World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

A new period of class struggle and inter-imperialist conflict

ஒரு புதிய வர்க்கப் போராட்டத்திற்கும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான மோதலுக்கான காலகட்டம்

By Chris Marsden
2 October 2009

Use this version to print | Send feedback

செப்டம்பர் 26ம் தேதி சனிக்கிழமை தேர்தலுக்கு முன் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (PSG) பேர்லினில் நடத்திய கூட்டத்தில் பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலளரான கிறிஸ் மார்ஸ்டன் ஆற்றிய கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிறு நடைபெற்ற கூட்டாட்சித் தேர்தல்களில் PSG ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை முன்னேற்றுவிக்க வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. மற்ற பேச்சாளர்களில் PSG தலைவர் உல்ரிச் ரிப்பேர்ட், PSG நிர்வாகக் குழு உறுப்பினர்களான கிறிஸ்ரோப் வன்டரையர், பீட்டர் சுவார்ட்ஸ் ஆகியோர் இருந்தனர். (See "Germany: Successful rally in Berlin ends PSG election campaign").

ஜேர்மனியில் கூட்டத்திற்கு வருகைதந்தவர்களோடு எங்கள் பொது அரசியல் பணிகள் பற்றி பேசும் வாய்ப்பை அளித்ததற்காக PSG தோழர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய சோசலிச இயக்கத்தின் நோக்குநிலைக்கும் மற்றும் கட்டமைப்பிற்கும் இத்தகைய கூட்டங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்.

பொருளாதார மீட்பின் அடையாளங்கள் பற்றி என்ன கூறப்பட்டாலும், செழுமை வெடித்து வருவதாகப் பேசப்பட்டாலும், உலகப் பொருளாதாரம் 1930 களுக்கு பின்னர் மிக மோசமான முறை நெருக்கடிக்கு இடையே உள்ளது. இதன் பாதிப்பு இரு வகைப்பட்டது ஆகும்.

முதலில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் உயரடுக்குகள் தங்கள் பங்கு விலைகளில் இருந்து பில்லியன் கணக்கில் இழந்துள்ளதுடன், சர்வதேச நிதிய முறையை சரிவின் விளிம்பில் இருந்து மீட்பதற்கு மில்லியன் கணக்கான பணத்தை செலவழித்துள்ளது. சர்வதேச அளவில் பல ஊக்கப் பொதிகளின் செலவு, அரசாங்கக் கடன்களுக்கு 35 டிரில்லியன் டாலரைக் கூட்டியுள்ளது. உதாரணமாக அமெரிக்கா 13 டிரில்லியன் டாலரை செலவழித்தது அல்லது கடன் கொடுத்தது அல்லது உறுதியளித்தது. இது அதன் முழு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஓராண்டுத் தொகைக்கு சமம் ஆகும். ஐரோப்பிய நாடுகளும் 5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்திற்கு உறுதியளித்துள்ளன. இது ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகும்.

அவர்களைப் பொறுத்த வரை இது மீட்கப்பட வேண்டும். மேலும் நுகர்வோர் சந்தை, வீடுகள் பிரிவு அல்லது வேறு எதிலும் ஒரு உண்மையான மீட்சி இல்லாத சூழ்நிலையில் அவர்கள் இதை செய்யவேண்டும்.

பிரிட்டனை போலன்றி ஜேர்மனி ஒரு ஆற்றல் மிகு உற்பத்தி சக்தியாக விளங்குகிறது. ஆனால் அதன் பொருட்களை வாங்கும் திறன் எவருக்கும் இல்லை என்றால் என்ன ஆவது? G20 கூட்டத்தை பற்றி நியூயோர்க் டைம்ஸ் எழுதியது போல், "நிறைய பொருட்களை மீண்டும் அமெரிக்கர்கள் வாங்கத் தொடங்கவில்லை என்றால், உலகப் பொருளாதாரம் காப்பாற்றப்பட முடியுமா? உலகத் திட்டம் B எப்படி இருக்கும்?"

இதன் பின் Juliet Schor "கடந்த இரு தசாப்தங்களின் வலுவான நுகர்வோர் வளர்ச்சியின் பெரும் பகுதி வருமான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிராமல் கடன் விரிவாக்கம் மற்றும் நிரந்தரமாக இருக்க முடியாத குடும்ப வேலை நேரத்தில் அதிகரிப்பு ஆகியவற்றை தளம் கொண்டிருந்தது." என குறிப்பிட்டார்.

"1970 களில் இருந்து மணித்தியால ஊதிய விகிதம் தேக்க நிலையில்தான் உள்ளது....25-54 வயதுப் பெற்றோர்கள் 1979 முதல் 2000இற்குள் மிகப்பெரும் 358 மணித்தியால வேலைநேரத்தை தமது வருடாந்த வேலைகளில் இணைத்துள்ளனர். கேள்விக்குரிய கடன் வழக்கங்களும், இப்பொழுது வெடித்துவிட்ட வீடுகள் குமிழியும் நுகர்வோர் தேவை வளர அனுமதித்தன. ஆனால் பெரும் சரிவிற்கு முன்பு வருமானத்தின் மீதான கடனும் சொத்துக்கள் விகிதமும் பெரும் உயரத்திற்கு சென்றுவிட்டன."

அமெரிக்கா ஒரு உதாரணம்தான். ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கம் இன்னும் கடினமாகவும், அதிக நேரமும் உழைத்தும் மகத்தான கடன் அளவை எதிர்கொள்ளுகிறது. பொருட்களுக்கான சந்தை சரிந்து கொண்டு வருகின்றன. எனவே அரசாங்க கடனைத் திருப்பிக் கொடுத்தல், இலாபங்களை மீட்பது என்பது ஊதியங்கள் மற்றும் ஓய்வூதிங்களை குறைத்தல், விரைவுபடுத்துதல், ஏராளமான பணிநீக்கங்களை செய்தல் மற்றும் சுகாதாரம், கல்வி போன்ற முக்கிய பணிகளுக்கு செலவழித்தலை குறைத்தல் என்பதைத் தேவையாக கண்டுகொண்டுள்ளன.

ஜேர்மனியில் தேர்தல் முடியும் வரை குறைப்புக்கள் வெட்டுக்களை மறைப்பதற்கான முயற்சிகள் உள்ளன. பிரிட்டனில் ஆளும் வர்க்கம் 2010 வரை காத்திருக்கத் தயாராக இல்லை. அது பல கட்சிகளும் தாங்கள் செய்யத் தயாராக இருக்கும் வெட்டுக்களுக்கு வழங்கும் ஆதரவை தளமாகக் கொண்டு போட்டியிடுவதை ஒரு பொதுத் தேர்தல் மூலம் காட்ட விரும்புகிறது.

எந்தப் பொருளாதாரத்திலும் இல்லாத வகையில், விகிதாசாரத்தில் பிரிட்டன் மிகப் பெரிய பற்றாக்குறைகளை எதிர்கொள்ளுகிறது; City of London ஐ மீட்பதற்கு 1.26 டிரில்லியன் பவுண்டுகளை செலவழித்த பின்னரும், இந்த நிதி ஆண்டு இறுதிக்குள் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை 175 பில்லியன் பவுண்டை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Moody's தரம் பிரிக்கும் நிறுவனம் (ratings agency) பிரிட்டனின் வங்கிகள் மற்றும் 130 பில்லியன் பவுண்டுகள் இழப்பை அடுத்த 18 மாதங்களில் எதிர்கொள்ளும் என்றும், ஏற்கனவே வந்துள்ள 110 பில்லியன் பவுண்டுகளை விடக் கூடுதல் இது என்றும் மதிப்பிட்டுள்ளது.

இச்சூழலில் முதலாளித்துவம் இன்னும் குருதி வேண்டும் என்கிறது. பிரிட்டனில் உள்ள மூன்று முக்கிய கட்சிகளும் முறையாக அதை ஏற்றுள்ளன. தொழிற்கட்சி பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் தொழிற்சங்க கூட்டமைப்பிடம் (Trade Union Congress-TUC) குறைப்புக்கள் செய்தாக வேண்டும் என்று கூறியுள்ளார். அவருடைய நிதி மந்திரி அலிஸ்டர் டார்லிங் எங்கு பெரும் வெட்டுக்கள் இருக்க வேண்டும் என்பது பற்றி முடிவெடுக்கத் தொடர்ச்சியான கூட்டங்களை தொடங்கியுள்ளார்.

2 பில்லியன் பவுண்டுகள் வெட்டுக்களில் முழுமையாக, அதாவது வரவு-செலவுத் திட்டத்தில் 5 சதவிகிதம் என்பது ஏற்கனவே கல்வித்துறையில் அடையாளம் காணப்பட்டுவிட்டது. ஆனால் 10 அல்லது 20 சதவிகித வெட்டுக்கள்கூட கோரப்படுகின்றன. 2014ம் ஆண்டில் பிரிட்டன் கடன்களுக்கான வட்டிக்கு மட்டும் 104 பில்லியன் டாலர்களைக் கொடுக்க வேண்டும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது; இது முழுக் கல்வி வரவு-செலவுத் திட்டத்தையும் விட அதிகம் ஆகும்.

முன்பு உத்தியோகபூர்வ அரசியல் பிரிவின் எதிரெதிர் முனைகளில் இருப்பதாக காணப்பட்ட பழைமைவாதிகளும் தாராளவாத ஜனநாயகவாதிகளும், இப்பொழுது இரக்கமற்ற வெட்டுக்களின் தேவை பற்றி, அல்லது தாராளவாத ஜனநாயக தலைவர் நிக் கிளெக் அறிவித்துள்ளபடி, "மிருகத்தனமான, தைரியமான குறைப்புக்கள்" பற்றிப் பேசுகின்றனர். கட்சியின் நிதிப்பிரிவு செய்தித் தொடர்பாளரான Vince Cable 80 பில்லியன் பவுண்டில் இருந்து 100 பில்லியன் பவுண்டுகள் குறைப்புக்கள் என்று நிதானமற்ற முறையில் பரிந்துரைத்தபோது அவை யூரோக்களா என்று நான் பரிசீலிக்க வேண்டியதாயற்று.

இந்த நடவடிக்கைகள் மகத்தான சமூகக் குறைப்புக்களை கட்டவிழ்த்துவிடாமல் சுமத்தப்பட முடியாதவை. பிரிட்டனின் வணிகக் கூட்டமைப்புச் சங்கத்தின் தலைவரான Brendan Barber வேலையின்மை 15 சதவிகிதம் அல்லது 4.5 மில்லியனுக்கு இம்மாதம் உயரக்கூடும் என்று எச்சரித்தார்.

"இத்தகைய நீடித்த வெகுஜன வேலையின்மை பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்துவது மட்டும் இல்லாமல் கடுமையான சமூக விளைவுகளையும் கொடுக்கும். கடந்த முறை நாம் வெட்டுக்களைச் செய்து பொருளாதாரத்தை எரித்தபோது [மார்கரெட் தாட்சரின்கீழ்], தெருக்களில் கலகங்களைப் பார்த்தோம்..."

மற்றொரு Unison தொழிற்சங்கத் தலைவர் Dave Prentis, "1920 களில் மகத்தான குறைப்புக்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு வழிவகுத்ததைக் கண்டோம்" என்று எச்சரித்தார்.

இவ்வித நிலைமைக்குத்தான் பெரும்பாலான அரசியலில் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ள தொழிலாளர்கள் மற்றும், இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும். நாம் புரட்சிகர போராட்டங்கள் என்னும் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்து கொண்டிருக்கிறோம்; இதில் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து சோசலிசத்தை கட்டமைப்பதில் உறுதியாக இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் புதிய கட்சி அமைக்கப்படுவதுதான் மிகவும் முக்கியமாகும்.

ஆழ்ந்த நெருக்கடியின் இரண்டாம் முக்கிய பாதிப்பு முக்கிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே விரோதப் போக்கில் புதிய உயர்தமட்டத்தை கொண்டுவந்துள்ளது. உலகின் முக்கிய மூலோபாய இருப்புக்கள் பற்றி போட்டி சக்திகளிடையே இருக்கும் மோதல்கள் இன்னும் தீமையான வடிவங்களான வணிக, இராணுவப் போர்களை கொண்டுள்ளன.

இன்றுவரை ஏகாதிபத்திய சக்திகள் செயல்படும்விதத்தில் உறவுகளைக் கொண்டுள்ளன. உலகின் எண்ணெய், எரிவாயு இருப்புக்களில் மேலாதிக்கம் செலுத்தும் விதத்தில் அமெரிக்கா முன்னாள் யூகோஸ்லேவியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் தொடர்ச்சியான போர்களுக்கு தலைமை தாங்குகிறது. ஐரோப்பிய சக்திகளும் அமெரிக்காவுடன் இணைந்து பணிபுரிவதற்கு காரணம் சூறையாடுவதில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்பதுதான். ஆனால் விரோதப் போக்குகள் தொடர்ந்து ஆழமடைகின்றன.

ஒரு உதாரணம் கூறவேண்டும் என்றால், ஜேர்மனி மாக்னாவுடன் கொண்ட உடன்பாடு. அது ரஷ்யாவுடன் கொண்டுள்ள ஒத்துழைப்பிற்கு அமெரிக்கா, பிரிட்டனில் வந்துள்ள எதிர்விளைவைக் கவனியுங்கள். உடன்பாட்டை பற்றி நியூயோர்க் டைம்ஸ், "வாஷிங்டனில் உள்ள நிர்வாகம் அதைப்பற்றி சுத்தமாக எதையும் கூறாத நிலையில், தன்னுடைய பெயர் கூறப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட ஒரு அமெரிக்க அதிகாரி என்னிடத்தில் 'பொதுவாக ஜேர்மனியர்கள் அமெரிக்காவை பொருட்படுத்தத் தேவையில்லை என்று உணர்ந்துள்ள கட்டத்திற்கு வந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்' என்று கூறினார்." என எழுதியுள்ளது.

Financial Times Deutschland எழுதியது: "இவ்விதத்தில் நடந்து கொள்கையில், ஜேர்மனிய அரசியல்வாதிகள் ஜேர்மனிய வரி செலுத்துபவர்கள்மீது கூடுதலான சுமையைச் சுமத்துவதோடு மட்டும் இல்லாமல், வெளியுறவுக் கொள்கையில் கூடுதலான அழுத்தங்கள் என்ற ஆபத்தையும் எடுக்கின்றனர். இந்த முடிவு மற்ற நாடுகளையும்--கிரேட் பிரிட்டன், போலந்து, ஸ்பெயின் என--பாதிக்கும். குறிப்பிடத்தக்கவகையில் இதன் பாதிப்பு GMன் முக்கிய பங்குதாரரான அமெரிக்காவின்மீது இருக்கும். ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையை ஒரு ரஷ்ய பங்காளிகளுடனான ஒரு ஆஸ்திரிய-கனேடிய நிறுவனத்திற்காக ஆபத்திற்குட்படுத்துவது பொறுப்பற்றதனம் ஆகும்."

ஜேர்மனியுடனான ஐக்கிய இராச்சியத்தின் நீண்டகால எதிர்ப்புணர்வு மீண்டும் கசப்பான, ஆபத்தான வடிவங்களைக் கொண்டிருப்பது வரலாற்றுரீதியாக முக்கியத்துவம் உடையது.

பல ஆண்டுகளாக ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பணம் கொடுக்கும் பசுவாக நடந்து கொள்ளத் தயாராக இருந்து, ஒற்றைச் சந்தை செயல்பட உதவி, ஒரு பொது நாணயமுறையை தோற்றுவிப்பதற்கும் உதவியது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து வாஷிங்டனுடனான அரசியல் உறவு என்பதுடன் தன்னை நிறுத்திக் கொண்டு ஜேர்மனிய-பிரெஞ்சு செல்வாக்கிற்கு கிழக்கில் ஒரு எதிர்கனம் கொடுக்கும் அமெரிக்கா கூறியிருந்த "புதிய ஐரோப்பா" கட்டமைக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவைக் கொடுத்தது.

ஆனால் ஜேர்மனி தன்னுடைய நலன்களை இன்னும் ஆக்கிரோஷமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் உறுதிப்படுத்தும்போது, அதன்பால் அழுத்தங்கள் அட்லான்டிக் கடந்து, ஆங்கில கால்வாய் கடந்து, ஐரோப்பா முழுவதும் பெருகுகின்றன.

இங்கிலாந்தில் அடுத்த அரசாங்கத்தை பழைமைவாதிகள் அமைக்கக்கூடும். கட்சித் தலைவர் டேவிட் கமரோன் பிளேயரை போல் ஒரு ஐரோப்பிய ஆர்வலர் எனக்காட்டுவது போல் நடந்து கொள்ளக்கூடும்.

ஜூன் மாதத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஐரோப்பிய மக்கள் கட்சிக் குழுவில் இருந்து பிரிந்து, டோரிக்கள் பல தீவிர வலது, கூட்டாட்சி-எதிர்ப்பு கொண்டவை என அறியப்பட்ட ஐரோப்பிய பழைமைவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதக் குழுகளுடன் ஒரு புதிய முகாமை அமைத்தது. இதில் ஜரோஸ்லா மற்றும் லெச் காக்சின்ஸ்கியின் போலந்தின் சட்டம் மற்றும் நீதிக் கட்சி (PiS) அடங்கியிருந்தது. அவற்றின் முக்கிய தலைவர்கள் "ஐரோப்பிய மயமாக்குதல் என்ற பெயரில் மேற்கு மற்றும் வடக்கு போலந்துப் பகுதிகிளை ஜேர்மனிய மயப்படுத்துதல்" என்பதை கடிந்து கொண்டனர். இதைத்தவிர Waffen SS இன் லட்விய படைப்பிரிவின் ஒரு நினைவுதின நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு பிரதிநிதிகள் அனுப்பிய லட்விய தேசிய சுதந்திர இயக்கமும் (Latvian National Independence Movement) இருக்கின்றது. லிஸ்பன் ஒப்பந்தம் பற்றி டோரிக்கள் ஒரு வாக்கெடுப்பு நடத்த உள்ளனர். கணிசமான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

எந்த அளவிற்கு இங்கிலாந்திற்கும் ஜேர்மனிக்கும் இடையே உறவுகள் பகைமை உணர்வுடன் உள்ளன என்பதற்கு ஜேர்மனிய அரசாங்கம் நிதியச் சந்தைகள்மீது பல தடைகளைக் கொண்டுவரும் திட்டத்தை வைத்திருப்பதற்கு நான் கவனத்தை ஈர்க்க அனுமதியுங்கள். இவற்றில் மேலதிக கொடுப்பனவுகள் மீது உச்ச வரம்பு, ஒருவித Tobin Tax மற்றும் பல நிதிய வணிகங்களும் உள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து இரண்டும் ஜேர்மனியின் முயற்சிகளை தாங்கள் நிதித் துறையில் கொண்டிருக்கும் மேலாதிக்கத்தின் மீதான தாக்குதல்கள் என்று கருதுகின்றன. உண்மையில் துல்லியமாக மோதலும் அதையொட்டித்தான் இருக்கிறது.

ஜேர்மனிய நிதி மந்திரி பீர் ஸ்டீன்ப்ரூக் சமீபத்தில் Stern க்கு ஒரு பேட்டி கொடுத்தார்; இதில் அவர் இங்கிலாந்து அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடினார். மற்றவற்றுடன் அவர் கூறியது: "லண்டனில் ஒரு செல்வாக்குக்குழு தன்னுடைய போட்டி நலன்களைக் காக்க எதுவும் செய்யும் என்பது தெளிவு."

பிரிட்டிஷ் அரசாங்கம் "தன்னால் மிகச் சிறப்பாக முடிந்தவரை" G20 உச்சிமாநாட்டில் கடுமையான நிதியக் கட்டுப்பாடுகளை சேதப்படுத்த முயற்சித்தது என்றும், தனியார் முதலீட்டு நிதியங்கள் மீதான கட்டுப்பாடு பற்றி "நாகரிகமாகக் கூற வேண்டும் என்றால்" ஒப்புக் கொள்ளுவதற்கு மிகக் கடின நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது என அவர் கூறினார். மற்ற ஐரோப்பாவிடம் இருந்து பிரிட்டன் விலகி நின்று தன்னுடைய நலன்களை நிதியச் சந்தைகளில் தக்கவைக்கப் பார்க்கிறது; ஆனால் அது நிதிய நெருக்கடியிலுள்ள சுமையின் பங்கைக் கொள்ள வேண்டும், நிதிய பரிமாற்றங்களில் வரி என்பதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும். "மத்திய கேள்வி, எவர் செலவை ஈடுகட்டுவர் என்பதுதான்? ஐரோப்பிய குடிமக்கள் முழுச் செலவையும் ஏற்க வேண்டும் என்று இருக்கக்கூடாது."

இதன் பின்னர், "நிதியச் சந்தைகளின் விதிகள் நாம் உறுதியாக திறமையாக மாற்றுவோம். அரசியல் என்பது சில சமயம் முதலில் மெதுவாகத் தொடங்கி முழு வேகத்தை அடையும் இரயில் எஞ்சின் போன்றது." என்று அவர் எச்சரித்தார்.

இது அசாதாரண வகையில் வெளிப்படையாகக் கூறப்பட்ட கருத்து; அதேபோல்தான் Daily Telegraph என்ற பழைமைவாத கட்சிப் பத்திரிகையின் விடையிறுப்பும் இருந்தது. Ambfose Evans Pritchard என்ற சிறப்பு பெயர் பெற்றவரின் விடையை அது கொடுத்தது. ஸ்டீன்ப்ரூக்கை "ஒரு வெஸ்ட்பாலிய அச்சுறுத்துபவர்" என்று விவரித்த Pritchard அவருடைய "சமீபத்திய வியத்தகு ஆத்திரமூட்டல்களுக்கு" எதிராகச் சாடினார்.

"அவர் கூறியதின் பொருள் ஜேர்மனி தனது சக்திகளைத் திரட்டி அதன் சமூக விளைவுகள் எப்படி இருந்தாலும் பிரிட்டிஷ் பொருளாதாரத்தின் தொகுப்பை மூட முயல்வார். என்னுடைய வாழ்க்கையில் மேற்கு ஐரோப்பா பொருளாதார போர் பற்றிய அறிவிப்பிற்கு மிகஅருகில் உள்ளதாக நான் இப்பொழுது காண்கிறேன்" என்று அவர் தொடர்ந்தார்.

சில சமயம் இத்தகைய செய்தியாளரின் கட்டுரை அழுத்தங்களின் ஆழத்தைத் தெளிவாகப் புலப்படுத்தும். திரு. ஸ்டீன்ப்ரூக்கின் கருத்துக்கள் வெளிவந்தாலும், அரசியல்வாதிகள் வெளியிடும் கருத்துக்களை இராஜதந்திர முறை தடுத்துவிடும்.

பெரிய சக்திகளுக்கு இடையே அதிகரிக்கும் அழுத்தங்களின் உட்குறிப்புக்களை அறிந்து கொள்ளுதல் அவசியமாகும். இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்திற்கு பின்னர் இப்பொழுது 70 ஆண்டுகள் ஆகின்றன. இந்த இடத்தில்தான் ஏகாதிபத்திய சக்திகள் ஐரோப்பிய, உலக மேலாதிக்கத்திற்கான போட்டியின் முந்தைய சுற்று முடிவடைந்தது. அன்று அந்தக் கொடூரமான மோதலுக்கு முந்தைய ஆண்டுகளில் சர்வதேச உறவுகள் இன்றைய நிலைப்போல்தான் இருந்தது, எனவே இதே போன்ற தவிர்க்க முடியாத வெடிப்பு வரும் என்று நாம் அறிவதற்கு பெரிய கணிப்புக்களை கூறவேண்டியதில்லை.

இதிலும் உலக மந்தநிலைப் பிரச்சினையிலும் 1930 களுடன் இருக்கும் இணையான தன்மைகளும் அறிந்து கொள்ளப்பட வேண்டும்.

எனவேதான் தொழிலாள வர்க்கம் இப்பொழுது கட்டமைக்கும் கட்சி முற்றிலும் சர்வதேசத் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். அது ஐரோப்பா முழுவதும் உள்ள, மற்றும் அமெரிக்கா, சர்வதேச அளவில் இருக்கும் தன் சகோதர, சகோதரிகளை ஐக்கியப்படுத்த முயலவேண்டும், தேசியவாதம், நாட்டுவெறி ஆகிய நச்சுக்களுக்கு எதிராக இது நடத்தப்பட வேண்டும்.

எனவேதான் தொழிலாளர்களுக்கு ஜேர்மனியில் தேவைப்படும் கட்சி PSG ஆகும். வேறு எந்தக் கட்சியும் ஒரு சர்வதேச வேலைத்திட்டத்தை முன்வைக்கவில்லை. Die Linke மற்றும் அதன் பல துணைக் கோள்களும் தொழிற்சங்கத்துடன் இணைந்து ஜேர்மனிய அரசாங்கம் செயல்படுத்தும் காப்புவரி நடவடிக்கைகளுக்கு, நெருக்கடியின் சுமையை இங்கும் மற்ற இடங்களிலும் தொழிலாளர்கள் மீது ஏற்றுவதற்குத்தான் தயாராக உள்ளன. அதுதான் மக்னாவின் 11,000 வேலைக் குறைப்புக்களில் நிரூபணம் ஆயிற்று.

அடிப்படை மூலோபாயத் திருப்பம் ஒன்றுதான் முன்னேற்றப்பாதையை அளிக்கும். சோசலிசம், சர்வதேசியம் ஆகியவற்றின் போராட்டத்திற்காக பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் உங்களுடன் இந்த இலக்குகளை அடைவதற்கு முழு உணர்வுடன் உழைப்பேன் என்று நான் உறுதி கூறுகிறேன்.