World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Abbas threatens resignation and collapse of the Palestinian Authority

அப்பாஸ் பதவிவிலக அச்சுறுத்துதலும் பாலஸ்தீனிய அதிகாரத்தின் சரிவும்

By Chris Marsden
13 November 2009

Use this version to print | Send feedback

ஒபாமா நிர்வாகம் அதன் முக்கிய பாலஸ்தீனிய கூட்டாளியின் நட்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதால், ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஒரு அவநம்பிக்கையுடனான சூதாட்டம்போல் தன் பதவியை இராஜிநாமா செய்வதாக அச்சுறுத்தியுள்ளார்.

வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி கிளின்டன் இஸ்ரேலிய பிரதம மந்திரி பின்யாமின் நாத்தன்யாகுவிற்கு கிழக்கு ஜெருசலம் மற்றும் மேற்குகரையில் குடியிருப்புக் கட்டமைப்புக்களை நிறுத்த மறுத்தற்கு வெளிப்படையான ஆதரவைக் கொடுத்ததின் உடனடி விளைவுதான் இந்த குறைமதிப்பிற்குக் காரணம் ஆகும்.

குடியேற்றக் கட்டமைப்பை குறைப்பதாக நாத்தன்யாகு கூறியதை "முன்னோடியில்லாதது" என்று கிளின்டன் புகழ்ந்திருந்தார். இதனால் அப்பாஸ் பாலஸ்தீனியர்களிடைய கொண்டிருந்த, மிச்சம் இருந்த அரசியல் நம்பகத்தன்மையும் தகர்க்கப்பட்டுவிட்டது. காஸா போர்க்குற்றங்கள் பற்றி கண்டித்திருந்த ஐக்கிய நாடுகள் சபை அறிக்கைக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டாம் என்று ஜனாதிபதி பாரக் ஒபாமா அழைப்புவிட்டதை ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டதற்கு அடுத்தாற்போல் இவ்வாறு நிகழ்ந்துள்ளமை அப்பாஸ் ஒரு வெறும் கைக்கூலி என்று மட்டும் இல்லாமல் செயல்திறன் அற்றவர் என்றும் அம்பலப்படுத்தியுள்ளது. டெல் அவிவ் உடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதன் மூலம் ஒரு பாலஸ்தீனிய நாடு உருவாவதற்கு அமெரிக்கா கேட்பதைக் கொடுத்தால் வாஷிங்டனின் ஆதரவு கிடைக்கும் என்று அப்பாஸ் வலியுறுத்தியது கிளிந்த கந்தையாகிற்று.

ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் பொதுவாக நிராகரித்திருந்த சட்டவிரோத குடியிருப்பு கட்டமைப்பை நிறுத்த வேண்டும் என்று கூட ஒபாமா கூறவில்லை.

அப்பாஸிற்கு உண்மையான அரசியல்சட்டரீதியான பதவி இல்லை. அவருடைய பதவி வரைகாலம் முடிந்த பின்னும் தொடர்ந்து இருக்கிறார். மிகக் காலம் கடந்து ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் ஜனவரி 24 நடக்கும் என்று அவர் ஒரு ஆணை மூலம் அறிவித்துள்ளார். அவருடைய அதிகாரத்தை ஹமாஸ் அங்கீகரிக்காததுடன், அத்தேர்தலில் பங்கு பெற வேண்டாம் என்று அது காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அப்படி இருந்தும், அப்பாஸ் மேற்குகரையில் தேர்தல் அவமானத்தை எதிர்கொள்ள இருக்கிறார்.

தன்னுடைய உள்நாட்டு நிலைப்பாட்டை பலப்படுத்திக்கொள்ளும் விதத்தில் வாஷிங்டன் நாத்தன்யாகுவை கட்டுப்படுத்தும் வரை தான் மறு தேர்தலுக்கு நிற்பதாக இல்லை என்று அப்பாஸ் அறிவித்தார். திங்களன்று "இஸ்ரேலியர்கள் சமாதானத்தை விரும்பவில்லை, குடியேற்றக் கட்டமைப்புக்களை நிறுத்த விரும்பவில்லை, இரு நாடுகள் என்ற கருத்தை விரும்பவில்லை...நாம்தான் சமாதானத்தை நம்புபவர்களாக இருக்க வேண்டும்." என்று தன்னுடைய ஆதரவாளர்களிடம் கூறினார்.

நாத்தன்யாகுதான் உடன்பாட்டை தடுத்துக்க கொண்டிருக்கிறார் என்னும் தன்னுடைய வாதத்தை அடிக்கோடிடும் வகையில், அப்பாஸ் மார்ச் இறுதியில் லிகுட் கட்சி அதிகாரத்திற்கு வருமுன் இஸ்ரேலுடன் அமைதியான உடன்பாட்டை அடைய "தான் வெகு அருகில் இருந்ததாக" கூறினார். "இஸ்ரேலியர்களுடன் நாங்கள் மேசையைச் சுற்றி உட்காரந்து (அப்பொழுது இஸ்ரேலியப் பிரதம மந்திரியாக இருந்த எகுட்டுடன்) ஓல்மெர்ட்டுடனும் லிவ்னியுடனும் (அப்பொழுது Tzpi வெளியுறவு மந்திரி) எல்லைகள் பற்றிக் கூட பேச்சுவார்த்தைகளை நடத்தினோம் என்றும், "நாங்கள் வரைபடங்களைக்கூட பறிமாறிக் கொண்டோம்." என்றும் தன்னுடைய மேற்குக்கரைத் தலைமையகத்தில் இருந்து பாலஸ்தீனிய வணிகர்களிடம் கூறினார்:

முழு பாலஸ்தீன அதிகாரமும் சரிந்துவிடும் என்ற எச்சரிக்கைகளும் அப்பாஸின் இராஜிநாமா அச்சுறுத்தலை தொடர்ந்திருந்தன. இதையொட்டி வாஷிங்டன் ஹமாஸுடன்தான் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியிருக்கும். அப்பாஸின் தலைமை பேச்சுவார்த்தை நடத்துபவரான ஷாயெப் எர்கார்ட் நியூயோர்க் டைம்ஸிடம் "இத்தனை நாட்களும் ஒரு பாலஸ்தீனிய நாட்டை உருவாக்க சமாதான வழிவகையில்தான் சென்று கொண்டிருக்கிறோம், ஆனால் நாடு உருவாகுவதாக தெரியவில்லை என்று அப்பாஸ் உணர்கிறார்" என்று கூறினார்.

"எனவே ஒரு ஜனாதிபதிக்கோ, அதிகாரத்திற்கோ தேவையில்லை என்று அவர் உண்மையாக நினைக்கிறார். அவருக்குப் பதில் யார் வருவார் என்ற வினா இல்லை. நாங்கள் எங்கள் பதவிகளை விட்டு நீங்குவது பற்றித்தான் இது இருக்கிறது. அவரே நீங்கியபின் எவரேனும் தொடர்ந்திருப்பர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?'

"இஸ்ரேல் ஹமாஸை எப்படி நடத்தும்?" என்று பின்னர் எர்கார்ட் கேட்டார்.

மற்றொரு மூத்த பாலஸ்தீனிய அதிகாரி AFT செய்தி நிறுவனத்திடம் அப்பாஸ் இராஜிநாமா செய்தால், "அதிகாரம் வீழ்ச்சி அடையும், ஒரு பாலஸ்தீனிய அதிகாரம் இருக்காது, அல்லது ஒரு பாலஸ்தீனிய நாட்டின் எவ்விதமான அமைப்புகளும் இருக்காது." என்று கூறினார்.

முழு பாலஸ்தீனிய அதிகாரமும் தன்னையே அழித்துக் கொள்ளும் குமிழை அமுக்குவேன் என்னும் அப்பாஸின் அச்சுறுத்தல் வாஷிங்டனில் கவனமாக கேட்கப்பட்டிருக்க வேண்டும். இது "அப்பாஸை காப்பற்றுக" என்னும் ஒரு சர்வதேச நடவடிக்கையை தொடக்கியுள்ளது. இதில் ஐரோப்பிய, அரேபியத் தலைவர்களும் இஸ்ரேலின் ஜனாதிபதி ஷிமோன் பெரஸும் சேர்ந்துள்ளனர்.

கெய்ரோவில் அரேபிய லீக்கின் தலைவர் "பாலஸ்தீனத்தில் ஏற்கனவே நிறைய பிரச்சினைகள் இருப்பதால்" பதவியில் இருந்து இறங்க வேண்டாம் என்று அப்பாஸை வலியுறுத்தியுள்ளார்.

துருக்கியின் வெளியுறவு மந்திரி அஹ்மத் தவுடோக்லு, "திரு.அப்பாஸின் முடிவு இறுதியாக இருக்காது" என்று தான் நம்புவதாகக் கூறினார். மொரக்கோவின் வெளியுறவு அமைச்சரகம் "அவருடைய நிரூபிக்கப்பட்ட தலைமையையும்" சமாதானப் பேச்சுக்களை புதுப்பிக்கக்கூடிய திறனையும் பாராட்டியுள்ளது.

பிரெஞ்சு வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்னெர் ஒரு இரண்டாம் பதவிகால தேர்தலில் நிற்பதில்லை என்னும் அப்பாஸின் முடிவு மத்திய கிழக்கில் மட்டும் இல்லாமல் "நம்முடைய" சமாதானத்திற்கு ஒரு அச்சுறுத்தல் என்றார்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, ஐ.நா. ஆகியவற்றின் மத்திய கிழக்கு தூதரான முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் இஸ்ரேலின் Army Radio விடம் அப்பாஸின் மறு தேர்தலுக்கு நிற்பதில்லை என்ற முடிவு ஒரு அரசியல் வித்தை அல்ல என்றும் ஒரு "ஆழ்ந்த வெறுப்பின் விளைவு" என்றார்.

பிரதம மந்திரி இட்சாக் ரபீன் வலதுசாரி தீவிரவாதியினால் படுகொலை செய்யப்பட்ட 14வது ஆண்டு நினைவு தினத்தைக் குறிக்கும் ஊர்வலத்தில் இஸ்ரேலிய ஜனாதிபதி ஷிமோன் பெரஸ் அப்பாஸின் முடிவை மாற்றுவதற்கு உடனடியாக சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். "இஸ்ரேல், அமெரிக்கர்கள் என்று அனைவரையும் அப்பாஸ் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். அனைவரும் "கல்லால் நியாயமற்ற முறையில் அப்பாஸை அடித்தது போல் உள்ளது" என்றார். பின்னர் நேரடியாக அப்பாஸுக்கு அழைப்புவிடும் விதத்தில், "நாம் இருவரும் ஓஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம், நான் உங்களை ஒரு சக கூட்டாளி என்னும் முறையில் கேட்டுக் கொள்ளுகிறேன்: "தளர்ந்துவிடாதீர்கள்!"

முன்பு தொழிற்கட்சியிலும் பின்னர் அதில் இருந்து பிரிந்த Meretz Yachad கட்சியிலும் இருக்கும் ஒஸ்லோ ஒப்பந்தங்களில் தொடர்பு கொண்ட Yossi Beilin, இச்சரிவு ஒரு ஆயுதமேந்திய பூசலாகிவிடும் ஆபத்து உடையது என்று எச்சரித்தார். "இரண்டு பெரும் மதிப்புடைய தலைவர்களை பாலஸ்தீன அதிகாரம் கொண்டுள்ளது." என்றும் அவர் வலியுறுத்தினார். இது அப்பாஸையும், பிரதம மந்திரியும் முன்னாள் உலக வங்கியில் இருந்தவருமான சலாம் ஃபயாட் ஐயும் குறிக்கும். நிதி மந்திரி என்னும் முறையில் சலாம் ஃபயாட் வாஷிங்டன் ஆணையிட்டிருந்த தடையற்ற சந்தைச் செயல்பட்டியலை சுமத்தினார், இப்பொழுது "பாதுகாப்பு மந்திரிப் பதவியை எடுத்துக் கொண்டு மேற்குகரையில் சட்டம், ஒழுங்கு நிலைநிறுத்த உதவியுள்ளார்."

"தான் இராஜிநாமா செய்வது பற்றிப் பரிசீலிக்க இருப்பதாக அப்பாஸ் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் கூறினால், அமெரிக்கத் தலைவர் அதை வெற்று அச்சுறுத்தல் என்று நினைக்கக்கூடாது. பல மாதங்கள் வீணடிக்கப்பட்டு வெற்றுஉத்திகள் கையாளப்பட்ட பின்னர் இது அவருடைய நிர்வாகத்தின் பிராந்திய கொள்கைகளுக்கு ஒரு அடியாக இருக்கும்." என்று Beilin எழுதியுள்ளது.

இத்தகைய சர்வதேச ஆதரவு இருந்தும், அப்பாஸின் அச்சுறுத்தல்கள் வாஷிங்டனில் சிறிதும் விடையிறுப்பைக் காணவில்லை. வெளிவிவகாரத்துறையின் செய்தித் தொடர்பாளர் இயான் கெல்லி வெள்ளியன்று அப்பாஸைப் பற்றி "நாங்கள் அவரிடம் பெரும் மதிப்பு வைத்துள்ளோம்; இந்த நிகழ்போக்கில் அவர் முக்கியமானவர் என்று கருதுகிறோம்; நிதானத்திற்கு அவர் பெயர் பெற்றவர்; தொடர்ந்து அவரோடு பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளோம்." எனக்கூறினார்.

ஆனால் திங்கள் மாலை ஒபாமா வெள்ளை மாளிகையில் நாத்தன்யாகுவுடன் பேசினார். தனியாக என்ன பேச்சுக்கள் நடந்ததோ, பகிரங்கமாக ஒரு கண்டனச் சொல்கூட வரவில்லை. இருவரும் ஈரானுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளை விவாதிப்பதில் முக்கியத்துவம் காட்டியதாகக் கூறப்படுகிறது. ஈரான்மீது தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேலிய ஆதரவு தேவை என்பதால் நாத்தன்யாகுவின் அரசாங்கத்துடன் ஒபாமா மோதலுக்கு செல்லமாட்டார் என்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஆகும்.

வெள்ளை மாளிகை பேச்சுக்களுக்கு முன்பு, ஐக்கிய யூத மக்களுக்கான பொதுக்கூட்டமைப்பு என்று வாஷிங்டனில் இருக்கும் அமைப்பில் நாத்தன்யாகு பேசினார். இதில் குடியேற்றங்கள் கட்டமைப்பிற்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்ற முன்னிபந்தனை இல்லாமல் பேச்சுக்கள் உடனடியாக தொடக்கப்பட வேண்டும் என்று மட்டுமே அவர் வலியுறுத்தினார். தெஹ்ரான் மீதான ஒபாமா நடவடிக்கைக்கும் ஆதரவு தெரிவித்த வகையில், "ஒரு அணுவாயுத ஈரான் தன்னுடைய நோக்கங்களை அடைவதற்கு நாம் தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார்.

மிகவும் இராஜதந்திரமான முறையில் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமல் ஒபாமா ஒதுங்கிக் கொண்டார். மாநாட்டில் பங்கு பெற்ற ஒருவர் ஒபாமா வராதது பற்றி இழிவுடன் பேசுகையில், "கடந்த வாரம் மத்திய கிழக்கில் ஹில்லாரி நேர்த்தியான அனுபவத்தைப் பெற்றார்; ஒருவேளை இங்குள்ள மக்கள் அவர் என்ன பேசினால் திருப்தி அடைவரோ அதை அவர் பேசிவிட்டு மறுநாள் அதைப் பின்வாங்கும் தேவையில்லை என்று நினைத்தார்கள் போலும்."

அப்பாஸின் இராஜிநாமா அச்சுறுத்தல் பற்றி Ha'aretz பத்திரிகையில் எழுதிய Zvi Barel, "சர்வதேச அழைப்புகள் அவர் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று இருந்தாலும்.....பாலஸ்தீனிய ஜனாதிபதி அமெரிக்கர்கள் தாங்கள் தொடக்கத்தில் உறுதியாக இருந்த குடியிருப்பு கட்டமைப்பு நிறுத்தப்பட வேண்டும் என்பதைக் கடைப்படிப்பார்கள் என்று நம்பியவிதத்தில் இராஜதந்திர நெறிகளைத் தவறாகப் புரிந்து கொண்டார். அப்பாஸ் தன்னை சமாதானத்திற்கான தனியோரு பாலஸ்தீனிய கூட்டாளியாக காட்டிக்கொண்டார். அதனால் வெள்ளை மாளிகை புல்வெளியில் தனது பாதுகாப்பு கவசத்தை வீசி எறிந்தார். ஆனால் அவரின் பாதுகாப்பு கவசம் ஒபாமாவின் முற்றத்தில் கைவிடப்பட்டு கிடந்தபோது சமாதானத்தின் பகைவர்களுக்குத்தான் பாதையை அமைத்துக் கொடுக்கும் நிலையில் தான் இருப்பதாக அறிந்தார்." என்று கூறியுள்ளார்.

அப்பாஸ் தன் இராஜிநாமா பற்றித் தீவிரமாக உள்ளாரா அல்லது வாஷிங்டனை வழிக்கு கொண்டுவர பெரும் உத்தியைக் கடைபிடிக்கிறாரா என்பது பற்றி ஊகங்கள் நிறைய வந்துள்ளன. ஆனால் இறுதியில் இது அதிகம் பொருட்படுத்தப்பட மாட்டாது. அவருக்கு ஆறுதலாக சிறிதும் கூற வாஷிங்டன் தயாராக இல்லை. எனவே தன்னுடைய ஆட்சிக்கு எதிராக பெருகும் அதிருப்தியை குறைப்பதற்கு அப்பாஸிடம் வேறு ஏதும் இல்லை. ஒரு குறைப்பிரசவமாகிவிட்ட "சமாதான வழிவகை" அவருக்குப்பின் வரவிருக்கும் நிலையில், இஸ்ரேல் கிழக்கு ஜெருசலம் மற்றும் மேற்குகரையின் முக்கிய பகுதிகள்மீது தன்னுடைய பிடியை இறுக்கி விடும்.

இது ஒரு ஆபத்தான அரசியல் நிலைமையாகும்; ஆக்கிரமிப்புப்பகுதிகள் மட்டுமல்லாமல் மத்திய கிழக்கு முழுவதும் ஒபாமாவிற்கு பெரும் பாதிப்பை கொடுக்கும்.