World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Federal Grand Coalition parties lose support in North Rhine-Westphalia local elections

ஜேர்மனி: கூட்டாட்சி பெரும் கூட்டணிக் கட்சிகள் வடக்கு ரைன்-வெஸ்ஸ்பாலியா உள்ளூர்த் தேர்தல்களில் ஆதரவை இழக்கின்றன

By Sybille Fuchs
3 September 2009

Use this version to print | Send feedback

ஜேர்மனியின் இரு பெரிய கட்சிகளான கிறிஸ்தவ ஜனநாயக யூனியனும் (CDU), சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD) கடந்த ஞாயிறு நாட்டில் அதிக மக்கள் நிறைந்த மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (NRW) வில் நடைபெற்ற உள்ளூர்த் தேர்தல்களில் கணிசமான இழப்புக்களை கண்டன. வாக்குப் பதிவும் இதுவரை இல்லாத அளவிற்கு குறைவாக இருந்தது.

மத்திய அரசாங்கத்தின் பெரும் கூட்டணியில் CDU, SPD இரண்டும் முக்கிய கட்சிகள் ஆகும். இது கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் (CDU) அதிபர் அங்கேலா மேர்க்கெல் தலைமையில் உள்ளது. வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் அவற்றின் தேர்தல் பின்னடைவு அடுத்த மத்திய அரசாங்கத்தை நிர்ணயிக்கும் தேசியப் பாராளுமன்ற தேர்தல்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக வந்துள்ளது.

ஜேர்மனியின் மேற்கில் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலம் அமைந்துள்ளது. இது தொழில்துறையிலும் பொருளாதார சக்தியிலும் அதிக வளர்ச்சியுற்ற மாநிலம் ஆகும். இதன் மிகப் பெரிய நகரம் கொலோன் (Cologne) ஆகும்.

14.4 இலட்சம் மொத்த வாக்காளர்கள் இருக்கும்போது, 52.3 சதவிகிதத்தினர்தான் வாக்குப் பதிவு செய்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் 54.4 சதவிகிதம் பங்கு பெற்றது. அப்பொழுதும் அதுவரை அது மிகக் குறைவான வாக்குப் பதிவு ஆகும். இந்த ஆண்டு உள்ளூர் தேர்தல்களில் முதல் தடவையாக 16 வயதில் இருந்து 937,000 இளவயதினர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் வெகு சிலரே வாக்களித்தனர்.

மொத்தத்தில் 36.8 சதவிகிதமான வாக்குகள் CDU விற்கு கிடைத்தது. ஆனால் 2004 உடன் ஒப்பிடும்போது 4.8 சதவிகிதம் குறைவு ஆகும். 1999 உள்ளூர்த் தேர்தல்களில் பழைமைவாத கட்சி 50.3 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது.

ஞாயிறன்று சமூக ஜனநாயகக் கட்சி 2.3 சதவிகிதம் வாக்குகளை இழந்தது. கட்சி பெற்ற 29.4 சதவிகித மொத்த வாக்கு என்பது இரண்டாம் உலகப் போருக்குப்பின் பின்னர் மாநிலத்தில் மிக மோசமான எண்ணிக்கையாகும்.

கடந்த வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா உள்ளூர்த் தேர்தல்களில், அப்பொழுது அதிகாரத்தில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கூட்டணி அரசாங்கத்தின் சமூகநல எதிர்ப்புக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் கொண்டிருந்த சீற்றத்தில் இருந்து CDU பயனடைய முடிந்தது. அந்த அரசாங்கம் சமூக ஜனநாயகக் கட்சி அதிபர் கெஹாட் ஷ்ரோடர் தலைமையில் இருந்தது.

இந்த தேர்தலில் சில பெரிய நகரங்களில் வாக்குகளை இழந்தபோதும் சமூக ஜனநாயகவாதிகள் CDU வின் கொள்களைகள் பற்றி மக்கள் கொண்டிருந்த ஏமாற்றத்தினால் பலன் அடைந்துள்ளது. அதன் பெரும்பாலான மாநகர முதல்வர், நகர மன்ற உறுப்பினர் பதவிகளையும் சமூக ஜனநாயகக் கட்சி தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. அதே நேரத்தில் சில இடங்களை CDU வில் இருந்து மீண்டும் கைப்பற்றிக்கொண்டுள்ளது. 13 பெரிய நகரங்களில் சமூக ஜனநாயகக் கட்சி மாநகரசபை முதல்வர் பதவிகளை பெற்றது, CDU 9 இனை பெற்றது. 36 மாவட்ட (கிராமப்புற) நிர்வாகங்களில் நான்கைத் தவிர மற்றவை அனைத்தும் CDU வினால் வெற்றி கொள்ளப்பட்டன.

இழப்புக்கள் இருந்தபோதிலும்கூட, CDU, SPD இரண்டும் தாம் வெற்றிபெற்றதாக அறிவித்துக் கொண்டன. மொத்த வாக்குகளில் அதிகமானவற்றை தான் பெற்றதாக CDU தம்பட்டம் அடித்துக் கொண்டது. SPD முக்கிய நகரங்களில் முதல்வர் பதவிகளைத் தான் கைப்பற்றிவிட்டதாக பெருமை பேசியது.

அதன் கொலோன், எஸ்ஸன், டோர்ட்முண்ட் நகர முதல்வர் பதவி வெற்றிகளைப் பற்றி SPD மிக அதிகமாகப் பேசியுள்ளது. எஸ்ஸனில் SPD 1999TM CDU விற்கு இழந்திருந்த முதல்வர் பதவியை மீண்டுக் எடுத்துக்கொண்டது. கொலோனில் நகர மையத்தில் நடந்த கட்டிட இடிபாட்டை ஒட்டி CDU முதல்வர் மதிப்பிழந்தார். அது நகரத்தின் ஆவணக்காப்பகங்களின் ஒரு பகுதியை அழித்துவிட்டது. இதையொட்டி சமூக ஜனநாயவாதிகளின் யூர்கன் ரொட்டர்ஸ் பசுமைவாதிகள் ஆதரவுடன் அதிகாரத்தைப் பெற்றார்.

ரூர் (Ruhr) பிரதேசத்தில் CDU விடம் இருந்து முதல்வர் பதவிகள், நகரமன்ற உறுப்பினர்கள் பதவியை SPD மீட்டது. 34 முதல் 35 சதவிகித வாக்குகளை அது பெற்றது. Gelsenkirchen நகரில் அது 50.5 சதவிகித வாக்குகளைப் பெற்றது. முந்தைய தேர்தலைக்காட்டிலும் 6 சதவிகித வாக்குச் சரிவு இருந்தபோதிலும் Oberhausen நகர மன்றத்திலும் தான் கொண்டிருந்த கட்டுப்பாட்டை SPD தக்கவைத்துக்கொண்டது.

பசுமை வாதிகள் தங்கள் மொத்த எண்ணிக்கையை மாநிலத்தில் 10.3ல் இருந்து 12 சதவிகிதத்திற்கு அதிகரித்துக் கொண்டாலும், தடையற்ற சந்தை ஆதரவு கொடுக்கும் தாராளவாத ஜனநாயக கட்சி (FDP- Free Democratic Party) அதன் பங்கினை 6.8ல் இருந்து 9.3 சதவிகிதம் உயர்த்திக் கொண்டது.

SPD, CDU கட்சிகளுக்கு ஏற்பட்ட இழப்பில் இருந்து இடதுகட்சி (Left Party) அதிக இலாபம் பெறவில்லை. மாநிலம் முழுவதும இடது கட்சி 4.4 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றது. ரூர் நகரங்களில் 5 சதவிகித வாக்குளைத்தான் பெற்றது. முன்பு தொழில்துறை கோட்டைகளாக இருந்த அந்த இடங்கள் இப்பொழுது ஆலைமூடல்கள் மற்றும் வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளன.

இடது கட்சி Oberhausen நகரில் சிறந்த முடிவான 8.5 சதவிகித்ததை பெற்றது. இதன் இரண்டாம் சிறந்த வெற்றி (7.7 சதவிகிதம்) என்று Duisburg நகரில் கிடைக்கப்பட்டது. கிராமப்புறப் பகுதிகளில் அதற்கு ஆதவு 4 சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் இருந்தது. இன்னும் நல்ல முடிவுகள் வந்திருக்கும் என்று கட்சி நம்பிக்கை கொண்டிருந்தது. கூட்டாட்சிப் பாராளுமன்றத்திற்கு தேவைப்படும் குறைந்தபட்ச 5 சதவிகித வாக்குகளாவது கிடைக்கும் என்று கருதியது. கொலோன் நகரில் பசுமைவாதிகள் 7 சதவிகித வாக்குகளை எதிர்பார்த்தனர். ஆனால் 4.8 சதவிகிதத்தைத்தான் உண்மையில் அடைந்தனர்; இது வலதுசாரி கொலோன் மக்கள் இயக்கத்திற்கு (Citizen's Movement for Cologne) கிடைத்த 5.4 சதவிகிதத்தை விட குறைவானதாகும்.

பல சிறிய கட்சிகள் மற்றும் புதிய தேர்தல் குழுக்களும் வாக்குளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது ஆகும். 10 கட்சிகளும், தேர்தல் குழுக்களும் Duisburg நகர உள்ளூர் நகரமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறும். இதுவரை நடைமுறையில் இருக்கும் அரசியல் கட்டமைப்பில் பங்கு பெறாத பல கட்சிகள் மக்களிடம் இருந்து ஆதரவைப் பெற்றன.

நடைமுறையில் இருக்கும் கட்சிகளிடம் இருந்து இளைஞர்கள் கோபத்துடன் விலகி நின்று வாக்குகளைப் பதிவு செய்யவில்லை என்ற நிலையில், இளந்தலைமுறையினருடன் தொடர்புபட்ட பிரச்சினைகளை எடுத்துக் கொண்ட பல கட்சிகளும் ஒப்புமையில் ஓரளவு வெற்றியைத்தான் பெற்றன. இணையதள சுதந்திர அடிப்படையில் பிரச்சாரம் செய்யும் Pirate Party, Munster, Aachen ல் நகரமன்ற இடங்களில் வெற்றிபெற்றது. Aachen நகரின் ஒரு பகுதியில் இது 9.7 சதவிகித வாக்கைப் பெற்றது.

45,000 மக்கள் வசிக்கும் Monheim சிறுநகரத்தில் பள்ளி மாணவர்களால் முதலில் நிறுவப்பட்ட PETO கட்சியின் 27 வயது வேட்பாளர் 30.4 சதவிகித வாக்குகளைப் பெற்றார். இது அவருடைய ஆறு போட்டியாளர்கள் பெற்றதைவிட அதிகமாகும். 10 ஆண்டுகள் முன்பு நிறுவப்பட்ட PETO இளைஞர்களுக்கு கூடுதல் வசதி வேண்டும் என்று போராடியுள்ளது. அதில் கலாச்சார, கல்வி நிதிஒதுக்கீடுகள், மழலை பள்ளிகள், திரைப்படத் திட்டங்கள் மற்றும் பாப் இசைக்கு பதிவு நிறுவனங்கள் ஆகியவை அடங்கும்.

Duisburg-Essen பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் வல்லுனரான Karl Rudolf Korte உள்ளூர் தேர்தல்கள் பற்றி கூறுவதாவது: "மக்கள் கட்சிகளுக்கு [மரபார்ந்த முறையில் CDU, SPD அழைக்கப்படும்விதம்] ஆதரவு குறைந்துவிட்டது. இது அதிகமாகிக்கொண்டு போவதுடன் கூடுதலாக அவை நடத்தர அளவுக் கட்சிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன."

நடைமுறையில் இருக்கும் கட்சிகள் உள்ளூர் மட்டத்தில் தம்மை நெருக்கமாக இணைத்துக்கொள்வதன் மூலம் இதனை எதிர்கொள்கின்றனர். எல்லா இடங்களிலும் கட்சிகளின் கூட்டணிதான் நடைமுறை ஆகும் போல் உள்ளது. SPD, CDU, FDP, பசுமைக் கட்சி மற்றும் இடது கட்சி அனைத்தும் பரந்த கூட்டணிக்காக பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றன.

ரூர் நகரமான Essen ல் உள்ள பசுமைவாதிகள் SPD உடன் கூட்டணி உருவாக்க நோக்கம் கொண்டுள்ளனர். இவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக CDU உடன் நகரத்தை ஆட்சி செய்த பின்பு இந்த முயற்சி வந்துள்ளது. ஏராளமான மற்ற நகரங்களும் கிராமசபைகளும் புதிய ஆளும் கூட்டணிகளை எதிர்கொள்ளும்.

SPD, CUD இரண்டுமே சிறு கட்சிகளின் ஒத்துழைப்பை நம்பியுள்ளன. இடது கட்சி உட்பட அச்சிறுகட்சிகள் அனைத்துவித அழைப்புக்களும் பரிசீலிக்கப்படும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளன. தேர்தலுக்கு சற்று முன்தான் இடது கட்சியின் மாநிலத் தலைவர் வொல்வ்காங் சிம்மர்மான் தாம் CDU உடன் ஒத்துழைக்க தயார் என்று அறிவித்தார்.

கூட்டாட்சி பேச்சுவார்த்தைகளின்போது, பல கட்சிகளும் கடும் சிக்கன நடவடிக்கைகளை கொண்ட திட்டங்களை வளர்க்கும். அதில் பொதுச்சேவைகளுக்கான கூடுதலான விலை மற்றும் பொது வசதிகள் மூடப்படல் ஆகியவையும் அடங்கும். இத்தகைய கொள்கைகள் நகரசபைகளின் நிதிய நெருக்கடிகளை தொழிலாளர்கள் மீது நகர்த்தி விடும். வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் பதவி ஏற்கும் எந்தக் கட்சியும் முதலாளித்துவ இலாப முறை மற்றும் வங்கிகள், பெருநிறுவன உயரடுக்கின் மேலாதிக்கம் இவற்றிற்கு சவால் விடத் தயாராக இல்லை.

பெரும் வரிகுறைப்பு அடிப்படையில் நகரசபைகள் தொடர்ந்து ஒன்றோடொன்று போட்டியிட்டு தங்கள் பகுதிகளில் கடைகளை வைக்குமாறு நிறுவனங்களுக்கு சாதகமான சலுகைகளை கொடுக்கின்றன. இந்த விதத்தில் உழைக்கும் மக்கள், வறியவர்கள், நோயுற்றவர்கள் மற்றும் முதியோர்கள், எண்ணிக்கையில் பெருகும் வறிய குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோர் அவரவர் தலைவிதியின் படி தள்ளப்படுவர்.

இவ்விதத்தில் பிரத்தியேகச் சிறப்பை கொண்டது Dortmund நகரமாகும். தேர்தலுக்கு மறுநாள் தற்போதைய SPD முதல்வரும் SPD மன்ற உறுப்பினரும் வரவுசெலவுத்திட்ட முடக்கத்தை அறிவித்தனர். மன்ற உறுப்பினரான Christiane Uthemann பொதுப்பணிகளில், குறிப்பாக இளைஞர்களுக்கான உதவி, கலாச்சார, விளையாட்டுக்களுக்கு செலவழிக்கப்படும் பணத்தில் மிக அதிக குறைப்பைக் கோரினார். அனைத்து மன்றத் துறைகளும் எந்தப் பிரிவுகளில் குறைப்புக்கள் செய்யப்படலாம் என்ற பட்டியலைத் தருமாறு கோரப்பட்டுள்ளன.