World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP stands in the Southern Provincial Council election

இலங்கை சோ.ச.க. தென் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்றது

By the Socialist Equality Party
5 September 2009

Use this version to print | Send feedback

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அக்டோபர் 10 அன்று நடக்கவுள்ள தென் மாகாண சபை தேர்தலில் அதன் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. கட்சி காலி மாவட்டத்தில் 26 வேட்பாளபர்களை நிறுத்தியுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பத் தலைவிகளும் வேட்பாளர் பட்டியலில் அடங்குவர். (சோ.ச.க. முன்னோடியான) புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினரான ரட்னசிரி மலலகம வேட்பாளர்களுக்கு தலைமை வகிக்கின்றார். அவர் சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினரும், முழு இளமைக் காலத்தையும் தொழிலாள வர்க்க நலன்களை காக்க அர்ப்பணித்துக்கொண்டவரும் ஆவார்.

சோ.ச.க. ஆளும் வர்க்கத்தினதும் அதன் கட்சிகளதும் நாற்றமெடுத்த தேசியவாதம் மற்றும் இனவாதத்துக்கு எதிராக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஐக்கியத்துக்காக போராடுகிறது. சோசலிச அனைத்துலக வாதத்துக்கான பரந்த போராட்டத்தின் பாகமாக ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான சுயாதீனமான அரசியல் போராட்டமொன்றின் அடிப்படையில் மட்டுமே தனது ஜனநாயக உரிமகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை தொழிலாள வர்க்கத்தால் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

சோ.ச.க. மட்டுமே கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழர்-விரோத யுத்தத்தை இடைவிடாது எதிருத்ததோடு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை நிபந்தனையின்றி வெளியேற்ற வேண்டுமென கோரிய ஒரே கட்சியாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இராணுவத்தின் வெற்றி சமாதானத்தை மற்றும் சுபீட்சத்தை கொண்டுவரப் போவதில்லை, மாறாக உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை உக்கிரமாக்கும் என நாம் எச்சரிக்கின்றோம்.

தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் நடத்தப்படும் விதமானது ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்துக்கும் எதிராக தயாரிக்கப்படுவது என்ன என்பதற்கான தெளிவான எச்சிரிக்கையாகும். கிட்டத்தட்ட 300,000 தமிழ் பொது மக்கள் அவர்களது அடிப்படை அரசியலமைப்பு உரிமை மற்றும் சட்ட உரிமைகள் வெளிப்படையாக மீறப்பட்டு இழிநிலையிலான முகாங்களில் காலவரையறை இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். "விடுவிக்கப்பட்ட" பிரதேசங்களில் நீண்டகால இராணுவ ஆக்கிரமிப்புக்கான தாயாரிப்பாக புதிய காவலரன்களும் இராணுவ முகாங்களும் கட்டியெழுப்பப்படுகின்றன.

யுத்தத்தின் முடிவு தொடர்பான ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் வெற்றி ஆரவாரத்தால் தொழிலாளர்களும் இளைஞர்களும் ஏமாற்றப்பட்டுவிடக்கூடாது. தனது பிற்போக்கு கொள்கைகளுக்கான மக்கள் ஆணை என சொல்லப்படுவதை பெறுவதற்காக அரசாங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான மாகாண சபை தேர்தல்களில் இந்த தேர்தல் புதியதாகும். ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற உத்தியோகபூர்வ எதிர்க் கட்சிகள் இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரித்து, அவரது பொலிஸ் அரச வழிமுறைகளையும் அங்கீரித்ததோடு அவரது பொருளாதார கொள்கைகளுடன் அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டிராத நிலையில், அரசாங்கம் கடந்த மாகாண சபை தேர்தல்களில் வெற்றி பெற்றது.

அரசாங்கம் "தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக" ஒரு புதிய "பொருளாதார யுத்தத்தை" ஏற்கனவே அறிவித்துள்ளது. இத்தகைய சொற்றொடர்கள் ஒன்றை மட்டுமே அர்த்தப்படுத்துகின்றன. அது நாட்டின் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் சுமைகள் உழைக்கும் மக்கள் மீது திணிக்கப்படும் என்பதாகும். சிப்பாய்கள் யுத்தத்தில் அர்ப்பணித்தது போல் தொழிலாளர்கள் "தேசத்துக்காக அர்ப்பணிக்க வேண்டும்" என ஜனாதிபதி இராஜபக்ஷ பிரகடனம் செய்துள்ளார். வேறு வார்த்தைகளில் சொன்னால், ஏற்கனவே கால் நூற்றாண்டு யுத்ததில் மோசமாக விலைகொடுத்துள்ள தொழிலாள வர்க்கம், இப்போது ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்தை பெருக்குவதற்காக பெரும் சிரமங்களுடன் குறைந்த ஊதியத்துக்கு நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதாகும்.

இராஜபக்ஷ தனது யுத்தத்துக்கு செலவிடுவதற்காக நாட்டை உச்ச அளவில் ஈடுவைத்துள்ளார். இப்போது 1930 பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான பூகோள பொருளாதார நெருக்கடியால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடம் கடனாகப் பெற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் 9 வீதமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் வரவு செலவு பற்றாக்குறை 2011ல் 5 குறைக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளில் ஒன்றாகும். அரசாங்கம் ஏற்கனவே இந்த ஆண்டு சகல அரசாங்க ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இலக்கை அடைவதற்காக, அது இலவச கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரி சைகளில் மேலும் மேலும் மோசமான வெட்டுக்களை முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்படும்.

முற்றிலும் மாறுபட்ட விதத்தில் அரசாங்கம் நலிவடைந்து வரும் நிறுவனங்களை பிணையெடுக்க பில்லியன் ரூபாய்களை செலவிடுகின்றது. அது முதலீட்டாளர்களை ஈர்க்க புதிய சுதந்திர வர்த்தக வலயங்களையும் திறக்கின்றது. இலங்கையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தரமான மலிவு உழைப்பு களமாக முன்னேற்றுவதற்கு சிங்கபூர் முறையில் "வன் ஸ்டொப் ஷெப்" திறக்கப்படும் என இராஜபக்ஷ அண்மையில் ஃபோர்பஸ் சஞ்சிகைக்குத் தெரிவித்திருந்தார்.

தொழிலாள வர்க்கத்துடன் மோதல்கள் தோன்றுவதையிட்டு இராஜபக்ஷ விழிப்புடன் உள்ளார். அதிக பணவீக்கம், வேலை இழப்பு மற்றும் சமூக சேவைகள் சீரழிவும் அதிமாக உழைக்கும் மக்களுக்கு வாழ்க்கையை தாங்க முடியாததாக்கியுள்ளது. பெருந்தோட்டம், சுகாதார சேவை, துறைமுகம், எண்ணெய்ல மற்றும் மின்சார துறையிலும் உள்ள தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோருகின்றனர். மாணவர்களும் வேலையற்ற பட்டதாரிகளும் தொழில் கேட்டும் இலவச கல்வியை மேம்படுத்தக் கோரியும் போராட்டம் நடத்துகின்றனர். இந்தக் கோரிக்கைகளை வழங்க முடியாத அரசாங்கம் யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ் அரச இயந்திரத்தை உழைக்கும் மக்களின் போராட்டங்களை நசுக்க பயன்படுத்த தயாராகின்றது. யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் எதிர்க் கட்சிகளின் உதவியுடன் இராஜபக்ஷ அவசரகால சட்டத்தையும் கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தையும் தொடர்ந்தும் பேணி வருகின்றார். துருப்புக்களை கலைப்பதற்கு பதிலாக, அரசாங்கம் மேலும் 50,000 சிப்பாய்களை படையில் சேர்ப்பது வடக்கு மற்றும் கிழக்கில் கோட்டையை அமைப்பதற்கு மட்டுமன்றி தீவு பூரும் வளர்ச்சி கண்டுவரும் சமூக அமைதியின்மையையும் நசுக்குவதற்கேயாகும்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, தனது சகோதரர்கள், இராணுவ உயர்மட்ட தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரத்துவவாதிகள் அடங்கிய ஒரு அரசியல்-இராணுவ கும்பலின் ஊடாகவே மேலும் மேலும் ஆட்சியை முன்னெடுத்துவருகின்றார். அரசியலமைப்பை அலட்சியம் செய்யும் அவர், உயர் நீதிமன்ற தீர்ப்புக்களையும் அலட்சியம் செய்வதோடு அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தையும் இறப்பர் முத்திரை மட்டத்துக்கு தரம் குறைத்துள்ளார். பாதுகாப்பு படைகளின் ஒத்துழைப்புடன் இயங்கும் நிழல் கொலைப் படைகள் மூலம் பத்திரிகையாளர் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களும் கடத்தப்பட்டு, தெக்கப்படுகின்றனர் அல்லது படுகொலை செய்யப்படுகின்றனர்.

இதே வழிமுறைகள் தொழிலாள வர்கக்த்திற்கு எதிராகவும் பயன்படுத்தப்படும் என சோ.ச.க. எச்சரிக்கின்றது. யுத்த காலத்தில், வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை "தேசிய பாதுகாப்பைம கீழறுப்பவர்கள் என இராஜபக்ஷ மீண்டும் மீண்டும் கண்டனம் செய்து வந்துள்ளார். அவரது "தேசத்தை கட்டியெழுப்பும்" நடவடிக்கையை எதிர்க்கும் எவருகும் எதிராக இதே வார்த்தைகளை அர் பயன்படுத்துவார். கடந்த மாதம் புற்று நோய் ஆஸ்பத்திரியில் தாதிமாரின் வேலை நிறுத்தத்தை கலைக்க அரசாங்கம் கடற்படை தாதிமாரை அனுப்பியது. இப்போது மின்சார சபை ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி போராடினால் இராணுவத்தையும் பொலிசையும் பயன்படுத்துவதாக அது அச்சுறுத்துகிறது.

எந்தவொரு எதிர் கட்சியும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை.

1983ல் யுத்ததை தொடங்கி அதை தசாப்தத்துக்கும் மேலாக இரக்கமின்றி முன்னெடுத்த வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்துக்கும் முழு ஆதரவு வழங்கியது. அரசாங்கத்தின் வயிற்றிலடிக்கும் நிகழ்ச்சித் திட்டங்களை எதிர்ப்பதற்கு மாறாக, யூ.என்.பி. சர்வதேச நாணய நிதிய கடனையும் அதன் நிபந்தனைகளையும் வெளிப்படையாக ஆதரித்தது. 1983க்கும் 1994க்கும் இடையில் அதன் சொந்த ஆட்சியில் பின்பற்றிய எதேச்சதிகார வழிமுறைகளை எடுத்துக்கொண்டால், யூ.என்.பி. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாக காட்டிக்கொள்வதில் எந்த நம்பகத் தன்மையும் கிடையாது.

2005 ஜனாதிபதி தேர்தலின் போது இராஜபக்ஷவுக்காக பிரச்சாரம் செய்த ஜே.வி.பி, அவரது யுத்தத்தை முழுமையாக ஆதரித்ததோடு எதிர்க் கட்சி ஆசனங்களில் இருந்த போதும் அவரது அர்சாங்கத்தின் வரவு செலவுத் திட்டங்களுக்கு வாக்களித்தது. அது உழைக்கும் மக்களின் பாதுகாவலானக காட்டிக்கொண்டாலும், அரசாங்கத்தைக் கவிழ்க்க அச்சறுத்தும் எந்தவொரு தொழிலாளர் போராட்டத்தையும் ஜே.வி.பி. யும் அதன் தொழிற்சங்கங்களும் மற்றும் அதன் ஏனைய முன்னணி அமைப்புக்களும் பயனற்றதாக்கிவிடுகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் ஜே.வி.பி. அரசாங்கத்துக்குள் நுழைவதற்கான அடிப்படையாக தனது சொந்த "தேசத்தை கட்டியெழுப்பும்" பிரேரணையை முன்வைத்தது.

ஐக்கிய சோசலிச கட்சி (யூ.எஸ்.பி.), நவசமசமாஜக் கட்சி (ந.ச.ச.க.) போன்ற முன்னாள் தீவிரவாத கட்சிகளும் தென் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்றன. ஏதாவதொரு பிரதான முதலாளித்துவ கட்சிகளுடன் சந்தர்ப்பவாத கூட்டணி சேரும் சாதனைகளை இந்த கட்சிகள் படைத்துள்ளன. அவர்களது அரசியலின் தரக்குறியீடு, முதாலாளித்துவத்தின் சகல பகுதிகளிலும் இருந்தும் பிரிந்து தொழிலாள வர்கக்ம் அரசியல் ரீதியில் சுயாதீனமாக போராடுவதை இயல்பாகவே எதிர்ப்பதாகும்.

பல ஆண்டுகளாக, யூ.எஸ்.பி. மற்றும் நவசமசமாஜக் கட்சியும், வலதுசாரி யூ.என்.பி. உடன் ஒப்பிடும் போது "குறைந்த கெடுதியை" பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொண்டு இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டு சேர்ந்திருந்தன. இப்போது இந்தக் கட்சிகள் யூ.என்.பி. யையும் இவ்வாறு புகழ்கின்றன. யூ.என்.பி. ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் எனக் கூறி அதன் சுதந்திரத்துக்கான மேடையில் யூ.எஸ்.பி. யும் பங்குபற்றியது. அண்மையில் இந்தக் கூட்டணியில் இருந்து நவசமசமாஜக் கட்சி விலகிக் கொண்டாலும், இராஜபக்ஷ அரசாங்கத்தை விட யூ.என்.பி. ஒரு சிறந்த மாற்றீட்டை பிரதிநிதித்துவம் செய்வதாக தொடர்ந்தும் வலியுறுத்துகிறது.

நவசமசமாஜக் கட்சியும் யூ.எஸ்.பி. யும் யுத்தத்தின் எதிரிகளாகக் காட்டிக்கொள்கின்றன. உண்மையில், ஏகாதிபத்திய அணுசரனையிலான சமாதான முன்னெடுப்புகளையும் புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களை தொடக்குவதற்காக 2002ல் யூ.என்.பி. அரசாங்கம் கைச்சாத்திட்ட யுத்த நிறுத்தத்தையும் ஆதரித்தன. அவ்வாறு செய்ததன் மூலம், அவை யுத்தத்துக்கு முடிவுகட்டுவதற்காக சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ கும்பல்களுக்கு இடையிலான அதிகாரப் பரவலாக்கல் உடன்படிக்கையை எட்டவும் தொழிலாளர் வர்க்கத்தை பரஸ்பரம் சுரண்டுவதை உக்கிரமாக்கவும் யூ.என்.பி. எடுத்த முயற்சிகள் தொடர்பாக மாயையை பரப்ப உதவி செய்தன.

இந்த சகல கட்சிகளுக்கும் எதிராக, சோ.ச.க. யும் அதன் வேட்பாளர்களும் சோசலிச அனைத்துலகவாத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேலைத் திட்டத்தை மேம்படுத்துகின்றனர். தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த சுதந்திரத்தில் இருந்தே ஆளும் வர்க்கத்தாலும் அதன் அரசியல் சேவகர்களாலும் பயன்படுத்தப்பட்டு வரும் தேசியவாத மற்றும் இனவாத நஞ்சை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். நாம் தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்குமாறும் தடுப்பு முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யக் கோருமாறும், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பாதுகாப்பு படைகளை திருப்பியழைக்க கோருமாறும், அதே போல் அவசரகால ஆட்சி, பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஏனைய ஜனநாயக விரோத விதிகளுக்கும் முடிவுகட்டுமாறும் சகல தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

புலிகளின் தோல்வியில் இருந்து அவசியமான அரசியல் படிப்பினைகளை தமிழ் தொழிலாளர்களும் இளைஞர்களும் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் தோல்வி வெறுமனே இராணுவ ரீதயிலானது அல்ல, மாறாக அரசியல் தோல்வியுமாகும். புலிகளின் பிளவுபடுத்தும் வேலைத் திட்டமான பிரிவினைவாதம் தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்கின்றதே அன்றி, தமிழ் வெகுஜனங்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. "தமிழ் தேசத்தை" பாதுகாப்பதன் பேரில், புலிகள் சிங்கள சிவிலியன்கள் மீதான தனது பயங்கரவாத தாக்குதல்களின் மூலம் இனவாத பிளவுகளை மேலும் ஆழமடையச் செய்ததோடு தமது அரசியல் எதிரிகளையும் இரக்கமின்றி நசுக்கினர். புலிகளின் முதலாளித்துவ ஈழத்துக்கான கோரிக்கை, எப்பொழுதும் ஏதாவதொரு பெரும் வல்லரசின் ஆதரவில் தங்கியிருந்ததோடு ஒரு அழிவுகரமான மரண முடிவு என்பதும் ஒப்புவிக்கப்பட்டுள்ளது. தீவு பூராவும் உள்ள உழைக்கும் மக்களுடனான ஒரு பொது வர்க்க போராட்டத்தின் ஊடாக மட்டுமே தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தமது வாழ்க்கைத் தரலத்தையும் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க முடியும்.

சோ.ச.க. இலங்கை முதலாளித்துவத்தின் சகல பகுதிகளில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரிசியல் சுயாதீனத்துக்காகப் போராடுகிறது. கடந்த 60 ஆண்டுகளாக யுத்தம், வறுமை மற்றும் பயங்கரத்தை தவிர வேறு எதையும் கொண்டுவராத மோசடி மற்றும் ஊழல் நிறைந்த அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் உழைக்கும் மக்களால் பங்காளிகளைத் தேட முடியாது. மாறாக, 1930 களின் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான பூகோள பொருளாதார பின்னடைவின் சுமைகளைத் தாங்கத் தள்ளப்பட்டுள்ள தெற்காசிய மற்றும் சர்வதேச தொழிலாளர்கள் மத்தியிலயே உழைக்கும் மக்களின் பங்காளிகளைக் காண முடியும்.

பொருளாதார மற்றும் மூலோபாய மேலாதிக்கத்துக்காக உலக மட்டத்தில் தமது எதிரிகளுடன் மோதும் அதே வேளை, பொருளாதார நெருக்கடியின் முழு சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதே ஆளும் வர்க்கத்தின் பொதுவான பதிலாகும். உலகம் பூராவும் 50 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தொழிலை இழக்கவுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டில் மட்டும் வேலையற்றவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 மில்லியனை எட்டியுள்ளது. தனது பொருளாதார சரிவை தடுப்பதன் பேரில், எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் தனது செல்வாக்கை பற்றிக்கொள்ள அமெரிக்கா தனது இராணுவத் திறனை ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் இப்போது பாகிஸ்தானிலும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றது. பூகோளத்தின் ஒவ்வொரு மூலையிலும் இப்போது பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான பகைமை யுத்தத்துக்கு வழிவகுத்து வருகின்றது.

தொழிலாள வர்க்கம் தனது சொந்த சர்வதேச மூலோபாயத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். சோ.ச.க., உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சகோதரக் கட்சிகளுடன் இணைந்து, வங்குரோத்து முதலாளித்துவ அமைப்பை தூக்கிவிசி அதை திட்டிமிடப்பட்ட உலக பொருளாதாரத்தில் பதிலீடு செய்ய தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட போராடுகின்றது. இலங்கையில், ஒடுக்கப்படும் கிராமப்புற வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் துயரங்களில் இருந்து வெளியேற வழிகாட்டும் ஒரே தொழிலாள கட்சி சோ.ச.க. மட்டுமே. சோ.ச.க. ஒரு சில செல்வந்தர்களுக்காக அன்றி, முழு வெகுஜனங்களதும் தேவைகளை பூர்த்தி செய்வதன் பேரில், சோசலிச முறையில் சமுதாயத்தை மீளக் கட்டியெழுப்பும் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காப் போராடுகிறது. நாம் தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிச குடியரசு ஒன்றியங்களை அமைப்பதன் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

சோ.ச.க. பின்வரும் கொள்கைகளை பரிந்துரைக்கின்றது:

சகருக்கும் பாதுகாப்பான மற்றும் நல்ல சம்பளத்துடன் கூடிய தொழில்

முதலாளித்துவமானது வேலையின்மை துன்பத்துக்கு முடிவுகட்ட இலாயக்கற்றது. சம்பளக் குறைப்பு இன்றி, வேலை நேரத்தை வாரத்துக்கு 30 மணித்தியாலமாக குறைப்பதன் மூலம் தொழில் வாய்ப்பை விரிவாக்க சோ.ச.க. பிரேரிக்கின்றது. நல்ல சம்பளத்துடன் கூடிய இலட்சக்கணக்கான தொழில்களை உருவாக்கவும் மற்றும் பொது வீடமைப்பு, பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் மற்றும் வீதிகள் உட்பட -குறிப்பாக நாட்டில் யுத்தத்தால் அழிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில்- கட்டியெழுப்பும் திட்டத்துக்கு நூற்றுக்கணக்கான கோடிகள் கொட்டப்பட வேண்டும்.

உயர்ந்த தரத்திலான இலவசக் கல்வி மற்றும் சுகாதார பாதுகாப்புஅரசாங்கத்தின் வயிற்றிலடிக்கும் திட்டத்தில் முதலில் பாதிக்கப்படுவது அத்தியாவசியமான சமூக சேவைகளாகும். அது ஏற்கனவே செல்வந்தர்கள் சிலருக்காக தனியார் பல்கலைக்கழகங்களுக்கு கதவுகளைத் திறந்துவிட்டுள்ளதுடன் அரச பல்கலைக்கழகங்களுக்கும் பொது பாடசாலைகளுக்குமான செலவுகளை வெட்டியுள்ளது. இது ஊழியர்கள் பற்றாக்குறை, அதிக கூட்டம் மற்றும் வசதிகள் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது. சோ.ச.க. தமது கல்வியை முன்னெடுக்க விரும்பும் சகலருக்கும் விரும்பிய வரை மற்றும் பல்கலைக்கழக மட்டம் வரை இலவச மற்றும் உயர்ந்த தர கல்வியை வழங்க பொதுக் கல்வியை பரந்தளவில் விரிவுபடுத்த வேண்டும் என அழைப்பு விடுக்கின்றது.

அரசாங்கம் இலவச சுகாதார சேவையை அலட்சியம் செய்வது, அண்மையில் புற்று நோய் ஆஸ்பத்திரியில் உள்ள தாதிமாருக்கு அடிப்படை உபகரணங்களை வழங்க மறுத்துள்ளதன் மூலம் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இலவச சுகாதார சேவையின் சீரழிவு, டெங்கு போன்ற மரணம் விளைவிக்கும் நோய்கள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளது. செலவிடக் கூடியவர்களுக்காக தனியார் ஆஸ்பத்திரிகள் ஊக்குவிக்கப்படும் அதே வேளை, அரசாங்க ஆஸ்பத்திரிகள் அத்தியாவசிய மருந்துகளும் உபகரணங்களும் இன்றி காய்ந்து போய்கின்றன. சுகாதார சேவையில் இலாபம் ஈட்டுவதற்கு முடிவுகட்டுவதோடு சகலருக்கும் கட்டணம் இன்றி உயர்ந்த தரத்திலான சுகாதார சேவையை வழங்க சிறந்த முறையில் உபகரணமயப்படுத்தப்பட்ட மற்றும் அவசியமானளவு ஊழியர்கள் உள்ள பொது ஆஸ்பத்திரிகளையும் சிகிச்சை நிலையங்களையும் கட்டியெழுப்ப வேண்டும் என சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.

Eradicate rural poverty

கிராமப்புற வறுமையை அகற்று

கிராமப்புற வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு அடிப்படைப் பிரச்சினையையும் அறுபது ஆண்டுகால முதலாளித்துவ ஆட்சி தீர்த்துவிடவில்லை. 2007 உலக வங்கி ஆய்வு, இலங்கயில் 88 வீதமான வறியவர்கள் கிராமப்புறங்களிலேயே இருப்பதாக கண்டுள்ளது. விவசாயிகள் நிலப் பற்றாக்குறை மற்றும் கடுமையான கடனில் பாதிக்கப்பட்டுள்ளனர். மானியங்கள் வெட்டப்பட்டுள்ளன. அண்மைய விலை ஏற்றங்கள், விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் செலவில் இடைத்தரகர்களதும் பெரும் வர்த்தகர்களதும் இலாபங்களை தூக்கி நிறுத்தியுள்ளது. மீனவர்கள் இராணுவக் கட்டுப்பாடுகளின் சுமைகளையும் சேர்த்து மேலதிக சுமைகளைத் தாங்குகின்றனர்.

இன பேதமின்றி நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் கிடைக்க அரச நிலங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என சோ.ச.க. கோருகிறது. இலகுவான நிபந்தனைகளின் கீழ் சகல ஏழை விவசாயிகளுக்கும் வங்கிக் கடன்கள், விவசாய உபகரணங்கள், உரம் மற்றும் மருந்து வகைகளும் வழங்கப்பட வேண்டும். விவசாயக் குடும்பங்களின் தரமான வாழ்க்கையை உறுதிப்படுத்தும் வகையில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு உத்தரவாத விலை வழங்கப்பட வேண்டும். மீன்பிடி மீதான சகல இராணுவ கட்டுப்பாடுகளும் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

பெரும் வர்த்தகர்களும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளும் இந்தப் பிரேரணைகளை "யதார்த்தமற்றவை" என்றும் "நடைமுறைப்படுத்த முடியாதவை" என்றும் அவற்றை முன்னெடுக்க பணம் இல்லை என்றும் கூறுவார்கள். முதலாளித்துவ தனியார் சொத்து அமைப்பின் கீழ் இத்தகைய பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றதாகும். கூட்டுத்தாபன கும்பல்களின் இலாபத்துக்காக அன்றி, வெகுஜனங்களின் நலன்களின் பேரில் சமுதாயத்தை உச்சி முதல் அடிவரை மறு ஒழுங்கு செய்வதன் மூலம் இதற்கான நிதி வளத்தை அணிதிரட்ட முடியும். வங்கிகளும் பெரும் கூட்டுத்தாபனங்களும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படல் வேண்டும்.

அரசாங்கத்தின் "பொருளார யுத்தத்துக்கு" எதிராக ஒரு சோசலிச மாற்றீட்டின் அவசரத் தேவையைபற்றி உழைக்கும் மக்கள் மத்தியில் சாத்தியமானளவு பரந்த கலந்துரையாடலை தொடக்கிவிட சோ.ச.க. தென் மாகாணசபை தேர்தலில் திடமான பிரச்சாரத்தை முன்னெடுக்கும். எமது கட்சியின் நிதிக்கு பங்களிப்பு செய்து, எமது பொதுக் கூட்டங்களுக்கு வருகை தந்து, எமது பிரச்சார இலக்கியங்களை விநியோகித்து மற்றும் எமது வாசகர்களுக்கு வாக்களிப்பதன் மூலமும் எமது பிரச்சாரத்துக்கு நடைமுறையில் ஆதரவளிக்குமாறு நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள், குடும்பப் பெண்கள், தொழில் நிபுணர்கள், சிறு விவசாயிகள் மற்றும் வேலையற்றவர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். எல்லாவற்றுக்கும் மேலாக, எமது முன்நோக்கையும் வேலைத்திட்டத்தையும் வாசிக்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ள விண்ணப்பிக்குமாறும் நாம் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஊக்குவிக்கின்றோம்.

2712104 (இலங்கை) என்ற இலக்கத்துடன் தொலை பேசி மூலம் அல்லது wswscmb@sltnet.lk மின்னஞ்சல் மூலம் சோ.ச.க. உடன் தொடர்புகொள்ளவும்.