World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Massacre in Kunduz bares real nature of Afghanistan war

குண்டுஸில் நடந்த படுகொலை ஆப்கானிஸ்தானப் போரின் உண்மைத் தன்மையை அம்பலப்படுத்துகிறது

Statement by the Socialist Equality Party
9 September 2009

Use this version to print | Send feedback

கடந்த வார இறுதியில் ஜேர்மனிய இராணுவம் உத்தரவிட்ட ஒரு வான்வழித் தாக்குதல் ஆப்கானிஸ்தானில் எட்டு ஆண்டு காலமாக நடக்கும் நேட்டோ போரின் வரலாற்றில் மோசமான படுகொலைகளில் ஒன்றை விளைவித்தது.

வியாழனன்று இரவு குறைந்தது 125 பேராவது தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்பது இப்பொழுது தெளிவாகியுள்ளது. இத்தாக்குதல் ஜேர்மனிய ''மாகாண மறுகட்டமைப்பு குழு'' ("Provincial Reconstruction Team- PRT") என்று குண்டுஸில் இருக்கும் இராணுவத் தளபதி கேர்னல் ஜோர்ஜ் கிளைனால் உத்திரவிடப்பட்டது. ஆயுதமேந்திய போராளிகளை தவிர, தாக்குதல் அருகில் இருக்கும் கிராமவாசிகள் பலரையும் அழித்துவிட்டது. 2001 இலையுதிர்காலத்தில் நாட்டின் மீது அமெரிக்கா படையெடுத்ததில் இருந்து நடந்த பெரும் குருதி கொட்டிய விமானத் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.

இத்தகைய படுகொலை ஒன்றும் "தவறான முடிவுகள்" என்பதின் விளைவோ அல்லது "நேட்டோ விதிகள் பின்பற்றப்படாததால் வந்தது" என்று கூறப்படுவதோ அல்லது "தெளிவற்ற தளநிலைமையினால்" ஏற்பட்ட விளைவு என்பதும் அல்ல. இது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையில் நடக்கும் இராணுவ தலையீட்டின் புறநிலைத் தர்க்கத்தின் தவிர்க்க முடியாத விளைவாகும்.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க பயன்படுத்திய போலிக்காரணம் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் ஆகும். படையெடுப்பு மேற்கோள்ளப்பட்டதின் அறிவிக்கப்பட்ட நோக்கம் சர்வதேச பயங்கரவாதத்தின் தளங்களை அழித்தல், ஒசாமா பின் லேடன் மற்றும் அல் குவைதாவிற்கு அடைக்கலம் கொடுத்த தலிபான் ஆட்சியை அகற்றுதல் என்று இருந்தது. உண்மையில், 9/11க்கு பல காலம் முன்பே நாட்டை இராணுவரீதியாக ஆக்கிரமிக்கும் திட்டங்கள் தயாராகியிருந்தன.

உலகின் மிக அதிக மூலப் பொருட்கள் உள்ள இடங்களுக்கு நடுவே இருக்கும் ஆப்கானிஸ்தான் அமெரிக்க, ஐரோப்பிய சக்திகளுக்கு மத்திய மூலோபாயப் பகுதி ஆகும். எனவேதான் 1980களில் இச்சக்திகள் காபூல் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பிற்கு நிதியளித்து, சோவியத் ஒன்றியத்துடன் போரில் ஈடுபட்டு நாடு முழுவதையும் நாசப்படுத்தின. அந்த நேரத்தில் அமெரிக்காவின் நட்புறவில் அல் குவைதாவும் பல போதைப் பொருள், போர்ப்பிரபுக்களும் இருந்தனர். அவர்கள் இப்பொழுது கணிசமான அதிகாரத்தையும் செல்வாக்கையும் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் நடக்கும் மோதல் அல்ஜீரியா, வியட்நாம் இன்னும் பல நாடுகளில் நடந்த காலனித்துவ போர்களின் தனித்தன்மைகளையும் கொண்டுள்ளது. நாட்டில் அமெரிக்க தலைமையில் நடந்த படையெடுப்பிற்கு பெருகிய முறையில் வளர்ந்துள்ள எதிர்ப்பின் மூலம் இது தெளிவாகிறது. மேலை செய்தி ஊடகம் தவிர்க்க முடியாமல் இந்த எதிர்ப்பை "தலிபான்" என்று விவரிக்கையில், உள்ளூர் மக்களில் பலதரப்பட்ட பிரிவுகளிடம் இருந்துதான் பெருகிய முறையில் எதிர்ப்பு வருகிறது என்பது வெளிப்படை.

அதற்கான காரணத்தை அறிவது ஒன்றும் கடினம் அல்ல. ஒருபுறத்தில் ஆப்கானிய மக்கள் ஆக்கிரமிப்பு படைகளின் மிருகத்தன்மையை எதிர்கொள்ளுகின்றனர்; அவர்களுடைய தாக்குதல்கள் தொடர்ந்து ஏராளமான சாதாரண குடிமக்களின் உயிர்களை பறித்துள்ளன. மறுபுறம், அவர்கள் நாட்டின் புதிய ஆளும் சக்திகளான அமெரிக்கா, நேட்டோவின் ஆதரவிற்குட்பட்ட போதைப்பொருள் பிரபுக்கள், போர்ப்பிரபுக்கள் என்று எதிர்கொள்ளுகின்றனர். முன்பு இப்பகுதியில் முன்னேற்றம் மற்றும் அறிவார்ந்த தன்மைக்கு அடையாளமாக புகழப்பட்ட ஜனாதிபதி ஹமித் கர்சாய் இப்பொழுது இழிந்த ஊழல், தனது சொந்தங்களுக்கு நலன்புரிகிறவர் என்பவற்றுடன் இணைந்துவிட்டார். சில மேலை நாடுகள் அவருடைய ஆட்சியில் இருந்து தங்களை ஒதுக்கி வைத்துக் கொள்ளும் கட்டாயத்தில் இருக்கின்றன --எல்லாவற்றிற்கும் மேலாக அவர் கொடுத்த உறுதிமொழிகளையும் அவரால் காப்பாற்ற முடியவில்லை.

ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைவாதிகளும் ஜேர்மன் இராணுவம் தொடக்கத்தில் போரில் தலையிடுவதற்கு கொடுத்த நியாயப்படுத்தல்கள் நாட்டை மறு கட்டமைத்தல், ஜனநாயகத்தை நிறுவதல் மற்றும் மகளிருக்கு விடுதலை அளித்தல் என்பாதகும். இவை நீண்ட காலம் முன்னரே கற்பனைகள் எனத் தள்ளப்பட்டுவிட்டன. ஜேர்மன் படையினர் பெருகிய முறையில் எழுச்சியாளர்களுடன் ஆயுதமேந்தி மோதல்களில் ஈடுபடுவதுடன், கனரக ஆயுதங்கள், டாங்குகளையும் பயன்படுத்துகின்றனர். சில காலத்திற்குள்ளேயே அவர்கள் கடந்த வியாழன்று நடத்தப்பட்ட மிருகத்தன தாக்குதல் போல் ஒன்றில் தொடர்பைக் கொண்டிருந்தனர்.

ஒரு மத்திய தேர்தலுக்கு மூன்று வாரங்கள் மட்டுமே இருக்கையில் குண்டுஸில் நடந்த படுகொலை ஜேர்மன் அரசாங்கத்திற்கு மிகக் கடின நேரத்தில் வந்துள்ளது. ஒரு மிருகத்தன காலனித்துவ போரில் ஜேர்மன் இராணுவத்தின் தொடர்பு அதிகரித்துள்ளதற்கு அது பொறுப்பைக் கொண்டுள்ளது. இப்போரோ பொது விவாதம் இல்லா சூழ்நிலையில் தொடக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் போரை விலக்கிவைத்திருக்க அரசாங்கம் அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது. உண்மையில் பாதுகாப்பு மந்திரி பிரன்ஸ் யுங் ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் தலையீட்டை ஒரு "போரில் ஈடுபடல்" என்ற சொல்லைப் பயன்படுத்த மறுக்கிறார்.

குண்டுஸ் படுகொலை பற்றிய முதல் தகவல்கள் வந்தவுடன் பிரன்ஸ் யுங்கும் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலும் ஜேர்மனிய நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்தனர். தாக்குதல் நடந்து இரு நாட்களுக்குப் பின்னரும், ஞாயிறன்று அவர்கள் "ஆயுதமேந்திய தலிபான்கள்தான்" வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்றும் சாதாரண மக்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் கூறினர். வான்தாக்குதல் கைப்பற்றப்பட்ட இரு எரிபொருள் டாங்கர்களை ஜேர்மனிய தள முகாமைத் தாக்குவதற்கு பயன்படுத்துவதில் இருந்து தடுத்துவிட்டது என்று கூறி படுகொலையை நியாயப்படுத்தினர்.

ஆனால் பெருகிய முறையில் அவர்களுடைய கூற்றுக்கள் முரண்பாடுகளுக்கு உட்பட்டன. பல புதிய உண்மைகள் குண்டுவீச்சை அவர்கள் நியாயப்படுத்த முயன்ற நடவடிக்கைகளை பயனற்றதாக்கின. மாநிலத்தின் கவர்னர் அப்துல் வஹித் ஒமர்க்கேல் ஜேர்மனிய செய்தி ஊடகத்திடம் ஜனாதிபதி ஹமித் கர்சாயிடம் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலைக் கொடுத்துள்ளதாகவும் அதில் 10 வயதில் இருந்து 16 வயது வரை இருந்த பல குழந்தைகளும் இருந்தனர் என்று கூறினார். கடுமையான தீக்காயங்களுடன் இருந்த குழந்தைகளின் புகைப்படங்களும் உலகெங்கிலும் சுற்றி அனுப்பப்பட்டன.

அதே தினத்தில் அமெரிக்க செய்தி ஏடான வாஷிங்டன் போஸ்ட் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கத் தலைமைத் தளபதி ஸ்டான்லி மக்கிரிஸ்டலின் சிறப்பு அனுமதியுடன் சம்பவ இடத்தில் ஒரு விசாரணையை போஸ்ட் நிருபர் நடத்தி, கிராமவாசிகளைப் பேட்டி கண்டு, மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, ஜேர்மனிய, அமெரிக்க தளபதிகளுக்கு இடையே நடந்த கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.

இந்த செய்தித்தாளின் அறிக்கைப்படி, தளபதி கிளைன் வியாழனன்று மாலை எதிர்ப்புப் போராளிகள் கடந்திய இரு எரிபொருள் டாங்கர்கள் மீது குண்டுவீச அமெரிக்க தாக்குதல் விமானத்தின் உதவியை நாடினார். ஒரு B1 குண்டுவீச்சுக் குழு இதன் பின் இரு டிரக்குகளையும் கண்டுபிடித்தது; அவை ஓர் ஆற்றின் மணலில் பாதி புதையுண்டிருந்தன. மண்ணில் சிக்கியிருந்தாலும் கேர்னல் கிளைன் கூடுதல் விமான உதவியை உத்தரவிட்டார்.

அமெரிக்க F 15 போர் விமானம் சம்பவ இடத்திற்கு வந்து ஒளிப்பதிவு காட்சிகளை ஜேர்மனிய இராணுவத் தலைமயகத்திற்கு அனுப்பியது. இந்த ஒளிப்பதிவு காட்சிகள் இரு டாங்கர்களையும் ஏராளமான மக்கள் சுற்றி நின்றிருந்ததைக் காட்டியது. ஒளிப்பதிவு காட்சிகளில் தெரிந்த மக்கள் "ஆயுதமேந்திய தலிபான் போராளிகள்" என்று ஒரு தகவல் கொடுப்பவர் கேர்னல் கிளைனிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விவாதம் நடைபெற்றதோ இல்லையோ, கிட்டத்தட்ட அதிகாலை 2.30 மணிக்கு கேர்னல் கிளைன் விமானங்கள் குண்டுவீசுமாறு உத்தரவிட்டார். சில கணங்களில் அந்த இடம் பெரும் நெருப்புத் திடலாக மாறி எவரும் தப்ப முடியாமல் போயிற்று.

வாஷிங்டன் போஸ்ட் தகவல் மற்றும் பல நேரில் பார்த்தவர்கள் சாட்சியத்தின்படி அருகில் இருந்து கிராமங்களில் இருந்து பல சிறுவர் உட்பட மக்கள் நள்ளிரவில் டாங்கர்களில் இருந்த பெட்ரோலை சேகரிக்க விரைந்து வந்திருந்தனர். ஜேர்மனிய ஆக்கிரமிப்பு படைகளுக்கு செல்ல வேணடிய இந்த பெட்ரோல் பெரும்பாலான ஆப்கானிய மக்களுக்கு பெரும் ஆடம்பரப் பொருள் ஆகும்.

கிடைத்துள்ள அனைத்து தகவல்கள்படி, குண்டுஸ் படுகொலை ஒரு போர்க்குற்றம் ஆகும். ஒரு சிறு மணல்திட்டில் சிக்கிக் கொண்ட டாங்கர்கள் ஜேர்மன் படையினருக்கு எவ்வித நேரடி அச்சுறுத்தலையும் பிரதிபலிக்கவில்லை. தாக்குதலுக்கு உத்தரவிட்டவர்கள் உண்மையில் பொதுமக்களுக்கு ஆபத்து இல்லை என்று உண்மையில் நம்பியிருந்தாலும் பல டஜன் எழுச்சி போராளிகளை எரியும் நெருப்பு மூலம் அகற்றுவது நியாயப்படுத்தப்பட முடியாது. பலரும் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டது தவிர்க்க முடியாமல் ஜேர்மனிய துருப்புக்கள் தெற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா மற்றும் ரஷ்யாவில் இரண்டாம் உலகப் போரில் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் எதிர்ப்பாளர்கள்மீது நடத்திய பதிலடித் தாக்குதல்களைத்தான் நினைவிற்கு கொண்டுவருகின்றனது.

இந்தக் குற்றத்திற்கான பொறுப்பு ஜேர்மனிய பாராளுமன்றத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் உண்டு. அவைதான் ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய படைகளை நிலைநிறுத்த பச்சை விளக்கைக் காட்டின. அப்பொழுது முதல் அவர்கள் ஒருமனதாக படுகொலையைப் பயன்படுத்தி இப்போருக்கான தங்கள் ஆதரவை மறுஉறுதி செய்துள்ளன. அதிகபட்சம் பாதுகாப்பு அமைச்சரகம் மற்றும் ஜேர்மனிய இராணுவ உயர் கட்டுப்பாட்டு அலுவலகம் இரண்டும் தொடர்ச்சியாக பல பொய்களைக் கூறிய பின்னணியில், அவர்கள் பாதுகாப்பு அமைச்சரகத்தில் அதிருப்திகர தகவல் கொடுக்கும் கொள்கைகளை குறைகூறத் தயாராக உள்ளனர்;

அதிபர் அங்கேலா மேர்க்கெலும் (கிறிஸ்துவ ஜனநாயக யூனியல் CDU), பாதுகாப்பு மந்திரி யுங்கும் (CDU) ஜேர்மனிய இராணுவத்தின் நடவடிக்கைகளை வெளிப்படையாக நியாயப்படுத்தி ஆப்கானிஸ்தானில் இருக்கும் படையினருக்கு "அரசியல் ஆதரவை" உறுதி கூறினர். தன் பங்கிற்கு ஜேர்மனிய வெளியுறவு மந்திரி பிராங் வால்ட்ர் ஸ்ரைன்மையர் ஆப்கானிஸ்தானத்தில் இருக்கும் ஜேர்மனிய துருப்புக்கள் படுகொலை நடந்திருந்தபோதிலும், தொடர்ந்து தங்கள் "சிறப்பு மதிப்பை" தொடர்ந்து வைத்திருப்பர் என்பதில் தனக்கு நம்பிக்கையுண்டு என்றார்.

SPD உடன் ஜேர்மனிய துருப்புக்களை முதலில் 2001ல் ஆப்கானிஸ்தானிற்கு அனுப்புவதில் பொறுப்பு கொண்டிருந்த பசுமைவாதிகள் அங்கு வருங்காலததில் இராணுவ நிலைப்பாடு பற்றி கவலை கொண்டுள்ளனர். பசுமைவாதிகளின் தலைவர் Claudia Roth "குடிமக்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் போர் கூடாது. அது சர்வதேச படையினர்மீது உள்ள நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும். ஆப்கானிஸ்தானில் படைகளை நிறுத்துவதை பாரியளவில் தீமைக்கு உட்படுத்தும்." என விளக்கினார்.

ஆப்கானிய போருக்கு எதிரான பரந்த மக்களின் எதிர்ப்பை சமநிலைப்படுத்தும் வகையிலான பணியை இடது கட்சி கொண்டுள்ளது. ஜேர்மனிய தலையீட்டை பாராளுமன்றத்தில் எதிர்க்கும் ஒரே கட்சி இது. ஆனால் இப்போர் ஒரு காலனித்துவப் போர் என்பதை கட்சி ஒப்புக் கொள்ள மறுப்பது மிகவும் குறிப்பிடத்தக்க கூறுபாடாகும். "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று நேட்டோவின் தலையீட்டை அது கருதுகிறது. இடது கட்சியின் கருத்தின்படி பாராளுமன்ற விவாதங்கள், வாக்குகள் மூலம் சட்டரீதியாக வேறு வகைகளில் நடாத்தப்பட வேண்டும்.

இடது கட்சியின் குறைகூறல் அமெரிக்க நலன்களுக்கு ஜேர்மனிய நலன்களை அடிபணிய செய்யப்பட்டுள்ளதற்கு எதிராகவும் உள்ளது. இரு நேட்டோ பங்காளிகளுக்கு இடையே பெருகிய முறையில் அழுத்தங்கள் இருக்கும் பின்னணியில் இந்த நிலைப்பாடு மற்ற அரசியல் கட்சிகளிடம் இருந்தும் விரைவில் ஆதரவைப் பெறக்கூடும்.

ஜேர்மனிய அரசாங்கம் மற்றும் இராணுவம் மேற்கொண்ட மூடிமறைக்கும் முயற்சிகளையும் மீறி குண்டுஸ் போர்க்குற்றம் இவ்வளவு விரைவில் வெளிவந்த உண்மையானது அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே உள்ள பெருகிய அழுத்தங்களுடன் முக்கியமாக பிணைந்துள்ளது. இச்செய்தி வெளியீடுகள் அமெரிக்கத் தளபதிகளின் தூண்டுதல் பேரில் வாஷிங்டன் போஸ்ட்டினால் நடத்தப்பட்டன. தளபதி மக்கிறிஸ்டல் மருத்துவமனையில் குண்டுவீச்சுத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை பாசாங்குத்தனமாக சென்று பார்வையிட்டது அமெரிக்காவின் "நண்பர்கள்" மீது குற்றத்தை சுமத்தி ஜேர்மனியின் மீது அமெரிக்கத் தேவைகளுக்கு அதன் இராணுவக் குறுக்கீடு இசைந்து நடக்க வேண்டும் என்ற அழுத்தத்தைக் கொடுப்பதற்குத்தான்.

ஜேர்மனிய உயர்கட்டுப்பாடும் இதை நன்கு அறிந்துள்ளது. Spiegel-Online கருத்துப்படி ஜேர்மனிய அதிகாரிகள் அமெரிக்க நடத்தையை "இழிந்த திமிர்த்தனம்", "பதிலடி கொடுக்கும் தன்மை" என்று விளக்கியுள்ளனர்.

நேட்டோ பங்காளிகளுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை ஆப்கானிய மக்களுக்கு எதிராக அவர்களை அடக்க முற்படும்போதுதான் நிரூபிக்கப்படுகிறது. உண்ரையில் "நட்பு நாடுகளுக்கு இடையே" கொள்ளைப் பொருட்கள், ஆப்கானிஸ்தானிலும் மற்றும் அப்பகுதி முழுவதும் செல்வாக்கு மண்டலங்கள் பிரிக்கப்படுவது பற்றிய பூசல்கள் தீவிரமாகியுள்ளன. ஜேர்மனிய அமெரிக்க இராணவத் தளபதிகளிடையே கருத்துப் பரிமாற்றங்களில் காணப்படும் சூடான தொனிகள் இந்தப் பூசல்கள் விரைவில் ஒரு புதிய உலக பெரும் நெருப்பிற்கு வகை செய்யும் என்பதின் எச்சரிக்கை ஆகும்.

உடனடியாக அனைத்து ஜேர்மனிய படைகளும் திரும்பப் பெற வேண்டும் என்று ஜேர்மனிய சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுகிறது. ஜேர்மனிய இராணுவம் கலைக்கப்பட வேண்டும் என்றும் ஆயுதங்களுக்கும் போர்களுக்கும் பயன்படுத்தப்படும் பல இலட்சக்கணக்கான பணமும் சமூகத்தின் அவசரத் தேவைகளைப் பூர்த்திய செய்ய செலவழிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. பொறுப்புடைய இராணுவத் தளபதிகள் மட்டுமில்லாமல், ஜேர்மனிய இராணுவத்தை செயல்படுத்திய மேர்க்கெல், யங் (இருவரும் CDU), ஸ்ரைன்மையர், பீட்டர் ஸ்ட்ருக் (இருவரும் SPD), Jurgen Trittin, Renate Kunast (இருவரும் பசுமைக் கட்சியினர்) ஆகியோரும் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்த நோக்கங்கள் ஒரு சர்வதேச, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைக் கட்சிகளில் இருந்து சுயாதீனமாக அரசியல் வாழ்வில் தொழிலாள வர்க்கம் குறுக்கீடு செய்தால்தான் அடையப்பட முடியும். பேர்லின் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் தேசிய தேர்தலில் இத்திட்டத்திற்கு போராடும் ஒரு கட்சியை கட்டமைப்பதற்காக அதன் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.