World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German Greens to form coalition with CDU and FDP in Saarland

சார்லாந்தில் CDU, FDP உடன் ஜேர்மனியப் பசுமைவாதிகள் கூட்டணி அமைக்க உள்ளனர்

By Ludwig Weller
20 October 2009

Use this version to print | Send feedback

ஜேர்மனியின் மிகச் சிறிய மாநிலமான சார்லாந்தில் நடைபெற்ற தேர்தல்களை அடுத்து, ஜேர்மனியப் பசுமைவாதிகளின் வலது நோக்கிய போக்கு பழமைவாத கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU) மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சியுடன் (FDP) ஜமேய்க்கா கூட்டணி (Jamaica coalition) என்று அழைக்கப்படுவதை அமைக்கும் முடிவு ஒரு புதிய மட்டத்தை அடைந்துள்ளது.

மாநிலத் தலைநகரான Saarlouis இல் சமீபத்தில் நடந்த கட்சி மாநாட்டில் பசுமைவாதிகள் 78 சதவிகித பெரும்பான்மையில் CDU, FDP உடன் ஒரு கூட்டணி அமைக்க வாக்களித்தனர். இதையொட்டி மாநிலத்தில் மற்றொரு மாற்றீடான சமூக ஜனநாயகக் கட்சி, இடது கட்சியுடன் கூட்டணி என்பதை இது நிராகரித்துள்ளது.

பசுமைவாதிகளின் இந்த மாற்றம் அதன் ஆதரவாளர்கள் பலருக்கும் ஓரளவு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர்கள் இதுவரை கட்சியின் வலதுசாரிப் போக்கிற்கு ஆதரவு கொடுத்து வந்துள்ளனர். செய்தி ஊடகமும் பசுமைவாதிகள் இப்பொழுது மாநிலப் பிரதம மந்திரியாக இருக்கும் பீட்டர் முல்லர் (CDU) தன்னுடைய பதவியைத் தக்க வைக்கும் விதத்தில் தயாராகச் செயல்பட இருப்பது குறித்து வியப்பைத் தெரிவித்துள்ளன.

பசுமைவாதிகளால் முதலில் SPD பின்னர் இடது கட்சியுடன், அதைத் தொடர்ந்து CDU, FDP உடன் நடந்த ஆய்வு விவாதங்களில் ஐந்து கட்சிகளும் முக்கிய அரசியல் பிரச்சினைகளில் அடிப்படையான ஒற்றுமை உணர்வை கொண்டுள்ளனர் என்பது தெளிவு. பசுமைவாதிகளின் பாராளுமன்றக் குழுவின் துணைத்தலைவர் Willger-Lambert இருவகை பேச்சுவார்த்தைகளிலும் கட்சி "அதன் அடிப்படை பசுமைவாத நிலைப்பாடுகளை முழுமையாகச் செயல்படுத்த முடிந்ததாக வலியுறுத்தினார். பசுமைவாதிகள் பின்னர் "இரண்டு கிட்டத்தட்ட சமமான" சாத்தியங்களை பங்காளிகளாக கூடிய கட்சிகளிடம் இருந்து பெற்றனர்.

CDU, FDP உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற பசுமைவாதிகளின் உறுதியான உந்துதல் கூட்டாட்சி அரசியல் வட்டங்களில் இருந்து வந்தது. சார்லாந்தில் எப்படியும் பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதில் CDU உறுதியாக இருந்தது. அதுதான் புதிய CDU-FDP கூட்டணியின் கரத்தை வலுப்படுத்தும் என்று அவர்கள் நினைத்தனர். சார்லாந்தின்மீது கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளுதல், CDU, FDPக்கு பாராளுமன்றத்தின் மேல்பிரிவை (Bundesrat) தங்கள் பெரும்பான்மையைத் தக்க வைத்துக்கொள்ளுவதில் முக்கியமாகும். அதுதான் அதிபர் அங்கேலா மேர்க்கெல் (CDU) ஆட்சியை முழுக்காலத்திற்கும் நடத்த அனுமதிக்கும் என்பது அவர்கள் கருத்து.

இந்தக் காரணத்திற்காக CDU, FDP இரண்டும் பசுமைவாதிகளுக்கு புதிய மாநில நிர்வாகத்தில் பதவிகளைப் பொறுத்தவரையில் கணிசமான சலுகைகளை கொடுக்கத் தயாராக இருந்தன. பசுமைவாதிகள் மாநிலப் பாராளுமன்றத்தில் மாநிலத் தேர்தலில் 5.8 சதவிகித வாக்குகளை பெற்று மூன்று இடங்களைத்தான் பெற்றனர் என்றாலும், புதிய அரசாங்கத்தில் அவர்களுக்கு கல்வித்துறையும், சுற்றுச் சூழல், எரிசக்தி, உள்கட்டுமானம் என்னும் புதிய அமைச்சகமும் உள்ளடங்கலான இரண்டு மந்திரி பதவிகள் கொடுக்கப்படுகின்றன.

தேர்தல் முடிந்தவுடனேயே மாநிலத்தில் நிர்வாகத்தில் மாற்றும் இருக்கும் என்று தோன்றியது. இடது கட்சி விரைவில் SPD, பசுமைவாதிகளுடன் உடன்பாட்டைக் கண்டது. பின் இரு கட்சிகளுடனும் கூட்டணி அமைக்கத் தயார் என்று குறிப்பு காட்டியது. தேர்தலிலேயே வாக்காளர்கள் பதவியில் இருந்த பிரதம மந்திரி பீட்டர் முல்லரை (CDU) புறக்கணித்தனர். வாக்குகளில் CDU உடைய மொத்த பங்கு 34.5 சதவிகிதம் என்று குறைந்தது. இது 9.2 சதவிகிதம் பெற்றிருந்த FDP உடன் கூட்டணி அமைப்பதற்கு போதாது என்று இருந்தது. SPDயும் அதன் ஆதரவைப் பெரிதும் இழந்து 24.5 சதவிகித வாக்குப் பங்கைத்தான் பெற்றது. இடது கட்சியும் அதன் தலைவருமான ஒஸ்கார் லாபொன்டைனும் 21.3 சதவிகிதம் பெற்றனர். தன்னுடைய அரசியல் வாழ்வை லாபொன்டைன் சார்லாந்தில் தொடங்கி பல ஆண்டுகள் மாநிலத்தின் பிரதம மந்திரியாக இருந்தார். அப்பொழுது SPD யின் முக்கிய உறுப்பினராக அவர் இருந்தார்.

ஆயினும்கூட, பசுமைக் கட்சி FDP, CDU உடன் கூட்டு வைத்திருப்பது மிகவும் எதிர்பாராதது அல்ல. பசுமைவாதிகளின் கூட்டாட்சித் தலைவர் Cem Ozdemir சில காலமாகவே CDU உடன் உடன்பாடு கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருந்து, சார்லாந்தில் பசுமைவாதிகள் எடுத்த முடிவு வேலைத்திட்ட உடன்பாட்டின் தர்க்கரீதியான விளைவிலான ஒரு பெரும் வெற்றி என்று அறிவித்தார். ஜேர்மனிய வானொலியான Deutschlandfunk இடம் Ozdemir "பல கூட்டணி உடன்பாடுகளைக் கண்டுள்ளேன், அனுபவித்துள்ளேன். ஆனால் இங்கு உறுதியாக்கப்பட்டது ஒரு முன்னோடியில்லாத தன்மையைக் கொண்டுள்ளது'' எனக்கூறினார்.

பசுமைவாதிகளின் கூட்டாட்சி நிர்வாக மேலாளர் Steffi Lemke யும் பசுமைவாதிகளின் சார்லாந்து தலைவரான Hubert Ulrich க்கு உறுதியாக ஆதரவு கொடுத்தார். Süddeutsche Zeitung பத்திரிகைக்கு அவர் "இது ஒரு தைரியமான முடிவு; கண்டிப்பு தெரிவிக்கப்பட முன்னர் நடைமுறையில் சோதிக்கப்பட வேண்டியது." என்றார்.

மற்ற பசுமைவாதித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களில் இன்னும் நிதானத்தைக் காட்டினர். கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் Renate Künast அறிவித்தார்: "இது சார்லாந்தில் ஒரு பரிசோதனைத் தன்மை உடையது ஆகும். அதிகமாக இதில் கூறப்படுவதற்கு ஒன்றும் இல்லை." பிரான்சில் பசுமைவாதிகள் சோசலிஸ்ட் கட்சி மற்றும் MoDem என்னும் François Bayrou வின் இயக்கத்துடன் (FDP ஐப் போன்றது) கூட்டணி நிறுவவேண்டும் என்று முயலும் டானியல் கோன் பென்டிட்டே சார் மாநிலத் தலைவரான Hubert Ulrich ஐ "மாபியாவிற்கு ஒத்தவர்" என்று ஒப்பிட்டார்.

சார்லாந்திலேயே மாநிலத்தில் 1,000 உறுப்பினர்களையே கொண்ட பசுமைவாதிகளில் கணிசமான பிரிவினர், முன்னதாக ஜமாய்க்கா கூட்டணிக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். Homburg ல் பசுமைவாதிகள் வெளியிட்ட அறிக்கை, "CDU, FDP மற்றும் பசுமைவாதிகள் மாநிலத்தில் இப்பொழுது மத்தியிலும் ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் என்று அழைப்பு விடப்படுகிறார்கள்." என்று கூறுகிறது. மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பசுமைவாதிகளின் கோஷங்களில் ஒன்று இடது கட்சி தலைவர் ஒஸ்கார் லாபொன்டைனை "அலட்சியப்படுத்துவது" என்று இருந்தது.

எனவே சார்லாந்தின் ஒரு ஜமாய்க்கா கூட்டணிக்கான பசுமைவாதிகளால் எடுக்கப்பட்ட முடிவு தேசிய தலைமை மட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டது என்று உறுதியாகக் கொள்ளலாம். பசுமைக்கட்சி தலைவர்கள் எந்தநேரத்திலும் CDU, FDP உடன் தேசியமட்டத்திலும் கூட்டணியில் சேரத்தயார் என்பதற்கான தெளிவான அடையாளமாக இந்த முடிவு உள்ளது.

பெப்ருவரி 2008ல் ஹாம்பேர்க்கில் CDU உடன் பசுமைவாதிகள் ஏற்கனவே கூட்டு வைத்தனர். அதன்பின் முன்பு அவர்கள் கண்டித்திருந்த பல நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். உள்ளூர் மட்டத்தில் பசுமைவாதிகள் CDU உடன் டஜன் கணக்கான கூட்டணிகளை வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் அமைத்துள்ளனர்.

2008 இலையுதிர்காலத்தில் கட்சியின் Erfurt மாநாட்டில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பசுமைவாதிகள் தலைவர் Cem Ozdemir இன்னும் அதிக கூட்டணிகளை CDU, FDP உடன் கொள்ளவேண்டும் என்பதற்கு ஆதரவாக வாதிட்டிருந்தார். தன்னுடைய தேர்தலுக்குப் பின்னர் அவர் கூறினார்: "சில தனிப்பட்ட நேரங்களில் பசுமைவாதிகளின் கோரிக்கைகளை சிவப்புடன் (SPD, இடது கட்சிகளின் நிறம்) என்பதற்குப் பதிலாக கறுப்புடன் (CDU கட்சி நிறம்), செயல்படுத்துவது எளிதாகும்." இதைத்தவிர Ozdemir பசுமைவாதிகள் ஒன்றும் SPD உடன் 1998-2005ல் இருந்து கூட்டாட்சி கூட்டணியில் பங்கு பெற்றதற்காக வெட்கப்பட வேண்டியதில்லை என்று வலியுறுத்தி, அரசாங்கத்தின் சமூகநல விரோத நடவடிக்கைகளுக்கும் (செயற்பட்டியல் 2010) ஆப்கானிஸ்தானில் நடக்கும் இராணுவ தலையீட்டுக்கும் வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்தார்.

சார்லாந்தின் சமீபத்திய திருப்பங்கள் பழமைவாத கட்சிகளான CDU, CSU, FDP என்று ஒருபுறமும், "இடது" என்று தவறாக விவரிக்கப்படும் SPD, பசுமைவாதிகள், இடது கட்சி என்று மறுபுறமும் அதிக அடிப்படை அரசியல் வேறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதைத்தான் உறுதிபடுத்துகின்றன. பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அனைத்து ஜேர்மனிய பாராளுமன்ற கட்சிகளும் வலதிற்கு நகர்ந்து, தங்கள் கொள்கைகளை வங்கிகள் மற்றும் வணிக கூட்டமைப்புக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் அரசாங்கத்தை ஆதரிப்பதுடன் பரந்த மக்களின் சமூக நலன்களின் இழப்பில் முதலாளித்துவ முறையைப் பாதுகாக்க உறுதியாக உள்ளன.

சார்லாந்தில் அனைத்துக் கட்சிகளும் இதில் உடன்பட்டுள்ளன. CDU, FDP, SPD, இடது கட்சியில் இருந்து பசுமைவாதிகள் வரை "சமமான சாத்தியங்கள்" என்பதின் இதயத்தானத்தில் கடுமையான சிக்கன நடவடிக்கைத் திட்டத்தின் தேவை உள்ளது. அனைத்துமே வருங்கால அரசாங்கம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட "கடன் தடை" அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. இது அரசாங்கம் சேர்க்கக்கூடிய கடன்களுக்கு வரம்பு விதிக்கிறது. இதையொட்டி செலவுக் குறைப்புக்கள் தவிர்க்க முடியாமல் சமூக நலச் செலவுகளிலும், வேலைகளிலும் (வேலைக்குறைப்பு, அரசாங்கத்தின் சுரங்கத் தொழிலில்) ஏற்படுத்தப்படும்.

நிலக்கரிச் சுரங்கங்கள் மூடப்படுவதற்கு, மாற்றீட்டு வேலைகளுக்கான வாய்ப்பு இல்லை என்றாலும், இடது கட்சியும் அதன் ஆதரவை வெளிப்படுத்தியயுள்ளது. இவ்விதத்தில் இடதுகட்சி பசுமைவாதிகளுக்கும் FDP இற்கும் முக்கிய சலுகையைக் கொடுத்துள்ளது. அவை ஓப்பல் கார்த்தயாரிப்பு ஆலைகள் போன்றவற்றை "சந்தையை தூய்மைப்படுத்தும்" நடவவடிக்கை என்று மூட விரும்புகின்றன அல்லது அத்தகைய நிறுவனங்கள் "சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்" என்ற கவலையை ஒட்டி அவ்வாறு விரும்புகின்றன.

SPD உடன் ஆரம்ப விவாதங்களில் இடது கட்சியின் தலைவர் லாபொன்டைன் சார்லாந்தின் வரவு செலவுத்திட்டம் "பேரழிவான தன்மையில்" இருப்பதை வலியுறுத்தினார். விவாதத்தின் மத்திய கூறுபாடு மாநிலத்தில் உள்ள கடும் நிதிய நெருக்கடி நிலைமை ஆகும். இது மாநிலத்தின் வருவாய்களில் ஆழ்ந்த சரிவை அடுத்து ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் வருங்கால பிரதம மந்திரியாக வரவேண்டும் என்ற நம்பிக்கைக் கொண்ட SPD யின் சார்லாந்து தலைவர் Heiko Maas, கூட்டத்திற்குப் பிறகு கூறினார்: "நாம் விவாதித்த பிரச்சினைகளின் பொருளுரை பற்றி பரந்த உடன்பாட்டைக் கொண்டிருக்கிறோம்."

பசுமைவாதிகளுக்கு CDU, FDP இரண்டும் சார்லாந்தில் காட்டிய சலுகைகள் புதிய அரசியல் திசை என்ற விதத்தில் எவ்வித்ததிலும் அர்த்தப்படாது. சார்லாந்தில் CDU அணுசக்தியில் இருந்து விலகிக் கொள்ளுவது பற்றி பரிசீலிக்கத் தயார் என்று கூறியது. ஆனால் அத்தகைய உறுதிமொழி தேசிய மட்டத்தில் CDU, FDP உடன் சேர்ந்து அணு உலைத்திட்டத்தின் காலத்தை அதிகரிக்க உள்ளது என்னும்போது அதிக பெறுமதிக்குரியதல்ல. மேலும் CDU மாநிலத்தில் கல்விக் கட்டணத்தை மாற்றும் திட்டத்தைச் சிந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளது. ஆனால் இந்த உறுதிமொழியும் வினாவிற்கு உரியதுதான். ஏனெனில் "கடன் தடை" நடைமுறையில் உள்ளது. நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், மாநில வரவுசெலவுத்திட்டத்தில் உள்ள பற்றாக்குறை மற்ற பகுதிகளில் குறைப்பு மூலம் சரிசெய்யப்பட முடியும்.

ஒரு தேசிய மட்டத்தில் அரசாங்கம் கொள்கைக்கு பல பூசிமெழுகும் மாற்றங்களை அறிவித்துள்ளது. ஆனால் இவை அனைத்தும் விரைவில் தூக்கி எறியப்பட்டுவிடும். பின்னர் புதிய அரசாங்கம் நிதிய, பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் மக்களின் பரந்த பிரிவின் தோள்களில் ஏற்ற முற்படும்போது, அது மத்திய மற்றும் மாநில அளவில் உறுதியான பெரும்பான்மையில் தங்கியிருக்கவேண்டியிருக்கும். இந்த நிலைமை கணிசமான முறையில் சார்லாந்தில் பசுமைவாதிகளால் ஏற்பட்டுள்ளது. மேலும் துரிஞ்சியா மாநிலத்திலும் அது வியக்கத்தக்க வகையில், SPD, CDU உடன் ஒரு கூட்டணி அமைக்கத் தயாராக உள்ளது.

ஒரு எதிர்கால மத்திய அரசாங்கம் SPD, இடது கட்சி இரண்டையும் நம்ப வேண்டியிருக்கும். அப்பொழுதுதான் அது மக்கள் மீதான அதன் தாக்குதல்களை செயல்படுத்த முடியும். பிராண்டன்பேர்க் மாநில நிகழ்வுகளில் இருந்து இது தெளிவாகுகின்றது. அங்கு இப்பொழுதுள்ள SPD பிரதம மந்திரி Matthias Platzeck CDU உடன் தான் கொண்டிருந்த ஒரு தசாப்தக் கூட்டணியை, இடது கட்சியுடன் உடன்பாட்டிற்கு ஆதரவிற்காக கைவிட்டுள்ளார்.

பங்காளி மாற்றத்திற்கான Platzeck இன் வாதம் பலவற்றைப் புலப்படுத்துகிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் தன்னுடைய நீண்டகால CDU உடனான ஒத்துழைப்பை "மிகவும் வெற்றிகரமானது, பரஸ்பர நம்பிக்கை உணர்வின் அடிப்படையைத் தளம் கொண்டது" என்று பாராட்டினார். அதையொட்டி CDU உடன் ஆரம்ப விவாதங்களுக்கான உடன்பாட்டைக் கொண்டார். ஆனால், அதற்குப் பிறகு CDU மீதான சீற்றத்தினால் அவர் நிலைமைய மாற்றிக் கொண்டு இடது கட்சியுடன் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுத்தார். இந்த முடிவைத்தான் மந்திரி Jorg Schonbohm (CDU) "காட்டிக் கொடுப்பு" என்று விவரித்தார்.

Platzeck இற்கு வேறு கருத்துக்கள் இருந்தன. கடுமையான பொருளாதார நடவடிக்கைகள், பொதுநலச் செலவு வெட்டுக்கள் என்ற கடுமையான சுற்றின் தேவைக்காக CDU சக ஊழியர்களுடன் ஒன்றுபட்டார். ஆனால் தொழிலாள வர்க்கத்தின் மீது அத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும்போது இடது கட்சி அதைவிடச் சிறந்த பங்காளி என்று கருதுகிறார். SPD-இடது கட்சியின் கூட்டணி என்பது மாநிலத்தை எதிர்கொண்டிருக்கும் கடுமையான முடிவுகளை செயல்படுத்த சிறந்தது என்ற தன்னுடைய நம்பிக்கையை அவர் சிறிதேனும் சந்தேகத்திற்கு உட்படுத்தவில்லை.

Berliner Morgenpost (அக்டோபர் 16) பதிப்பின்படி, பிரண்டன்பேர்க்கில் SPD மற்றும் இடதுகட்சி கொள்கையளவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வேலைக்குறைப்புக்கள் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டன. SPD மாநில நிர்வாகத்தில் 2019க்குள் 10,000 வேலைகளைக் குறைக்க வேண்டும் என்று விரும்புகிறது. அதாவது அத்தகைய வேலைகளில் மொத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கை. வருங்கால "சிவப்பு-சிவப்பு அரசாங்கத்தில் மற்ற பகுதிகளிலும், கடுமையான சிக்கனப் போக்கு இருக்கும் என்றும் Platzeck அறிவித்துள்ளார்.

செயற்பட்டியல் 2010 திட்டம் மற்றும் பொதுநல விரோத Hartz IV சட்டங்களுக்கு உறுதியாக ஆதரவு தரும் Platzeck, இடது கட்சியும் அதன் கூட்டாளித்தன்மையும் நம்பிக்கைத்தன்மை உடையது என்பதற்கு ஜேர்மனிய தலைநகரம் பேர்லினில் SPD கடந்த எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது பற்றி சரியாகக் குறிப்பிட்டார். இக்காலத்தில் பேர்லின் செனட் முன்னோடியில்லாத வகையில் வேலைகள் மற்றும் சமூகப் பணிகளை தலைநகரத்தில் இல்லாதொழித்தது. பேர்லினில் நடத்தப்பட்ட வெட்டுக்கள் இன்னும் அதிகமாகும். உண்மையில் இது CDU தலைமையில் உள்ள ஜேர்மனிய மற்றைய மாநில நிர்வாகங்களில் நடத்தப்பட்டதைவிட அதிகம் ஆகும்.

இழிந்த திலோ சராஜின் (SPD) பல ஆண்டுகள் பேர்லினில் நிதிய செனட்டராக இருந்து பொருளாதாரக் கொள்கைகளை ஆணையிட்டது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. ஜேர்மனிய மத்திய வங்கியில் ஒரு புதிய பதவியை எடுத்துக் கொண்டபின், சராஜின் சமீபத்தில் ஜேர்மனியில் இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பற்றி கடுமையான இனவெறித்தாக்குதலை தொடக்கினார். அவருடைய மிகத்தீவிர வலதுசாரி, ஆத்திரமூட்டும் கருத்துக்கள் இடது கட்சியின் அனைத்து வேலைத்திட்ட அறிவிப்புக்களைவிட SPD- இடது கட்சி கூட்டணியில் பொறுத்துக் கொள்ளப்படும் அணுகுமுறைகளை பற்றி அதிகம் தெரிவிக்கின்றன.