World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

"Cheats and Deceivers"

"மோசடிக்காரர்களும் ஏமாற்றுபவர்களும்"

Bill Van Auken
30 September 2009

Use this version to print | Send feedback

ஞாயிறன்று வெளியிடப்பட்ட லண்டன் பைனான்ஸியல் டைம்ஸ் ஆசிரியர் தலையங்கத்தில், ஈரானின் ஆட்சியாளர்களை "மோசடிக்காரர்களும் ஏமாற்றுபவர்களும்", நாட்டின் அணுத் திட்டம் தொடர்பாக "சிறிதும் நம்பிக்கைக்கு உகந்தவர்களல்ல" என்று அழைத்து ஈரானுக்கு எதிரான செய்தி ஊடகத் தாக்குதலில் சேர்ந்துகொண்டது.

"மோசடிக்காரர்கள், ஏமாற்றுபவர்கள்" ஆகியோரை அம்பலப்படுத்துவதில் செய்தித்தாள் ஆர்வம் கொண்டுள்ளது என்றால், இந்த அரிய பணியை ஈராக் போருக்கு தயாரிப்புக்கள் நடந்து கொண்டிருந்தபோது, கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன், ஏன் இந்தச் செய்தி ஏடு தன்னுடைய வாசகர்களுக்கு அளிக்கவில்லை? எப்படியும் இந்த அடைமொழிகள் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்கள் கொண்டிருந்த பங்கிற்கு மிகப் பொருத்தமானவையாக இருந்தன.

புஷ்ஷும், பிளேயரும் தங்கள் மக்களையும் உலகம் முழுவதையும் ஈராக்கிற்கு எதிராக ஆக்கிரமிப்புப் போரைத் தயார் செய்கையில் முறையாக ஏமாற்றினர். போருக்கு எதிராக மக்கள் கருத்தைத் திரட்டுவதற்கு ஈராக்கை தவிர்க்கமுடியாத அச்சுறுத்தல், அதன் "பேரழிவு ஆயுதங்களினால்", மற்றும் (முழுதும் புனையப்பட்ட) அல்குவைடாவுடனும், 9/11 தாக்குதல்களுடனும் தொடர்பு கொண்டிருக்கிறது என்று சித்தரித்தனர். இப்பொழுது இக்கூற்றுக்கள் அனைத்தும் மார்ச் 2003 ல் ஈராக் மீதான படையெடுப்பிற்கு பின்னர் பொய்கள் என்று நிரூபணமானது மட்டும் இல்லாமல், தாங்கள் பொய் கூறுகிறோம் என்பதை உணர்ந்தே அந்நேரத்தில் இதைக்கூறியவர்கள் அவ்வாறு கூறினர் என்பதற்கும் போதிய சான்றுகள் உள்ளன.

ஈரானின் அணுசக்தித் திட்டம் அதே போன்ற அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என்ற கருத்தை உயர்த்தும் வகையில் பைனான்சியல் டைம்ஸ் தலையங்கம் மட்டுமில்லாமல் முதல் பக்கத்தில், ஈராக் போருக்கு முக்கியமானவர்களில் ஒருவரும் அதற்குத் தேவையான சான்றுகளைத் தயாரிப்பதற்கு போலி உளவுத் தகவல்களை முக்கியமாக சேர்த்தவருமான போல் வுல்போவிஸ் எழுதிய கட்டுரையையும் வெளியிட்டுள்ளது. போர்க்குற்றங்களுக்காக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வேண்டிய இந்த நபர் இப்பொழுது ஈரானிய "அச்சுறுத்தல்" பற்றி ஒரு வல்லுனர் என்று வெளிப்பட்டிருக்கிறார்.

இவையனைத்தும் மறக்கப்பட்டுவிட்டன, மன்னிக்கப்பட்டுவிட்டன. ஒரு மில்லியன் ஈராக்கிய மக்களின் உயிர்களுக்கும் மேலானவற்றைக் குடித்த ஒரு போருக்கு பொறுப்பான அதே மனிதர்கள், தங்கள் முழு பிரச்சார இயந்திரமான, பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகத்தை ஈரானுக்கு எதிரான தங்கள் குற்றச்சாட்டை பல மடங்கு அதிகப்படுத்திக் காட்டும் வகையில் முடுக்கி விட்டுள்ளனர்.

இதே போன்ற வழிவகைகளில், வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் ரிச்சார்ட் கோகன், புஷ் நிர்வாகத்தின் ஈராக்கிய பேரழிவு ஆயுதங்களைப் பற்றி கிளிப்பிள்ளை போல் கூறியவர், செவ்வாயன்று ஒரு கட்டுரையில் ஈரான் தன் அணுசக்தி நிலையங்கள் சமாதான நோக்கங்களுக்காகத்தான் உள்ளது என்று கூறியவற்றை உதறித்தள்ளியுள்ளார். "இந்த பாரசீகர்கள் கம்பளம் போல் பொய் சொல்லுகின்றனர்" என்று இவர் கோபப்பட்டுக் கூறியுள்ளார்.

இன்னும் கெடுதலைத் தரக்கூடிய வகையில், அவர் தன்னுடைய கட்டுரையை ஒபாமா நிர்வாகம் மிகவும் சமரசத் தன்மை கொண்டுள்ளது என்று தாக்கி போருக்கு பிரச்சாரம் செய்துள்ளார். "அமெரிக்கா ஒன்றுதான் தெஹ்ரானின் நிலத்தடி நிலையங்களை உருத்தெரியாமல் தகர்க்கும் திறனைக் கொண்டுள்ளது. வாஷிங்டன் அதைச் செய்ய வேண்டும்." என்று அவர் எழுதியுள்ளார்.

அக்டோபர் 1ம் தேதி ஜெனிவாவில் ஈரானுக்கும் P5+1 நாடுகளுக்கும் இடையே, அதாவது ஐ.நா.பாதுகாப்புக்குழு நிரந்தர உறுப்பு நாடுகள் 5 (அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியும் ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவிருப்பதற்கு முன்னால் இந்தச் சமீபத்திய போர் வெறி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் பெரும் பரபரப்புடன் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரெளன் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஆகியோரால் கோம் நகரத்திற்கு அருகே ஒரு "இரகசிய" நிலத்தடி அணுசக்தி நிலையம் கண்டுபிடிக்கப்பட்டதாக வந்துள்ள அறிவிப்பைச் சுற்றி இந்தப் பரபரப்பு எழுந்துள்ளது.

ஆனால் ஈரான், ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பிடம் (IAEA) நான்கு நாட்கள் முன்பு ஆலை இருப்பதைப் பற்றி கூறியுள்ளதாகவும், பல ஆண்டுகளாக அமெரிக்க உளவுத்துறைக்கு அது பற்றித் தெரியும் என்றும் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. ஈரான் கையெழுத்திட்டுள்ள அணு பரவா உடன்பாட்டின்படி இத்தகைய வசதி பற்றி அணுசக்தி எரிபொருள் அங்கு கொண்டுவரப்படுவதற்கு 180 நாட்கள் முன்னால் தெரிவித்தால் போதும் என்று இருக்கிறது; இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு அது சாத்தியம் இல்லை என்றும் ஈரான் IAEA இடம் கூறியுள்ளது. இவ்விதத்தில் இச்சமீபத்திய கண்டுபிடிப்பு NPT எனப்படும் அணுவாயுத பரவா உடன்படிக்கைக்கு மீறியவிதத்தில் ஈரான் ஒன்றும் செய்யவில்லை என்பதும், அதையும் விட அணுவாயுதங்களைத் தயாரிக்கும் திட்டத்தில் ஈடுபட்டிருக்கவில்லை என்பதும் நன்கு தெரியவரும்.

இன்னும் அடிப்படையில், வாஷிங்டனோ அல்லது மற்ற எந்த சக்தியோ ஈரானில் இருப்பதாகக் கூறப்படும் அத்தகைய ஆயுதங்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று விளக்க முற்படவில்லை; இவற்றைப் பொறுத்தவரையில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் ஆகியவை அத்தகைய அணுவாயுதங்களைக் கொண்டிருப்பது ஏற்கக்கூடியது என இருக்கையில். ஈரான் போல் இல்லாமல், இந்த மூன்று நாடுகளில் எதுவும் 40 ஆண்டுகளாக இருக்கும் அணுவாயுத பரவா உடன்படிக்கையில் கையெழுத்தும் இடவில்லை, IAEA வை தங்கள் நிலையங்களை ஆய்வு செய்ய அனுமதிக்கவும் இல்லை.

இஸ்ரேலிடம் நூற்றுக்கணக்கான அணுவாயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது; பல முறை அது ஈரானைத் தாக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளது. அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலை ஆய்வில் இருந்து காத்து வருகிறது; சமீபத்தில் IAEA இயற்றிய பொது மன்றத் தீர்மானமான சியோனிச நாடு NPT க்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதையும் கண்டித்துள்ளது.

அப்படிப்பார்த்தால், ஈரானே இன்று அணுசக்தி நாடாக இருந்திருக்கும்--வாஷிங்டனுடைய ஆசிகளுடன்; 1979 புரட்சியில் அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த, பெரும் வெறுப்பிற்கு உட்பட்டிருந்த ஷாவின் சர்வாதிகாரத்தை அகற்றியிராவிட்டால். அந்த வட்டாரத்திலேயே வாஷிங்டனின் மிகப் பெரிய ஆயுதங்களை வாங்கும் வாடிக்கையாளர் ஷா வெளிப்படையாக அணுவாயுதங்கள் வாங்கவேண்டும் என்ற விருப்பத்தைக் கூறியிருந்தார்; அமெரிக்கா அவருக்கு உலை உருக்கு ஆலைகளும் எரிபொருளையும் விற்பனை செய்திருந்தது.

இங்கே ஒரு கொள்கையுடைய வாதம் உள்ளது --உலக சோசலிச வலைத் தளம் அதைக் கூறியது. முதலாளித்துவ தேசிய ஆட்சி ஈரானில் அணுவாயுதங்களைப் பெறும் முயற்சி பிற்போக்குத்தனம் என்பது மட்டமின்றி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தற்காத்துக் கொள்வதில் தோல்வி அடையும் என்பதே அது. தொழிலாள வர்க்கம் எந்த முதலாளித்துவ அரசாங்கத்தினதும் ஆயுதமயமாதல் கொள்கைக்கும் ஆதரவு கொடுக்கக்கூடாது. போரைத் தோற்கடிப்பதற்கான போராட்டத்திற்கு சோசலிசத்திற்கான சர்வதேச ஐக்கியத்தைத்தான் அது நம்பியிருக்க வேண்டும்.

அப்படிக் கூறிய பின்னரும், ஈரான் அணுவாயுதங்களை வைத்துக் கொள்ளக்கூடாது என்று குற்றம் சாட்டுபவை எவை? உலகம் முழுவதும் ஆயுத வன்முறையை முக்கியமாகத் தூண்டிவிடும் அமெரிக்கா எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அணுவாயுதக் கிடங்கை மிக அதிகமாகக் கொண்டிருக்கிறது. அத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்திய ஒரே நாடு என்ற பெரும் கலக்கத்திற்குரிய செயலையும் அதுதான் செய்துள்ளது. ஹிரோஷிமா, நாகாசகி ஆகிய இடங்களில் அது அணு குண்டுகளை வீசியது; இரு முக்கிய நகரங்களில் இருந்த சாதாரண குடிமக்களை எரித்ததின் மூலம் தன்னுடைய இராணுவ சக்தியை நிரூபித்தது. மேலும் அமெரிக்காவே NPT ஐ மீறும் நாடு ஆகும்; ஏனெனில் அணுவாயுதக் களைவின் பக்கம் அது நகரவில்லை; மாறாக அணுவாயுதங்களில் புதிய தலைமுறை கருவிகளாக "நிலவறைத் தகர்ப்பு" (Bunker-Buster) போன்றவற்றை அது வளர்த்துள்ளது.

பிரிட்டனும் பிரான்ஸும், அவர்களுடைய நீண்டகால குடியேற்ற நாடுகளுக்கு எதிரான குற்றங்கள் என்ற வரலாற்றை கொண்டவிதத்தில், இரண்டுமே தங்கள் அணுவாயுதக் கிடங்கை வைத்திருக்கும் நிலையில் உள்ளன; நன்கு அறியப்பட்ட வரலாற்றுக் காரணங்களுக்காக ஜேர்மனி எவருக்கும் எதைப்பற்றியும் உபதேசிக்கும் நிலைமையில் இல்லை. எப்படிப் பார்த்தாலும், மீண்டும் தன் இராணுவ கட்டமைப்பில் ஈடுபட்டுள்ள பேர்லின் அணுசக்தி எரிபொருள் சுற்றுக்கள் பற்றிய தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது, மிக அதிக அளவில் தேவையானால் அது ஒரு சில மாதங்களில் அல்லது வாரங்களில் அவற்றை உற்பத்தி செய்ய முடியும். அதன் இரண்டாம் உலகப் போர் நட்புநாடான ஜப்பானும் அதே திறனை வளர்த்துள்ளது.

ஈரான் அதே போன்ற திறனைக் கொள்ள விரும்புகிறது என்பதற்கு வாஷங்டனின் எதிர்ப்பு, முற்றிலும் மூலோபாயக் கணக்கீடுகளைத் தளமாக கொண்டுள்ளது. ஈரானிய அணுசக்தித் திறன் அமெரிக்க ஏகாதிபத்தியம் இரு போர்களை--ஈரானின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில்-- நடத்திக் கொண்டிருக்கும் பகுதியில் வல்லமைச் சமநிலையை மாற்றும் திறனை கொண்டுள்ளது என அது அஞ்சுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களின் நோக்கம் பேர்சிய வளைகுடா மற்றும் காஸ்பியன் பகுதிகளில் இருக்கும் பரந்த எரிசக்தி வளங்களின் இருப்புக்களின் மீது அமெரிக்கக் மேலாதிக்கத்தை உறுதி செய்வதாகும்; ஈரானின் எண்ணெய், எரிவாயு இருப்புக்கள் இதில் கணிசமான பங்கைக் கொண்டுள்ளன.

ஈரானுக்கு எதிரான சமீபத்திய பிரச்சாரத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளுபவர்கள் தங்கள் அரசியல் மறதியிலிருந்து விழித்து வர வேண்டும். 2002-2003ல் புஷ் பயன்படுத்திய அதே விளையாட்டு விதிகளைத்தான் ஒபாமா நிர்வாகமும் பின்பற்றுகிறது. ஈரானில் இருக்கும் "பேரழிவு ஆயுதங்கள்" பற்றியும் பெருகிய முறையில் தீமை பயக்கும், முற்றிலும் ஆதாரமற்ற கூற்றுக்களைத்தான் அது சுற்றறிக்கைக்கு விட்டுள்ளது; அதே நேரத்தில் தெஹ்ரான், முடிவில்லாத, இயலாத, கோரிக்கைளுக்கு உடன்பட வேண்டும் என்று மெதுவான இயக்கத்தில் தற்கொலைக்கு ஒப்பான செயலை செய்துகொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது. ஆட்சி மாற்றத்திற்கான தன்னுடைய இலக்கை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் ஒரு வலதுசாரித்தன, ஏகாதிபத்திய சார்புடைய ஈரானிய எதிர்ப்பிற்கு தீவிர ஆதரவையும் அளித்துள்ளது.

திருவாளர் ஓபாமா இத்தகைய மூலோபாய நோக்கங்களுடன் தொடர்பு கொண்டதை மாற்றுதல் என்பதைவிட அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கையை இன்னும் அதிக பாசாக்குத்தனத்துடன் உள்வாங்கியுள்ளார். அவருடைய நண்பர்களும் அவரும், புஷ்ஷும், பிளேயரும் இவர்களுக்கு முன்பு இருந்ததுபோல், "மோசடிக்காரர்கள், ஏமாற்றுத்தனம் செய்பவர்கள்" என்ற பெயரை சம்பாதித்துவிட்டனர்.

இத்தகைய ஏமாற்றுத்தனத்திலும் ஒரு தர்க்கம் உள்ளது. அவருக்கு முன் பதவியில் இருந்தவரைப் போல் இல்லாமல், ஒபாமா ராஐதந்திரத்துக்கு கட்டுப்பட்டவர், வெறுமனே ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க முற்படுகிறார் என்று நினைப்பது பெரும் தவறாகிவிடும். உத்தியோகபூர்வ பொய்கள் மற்றும் வெறித்தனமான செய்தி ஊடகப் பிரச்சாரத்திற்குப் பின்னணியில் வாஷிங்டன் ஈரானுக்கு எதிராக ஒரு இராணுவத் தாக்குதலை நடத்தத் தயாரிப்புக்களைக் கொண்டிருக்கிறது, பலர் நினைப்பதைவிட விரைவிலேயே வரும் என்பதுதான் ஒரு உண்மையான தற்போதைய ஆபத்து ஆகும்.