World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

The New York Times throws Roman Polanski to the wolves

நியூயோர்க் டைம்ஸ், ரோமன் போலன்ஸ்கியை ஓநாய்களிடம் மாட்டிவிடுகிறது

By David Walsh and David North
1 October 2009

Use this version to print | Send feedback

சுவிட்சர்லாந்தில் திரைப்பட இயக்குனர் ரோமன் போலன்ஸ்கியின் கைது நடவடிக்கையும், அமெரிக்காவிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என்ற அச்சுறுத்தலும் 'சட்டம் ஒழுங்கைப்' பாதிக்கும் நடவடிக்கைகளை தூண்டிவிட்டிருக்கின்றன. இந்த சக்திகள் தீவிரமான தடை செய்யும் அளவிற்கு கூட பிரதிபலிப்பை காட்டுகிறார்கள். இதுபோன்ற சமயங்களில், பரந்த உணர்வைக் கட்டுப்படுத்த மனிதாபிமான அடிப்படையில் மொத்தமாக மன்னிப்பும் கூட கொடுக்கப்படும். இந்த வழக்கின் பெருமளவிலான சூழ்நிலைகளில் சிறிதும் அக்கறை இல்லாமல், சமூகத்தின் நன்மைக்காக போலன்ஸ்கி சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கோரி கொடூரமான, பிற்போக்குத்தனமான எதிர்ப்புக் குரல்கள் எழுப்பப்படுகின்றன.

இவற்றிற்காக, வரலாற்றின் தாராளவாத பத்திரிகை என்று கூறிக்கொள்ளும் நியூயோர்க் டைம்ஸின் ஆசிரியர் குழுவையும் இப்போது, இதனோடு சேர்த்து கொள்ளலாம். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டுரையில், விரோதத்தோடும் வஞ்சத்தோடும், அது லொஸ் ஏஞ்சல்ஸ் சட்ட அமுலாக்க அதிகாரிகளின் பக்கத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

"The Polanski Case" (செப்டம்பர் 30, 2009) என்ற கட்டுரையில், போலன்ஸ்கியின் கைது நடவடிக்கையை எதிர்க்கும் கோஷங்களை டைம்ஸ் முதலில் கேலி செய்கிறது: "பிரான்சில் இருந்தும், துருவங்கள் மற்றும் பிற ஐரோப்பியர்களிடம் இருந்தும் வரும் எதிர்ப்புகளைக் கேட்டு, அந்த திரைப்பட இயக்குனர் ஏதோ மக்களிடம் உண்மையை பேசியதற்காக ஏதோவொரு சர்வாதிகார ஆட்சியால் கைது செய்யப்பட்டிருப்பதாக நீங்கள் நினைக்க கூடும்" என்று குறிப்பிடுகிறது.

அப்படியானால், மனித உரிமை மீறல் என்பது "சர்வாதிகார ஆட்சிகளில்" மட்டும் தான் நடக்கிறது, முதலாளித்துவ "ஜனநாயகங்களில்" நடக்கவில்லையா? இந்த ஆண்டின் தனித்தனி காலக்கட்டங்களில் சர்வதேச மன்னிப்புச் சபை பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: "பயங்காரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில், ஈராக், ஆப்கானிஸ்தான், குவான்டானமோ மற்றும் பல இடங்களிலும் அமெரிக்கா தனிநபர்களின் உரிமைகளை மீறியிருக்கிறது. செப்டம்பர் 11, 2001ல் இருந்து அமெரிக்காவால், அல்லது அதன் சார்பாக நடந்திருக்கும் மனித உரிமைகள் மீறல்கள் பல வகைகளில் நிறைய நடந்திருக்கின்றன," "சிறைச்சாலைகளிலும், காவல்சாவடிகளிலும், புலம்பெயர்ந்தோருக்கான தடுப்பு முகாம்களிலும் போலீஸின் காட்டுமிராண்டித்தனமும், மோசமான நடவடிக்கைகளும் குறித்து பல அறிக்கைகள் [2009ல்] தொடர்ந்து வந்திருந்தன. போலீஸ் மின்அதிர்வு கருவிகளைப் (Tasers) பயன்படுத்தியதில், டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்" என்று குறிப்பிட்டது.

ஏன் எல்லா புகழும் சுவிஸ் அதிகாரிகளுக்கு அளிக்கப்படுகின்றன? அவர்களின் அரசியல் வரலாறு ஏற்கனவே நெறிகெட்டதனத்திற்கும், கூலித்தனத்திற்கும் பெயர்பெற்று தான் இருக்கிறது. அமெரிக்க நீதித்துறையிடம் இருந்து தப்பி ஓடி வந்த இழிபுகழ்பெற்ற நிதிய மோசடிக்காரன் மார்க் ரிச்சிற்கு, குறைந்தபட்சம் சுவிஸ் அரசாங்கம் புகலிடமாவது கொடுத்தது.

பரவாயில்லை, அந்த குறிப்பிட்ட வழக்கு ஒரு "மகிழ்ச்சியான முடிவைக்" கொண்டிருந்தது. ரிச் ஜனாதிபதியின் கருணையால் பயனடைந்தார். அது பில் கிளிண்டனால், அவரது பதவிகாலத்தின் இறுதியில் அளிக்கப்பட்டது. அப்போது துணை நீதி அரசராக இருந்த எரிக் ஹோல்டரின் சிபாரிசிற்கு சாதகமாக கிளிண்டன் செயல்பட்டார். இப்போது ஒபாமா நிர்வாகத்தில் அவர் நீதி அரசர் பதவியில் வீற்றிருக்கிறார். நிச்சயமாக ரிச், போலன்ஸ்கி கிடையாது தானே. கிளிண்டனுக்கும், ஜனநாயக கட்சிக்கும் பெரிய நிதி அன்பளிப்புகளைக் கொடுத்து, தனது பாவங்களைக் கழுவும் சிறந்த அறிவை அந்த நிதியாளர் பெற்றிருந்தார்.

போலன்ஸ்கியின் குற்றம் மற்றும் வழக்கு விசாரணையை சுருக்கமாக விவரித்த பிறகு, டைம்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: "மூன்று தசாப்தங்களாக இயக்குனரை, நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் சுதந்திரமாக நடமாடவிட்டு விட்டு, இப்போது அவரை கைது செய்திருக்கும் சுவிஸ் அதிகாரிகளின் முடிவு ஏதோவொரு வகையில் வித்தியாசமாக இருக்கிறது. மேலும் 2008ல் வெளியான Roman Polanski: Wanted and Desired என்ற மரீனா ஜினோவிச்சின் ஆவணப்படம், கலிபோர்னியாவில் இருந்த பிரபல நீதிபதியான லாரன்ஸ் ரிட்டன்பேண்டு நம்பமுடியாத வகையில் இந்த வழக்கை விசாரித்ததாக சில சிக்கலான கேள்விகளை எழுப்பி இருந்தது."

சுவிட்சர்லாந்தில் சொந்த குடியிருப்பைக் கொண்டிருக்கும் ஒருவரை, வெளிப்படையாகவே பெரும்பாலான கோடைகாலங்களை அவர் அங்கே கழித்திருக்கிறார் என்ற நிலையில், அதே நாட்டில் போலன்ஸ்கியை கைது செய்திருக்கும் இந்த திடீர் முடிவில் நிறையவே முரண்பாடு இருக்கிறது என்பதை டைம்ஸ் ஆசிரியர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஒரு வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்ட பிரபல சுவிஸ் வங்கியான UBS மீதான அழுத்தத்திற்காக, தங்களின் முக்கிய நிதி அமைப்புகளைக் காப்பாற்றும் ஒரு கீழ்த்தரமான முயற்சியின் ஒரு பகுதியாக, திரைப்பட இயக்குனரைக் கைது செய்து சுவிஸ் அதிகாரிகள், அமெரிக்காவிற்கு ஓர் எலும்பு துண்டை தூக்கி எறிந்திருக்கிறார்கள். சுவிஸ் அதிகாரிகள், தங்களின் முடிவு வங்கி இலாபங்களில் (பிரான்க் மற்றும் சென்டைம் ஆகியவற்றின் வீழ்ச்சியோடு தொடர்புபட்டு) எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று முதலில் கணக்கிடாமல், ஒருபோதும் வெளிநாட்டு கொள்கை முடிவுகளை எடுத்ததில்லை.

ஆச்சரியப்படும் வகையில், அந்த "பிரபல நீதிபதி" எவ்வித மேற்படி விமர்சனமும் இல்லாமல், அந்த நிஜ வழக்கை கையாண்டிருந்தார் என்ற வகையில், டைம்ஸ் இதழ் அந்த "சிக்கலான கேள்விகளை" புறக்கணித்திருந்தது. 1970களின் பிந்தைய விசாரணையில், "கணிசமான மோசடி" இருந்ததை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் லோஸ் ஏஞ்சல்ஸ் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் ஒத்துக்கொண்டிருந்தார். முப்பதுக்கும் மேலான ஆண்டுகளுக்கு பின்னர் போலன்ஸ்கி கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட வேண்டும் என்பதில், இது ஏதாவது சட்டப்பூர்வமான, நீதியைப் பெற்றிருக்கவில்லையா? ஆசிரியர் தலையங்கம், இந்த சாத்தியக்கூறு குறித்து எவ்வித ஆர்வத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை, சட்டத்தில் இருக்கும் நுட்பமான விடுபாடுகளுக்கு இதை விட்டுவிட்டது போலும்.

நிறைவான சிடுமூஞ்சித்தனத்துடன் டைம்ஸ் தொடர்ந்தது, "கற்பழிப்புக்காக குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் ஒருவர், அவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், அநீதியில் இருந்து நீதிக்கு கொண்டு வரப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்" என்று குறிப்பிட்டது.

76 வயதான ஒருவரை தெற்கு கலிபோர்னியாவிடம் இவர்களின் வழக்கறிஞர்கள் தான் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இரக்கமில்லாமல் மைக்கேல் ஜாக்சனை பின்தொடர்ந்து, அவர் வாழ்க்கையை அழித்தார்கள், அதன்மூலம் அவர் குறைவயதிலேயே இறப்பதற்கும் வழிவகுத்தார்கள் ஒப்படைப்பதைத் தான் டைம்ஸ், "நீதிக்கு முன் கொண்டு வருவது!" என்று குறிப்பிடுகிறது.

"லோஸ் ஏஞ்சல்ஸ்" மற்றும் "நீதி" என்பவை வெறும் வார்த்தைகள் கிடையாது, அவை ஒரே வாக்கியத்தில் இருக்கின்றன. இலஞ்சத்திற்கும், திட்டமிட்ட போலீஸ் வன்முறை, இனவாதம் மற்றும் கட்டம் கட்டுதல் ஆகியவற்றிற்கு இழிபுகழ்பெற்று, பழிக்குபழி வாங்கும் போக்குடைய லோஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகளுக்கு பயந்துதான் போலன்ஸ்கி அமெரிக்காவின் சட்டத்திற்கு வெளியில் தப்பித்து சென்றார். அந்த இயக்குனர் தலைமறைவாக இருக்கவில்லை, அவர் தப்பி ஓடியதில் இருந்து, இதுவரை விருது பெற்ற படமான The Pianist உட்பட சுமார் பத்து படங்களை இயக்கி இருக்கிறார்.

தனது எல்லா மதிப்புகளிலும் உறுதியை கூட்டி, அமெரிக்க தாராளவாதத்தின் முன்னணி குரல் பின்வருமாறு தீர்மானிக்கிறது: "நாங்கள் [போலன்ஸ்கிக்கு ஆதரவளிப்பவர்களுடன்] முழுமையாக முரண்படுகிறோம். இந்த வழக்கிற்கும், திரு. போலன்ஸ்கியின் படைப்புகள் அல்லது அவருடைய வயதிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று குறிப்பிட்டு காட்ட தொடங்கி இருக்கும் மற்ற முக்கிய ஐரோப்பியர்களைப் பார்க்கும் போது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அது ஒரு குழந்தை மீதான மனித வேட்டையாக கருதப்படுகிறது. அந்த குற்றத்திற்காக திரு. போலன்ஸ்கி, அந்த வழக்கில் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறார். ஆகவே, அதற்கு பொறுப்பேற்று தான் ஆகவேண்டும்."

என்னவொரு அசிங்கமான முயற்சி! இதுபோன்றவொரு அத்தியாயத்திற்கு, இந்த வகையில் டைம்ஸ் கருத்துக்களை வெளியிடுவதற்கு ஓர் அரசியல் முக்கியத்துவம் இருக்கிறது. இது தீவிர வலதிற்கும், "குடும்ப மதிப்புக்களையும்", பிற அசிங்கமான சமூக பழக்கவழக்கங்களைக் கொண்டு வருபவர்களுக்கும் திட்டமிட்டு சலுகை காட்டுவதாகும். இதற்கு பொருந்தும் வகையில், தீவிர வலதுசாரி விமர்சகர் நியோல் ஷெப்பர்ட், டைம்சின் நிலைப்பாடு அவருக்கு திருப்தி அளிப்பதாக தெரிவித்திருந்தார். (இங்கே ஒரு பழமைவாத ஊடக ஆய்வான Bravo, NYT. Bravo விடம் இருந்து, இதுபோன்ற ஒரு கருத்தை உங்களால் அடிக்கடி கேட்க முடியாது)

எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களின் நிலைப்பாடு நிச்சயமாக வலுச்சேர்க்கும் என்பது டைம்ஸ் ஆசிரியர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே போலன்ஸ்கிக்கு எதிராக சூழ்நிலையை மேலும் மோசமாக்கவும், அதிகாரிகளிடம் இருந்து தன்னைத்தானே காப்பாற்றி கொள்வதற்கான அவரின் திறனுக்கு குழிதோண்டவும் இந்த ஆசிரியர் குழு உதவும். போலன்ஸ்கியை ஓநாய்களிடம் தூக்கி போட விரும்புவதை விட, டைம்ஸ் ஒருநாளைக்கு அதன் பிற்போக்குவாத விமர்சனங்களை நிறுத்தி கொண்டாலே போதுமானது.

அமெரிக்க தாராளவாதத்திடம் தற்போது எவ்வித கொள்கையோ அல்லது நீதியோ கிடையாது. மனிதாபிமானத்தை குறிப்பிடாமல் விட்டாலும் கூட, கொள்கைகளின் இந்த ஈனத்தனமான சரிவுகள், அமெரிக்காவில் மட்டும் தான் என்பதில்லை. ஐரோப்பாவில், பொதுமக்களின் கருத்தைத் திசைதிருப்ப ஒரு ஆழமான பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் போலன்ஸ்கியின் துயரத்திற்கு இரக்கம் காட்டிய பின்னர், இந்த இயக்குனருக்கு எதிராக பிரச்சாரம் திரும்பியது. மேலும், அங்கே, உத்தியோகப்பூர்வ "இடது" பிரதிநிதிகளால் இந்த விஷயத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கப்படுகிறது.

போலன்ஸ்கியின் கைது நடவடிக்கையின் மீது கருத்துக்களை வெளியிட்ட பிரெஞ்சு மந்திரிகளைக் கண்டித்த பாசிச லூ பென்னுடன், பசுமை கட்சியின் முன்னணி ஐரோப்பிய அரசியல்வாதியான Daniel Cohn-Bendit ம் பொதுவான தூண்டுதலை அளித்திருக்கிறார். 1968ல், இழிவார்ந்த "Danny the Red" ஆக அலைந்து கொண்டிருந்த இந்த Cohn-Bendit, அவரின் கடந்த 40 ஆண்டுகளின் பெரும்பகுதியை இளமை கால திமிர்த்தனங்களுக்கு பரிகாரம் செய்வதில் கழித்தார். பழைய பிரெஞ்சு பொன்மொழியான "30க்கு முன்னால் புரட்சியாளனாக இரு; அதற்கு பிறகு ஒரு பன்றியைப் போல இரு" என்பதற்கு இவர் பொருத்தமாக உள்ளார்.

நீதி கொடுத்தாக வேண்டும் என்று டைம்ஸ் மற்றும் பிற ஊடகங்கள் ஒருமித்த குரலில் ஓலமிடுகின்றன. அவர்களின் போலித்தனத்திற்கு எந்த எல்லையும் தெரிவதில்லை. ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் அமைப்பும், "நாடு முன்னோக்கி நகர்ந்தாக வேண்டும்" என்பதற்காக, நிuணீஸீtஊஸீணீனீஷீ, கிதீu நிலீக்ஷீணீவீதீ, ஙிணீரீக்ஷீணீனீ -- போன்ற, சர்வதேச வலையமைப்பில் இருக்கும் "நிழல் இடங்களில்'', சட்டவிரோதமாக கைது செய்து பாலியல் பலாத்காரம், சித்திரவதை, சில நேரங்களில் கொலையும் கூட செய்த அல்லது செய்துகொண்டிருக்கும் CIA மற்றும் இராணுவ கிரிமினல்களின் கொடுமையான நடவடிக்கைகளுக்காக தண்டிக்காமல் கூட விட்டுவிடலாம் என்று ஒத்து கொண்டிருக்கிறது.

ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், டிக் செனி, டோனால்டு ரம்ஸ்பெல்ட் மற்றும் ஏனையோரும் ஒரு ஆக்கிரமிப்புப் போரை உண்டாக்கினார்கள், ஒரு கணக்கெடுப்பின்படி, 2003ல் இருந்து நூறாயிரக்கணக்கான ஈராக்கியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். பல்வேறு அரசியல்ரீதியான கிரிமினல் குற்றங்களுக்கு சார்பாக பேசுவதற்காக பணக்குவியலைப் பெற்று வரும் மனிதர்களின் கைகளில் இருந்து தான் இரத்தம் சொட்டுசொட்டாக விழுந்து கொண்டிருக்கிறது. இந்த மனிதர்களை கைது செய்வது குறித்தோ, இவர்கள் மீது வழக்கு தொடுப்பது குறித்தோ டைம்ஸ் இதழ் ஒருபோதும் வலியுறுத்தியதில்லை.

போலன்ஸ்கி மீது கருணை காட்டும் எந்த வெளிப்பாட்டையும் மதிப்பிழக்கவைக்க மற்றும் சட்டவிரோதமானதாக ஆக்கும் முயற்சியில், டைம்ஸூம், வலதுசாரி கும்பலும், போலன்ஸ்கியை திடீரென பிடித்ததற்கும், சிறையில் அடைத்ததற்கும் காட்டப்படும எதிர்ப்பானது, அவர் 1977ல் ஒரு 13 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்தார் என்ற உண்மையை உதாசீனப்படுத்துவதைத் தான் குறிக்கிறது என்று குறிப்பிடுகின்றன. போலன்ஸ்கி ஒரு பிரபலமான கலைஞர் என்பதாலேயே மட்டும் நாங்கள் இந்த கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. (இந்த உண்மை அவ்வளவு முக்கியமில்லை என்று அவரின் பிற்போக்குத்தனமான வழக்கறிஞர்கள் தற்போது கூறுவது போல, நாங்கள் இந்த உண்மையை கூறத் தயங்கப்போவதில்லை) அமெரிக்க சிறைச்சாலைகளில் இருக்கும் சுமார் இரண்டு மில்லியன் மனித உயிர்களில் எத்தனை பேர், "நடைமுறையில் இயல்பாக" நடக்கும் ஒழுக்ககேட்டை விட சமூக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்?.

சந்தேகத்திற்கு இடமில்லாமல், ரோமன் போலன்ஸ்கி ஒரு மிகப் பெரிய செல்வந்தர் தான். அவர் செய்த நடவடிக்கை, மீதமிருக்கும் அவரது மகிழ்ச்சியற்ற வாழ்க்கையில் "அதிர்ச்சிகரமான வேறெதையும் செய்துவிடப் போவதில்லை" என்று நீதிநெறியாளர்கள் தற்போது கூக்குரலிடுவதைப் போல வாதிடுவது நகைப்புக்கிடமானதாகும்.

கிடைத்திருக்கும் விபரங்களின்படி, அவரது ஆரம்பகால வாழ்க்கையின் சம்பவங்கள் சற்று வித்தியாசமாகத் தான் இருக்கின்றன. அவை எல்லாம் அதன் ஆழ்ந்த சோகமான பாத்திரத்தை எடுத்துக்காட்டுகின்றன. ஒரு யூத தந்தைக்கும், ரோமன் கத்தோலிக்க அன்னைக்கும் 1933ல் போலன்ஸ்கி பாரிசில் பிறந்தார். அவருக்கு மூன்று வயது இருந்த போது, அவரது குடும்பம் போலந்தில் உள்ள கிரகோவ்விற்கு நகர்ந்தது. 2005ல் Guardian ல் வெளியான தகவலின்படி, "ஜேர்மனியர்கள் போலந்தை ஆக்கிரமித்த போது, போலன்ஸ்கியின் குடும்பம் ghetto ல் சிறை வைக்கப்பட்டது. 1943ல் பொதுமக்களை வெளியேற்றும்படி நாஜிக்கள் உத்தரவிட்டனர். முறுக்கு கம்பி வேலியைச் சிறிது வெட்டி ஓட்டை ஏற்படுத்திய அவரது தந்தை, ஒரு குடும்பத்தின் பெயரைச் சொல்லி, அவர்களுக்கு தான் பணம் கொடுத்திருப்பதாகவும், அவர்கள் அவரை பார்த்து கொள்வார்கள் என்றும், ஆகவே உடனே தப்பி ஓடிவிடும்படியும் பயந்திருந்த ரோமனைக் கேட்டு கொண்டார். SS அதிகாரிகள் யூதர்களை வரிசையில் நிற்க கட்டளையிட்ட நேரத்தில், ஓடி விடு என்று அவரது தந்தை அவரைப் பார்த்து கத்தினார். ரோமன் பின்னால் திரும்பி பார்க்காமல் ஓடத் தொடங்கினார்."

"அவரது தாயார் (Auschwitz ல் உள்ள) ஒரு விஷவாயு அறைக்குள் கொல்லப்பட்டதையும், அவரது தந்தை ஒரு கற்குவாரியில் அடிமைத் தொழிலாளியாக ஆக்கப்பட்டதையும், அவர் உயிர் பிழைத்து கொண்ட பின்னரே அறிந்துகொண்டார். வாயில் கையைச் சூப்பிக் கொண்டே, நாட்டுப்புறங்களில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த அந்த பையன், நண்பர்களாலும், வழிப்போக்கர்களாலும் வளர்க்கப்பட்டான்."

Independent இதழ் பின்வருமாறு குறிப்பிட்டது; ''இளைஞராக இருந்த போது, (இதுவும் 2005ல்) பிரபல திரைப்பட கல்லூரியில் போலன்ஸ்கிக்கு ஓர் இடம் கிடைத்தது. இங்கு வெளியான அவரின் குறும்படங்கள் அவரை ஓர் எதிர்கால திறமையாளராக எடுத்துக்காட்டியது. இடையில் ஒருமுறை, மூன்று கொலைகள் செய்திருந்த ஒர் கொலைகாரனிடமிருந்து அவர் மயிரிழையில் தப்பினார். வாழ்க்கையில் என்ன வீச்சை அவர் சந்தித்தாலும், அவர் உயிர்வாழ வேண்டும் என்பது போலன்ஸ்கியி மரபணுவில் தெளிவாக பதிவாகி இருந்தது போலும்.

"ஆனால், அவரின் நேசத்திற்குரியவர்களைப் பொறுத்த வரையில், அது அவ்வாறு இல்லை. 1969ல், அவரின் இரண்டாவது மனைவி ஷரோன் டெட்டும், அவரது நான்கு நண்பர்களும் சார்லஸ் மேன்சன் மற்றும் அவரின் ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டனர். ஷரோன் டெட் அப்போது, அவர்களின் எட்டு மாத முதல் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தார் என்ற உண்மையும் அந்த கொடுமையில் அடங்கி இருந்தது... போலன்ஸ்கியின் தயாரிப்பு வடிவமைப்பாளர் (Macbethல்), அரங்கில் போலன்ஸ்கி நிறைய இரத்தக்காட்சிகளை பயன்படுத்துவதாக குறை கூறியதற்கு, அவர் பதிலளிக்கையில், "வன்முறையை நான் நன்கு அறிவேன். கடந்த கோடை காலத்தில் நீங்கள் என்னுடைய வீட்டை பார்க்கைவில்லையே" என்று கூறினார்.

அவரின் படைப்புகளில் வெளிப்படையாக பிரதிபலிக்கும் இதுபோன்ற கொடூரமான அனுபவங்களை, போலன்ஸ்கியின் மீதான குற்றச்சாட்டுக்கள் மீதும், அதற்காக அவர் குற்றவாளி ஆக்கப்பட்டிருப்பதற்கும் தொடர்புபடுத்தி பார்க்காமல் எப்படி இருப்பது? இந்த நேரத்தில் அவரை சிறை வைப்பதால் என்ன மதிப்பு கிடைத்துவிடும்? சமூகத்திற்கு அவர் அப்படி என்ன ஆபத்தை ஏற்படுத்தி விட போகிறார்?

மற்றொரு வெளிவேடமிடும் தாராளவாத தூணாக இருக்கும் லோஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், செப்டம்பர் 30ல் ("Polanski's Defenders Lose Sight of the True Victim" என்ற தலைப்பில்), Steve Lopez ன் ஓர் இழிவார்ந்த கட்டுரையைப் பிரசுரித்திருந்தது. பாதிக்கப்பட்டவரின் நிஜ குற்றப்பதிவு மூலத்தின் கொடூரமான விபரங்களின் பெரும்பகுதியை அது பிரசுரித்திருந்தது. நீதி நிறைவேற்றப்படுவதைப் பார்க்க வேண்டும் என்ற பெயரில், வலதுசாரி பட்டறைக்கு இது பரந்த காமவெறி களிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுமக்களின் அடிப்படை உள்ளுணர்வுகளுக்கு முறையீடு செய்வதற்கான ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் வரவேற்கும் அமெரிக்க ஊடகத்தில் இருக்கும் ஒரு போக்கிரி தான் இந்த Lopez.

போலன்ஸ்கி குற்றத்தால் பாதிக்கப்பட்டவரான Samantha Geimer, (தற்போது இவருக்கு வயது 44), ஊடகத்தின் இதுபோன்ற நடவடிக்கைக்காக அவற்றை பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார். 2003ல் ஒரு தலையங்க பக்கத்தில் எழுதும் போது, போலன்ஸ்கியின் எதிரிகளை விட அதிகமான மனிதாபிமானத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். "அவர் மீண்டும் திரும்பி வர வேண்டுமா? அவர் இனியும் தப்பி ஓட வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன், சுதந்திரமாக பயணம் செய்யலாம். தனிப்பட்ட முறையில், அப்படி நடப்பதைப் பார்க்க தான் நான் விரும்புகிறேன். அவரை தப்பியோட செய்யும் நிலைமைக்கு, அவரே மீண்டும் கொண்டு செல்ல மாட்டார் என்று நான் நினைக்கிறேன். நாம் எல்லோரும் நினைத்தது போல, அவருக்கு தண்டனை கிடைத்திருந்தால் இந்நேரம் 25 ஆண்டுகள் ஓடியிருக்கும். அந்த நேரத்தில், என்னுடைய வழக்கறிஞர் லாரன்ஸ் சில்வர், விவாத உடன்பாடு ஏற்றுகொள்ளப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார். மேலும் அந்த குற்ற வழக்கு மட்டுமே எங்களைத் திருப்திபடுத்த போதுமானதாக இருந்தது. என்னுடைய மனதை நான் மாற்றி கொள்ளவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

76 வயதுடைய ஓர் அசாதாரண கலைஞரை, அமெரிக்காவிடம் குற்றவாளியென ஒப்படைப்பது பற்றி டைம்ஸ் சிறிதும் கவலைப்படவில்லை. மேலும் இந்த தவிர்க்கவியலாத ஊடக நாடகம், பெரும் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். மோசமான நிலைமைகள் ஏற்பட்டால், இந்த ஆசிரியர் குழுவிற்கு அதில் பங்கு இருக்கிறது