World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Thousands of students demonstrate in Leipzig

லைப்சிக்கில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

By our correspondents
27 November 2009

Use this version to print | Send feedback

"எங்கள் விருப்பமின்றி வாக்களிக்காதீர்!, ஒரு ஜனநாயகக் கல்விக் கொள்கை தேவை!" என்ற கோஷங்களுடன் நவம்பர் 24ம் தேதி ஜேர்மனிய லைப்சிக் நகரத்தில் 9,000க்கும் மேற்பட்ட பள்ளி, பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றிருந்தனர்.


கூட்டத்தின் ஒரு பிரிவினர்

கல்விப் பிரச்சினை பரந்த அரசியல் பிரச்சினைகளில் இருந்து பிரிக்கப்பட முடியாது என்று ஒரு பரந்த உடன்பாடு கூட்டத்தில் பங்கு பெற்றவர்களிடையே இருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமந்திருந்த, தானே தயாரித்த பல முழக்க அட்டைகளில் இது தெளிவானதுடன், WSWS நிருபர்களிடம் மாணவர்கள் நடத்திய விவாதங்களிலும் உறுதிபடுத்தப்பட்டது. ஒரு இலவச, ஜனநாயக, நியாயமான கல்வி முறையை நடைமுறைக் கட்சிகள் மீது அழுத்தம் கொண்டுவருவதின் மூலமே சாதிக்க முடியும் என்பது பற்றி பல ஆர்ப்பாட்டக்காரர்களும் அவநம்பிக்கைதான் கொண்டிருந்தனர்.

லைப்சிக்கில் 2 ஆண்டுகளாக படித்துக் கொண்டிருக்கும் 21 வயதான பிரான்ஸில் இருந்து வந்திருந்த Guillaume என்னும் மாணவர், எதிர்ப்புக்கள் போதுமா என்று தான் சந்தேகிப்பதாகக் கூறினார். மாபெரும் மாணவர் எதிர்ப்புக்கள் நடைபெற்ற பிரான்சிலும் எந்த விளைவும் ஏற்படவில்லை என்ற அனுபவத்தை அவர் கூறினார். ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Bologna Process ä Guillaume நிராகரித்தார்; இது கல்வி முறையை தடையற்ற சந்தை சக்திகளுக்கு தாழ்த்துகிறது. இந்த வழிவகையை மாற்ற வேண்டும் என்பது, தொலை விளைவுகள் தரும் அரசியல் பிரச்சினைகளுடன் தொடர்பு கொண்டதாகும். இருக்கும் நடைமுறைக் கட்சிகள் பற்றி அவருடைய கருத்தைக் கேட்டதற்கு, அவை மாணவர்களையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் கடந்த காலத்தில் தொடர்ச்சியாக புறக்கணித்துள்ளன என்றார். ஆனால் இதே அரசியல் வாதிகளும் கட்சிகளும்தான் Bologna Process க்கு ஆதரவு கொடுக்கின்றனர் என்பதைக் காணும்போது இதில் வியப்பு ஏதும் இல்லை.

எதிர்ப்பின் மூலம் மட்டும் கல்விக் கொள்கையில் மாற்றங்களை அடைய முடியும் என்ற கருத்தை Undine Ott, Nora Bischoff என்னும் இரு மாணவர்களும் உதறித்தள்ளினர். "பல ஆண்டுகளாக நாங்கள் எதிர்ப்புக்கள் நடத்துகிறோம், இதே கோரிக்கைகளின் அடிப்படையில். ஆயினும் கூட விஷயங்கள் மோசமாகிக் கொண்டுதான் வருகின்றன. எங்கள் எதிர்ப்புக்கள் இருந்தாலும், "உயர்மட்ட பல்கலைக் கழகங்களும்", கல்விக் கட்டணங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் ஆர்ப்பாட்டங்களிலும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் பங்கு பெறுவது முக்கியம்; ஆனால் அதே நேரத்தில் இத்தகைய நடவடிக்கை மட்டுமே போதுமா என்பதையும் சிந்திக்க வேண்டும்."

Tim
டிம் ரமின்

Nordhausen ல் இருந்து ஒரு ஆர்ப்பாட்டக் குழுவில் ஒருவராக 22 வயது டிம் ரமின் லைப்சிக்கிற்கு வந்திருந்தார். அவர் வந்திருந்த காரணங்களில் ஒன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பட்டப்படிப்பு முறையாகும்; இதில் மாணவர்களுக்கு கூடுதலான சுமை வந்துள்ளது. புதிய பட்டப் படிப்புக்களில் வந்துள்ள தொகுப்பு முறை மாணவர்களுக்கு தங்கள் ஆர்வப் பகுதியில் அதிகம் செய்ய முடியாமல் தடுத்துவிடுகிறது. குறிப்பிடத்தக்க வகையில் அவர் பசுமை வாதிகள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியினரை (SPD) பற்றிக் குறைகூறினார்; இவைதான் புதிய முறை அறிமுகத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன; உத்தியோகபூர்வமாக ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தந்தவற்றில் எந்தக் கட்சி மற்றும் அமைப்பிலும் அவருக்கு நம்பிக்கை இல்லை. "ஒரு கட்சியை நம்ப வேண்டும் என்றால், நானே ஒன்றை நிறுவினால்தான்" என்றார் அவர். "எல்லா கட்சிகளும் பெரிய விளையாட்டில்தான் ஈடுபட்டுள்ளன. போதுமான இருப்புக்கள் உள்ளன. ஆனால் அவை நியாயமற்ற, தவறான முறையில் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றன."

பங்கு பெற்றவர்கள் பலரும் சிந்திப்புடன், திறனாயும் நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டதற்கு முற்றிலும் மாறான வகையில் ஆர்ப்பட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் எடுத்திருந்த நிலைப்பாடு இருந்தது; இன்னும் அதிக நடவடிக்கை வேண்டும் என்றுதான் அவர்கள் அறிவித்த வண்ணம் இருந்தனர். அரசியல் பிரச்சினைகளை எழுப்பி, கல்விச் செலவினக் குறைப்புக்களில் நடைமுறை அரசியல் கட்சிகளின் பங்கு இருப்பதைச் சுட்டிகாட்டாமல், ABS எனப்பட்ட கல்விக்கடணத்திற்கு எதிரான நடவடிக்கைக் குழு, KSS என்னும் சாக்சோனி மாணவர்கள் மாநாடு மற்றும் லைப்சிக் கல்விக்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு உளுத்துப்போன, பழைய வெற்று கோஷங்களை, காதுபிளக்கும் பாப் இசையின் பின்னணியில் எடுத்துக் கூறின.

HRK எனப்பட்ட கல்லூரி முதல்வர்கள் அமைப்பிற்கு முன் "உரத்த குரலில்" தங்கள் குறைகளைக் கூறினால் மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை அடையமுடியும் என்ற பொய்த் தோற்றங்களை அமைப்பாளர்கள் வளர்க்க முற்பட்டனர். இந்த அமைப்பும் லைப்சிக்கில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அதே நேரத்தில் தன் கூட்டத்தை நடத்தியது. கூட்டாட்சி அல்லது மாநிலங்கள் வகுத்துள்ள கொள்கைகளைத்தான் HRK நிபந்தனையின்றி எப்பொழுதும் செயல்படுத்தி வந்துள்ளது. எனவே HRK தலைவர் மார்க்ரெட் வின்டர்மன்டல், லைப்சிக்கில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இள நிலை, முது கலை பட்டப்படிப்புக்கள் தொடக்கத்தில் சில பிரச்சினைகளைக் கொண்டிருந்தபோதிலும் இறுதியில் வெற்றி அடைந்துள்ளன என்று கூறினார்.

லைப்சிக் பல்கலைக் கழகத்தின் ரெக்டர் அலுவலகத்தை நவம்பர் 23ம் தேதி ஆக்கிரமித்திருந்த ஒரு சிறிய மாணவர் குழுவும் முற்றிலும் குறைந்த தன்மையுடைய கோரிக்கைகளைத்தான் முன்வைத்தது; இவை பல்கலைக்கழக ரெக்டர் Franz Hauser ஆல் உதறித்தள்ளப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நிகழ்த்தப்பட்ட உரைகளும் எந்த பரந்த முன்னோக்கும் அமைப்பாளர்களிடம் இல்லை என்பதைத்தான் தெளிவாக்கின. ABS ன் சார்பில் பேசிய Christina Schrandt மாணவர்கள் "சமூக இயக்கங்கள், தொழிற்சங்கங்கள்" ஆகியவற்றுடன் இணைந்து வேர் மட்டத்தில் இருந்து கொடுக்கும் அழுத்தங்கள் அதிகாரிகளையும் HKK ஐயும் கட்டணக் கல்வி முறை அறிமுகப்படுத்தும் திட்டங்களை பின்வாங்கச் செய்யும் என்ற போலித் தோற்றத்தை பரப்பினார்--ஏற்கனவே HRK அத்தகைய கட்டணத்திற்கு 2004ல் ஆதரவைத் தெரிவித்து விட்டது என்ற உண்மை உள்ளது. Schrandt பொலோனா வழிவகை பற்றியும் கல்வி முறை வணிக நலன்களுக்கு தாழ்ந்திருப்பது பற்றியும் எந்த குறிப்பையும் கூறவில்லை--அவற்றில் உள்ள பல கூறுபாடுகளில் ஒன்றுதான் கட்டணம் என்பது.

லைப்சிக் பல்கலைக்கழகத்தில் அரசியல் துறை பேராசிரியர் Sigrid Meuschel அடுத்துப் பேசினார். தன்னுடைய உரையில் இவர் ஒரு தப்படி மேலே சென்றார். இப்பெண்மணி வெளிப்படையாக Bologna சீர்திருத்தங்களுக்கு ஆதரவு கொடுத்தார்; ஒரு சில சிறு மாற்றங்கள் அதில் இருந்தால் போதும் என்றார். மாணவர்கள் அவருடைய உரையை ஏளன ஆரவாரங்களுடன் வரவேற்றனர்.

Anne Voß, வேர்டி பொதுப் பணித் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர் போலோனா வழிவகையிலும் இளநிலை-முதுகலை பட்டப்படிப்புக்களில் சிறிதளவு மாற்றம் வேண்டும் என்றார். "ஒரு தீவிர சமூக அரசாங்கம்" தேவை, "அனைவருக்கும் சம கல்வி வாய்ப்புக்கள் தேவை" என்ற அழைப்புக்களை அவர் விடுத்தாலும், அதிக பாராட்டுக்களை அவருடைய உரை பெறவில்லை. தொழிற்சங்கங்கள் வேலைகளை அகற்றுதல், குறைவூதிய தொழில்களுக்கு ஊக்கம் கொடுத்தல் ஆகியவற்றில் கொண்டுள்ள பங்கை பல மாணவர்கள் அறிவர்.

பரந்த அரசியல் பிரச்சினைகள், மாணவர்கள் வேலைநிறுத்தத்துடன் தொடர்புடையவை பற்றி பேசிய ஒரே பேச்சாளர் ISSE, International Students for Social Equality லைப்சிக் குழுவைச் சேர்ந்த Johannes Stern ஆவார். கல்விமுறை ஜனநாயகப்படுத்தப்படுதல், கூடுதலான நிதியம் பெறுதல் என்ற மாணவர்கள் கோரிக்கைகளை அடைவதற்கு எதிர்ப்புக்கள் மட்டும் போதா என்று அவர் வலியுறுத்தினார்.

"கல்வி கொள்கையில் ஏதோ இங்கும் அங்கும் ஒரு தவறான முடிவை மட்டும் நாம் எதிர்கொள்ளவில்லை, பெருவணிகம் மற்றும் தடையற்ற சந்தையின் நலன்களுக்காக இருக்கும் முறையையே அடிப்படை ரீதியில் மறு கட்டமைப்பிற்கு உட்படுத்தும் நிலையைத்தான் காண்கிறோம். இப்போக்கு அனைத்து நடைமுறை அரசியல் கட்சிகளாலும், மாணவர் எதிர்ப்புக்கள் ஆர்ப்பாட்டங்கள் என்ற பல ஆண்டுகளாக நாம் நடத்தியும் கூட, ஆதரவிற்கு உட்பட்டுள்ளது என்பதைத்தான் கடந்த கால அனுபவம் காட்டுகிறது."

SPD, பசுமைக் கட்சி, இடது கட்சி ஆகியவை ஆளும் பகுதிகளில் பேரழிவு தரக்கூடிய கல்வி இருப்புநிலைக் குறிப்பு பற்றியும் Stern குறிப்பிட்டார்; அதாவது இக்கட்சிகள்தான் மாணவர்கள் எதிர்ப்பிற்கு ஆதரவை உறுதியளித்திருந்தவை. "SPD-பசுமைக்கட்சி கூட்டாட்சி அரசாங்கம்தான் சமூக விரோத செயற்பட்டியல் 2010 ஐ அறிமுகப்படுத்தியது மட்டும் இல்லாமல் 1999ல் ஜேர்மனியில் போலொனா வழிவகையை செயல்படுத்தவும் தொடங்கியது. 1998 தேர்தல் பிரச்சாரங்களில் SPD, பசுமைக் கட்சி இரண்டுமே இலவச, நியாயமான கல்விமுறை பற்றி உறுதி அளித்திருந்தும், அவை செய்தது இதுதான்."

"தன்னுடைய பங்கிற்கு இடது கட்சி எதிர்க்கட்சியில் இருக்கும்போது இலவச, நியாயமான கல்விமுறையில் சிறப்புக்களை புகழ்தல், ஆனால் பதவிக்கு வந்தபின் அதற்கு முற்றிலும் எதிரிடையானதை செய்தல் என்பதில் இணை இல்லாமல் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது. பேர்லினில் SPD உடன் சேர்ந்து கொண்டு இடது கட்சி கல்விச் செலவினக் குறைப்புக்களில் மிகப் பெரிய தன்மையைக் கொண்டுவந்தது. பேர்லினில் உள்ள பல்கலைக்கழகங்களில் மட்டும் நகரத்தின் SPD இடது கட்சி ஆளும் செனட் வரவு-செலவு திட்டங்களில் இருந்து 75 மில்லியன் யூரோக்களை குறைத்தது அதில் 216 பேராசிரியர் பதவிகளும் 500 வளாக அலுவலர்கள் மற்றவரும் அடங்குவர். பல கல்வித்துறைகள் முழுமையாக மூடப்பட்டன; ஜேர்மனிய நகரத்தில் மாணவர்கள் தங்குவதற்கான இடங்களில் 10,000 பேருக்கு மேல் முடியாது என்று செய்யப்பட்டது."

மாணவர்களுடைய எதிர்ப்புக்களின் வெற்றி இக்கட்சிகளின் பங்கில் இருந்து படிப்பினைகளைப் பெற்று, ஒரு மாற்றீட்டு அரசியல் முன்னோக்கைக் கொள்ள வேண்டிய தேவையுடன் பிணைந்துள்ளது என்று ஸ்டேர்ன் வலியுறுத்தினார். "கடந்த ஆண்டின் அனுபவங்கள் SPD, Greens, Left Party ஆகியவற்றுடன் இணைந்திருக்கும் மாணவர் அமைப்புக்கள் நாம் கல்வி பெறும் உரிமையைக் காக்க விரும்பும்போது நம்முடைய விரோதிகளாகிவிட்டனர் என்பதைக் காட்டுகின்றன. நம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு நமக்கு கீழிருந்து ஒரு சுயாதீன இயக்கம் தேவை; இன்றைய ஆர்ப்பாட்டத்தையும் பல்கலைக்கழக ஆக்கிரமிப்புக்களையும் அத்தகைய தொழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கத்திற்கான தொடக்கப் புள்ளியாக பயன்படுத்த வேண்டும்.

"அத்தகைய இயக்கம் சுயாதீனமாகவும், சர்வதேசத் தன்மையையும் கொண்டிருக்க வேண்டும்; முதலாளித்துவத்தின் எப்பொழுதும் குறைந்த வடிவமைப்பை நாம் ஏற்கக்கூடாது. நமக்கு ஒரு சோசலிச முன்னோக்கு தேவையாகும். சமூகத்தின் உயர்மட்டத்தில் உள்ள ஒரு சிறு உயரடுக்கின் செல்வக் கொழிப்பிற்கு பதிலாக சமூகத் தேவைகளின் இதயத்தானத்தில் சமூக சமத்துவம் என்ற கொள்கை இருத்தப்பட வேண்டும்."

கணிசமான கைதட்டல்களுடன் முடிந்த அவருடைய உரையின் இறுதியில், ஸ்டேர்ன் ISSE துண்டுப்பிரசுரத்தில் இருந்து மேற்கோளிட்டார்; அதன் 2,000 பிரதிகள் ஆர்ப்பாட்டக்காரர்களிடையே வினியோகிக்கப்பட்டன. "இப்போராட்டத்தில் விரிவான, இலவசக் கல்விமுறைக்கான போராட்டம் பெரும் பங்கைக் கொண்டுள்ளது" என்று அது விளக்கியது. "ஒரு உண்மையான ஜனநாயக சமூகத்திற்கு இது முக்கியமான முன்னிபந்தனை ஆகும். பொதுமக்களின் தேவைகளுக்கு பயன்படுத்தும் விதத்தில் கல்வி சார்பு கொண்டிருக்க வேண்டும் என்றால், வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றால், பின் அது தடையற்ற சந்தை முறையின் பிடிகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும், ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும். எனவே நியாயமான, விரிவான கல்வி முறைக்கான போராட்டம் சமூகத்தை சோசலிச மாற்றத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற போராட்டத்துடன் நெருக்கமாக பிணைந்துள்ளது.