World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: What is the significance of the falling-out between the NPA and the trade unions?

பிரான்ஸ்: புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகளின் முக்கியத்துவம் என்ன?

By Anthony Torres
8 September 2009

Use this version to print | Send feedback

சில தொழிற்சங்கங்கள் ஒலிவியே பெசன்ஸநோவின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ஆகஸ்ட் 23 ல் இருந்து ஆகஸ்ட் 26 வரை Port-Leucate ல் நடத்திய கோடைப் பயிலகத்தில் கலந்து கொள்ள மறுத்ததைப் பற்றி பிரெஞ்சு ஊடகம் அதிகம் எழுதியுள்ளது. அது தொழிலாளர்களை பொறுத்தவரையில் ஒரு வினாவை எழுப்புகிறது: NPA விற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளின் அரசியல் முக்கியத்துவம் என்ன?

பெப்ருவரி 10, 2009ல் தன்னைத் தானே கலைத்துக் கொண்டபின் LCR (Ligue Communiste Revolutionnaire) னால் நிறுவப்பட்ட NPA, அதன் முன்னோடி அமைப்பின் மரபான நட்புரீதியான அழைப்பிதழை தொழிற்சங்கங்களுக்கு அதன் கோடைப் பயிலகத்தில் கலந்து கொள்ள தொடர்ந்து அனுப்பியது. ஆனால் இந்த ஆண்டு CGT (கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக உள்ள தொழிலாளர் கூட்டமைப்பு), CFDT (பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு, சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானது), FO (தொழிலாளர் சக்தி) ஆகியவை அழைப்பை ஏற்கவில்லை. CGT யின் கூட்டமைப்பு செயலாளர் Alain Guinot, NPA க்கு ஜூலை 10 அன்று தான் மறுத்ததற்கு ஒரு விளக்கத்தை அனுப்பினார். "போராட்டங்களுக்கு என்ன முலோபாயங்கள்" என்ற தலைப்பில் உள்ள விவாதங்களில் CGT பங்கு பெறுவதற்கில்லை என்று Guinot விளக்கினார்; இது CGT யின் நனவான "நம்முடைய அமைப்புக்களுக்கு இடையே நம் சிறப்பு உரிமைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிக் கருத்து வேறுபாடு உள்ளது" என்பதை உறுதிபடுத்துகிறது.

தொழிலாளர்களின் போராட்டங்கள் பற்றியதில் தொடர்ந்த காட்டிக் கொடுப்புக்களினால் அவர்களிடையே விளைந்துள்ள பெருகிய சீற்றத்தை நன்கு அறிந்துள்ள தொழிற்சங்கங்கள், தங்கள் நடத்தை பற்றி எந்தக் குறைகூறலையும் தாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற எச்சரிக்கையை NPA க்கு கொடுத்துள்ளன. "தொழிலாளர்கள் நலன்கள் மற்றும் போராட்டங்களை நடத்துவதில் தொழிற்சங்கங்களின் பொறுப்பை எடுத்துக் கொள்ளும்" ஒரு கட்சி என்ற நிலையை CGT ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

தொழிற்சங்கத்தின் பிற்போக்குக் கொள்கைகள் பற்றி மெளனம் சாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்கொண்ட வகையில் NPA, CGT உடன் சமாதானம் காண முற்பட்டது. Sandra Demarcq என்னும் முக்கிய உறுப்பினரின் கையெழுத்தில் Le Monde யில் வெளிவந்த NPA இன் பதில்: "அவர்களுடன் (CGT) நாங்கள் விடுமுறைக்குப் பின்னர் வேலைக்கு திரும்புவதின் முன்னோக்குகள், தொழிற்சங்கங்களுக்கும் அரசியல் அமைப்புக்களுக்கும் இடையே அமைக்கப்பட வேண்டிய பரந்த ஒற்றுமை பற்றிய முன்னோக்குகள் பற்றி நாங்கள் விவாதிக்க விரும்பினோம்."

CGT க்கும் NPA க்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு Port-Leucate க்கு வருமாறு கான்டினென்டலில் உள்ள Xavier Mathier விடம் கொடுத்த அழைப்பிதழை அடுத்து தீவிரமாயிற்று; அவர் Clairoix ல் கான்டினென்டல் ஆலையில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தை தனிமைப்படுத்தியதற்கு CGT தேசியத் தலைமையைக் கண்டித்தார்.

ஜேர்மனிய கான்டினென்டல் தொழிலாளர்களுடன் ஹனோவரில் ஒரு கூட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்ற பின்னர், Clairoix தொழிலாளர்களும் Sarreguemines ல் உள்ள கான்டினென்டல் ஆலையை ஆக்கிரமித்தனர். ஆலையை மூடும் திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்ற அவர்களுடைய கோரிக்கை ஒரு நீதிமன்றத் தீர்ப்பினில் நிராகரிக்கப்பட்டததை அடுத்து Oise பிரிவில் இருந்த அரசாங்க அலுவலகங்களை, Compiegne ல் இருப்பது உட்பட, Mathieu உட்பட பல கான்டினென்டல் தொழிலாளர்கள் தகர்த்தனர்.

தஙகள் போராட்டத்திற்கு CGT ஆதரவு இல்லாததால் தடைக்குட்பட்ட தொழிலாளர்கள் தங்கள் ஆலை மூடப்பட்ட பின்னர் சற்று அதிகமான பணிநீக்க ஊதியங்களைத்தான் பெற முடிந்தது.

France Info Radio வில் சேவியர் மாத்யூ, "CGT தலைவரான Thibault மற்றும் அவர் குழுவினர் அரசாங்கத்துடன் இழைந்து இருப்பதுடன், தொழிலாளர்களை அமைதியாக வைத்திருப்பதற்குத்தான் உகந்தவர்கள். இந்த இழிந்தவர்களால் அதைத்தான் செய்ய முடியும்." என்றார்.

அரசாங்க அலுவலகத்தை தாக்கியதற்காக Compiegne நீதிமன்றத்தால் குற்றவிசாரணைக்குட்பட்டது குறித்து அவர் கூறியது: "Bernard Thibault எங்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கவில்லை. இது வெட்ககரமானது! எங்களுக்கு கிடைத்த ஒரே விடையிறுப்பு CGT வன்முறையில் இறங்குபவர்களுக்கு ஆதரவு தருவதில்லை என்றும் அதன் வழிவகைகளில் முற்போக்குத்தனம் இல்லை என்பதும்தான்."

மாத்யூவிற்கு கோடைப் பயிலகத்திற்கு NPA கொடுத்த அழைப்பு தொழிலாளர்களின் போராட்டங்களை காட்டிக் கொடுத்துவிட்ட தொழிற்சங்கங்களின் கொள்கைகளை அம்பலப்படுத்தும் ஒரு போராட்டத்துடன் எந்தவித தொடர்பும் கொண்டிருக்கவில்லை. Marianne க்கு கொடுத்த பேட்டியில் ஒலிவியே பெசன்ஸநோ உறுதிபடக் கூறியது: "CGT உடன் நாங்கள் ஒன்றும் மோதலுக்கு நிற்கவில்லை. அவர்கள்தான் நாங்கள் அழைத்திருக்கும்போது கோடைப் பயிலகத்திற்கு வரவில்லை. எங்கள் மீது அதற்கும் குற்றம் சாட்ட முடியாது...CGT யோடு நாங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டும், விவாதங்களைப் புதுப்பிக்க வேண்டும். "

இத்தகைய கருத்துப் பரிமாற்றங்கள் தொழிற்சங்கங்களுக்கும் NPA க்கும் இடையே உள்ள வேறுபாட்டின் கடந்து செல்லும் தன்மையைக் காட்டுகின்றன; தொழிற்சங்கம் தொடர்பான அதன் நோக்குநிலை--தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர்கள் கொண்ட சீற்றம் அல்ல-- அவற்றின் அரசியலின் மையக் கூறுபாடாக தொடர்ந்து இருக்கிறது.

தொழிலாளர் போராட்டங்கள் பற்றிய தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுப்புக்களை மூடி மறைக்கும் நீண்ட மரபு LCR இடம் உண்டு. 1995ல் யூப்பே அரசாங்கம் போருக்குப் பிந்தைய சமூக நலன்களான ஓய்வூதியங்கள், சமூகப் பாதுகாப்பு, வேலைகள் மீதான தாக்குதல்களைத் தொடங்கியது. இதை எதிர்கொள்ளும் விதத்தில் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டை மீறி வேலைநிறுத்தம் செய்து, அது அரசாங்கத்தையே கவிழ்க்கும் திறனுடைய பொது வேலைநிறுத்தமாக மாறக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டிருந்தது. "இடது தீவிர" ஆதரவைக் கொண்ட தொழிற்சங்கங்கள் யூப்பே திட்டம் ஓரளவிற்கு திரும்பப் பெறும் நிலையைக் கொண்டுவந்தன. இது ஜனாதிபதியாக இருந்த ஜாக் சிராக்கிற்கு முற்றிலும் இழிவுற்ற பிரதமர் யூப்பேயின் அரசாங்கத்தில் இருந்து சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் லியோனல் ஜோஸ்பனால் ஒழுங்காக அமைக்கப்படுவத்கு உரிய அவகாசம் கொடுத்தது.

2003 ல் 30 சதவிகிதம் ஓய்வூதியங்களைக் குறைத்தல், தேசிய பொதுக் கல்வி முறையை மத்தியக் கட்டுப்பாட்டில் இருந்து அகற்றுதல் ஆகியவை மில்லியன் கணக்கான அரசாங்க மற்றும் தனியார் துறை தொழிலாளர்களை தெருக்களுக்கு அழைத்து வந்தன. 1995 போல் மீண்டும் வந்துவிடுமோ என்று அஞ்சிய தொழிற்சங்கங்கள் பெரும் அரசியல் அழுத்தத்திற்கு உள்ளாயின. CFDT எதிர்ப்புக்களை நாசவேலைக்கு உட்படுத்தி அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்தது; அப்பொழுது FO, CGT, முக்கிய ஆசிரியர் தொழிற்சங்கம், FSU ஆகியவை அவ்வப்பொழுது (தொடர்ந்து என்று இல்லாமல்), வேலைநிறுத்தங்களை கடைப்பிடித்தன.

தொழிற்சங்கங்கள் CPE எனப்பட்ட முதல் வேலை ஒப்பந்தத்திற்கு எதிராக 2006லும், 2007-2008 ல் சார்க்கோசியின் ஓய்வூதியச் சீர்திருத்தத்திற்கு எதிரான இரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்ததிலும் இதே பங்கைத்தான் கொண்டிருந்தன.

இன்று உலகப் பொருளாதார நெருக்கடி அனைத்து அரசியல் பதட்டங்களையும் தீவிரப் படுத்திக் கொண்டிருக்கையில், தொழிற்சங்கங்கள், NPA-LCR ஆகியவை அவற்றை மிருதுவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

அரசாங்கம் பில்லியன் கணக்கான யூரோக்கள் பொது வரிப்பணத்தை வங்கிகளை மீட்க கொடுத்துக் கொண்டிருக்கும்போது, ஓய்வூதியச் சீர்திருத்தம், ஆலைகள் மூடல் என தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சுமத்திக் கொண்டிருக்கிறது-- இது வர்க்க இயல்பின் முழுத் தன்மையை நிரூபிக்கிறது. நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்து 2008 கடைசிக் காலாண்டில் உரிய மக்கட் தொகுப்பில் வேலையின்மை 7.5 சதவிகிதம் என்பதில் இருந்து 2009 இரண்டாம் காலாண்டில் 9.1 சதவிகிதம் என்று உயர்ந்துள்ளது. மேலும் இன்னும் வேலையின்மை 300,000 மாணர்கள் வேலைச் சந்தைகளுக்கு வரும்போது உயரும்.

பொருளாதார நெருக்கடிக்கு எதிரான அரசியல் தாக்குதலை தொழிலாள வர்க்கம் மேற்கொள்ளுவதை தடுக்க தொழிற்சங்கங்களின் துரோகச் செயல்களைத்தான் அரசாங்கம் நம்பியிருக்கிறது. கான்டினென்டல், நியூ பேப்ரிஸ், காடர்பில்லர் இன்னும் பல ஆலைகளில் நடைபெறும் தொழிலாளர்கள் போராட்டங்களை தொழிற்சங்கங்கள் முறையாக தனிமைப் படுத்தியுள்ளன; இது தொழிலாளர்களை பணிநீக்க ஊதியங்களை ஏற்கும் கட்டாயம் அல்லது வளைந்து கொடுக்கும் பணிநேர நிலைமை ஆகியவற்றை வணிகங்களில் இலாபத்தைக் காப்பதற்காக ஏற்கும் கட்டாயத்திற்கு தள்ளியது.

அதே நேரத்தில் தொழிற்சங்கங்க்ள் PS ன் பிற்போக்குத்தன கொள்கைகளுக்கு ஆதரவு கொடுக்கின்றன. ஜனவரியில் இருந்து மே மாதத்திற்கு இடையே அவை PS தலைவர் Martine Aubry சார்க்கோசியின் திட்டமான பொருளாதாரத்தை மறு சீராக்குதலுக்கு கொண்டுவந்த திருத்தங்களுக்கு ஆதரவு கொடுத்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. PS உடனும் NPA ஆப்ரியின் அரசியல் துவக்க முயற்சிகளின் வடிவமைப்பிற்குள் தொழிற்சங்கங்கள் நடத்தும் நடவடிக்கை தினங்களில் பங்கு பெற தொழிலாளர்களுக்கு முறையீட்டையும் அழைப்புக்களையும் அனுப்பியது.

பெப்ருவரியில் காங்கிரஸ் நிறுவப்பட்ட பின்னர், NPA ட்ரொட்ஸ்கிசத்தை ஒரு அரசியல் அடிப்படைக் கோட்பாடு இல்லை என்று நிராகரித்துவிட்டது. ட்ரொட்ஸ்கிச நிராகரிப்பு முதலாளித்துவத்திற்கு NPA ஒரு முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் அமைப்பாக மாறுவதற்குத் தயார் என்பதின் அடையாளம் ஆகும். முதலாளித்துவக் கட்சிகளான Jean-Luc Melanchon உடைய இடது கட்சி (PG), கம்யூனிஸ்ட் கட்சி (PCF) இவற்றுடனான உடன்பாடுகள் முன்னேறும் சூழ்நிலையை ஏற்படுத்த NPA முயற்சிக்கிறது.

NPA, CGT க்கு இடையில் உள்ள வேறுபாடுகளின் விளைவுகள் NPA தலைமையின் அரசியல் கருத்தாய்வுகளில் இருக்கும் பிற்போக்கு, சந்தர்ப்பவாத தன்மையை விளக்கிக் காட்டுகின்றது.

NPA ஐ பொறுத்தவரையில், PS இன்னும் மற்ற பிரெஞ்சு முதலாளித்துவக் கட்சிகளுடன் சார்பு என்பதில் இருந்து அரசியல் போராட்டம் என்பது பிரித்துப் பார்க்க முடியாதது. இவ்விதத்தில் NPA அரசியல் குழுவின் உறுப்பினரான Philip Pignarre தன்னுடைய புத்தகமான (Being Anti-Capitalist Today,) இன்று முதலாளித்துவ எதிர்ப்பாளராக இருப்பது, என்பதில், "முற்றிலும் சமூகத் தளத்தை நீங்கி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தீவிர பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு மக்கள் போராட்டத்தை நடத்துவதற்கான நிலைமை, அது இடது மரபார்ந்த கட்சிகளை ஒரு நிலைப்பாடு எடுத்துக் கொள்ளும் கட்டாயத்தில் தள்ளும். இதில் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று கோரும் கட்டம் வரக்கூடும்" என்று எழுதினார்.

ஒலிவியே பெசன்ஸநோவுடன் ஒரு பேட்டியின் போது, Marianne அவரைக் கேட்டது; "ஒரு பொது வேலநிறுத்தத்திற்கு நீங்கள் ஆதரவு கொடுப்பீர்களா?" பெசன்ஸநோ விடையிறுத்தார்: "நாங்கள் ஒரு பொது வேலைநிறுத்தம் பற்றிப் பேசும்போது, "பெரிய சமூகப் புரட்சி" பற்றி [Grand Soir, என்ற சொல், ஸ்ராலினிஸ்ட்டுக்களாலும், சீர்திருத்த வாதிகளாலும் உண்மையான சோசலிச முன்னோக்கை நிராகரிக்க இழிந்த முறையில் பயன்படுத்தும் சொற்றொடர்], நாங்கள் சிந்திக்கவில்லை. நாங்கள் திறமையான செயற்பாட்டைத்தான் காண முற்படுகிறோம்."

இவ்விதத்தில் "Grand Soir" நிராகரிக்கப்பட்டது --அதாவது ஒரு தொழிலாளர் போராட்டம் சமூகத்தை மாற்றும் என்பதை நிராகரித்தது-- தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர வர்க்கம் என கூறுவதற்கு NPA கொண்டிருந்த திரட்டப்பட்ட அவநம்பிக்கைத்தனம் மற்றும் விரோதப் போக்கு அனைத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. முதலாளித்துவத்திற்கும் முழுத் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஒரு புரட்சிகர மோதலின் புரட்சிகர உள்ளடக்கம் இல்லாத நிலையில், "பொது வேலைநிறுத்தம்" என்பது ஒரு வெற்று முழக்கம்தான்.