World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Greece: New PASOK government to move quickly to impose austerity measures

கிரேக்கம் : புதிய PASOK அரசாங்கம் கடும் சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்த விரைந்து செயல்படுகிறது

By Stefan Steinberg
6 October 2009

Use this version to print | Send feedback

PASOK எனப்படும் ஐக்கிய சோசலிச இயக்கம், முன்னாள் வெளியுறவு மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் தலைமையில் ஞாயிறன்று கிரேக்கத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றி அடைந்தது. மொத்த வாக்குகளில் 44 சதவிகிதத்தையும் நாட்டின் 300 இடங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 160 இடங்களையும் இக்கட்சி கைப்பற்றியது.

பதவியிழக்கும் பிரதம மந்திரி கொஸ்ராஸ் கரமன்லிஸ் மற்றும் அவருடைய கன்சர்வேடிவ் புதிய ஐனநாயகக் கட்சியினால் (New Democracy Party) உலக நிதிய நெருக்கடியினால் கிரேக்க நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பெரும் சரிவைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தை கொண்டு ஒரு பரந்த கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கான மக்கள் ஆதரவை பெறும் முயற்சியில் தேர்தல்களுக்கு ஏற்பாடு நடந்தது. தன்னுடைய கட்சியின் சரியும் செல்வாக்கை மீண்டும் பெறும் நோக்கத்துடன் அவருடைய இரண்டாம் நான்கு ஆண்டு பதவிக்காலத்தில் பாதியின்போதே முன்கூட்டிய தேர்தல்களை அறிவித்திருந்தார். தோல்வியை ஒப்புக் கொண்ட பின்னர் கட்சித் தலைமைப் பதவியையும் கரமன்லிஸ் இராஜிநாமா செய்துள்ளார்.

எவ்வாறிருந்தபோதிலும் கரமன்லிஸ் தன்னுடைய கட்சிக்கு ஆதரவைப் பெறுவதில் தோல்வியடைந்ததும், சர்வதேச வங்கிகளும் ஐரோப்பிய ஒன்றியமும் கோரிய கடும், பரந்த, சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தும் பணியை செய்ய முடியாதுபோனதுடன், இப்பொறுப்பு இப்பொழுது PASOK ன் தோள்களில் வீழ்ந்துள்ளது.

பெரிதும் செல்வாக்கிழந்த புதிய ஜனநாயகக் கட்சி அரசாங்கம் தொடர்ச்சியான பல அரசியல் ஊழல்களில் சிக்கி, இந்தக் கோடைகாலத்தில் ஏதென்ஸ் நகரத்தின் வெளிப்புறம் வரை வந்துவிட்ட தொடர்ச்சியான காட்டுத்தீக்களை கட்டுப்படுத்தாதற்காகவும் அதிகம் விமர்சிக்கப்பட்டது. இத்தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி 34 சதவிகிதத்திற்கு சற்று குறைவான வாக்குகளையும் 92 பாராளுமன்ற இடங்களையும்தான் பெற முடிந்தது.

கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) தேர்தலில் மூன்றாம் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சி என்று வெளிப்பட்டுள்ளது. இது 7.4 சதவிகித வாக்குகளையும் 20 இடங்களையும் கொண்டது. இது 2007 தேர்தலுடன் ஒப்பிடும்போது (8.2 சதவிகிதம், 22 இடங்கள்) ஒரு சரிவாகும். தீவிர வலதுசாரியான Popular Orthodox Rally (Laos) வாக்குகளில் தன் பங்கை 5.6 சதவிகிதம் என (2007ல் பெற்ற 3.8 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது) அதிகப்படுத்திக்கொண்டது. புதிய ஜனநாயகக் கட்சியின் முன்னாள் வாக்காளர்கள் ஆதரவு பிரிவு இதற்கு உதவியது.

தவறாக பெயரிடப்பட்டுள்ள தீவிர இடதுகளின் கூட்டான (Coalition of theRadical Left) SYRIZA தன்னுடைய ஆதரவில் 2007ம் ஆண்டு இருந்த 5 சதவிகதத்தில் இருந்து ஞாயிறன்று குறைந்து, 4.4 சதவிகிதம் மட்டுமே பெற்றது. இதையொட்டி புதிய சட்டமன்றத்தில் அதற்கு 14 இடங்கள் கிடைத்துள்ளன.

PASOK அல்லது புதிய ஜனநாயகக் கட்சியுடன் ஒத்துழைக்க விருப்பும் என்று தேர்தலுக்கு முன்பே அறிவித்த சுற்றுச் சூழல் பசுமைவாதிகளின் கட்சி, பாராளுமன்றத்தில் இடம் பெற முடியவில்லை. கிரேக்கப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற தேவையான 3 சதவிகிதத்தை விட இது சற்றே குறைந்து 2.4 சதவிகிதம்தான் பெற்றது.

KKE, SYRIZA இரண்டும் ஆதரவுச் சரிவு இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் தங்கள் விசுவாசத்தை PASOK க்கு ஞாயிறன்று மாற்றிவிட்டதை குறிக்கிறது. தன்னுடைய பங்கிற்கு SYRIZA தலைமை அது PASOK க்கு கொடுத்த ஆதரவால் மேலதிக வாக்குகளை பெற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் முடிந்த பின் SYRIZA தலைவர் Alexis Tsipras உடனே PASOK தலைவர் பாபண்ட்ரூவிற்கு தொலைபேசியில் அவர் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்பான வருங்காலத்திற்கும் வாழ்த்தினார்.

நெருக்கமான ஆதரவாளர்களும் கட்சித் தொண்டர்களும் PASOK யின் வெற்றியைக் கொண்டாடியபோது, தேர்தல் போக்கு மற்றும் பல வர்ணணைகளின் அடிப்படையில் இருந்தும் வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் புது ஜனநாயகக் கட்சி அறிவித்த கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வாக்களித்தனரே அன்றி PASOK மற்றும் அதன் தலைமையிடத்தில் நம்பிக்கையை காட்டினர் என்ற பொருள் ஆகாது என்பது தெளிவு.

வேறு எந்த ஐரோப்பிய நாட்டிலும் இல்லாதது போல், கிரேக்க அரசியல் இரண்டு முக்கிய அரசியல் வம்சாவளிகளான கரமன்லிஸ் மற்றும் பாபாண்ட்ரூ உடைய மேலாதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது. இருவரும் மற்றவரை குறைந்தது மூன்று தேசியத் தேர்தல்களில் எதிர்கொண்டுள்ளனர். இருவருமே அரை நூற்றாண்டிற்கும் மேலாக கிரேக்க அரசியலில் மேலாதிக்கம் செலுத்திய அரசியல் குடும்பங்களின் வழித் தோன்றல்கள் ஆவர்.

57 வயதான ஜோர்ஜ் பாபாண்ட்ரூவின் தந்தையும், பாட்டனாரும் அவருக்கு முன்பு பிரதம மந்திரியாக இருந்துள்ளனர். ஜோர்ஜின் தந்தை ஆண்ட்ரீயஸ் மூன்று முறை வெவ்வேறு நேரங்களில் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவருடைய தகப்பனார் பெரும்பாலும் சமூக சமரசம் மற்றும் தீவிர தேசியவாதத்தை தளமாகக் கொண்ட கொள்கையை வலியுறுத்தியபோது, கிரேக்கம் இராணுவ ஆட்சியில் இருந்து போது அமெரிக்காவில் பிறந்த அவருடைய மகன் ஜோர்ஜ் கூடுதலான அமெரிக்க, ஐரோப்பிய சார்புடைய வெளியுறவுக் கொள்கையை அமெரிக்க புதிய தாராளவாத வணிக வட்டங்களுடன் தொடர்புடைய கடும் சிக்கன நடவடிக்கைகளையும் கொண்டு வந்தார்.

1996ல் இருந்து 2004 வரை கிரேக்கத்தை ஆண்ட PASOK அரசாங்கங்களில் ஜோர்ஜ் பாபண்ட்ரூ வெளியுறவு மந்திரியாக இருந்தார். முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயர் வாதிட்டிருந்த "நவீன" கொள்கைகள் வகையைப் பின்பற்றி கோஸ்டாஸ் சிமிடிஸ் தலைமையில் PASOK கட்டுப்பாடுகளை தளர்த்துதல் மற்றும் பொதுப்பணித் துறையில் பரந்த பிரிவுகளைத் தனியார்மயமாக்குதல் ஆகியவற்றை கொண்டுவரும் செயல்களை தொடக்கினார். நாட்டின் பொதுநல மற்றும் கல்வி முறைகளில் தொடர்ச்சியான வெட்டுக்களையும் கட்சி செயல்படுத்தியது. இக்கொள்கை அடிப்படையில் கரமன்லிஸ் இன் கீழ் இருந்த புது ஜனநாயக அரசாங்கத்தாலும் ஏற்கப்பட்டு, அவர் பதவிக்கு 2004ல் வந்தபின் தீவிரப்படுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு இறுதியில் பரந்த முறையில் இளைஞர்கள் திரண்டதும், கலகம் செய்ய தூண்டிய பல பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் இருந்த பரிதாபமான நிலைமை பெரும்பாலும் PASOK செயல்படுத்திய கொள்கைகள், குறைப்புக்களின் விளைவுதான். ஒரு தடையற்ற சந்தைக் கொள்கைகளை அப்பட்டமாக தொடர்கையில், PASOK நாட்டின் தொழிற்சங்கங்களுடன்--குறிப்பாக GSEE எனப்படும் கிரேக்கத் தொழிலாளர்களின் பொதுக் கூட்டமைப்புடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருக்கும் முன்னுரிமையை பெற்றுள்ளது. பெயரளவிற்கு நடந்த வழமையான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை தவிர GSEE 1990களில் தொடங்கிய தனியார்மயமாக்குதலை எதிர்க்க ஏதும் செய்யவில்லை.

இப்பொழுது கிரேக்க ஆளும் வர்க்கம் கரமன்லிஸ் திறமையுடன் செயல்படுத்த முடியாத வணிகச் சார்பு மற்றும் பொதுநல விரோத கொள்கைகளை செயல்படுத்த PASOK ஐயும் தொழிற்சங்கங்களையும்தான் நம்பியுள்ளது.

இச்சூழலில், பாபாண்ட்ரூ தன்னுடைய தேர்தல் பிரச்சார உறுதிமொழிகளான 3 பில்லியன் யூரோக்கள் ஊக்கப்பொதி, பணவீக்கத்தையும்விட அதிகமான ஊதிய, ஓய்வூதிய அதிகரிப்புக்கள், செல்வந்தர்களுக்கு கூடுதலான வரிகள், பெருமிதத்திற்குரிய Olympic Airlines தனியார்மயமாக்கப்படுவது போன்றவை பரிசீலிக்கப்படுதல் மற்றும் OTE தொலைத் தொடர்பு நிறுவனத்தில் அரசாங்கத்தின் பங்குகளை விற்பது என்பவற்றை விரைவில் தூக்கி எறிவார் என்று நம்பலாம். PASOK யின் கடந்த கால சான்றுகளைப் பார்க்கும்போது, பாபாண்ட்ரூவின் பிரச்சார உறுதிமொழியான அரசியல் ஊழல் நிறுத்தப்படும் என்பதும் வீணான பேச்சுத்தான்.

மாறாக அவர் நாட்டின் வீங்கியுள்ள கடனுக்கு வட்டி கொடுப்பதற்கே மிக அதிகமாக கடன் வாங்கும் கட்டாயத்தில் தள்ளப்படுவார். இது 2009ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 சதவிகிதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரேக்கப் பொருளாதாரம் பெரிதும் கப்பல் போக்குவரத்து, சுற்றுலா ஆகியவற்றை நம்பியுள்ளது. இவை இரண்டும் சர்வதேச பொருளாதார நெருக்கடியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2009ல் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படும்போது, அதன் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை ஒருவேளை பொருளாதார உற்பத்தியில் 6 சதவிகிதத்தையும் விட அதிகமாகக் கூடும். இது யூரோப் பகுதியில் அனுமதிக்கப்படும் 3 சதவிகிதத்தைவிட அதிகமாக இன்னும் வளர்கிறது.

கிரேக்க வங்கிகளுக்கு இன்னும் அதிக பிரச்சினைகள் காத்திருக்கின்றன; அவை மிக அதிகமாக பால்கன் நாடுகளில் முதலீடு செய்துள்ளன. மற்றும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார சுருக்கத்தால் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளன. Standard & Poor கருத்தின்படி கிரேக்க வங்கிகள் மேற்கு ஐரோப்பாவிலேயே அதிக நீண்டகால பொருளாதார ஆபத்துக்களை எதிர்கொள்ளுகின்றன.

விரிவடையும் கடனால் ஏற்படும் விளைவுகளை பற்றி எச்சரிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றாலும் கொடுக்கப்பட்டுள்னன. அவை கிரேக்கத்தை அடிப்படை நடவடிக்கைகள் எடுத்து போட்டித்தன்மையை உயர்த்தவும், அதன் நிதிய சமசீரற்ற தன்மையை திருத்த முயலுமாறு அறிவுரை கூறியுள்ளன. அதே நேரத்தில் கிரேக்கம் விரைவில் அதிகரிக்கும் வேலையின்மை விகிதத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் மிகக் குறைவாகத்தான் உள்ளன.

நாட்டின் முக்கிய முதலாளித்துவக் கட்சிகள் இழிவு பெற்றுள்ள நிலையில், கிரேக்க மக்களுடைய வாழ்க்கைத் தரங்கள் மீது இன்னும் மகத்தான தாக்குதல் தவிர்க்க முடியாதது ஆகும். சமீத்திய வாக்களிப்பு பத்து பேரில் ஒன்பது கிரேக்கர்கள் PASOK அல்லது புது ஜனநாயகக் கட்சியையோ நம்பவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. சமீபத்திய தேர்தலில் வாக்களிப்பில் கலந்துகொள்ளாதது இளைஞர்களிடையே மிகவும் அதிகமாக இருந்தது.

தேர்தலுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் கதிரேமினி செய்தித்தாள் எந்த அளவிற்கு மக்களின் பெரும் பிரிவு நடைமுறை அரசியல் கட்சிகளிடம் இருந்து விரோதப்பட்டுள்ள தன்மையைப் பற்றித் தன்னுடைய மதிப்பீட்டை கொடுத்துள்ளது. "தற்கால கிரேக்க வரலாற்றில்" தேர்தல் ஒரு திருப்புமுனையாகக்கூடும் என்று எச்சரித்த செய்தித்தாள், "தங்கள் முக்கியத்துவத்தை கெடுத்தல் அல்லது ஆட்சியில் அமர்த்துதல் என்ற முறையில் திறனைக் கொண்டுள்ள இரு முக்கிய கட்சிகளினதும் மற்றைய சிறிய கட்சிகளினதும் பிரச்சாரம் கீழ்த்தரமானது. எந்தக் கட்சித் தலைவரும் கட்சியிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு அப்பால் எவரையும் ஊக்கப்படுத்த முடியவில்லை. எந்தக் கட்சியும் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு போல் எதையும் முன்க்வைக்கவில்லை.... கட்சிகள் களைத்துள்ளன--அவற்றின் தலைவர்களும் அரங்குகளும் சவாலை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டிருக்கவில்லை.

PASOK தீவிர சிக்கன நடவடிக்கைகளை விரைவில் தொடங்கிவிடும். அவை தவிர்க்க முடியாமல் மக்களின் பரந்த தட்டுக்களிடையே தூண்டுதலை ஏற்படுத்தும். SYRIZA மற்றும் KKE இரண்டும் பல நேரங்களிலும் PASOK இற்கு தங்கள் விசுவாசத்தையும், கிரேக்க வணிகத்திற்கு தங்கள் நம்பிக்கையையும் நிரூபித்துள்ளன. கிரேக்கத்தில் பெருகி வரும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்கு ஒரு முன்னேற்றத் தீர்வு என்பது ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை தளமாகக் கொண்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவைக் கட்டமைப்பதின் மூலம்தான் முடியும்.