World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

French President Sarkozy backs Washington's hard line against Iran

ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் கடும் நிலைக்கு பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி ஆதரவு தருகிறார்

By Antoine Lerougetel
20 October 2009

Use this version to print | Send feedback

பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு எதிரான ஆக்கிரோஷக் குரல் அமெரிக்கச் செய்தி ஊடகத்தினால் வியப்புமேலிடவும் திருப்தியுடனும் வரவேற்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் கடினப் போக்கிற்கு சார்க்கோசியின் ஆதரவு பிரெஞ்சு ஏகாதிபத்தியம் தன்னுடைய உலகளாவிய இராணுவ, புவிஅரசியல் நிலையை விரிவாக்கிக் கொள்ளும் பரந்த முயற்சியின் ஒரு பகுதி ஆகும். இதில் காஜகஸ்தான் மற்றும் டிபுத்தி (Djibouti) தலையீடுகளும் அடங்கும்.

அக்டோபர் 1ம் தேதி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்தது: "கடந்த வாரம் நியூ யோர்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொது மன்றக் கூட்டத்தில் [சார்க்கோசி] தன் சொல்லின் கடுமையை அதிகமாக்கிக் கொண்டு, வரவேற்பளிக்கும் கைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்றும் ஒபாமாவிற்கு சவால் விடுதல் என்ற வகையில் பதிலுக்கு அவர்களிடம் இருந்து சைகளை எதிர்ப்பார்ப்பது தேவையா என்றார்." சார்க்கோசி குறிப்பாக, "இதற்கிடையில் பிரிவினை சக்திகள் மாறிக் கொண்டிருக்கின்றன" என்று கூறியதாக போஸ்ட் சுட்டிக் காட்டியுள்ளது.

செப்டம்பர் 29 பதிப்பில் "பிரெஞ்சு அணு சீற்றம் " என்ற தலைப்பில் வந்த கட்டுரை ஒன்றில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் "உலகப் பாதுகாப்பிற்கு எதிரான மகத்தான சவால்களை எதிர்கொள்வதில் பிரான்சின் ஜனாதிபதி அமெரிக்க தலைமைத் தளபதியைவிட கூடுதலான உறுதியைக் காட்டும் நாளை ஒருபோதும் நாம் பார்க்கப்போவதில்லை என நினைத்தோம். ஆனால் இப்பொழுது அதைத்தான் காண்கிறோம்." என்று எழுதியது.

ஈரானில் முதல் மற்றும் நான்காவது மிக அதிக முதலீட்டாளர் நாடுகளாக ஜேர்மனியும் பிரான்ஸும் முறையே உள்ளன. அமெரிக்காவில் இருந்து உறுதியான சுதந்திரம் வேண்டும் என்ற கோலிச தேசிய மரபில் இருந்து சற்றே முறித்துக் கொண்டிருக்கும் சார்க்கோசி, அமெரிக்காவுடனான நெருக்கமான ஒத்துழைப்பு மூலம் தான் ஈரானிலும் உலகளவிலும் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் நலன்களை சிறந்த வகையில் பேணமுடியும் என்ற முடிவிற்கு வந்துள்ளார். இதன் பொருள் இப்பகுதியின் மூலப் பொருட்களைச் சுரண்டுவதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்கா தலைமையிலான புதிய காலனித்துவ போர்களில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்பதாகும். டு கோல் 1966ல் விலகியதற்கு தலைகீழான வகையில் பிரான்சை மீண்டும் நேட்டோ அமைப்பின் கட்டுப்பாட்டின்கீழ் மறுபடி இணைக்க எடுக்கப்பட்ட முடிவு, மரபார்ந்த கோலிசத்தில் இருந்து சார்க்கோசி எடுத்த மாற்றத்தின் ஒரு பகுதி ஆகும்.

பிரெஞ்சு ஜனாதிபதியின் வெளியுறவுக் கொள்கை பெரும் சக்திகளிடையே உலகின் சக்தி வளங்களுக்கான புவி மூலோபாயப் போட்டியின் உக்கிரத்தினால் உந்ததுதல் பெறுகிறது; ஐரோப்பாவும் அமெரிக்காவும் பெருகிய முறையில் சீனாவால் சவால்செய்யப்படுகின்றன. உலகப் பொருளாதார நெருக்கடி இந்த வழிவகையை விரைவுபடுத்தியுள்ளது. இந்த பரபரப்பான போட்டியின் முக்கியமான இலக்கு மத்திய ஆசியா மற்றும் காஸ்பியன் கடல் பகுதியில் மிகப் பரந்த எண்ணெய், எரிவாயு மற்றும் பிற மூலோபாய இருப்புக்களுக்காக என்று உள்ளது.

ஜூலை 2008ல் பிரான்சின் அடுத்த 15 ஆண்டுகளில் இராணுவத் திட்டங்களைக் கோடிட்டுக் காட்டும் வெள்ளை அறிக்கை ஒன்று, "அட்லான்டிக்கில் இருந்து மத்தியதரைக் கடல் வரை, அரேபிய பாரசீக வளைகுடா மற்றும் இந்திய பெரும் கடல் வரையிலான முன்னுரிமை உடைய புவியியல் அச்சைக் கொள்வது" என திட்டமிட்டது. அந்த அறிக்கை தொடர்ந்து கூறியது: "இந்த அச்சு பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் மூலோபாய நலன்கள் அதிகம் ஆபத்துக்குள்ளாக்கப்பட்டிருக்கும் பகுதிகளுடன் ஒத்திருக்கிறது."

சார்க்கோசி, ஈரானுக்கு எதிரான தன்னுடைய கடுமையான நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில், அமெரிக்காவிடம் அதிக உறுதி இல்லை என்று இஸ்ரேல் நினைத்தால், தானே ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது வான்வவழித் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று கூறியுள்ளார்--இது சொல்லொணா விளைவுகள் கொண்ட நடவடிக்கையாகும். தற்போதைக்கு பொருளாதாரத் தடைகள் என்ற அச்சுறுத்தல், குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் மீதான தடை, ஜனாதிபதி மஹ்முத் அஹ்மதினெஜாட்டின் அரசாங்கத்தை ஈரானின் அணுசக்தி திட்டங்களை கைவிட நிர்பந்திக்கும் முயற்சியாக எழுப்பப்பட்டு வருகிறது.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈராக்கில் இப்போது நடப்பது போல், அமெரிக்கப் பெருநிறுவனங்கள் ஈரானின் எண்ணெய் எரிவாயு இருப்புக்களை பயன்படுத்துவதற்கு வளைந்து கொடுக்கக்கூடிய ஆட்சி ஒன்றை தோற்றுவிப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதலுக்கு ஒரு சாக்குப்போக்காக, ஈரான் ஒருவேளை அணுசக்தி ஆயுதங்களை அபிவிருத்தி செய்யும் திறனுடையது என்ற அதன் சாத்தியம் மிகைப்படுத்தப்பட்டு வருகிறது.

சார்க்கோசியின் ஈரானிய எதிர்ப்பு வனப்புரை பர்க்கா அணிவது தடைக்குட்படுத்தப்பட வேண்டும் என்னும் அவருடைய இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்துடன் இணைந்த தன்மையைத்தான் கொண்டுள்ளது. இரண்டுமே பிரெஞ்சு மக்களின் பொதுக்கருத்தை மாற்றி, பிரான்சின் பெருகும் இராணுவவாதத்திற்கு ஆதரவு திரட்டும் நோக்கத்தை கொண்டவை. கடந்த வசந்த காலத்தில் வெளிவந்த கருத்துக் கணிப்பு ஒன்று ஆப்கானிஸ்தானிற்கு படைகள் அனுப்பப்படுவதை 65 சதவிகித பிரெஞ்சு மக்கள் எதிர்த்தனர், 15 சதவிகிதத்தினர் மட்டுமே ஆதரவு காட்டினர் என்று கூறியது.

அதே நேரத்தில் ஒரு உறுதியான ஈராக்கை தோற்றுவிப்பதில் அமெரிக்கா அடைந்துள்ள தோல்வி --இப்பொழுதும் அந்ந நாட்டில் உள்ள 120,000 அமெரிக்கத் துருப்புக்களை ஒரு இராணுவச் சதுப்பநிலத்தில் மாட்டி உள்ளன; மற்றும் ஆப்கானிய எதிர்ப்பை அடக்குவதில் அமெரிக்கத் துருப்புக்கள் கொண்டுள்ள பெருகிய இடர்பாடுகள் ஒபாமா நிர்வாகம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நம்பகத்தன்மையை பலவீனமாக்கியுள்ளன. அமெரிக்காவின் மற்ற போட்டியாளர்களைப் போலவே பிரான்ஸும் இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொள்ள முயல்கிறது.

சார்க்கோசியின் காஜக்ஸ்ஸ்தான் பயணம்

அக்டோபர் 6ம் தேதி சார்க்கோசி காஜக்ஸ்தானுக்குச் சென்றிருந்தார். அன்று Le Monde எழுதியது: "எல்லாவற்றிற்கும் மேலாக பிரான்ஸ் காஜக்ஸ்தானில் கொண்டுள்ள அக்கறை புவி மூலோபாயத் தன்மையை கொண்டது ஆகும். மத்திய ஆசியாவில் இந்நாடு தன்னுடைய சிறப்பு நட்பு நாடாக இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் விரும்புகிறது. எப்படி இலத்தின் அமெரிக்காவில் பிரேசில், ஆபிரிக்காவில் எகிப்து, மற்றும் ஆசியாவில் இந்தியா என்று இருக்கின்றனவோ, அவ்வாறு. ஆப்கானிஸ்தான போரிலும் முழுமையாக தொடர்பு கொண்டுள்ள பிரான்ஸ் அந்த நாட்டில் இருக்கும் 3,000 க்கும் மேற்பட்ட பிரெஞ்சு துருப்களுக்கான அளிப்புக்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. இதற்காக பாரிஸ் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

Le Monde குறிப்பிடும் புவி மூலோபாய நலன்கள் பெரிதும் நிதி, பாதுகாப்பு, இராணுவத் தளவாடங்கள், சக்தி அளிப்புக்களை உறுதிப்படுத்துவனவாக உள்ளன. பிரெஞ்சு பெருவணிகத்தின் பிரதிநிதிகளும் சார்க்கோசியுடன் சென்றிருந்தனர். இரு நாடுகளும் 6 பில்லியன் டாலர் மதிப்புடைய 24 உடன்பாடுகளில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.

Le Monde சுட்டிக் காட்டுகிறது: "ரஷ்யாவை ஒதுக்கி தனக்குத் தேவையான ஹைட்ரோ கார்பன்களை பெற பாரிஸ் விரும்புகிறது. Total மற்றும் GDF Suez, கவலின்ஸ்கோயே (Khvalinskoye) எரிவாயு வயலை பயன்படுத்த தங்கள் பங்கை முறையாக ஏற்பாடு செய்தன. வருங்கால கவலின்ஸ்கோயே கடல் பகுதி எண்ணெய், எரிவாயுத்திட்டத்தை காஸ்பியன் கடல் பகுதியில் வளர்ப்பதற்கு அந்நிறுவனம் 25 சதவிகிதம் பணத்தை (1பில்லியன் யூரோவை) கொடுத்துள்ளது. இது கூட்டாக ரஷ்ய எண்ணெய் நிறுவனம் Lukoil, மற்றும் காஜக் நாட்டு நிறுவனமான KazMunai Gas இரண்டினாலும் செயல்படுத்தப்படும். 2016ல் உற்பத்தி ஆரம்பமாகும். இந்த வயலில் ஆண்டு ஒன்றிற்கு மூன்று டிரில்லியன் கன அடி எரிவாயு உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"பிரெஞ்சு நிறுவனம் Spie-Capag இன் தலைமையில் ஒரு கூட்டு நிறுவன அமைப்புக்கள் காஜக்ஸ்தானின் காஷகான் எண்ணெய் வயலை காஸ்பிய துறைமுகமான Aktau உடன் இணைக்கும் குழாய் திட்டத்தை (Yeskene-Kurik) கட்டமைக்க 1.2 பில்லியன் டாலர் மதிப்புடைய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன "

அக்டோபர் 6ம் தேதி Financial Times எழுதியது: "வரும் இரு தசாப்தங்களில், இப்பகுதி OPEC உலக எண்ணெய் சந்தைகளின் மீது கொண்டிருக்கும் மேலாதிக்கத்திற்கு எதிர்கனமாக முக்கிய பங்கை கொள்ள இருக்கிறது. உலகின் மிகப் பெரிய எண்ணெய் வயல்களில் ஒன்றான காஷகான், 2012ல் செயல்படத் தொடங்கிவிடும்; இறுதியில் 1.5 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை தயாரிக்கும்."

பிரான்சின் அணுசக்தி நிறுவனம் Areva, காஜக்ஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது; அங்கு ஏராளமான யுரேனிய இருப்புக்கள் உள்ளன அது பிரான்சிற்கு அதன் உற்பத்திக்காக 10 சதவிகிதம் அனுப்புகிறது. மற்ற வணிக ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன; இவற்றில் வான்வழி, போக்குவரத்து, இராணுத் தளவாடங்கள் காஜக் இராணுவத்திற்கு என்பவை அடங்கியுள்ளன.

கஜக்ஸ்தான் ஆப்கானிஸ்தானை எல்லையாகக் கொள்ளவில்லை; ஆனால் இரு மற்ற மத்திய ஆசிய நாடுகளான தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றுடன் எல்லைகளை கொண்டுள்ளது. இந்த நாடுகள் அனைத்துமே ஆப்கானிஸ்தானிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரில் முக்கிய நட்பு நாடுகள் ஆகும்; அமெரிக்காவிற்கு அங்குள்ள துருப்புக்களுக்கு தேவையானவற்றை அளிப்பதற்கு பாதைகளை கொடுக்கின்றன.

"ஆப்கானிஸ்தான், ஈரானில் உள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு கஜக்ஸ்தான் நமக்கு தேவை; தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ரஷ்யாவில் உள்ள நம் நண்பர்களுடன் புதிய உறவுகளை நிறுவுவதற்கும் தேவை" என்று சார்க்கோசி கஜக்ஸ்தானில் போக்குவரத்து உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டபின் கூறினார்.

Associated Press, அக்டோபர் 6ம் தேதி கொடுத்த தகவல்படி, "இந்த உடன்பாடுகள் பாக்கிஸ்தானுக்கு பதிலாக நேட்டோவிற்கு ஒரு முக்கிய மாற்றீட்டைக் கொடுக்கின்றன; அங்கு வாகனங்கள் மூலம் சாலையில் செல்லும் பொருட்கள் எழுச்சியாளர்களின் தாக்குதலுக்கு உட்படுகின்றன."

இப்பகுதியில் சீனா பிரசன்னமாகி இருப்பது அந்நாடு ஐரோப்பிய, அமெரிக்க போட்டியாளர்களின் இழப்பில் தன்னுடைய நலன்களை தொடரும் அதன் திறனை நிரூபிக்கிறது. அக்டோபர் 1ம் தேதி பைனான்சியல் டைம்ஸ் சுட்டிக் காட்டியது: "மத்திய ஆசியாவில் சீனா சமீப காலத்தின் தன் முதலீடுகளை அதிகரித்துள்ளது; குறிப்பாக காஜக்ஸ்தானில் இங்கு அது ஒரு பொது எல்லையை பகிர்ந்து கொள்கிறது. தன்னுடைய புவி அரசியல் நலன்களை ரஷ்யா, சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்னும் போட்டி சக்திகளுக்கு இடையே சமசீர் செய்து கொள்ள காஜக்ஸ்தான் முற்படுகிறது. ஆனால் பொருளாதார நெருக்கடி அதை சீனாவின் கரங்களுக்குள் மேலும் நம்பியிருக்குமாறு நிர்பந்தித்துள்ளது.

"சீனா இந்த ஏப்ரல் மாதம் காஜக்ஸ்தானுக்கு 10 பில்லியன் டாலர் கடன் கொடுத்தது; இது வருங்கால எண்ணெய் அளிப்புக்களை உறுதிபடுத்தவும் சீன தேசிய பெட்ரோலியக் குழு (CNPC) ஒரு சுதந்திர காஜக் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனமான Mangistaumunaigas இல் பங்குகளை பெறுவதற்கும் ஆகும். CNPC தன்னுடைய காஜக்ஸ்தானத்தில் இருந்து வரும் குழாய்த்திட்டத்தை அதன் வடமேற்கு எல்லைக்குள் விரிவாக்கவும் ஒரு புதிய மத்திய ஆசிய குழாய்திட்டத்தை, சீனாவிற்கு எரிவாயு கொண்டுவருவதற்கும் திட்டமிட்டுள்ளது.

ஒரு புவியியல் பகுப்பாய்வாளர், "அந்நாட்டில் இருக்கும் சீன முதலீட்டின் அளவைக் காணும்போது, பெய்ஜிங்கின் விருப்பத்திற்கு மாறாக ஒரு வெளிநாட்டுக் கொள்கையை கொள்வது என்பது இயலாதது போல் தோன்றுகிது" என்று கூறியதாக பைனான்சியல் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது.

டிபுத்தியில் உள்ள சோமாலி துருப்புக்களுக்கு பிரான்ஸ் பயிற்சி அளிக்கிறது.

ஐரோப்பிய விவகாரங்களுக்கான பிரெஞ்சு மந்திரியான Pierre Lellouche அக்டோபர் 9 -11 என மூன்று நாட்கள் Djibouti க்கு சென்றிருந்தார். இந்தப் பயணம் பிரான்சின் விரிவாக்கப்பட்ட இராணுவ நிலைகொள்ளல் அந்தப் பகுதியில் இருப்பதை கோடிட்டுக் காட்டுகிறது; ஐரோப்பிய ஒன்றியம் தன்னை அமெரிக்காவுடன் போட்டியிடக்கூடிய உலக இராணுவ சக்தி என்று நிறுவிக்கொள்ள முற்படும் உந்ததுலையும் காட்டுகிறது. ஏடன் வளைகுடாவில் மூலோபாயமாக அமைந்துள்ள, பிரான்சின் மிகப் பெரிய வெளிநாட்டு இராணுவத் தளத்தையும் கொண்டுள்ள இந்த முன்னாள் பிரெஞ்சு காலனியான Djibouti மத்திய கிழக்கு எண்ணெய், எரிவாயுப் பகுதியின் தென் கோடியில் உள்ளது.

சோமாலியா கடற்பகுதியில் கொள்ளையரை எதிர்த்து நடத்தப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை நடவடிக்கையான அட்லாண்டா நடவடிக்கையிலும் (Operation Atlanta) பிரான்ஸ் அதிகம் ஈடுபட்டுள்ளது. Djibouti பகுதிகளுக்கு Lellouche பயணித்தபின் உத்தியோகபூர்வ தூதரக அறிக்கை ஒன்று கூறுகிறது: "ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல், பாதுகாப்புக்குழு (PSC)-ன் தூதர்களின் Djibouti விஜயத்துடன ஒத்துப்போகும் வகையில் அவரது பயணம், நம் ஐரோப்பிய பங்காளிகள் அனைவரும் ஒன்றுகூடி நின்று இப்பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த Operation Atlanta வை ஒரு ஐரோப்பிய அளிப்பாக நீட்டிக்க முயல வேண்டும். முதலில் இது சோமாலிய நாட்டை திடப்படுத்துவதின் மூலம்தான் முடியும். சோமாலிய பாதுகாப்புப் படைகளுக்கு பிரான்ஸ் பயிற்சி கொடுக்கும் முயற்சி, ஏற்கனவே இதன்படி Djibouti ல் 150 சோமாலிய சிப்பாய்கள் பயிற்சி பெற்றுவிட்டனர்; இந்த கட்டமைப்பின் கீழ்தான் உள்ளது. இப்பகுதியில் உள்ள நாடுகளில் இருக்கும் கடலோரப் பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சி, கருவிகள் கொடுத்து அவற்றின் கடற்படைத் திறனை வலுவாக்கவும் செயல்பட்டு வருகிறோம்."

இப்பொழுது பிரான்ஸ் ஷேக் ஷரிப் ஷேக் அஹ்மத்தின் ஆட்டம் கொண்டிருக்கும் மாற்றுக்கால சோமாலி அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுக்கும் ஜனாதிபதி காவலர் படையாக செயல்பட 500 சோமாலி சிப்பாய்களுக்கு Djibouti பாலைவனப்பகுதியில் பயிற்சி கொடுத்த வருகிறது, இவ்வரசாங்கம் இஸ்லாமியப் போராளிகளுடன் உள்நாட்டுப்போரில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா பயிற்சி சிப்பாய்களுக்கு Amison (African Mission in Somalia) மூலம் ஆயுதங்கள், ஊதியங்கள் ஆகியவற்றைக் கொடுத்து வருகிறது. அவர்களுடைய மாத ஊதியம் 150 அமெரிக்க டாலர் ஆகும். பிரான்சின் நோக்கம் இந்த பாதுகாப்புப் படையை 3000த்திற்கு உயர்த்துவது ஆகும்.

ஏப்ரல் மாதம் பிரஸ்ஸல்ஸில் நடந்த நிதிதிரட்டும் மாநாடு ஒன்றில், நாட்டை உறுதிப்படுத்த 144.8 மில்லியன் யூரோக்கள் உறுதியளிக்கப்பட்டன; அவற்றுள் பெரும் பகுதி இராணுவத்திற்கு செலவிடப்படும். ஆகஸ்ட் 26ம் தேதி தூதர்கள் கூட்டம் ஒன்றில், சார்க்கோசி "எமது நுழைவாயிலான ஆபிரிக்காவில் அல் குவைடா ஒரு புகலிடத்தை நிறுவ பிரான்ஸ் அனுமதிக்காது" என்றார்.

Djibouti பிரெஞ்சுத் தளத்தில் உள்ள Camp Mariam இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர்களாக இருப்பவர்களை Lellouchd அழைத்து இராணுவப் பயிற்சி பெறுபவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரின் செலவுகளுக்கு அளிப்பு வேண்டும் என்று கோரினார். ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் உலகந் தழுவிய படரலுக்கு ஒரு சுதந்திரமான இராணுவ சக்தி பங்கு பெற வேண்டும் என்றும் அவர்களுடைய பங்குபெறுதலை நாடினார். "முதல் தடவையாக ஐரோப்பியர்கள் ஒரு தொலைதூரப் பகுதியில் தங்கள் நலன்கள் தொடர்புடைய இடத்தில் தாங்களே முடிவு எடுத்துக் கொள்ள முடியும்."

ஐரோப்பாவில் எங்கும் எதிர்ப்பு இல்லாதது, ஜேர்மனியின் இடது கட்சி, பிரான்சின் முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி போன்றவற்றிடம் இருந்து என்பது Le Monde யின் கருத்தான சோமாலியாவில் பிரான்சின் குறுக்கீடு என்பது "மக்கள் விவாதத்தில் சிறிதளவு பங்கைக் கூடப் பெறவில்லை.

2003 ல் ஈராக் படையெடுப்பிற்கு முன் "பழைய ஐரோப்பா", முக்கியமாக பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவை அமெரிக்க இராணுவத்தின்மீது தடைகொடுக்கும் செல்வாக்கை பிரதிபலிக்கிறது என்று கூறியவர்களுடைய கருத்து தவறு என்று நிரூபணம் ஆகியுள்ளது. 2003ல் அவர்கள் அமெரிக்க முடிவை எதிர்த்து தனியாகச் செல்லலாம் என்று நினைத்தனர். படையெடுப்பிற்கு ஒரு உத்தியோகபூர்வ ஐ.நா. ஆதரவு பெறுவது தங்கள் ஏகாதிபத்திய நலன்களுக்கு சிறந்த முறையில் உதவும் என்று நினைத்தனர். ஆனால் பழமொழி கூறுவது போல் ஏகாதிபத்தியங்களுக்கு நிலையான நண்பர்கள் கிடையாது; நிலையான நலன்கள்தான் உள்ளன.