World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

One in six Americans in poverty in 2008

2008 ம் ஆண்டு ஆறு அமெரிக்கர்களில் ஒருவர் வறிய நிலையில் இருந்தார்

By Tom Eley
21 October 2009

Use this version to print | Send feedback

2008 மக்கள் கணக்கெடுப்பு தகவலின் திருத்தப்பட்ட பகுப்பாய்வு மக்கட் தொகையில் 15.8 சதவிகிதமான 47.8 மில்லியன் அமெரிக்கர்கள் உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்ந்தனர் என்று காட்டுகிறது. உத்தியோகபூர்வ அரசாங்கக் கணக்கின்படி பதிவான 39.8 மில்லியன் அல்லது 13.2 சதவிகிதத்தினர் வறுமையில் உள்ளனர் என்பதைவிட குறிப்பிடத்தக்களவில் அதிகமாகும்.

National Academy of Sciences (NAS) இனால் வறுமையை அளவிடும் முறையின் அடிப்படையாக கொண்ட இந்த தகவலை மக்கள் கணக்கெடுப்பு அலுவலகம் செவ்வாயன்று வெளியிட்டது. இது காங்கிரஸ் மற்றும் வெள்ளை மாளிகை பரிசீலனைக்கு அனுப்பப்படவுள்ளது. ஒபாமா நிர்வாகம் அமெரிக்காவில் வறுமையை அளவிடும் மரபார்ந்த வகையை மாற்றக்கூடும் என்று தெரிகிறது. இந்த பழைய முறை சமூக துயரத்தின் உண்மைத்தரத்தை பெரிதும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

இந்த உயர்ந்த எண்ணிக்கையை அடைவதற்கு அமெரிக்க மக்கள் கணக்கெடுப்பு அலுவலகம் வழமையாக புறக்கணிக்கும் சில கூறுபாடுகளான சுகாதாரப் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் வாழ்க்கை செலவினங்களில் பிராந்திய வேறுபாடுகள் ஆகியவற்றினை NAS கணக்கில் எடுத்துக் கொள்ளுகிறது.

இதன் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புக்களில், NAS முறை கிட்டத்தட்ட மூத்த அமெரிகர்களில் ஐந்தில் ஒருவர் வறுமையில் வாழ்வதை வெளிப்படுத்தியுள்ளது. 65 வயது அதற்கு மேல் இருப்பவர்கள் 18.7 சதவிகிதம் என்று இருக்கையில், இது உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு எண்ணிக்கையை போல் கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகும்.

18ல் இருந்து 64 வயது வரை உள்ள மக்களில் கிட்டத்தட்ட 14.3 சதவிகிதத்தின் ஏழைகள் ஆவர். இந்த எண்ணிக்கை உத்தியோகபூர்வ எண்ணிக்கையைவிட 3 சதவிகிதம் அதிகம் ஆகும்.

சான் பிரான்ஸிஸ்கோ, போஸ்டன், நியூயோர்க் நகரம் போன்ற நகரங்களில் உயர்ந்த வாழ்க்கைச் செலவினங்களை கணக்கில் கொண்டு, NAS கொடுத்துள்ள புள்ளிவிவரம் மேலைக் கடலோரம் மற்றும் வடகிழக்கில் உத்தியோகபூர்வ தகவல் காட்டுவதைவிட கூடுதலான வறுமை அதிகரிப்பு இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன.

தற்பொழுது நான்கு பேர் உள்ள குடும்பத்தின் உத்தியோகபூர்வ வறுமைத் தரம் என்பது 21,203 டாலர் ஆகும். 1955 ல் நிறுவப்பட்ட இந்தச் சூத்திரம் வறுமையை ஆரம்ப நிலையில் நிர்ணயிக்க ஆண்டு மளிகைப்பொருட்களின் செலவு மதிப்பை மூன்றால் பெருக்கி உறுதி செய்யும்.

இத்தகைய உத்தியோகபூர்வ மதிப்பிடுகள், மிகவும் அபத்தம் என்று பல வல்லுனர்களும் வாதிடும் குழுக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

எவ்வாறிருந்துபோதிலும் NAS தகவல்கள் அமெரிக்காவில் வறுமையையும் குறைமதிப்பாகக் காட்டியுள்ளது. உதாரணத்திற்கு இந்த வழிவகை மொத்த வருமானத்தில் உணவு உதவி மற்றும் பிற உதவிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இதையொட்டி அமெரிக்காவில் வறுமையில் வாடும் சிறுவர்களின் எண்ணிக்கை சற்றே குறைந்த மதிப்பீட்டைப் பெறுகிறது. மக்கள் கணக்கெடுப்பு அலுவலகத்தின் 19 சதவிகிதத்திற்கு பதிலாக இது 17 சதவிகிதம் என்று குறிப்படப்படுகிறது.

2007 ம் ஆண்டு Economic Policy Institute ன் புள்ளிவிவர பகுப்பாய்வின்படி, நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு இல்லிநோய்ஸ் Peoria நகரத்தில் வறுமைக்கு மேல் இருப்பதற்கு $42,324 தேவைப்படும். சிக்காக்கோவில் இந்த புள்ளிவிவரம் கிட்டத்தட்ட $49,000 என்று உள்ளது. நியூயோர்க் நகரத்தின் லாங் ஐலண்ட்டில் கிட்டத்தட்ட $72,000 என்று உத்தியோகபூர்வ வறுமைத் தரத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் ஆகும்.

கடந்த அக்டோபர் மாதம் Working Poor Families Project என்னும் அமைப்பு அமெரிக்க இல்லங்களில் 30 சதவிகிதம் வறுமையில் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. இந்த அளவை, மக்கள் கணக்கெடுப்பு மற்றும் தொழிலாளர் பற்றிய தகவல் 2004 முதல் 2006 வரை இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இங்கு வறுமை என்பது இல்லங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கும் தன்மை என்று வரையறுக்கப்படுகிறது.(See "'Working Poor' report: Nearly 30 percent of US families subsist on poverty wages")

2008ம் ஆண்டு நிதியச்சரிவில் இருந்து விளைந்த சமூகப் பேரழிவு இப்புள்ளிவிவரங்கள் இன்னமும் எங்கும் பதிவாகவில்லை. உத்தியோகபூர்வ வேலையின்மை கிட்டத்தட்ட 10 சதவிகிதம் என்று இருக்கையில் உண்மையான விகிதம் இன்னும் மிக அதிகமாக இருக்கும். இது பெருமந்த நிலைக்குப் பின்னர் நாடு அனுபவித்துள்ள வேலையின்மை நெருக்கடியின் மோசமான நிலைமை ஆகும். நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் குறைந்த வேலையின்மை நிதி உதவிகளையும் செலவழித்து முடித்துக்கொண்டிருக்கின்றனர்.

இற்கிடையில் வேலை உள்ள அதிருஷ்டசாலிகளின் ஊதியங்கள் கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் காணப்படாத விகித்தில் சரிந்துள்ளன. வாரப் வேலைநேரம் 1960 களுக்கு முன்பு இருந்த மிகக் குறைந்த அளவிற்கு சென்று விட்டது. அதே நேரத்தில் உற்பத்தித்திறன் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இரண்டாம் காலாண்டில் ஆண்டு விகிதத்தில் 6.6 சதவிகிதம் என்ற முறையில். அதிகரித்துள்ளது. அமெரிக்க தொழிலாள வர்க்கம் தங்கள் சொந்த செல்வத்திற்கான இரு பெரிய ஆதாரங்களான வீடுகளின் மதிப்புக்கள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் இரண்டும் ஆழமாக சரிந்து போவதைத்தான் பார்க்கின்றனர்.

இக்காரணங்களினால் 2009க்கான புள்ளிவிவரப் பகுப்பாய்வுகள் தொகுக்கப்படும்போது அது இன்னும் தீவிரமாக வறுமை பெருகியுள்ளது என்பதைப் புலப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

பல தசாப்தங்கள் சமூகநலச் செலவுகள் மற்றும் சமூகத் திட்டங்களில் குறைப்புக்கள் வந்தபின், இந்த இழிநிலையை தீர்க்க அமெரிக்காவில் சமூகப் பாதுகாப்பு வலை ஏதும் இல்லை. மாறாக, அரசாங்கமும் நகரவைகளும் முன்னோடியில்லாத வகையில் நெருக்கடியை எதிர்கொள்ள சமூக சேவைகளுக்கான செலவினங்களை இன்னும் குறைக்க முயலுகின்றன.