்கில் இருக்கும் ஆழ்ந்த அச்சங்களை உயர்த்திக் காட்டுகிறது. ஜப்பானோ நீண்ட காலமாக ஆசியாவில் அமெரிக்காவின் முக்கிய பொருளாதாரப் பங்காளியாகவும், மூலோபாய நட்பு நாடாகவும் இருக்கிறது. இந்த நிலை இப்பொழுது பெய்ஜிங்கால் மறைக்கப்படுகிறது.

ஒபாமாவின் பயணம் ஜப்பானிய அரசியல் சமீபத்தில் ஜப்பானிய ஜனநாயகக் கட்சி லிபரல் ஜனநாயகக் கட்சியை தேர்தலில் வென்று அரசியல் மாற்றத்தை கொண்டுவந்துள்ள நிலையில் அமெரிக்க-ஜப்பானிய கூட்டமைப்பிற்கு வலுக் கொடுக்கும் விதத்தில் கவனத்தைக்காட்டும். லிபரல் ஜனநாயகக் கட்சியோ 50 ஆண்டுகளில் பெரும்பகுதி அதிகாரத்தில் இருந்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி யுகியோ ஹடோயாமா ஏற்கனவே தன் அரசாங்கம் ஆசியாவில் சீனா உட்பட, நெருக்கமான உறவுகளை நாடும் என்று கூறியுள்ளார். இது ஜப்பானின் உயர்ந்த வணிகப் பங்காளியாக சீனா வெளிப்பட்டுள்ளதைப் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில் ஹடோயாமா அமெரிக்காவுடனான கூட்டிற்கு தன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அக்கூட்டு சீனாவின் பெருகும் இராணுவ வலிமைக்கு முக்கிய எதிர்க்கனமாக இருக்கும் என்று ஜப்பான் நினைக்கிறது.

ஆனால், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர்களுக்கு ஜப்பான் கொடுத்துள்ள ஆதரவு மக்களிடைய பரந்த எதிர்ப்பை தூண்டியுள்ளது. இது ஜனநாயகக் கட்சியினரை சற்று கூடுதலான விமர்சனரீதியான அணுகுமுறையை ஏற்க கட்டாயப்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது ஹடோயாமா ஆப்கானிஸ்தானின் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஜப்பான் கடற்படை மூலம் எரிபொருள் அளிக்கும் பணியை முடிக்க இருப்பதாக உறுதியளித்திருந்தார். அதே போல் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். கடந்த ஞாயிறு ஓகினாவில் நாகோ நகரத்தில் 20,000க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் அனைத்து அமெரிக்க படைகளும் நீங்க வேண்டும் என்று கோரினர். இந்த இரு பிரச்சினைகள் பற்றி பேசுவதையும் ஒபாமாவும் ஹடோயமாவும் தவிர்க்கக்கூடும்.

பொருளாதாரப் போட்டி மற்றும் வணிகப் போட்டி ஆகியவை ஒபாமாவின் பயணத்தின்போது பகிரங்கமாக விவாதிக்கப்படும் என்றாலும், வருங்கால இராணுவப் பூசல்கள் பின்னணியில் நிலவுகின்றன. ஒப்புமையில் பொருளாதார வலுக் குன்றியுள்ள நிலையில், அமெரிக்கா அதன் இராணுவ வலிமையைப்பயன்படுத்தி தன் பொருளாதார, மூலோபாய நலன்களை உறுதிபடுத்த முற்படுகிறது. ஆப்கானிஸ்தான ஆக்கிரமிப்பு, ஜப்பான், தென் கொரியாவில் இருந்து தென்கிழக்கு ஆசியா மூலம் இந்தியத் துணைக்கண்டம் மற்றும் மத்திய ஆசியாவில் இராணுவ உடன்பாடுகளை உருவாக்குவது, தளங்கள் அமைப்பது என்னும் விதத்தில் சீனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்ட பரந்த அமெரிக்க மூலபாயத்தின் ஒரு பகுதி ஆகும். இதன் விளைவாக அமெரிக்கா அதிகரித்துள்ள அழுத்தங்கள் ஆசியாவின் ஒவ்வொரு மூலையிலும் ஆழ்ந்தமுறையில் உறுதியை குலைக்கும் காரணியாக உள்ளது.