World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

European Union selects president and foreign minister

ஐரோப்பிய ஒன்றியம் தலைவரையும், வெளியுறவு மந்திரியையும் தேர்ந்தெடுக்கிறது

By Stefan Steinberg
21 November 2009

Use this version to print | Send feedback

வியாழனற்று "பணியுடன் இணைந்த சிறப்பு விருந்தில்" நடந்த பேச்சுக்களை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 தலைவர்கள் ஒருமனதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள தலைவர், வெளியுறவு மந்திரி ஆகிய பதவிகளுக்கான பெயர்களை அறிவித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் லிஸ்பன் உடன்பாட்டில் நிறுவப்பட்டுள்ள பதவிகளில் எவர் இருத்தப்படுவர் என்று பல மாதங்கள் நடந்த ஊகத்திற்குப் பின், கூடியிருந்த ஐரோப்பிய அரசாங்கத் தலைவர்கள் உலகிலோ, ஐரோப்பாவிலோ கூட அதிகம் அறியப்படாத இரு நபர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

பெல்ஜியத்தின் பிரதம மந்திரி Herman Van Rompuy ஐரோப்பியக் குழுவின் முதல் தலைவராகவும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிரிட்டனின் ஐரோப்பிய ஆணையாளரான Baroness Catherne Ashton ஐரோப்பிய வெளியுவுக் கொள்கை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல விதங்களில் இவை வியப்பைத் தரும் நியமனங்கள் ஆகும். 62 வயதான Van Rompuy 1970களின் முற்பகுதியில் பெல்ஜிய மத்திய வங்கியில் பொருளாதார வல்லுனராகப் பணியாற்றி பின் 1988ல் இருந்து 1993 வரை Flemish Christian Democrat கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். பெல்ஜியத்தின் பிரதம மந்திரியாக அவர் 11 மாதங்களாகத்தான் இருக்கிறார்.

Van Rompuy யின் மொழித் திறைமைகள் ஐரோப்பிய அதிகாரத்துவத்தினரால் பாராட்டப்படுகின்றன; பல ஐரோப்பிய மொழித் திறமையுடன் அவர் ஜப்பானிய மொழியிலும் தேர்ச்சி பெற்றவர். ஆனால் வெளியுறவுக் கொள்கைத் துறையில் அவருக்குக் கிடத்தட்ட எந்த அனுபவமும் இல்லை. சர்வதேச அரசியலில் அவர் கொண்டிருந்த முக்கிய பங்கே River Schelde சீரமைப்பில் டச்சு நாட்டு அதிகாரிகளுடன் கொண்டிருந்த பூசல் ஒன்றுதான் என்று ஒரு செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

Catherine Ashton ஒரு தேர்ந்தெடுக்கப்படாத பிரிட்டிஷ் அரசியல்வாதி; அவருடைய நாட்டிலேயே அவரைப் பற்றி அதிகம் அறியப்படாதவர். ஒரு மூத்த அமைச்சர் பதவியில் அவர் ஒருபோதும் இருந்தது இல்லை. 1999ல் பிரபுக்கள் மன்றத்தில் அப்ஹோந்தின் ஆஷ்டன் சீமாட்டி என்று நுழைவதற்கு முன், அவர் பிரிட்டனில் ஒரு உள்ளூர் சுகாதார அதிகாரத்துவப் பிரிவை நடத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் பிரிட்டனின் ஐரோப்பிய ஆணையாளர் பதவியை பீட்டர் மண்டெல்சனிடம் இருந்து பெற்றார்; பிந்தையவர் நலிவுற்றிருக்கும் தொழிற் கட்சியின் நிலைமை பிரிட்டனில் புதுப்பிக்க அழைக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் என்ற முறையில், ஆஷ்டன் ஒரு பெரிய அதிகாரத்துவத்திற்கு தலைமை தாங்கி முக்கிய ஐரோப்பிய வணிகக் குழுக்கள், செல்வாக்கு திரட்டும் குழுக்களுடன் நெருக்கமான பிணைப்புக்களைக் கொள்ள முடிந்தது. Van Rompay க்கு அதிக வெளியுறவு அனுபவம் இல்லாத நிலையில், பொதுவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய வெளியுறவுக் கொள்கை தலைவர் எவ்வித அனுபவத்தையும் கொண்டிருக்கவில்லை என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

வெளியுறவுக் கொள்கைத் தலைமைக்கான நியமனம் பற்றி Ashton கூட அதிர்ச்சி அடைந்து வியாழனன்று காலை வரை பதவிக்கு தான் தேர்வு செய்யப்பட இருப்பது பற்றி எதுவும் தெரியாது என்று அறிவித்தார். பதவி கிடைத்தது பற்றி "சற்றே வியப்பு" அடைந்ததாகக் கூறிய Ashton ஒரு தக்க உரையைத் தயாரிக்கக்கூட நேரம் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டார்.

தன்னால் தலைவர் பதவியை ஏற்க முடியும் என்ற அறிவிப்பு Van Rompuy இனால் நியமனத்திற்கு சில நாட்களுக்கு முன்புதான் கொடுக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பதவிகளுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் வழிவகை முற்றிலும் ஜனநாயகத் தன்மை அற்றதாகும். இவ்விதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் லிஸ்பன் உடன்பாட்டின் மரபுகளை முற்றிலும் ஒட்டித்தான் இது உள்ளது.

ஐரோப்பிய அரசியல் அமைப்பை பிரதியீடு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களால் லிஸ்பன் உடன்பாடு கொல்லைப்புற வழியால் அறிமுகமாயிற்று என்பது நினைவு கூரப்பட வேணடும்; ஏனெனில் அது பிரான்சிலும், ஹாலந்திலும் தொடர்ந்து வந்த மக்கள் வாக்கெடுப்புக்களில் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

ஒரு திருத்தத்திற்கு உட்பட்ட அரசியலமைப்பிற்கு லிஸ்பன் உடன்பாடு என்று பெயரிடப்பட்டது. அதன் முன்னோடியின் அனைத்து தடையற்ற சந்தை அடையாளங்களையும் அது தக்க வைத்துக் கொண்டுள்ளது; ஐரோப்பிய வாக்காளர்களிடையே ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரஸ்ஸல்ஸில் உள்ள அதிகாரத்துவத்தை கூடுதல் ஜனநாயகப்படுத்துவதில் ஒர் அடி முன்னேற்றத்தை இது பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற வாதத்தில் முன்வைக்கப்பட்டது. ஐரோப்பிய தலைவர்கள் ஐரோப்பிய வாக்காளர்களிடம் கொண்டிருக்கும் இகழ்வைத்தான் வியாழனின் நியமனங்கள் மறு உறுதி செய்கின்றன. எந்தவித வெளி ஜனநாயகத் தொடர்பும் ஒதுக்கப்பட்ட ஒரு பைசன்டைன் முறையில், 27 ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் எவர் எந்த வேலைக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று தங்களுக்குள்ளேயே மூடிய கதவுகளுக்குப் பின் பேசி முடிவு எடுத்தனர்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வழிவகையை விளக்கிய ஒரு கிழக்கு ஐரோப்பிய தூதர் பிரிட்டிஷ் டெய்லி டெலிகிராப்பிடம் கூறினார்: "1970 களில் கிரெம்ளினுக்குள் எவர் போவர் வருவர் என்பது பற்றிய வழிவகையை அறிவது போல்தான் ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் பதவிக்கு எவர் வருவர் என்பது பற்றிய நிலை ஒத்துள்ளது. பேர்லின் சுவர் தகர்க்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பின்னரும் பிரஸ்ஸல்ஸில் கிரெம்ளின் முறையை இன்னும் அகற்றவில்லை என்பது வினோதமாக உள்ளது."

பல அரசியல் வர்ணனையாளர்கள் இந்த ஐரோப்பிய ஒன்றிய நியமனங்கள் "உலக அரங்கில் தங்கள் நிலைப்பாட்டை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்பை இழந்து விட்டதைக் காட்டுகின்றன" (Der Spiegel) என்று குறைகூறியிருக்கையில், இத்தகைய அதிகம் அறியப்படாத இரு அதிகாரத்துவத்தினரை முக்கிய ஐரோப்பிய ஒன்றிய பதவிகளுக்கு தேர்த்தெடுத்திருப்பதில் உறுதியான அரசியல் கணக்குகள் இருந்தன.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் பதவிக்கான போட்டியில் முதலில் முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயரும் இருந்தார்; 2006ல் அந்தப் பதவிக்கு நிற்க அவர் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியால் ஊக்குவிக்கப்பட்டார். ஆனால் ஐரோப்பா முழுவதும், குறிப்பாக ஜேர்மனியில், அமெரிக்கச் செல்வாக்கிற்குட்பட்ட அரசியல்வாதியாகத்தான் பிளேயர் கருதப்பட்டார். பிரிட்டிஷ் பிரமதர் பதவியில் இருந்து விலகிய பின்னர், பிளேயர் தன்னுடைய பிளேயர் அறக்கட்டளையை வளர்ப்பதில் குவிப்பு காட்டி வருகிறார்; இதற்கு அமெரிக்க அரசியல் மற்றும் வணிக நலன்களின் பெரும் ஆதரவு இருந்து வருகிறது. மத்திய கிழக்கு தூதர் என்ற பங்கில், பிளேயர் அமெரிக்க நலன்களைக் காப்பதில் முன்னிற்பதாகத்தான் கருதப்படுகிறார்.

கடந்த ஆண்டு நிதிய நெருக்கடியை அடுத்து சார்க்கோசியும் ஜேர்மனிய அரசாங்கமும் அமெரிக்காவிற்கு எதிராக ஒரு ஆக்கிரோஷமான குரலை எழுப்புகின்றன; இந்த நெருக்கடி "ஒரு அமெரிக்கத் தயாரிப்பு" என்று அறிவித்துள்ளன. சமீபத்திய தொடர்ந்த கூட்டங்களிலும் உச்சிமாநாடுகளிலும் ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் பிளேயருக்குக் கொடுத்து வந்த ஆதரவைக் கைவிடுமாறு சார்க்கோசியை வலியுறுத்த முடிந்தது.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத் தலைமைப் பதவிக்கு மற்ற பிரிட்டிஷ் வேட்பாளர்கள், பீட்டர் மண்டெல்சன், வெளியுறவு மந்திரி டேவிட் மிலிபண்ட் போன்றோர், தங்கள் ஆர்வம் உள்நாட்டு அரசியலில் குவிப்பு காட்டுவது என்று அறிவித்து போட்டியில் இருந்து விலகி விட்டனர். 2010 தேர்தல்களை அடுத்து தொழிற் கட்சியின் தலைமையை எடுத்துக் கொள்ளும் தன்னுடைய சொந்தப் பிரச்சாரத்திற்கு மிலிபண்ட் தயாரிப்பு நடத்துகிறார். இது தற்போதைய தொழிற் கட்சி தலைவர் கோர்டன் பிரெளனுக்கு பேரழிவைக் கொடுக்கக்கூடிய முடிவாக அமையலாம்.

இரு உயர் ஐரோப்பிய ஒன்றிய பதவிகளுக்கும் தன்னுடைய வேட்பாளர்களை நிறுத்துவதற்கு எதிராக ஜேர்மனி முடிவெடுத்ததற்குக் காரணம் ஐரோப்பிய மத்திய வங்கியின் உயர் பதவியை மரபார்ந்த வகையில் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியே ஆகும். அதே நேரத்தில், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் கிரேட் பிரிட்டன் ஆகியவை சக்திவாய்ந்த ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகக் குழுவான ஐரோப்பிய ஆணையத்தில் செல்வாக்கு மிகுந்த பதவிகளுக்கு தங்கள் வேட்பாளர்களை நிறுத்தும் வழிவகையில் ஈடுபட்டுள்ளனர்.

எப்படிப் பார்த்தாலும், Van Rompuy இன் நியமனம் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிய அரசாங்கங்களின் நெருக்கமான ஒத்துழைப்பின் முதலும், முக்கியமானதுமான முடிவு ஆகும். ஐரோப்பியக் குழுவின் காலாண்டுக் கூட்டங்களுக்கு இப்பொழுது Van Rompuy தலைமை தாங்குவார்; அதில் அனைத்து அரசாங்கத் தலைவர்களும் ஒன்று கூடுவர்; ஆனால் இவர் சமீபத்தில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக இரண்டாம் வரைகாலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள José Manuel Barroso விற்கு அடுத்த பங்கைத்தான் கொள்ளுவார் என்பது எதிர்பார்ப்பு.

ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மற்றும் வெளியுறவுத் துறையின் தலைவரை தெரிவுசெய்வதில் உள்ள முக்கிய காரணிகள் அனைத்தும் தேசிய நலன்கள் மற்றும் தன்னைப் பெற்றிய பெரும் உணர்வு இவற்றைச் சுற்றித்தான் உள்ளன. பிரிட்டின் பைனான்ஸியல் டைம்ஸ் இல் இந்த வகை பற்றி ஒரு வர்ணனை சுருக்கமாகக் கூறியிருப்பதாவது: "தேசிய அரசின் மேலாதிக்கம் வெற்றி பெறுகிறது" என்ற தலைப்பில் செய்தித்தாள் எழுதியது: "லிஸ்பன் உடன்பாடு (முதலில் ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பு) முதலில் 2001ல் பெல்ஜியத்தின் ஐரோப்பிய ஒன்றியத் தலைமையினால் முன்வைக்கப்பட்டபோது, ஐரோப்பிய கூட்டாட்சி வாதிகளால் பிரஸ்ஸல்ஸிற்கு அதிகாரத்தை மாற்றும் கடைசி முயற்சி என்று கருதப்பட்டது இதல் வரி பற்றிய தேசியக் கொள்கைகள், வெளியுறவுக் கொள்கைகளும் அடங்கும்."

பிரஸ்ஸல்ஸில் வியாழனன்று நடைபெற்ற விருந்தில், "அந்த முன்வைக்கப்பட்ட முயற்சிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.... ஐரோப்பியத் தலைவர்கள் தேசிய அரசின் மேலாதிக்கத்தை உறுதிபடுத்திவிட்டனர்; புதிய தலைவர் மற்றும் வெளியுறவுக் கொள்கைத் தலைரும் தேசிய தலைநகரங்களின் பணியாட்களாகத்தான் இருப்பர், எஜமானர்களாக அல்ல" என்று பைனான்ஸியல் டைம்ஸ் தொடர்ந்து எழுதியது.

கடந்த ஆண்டு நிதிய நெருக்கடிக்யில், பொருளாதார பாதுகாப்பு வாத மற்றும் தேசிய கொள்கைகள் அனைத்து ஐரோப்பிய உறுப்பு அரசுகளின் விடையிறுப்பின் மையமாக இருந்துள்ளது. அரசியலில் அதிக செல்வாக்கு அற்றவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளது, ஐரோப்பிய அரசுகளுக்கு, பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன் ஆகியவற்றிற்கு தலைமையில் நிற்கும் சாதகச் சூழ்நிலையை உருவாக்கி, பெருகிய முறையில் அவற்றின் சொந்த தேசிய செயற்பட்டியல் தொடரப்படுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.