World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Incoming government prepares attacks on working class

ஜேர்மனி: எதிர்வரவிருக்கும் அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு தயாரிப்பு நடத்துகிறது

By Peter Schwarz
30 September 2009

Use this version to print | Send feedback

ஞாயிறன்று நடைபெற்ற ஜேர்மனிய தேசிய தேர்தல் முடிவுகள் ஒரு ஆழ்ந்த சமூகப் போராட்ட காலத்திற்கு கட்டியம் கூறுகின்றன.

ஹெ,ல்முட் கோல் (Helmut Kohl) பதவியில் இருந்து அகற்றப்பட்டு 11 ஆண்டுகளுக்கு பின்னர் கோல் அரசாங்கத்தையும்விட மிக அதிக வலசாரியான ஒரு பழைமைவாத-தாராளவாத கூட்டு, அதிகாரத்திற்கு மீண்டும் வந்துள்ளது. கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU), கிறிஸ்துவ சமூக யூனியன் (CSU) மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) ஆகியவற்றிற்கு மொத்த தகுதியுடைய வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர்தான் வாக்களித்திருந்தாலும், வரவிருக்கும் அரசாங்கம் பாராளுமன்றத்தின் கீழ் பிரிவில் 42 மேலதிக இடங்கள் பெரும்பான்மை என்ற வசதியான நிலையில் உள்ளது. இதற்குக் காரணம் மிகக் குறைந்த வாக்காளர் வாக்குப்பதிவும் மற்றும் அதைத்தவிர ஜேர்மானிய தேர்தல் சட்டத்தில் இருக்கும் வழமைக்குமாறான விதியானால் கிடைக்கும் 24 மேலதிக ஆசனங்களும் இதற்குக் காரணம் ஆகும். அண்மையில் நடந்து முடிந்த சாக்சனி, சிலேஸ்விக்-கொல்ஸ்ரைன் மாநில தேர்தல் முடிவால் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU), கிறிஸ்துவ சமூக யூனியன் (CSU) மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) ஆகியவை மேல் அவையிலும் பெரும்பான்மையை கொண்டிருக்கும்.

எதிர்வரவிருக்கும் கூட்டணிப் பேச்சுக்களில் FDP கோல் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்த காலத்தைவிட கூடுதலான செல்வாக்கைச் செலுத்த முடியும். அப்பொழுது CDU/CSU பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை FDP ஐப் போல் ஆறு மடங்கு என்று இருந்தது; இப்பொழுது இது இரண்டரைக்கு ஒன்று என்ற விகிதத்தில் உள்ளது. இவ்விதத்தில் பெருவணிக மற்றும் சலுகை பெற்ற கட்சியான FDP, CDU/CSU ஆகியவற்றின் வணிகப் பிரிவுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் வருங்கால அரசாங்கத்தின் கொள்கைகளை உருவமைக்கும்.

திங்களன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில், தேர்தல் முடிவை கொண்டாடிக் கொண்டிருந்த பெருவணிக வட்டங்கள், தொழிலாள வர்க்கத்தின் மீது போரை அறிவித்து, பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையும் மக்கள் சுமக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நெருக்கடியின் விளைவுகள் தேர்தலுக்கு முன்பு குறைந்த வாராந்த வேலைநேரம், ஊக்கப் பொதிகள் என்பவற்றால் மிகைப்படாமலிருந்தன.

ஜேர்மனிய வணிக, தொழில்துறை பெருமன்றத்தின் (DIHK) தலைவரான Hans Heinrich Driftmann, பெருநிறுவனங்கள் மீதான வரிகள் குறைக்கப்பட வேண்டும், சொத்துக்கள் மீதான வரிகள் குறைக்கப்பட வேண்டும், தொழிலாளர் சந்தையில் இன்னும் விட்டுக்கொடுக்கும் தன்மை வேண்டும், சமூகநலச் செலவுகளில் இன்னும் குறைப்பு தேவை என்று கோரினார். "வரவுசெலவுத் திட்டத்தை பரிசீலனை செய்யும் நேரம் வந்துவிட்டது. நெருக்கடிக் காலத்தில் எதுவும் புனிதமல்ல." என்றார் அவர். வெளியேறியுள்ள அரசாங்கம் உறுதியளித்தபடி, உத்தரவாதமான ஓய்வூதியத்தை இனியும் வழக்கும் நிலையில் ஜேர்மனி இல்லை என்றார் அவர்.

அரசாங்கத்திற்கு முக்கிய பொருளாதார ஆலோசகராக இருக்கும் வொல்ப்காங் பிரன்ஸ் சமூக நலச் செலவுகள் தீவிரமாகக் குறைக்கப்பட வேண்டும் என்று கோரினார். "மத்திய அரசாங்கம் கடமையான நடவடிக்கைகளைத் தவிர்க்க முடியாது, குறிப்பாக வரிகள் குறைக்கப்படும் எனப்பட்ட தேர்தலுக்கு முந்தைய உறுதிமொழிகளை அவர்கள் காப்பாற்ற விரும்பினார்." என்று பிரன்ஸ் கூறினார். DIW எனப்படும் ஜேர்மனிய தொழில்துறை சங்கத்தின் தலைவரான Klaus Zimmermann மதிப்புக்கூட்டு வரியில் (VAT) உயர்வு என்பது தவிர்க்க முடியாதது என்றார்.

ஜேர்மனிய மற்றும் சர்வதேச செய்தி ஊடகங்கள் கொடுத்துள்ள கருத்துக்களில் பெரும்பாலானவை மேர்க்கெல் மற்றும் வெஸ்டர்வெல்ல தலைமையில் இருக்கும் அரசாங்கம் பெருவணிகததின் கோரிக்கைளுக்கு இணங்கி நடக்கும் என்று கணித்துள்ளன.

அதன் வணிகச் செய்திப் பிரிவில் Süddeutsche Zeitung பத்திரிகை திங்களன்று "ஊளையிடுதல், பற்களை நெருடல்--வரவிருக்கும் அரசாங்கத்தை கடினமான முடிவுகள் எதிர்கொள்ளுகின்றன" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. Stuttgarter Nachirchten பத்திரிகை "தேர்தல் முடிவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி அதிக சமரசத்திற்கு இடமில்லை என்று காட்டுகின்றன." என எச்சரித்தது. Tageszeitung பத்திரிகை "கறுப்பு-மஞ்சள் (CDU/CSU-FDP கூட்டணி) நமக்கு என்ன செய்யும் என்பது எதிர்பார்க்கக்கூடியதே. குறைந்த சமூக நலச் செலவுகள், அதிக வருமானம் உடையவர்களுக்கு வரி குறைப்புக்கள்; இவை அனைவருக்கும் VAT அதிகரிப்பு மூலம் ஈடுகட்டப்படும்." எனக்கூறியது.

FDP தலைவர், கீடோ வெஸ்டவெல்ல (Guido Westerwelle) வெளியுறவு மந்திரிப் பதவியை எடுத்துக் கொள்ளவதற்குப் பதிலாக கடுமையான செலவினக் குறைப்புப் பொறுப்புக்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று Hamburger Abendblatt பத்திரிகை "நமக்குப் பழக்கமான அனைத்தும்--தொழிலாளர் சந்தை, நிர்வாகிகள் வருமானம், சுகாதாரப் பாதுகாப்பு, பாதுகாப்புக் கொள்கை, ஓய்வூதியங்கள் என--சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்ற நேரத்தில், வெஸ்டர்வெல்லே தைரியத்தை நிரூபித்து, ஒரு புதிய உயர்மையான துறையான பொருளாதார, நிதித்துறை நிறுவப்பட வேண்டும், தானே அதன் தலைவராக இருக்க வேண்டும் என்று கோர வேண்டும்." என கோரியுள்ளது

லண்டன் டைம்ஸ் "தேர்தலில் தெளிவான வெற்றி மேர்க்கெலுக்கு ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய பணி போன்ற செல்வாக்கில்லாத பிரச்சினைகளை சமாளிக்கும் வாய்ப்பை கொடுக்கிறது." என எழுதியது. Copenhagen Berlingske Tidende பத்திரிகை பின்வர்மாறு எழுதியது: "ஒரு கடின காலத்தில் பதவிவிலகும் அரசாங்கம் ஜேர்மனியர்களுக்கு ஒரு பாதுகாப்புக் கொடுக்கும் வகையில் நெருக்கமாகப் பின்னப்பட்ட பொருளாதார சமூக வலையைக் கொடுத்துள்ளது. வரவிருக்கும் அரசாங்கத்தின் பணி அதை தூய்மையாக்குதல் ஆகும்; இந்த வேலைக்கு எவரும் நன்றி கூறமாட்டார்கள்; ஆனால் இது கட்டாயம் செய்யப்பட வேண்டும்."

தொழிலாள வர்க்கம் ஆழ்ந்த மோதல்களுக்கான, தவிர்க்க முடியாத தயாரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும். அதில் வெற்றி பெற வேண்டும் என்றால், அது ஒரு அரசியல் இருப்பு நிலைக் குறிப்பை தயாரித்தல் மிகவும் அவசியம் ஆகும்.

கிறிஸ்துவ யூனியன்-FDP கூட்டணி தான் பதவிக்கு வந்ததற்கு முற்றிலும் சமூக ஜனநாயக வாதிகளுக்குத்தான் நன்றி கூறவேண்டும். SPD யின் ஹெகார்ட் ஷ்ரோடர் 1998ல் ஹெல்முட் கோலிடம் இருந்து அதிபர் பதவியை எடுத்துக் கொண்டபோது, வணிக ஏடுகள் (சந்தை) "சீர்திருத்தங்கள்" முடங்கிவிட்டதைப் பற்றிக் குறை கூறின. முரண்பட்ட சமூக நலன்களில் சிக்கிய கோல் அரசாங்கம் இந்த பெருவணிக ஆணையிட்ட "சீர்திருத்தங்களை" கடப்பதற்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பை எதிர்கொள்ளும் வலிமையைக் கொண்டிருக்கவில்லை.

இந்தப்பணி முதலில் ஷ்ரோடர் பசுமைவாதிகளுடன் ஒரு கூட்டணி கொண்டவிதத்தில், பின்னர் கிறி்ஸ்துவ ஒன்றியத்துடன் ஒரு இளைய பங்காளியாக இருந்த முறையில் SPD யால் எடுத்துக் கொள்ளப்பட்டது. நிறுவனங்களுக்கும் உயர் வருமானம் கொண்ட பிரிவிற்கும் வரிக் குறைப்புக்கள், செயற்பட்டியல் 2010, ஓய்வூதியம் பெறுவதற்கான வயதை 67 என்று உயர்த்தியது, ஓய்வூதியம், சுகாதாரப் பாதுகாப்பு முறையை சீர்திருத்தியது, இன்னும் கணக்கிலடங்கா மற்ற நடவடிக்கைகள்--இவை அனைத்தும் பல தசாப்தங்கள் போராடிப் பெற்றிருந்த சமூக வெற்றிகள் அழிய வழிவகுத்ததுடன், ஒரு மிகப் பெரிய குறைவூதிய பிரிவு தோற்றுவிக்கப்பட காரணமாயிற்று. அரசாங்கக் கண்காணிப்பு மகத்தான அளவில் கட்டியமைக்கப்பட்டு, ஜேர்மனிய இராணுவம் உலகெங்கும் அனுப்பப்படலாயிற்று.

இதன் விளைவு SPD யின் முழுச்சரிவு ஆகும். அதன் மத்தியதரவர்க்க மேல்மட்ட தளம், ஷ்ரோடரின் நிதி மந்திரி வொல்ப்காங் கிளெமென்டின் தலைமையில் FDP க்கு வாக்களித்தாலும், ஆழ்ந்த பொருளாதார நடவடிக்கைக்கு நடுவே மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இக்கட்சிக்கு முதுகைத்தான் காட்டினர். SPD க்கு கிடைத்த வாக்குகள் கட்சியின் வரலாற்றிலேயே அதற்கு கிடைத்த மோசமான, குறைவான வாக்காகும். தகுதியுடைய வாக்காளர்களில் ஆறில் ஒரு பகுதியினர்தான் SPD க்கு வாக்களித்தனர். 11 ஆண்டுகளுக்கு முன்பு SPD கூட்டாட்சி அரசாங்கத்தில் சேர்ந்ததில் இருந்து அது அதன் வாக்காளர் ஆதரவில் 50 சதவிகிதத்தை இழந்து விட்டது.

பல தொழிலாளர்களும் இளைஞர்களும் SPD மீது நம்பிக்கையை இழந்து விட்டனர். அதன் கொள்கைகள் ஒன்றும் பழைமைவாதிகள், தாராளவாதிகளில் இருந்து மாறுபட்டிருக்கவில்லை. சமூகப் போராட்டங்கள் என்று வந்தால் அக்கட்சி தங்களை எதிர்க்கிறது என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டனர். இது வரவேற்கத்தக்கது. ஒரு புதிய சோசலிசக் கட்சி கட்டமைக்கப்படுவதற்கு பாதையை அமைக்கிறது.

இடதுகட்சி இப்பணிக்கு முற்றிலும் எதிரிடையில்தான் நிற்கிறது. SPD இன் வீழ்ச்சியில் இருந்து எந்த முடிவுகளையும் எடுப்பதை தடுத்து, அதற்கு முட்டுக் கொடுக்கும் முயற்சியில் தன்னால் இயன்றதைச் செய்கிறது. ஒரு எதிர்க்கட்சியாக SPD புதுப்பிக்கப்பட முடியும் என்ற போலிக் கருத்திற்கு அது ஊக்கம் கொடுத்து அதனுடன் ஒத்துழைக்கலாம் என்றும் நம்புகிறது. அதன் தலைவர்கள் SPD உடன் பாராளுமன்றத்திலும் மற்றும் கூட்டணி அரசாங்கங்களை மாநிலங்களான சார்லாந்து, துரிங்கியா மற்றும் பிராண்டன்பேர்க்கிலும் நிறுவ விரும்புகின்றனர். "கிறிஸ்துவ யூனியன் மற்றும் FDP இடமிருந்து பாராளுமன்ற மேலவையில் படிப்படியாக பெரும்பான்மையை எடுத்துக் கொள்ள SPD இற்கு ஆலோசனை கூறப்பட வேண்டும்" என்று இடது கட்சியின் தலைவர் ஒஸ்கார் லாபோன்டைன் கூறியுள்ளார். இது இடது கட்சியுடன் கூட்டு வைத்துக் கொண்டால்தான் முடியும்.

உண்மையில் SPD ஏற்கனவே தான் 2010 செயற்பட்டியல் கொள்கைகளை எதிர்க்கட்சியாக இருந்தாலும் காப்பதாக நிரூபித்துள்ளது. கட்சியின் பாராளுமன்றப் பிரிவிற்கு பிராங்க் வால்டர் ஸ்ரைன்மயரைத் தேர்ந்தெடுத்திருப்பது அதை நிரூபணம் செய்கிறது. ஸ்ரைன்மயர் ஷ்ரோடரின் வலதுகாரமாக செயல்பட்டு 2010 செயற்பட்டியல் உருப்பெற முனைந்து நின்றார்.

SPD வலதிற்கு திரும்பியது அதன் வேலைத்திட்டத்தின் விளைவு ஆகும். இது சிறிதும் தயக்கமின்றி முதலாளித்துவ ஒழுங்கமைப்பிற்கும் அதன் அடித்தளத்தில் உள்ள முதலாளித்துவ சொத்துடமை முறைக்கும் ஆதரவு கொடுக்கிறது. பொருளாதார ஏற்றக் காலத்தில் SPD சமூகச் சமரசக் கொள்கையைப் பயன்படுத்தி முதலாளித்துவ ஆட்சியை உறுதிபடுத்த முற்பட்டது. நெருக்கடிக்காலத்தில் அது முதலாளித்துவ ஒழுங்கைக் பாதுகாக்கும் விதத்தில் தொழிலாளர் வர்க்கத்தின்மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்துகிறது.

SPD முதலாளித்துவ ஒழுங்கமைப்பு நெருக்கடிக் காலத்தில் இருந்தபோதெல்லாம் ஆளும் வர்க்கத்திற்கு பின் ஆதரவாகத்தான் இருந்தது என்பதை வரலாறு நிரூபிக்கிறது. முதல் உலகப் போர் தொடக்கத்தில் அது ஜேர்மனிய ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் போர்க் கடன்கள் பெறுவதற்கு வாக்களித்தது. 1918 நவம்பர் புரட்சியின் போது அது இராணுவ உயர்மட்டத்துடன் சேர்ந்து கொண்டு புரட்சிகர தொழிலாளர்கள், கப்பல்படை வீரர்களை அடக்க உதவியது. 1930 களின் பொருளாதார நெருக்கடிக் காலத்தில் அது புரூன்னிங்கின் அவசரக்கால ஆணைகளுக்கு ஆதரவு கொடுத்தது; ஹிண்டன்பேர்க் ஜனாதிபதியாக (Reichsprasident) வாக்களித்து, ஹிட்லர் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வழிவகுத்தது. 1970 களில் SPD யின் அதிபர் ஹெல்முட் ஷிமித் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார். அதையொட்டி சமூக தாக்குதல் தொடக்கப்பட்டு, அது இன்றளவும் தொடர்கிறது.

SPD யின் வலதுபுற நகர்வு ஒரு சர்வதேச நிகழ்வின் பகுதியாகும். பிரிட்டிஷ் தொழிற்கட்சி, இத்தாலிய ஜனநாயக வாதிகள், பிரெஞ்சு சோசலிஸ்ட்டுக்கள் மற்றும் அனைத்து பிற சமூக ஜனநாயகக் கட்சிகளும் மிகவும் வலதிற்கு நகர்ந்துவிட்டன. எந்தத் தேர்தல் தோல்வியும் அவற்றை வலதுசாரிப் போக்கை தொடர்வதில் இருந்து தடுத்து நிறுத்த முடியாது.

ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சி (Partei fur Soziale Gleichheit-) ஒன்றுதான் பொதுத்தேர்தலில் தொழிலாள வர்க்கம் வரவிருக்கும் தீவிர வர்க்க மோதல்களுக்கு தயாரிக்கும் வேலைத்திட்டத்திற்கு போராட வேண்டும் என்று கூறிய ஒரே கட்சி ஆகும்.

எங்கள் தேர்தல் அறிக்கையில் "ஒவ்வொரு நாட்டிலும் பெருகும் பொருளாதார, சமூக நெருக்கடி தொழிலாளர்களை பாதித்துக் கொண்டிருக்கிறது; ஒரு சமூகப் புயல் உலகெங்கிலும் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஜேர்மனியிலும், உலகெங்கிலும் வரவிருக்கும் தவிர்க்க முடியாத வெகுஜன சமூகப் போராட்டங்களின் எழுச்சிக்கு தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக தயாரிக்க நாங்கள் புறப்பட்டுள்ளோம்; அவர்களை வெற்றிக்கு வழிநடத்த ஒரு சோசலிச, சர்வதேச மூலோபாயத்தை அளிக்க முற்படுகிறோம்... தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டும் என்ற எங்கள் நோக்கம் SPD மற்றும் இடது கட்சியுடன் முறித்துக் கொண்டு தொழிற்சங்கங்களுக்கு எதிராக ஒரு எழுச்சியையும் நடத்துவதின் மூலம்தான் அடையப்பட முடியும்." என குறிப்பிட்டிருந்தோம்.