World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: parliamentary mission against burqa promotes anti-Muslim prejudice

பிரான்ஸ்: பர்காவிற்கு எதிரான பாராளுமன்ற குழு முஸ்லிம் எதிர்ப்புணர்வைத் தூண்டுகிறது

By Antoine Lerougetel
19 September 2009

Use this version to print | Send feedback

பர்கா மற்றும் நிகாப் பற்றிய பாராளுமன்ற விசாரணைக்குழு அதன் இரண்டாவது கூட்டத்தை செப்டம்பர் 9 அன்று நடத்தியது. ஜூன் 22ல் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பாராளுமன்ற கூட்டத்தில் "பிரான்சில் பர்காவிற்கு வரவேற்பு இல்லை" என்று ஜனாதிபதி அவர் அறிவித்ததை தொடர்ந்து, பொது இடத்தில் உடலை மறைக்கும் பர்கா அணிவதை தடைசெய்யும் சட்டம் இயற்றப்படும் என்று என்று பரவலாக கருதப்படுகிறது.

ஜூன் 8ஆம் தேதி, அதன் முதல் கூட்டத்தை நடத்திய குழு, மத சுதந்திரம், ஜனநாயக உரிமைகள், அடிப்படை சமயசார்பற்ற கொள்கைகள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதைக் குறிக்கிறது. அவற்றின் படி அரசாங்கத்திற்கு தனிநபர் கருத்துக்களிலும், நம்பிக்கைகளிலும் தலையிடும் உரிமை கிடையாது.

சமீபத்திய உத்தியோகபூர்வ மதிப்பீடுகள், பிரான்சில் பர்கா அணியும் மகளிர் எண்ணிக்கை 2,000ஆக இருக்கலாம் என்று கூறுகின்றன; ஒரு சிறுபான்மை முஸ்லிம் மகளிர், இந்த முழு உடலை மறைக்கும் ஆடையை அணிதலை, முகத்தை மறைத்தலை, விகிதத்திற்கு பெரிதும் ஒவ்வாத முறையில் ஒரு பிரச்சினையாக ஆக்கப்பட்டுள்ளது. சார்க்கோசி அரசாங்கத்தின் அரசியல் செயற்பட்டியலுக்கு இது உதவும் -அதாவது முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தவும், வெகுஜன வேலையின்மை, ஊதிய குறைவு, வாழ்க்கைத்தரங்களின் சரிவு, சமூக, ஜனநாயக உரிமைகள் பொருளாதார நெருக்கடியினால் விளைந்துள்ளதை அடுத்து தொழிலாளர்கள் அதற்கு விலை கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து கவனத்தைத் திசை திருப்பும் ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும். ஆப்கானிஸ்தானில் அணியப்படும் பர்காவிற்கு எதிரான பிரச்சாரம் அங்கு பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் குறுக்கீட்டை வளர்ப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

செய்தித்தளம் oumma.com நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றின்படி, பிரான்சில் இருக்கும் முஸ்லிம்களில் 80 சதவீதத்தினர், இக்குழுவின் நோக்கம் இஸ்லாத்தை இழிவுபடுத்துவது என்று நினைப்பதாகவும், 86 சதவிகிதத்தினர் முழு உடலும் மறைத்தலை கட்டுப்படுத்தும் சட்டத்தை எதிர்ப்பதாகவும் தெரிவிக்கிறது.

பாராளுமன்றத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய இக்குழுவிற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) பிரதிநிதி André Gerin தலைமை வகிக்கிறார். பள்ளிகளில் இஸ்லாமிய தலை ஸ்கார்ப்களை மாணவிகள் அணியும் பிரச்சினை போலவே --அது 2004ல் முதலாளித்துவ இடதின் ஆதரவுடன் இயற்றப்பட்ட சட்டம் ஒன்றில் சட்டவிரோதமாக்கப்பட்டது-- சார்க்கோசி தான் "இடது" மற்றும் மத்தியதர பெண்ணுரிமை இயக்கங்களை தனக்கு ஆதரவாக இப்பிரச்சாரத்தில் ஏற்படுத்தி கொள்ளலாம் என்று நினைக்கிறார்.

Lutte Ouvrière (LO) இக்குழுவிற்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தது; ஒலிவியே பெசன்ஸநோவின் முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA), இப்பிரச்சினையில் அதனுடைய உடன்பாட்டை பெரும் மெளனத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் தெரிவித்துள்ளது. இந்த இரு அமைப்புக்களும், 2004ல் இயற்றப்பட்ட பெண்கள் முஸ்லிம் தலை மறைப்பை பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு எதிராக வந்த சட்டத்திற்கு ஆதரவு கொடுத்தன--எந்த அளவிற்கு என்றால், LO தலைவர் Arletter Laguiller மந்திரி Nicole Guedj என்னும் ஆளும் கட்சி கன்சர்வேடிவ் UMP உடன் ஒரு பெண்ணியக்க ஆர்ப்பாட்டத்தில் உடன் சென்று கலந்து கொண்ட முறையில்.

PCF இந்த முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சினையில் முழுமையாக பங்கு பெற்றுள்ளது. இதன் நாளேடு l'Humanite, Gerin க்கு ஒரு முழுபக்க பேட்டி அளித்தது; அவருடைய பர்காவிற்கு எதிரான ஆத்திரமூட்டும் அறிக்கைகளை பற்றிக் குறை ஏதும் கூறாமல், அது எழுதியது: "முழு உடலையும் மறைக்கும் திரையுடை தெருக்களில் காண்பதற்கு இழிவாக, அதிர்ச்சி தரும் வகையில் உள்ளன." ஸ்ராலினிச செய்தித்தாள் அவருக்கு கடந்த வாரயிறுதியில் தன்னுடைய சிறப்பு கூட்டத்தில் ஒரு பெருமித இடத்தையும் கொடுத்தது.

பர்கா பிரச்சினை அரசாங்க கருவியைப் பயன்படுத்தி மக்கள் மீது சூனிய வேட்டை நடத்தும் முயற்சிகளுக்கான சூழலை ஏற்படுத்துகிறது. ஆளும் பிரதிநிதியும், குழுவின் தொடர்பாளருமான Eric Raoult பிரான்சில் மிக குறைந்த மகளிரே பர்கா அணியும் புள்ளிவிவரத்தை கண்டு அதிர்ந்து போய் குறிப்பிட்டார்: "அதனால் தான் நாங்கள் சமூக பணி அளிப்பவர்களை, நடக்கும் உண்மைகளுக்கு வெகு அருகே இருப்பவர்களை அல்லது கல்வி அதிகாரிகளை, ஆரம்பப்பள்ளிகளில் இருந்து குழந்தைகள் நீங்கும் போது தாயார்கள் அடையாளம் காண்பது பற்றிய பிரச்சினைகளை அறிந்தவர்களை கலந்து ஆலோசிக்க போகிறோம்" என்றார்.

கன்சர்வேட்டிவ் நாளேடான Figaro அதன் செப்டம்பர் 9 பதிப்பில் பின்வருமாறு குறிப்பிட்டது: "ஆனால் இந்த நிறுவனங்கள் குடும்பங்களை சார்ந்த உணர்வுபூர்வ தகவல்கள் என்று கருதப்படுவதை சேகரிக்க தயங்கக் கூடும்." பள்ளிகளும், சமூகப் பணி அமைப்புக்களும், யூதர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களை பற்றி தகவல் கொடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது, 1940-41ல் பிரான்சில் நாஜி ஆக்கிரமிப்பின்போது Philippe Petain காலத்தில் நடந்தது இன்னும் நினைவில் வலுவாக உள்ளன; அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பதில் சக்தி வாய்ந்த மக்கள் எதிர்ப்பாகத் தொடர்கிறது.

சோசலிஸ்ட் கட்சியின் பிரபல தலைவரும், மகளிர் உரிமைகளுடன் தொடர்புடையவருமான Elisabet Badinter, கணவர் ரோபர்ட் மரண தண்டனை அகற்றப்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தின் மூலம் புகழ் பெற்றவர். புதனன்று நடைபெற்ற குழுகூட்டத்தில் அவர் சாட்சியம் அளித்தார். "முஸ்லிம் அடிப்படைவாதத்தில், மறைப்பு அணியும் பெண்கள் என்பது பனிப்பாறையின் உச்சிதான். ...மறைப்பை அணிதல் என்பது சலாபிசத்தின் (Salafism) பதாகை ஆகும். ....பிரான்சில் நாம் மனித கெளரவத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அழிவு தரும் சிந்தனைப் போக்குகளுக்கு எதிராக போராடுகிறோம், குறுகிய பிரிவுகளான நாசிசம், செமிடிய எதிர்ப்பாளர்கள் என்று. அடிப்படைவாதமும், போரிடப்படவேண்டும்." வலதுசாரி தீவிர வலது இனவெறியாளரின் சிறப்பு சொல்லில், குடியேறுபவர்கள் "தாங்கள் வசிக்கும் நாட்டின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும், இல்லாவிடின் நாட்டை விட்டு நீங்க வேண்டும்....சவுதி அரேபியா அல்லது ஆப்கானிஸ்தானத்திற்கு செல்ல வேண்டியதுதான்; அங்கு எவரும் உங்கள் முகத்தை காட்டு என்று கோரமாட்டார்கள்...."

ஸ்ராலினிச Gerin செய்தி ஊடகத்திடம் ஆகஸ்ட் 27 அன்று கூறினார்: "என்னைப் பொறுத்தவரையில் முழு உடலை மறைக்கும் அங்கி என்பது குடியரசு நெறிக்கான போராட்டம் ஆகும். முழு உடலை மறைக்கும் அங்கி என்பதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு கிடையாது. இது நம் நாட்டின் சில பகுதிகளில் இருக்கும் அடிப்படைவாதிகளின் கறுப்பு அலை என்னும் பனிப்பாறையின் உச்சிதான்."

Le Figaro தன்னுடைய செப்டம்பர் 9 பதிப்பில் விலைமாதரும் அல்ல, பணிந்து நிற்பவர்களும் அல்ல என்னும் பெண்ணுரிமை இயக்கத்தின் முன்னாள் தலைவர் Fadela Amara (இவர் 2007ல் சார்க்கோசி அரசாங்கத்தில் சேர்ந்தவர்), "பல முறை ஒரு சட்டம் தேவை, பொதுப்பணி இடங்களில், பள்ளிகள், மருத்துவமனைகள், நகர அரங்குகள் போன்றவற்றிலும் பொது போக்குவரத்துப் பிரிவுகளிலும் பர்கா அணிவதற்கு தடை விதிக்க வேண்டும். இறுதியாக ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களிலும் அடையாள சோதனைகள் நடத்தப்பட வேண்டும்" என்று கூறியதாக தகவல் கொடுத்துள்ளது.

பாராளுமன்ற குழுவில் பேசிய விலைமாதரும் அல்ல, பணிந்து நிற்பவர்களும் அல்ல அமைப்பில் அவருக்குப் பின் பதவிக்கு வந்த Sihem Habchi "பர்க்காவா அல்லது குடியரசா என்ற விதத்தில் விருப்புரிமை வேண்டும்" என்று அறிவித்தார்.

Equality and Diversity of Opportunity என்னும் சார்க்கோசி அரசாங்கத் துறையின் ஆணையாளரான Yazid Sabeg, பர்கா எதிர்ப்பு பிரச்சாரங்களின் கூற்றுக்களை மறுக்க முயன்றவிதம் செய்தி ஊடகத்தில் பேய்மழையென குறைகூறல்களை கொண்டு வந்துள்ளன. "பர்கா, அதன் பிற்போக்குத்தன்மை அல்லது பிறவற்றை பற்றி நீங்கள் விருப்பப்படி எதுவும் நினைக்கலாம்.... பிரெஞ்சு மக்களுடைய உடை அணிதலைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் வேலை அல்ல" என்று அவர் கூறியிருந்தார்.

கத்தோலிக்க நாளேடான La Croixக்கு கொடுத்த பேட்டியில் அவர் பர்கா எதிர்ப்பு பிரச்சாரம், விதைக்கும் குழப்பத்தைத் தாக்கியுள்ளார்; அது "உண்மைப் பிரச்சினைகளில் உண்மை விவாதங்களைத் தவிர்க்கிறது; அவற்றுள் முதலும் முக்கியமானதுமாக இருப்பது பொருளாதார, சமூகப் பிரச்சினகள்." "இந்த நெருக்கடி தொழிலாள வர்க்க மக்களிடையே மோசமாகிக் கொண்டிருக்கிறது; சமூக அழுத்தங்கள் உயர்ந்து நிற்கின்றன. வேலை என்பது கிடைக்கவில்லை, வீடுகள் கிடைக்கவில்லை, கல்வி முறை அதன் பங்கை செய்யவில்லை. உண்மை பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படுவோம். அதற்குப் பதிலாக பர்க்கா பற்றிய விவாதங்கள் ஏமாற்றம், இனவெறி ஆகியவற்றைத் தூண்டும் விதத்தில்தான் இருக்கும்."

பாராளுமன்ற குழுவில் இருக்கும் UMP உறுப்பினர்கள் சாபெக் இராஜிநாமா செய்ய வேண்டும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டனர். "இச்சொற்கள் நேரடியாக பாராளுமன்ற குழுவின் பணியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன, பாலியல் சமத்துவம், தனிநபர் கெளரவத்தை மிதிக்கின்றன. திரு சாபெக், குடியரசின் மந்திரியாக இருக்கும் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார், அவர் இராஜினாமா செய்ய வேண்டும்."

இரண்டு பிரெஞ்சு துருப்புகள் ஆப்கானிஸ்தானில் நடைபெறும் நவ-காலனித்துவ ஆக்கிரமிப்பு போரில் மடிந்தது பற்றிய ஒரு நிகழ்வில், சார்க்கோசி இத்தகைய சொல்லாட்சியைத் தான், பர்கா மற்றும் நிகப்பிற்கு தடை வேண்டும் என்று ஆதரிப்பவர்களின் சொல்லாட்சியில் பேசினார். உண்மையில் எண்ணெய், எரிபொருள் வளம் கொழிக்கும் பகுதியின் மீதான மூலோபாய கட்டுப்பாட்டிற்கு நடக்கும் இப்போர், "காட்டுமிராண்டித்தனம் மற்றும் பிற்போக்குத்தனத்திற்கு" எதிரான ஒரு போர் ஆகும்" என்றார்.

ஆப்கானிஸ்தானில் தற்போதைய பிரெஞ்சு வீரர்களின் இறப்பு எண்ணிக்கையான 31 என்பது, "பயங்கரவாதத்தை நாம் அனுமதித்தால், இடைக்கால பிளவுகளையும், காட்டுமிராண்டிகளையும் வெற்றி பெற அனுமதித்திருந்தால், இவர்களின் தியாகம் பொருளற்றுப் போயிருக்கும். ஆப்கானிய மக்களை தூக்கிலட தயாராக இருப்பவர்களிடம் அவர்களை நாம் கைவிட்டுவிட்டால் இந்த தியாகம் பயனற்று போய்விடும்....நடந்து முடியும் வரை அங்கு தொடர்வோம்...."

பிரெஞ்சு, நேட்டோ ஆக்கிரமிப்பு செயல்களால் ஏற்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களின் உயிரிழப்பும், உடலுறுப்பைக்களை இழந்திருப்பதும் பற்றி அவர் எந்தக் குறிப்பையும் கூறவில்லை; இது பல நேரமும் பொறுப்பற்ற குண்டுவீச்சுகளால் தான் நடைபெற்றுள்ளது.

பர்கா எதிர்ப்பின் ஜனநாயக விரோத பொருளுரை இன்னும் தெளிவாக பிரெஞ்சு காலனித்துவ வரலாற்றில் காட்டப்படுகிறது. 1958ல் அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தில் பிரெஞ்சு இராணுவம் குருதி கொட்டி நடத்திய அடக்குமுறையின் உச்சக்கட்டத்தில் அதிகாரிகள் அல்ஜீரிய மகளிரை தங்கள் மறைப்பை அகற்றி பிரெஞ்சு குடியேற்ற ஆட்சிக்கு ஆதரவைக் காட்டுமாறு கேட்டு கொண்டனர். மறைப்பை முன்னரே விடுத்திருந்த பல அல்ஜீரிய மகளிர் அதை மீண்டும் எதிர்த்து நிற்பதற்கு அடையாளமாக அணிய தொடங்கினார்கள்.

இன்று பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மீண்டும் பலவித முஸ்லிம் உடைகள் வடிவமைப்பை தடை செய்வதின் மூலம் மகளிருக்கு சுதந்திரம் கொடுப்பதாக ஒரு மோசடி கூற்றை முன்வைக்கிறது. உண்மையில் இந்த பிற்போக்குத்தன பிரச்சாரத்திற்கு அரசியல் நடைமுறைகளுக்குள் எதிர்ப்பு இல்லாதது--UMPல் இருந்து NPA, LO வரை--பிரெஞ்சு முதலாளித்துவத்திற்குள் ஜனநாயக உரிமைகளுக்கு எவ்வித தளமும் இல்லை என்பதைத்தான் நிரூபிக்கிறது.