World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bailed out insurance giant AIG plans $198 million in new bonuses

பிணை எடுக்கப்பட்ட AIG காப்பீட்டுப் பெருநிறுவனம் 198 மில்லியன் டாலர் புதிய மேலதிக கொடுப்பனவுகளை கொடுக்க திட்டமிடுகிறது

By Andre Damon
17 October 2009

Use this version to print | Send feedback

மத்திய அரசாங்கத்திடம் இருந்து 200 பில்லியன் டாலரை பிணை எடுப்பு நிதியாக பெற்ற அமெரிக்க இன்டர்நேஷனல் குழு (AIG), அதன் நிதியப் பொருட்கள் பிரிவில் உள்ள 400 ஊழியர்களுக்கு மற்றுமொரு 198 பில்லியன் டாலரைக் கொடுக்க இருப்பதாக புதனன்று பிரச்சனைக்குரிய சொத்துக்கள் உதவித்திட்டத்தின் (TARP, Troubled Asset Relief Programme) சிறப்புத் தலைமை ஆய்வாளர் நீல் பாராப்ஸ்கி வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

ஒபாமா நிர்வாகத்தின் பிணை எடுக்கப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகிகள் ஊதியங்களுக்கு "ஊதியச் சக்கரவர்த்தியான" Kenneth Feinberg "அதிகாரபூர்வமற்ற முறையில்" நிறுவனத்தை மேலதிககொடுப்பனவுகளை கொடுக்க வேண்டாம் என்று ஆலோசனை கூறியுள்ளதாக அறிக்கை கூறுகிறது. Feinberg சட்டபூர்வமாக மேலதிககொடுப்பனவுகளை தடுக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கவில்லை என்று வெள்ளை மாளிகை கூறுகிறது. ஏனெனில் இப்பொழுது பெரிதும் அரசாங்கத்திற்கு சொந்தமாக இருக்கும் நிறுவனங்களின் மேலதிககொடுப்பனவுகளை கட்டுப்படுத்தும் சட்டங்கள் முன்னாலேயே பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டவை ஆகும்.

"தக்கவைத்தல் மேலதிககொடுப்பனவுகள்" (retention bonuses) என்ற முறையில் AIG ஊழியர்களுக்கு அதன் நிதிப் பொருட்கள் பிரிவில் 475 மில்லியன் டாலரை கொடுக்கத் திட்டமிட்டுள்ளது. இது 2008, 2009 ஆண்டுகளுக்கானவையாக இருக்கும். இதில் மார்ச் 2009 க்கான 168 மில்லியன் டாலரும் மார்ச் 2010க்கான 198 மில்லியன் டாலரும் பல கால இடைவெளிகளில் கொடுக்கப்படும் சிறு தொகைகளும் அடங்கும். நிறுவனத்தின் அனைத்து எஞ்சிய 4,800 ஊழியர்களின் மொத்த தக்கவைக்கும் மேலதிககொடுப்பனவுகள் 600 மில்லியன் டாலருக்கு மேலாக இருக்கும்.

AIG 13 வெவ்வேறு மேலதிககொடுப்பனவு திட்டங்களைக் கொண்டிருந்தது என்றும், இதன் பல விவரங்களை நிர்வாகிகளே முழுமையாக அறியவில்லை என்று அறிக்கை குறிப்பிடுகிறது. அதற்கு பல பில்லியன்களை உதவியாக அளிப்பதற்கு முன்பு, AIG மேலதிககொடுப்பனவு முறை பற்றி "விரிவான தகவலை" மத்திய அரசாங்கம் பெறாததற்காக Barofsky குறகூறியுள்ளார்.

நிதி அமைச்சரகம் "பரந்த அளவில் ஒப்பந்த முறைப்படி தக்கவைத்தல் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் நவம்பர் 2008ல் கொடுக்கப்பட வேண்டும் என்று இருந்ததை" அறிந்திருந்தது என்று அவர் எழுதியுள்ளார்; ஆனால் ஊதியத்தில் குறைப்புக்கள் செய்யப்பட வேண்டும் அல்லது முழு விவரங்கள் பற்றி அறிய அது நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த ஆண்டு தங்கள் மேலதிக கொடுப்பனவுகள்பற்றி மக்கள் சீற்றத்தை குறைக்கும் வகையில் சில பணத்தை திரும்பக் கொடுப்பதாக உறுதியளித்த AIG வணிகர்களும் நிர்வாகிகளும், தாங்கள் உறுதியளித்ததைவிட மிகக் குறைவாகத்தான் திருப்பிக் கொடுத்தனர்.

மார்ச் மாதம் நடைபெற்ற காங்கிரஸ் குழு விசாரணையில், AIG யின் தலைமை நிர்வாக அதிகாரி எட்வார்ட் லிட்டி வணிகர்கள் பாதி மேலதிககொடுப்பனவுகளை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். "சிலர் 100 சதவிகிதத்தையும் கொடுத்துவிட்டனர்" என்றும் குறிப்பிட்டார் இறுதியில் அவர்கள் கால் பகுதியை கொடுக்க உறுதி கொடுத்தனர் ஆனால், இதுவரை 45 மில்லியன் டாலர் உறுதியளிக்கப்பட்ட தொகையில் 19 மில்லியன் டாலர்தான் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது.

AIG மேலதிககொடுப்பனவுகள் அளிக்கக்கூடாது என்னும் Feinburg ன் கருத்து பொருளற்றது ஆகும். வங்கியாளர்கள் தங்கள் பணத்தைப் பெறுவர், ஒபாமா நிர்வாகம் அவர்கள் அவ்வாறு பெறுவதை அனுமதிக்க இயன்றதைச் செய்யும்.

AIG இன் திட்டங்கள் 2008 இரண்டாவது பகுதி மேலதிககொடுப்பனவுகள் கொடுத்தல் மார்ச் மாதம் வெளிப்படையாக அறியப்பட்டபோது, பிரதிநிதிகள் சபை பொதுமக்கள் சீற்றத்திற்கு விடையிறுக்கும் வகையில் ஒரு சட்ட வரைவை இயற்றினர். அதில் 90 சதவிகித வரி மத்திய அரசின் உதவியைப் பெறும் நிறுவனங்களின் மேலதிககொடுப்பனவுகளுக்கு சுமத்தப்பட்டது. அதே போன்ற மற்றொரு சட்ட வரைவு செனட்டில் தாமதப்படுத்தப்பட்டது. அதற்கு காரணம் வெள்ளை மாளிகையின் எதிர்பபு ஆகும். இதன் பின் பிரச்சினை முழுவதும் கைவிடப்பட்டது.

உண்மை என்னவென்றால் ஒபாமா நிர்வாகம் வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் கொடுக்கும் மேலதிககொடுப்பனவுகளில் வரம்பு விதிக்க விரும்பவில்லை. முடிந்தபோது எல்லாம் ஒபாமா நிர்வாகம் நிர்வாக ஊதியத்தின் மீது வெளிப்படையாக தடைகளுக்கு எதிர்ப்பைக் கூறியுள்ளது. இது நெருக்கடிக்கு காரணமானவர்களே எப்பொழுதும் இல்லாத அளவிற்கு சிறந்த நலன்களை பெறுகின்றனர் என்பதை நடைமுறையில் காட்டுகின்றது.

இத்தோடு ஒட்டிய தன்மையில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெள்ளியன்று பாங்க் ஆப் அமெரிக்காவில் வெளியேறும் தலைமை நிர்வாகி கென் லெவிசை இந்த ஆண்டு அவர் பெற்ற 1 மில்லியன் டாலர் நடைமுறையில் மேலதிககொடுப்பனவு பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு Feinberg, கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளது. இதைத்தவிர அவர் உறுதியளித்திருந்த மற்றும் ஒரு 1.5 மில்லியன் டாலரும் திரும்பக் கேட்கப்பட்டது.

லெவிஸ் திருப்பிக் கொடுக்கும் பணம் அவருடைய ஓய்வூதிய தொகுப்பான 53.2 மில்லியன் டாலர் ஓய்வூதியநலன்கள், 10.6 மில்லியன் டாலர் தாமதமாக வந்த ஊதியங்கள் மற்றும் 5.5 மில்லியன் டாலர் தடைக்குட்பட்ட பங்குகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது அற்பமானது ஆகும். இதைத்தவிர வங்கியில் அவர் இருந்த காலத்தில் கொடுக்கப்பட்ட பல மில்லியன் டாலர்கள் மதிப்புடைய பங்குகளும் உண்டு.

லெவிசின் ஓய்வூதியத் தொகுப்பு Feinberg அதை மேற்பார்வையிடும் முன்னரே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்று கூறியவிதத்தில் கேட்கப்படும் அற்பத் தொகையை அவர் நியாயப்படுத்தியுள்ளார். சிறு தொகைகள் கோரப்பட்டாலும், இந்த நடவடிக்கை Feinberg எடுத்த அதிக பரபரப்பான நடவடிக்கை ஆகும்.

கடந்த ஆண்டு பாங்க் ஆப் அமெரிக்கா கூட்டாட்சி உதவித் தொகையாக 45 பில்லியன் டாலரை பெற்றது; அதைத்தவிர இழப்புக்கள் பற்றி உத்தரவாதங்கள் 100 பில்லியனுக்கு மேல் அதன் இருப்புக்களுக்கு கொடுக்கப்பட்டன. இது அரசாங்கத்தால் முதலீடு செய்துள்ள பணத்தை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை.

தன்னுடைய அதிகார வரம்பற்குட்பட்ட 7 நிறுவனங்களின் 175 உயர்மட்ட ஊழியர்களின் ஊதியத்தை பரிசீலிக்கும் பொறுப்பை Feinberg கொண்டுள்ளார். அக்டோபர் இறுதிக்குகள் இந்நிறுவனங்களின் ஊதிய நடவடிக்கைகள் பற்றிய அவர் பரிசீலனை கிடைக்கும்.

வங்கியின் மதிப்பை காக்க வேண்டும் என்றும் Feinberg ன் அக்கறை, உதாரணமாக ரொக்கத்திற்கு பதிலாக பணத்தை பங்குகள் மூலம் கொடுக்க வேண்டும், மற்றும் கூட்டாட்சி விதிகளைச் சுற்றிச் செல்லும் விதத்தில் வழிவகைகளை கண்டறிதல் ஆகியவற்றிற்கு அழைப்பாக உள்ளது. சிட்டிக்ரூப் தன்னுடைய விசை வணிக பிரிவை விற்பதற்கு Feinberg அனுமதித்தார். இதற்கு காரணம் அது அதன் வணிக அமைப்புக்களில் ஒன்றான AndrewHall க்கு இந்த ஆண்டு 100 மில்லியன் டாலர் இழப்பீடாக கொடுக்க வேண்டும்.

நிதிய நெருக்கடிக்குக் காரணமானவர்கள் பொதுப்பணத்தை கொண்டு மேலதிககொடுப்பனவுகளை பெறுகின்ற நிலையில் பேசாமல் இருக்கும் ஒபாமா நிர்வாகத்தின் முடிவு அதன் மற்ற நடவடிக்கைகளுடன் மிகவும் சரியான முறையில் ஒத்து இருக்கிறது. இந்ந வாரம் வெளிநாட்டில் இருந்து வரும் இலாபங்கள் மீது வரிகளை உயர்த்துவது என்ற பேச்சுக்கள் அனைத்தையும் நிர்வாகம் கைவிட்டுவிட்டது.

இதற்கிடையில் அமெரிக்க மக்களுடைய வாழ்க்கை நிலைமை முன்னோடியில்லாத அளவிற்கு சரிந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் குறைந்தபட்ச ஊதியத் தரத்தை நான்கு சென்டுகள் குறைத்து 7,24 டாலர் என்று ஆக்கிய முதல் மாநிலமாக கொலோராடோ ஆயிற்று.

USA Today சராசரி வாராந்திர ஊதியங்கள் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து 1.4 சதவிகிதம் குறைந்துவிட்டது என்று கூறியுள்ளது. இது பணவீக்கத்திற்கு ஏற்ப மாறுதல்களை கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னர் வந்துள்ள புள்ளிவிவரம் ஆகும். தற்போதைய விகிதப்படி பார்த்தால் இது 1991க்கு பின்னர் மிகப் பெரிய வருடாந்த சரிவாக இருக்கும்.