World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Civil war spreads across north west Pakistan

வடமேற்கு பாக்கிஸ்தானில் உள்நாட்டுப்போர் படர்கிறது

By James Cogan
23 November 2009

Use this version to print | Send feedback

தெற்கு வஜீரிஸ்தானில், பாக்கிஸ்தானின் தலிபானான Tehrik-e-Taliban (TTP)க்கு எதிரான பாக்கிஸ்தானிய இராணுவத் தாக்குதல் FATA எனப்படும் கூட்டாட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பழங்குடிப்பகுதிகள் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகியவற்றில் ஒரு பெரிய உள்நாட்டுப் போராக விரிவாகியுள்ளது. இஸ்லாமியவாதிகளும் பழங்குடிப் போராளிகளும் தாங்கள் இப்பொழுது வாழ்வா, சாவா என்னும் போராட்டத்தில் அமெரிக்க சார்புடைய ஜனாதிபதி அலி ஆசிப் அல் ஜர்தாரிக்கு எதிராக நடத்துபவர்களாகக் கருதுகின்றனர். அவரோ ஆப்கானிஸ்தானிய எல்லையில் தலிபான் காட்டும் எதிர்ப்பிற்கு முக்கிய இனவழி பஷ்டுன் பகுதிகள் பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கு பெரும் படைகளை அனுப்புதல் வேண்டும் என்ற வாஷிங்டனின் கோரிக்கைகளுக்கு தாழ்ந்து நடக்கிறார்.

ஞாயிறன்று NWFP மாவட்டமான ஹாங்குவில் உள்ள ஷாகு கேல் என்னும் ஊரைத் தான் ஒரு மாதகால போருக்குப் பின்னர் இறுதியாகக் கைப்பற்றிவிட்டதாக இராணுவம் கூறியுள்ளது. வார இறுதியில் நடந்த மோதல்களில் 13 இஸ்லாமியவாதிகளும் ஒரு இராணுவ சிப்பாயும் கொல்லப்பட்டனர். (இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியைக் காணவேண்டும் என்றால் ஒரு புதிய பக்கம் வருவதற்கு இங்கு 'கிளிக் செய்யவும்')

ஷாகு கேல் என்பது ஒராக்சாய் பழங்குடிப் பகுதிக்கு அருகே உள்ளது. இங்கு தெற்கு வஜீரிஸ்தானத்தில் இருந்து வந்த பல TTP போராளிகள் இராணுவத்தாக்குதல் தொடங்கிய பின் குவிந்துள்ளதாக நம்பப்படுகிறது. ஒராக்சாய்க்கு செல்லும் அனைத்துச்சாலைகளும் இராணுவத்தால் மூடப்பட்டுவிட்டன. TTPயின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிராமங்களை சூழ்ந்து இராணுவம் நிற்கிறது. பொதுமக்களின் இறப்புக்களை நியாயப்படுத்தும் விதத்தில் இராணுவம் செய்தி ஊடகத்திடம் இஸ்லாமியவாதிகள் மக்கள் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடாமல் நிறுத்தி வைத்துள்ளதாகவும், அவர்களை "மனிதக் கேடயங்கள் போல்" பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளது. தாக்குதலின் முதல் கட்டத்தில் துருப்புக்கள் ஒரு FM வானொலி நிலையத்தை கைப்பற்றியது. அது அரசாங்கத்திற்கு எதிர்ப்பு கொடுக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை நடத்தி வந்தது. ஒரு வானொலி கோபுரம், வானொலி நிலையக்கட்டிடம் மற்றும் போராளிகளின் முகாம் என்ற கூறப்பட்ட இடம் ஆகியவை அழிக்கப்பட்டு விட்டன.

ஹெலிகாப்டரில் இருந்து குண்டு மழை பொழியும் தாக்குதலையும் இராணுவம் தொடங்கியுள்ளது. இவை குர்ரம் பகுதியில் தலிபானின் "இரகசிய காப்பிடங்கள்" இருப்பதற்கு எதிராக என்று சில நாட்களாக இத்தாக்குதல் நடத்தப்படுகிறது. இது ஒராக்சாயிக்கு மேற்குப் புறத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது. ஞாயிறன்று, "மத்திய குர்ராத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத் தலைப்பட்டு விட்டனர் என்று The Dawn செய்தி அமைப்பு கூறியுள்ளது.

FATA வின் வடகோடிப் பகுதியான பஜெளரில், இராணுவம் ஞாயிறன்று தலிபான் மறைவிடங்கள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது வான்வழி குண்டு வீச்சை நடத்தினர். இதில் ஐந்து போராளிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. The Dawn ஆதாரங்கள்படி, தாக்குதல்களில் ஒன்று Fam Jan என்ற தலிபான் தலைவரை கொன்றதாகவும், அவர் மனைவி, இரு மகன்களை படுகொலை செய்துள்ளதாகவும் தெரிகிறது. மெளல்வி முனீர் என்னும் போராளியை கொல்லும் நோக்கம் உடைய மற்றொரு தாக்குதல் அவருக்குப் பதிலாக அவருடைய உறவினர்கள் இருவரைக் கொன்று விட்டது.

வான்வழித் தாக்குதல்களை தொடர்ந்து 40பேர் ஞாயிறன்று பஜாவுர்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள இராணுவ புறச்சாவடியை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தனர். அரசாங்கத் துருப்புக்கள் அவர்களை எதிர்த்து நின்று 11 பேரைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 2008ல் தலிபானுக்கு எதிராக பஜாவுர் மற்றும் அருகில் இருக்கும் மொஹ்மண்ட் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு பாக்கிஸ்தானிய துருப்புக்கள் அனுப்பப்பட்டன. நான்கு மாதங்கள் பொறுப்பற்ற முறையில் குண்டுத் தாக்குதல்களை நடத்தியது, தங்கள் வீடுகளில் இருந்து 500,000 மக்களை வெளியேறுமாறு செய்தது. நூற்றுக்கணக்கான வீடுகள், பண்ணைகள், பள்ளிகள் இன்னும் பல கட்டிடங்கள் பெரிய ஊர்களான Loyesam, Khar ஆகியவற்றிலும் பல கிராமங்களிலும் தகர்க்கப்பட்டன. இராணுவம் 1,500க்கும் மேற்பட்ட போராளிகளை கடந்த ஆண்டு கொன்றதாகக் கூறியது. எண்ணிக்கை தெரியாத அளவு சாதாரணக் குடிமக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமுற்றனர்.

இன்னும் அதிக மக்கள் நிறைந்த NWFP மாவட்டமான Swat பள்ளத்தாக்குதலில் நடந்த தாக்குதல் கூடுதலான பேரழிவைக் கொடுத்து 1.9 மில்லியன் மக்களை இடம் பெயரச் செய்ததுடன் ஆயிரக்கணக்கானவர்களை கொன்றது.

அது நடந்து ஓராண்டிற்குள்ளேயே தலிபான் மீண்டும் Swat, Bajaur, Mohamand ஆகிய பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது முந்தைய நடவடிக்கைகள் மக்களிடையே கசப்புணர்வு, வெறுப்பு ஆகியவற்றை தோற்றுவிக்கத்தான் பயன்பட்டன என்பதையும் அரசாங்கத்திற்கு எதிராக இஸ்லாமியவாதிகளின் பெருகும் எழுச்சிக்கு புது நபர்களை தேர்ந்தெடுப்பதில் விரிவாக்கம் ஏற்பட்டது என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

வஜீரிஸ்தான் தாக்குதல் மக்கள் பற்றி சிறிதும் பொருட்படுத்தாத தன்மையில்தான் நடத்தப்படுகிறது. ஐ.நா.பணி ஒன்று தெற்கு வஜீரிஸ்தானில் இருந்து 300,00 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு நீங்கி உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்களாக டாங், டேரா இஸ்மயில் கான் போன்ற வடமேற்கு எல்லைப்புற மாகாண நகரங்களில் வாழும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளனர் என்று மதிப்பிட்டுள்ளது. தெற்கு வஜீரிஸ்தானில் மொத்த மக்கள் தொகை 600,000 க்கும் குறைவுதான்.

நவம்பர் 17 வெளிவந்த ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுவது: "அவர்கள் (உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்கள்) தெற்கு வஜீரிஸ்தானத்தில் பூசலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய அழிவும் சேதமும் ஏற்பட்டதாக கூறினர் வீடுகள், கால்நடைகள், சமூக உள்கட்டுமானம் ஆகியவற்றிற்கு அழிப்பு மற்றும் கடுமையான சேதம்)." இக்கூற்றுக்கள் தாக்குதலின் போது TTP யிடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சில ஊர்களை சுருக்கமாகப் பார்க்க அனுமதிக்கப்பட்ட செய்தியாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

AFP எனப்படும் பிரான்ஸின் செய்தி அமைப்பின் நிருபர் Masroor Gilani நவம்பர் 19ம் தேதி Sararogha சிற்றூரில் உள்ள சந்தை "சிதைந்த கதவுகள் உடைய கடைகளுடன் எங்கு பார்த்தாலும் தென்படும் தகர்ப்புக் குவியலில் காணப்படுகின்றன ஏதோ ஒரு பெரும்புயல் மலைப்பகுதிகள் மூலம் வந்து இந்த மணல் நனைந்த பள்ளத்தாக்கை தாக்கியது போல் உள்ளது." Ladha சிற்றூர் "இப்பொழுது ஒரு சேதமுற்ற கட்டிடங்களின் தொகுப்பாகத்தான் உள்ளது. ஏராளமான தகர்ப்புக்கள் மற்றும் அழிக்கப்பட்ட துணை இராணுவக்கோட்டையும் காணப்படாலும். ஒரு குடிமகன் கூட எங்கும் தென்படவில்லை.

லாடாவிற்காக நடந்த தாக்குதலிலே மிகஆழ்ந்த தன்மையை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நகரத்தை காப்பதற்கு 250க்கும் மேற்பட்ட போராளிகள் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் இராணுவம் 550 TTP யினரைக் கொன்று விட்டது என்று அரசாங்கம் கூறுகிறது. அரசாங்கத்தின் இழப்பு 70 துருப்புக்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த எண்ணிக்கைகள் சுதந்திரமாகச் சரிபார்க்கப்பட முடியாதவை.

இராணுவம் இப்பொழுது தெற்கு வஜீரிஸ்தானில் Makeen என்று TTP யால் கொள்ளப்பட்டிருக்கும் முக்கிய நகரத்தின்மீது படைகளை குவிப்பு காட்டுகிறது. பல மாதங்கள் விமானத்தாக்குதல் மற்றும் தரைப்படை பீரங்கித் தாக்கதலை நடத்திய பின் நகரத்தின் பெரும்பகுதி ஏற்கனவே பேரழிவில் உள்ளது.

கடந்த வாரம் ஒரு TTP செய்தித் தொடர்பாளர் அதன் படைகளில் பெரும்பாலானவை மாகீன், லாடா போன்ற ஊர்களைத் தக்க வைத்துக் கொள்ள முயலவில்லை என்றும், "பாக்கிஸ்தான் இராணுவத்தை அப்பகுதிக்குள் மாட்டி வைக்கும் ஒரு மூலோபாயத்தின் கீழ்" மலைப்புறம் சென்றுவிட்டன என்றும் கூறினார். ஆனால் இராணுவம் அத்தகைய கூறுக்களை நிராகரித்துள்ளது இஸ்லாமியவாதிகள் "பெரும் தோல்வி பெற்றுள்ளதாகவும்" கூறியுள்ளது. ஆனால் இறப்பு எண்ணிக்கை பற்றி கூறப்படுபவை பெரும்பாலான போராளிகள் தாக்குதலில் இருந்து ஏதேனும் ஒருவிதத்தில் தப்பிவிட்டதைத்தான் காட்டுகின்றன. TTP யின் தெற்கு வஜீரிஸ்தானத்தில் உள்ள வலிமை குறைந்தது 10,000 மாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அன்றாடம் தொடரும் தற்கொலைக் குண்டுத்தாக்கல்கள் மற்றும் NWFP ன் தலைநகரான பேஷாவரின் மீது நடத்தப்படும் பிற தாக்குதல்கள் தெற்கு வஜீரிஸ்தானத்தில் இருந்து தலிபான் போராளிகள் கலைந்து சென்றிருக்க முடியும் என்பதைத்தான் தெரிவிக்கின்றன. அரசாங்கம் மற்றும் அதன் தாக்கும் திறனுடைய இடம் எதுவாக இருந்தாலும், அவையெல்லாம் இலக்கு வைத்துத் தாக்கப்படுகின்ற. சனிக்கிழமை ஒரு சர்வதேச உதவிநிறுவனத்தின் வளாகச் சுற்றுச்சுவர் குண்டுவீச்சிற்கு உட்பட்டது. வெள்ளியன்று சாலையோர குண்டுவெடிப்பு ஒன்று இரு போலீசாரைக் கொன்றது. சமீபத்தில் நடந்த பெரும் கொலைத்தாக்குதல் ஒன்றில் ஒரு தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர் கடந்த வியாழனன்று பேஷாவர் நீதிமன்றப்படிகளில் போலீசாரை அவரைச் சோதனையிட முற்பட்டபோது வெடிப்பொருட்களை அதிகமாக வெடிக்க வைத்தார். அந்த வெடிப்பில் 19 பேர் இறந்து போயினர், 51 பேர் காயமுற்றனர்.

இஸ்லாமியவாதிகள் NWFP க்கு வெளியே இருக்கும் நகரங்கள்மீதும் தாக்குதல் நடத்தினர் இதில் தலைநகர் இஸ்லாமாபாத், இராணுவத்தின் தலைநகர் ராவல்பிண்டி மற்றும் லாகூர் ஆகியவையும் அடங்கும். கடந்த எட்டு ஆண்டுகளில் இருந்த பொதுப் போக்கின் எதிர்மாறாக, ஆப்கானிஸ்தானிய போராளிகள் பாக்கிஸ்தானிய அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுபவர்களுக்கும் ஆதரவு கொடுக்கின்றனர். சனிக்கிழமையன்று ஆப்கானிஸ்தானில் இருந்து பாக்கிஸ்தானில் நுழைந்த இரு வாகனங்கள் அதில் இருந்தவர்களுடன் துப்பாக்கிச் சண்டை நடத்தியபின் கைப்பற்றப்பட்டன. அவற்றில் துப்பாக்கிகள், ஏவுகணை இயக்கும் கருவிகள், ஏராளமான வெடி மருந்துகள் இருந்தன இவை பாக்கிஸ்தானின் முக்கிய நகரங்கள் ஒன்றில் இருக்கும் தலிபான் இரகசிய இடங்களுக்கு செல்லுவதாக இருந்திருக்கவேண்டும்.

ஜர்தாரி வட மேற்கில் உள்நாட்டுப் போரை விரிவாக்க வேண்டும், அதையொட்டி வடக்கு வஜீரிஸ்தானப் பகுதியில் பெரும் தாக்குதலைக் கொள்ள வேண்டும் என்று ஒபாமா நிர்வாகம் கோருகிறது. தெற்கு வஜீரிஸ்தானத்தில் இருந்து பல போராளிகளும் அங்கு ஓடி வந்து விட்டனர் என்று கருதப்படுகிறது. முக்கிய ஆப்கானிய எழுச்சி அமைப்புக்களில் ஒன்றான Haqquani வலைப்பின்னல் எல்லையை ஒட்டிய மலைப்பகுதிகளில் தளங்கள் கொண்டிருப்பதாக நம்பப் படுகிறது.

CIA மற்றும் அமெரிக்க இராணுவம் இரண்டும் பாக்கிஸ்தானுக்கள் தங்களை தாக்குதலையும் தொடர்ந்து வருகின்றன. தலிபான் மற்றும் ஹக்கானி தலைவர்கள், போராளிகள் ஆகியோரைப் படுகொலை செய்யும் முயற்சியில் ஆளில்லாத டிரோன் விமானங்களைப் பயன்படுத்துகின்றன. கடந்த வாரம் வடக்கு வஜீரிஸ்தானத்தில் இரு பிரிடேட்டர் விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கடந்த வியாழன் காலையில் தெற்கு வஜீரிஸ்தான் எல்லைக்கு அருகே ஒரு தொலைவில் உள்ள கிராமத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏவுகணைகள் ஒரு வீட்டைத் தகர்த்து மூன்று பேரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. வெள்ளியன்று மீர் அலி கிராமத்தில் ஒரு வீட்டுச் சுற்றுச் சுவர் அருகே நடந்த தாக்குதலில் எட்டு போராளிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வாஷிங்டன் ஆணையின் பேரில் நடக்கும் இத்தகைய வன்முறைப் பெருக்கம், அரசியலில் பெரும் வெடிப்புத் தன்மை விளைவுகளைத்தான் கொடுக்கும். ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்ட 14 மாதங்களுக்குள் ஜர்தாரி நாட்டை மோசமான ஒரு உள்நாட்டுப் போரில் ஆழ்த்தியுள்ளார். இது வட மேற்குப் பகுதியை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளதுடன் ஆண்டு ஒன்றிற்கு $10 பில்லியன் செலவையும் கொடுத்துள்ளது. இப்போர் இராணுவம் மற்றும் மக்களிடம் பரந்த வகையில் ஆழ்ந்த அதிருப்தியை கொடுத்து, அரசாங்கத்தை சூழ்ந்துள்ள அரசியல் நெருக்கடியையும் அதிகரித்துள்ளது.