World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

Three months after coup: Honduran regime imposes state of siege

மூன்று மாத ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர்:

ஹொன்டூர ஆட்சி முற்றுகையை திணிக்கிறது

By Bill Van Auken
29 September 2009

Use this version to print | Send feedback

ஆட்சி மாற்றம் அதை அதிகாரத்திற்கு கொண்டுவந்த மூன்று மாதங்களுக்குப் பின்னர், ரோபர்ட்டோ மைக்கேலெட்டி தலைமையிலான வலதுசாரிக் கட்சி அனைத்து அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் 45 நாட்கள் அரச முற்றுகையை திணித்துள்ளது.

இந்த ஆணை திங்களில் இருந்து செயல்படுத்தப்பட்டுள்ளது; இதையொட்டி எந்தக் குற்றச் சாட்டுக்களும், பிடி ஆணைகளும் இல்லாமல் கைதுகளும், சோதனைகளும் நடத்தப்பட முடியும்; இது கூடும் உரிமை, தடையற்று எங்கும் செல்லும் உரிமை மற்றும் பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றை பெரிதும் குறைத்துவிட்டது.

மாற்றத்தில் வந்துள்ள ஆட்சி, அகற்றப்பட்ட ஜனாதிபதி மானுவல் ஜெலயா விடுத்ததாக கூறப்படும் "எழுச்சிக்கான" அழைப்புக்களை எதிர்கொள்ள இந்நடவடிக்கைகள் தேவையானவை என்று கூறியுள்ளது; அவர் செப்டம்பர் 21ம் தேதி கள்ளத்தனமாக நாட்டிற்குள் வந்து, டெகுசிகல்பாவில் உள்ள பிரேசிலிய தூதரகத்தில் அடைக்கலம் கொண்டுள்ளார்.

திரும்பி வந்தபின், "எழுச்சிக்கு" அழைப்பு விடுவதற்கு முற்றிலும் மாறாக ஜெலயா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து பின்னர் ஜனாதிபதி வேட்பாளர்கள் நால்வரையும் சந்தித்தார்--இவர்கள் அனைவரும் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள்; வரும் நவம்பர் மாதம் தேர்தல்கள் நடக்க உள்ளன. ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பவர்கள் இந்த தேர்தல் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர்.

நீர்பீய்ச்சி அடிக்கும் அமைப்பைக் கொண்ட ஒரு டாங்க் மற்றும் ஒரு இராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் நூற்றுக்கணக்கான கலகப்பிரிவுத் துருப்புக்கள், ஹிஸீவீஸ்மீக்ஷீsவீபீணீபீ றிமீபீணீரீரரீவீநீணீ ழிணீநீவீஷீஸீணீறீ- திக்ஷீணீஸீநீவீsநீஷீ விஷீக்ஷீணீக்ஷ்ஊஸீ க்கு வெளியே பிரேசிலிய தூதரகத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லத் தயாராக இருந்த ஒரு ஆர்ப்பாட்டத்தை முறியடிக்க கொண்டுவரப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் ஜூன் 28 ஆட்சி மாற்றம் தொடங்கி முன்று மாதத்தை குறிப்பதற்கு எதிராக அழைக்கப்பட்டுள்ளது; இம்மாற்றத்தில்தான் ஜெலயா தன்னுடைய ஜனாதிபதி அரண்மனையில் இருந்து இழுத்துவரப்பட்டு, கோஸ்டா ரிக்காவிற்கு நாடு கடத்திய ஒரு விமானத்தில் துப்பாக்கி முனையில் இருத்தப்பட்டார்.

மக்கள் ஆர்ப்பாட்டத்தின் தொடக்க இடத்தை அடைவதைத் தடுக்கும் வகையில், ஹொன்டூரஸ் தலைநகரம் முழுவதும் துருப்புக்கள் முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டன. "இதே போன்ற நிலைதான் நாடு முழுவதும் உள்ளது; அவர்கள் மக்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதைத் தடுக்கின்றனர்" என்று விவசாயிகள் தலைவர் Rafael Alegra செய்தியாளர்களிடம் கூறினார்.

நாளின் முற்பகுதியில் நூற்றுக் கணக்கான போர்த்தயாரிப்பு ஆயத்தங்களுடன் கூடிய துருப்புக்களும் கலகப்பிரிவு போலீசாரும் ஆட்சி மாற்றத்தை எதிர்க்கும் ரேடியா குளோப், சானல் 36 என்னும் தொலைக்காட்சி நிலையத்தையும் சூழ்ந்து கொண்டன. நிலையங்களின் வாயிற்கதவுகளை உடைத்த வீரர்கள் அவற்றின் அலுவலகங்களையும், கருவிகளையும் தகர்த்து அவை இயங்க முடியாமல் செய்துவிட்டனர். நிலையத்தில் பணிபுரிந்தவர்கள் சிலர் தாக்குதலில் இருந்து தப்பிக்க சன்னல்கள் வழியே குதிக்கும் கட்டாயத்திற்கு ஆளாயினர்.

இந்த முற்றுகை வகை ஆணை அதிகாரிகளை "அமைதி, பொது ஒழுங்கு ஆகியவற்றை அச்சுறுத்தும் எந்த செய்தி ஊடக, பேசப்பட்ட, எழுதப்பட்ட அல்லது தொலைக்காட்சி செய்யப்பட்டவற்றை" மூடுவதற்கு அல்லது "பொது அதிகாரிகள் அல்லது அரசாங்க முடிவுகளின் மனித கெளரவத்தைத் தாக்குபவற்றை" மூடிவிடுவதற்கு அனுமதி கொடுக்கிறது.

"சந்தேகத்திற்குரிய நபர்களை" கைது செய்வதற்கும் ஆணை அனுமதிப்பதுடன், அவர்கள் "சட்டபூர்வமாக நிறுவப்பட்டுள்ள காவல் மையங்களில் அடைக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளது. நன்கு அறியப்பட்ட ஆர்வலர்களை கைது செய்து ஒரு கால்பந்து விளையாட்டு மைதானத்தில் அவர்களை அரசாங்கம் அடைத்து வைத்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

திங்களன்று முற்றுகை செயல்முறைக்கு வந்தவுடன் ஆட்சிமாற்றத்தின் எதிரிகள் அதன் பாதிப்பாளர்களில் மற்றொருவரான பல்கலைக்கழக மாணவரான வெண்டி எலிசபெத் அவிலாவைப் புதைத்தனர்; பிரேசிலிய தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தியபோது அதை நுகர்ந்த இவர் இறந்துவிட்டார்.

இதற்கிடையில், ஹொன்டூரஸின் சர்வாதிகாரம் ஜெலயா மீண்டும் பதவியில் இருத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்துள்ள அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள் ஆகியவற்றின்மீது குரோதமாக தூண்டுதல் செய்யும் போக்கைக் கடைபிடிக்கிறது.

ஜெலயாவை 10 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் அல்லது நாட்டில் இருந்து அகற்றி பிரேசிலில் அவருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று, மாறிவந்துள்ள ஆட்சி பிரேசிலிய அரசாங்கத்திற்கு 10 நாட்கள் கெடு கொடுத்துள்ளது. அதற்குப்பின் அது பிரேசிலின் தூதரக விதிவிலக்கை ஏற்காமல், அகற்றப்பட்ட ஜனாதிபதியைக் கைப்பற்றுவதற்கு பாதுகாப்புப் படைகள் தூதரகத்தின்மீது தாக்குதல் நடத்தும் என்றும் கூறியுள்ளது.

"ஒரு ஆட்சி மாற்றத்தில் வந்துள்ள அரசாங்கத்தின் இறுதி எச்சரிக்கையை பிரேசில் ஏற்கவில்லை" என்று பிரேசிலின் ஜனதிபதி லூயி இன்னாசியோ லூலூ டா சில்வா விடையிறுத்தார். "என்னைப் பொறுத்த வரை தீர்வு எளிது. ஆட்சி மாற்றத் தலைவர்கள் ஜனாதிபதி அரண்மனையை விட்டு நீங்க வேண்டும். தேர்தல்கள் நடந்து முடியும் வரை ஜெலயா அதிகாரத்திற்குத் திரும்ப வேண்டும்."

வாஷிங்டன் தன்னுடைய மத்தியஸ்தரும் நீண்ட நாளாக அமெரிக்கச் "சொத்தாகவும்" இருக்கும் கோஸ்ட்டா ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஓஸ்கார் அரியஸ் தெரிவித்த கருத்தின் அடிப்படைகள் அனைத்தையும் லூலாவால் கூறப்படும் "தீர்வு" ஒத்து இருக்கிறது. அரியஸ் வெளியிட்ட ஜோஸ் உடன்பாட்டின்படி, ஜெலயா பதவிக்கு பெயரளவிற்கு "நாட்டின் ஒற்றுமைக்கான" அரசாங்கத்தின் தலைவராக திரும்புவார்; அந்த அரசாங்கத்தில் அவரை அகற்றிய தளபதிகள், அரசியல்வாதிகளும் இருப்பர். அவர்களுக்கு இதற்கு ஈடாக கடந்த மூன்று மாதங்களாக நடத்திய அடக்குமுறைகளுக்கு பொது மன்னிப்பு கொடுக்கப்படும். நவம்பர் தேர்தல்களில் மக்கள் ஜெலயாவிற்கு பின்னர் பதவிற்கு வருபவரைத் தேர்ந்தெடுப்பர்; ஜனவரியில் தன்னுடைய பதவிக்காலத்தை ஜெலாயா முடித்துக் கொண்டு விடுவார்.

அதிகாரத்தில் இருந்தபோது ஜெலயா ஹொன்டூர அரசியலமைப்பில் மாற்றத்திற்கு வாதிடுவதில் இருந்து தடுக்கப்பட்டார்; அமெரிக்க தூதரகமும் இதன் முன்னாள் இராணுவ சர்வாதிகாரிகளும் நாட்டின் மீது சுமத்திய பட்டயம் ஆகும் அது. ஹொன்டூரஸ் மக்கள் அரசியலமைப்பில் மாறுதல் கொண்டுவருவதற்கு ஆதரவு கொடுப்பார்களா என்று வாக்கெடுப்பு நடத்த அவர் எடுத்த முயற்சிகள் அவரை பதவியில் இருந்து அகற்றப் போலிக் காரணங்கள் ஆயின.

இப்பிற்போக்குத் திட்டத்தைக்கூட ஜெலயா ஏற்றார்; மைக்கேலெட்டியும் அவருடைய சக ஆட்சிமாற்றத் தலைவர்களும் அதனை நிராகரித்து ஜெலயா மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

ஞாயிறன்று Organizsation of American States அனுப்பி வைத்த ஒரு ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழு, நெருக்கடிக்கு மத்தியஸ்தத்தின் மூலம் தீர்வு காண முற்பட்டது, டெகுசிகல்பா விமான நிலையத்தில் இறங்கியது. ஐந்து பேரில் ஒரே ஒருவர் John Biehl, OAS தலைமைச் செயலர் ஜோஸ் மிகுவல் இன்சுல்சாவிற்கு ஆலோசகர் மட்டும்தான் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள் போலீஸ் இராணுவக் காவலுடன் திருப்பி அனுப்பப்பட்டனர்; அனைவரும் ஆறு மணி நேரம் காவலில் இருந்தனர்.

"சிலிய நாட்டைச் சேர்ந்தவன் என்ற முறையில், இது எனக்கு சில கொடூரமான நினைவுகளைக் கொண்டுவந்தது" என்று Bihel கூறினார். தளபதி அகஸ்டோ பினோசே தலைமையிலிருந்த இராணுவத் தலைமையின்கீழ் நடத்தபட்ட மிருகத்தனமான அடக்குமுறையை அவர் சுட்டிக்காட்டினார்.

ஆட்சி மாற்றத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதை எதிர்க்கும் வகையில் நாட்டில் இருந்து திரும்பப் பெறப்பட்ட தூதர்கள் OAS அமைப்பிற்கு கொடுக்கப்பட்ட மரியாதையை பார்த்த பின்னர் மீண்டும் திரும்பி வந்தால் "வரக்கூடிய ஆபத்தை" மேற்கொள்ள மாட்டார்கள் என்றார். அமெரிக்க தூதர் ஒருவர்தான் டெகுசிகல்பாவில் இருக்கும் தூதர் ஆவார்; இந்த அலுவலகம்கூட அதன் விமானத்தளத்தை சோட்டோ காரியோவில் கொண்டுள்ளது--அதுதான் இலத்தின் அமெரிக்காவில் சாதாரணமாக செயல்படும் மிகப் பெரிய அமெரிக்க இராணுவத் தளம் ஆகும்.

OAS ன் நிரந்தரக்குழு திங்களன்று ஹொன்டூரஸ் நிலைமை பற்றி விவாதிக்க ஒரு அசாதாரணக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இந்த அமைப்பு அரசியலமைப்பு உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதயும், OAS பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டதையும் கண்டித்து ஒரு தீர்மானத்தை இயற்றியது. அமெரிக்க, பிரேசிலிய, மெக்சிகோ, கோஸ்ட்டா ரீக்கா பிரதிநிதிகள் கடுமையான மொழி வேண்டாம் என்று கூறியபின்னர் சற்றே நயமான மொழியில் இது இயற்றப்பட்டது.

OAS ன் தலைமைச் செயலர் இன்சுல்சா இத்தீர்மானத்தின் மழுங்கிய தன்மையை வெளிப்படுத்தும் வகையில் ஹொன்டூரஸ் முற்றுகை நிலையில் வைக்கப்பட்டுள்ளது, "நாம் நாம் போக்கை மாற்றிக்கொள்ள வகை செய்யக்கூடாது; மாறாக ஒரு அமைதியான தீர்வை அடைவது தேவை, இயலும் என்ற கருத்தைத் தொடர வேண்டும்" என்றார்.

OAS ல் உள்ள அமெரிக்கப் பிரதிநிதியான Lewis Amselem இந்த அரங்கைப் பயன்படுத்தி இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணத்தை மாறிய ஆட்சியின்மீது இல்லாமல் ஜெலயா மீது சுமத்த முற்பட்டார். வாஷிங்டன், அதன் முகவர் அரியஸ் பேச்சுவார்த்தைகள் மூலம் கொண்டுவர உள்ள உடன்பாட்டிற்கு முன்னரே அகற்றப்பட்ட ஜனாதிபதி மீண்டும் தன் நாட்டிற்கு வர முற்பட்ட செயல் "பொறுப்பற்ற தனமாகவும், முட்டாள்தனமாகவும்" உள்ளது என்றார்.

"ஜெலயா ஒரு உடன்பாடு இல்லாத நிலையில் மீண்டும் வந்தது பொறுப்பற்றது, முட்டாள்தனமானது" என்று அமெரிக்கப் பிரதிநிதி கூறினார். "ஒரு பழைய திரைப்படத்தில் நடிப்பது போல் செயல்பட்டு பொறுப்பற்ற குற்றச்சாட்டுக்களை கூறுவதை அவர் நிறுத்த வேண்டும், அத்தகறைய முயற்சிகளில் அவர் ஈடுபடக்கூடாது."

நிறைய ஆயுதங்கள் கொண்ட துருப்புக்கள் சூழ்ந்திருக்கும் தூதரகத்தில் ஜெலயா இருப்பதும், பல முறை அக்கட்டிடத்திற்கு வெளியே புகைத் தாக்குதல்கள் நடந்துள்ள என்பதும் உள்ள தன்மையில், இது ஒரு அசாதாரண அறிக்கையாகும்; எளிதில் அகற்றப்பட்ட ஜனாதிபதி கொலைசெய்யப்படுவதற்கு ஒரு முன்கூட்டிய இசைவு என்று கூட எளிதில் எடுத்துக் கொள்ளப்பட முடியும்

Amslem கூறினார்: "வெளி உதவியுடன், தன் கருத்துக்களுக்கு உகந்து திரும்பிய விதத்தில் ஜனாதிபதி ஜெலயாவும் அவர் திரும்ப உதவியவர்களும் அவருடைய ஆதரவாளர்களின் செயல்களுக்கு குறிப்பான பொறுப்பை ஏற்க வேண்டும்."

ஜெலயா ஹொன்டூரஸிற்கு திரும்புவது "சர்வதேச சமூகத்திற்கும் OAS க்கும் ஒரு அவமதிப்பு" என்று அவர் கூறினார். இறுதியில் அவர் "அனைத்துக் கட்சிகளும் தூண்டுதலைத் தவிர்க்க வேண்டும், வன்முறையைத் தூண்டும் விதத்தில் நடந்து கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.

இத்தகைய சொல்லாட்சி ஹொன்டூரஸில் நடக்கும் அடக்குமுறைக்கு உட்குறிப்பான ஆதரவு போல் தோன்றுகிறது. இது ஒன்றும் ஒரு மனச்சிதைவு அல்ல. கடந்த வாரம் நீடித்த ஊரடங்கு உத்தரவு மற்றும் பிரேசிலின் தூதரகத்திற்கு வெளியே கூடியிருந்த ஜெலயாவின் ஆதரவாளர்களை வன்முறையில் துரத்தியதைத் தொடர்ந்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹில்லாரி கிளின்டன் அதற்கு இசைவு தெரிவிக்கும் வகையில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்: "அரசாங்கம் ஒரு ஊரடங்கு உத்தரவை சுமத்தியத் என்று நினைக்கிறேன், அது பற்றி நாங்கள் இப்பொழுதுதான் அறிந்தோம்; தெருக்களில் இருந்து மக்களை அகற்ற இது முயலும், அதையொட்டி எதிர்பாரா விளைவுகள் வருவதைத் தடுக்க."

ஒருவேளை இந்த "எதிர்பாரா விளைவுகள்" வெண்டி எலிசபெத் அவிலா கொலையுண்டது, பலர் அடியுண்டது, ஆர்ப்பாட்டக்காரர்கள் காவலில் வைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளானது மற்றும் ஏழரை மில்லியன் மக்களை தங்கள் வீடுகளில் அடைத்து பட்டினி, அச்சத்தை எதிர்கொள்ளவைத்தது ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவில்லை போலும். இவை அனைத்தும் தவிர்க்க முடியாமல் எதிர்பார்க்கப்பட்டவைதான்.

ஹொன்டூரஸ் நெருக்கடி நீடிக்கையில், ஒபாமா நிர்வாகத்தின் உண்மையான நிலைப்பாடு பெருகிய, தெளிவான முறையில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து இதே ஆட்சி மாற்றத் தலைவர்களின் அரசியல் நோக்கங்களுக்கு ஆதரவு கொடுத்து வந்துள்ளது; அதே நேரத்தில் மத்தியஸ்த வழிவகை எனக் கூறப்படுபவற்றின் மூலம் ஜெலயாவின் ஜனாதிபதி வரைகாலம் முடிவதையும், அதுவரை ஆட்சி மாற்றத்தின் அதிகாரமற்ற கைப்பாவையாக அவரை மீட்பதையும்தான் அது நாடியுள்ளது. சில நேரங்களில் ஹொன்டூரஸின் தன்னலக்கழு தன் நலன்களை காப்பதற்கான உடன்பாட்டை, வலதுசாரித் தன்மை நிறைந்ததை, வலியுறுத்துவதை எள்ளி நகையாடினாலும், வாஷிங்டன் ஹொன்டூர தொழிலாள வர்க்க மக்களின் பெருகிய எழுச்சியை அடக்குவதற்கான உட்குறிப்பான ஆதரவை அடையாளம் காட்டியுள்ளது.