World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Washington's crisis over Afghanistan deepens

ஆப்கானிஸ்தானில் வாஷிங்டனின் நெருக்கடி தீவிரமாகிறது

By Bill Van Auken
17 November 2009

Use this version to print | Send feedback

ஆப்கானிஸ்தான் போரை விரிவாக்கும் திட்டம் பற்றி ஒபாமா நிர்வாகத்தினுள்ளும் மற்றும் இராணுவத்திற்குள்ளேயும் அதிகரித்தளவில் பகிரங்கமான கருத்து வேறுபாடுகள் பெருகியிருப்பது, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அது துவக்கிய போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இப்போரில் சாதகமான சாத்தியப்பாடுகள் இல்லை என்பதைத்தான் பிரதிபலிக்கிறது.

கடந்த வாரம் காபூலில் உள்ள அமெரிக்க தூதர் கார்ல் ஐக்கென்பெரி (Karl Eikenberry) வெள்கை மாளிகை ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்புவதற்கு எதிராக வெள்ளை மாளிகைக்கு ஆலோசனை கூறிய செய்திகள் கசியவிடப்பட்டதில் தீவிர வேறுபாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலேயே அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளின் தளபதியாக ஐக்கென்பெரி 2005ல் இருந்து 2007 வரை இருந்தார். அவர் அமெரிக்க இராணுவத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் ஒரு லெப்டினென்ட் ஜெனரல் பதவியில் ஓய்வு பெற்றபின் ஒபாமா நிர்வாகத்தின் தூதராக அந்நாட்டில் பதவியேற்றுள்ளார்.

தற்போதுள்ள ஆப்கானிய பெரும் ஊழல் மற்றும் கைப்பாவை ஆட்சியான ஜனாதிபதி ஹமித் கர்சாயின் அரசியல் திறனற்ற தன்மையை ஒட்டி கூடுதலான படைகள் அனுப்பப்படுவதால் அதிக நலன்கள் ஏற்படாது என்று தூதர் வாதிட்டுள்ளார். அது அந்த நாட்டின் பாதுகாப்புப்படைகள் அமெரிக்க இராணுவ வலிமையை நம்பியிருப்பதை நிரந்தரமாக்குவதுடன் அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ஐக்கன்பெர்ரி ஒபாமாவின் தேசிய பாதுகாப்புக் குழுவிற்குள் நடந்து கொண்டிருக்கும் விவாதம் பற்றி எழுத்து மூலமாக கருத்தை கொடுக்கச் சொன்னாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் தூதரும் மற்றும் முன்னாள் தளபதியினதும் எச்சரிக்கை தற்போதைய தளபதி ஸ்ரான்லி மக்கிரிஸ்டல் (Stanley McChrystal) கொடுத்த திட்டத்திற்கு எதிராக உள்ளது.

செப்டம்பர் மாதம் கசியவிடப்பட்ட மக்கிரிஸ்டலின் திட்டம் மற்றும் குறைந்தது 40,000 கூடுதல் அமெரிக்க துருப்புக்களாவது (ஏற்கனவே இருக்கும் 68,000 தவிர) அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பெருகி வரும் எதிர்ப்பை இராணுவ முறையில் அடக்கும் நோக்கத்துடன் எழுச்சி எதிர்ப்பு செயற்பாடுகளை தீவிரமாக்க அனுப்பப்பட வேண்டும் என்று கோரியிருந்தது.

ஒரு மாற்றுத்திட்டமாக ஆப்கானிய கைப்பாவை சக்திகளுக்கு பயிற்சி அளிக்க மற்றும் ஒரு 10,000 துருப்புக்கள் அனுப்பப்பட வேண்டும் என்று முன்வைக்கப்பட்டிருந்தது. ஒன்றுடன் ஒன்றிணைந்த இரு திட்டங்களும் முறையே 20,000, 30,000 துருப்புக்களுக்கான தேவையை முன்வைத்திருந்தன.

ஐக்கென்பெர்ரியின் செய்தி தகவல்கள் கசியவிடப்படுமுன், நிர்வாகத்திற்குள் இருக்கும் உயரதிகாரிகள் 30,000 முதல் 40,000 வரை துருப்புக்களை அனுப்பும் முடிவு எடுத்திருந்ததாக பரவலாக அறிவிக்கப்பட்டது. வெள்ளியன்று ஆசியாவிற்கு புறப்படுமுன் ஒபாமா நிர்வாகத்தின் அதிகாரிகளை முன்வைக்கப்பட்ட பல விருப்புரிமைகளில் இருக்கும் கூறுபாடுகளை இணைத்து ஒரு புதிய திட்டத்தை கொடுக்குமாறு கேட்டிருந்ததா கூறப்படுகிறது.

பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் கடந்த வியாழனன்று இந்த அணுகுமுறையைச் சுருக்கமாக பின்வருமாறு கூறினார். "இது அதிகம் என்று நினைக்கிறேன், நாம் எப்படி பல விருப்புரிமைகளை மிகச் சிறந்த விளைவினை பெற ஒழுங்குபடுத்த முடியும்? எமது உறுதியை எப்படி வெளிப்படுத்துவோம், அதே நேரத்தில் ஆப்கானிய மற்றும் அமெரிக்க மக்களுக்கு இது முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கக்கூடியது அல்ல என்பதையும் எப்படிப் புலப்படுத்துவது?" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில் நிர்வாகம் கர்சாய் ஆட்சியை சூழ்ந்துள்ள ஊழலை அகற்ற கடும் நடவடிக்கை வேண்டும் என்று காட்டுகிறது. மணிலாவில் கடந்த வாரம் பேசிய வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி கிளின்டன் "ஊழல், வெளிப்படைத் தன்மை இல்லாத நிலை, மோசமான ஆட்சி [மற்றும்] சட்டத்தின் ஆட்சி இல்லாதவை" இவற்றைப் பற்றி கவலை கொண்டுள்ளதாக கூறினார்.

திங்களன்று காபூலில் கர்சாய் ஆட்சியின் உள்துறை மந்திரி முகம்மது ஹனிப் அட்மர் ஊழல்-எதிர்ப்பு பிரிவு ஒன்று அமைக்கப்படும் என்றும் அது அமெரிக்க FBI உடனும் பிரிட்டிஷ், ஐரோப்பிய ஒன்றிய போலீசுடனும் ஒத்துழைக்கும் என்றார். இந்த நடவடிக்கை வாஷிங்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளை திருப்தி செய்வதற்கானது அல்ல என்றும் கூறினார். இவர் கூறியபோது ஒருபுறத்தில் ஐக்கன்பெர்ரியும் மறுபுறத்தில் பிரிட்டிஷ் தூதர் மார்க் செட்வில்லும் இருந்தனர்.

கர்சாயின் மந்திரிசபை உறுப்பினர் ஒருவர் "கர்சாய்மீது உள்ள அழுத்தம் கடுமையானது. 18ம் நூற்றாண்டு காலனியின் ஆளுனர் போல் நடத்தப்படுவதாக அவர் உணர்கிறார்" என்று கூறியதாக Spigel Online மேற்கோளிட்டுள்ளது.

தன்னுடைய ஒன்பது நாட்கள் ஆசிய சுற்றுப்பயணத்திற்கு பின்னர் வியாழனன்று வாஷிங்டனுக்கு ஒபாமா திரும்புவதாக உள்ளார். அன்றே கர்சாய் இரண்டாம் பதவிக்காலத்திற்கு பிரமாணம் எடுத்துக் கொள்ளுவார். அவர் இப்பதவியை மிகப் பெரியளவு போலி வாக்குகள் பெட்டியில் திணிக்கப்பட்டிருந்த ஆகஸ்ட் மாத மோசடித் தேர்தலில் வென்றார். ஒபாமா வாஷிங்டனுக்கு திரும்பிய பின் முன்கூட்டி அறிவிக்கப்படாத வகையில் காபூலுக்குச் செல்லக்கூடும், போர் பற்றிய உறுதிப்பாட்டிற்கு அது அடையாளம் காட்டும் மற்றும் கர்சாயிடம் நேருக்கு நேர் அரசாங்கத்தில் ஊழலைக் குறைக்கும் உறுதியைக் கேட்பார் என்று செய்தி ஊடகத்தில் அதிகரித்தளவில் ஊகம் உள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஊழலில் ஈடுபடும் முக்கியஸ்தர்களை குற்றவிசாரணைக்கு உட்படுத்துவது என்பது கர்சாயை தனிமைப்படுத்திவிடும். ஊழல், போதைப் பொருள் கடத்தல், போர்க்குற்றங்கள் ஆகியவற்றில் தொடர்பை கொண்ட போர்ப்பிரபுக்களான அப்துல் ரஷிட் டோஸ்டம், கர்சாய்க்கு துணையாக தேர்தலில் நின்ற முகம்மத் ஃபாகிம், அல்லது அவருடைய சொந்த சகோதரர் அஹ்மத் வாலி ஆகியோர் ஆட்சிக்கு முக்கிய அடித்தளமான ஆதரவு கொடுப்பது மட்டும் இல்லாமல், 2001ல் வாஷிங்டன் படையெடுத்து தலிபான் ஆட்சியை அகற்றியபோதும் அதற்குப் பின் நாட்டை ஆக்கிரமித்தபோதும் முக்கிய நண்பர்களாக இருந்தனர்.

தூதருக்கும் இராணுவத் தளபதிக்கும் இடையே உள்ள பூசல் கசப்பான முறையில் பெருகிவிட்டது என்று செய்தி ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. பெயரிடப்படாத அரசாங்க அதிகாரிகளின் சாட்சியங்களை மேற்கோளிட்டு நியூயோர்க் டைம்ஸ் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அமெரிக்க இராணுவம் மற்றும் பொது அதிகாரிகளின் முறையான சமீபத்திய கூட்டம் ஒன்றில் ஐக்கென்பெர்ரியின் செய்திகளில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளைப் பற்றி "ஒன்றன்பின் ஒன்றாக, மக்கிரிஸ்டல் அலசினார்" என்று கூறியுள்ளது.

தூதரின் நிலைப்பாட்டை மக்கிரிஸ்டல் கண்டித்து, அதன் தர்க்கரீதியான முடிவு, "தூதரகத்தின் கூரையில் ஹெலிகாப்டரை நிறுத்துவது" என்பதாகும் என்றார்; இது 1975ல் அமெரிக்க ஆதரவு பெற்ற வியட்நாம் ஆட்சி தோல்வி அடைந்ததை அடுத்து சைகோனில் இராணுவத் துருப்புக்கள் பீதியில் ஹெலிகாப்டர் மூலம் திரும்பப் பெறப்பட்டதை குறிக்கிறது.

ஒரு West Point பட்டதாரி, 40 ஆண்டுகள் இராணுவத்தில் அனுபவம் உடைய ஐக்கன்பெர்ரி இராணுவத்தின் உயர் கட்டளையகத்திற்குள் ஆதரவு இல்லாமல் தன்னுடைய கருத்தை வெளியிட்டிருக்க முடியாது.

ஆப்கானிஸ்தானில் ஐக்கன்பெர்ரி தளபதியாக இருந்தபோது, அவருக்கும் மக்கிரிஸ்டலுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மக்கிரிஸ்டல் அப்பொழுது இரகசிய கூட்டு சிறப்பு நடவடிக்கைகள் கட்டுப்பாட்டின் தலைவராக இருந்தார். மக்கிரிஸ்டல் கமாண்டோ தாக்குதல்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் இலக்கு வைத்த படுகொலைகள் பற்றிக் கொடுத்த சில திட்டங்களுக்கு ஐக்கன்பெர்ரி ஒப்புதல் கொடுக்க மறுத்தார். இது பொதுமக்கள் இறப்புக்களுக்கு வகை செய்யும் என்றும் மக்களை மேலும் விரோதப்படுத்தும் என்றும் அவர் நினைத்தார்.

சந்தேகத்திற்கு இடமின்றி மக்கிரிஸ்டலின் எழுச்சி எதிர்ப்புத் திட்டத்திற்கு நேரடி எதிர்ப்பும் அவநம்பிக்கைத்தன்மையும் இராணுவத்தின் உயர் கட்டளையகத்திற்குள் உள்ளது. பெரும்பாலும் அவர்களில் பலர் வியட்நாம் போருக்குப்பின் இராணுவத்தில் சேர்ந்தவர்கள்.

இதைத்தவிர இராணுவத்திற்குள் ஆப்கானிஸ்தானில் எட்டு ஆண்டு போர் மற்றும் ஈராக்கில் ஆறரை ஆண்டு ஆக்கிரமிப்பு ஆகியவை சுயவிருப்புடனான படையினரை ஒரு முறிவு நிலைக்கு தள்ளியுள்ளது என்ற பெருகிய கவலை உள்ளது.

இத்தகைய கவலைகளை மேலும் வளர்ப்பது போல் நவம்பர் 6ம் தேதி இராணுவம் மனவள ஆலோசனைக் குழுவின் அறிக்கை, ஆப்கானிஸ்தானில் உள்ள துருப்புக்களை பற்றியதை வெளியிட்டது. அதன் பல கண்டுபிடிப்புக்களில், "நீடித்த சுதந்திர நடவடிக்கை (Operation Enduring Freedom-OEF) பிரிவுகளின் உளத்திடத்தின் விகிதம் 2009ல் குறிப்பிடத்தக்க வகையில் 2005 அல்லது 2007 ஐவிட குறைவாகும்" என்று கூறப்பட்டுள்ளது. துருப்புக்களில் 5.7 சதவிகிதம்தான் தங்கள் பிரிவுகளின் உளத்திடம் உயர்ந்தது, அல்லது மிக உயர்ந்தது என்று குறிப்பிட்டனர். இது 2007ல் இருந்ததில் பாதி கூடக் கிடையாது.

இராணுவத்தின் மதிப்பீடு ஒன்று ஆப்கானிஸ்தானத்தில் உள்ள துருப்புகளில் 21 சதவிகிதத்தினர் உளரீதியான பிரச்சினைகளில் அவதியுறுகின்றனர் என்றும் இது 2005ல் இருந்த சதவிகிதத்தைவிட இரு மடங்கு அதிகம் என்றும் கூறுகிறது. ஒரு போர்ப்பகுதியில் மூன்றாம் அல்லது நான்காம் தடவை பணிபுரிந்த படையினரில் 31 சதவிகிதத்தினர் உளரீதியான பிரச்சினைகளைத் தெரிவித்தனர்.

இந்த மதிப்பீடு, தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய துருப்புக்களில் 31 சதவிகிதத்தினர் தங்கள் திருமணங்களில் பிரச்சினை ஏற்பட்டவிட்டதாகக் கூறியுள்ளனர்.

மதிப்பீட்டின் போது அமைக்கப்பட்ட கவனசெலுத்தும் குழுக்களின் விவாதங்களை மேற்கோளிட்டு, அறிக்கை அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு மக்கள் பெருகிய முறையில் கொண்டுள்ள எதிர்ப்பு சரியும் உளத்திடத்தின் முக்கிய ஆதாரம் என்று சுட்டிக் காட்டியுள்ளது. "எந்த முன்னேற்றமும் இல்லாததால் அவர்கள் வெறுப்பை காட்டுகின்றனர்" என்று அறிக்கை சாலையோர குண்டுகளை அகற்றுவதில் ஈடுபட்டுள்ள துருப்புக்களை பொறுத்த வரையில் கூறியுள்ளது. மற்றொரு படையினர், "பாதையை நாங்கள் சரி செய்தபின் அங்கு வெடிக்குண்டை காணக்கூடியதாக உள்ளது. ஏனெனில் கிராமவாசிகள் அவற்றை அங்கு வைத்துவிடுகின்றனர்." என்று கூறிதாக அது மேற்கோளிட்டுள்ளது.

மற்றொரு படையினர் அதிக தயாரிப்பு அல்லது ஒருங்கிணைப்பு இல்லாமல் இரவு ரோந்துகளுக்கு அனுப்பப்படுவது பற்றி, "நாங்கள் புறப்பட்டுச் செல்லுகிறோம், ஆனால் அனைவரும் இறக்கப்போகிறோம் என்றுதான் நினைக்கிறோம்." என்றார்.

ஆப்கானிஸ்தான் போரின் செலவினங்கள் பெருகிய முறையில் அமெரிக்க அரசாங்கத்தின் நிதிய நெருக்கடிக்குள் கணிசமான கூறுபாடாக உள்ளது; இது பெருகிய வேலையின்மை, வறுமை என்று உள்நாட்டில் இருக்கையில் கூடுதலான சமூகநலச் செலவுகளை குறைப்பதில் முடியும். அரசாங்க உள் மதிப்பீடுகளின்படி, நியூயோர்க் டைம்ஸ், மக்கிரிஸ்டலி என்று கூறியுள்ளது. ஓன் மேலதிக 40,000 துருப்புக்களுக்கு அதிகச் செலவு ஆண்டு ஒன்றிற்கு 54 பில்லியன் டாலராக உயரலாம், ஆண்டிற்கு ஒரு படையினரை ஆப்கானிஸ்தானில் நிறுத்தும் செலவு கிட்டத்தட்ட 1 மில்லியன் டாலர் என்று அரசாங்க மதிப்பீடுகள் கூறுகின்றன.

இதைத்தவிர ஆப்கான் போலீஸ் மற்றும் இராணுவத்தின் பயிற்சிக்கான செலவு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஈராக், ஆப்கானிஸ்தான போர்களுக்கு இந்த ஆண்டு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 130 பில்லியன் டாலரை விடத் தனியானது ஆகும். இதைத் தவிர துணை நிதி என்று 50 பில்லியன் டாலரை பென்டகன் விரைவில் கோர இருக்கின்றது.

அமெரிக்க நிர்வாகம் மற்றும் இராணுவத்திற்குள் வளர்ந்துள்ள அழுத்தங்களைப் பற்றிய மற்றொரு அடையாளம் பிரிட்டிஷ் கார்டியனுக்கு டேவிட் கில்குல்லன் கொடுத்த பேட்டி வடிவில் உள்ளது. இவர் எழுச்சி எதிர் நடவடிக்களைப் பற்றிய புகழ்பெற்ற வல்லுனர், மற்றும் அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டுத் தளபதி டேவிட் பெட்ரீயஸுக்கு ஆலோசகரும் ஆவார். அவர், ஒபாமாவை ஒரு எரியும் கட்டிடத்திற்கு தீயணைப்பு வீரர்களை அனுப்புவதா கூடாதா என்பது பற்றி "போதனை செய்பவர்" என்று ஒப்பிட்டார்.

நிர்வாகத்திற்குள் இருந்து மக்கிரிஸ்டல் கோரிய துருப்புக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவது பற்றி குறைகூறிய ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய இராணுவ அதிகாரியான கில்குல்லன், எச்சரித்தார்: "முக்கிய நாளை உறுதி செய்து கண்டத்தின் மீது படையெடு அல்லது உங்களுக்கு சூயஸ்தான் கிடைக்கும். அரைகுறை நடவடிக்கைகள் சூயஸுடன் முடிந்துவிடும்."

இக்குறிப்பு 1956ல் பிரிட்டன் சூயஸ் கால்வாயை பழையபடி எடுத்துக் கொள்ளும் முயற்சியில் தோல்வியுற்றது பற்றியதாகும். அப்பொழுது அக்கால்வாய் எகிப்தினால் தேசியமயமாக்கப்பட்டது. அந்த நிகழ்வு மத்திய கிழக்கில் பிரிட்டிஷின் மேலாதிக்கம் மற்றும் உலக அரங்கில் அதன் பெரிய சக்தி என்ற அந்தஸ்திற்கு முற்றுப்புள்ளி வந்ததை அடையாளம் காட்டியது

அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள்ளும் இராணுவ உளவுத்துறை அமைப்புகளுக்குள்ளும் சூயஸ் பற்றிய குறிப்பு மற்றும் தூதரக அலுவலகக்கூரை மீது ஹெலிகாப்டர் நிறுத்துவது பற்றிய குறிப்புகளுடன் கூடிய விவாதங்கள் ஒரு அமெரிக்க தோல்வி அல்லது ஆப்கானிஸ்தானத்தில் இருந்து படைகளை வெளியேற்றுதலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகசக்தி என்பது அதே போன்ற இழப்பை அடையாளம் காட்டுமா என்பதில் மையம் கொண்டிருக்கக்கூடும் என்பதில் ஐயுறவேதுமில்லை.

ஆனால் கில்குல்லன் புறக்கணிப்பது பிரிட்டனுக்கு ஏற்பட்ட சூயஸ் சங்கடம் போதுமான இராணுவ சக்தி இல்லாததால் ஏற்பட்டதல்ல, பிரிட்டிஷ் பவுண்டிற்கு ஆதரவு கொடுக்க இராணுவ நடவடிக்கையை எதிர்த்த வாஷங்டன் என்பதுதான். இதையொட்டிய நிதிய நெருக்கடி லண்டனை அமெரிக்க விருப்பங்களை ஏற்கச் செய்து இராணுவ நடவடிக்கையை முடிக்க நிர்ப்பந்தித்தது.

ஆப்கானிஸ்தானிய போரின் பெருகும் செலவினங்கள் அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இவை அதேபோன்ற ஒரு திருப்புமுனைக்கான சூழலுக்கு தயார் செய்கின்றன. துருப்பு அனுப்புவதை பற்றி ஒபாமா என்ன முடிவு எடுத்தாலும் அத்தகைய நெருக்கடியும் மற்றும் அதனால் உருவாகும் ஆளும் நடைமுறைக்குள் கசப்பான மோதல்கள் உருவாகுவது என்பது தவிர்க்க முடியாதாகும்.