World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

China's mine deaths: The brutal face of global capitalism

சீனாவில் சுரங்க இறப்புக்கள்: உலக முதலாளித்துவத்தின் மிருகத்தன முகம்

John Chan
25 November 2009

Use this version to print | Send feedback

கடந்த வாரம் ஹெய்லோங்ஜியாங் மாநிலத்தில் உள்ள ஹெகாங்க் நகரத்தில் சமீபத்தில் நிகழ்ந்த சீனாவின் நிலக்கரிச் சுரங்கப் பேரழிவில் சோகம் ததும்பும் விதத்தில் 104 பேர் இறந்துள்ளது, நாட்டின் 400 மில்லியன் தொழிலாளர்கள் மிருகத்தனமாக சுரண்டப்படுவது பற்றிய பளீரென்ற நினைவுறுத்தல் ஆகும்; அவர்களுடைய வியர்வையும் உழைப்பும்தான் சீன மற்றும் உலக முதலாளித்துவத்தின் அஸ்திவராங்களை அமைத்துள்ளன.

சர்வதேச நிதியச் செய்தி ஊடகம் சீனாவை உலகப் பொருளாதாரத்தில் ஒளி நிறைந்த இடம் என்று வர்ணிக்கையில், உயர்ந்த உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு பல மேற்கோள்களைக் கொடுக்கையில், வறுமைத் தரத்தில் ஊதியத்தைப் பெறும், ஒடுக்கப்பட்டுள்ள, பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் தொழிலாளர்கள் நிலைமையும், பெரும் சமூக இழப்புக்களும் தீவிரமாகப் புறக்கணிக்கப்படுகின்றன.

ஹெய்லோங்ஜியாங் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இறப்புக்கள் சீனாவை உலக முதலாளித்துவத்தின் மகத்தான கடூழிய உழைப்புக் கூடமாக மாற்றியிருப்பதின் விளைவுதான். 1930களுக்கு பின்னர் உள்ள மோசமான பொருளாதார நெருக்கடிக்கு இடையில், சீனாவில் மிக அதிக இலாபத்திற்கான உந்துதல்கள் தீவிரம் அடைந்துள்ளன; இதற்கு ஒரு ஸ்ராலினிச போலீஸ் அரசாங்கம் தலைமை தாங்குகிறது; அது தொழிலாளர்களின் எந்த எதிர்ப்பையும் இரக்கமற்ற முறையில் நசுக்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் நிலக்கரித் தொழில் கூடுதல் விசை, எஃகுவிற்கான தேவைகள் வானளாவிய முறையில் விரிவாக்கம் பெற்றுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் இறக்கின்றனர். 2000ம் ஆண்டில் 1 பில்லியன் தொன்கள் என்பதில் இருந்து கடந்த ஆண்டு 2.63 பில்லியன் தொன்கள் ஆண்டு உற்பத்தி அதிகரித்துள்ளது. உலகின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேலாக சீனா இப்பொழுது நுகர்கிறது; இந்தத் தேவை 2010 ஐ ஒட்டி 3 பில்லியன் டன்களைக் கடக்கக்கூடும். பெருநிறுவன இலாப உந்துதலுக்காக சீனாவின் ஐந்து மில்லியன் நிலக்கரித் தொழிலாளர்களுடைய உயிர்கள் அற்பமாகக் கருதப்படுகின்றன.

இப்பேரழிவு ஹெய்லோங்ஜியாங் லாங்மீ சுரங்க நிறுவனத்தில் நான்கு ஆண்டுகளுக்குள் நடைபெற்ற இரண்டாம் பேரழிவு ஆகும்; இந்நிறுவனம் நாட்டின் மிகப் பெரிய மற்றும் நவீன அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலக்கரி நிறுவனம் ஆகும். நவம்பர் 2005ல் 171 சுரங்கத் தொழிலாளர்கள் நிறுவனத்தின் Donfeng சுரங்கத்தில் உயிரிழந்தனர்.

ஹெகாங் சுரங்கத்தில் கடந்த சில நாட்களில் நடந்தது, டாங்பெங்கில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பெரும் சோகத்தின் மறு ஓட்டமே ஆகும். டாங்பெங் சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டபோது, மத்திய, மாநில அளவுகளில் அரசாங்கங்கள் சேதத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு மக்களுடைய சீற்றத்தைத் தணிக்க முற்பட்டன. ஒரு சில மேலாளர்கள் கைது செய்யப்பட்டு, பலியாடுகளாக ஆக்கப்பட்டனர். வக்காலத்து வாங்கிய அதிகாரிகள் தொலைக்காட்சி காமிராக்கள் முன்பு இதுபோன்ற பேரழிவுகள் இனி வராது என உறுதியளித்தனர். வழக்கம் போல் ஒரு விசாரணையில் உற்பத்தியை அதிகரிக்க சில அடிப்படைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன என்று கண்டறியப்பட்டது. ஒரு பூச்சுவேலை தொடக்கப்பட்டு சிறிய சட்டவிரோத சுரங்க வேலைகள் நிறுத்தப்பட்டன; ஆனால் பெரிய அரசாங்க, தனியார் சுரங்கங்கள் மீது கைவைக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் இருந்து வந்த எதிர்ப்புக்கள் விரைவில் போலீசாரால் மெளனப்படுத்தப்பட்டன. பொதுக் கவனம் மற்ற விஷயங்களுக்கு மாறியதும், சுரங்க நிறுவனங்கள் மீண்டும் வழக்கமான செயல்களில் ஈடுபட்டன--அடுத்த பெரும் அழிவு வரும் வரை.

சீனாவில் சராசரியாக 13 சுரங்கத் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் இறக்கின்றனர். ஆயிரக்கணக்கான சிறிய, தனியார் உடைமை சுரங்கங்களில் பல இறப்புக்கள் நடக்கின்றன; அங்கு பணிநிலைமைகள் காட்டுமிராண்டித்தனமாக உள்ளன. 2007ல் Shanxi, Henan மாநிலங்களில் நிலக்கரிச் சுரங்கங்கள், செங்கல் சூளைகளில் அடிமை தொழிலாளர்கள் பயன்படுத்தப்படும் ஊழல் வெடித்தது. பல சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் நாள் ஒன்றிற்கு இழிந்த மற்றும் ஆபத்தான நிலைமையில் பணிபுரிவதற்கு அடிமைகளாக விற்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. ஆனால் சமீபத்திய பேரழிவு நிரூபித்துள்ளதுபோல், மிருகத்தனமான சுரண்டல் ஒன்றும் சிறிய தனியார் அமைப்புக்களின் ஒதுக்கமான செயல்கள் அல்ல. ஹெகாங் சுரங்கம் நவீன கருவிகளைக் கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை ஏட்டளவில் கொண்டிருந்தும், உற்பத்தியை அதிகரிக்க, இலாபங்களைப் பெருக்க நடைமுறையில் ஆபத்தான குறுக்குவழிகள் மேற்கொள்ளப்பட்டன.

2006ம் ஆண்டு தேசிய வளர்ச்சி, சீர்திருத்தக் குழு 2015க்குள் முக்கிய நிலக்கரி உற்பத்தி செய்யும் மாநிலங்களில் சிறு சுரங்கங்களை மூடுதல் அல்லது அருகில் உள்ள பெரிய சுரங்கங்களுடன் இணைந்து மொத்தத்தில் ஐந்து அல்லது ஆறு பெரிய நிறுவனங்களாக தொழில்துறையை குவிப்பு செய்வது என்ற திட்டத்தை வெளியிட்டது. ஹெய்லோங்ஜியாங் லாங்மேய் குழு அவ்வாறு வெளிப்பட்ட பெருநிறுவனங்களில் ஒன்றாகும்; இதில் 88,000 தொழிலாளர்கள் ஹெகாங் நகரத்தில் மட்டும் உள்ளனர். பாதுகாப்பை முன்னேற்றுவிப்பது என்பதற்கு முற்றிலும் மாறாக, இணைக்கும் திட்டம் மிகப் பெரிய அளவில் பேரழிவுகளைத்தான் தோற்றுவிக்கும்.

சமீபத்திய நிலங்கரிச் சுரங்க சோகம் மாவோயிசம், ஸ்ராலினிசம் பற்றிய மற்றொரு பெரும் குற்றச்சாட்டு ஆகும்; இவை உண்மையான மார்க்சிசம் மற்றும் சர்வதேச சோசலிசத்தை வெளிப்படையாக நிராரித்த தளத்தைத்தான் கொண்டவை. 1949ல் மாவோவால் நிறுவப்பட்ட போலீஸ் அரசு ஆட்சி 1980 களில் இருந்து, குறிப்பிடத்தக்க வகையில் உலக முதலீட்டாளர்களை ஈர்க்க உதவியது; ஏனெனில் அவர்கள் சரியும் இலாபத்தை ஈடுகட்டவும் பொருளாதாரச் சரிவை ஈடுகட்டவும் குறைவூதிய தொழிலாளர் தொகுப்பை நாடினர்.

ஹெகாங் பேரழிவு சுரங்கங்களில் தொழிலாளர்களை எதிர்கொள்ளும் கொடூர நிலைமைகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், சீனாவின் மலரும் தொழில்துறையில் உள்ள கொடூர நிலைமைகளையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; அத்துடன் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையும் ஆகும். ஒருங்கிணைத்தல், மறுசீரமைத்தல் என்று சீனாவின் நிலக்கரித் தொழிலில் நடந்துள்ள வழிவகை ஒவ்வொரு நாட்டிலும் உலகப் பொருளாதார நெருக்கடிக்கு முதலாளித்துவ வர்க்கத்தின் வாடிக்கையான விடையிறுப்பு ஆகும். தப்பிப்பிழைப்பதற்கு செய்யும் பரபரப்பான முயற்சிகளில், பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு, செலவினக் குறைப்புக்களை தொழிலாள வர்க்க இழப்பில் ஈடுகட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சீனத் தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் கடூழிய உழைப்புக்கூட சூழ்நிலைகள் இன்னும் அதிகமாக எல்லா இடங்களிலும் தொழிலாளர்களுக்கு அடையாளமாக மாறிவருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா ஷாங்காய்க்கு சென்று சீனாவில் இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் பற்றி தன்னுடைய வியப்பை வெளிப்படுத்திய ஐந்து நாட்களுக்குள் வடகிழக்கு சீனாவில் சுரங்க வெடிப்பு நடந்துள்ளது. அமெரிக்க கார்ப் பெருநிறுவனத்திற்கு சீனாவில் உள்ள நிறுவனம்தான் மிக அதிக இலாபத்தைக் கொடுக்கிறது. GM திவால்தன்மையை அறிவித்து, அமெரிக்காவில் அதிக அளவு வேலைகுறைப்புக்கள், செலவுக் குறைப்புக்கள் ஆகியவற்றைச் செயல்படுத்திக் கொண்டிருக்கையில், அதன் சீன உற்பத்தி விரைந்து பெருகிக் கொண்டிருக்கிறது. சீனாவில் இருக்கும் நிறுவனம் அதன் மகத்தான இருப்பு குறைவூதியத் தொகுப்பை அமெரிக்கா, மற்ற நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்கு பெருகிய முறையில் பயன்படுத்தும்போது, அமெரிக்காவிலும் ஊதியங்களும் பணிநிலைமைகளும் சீனாவில் இருப்பதைப் போல் கொண்டுவரப்படும்;

ஒரு பரந்த தன்மையில் ஒபாமா உலகப் பொருளாதார உறவுகளில் "மறு சமசீர்நிலைக்கு" அழைப்பு விடுத்து, சீனாவுடன் அமெரிக்கா கொண்டிருக்கும் மாபெரும் வணிகப் பற்றாக்குறையையும் அமெரிக்காவின் கடன் பத்திரங்களைப் பெரிதும் வாங்கியுள்ள சீனா பற்றியும் குறிப்பாகச் சுட்டிக் காட்டினார். இந்த "மறு சமசீர்நிலையில்" உள்ள சுமைகள் தவிர்க்க முடியாமல் தொழிலாள வர்க்கத்தின் மீது விழும். உத்தியோகபூர்வ குறைந்த பட்ச மாதாந்திர ஊதியம் $150 என்று உள்ள சீனாவில் அமெரிக்கப் பொருட்களை "போட்டித் தன்மை" பெற வைக்க வேண்டும் என்றால், அமெரிக்க நிறுவனங்கள் மகத்தான முறையில் செலவினங்களைக் குறைக்க வேண்டும். அமெரிக்க அரசாங்கத்தில் மலைபோன்ற கடனைக் குறைத்தல் என்றால், இன்னும் மிருகத்தனமான முறையில் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி போன்ற அடிப்படை சமூகப் பணிகளில் செலவுக் குறைப்புக்கள் ஏற்படுத்தப்படும்.

GM ன் "மறு சமச்சீர்நிலை" என்பது வட அமெரிக்காவில் ஆலைகள் மூடல், சீனாவில் விரிவாக்கம் என்ற விளைவைக் கொடுத்தது போல், பரந்த வழிவகைகள் முறையாக வேலைகள் தகர்ப்பு, ஊதியக் குறைப்புக்கள், கூடுதல் பணி நேரம், பெருகிய முறையில் சுகாதாரமற்ற, ஆபத்தான நிலைகள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும்; இவை தவிர்க்க முடியாமல் ஹெகாங் சுரங்கத்தில் ஏற்பட்டதைப் போல் பெரும் சோகங்களை ஏற்படுத்தும். "சர்வதேசப் போட்டித்தன்மை" மற்றும் இலாபம் என்ற பந்தயத்திற்கு ஒருபோதும் முடிவு இருக்காது. அமெரிக்கத் தொழிலாளர்களுடைய நுகர்வில் சரிவு என்பது, சீன ஏற்றுமதிகளின் தேவைகளைக் குறைக்கும், ஆலைகள் மூடலுக்கு வழவகுக்கும், வேலை இழப்புக்கள் இன்னும் செலவினக் குறைப்புக்கள் ஆகியவற்வறை சீனாவில் ஏற்படுத்தும்.

முதலாளித்துவத்தின் வரம்பிற்குள் இந்த முடிவில்லாத சுழற்சியில் இருந்து மீள வழியே இல்லை. சீனா, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் தங்கள் பொது வர்க்க நலன்களை உலக முதலாளித்துவம் அதன் அரசியல் பிரதிநிதிகள் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைப்பதின் மூலம்தான் காக்க முடியும். பலவற்றில், GM போன்றவற்றில், அவை இதே நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன; ஒரு ஆலையை மற்றொன்றிற்கு எதிராக நிறுத்துவதுபோல். இந்த சகோதரத்துவ போட்டிக்கு முடிவு என்பது இலாபமுறை அகற்றப்படுதல் அதையொட்டி சோசலிச அடிப்படையில் சமுதாயம் சீரமைக்கப்படுதல் மூலம்தான் முடியும்; உலகின் பரந்த உற்பத்தி வளங்கள் செல்வம் படைத்த பெருநிறுவன உயரடுக்கின் இலாபத்திற்கு என்று இல்லாமல், மனிதகுலத்தின் அவசர சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்குத்தான், பயன்படுத்தப்பபட வேண்டும்.