World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பிலிப்பைன்ஸ்

Corazon Cojuangco Aquino, 1933-2009

கோரஜன் கொஜாங்கோ அகினோ, 1933-2009

By Joseph Santolan
4 August 2009

Use this version to print | Send feedback

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி கோரஜன் அகினோ ஆகஸ்ட் 1ல் குடல் புற்றுநோயினால் மரணமடைந்தார். முக்கிய ஊடகங்களில் பாராட்டுகளும், புகழ்ச்சிகளும் பெருக்கெடுக்க தொடங்குவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னர் அப்பெண்மணி உயிர் துறந்தார்.

அவர் மரணம் யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை. அவர் பதினெட்டு மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார், கடந்த ஆறு வாரங்களில் அவர் நிலைமை மிகவும் மோசமடைந்தது.

இந்த பெண்மணியின் மறைவுக்கு தங்களின் பிரதிபலிப்பை காட்ட செய்தி வெளியீடுகளுக்கும், அனைத்து சித்தாந்த போக்குகளின் அரசியல் குழுக்களுக்கும், மற்றும் நாடுகளின் வெளியுறவுத்துறை தலைவர்களுக்கும் நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்தது. சர்வதேச மற்றும் பிலிப்பைன்ஸ் பத்திரிகைகளில் அச்சிடப்பட்ட இரங்கல்களில் வரலாற்று பகுபாய்வு இல்லாமைக்கான எவ்வித விளக்கமும் இல்லை. ஒரு வீட்டுப்பெண்மணியாக இருப்பதில் விருப்பமற்றவர் என்றும், மார்கோ ஆட்சியின் காட்டுமிராண்டித்தனத்தால் அரசியலில் ஆர்வம் கொண்டவர் என்றும், வன்முறையற்ற புரட்சியால் ஆட்சியை பிடித்தவர் என்றும் அப்பெண்மணியை அவர்கள் உலகளவில் புகழ்வதென்பது ஒரு போலித்தனமாக ஊடகவியலாகும், அதுவொரு முதலாளித்துவ சிடுமூஞ்சித்தனத்தின் ஒரு கூட்டுகலவையாகும், மேலும் அது அவர்கள் விரும்பி ஏற்று கொண்டிருக்கும் வரலாற்று அலட்சியமாகும்.

பிலிப்பைன்ஸ் அரசியல்வாதிகள் அகினோ மீது உண்மையிலேயே ஒரு வெட்கக்கேடான வகையில் அவர்களின் தாராளமான புகழுரைகளை வாரியிறைத்திருக்கிறார்கள். இடதில் நிற்கும் பிலிப்பைன்ஸ் கட்சிகளும், குட்டி முதலாளித்துவ அமைப்புகளும் அகினோவை நினைவுகூரும் அமளியில் இணைந்து கொண்டார்கள், இவை ஒவ்வொன்றும் அவரின் மரணத்திற்காக ஆழ்ந்த துயரத்தின் அதன் சொந்த இரங்கல் அறிக்கையை அளித்தன. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், அவர்கள் அகினோவின் 'பாசிச ஆட்சியை' பெருங்கூச்சலுடன் குற்றஞ்சாட்டினார்கள். இன்று அவர்கள், அந்த பெண்மணியை 'ஜனநாயகத்தின் வீரத்திலகம்' என்றும், 'சர்வாதிகாரத்தின் மூர்க்கமான எதிர்ப்பாளர்' என்றும் பாராட்டுகிறார்கள்.

கோரஜன் அகினோ, கொஜாங்கோ குடும்பத்தின் ஓர் உறுப்பினராவார். ஸ்பானிய காலனியாக்கத்தின் போது தோன்றிய சொத்துக்களையும் அதிகாரபலத்தையும் கொண்ட ஆளும் வர்க்கச் சிறுகுழு நலன்களாலும், குடும்பச் சொத்துக்களை பரம்பரையாகக் கொண்டவர்களாலும் பிலிப்பைன்ஸ் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஹசின்டா லூசிட்டாவின் (Hacienda Luisita) 10,000 ஏக்கர் மற்றும் நிதிய நலன்களின் ஒரு சாம்ராஜ்ஜியம், விவசாய மற்றும் நகர்புற ரியல் எஸ்டேட் உட்பட டார்லாக்கின் (Tarlac) மத்திய லூஜன் மாகாணத்தில் பரந்த நிலங்களை கொஜாங்கோ குடும்பம் சொந்தமாக கொண்டிருந்தது.

இந்த செல்வ வளங்கள், கொஜாங்கோவினரின் அரசியல் ஈடுபாட்டிலிருந்து உருவாவதுடன், அவர்களுக்கு உதவியாகவும் இருக்கின்றன. கோரஜன் அகினோவின் ஜனாதிபதி பதவி மட்டுமன்றி அதற்கு அதிகமாக, கொஜாங்கோவினர் ஆளுனர்களாகவும், மேயர்களாகவும், செனட்டர்களாகவும் மற்றும் மந்திரிசபை பிரதிநிதிகளாகவும் இருந்தனர். மேலாதிக்க ஜனநாயகம் (Cacique democracy) மற்றும் சொத்துக்களையும் அதிகாரபலத்தையும் கொண்ட ஆளும் வர்க்க சிறுகுழுவின் பொருளாதார ஆட்சியின் (Oligarchic economic rule) பண்பாக விளங்கும் இது, ஸ்பானிய மற்றும் அமெரிக்க காலனித்துவவாத மரபாகவும் விளங்குகிறது.

சொத்துக்களையும் அதிகாரபலத்தையும் கொண்ட ஆளும் வர்க்க சிறுகுழுவின் தோற்றம்

எவ்வித வர்த்தக நிறுவனங்களையோ, தொழிற்துறைகள், சுரங்கங்கள் அல்லது விவசாயங்களையோ அபிவிருத்தி செய்வதற்கான உண்மையான நோக்கமில்லாமல் 350 ஆண்டுகளுக்கு பிலிப்பைனை ஸ்பெயின் ஒரு காலனித்துவ உடைமையாக கொண்டிருந்தது. மணிலா ஒரு சரக்கு கிடங்காக பயன்பட்டது, அது கடல்வழி வணிகத்திற்கான ஒரு வர்த்தக துறைமுகமாக இருந்தது. சீன பட்டுகளும், பீங்கான்களும் மெக்சிகன் வெள்ளிக்காக அகாபல்கோவிலிருந்து (Acapulco) அனுப்பப்பட்டன. இந்த பொருட்கள் பின்னர் ஐரோப்பாவில் அதிக விலையில் விற்கப்பட்டன. இந்த வர்த்தகத்தின் மேல் தவழ்ந்து சென்றதன் மூலமாகவும், இதை நிர்வகித்ததன் மூலமாகவும் காலனித்துவ அதிகாரத்துவவாதிகள் இலாபம் ஈட்டினார்கள். பிலிப்பைன்ஸ் மாகாணங்கள் பெரும்பாலும், பிரத்யேகமாக, பரந்த எஸ்டேட்களை கையகப்படுத்தி இருந்த ஸ்பானிய குருமார்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.

1820ல் ஏற்பட்ட மெக்சிகன் புரட்சி, செவேல்-அகபோக்கோ-மணிலா ஆகியவற்றின் கடல்வழி வர்த்தகத்தையும் பலமாக பாதித்தது, இதனால் பிலிப்பைனியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, ஆக்கவளமற்றவர்களாக (unproductive) ஆனார்கள். பிரிட்டிஷ் முதலீட்டாளர்கள், அபிவிருத்தி அடைந்திராத பிலிப்பைன்சில் அவர்களுக்கு கிடைத்த வாய்ப்புக்களை கைப்பற்ற ஆர்வமுற்றிருந்தார்கள்.

காலனித்துவ அத்துமீறல் மற்றும் புரோட்டஸ்டன்டு செல்வாக்கு ஆகியவற்றின் அச்சத்தால், வெளிநாட்டினர் மணிலாவிற்கு வெளியில் வாழ்வதை தடுக்கும் வகையில் ஸ்பானியர்கள் தொடர்ச்சியாக காரணமின்றி அடிக்கடி மாறுகின்ற பல சட்டங்களை நடைமுறைப்படுத்தினார்கள். பிரிட்டிஷ் முதலீட்டாளர்கள், வியாபாரத்திற்கு வசதியாக வர்த்தக மையங்களை ஏற்படுத்தினார்கள், ஐரோப்பாவில் வெளியிடப்பட்ட கடன் ஆணை கடிதங்களை (letters of credit) பூர்த்தி செய்யும் வகையில் கையில் போதிய முதலீட்டுடன் கூடிய வங்கிகளையும் உருவாக்கினார்கள். இவ்வாறு பல ஆண்டுகளுக்கு மூலதனத்தை பயனின்றி நிறுத்தி வைத்திருந்த அவர்கள், முதலீட்டிற்கான ஒரு வாய்ப்பை ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்தார்கள். உள்ளூர் மக்களான இன்டியோகளுக்கு (indio) பெரியளவிலான பணத்தை கடனாக அளிப்பது அப்போது சட்டவிரோதமாக இருந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டு மத்தியில் சீன ஆண்களின் வரவும், 1850க்கு பின்னர் வந்த இரண்டாவது வரவும், ஏற்றுமதி-இறக்குமதி வியாபார அபிவிருத்திக்கான தேவையின் பொருளாதார இடைவெளியை நிரப்பியது, அத்துடன் முதலீட்டிற்கான வாய்ப்புக்களை எதிர்பார்த்திருந்த பிரிட்டிஷ் மூலதனத்திற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. புலம்பெயர்ந்த திருமணமாகாதவர்கள், இன்டியோக்களை திருமணம் செய்து கொண்டார்கள்; அவர்களின் குடும்பங்கள் சீன கலப்பினங்களாயின.

காலனித்துவ நிர்வாகத்தில் இருந்தும், இன்டியோ மக்களிடமிருந்தும் இனப்பிரச்சனைகளை தவிர்க்க, இந்த சீன கலப்பின குடும்பங்கள் ஸ்பானிய மகாநகரத்திலிருந்து ஸ்பானிய பெயர்களையும், ஸ்பானிய மொழியையும், மற்றும் உற்பத்திபொருட்களையும், உச்சரிப்புகளையும், பழக்கவழக்கங்களையும் மற்றும் கலாச்சாரத்தையும் தங்களுக்குள் ஏற்றுக்கொண்டார்கள். பொதுவாக புதிய குடும்பபெயரின் முடிவில் சேர்க்கப்படும் ஒரு மரியாதைக்குரிய முன்மொழியான Hokkienese k'o (கொஜாங்கோ போன்றது) என்பதைத் தவிர, ஒரு தலைமுறைக்குள்ளாகவே இன்டியோ மற்றும் சீன தோன்றலின் அனைத்து அறிகுறிகளும் அழிக்கப்பட்டுவிட்டன.

இந்த கலப்பினக்காரர்கள் (Mestizos) படிப்படியாக பிலிப்பைன்சில் முதலாளித்துவ விவசாயத்தையும், ஏற்றுமதி சார்ந்த ஒருசார்பு-விவசாயத்தையும் (Mono-cropping) அபிவிருத்தி செய்தார்கள், பிரிட்டிஷாரால் நிதி உதவியளிக்கப்பட்ட இதில், கிராமப்புற தொழிலாளர்களும், விவசாய பங்குதாரர்களும் இடம்பெற்றார்கள். இந்த கலப்பினக்காரர்கள் பெரும்பாலும் கத்தோலிக்க மதமுறைகளின் பரந்த நிலவுடைமைகளில் வாடகையாளர்களாக இருந்தார்கள். 1869ல் சூயஜ் கால்வாய் திறக்கப்பட்டவுடன், ஐரோப்பாவுடன் நேரடி வர்த்தகம் தொடங்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் உலக முதலாளித்துவத்துடன் உறுதியாக இணைக்கப்பட்டது.

1896ல் ஸ்பெயினுக்கு எதிரான பிலிப்பைன்ஸ் புரட்சியை தொடர்ந்து, அமெரிக்கா தன் சொந்த காலனித்துவ உடைமைகளை கொண்டிருக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன், ஒரு காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் மூலம் பிலிப்பைன்ஸ் தீவுகளை வெற்றி கொண்டது, இது இருபதாம் நூற்றாண்டிற்குள்ளும் நன்கு நீடித்திருந்தது. தாங்கள் மூன்றாந்தர காலனித்துவ ஆதிக்கத்தின் உடைமையாக இருப்பதாக நீண்டகாலத்திற்கு கோபம் கொண்டிருந்த மெஸ்டீஸோ (mestizo) சொத்துக்களையும் அதிகாரபலத்தையும் கொண்ட ஆளும் வர்க்கச் சிறுகுழு, ஸ்பெயினை ஓர் ஐரோப்பிய பின்நீரோட்டமாக (Backwater) கருதினார்கள். தங்களின் பொருளாதார மற்றும் அரசியல் விருப்பங்களை மேம்படுத்தும் என்பதால் அமெரிக்க உடைமையாக இருப்பதை அங்கீகரித்த அவர்கள், புதிய வெற்றிகளை வரவேற்றார்கள்.

அமெரிக்க காலனி அரசாங்கம் இறுதியாக மடத்துறவிகளின் நிலவுடைமை உரிமைகளை பறித்தது, இதனால் பரந்த தோட்டங்கள் (Haciendas) மெஸ்டீஸோ சொத்துக்களையும் அதிகாரபலத்தையும் கொண்ட ஆளும் வர்க்கச் சிறுகுழு கைகளில் வந்து விழுந்தன. சொத்து வைத்திருந்தவர்களுக்கு வாக்குரிமையை கடுமையாக கட்டுப்படுத்திய ஒரு ஜனநாயக பிரதிநிதித்துவ சீர்திருத்தங்களை (A representative democracy of sorts) அமெரிக்கர்கள் உருவாக்கினார்கள், அதை அவர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வந்தார்கள்.

இரண்டாம் உலக யுத்த காலகட்டத்தின் போதும் கூட, மக்கள்தொகையில் 14 சதவீதத்தினருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. மணிலாவில் அமெரிக்கர்கள் ஏற்படுத்தி இருந்த இரு சட்ட சபைகள் உள்ள அமைப்பு, விரைவாக விரிவடைந்து வந்த சிவில் சேவையில் விருப்பமான பதவிகளை வினியோகிக்க சொத்துக்களையும் அதிகாரபலத்தையும் கொண்ட ஆளும் வர்க்க சிறுகுழுவிற்கு வாய்ப்பை அளித்தது, இதன் மூலம் அவர்களின் பிராந்தியத்திற்குள் அவர்களுக்கு ஆதரவான அதிகாரத்தை விரிவாக்கியது. ஒவ்வொரு குடும்பமும், அரசாங்கத்தில் உறுப்பினர்களை கொண்டிருக்க விரும்பியது.

ஜப்பானிய ஆக்கிரமிப்பு மற்றும் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர், அமெரிக்கர்கள் பெயரளவில் பிலிப்பைன்சிற்கு சுதந்திரம் வழங்கினார்கள், இருப்பினும் ஒப்புமை உடன்பாட்டு முறை (system of parity agreements) மூலம் தீவுகள் மீது அவர்கள் கணிசமான பொருளாதார கட்டுப்பாட்டைத் தக்க வைத்திருந்தார்கள். நேரடியான அமெரிக்க அரசியல் கட்டுப்பாட்டின் முடிவுடனும், மத்திய அரசின் குறிப்பிடத்தக்க பலவீனத்துடனும், மேற்குடியினரின் சொத்துக்களையும் அதிகாரபலத்தையும் கொண்ட ஆளும் வர்க்கச் சிறுகுழு அரசியல் அதன் மலர்ச்சிகாலத்திற்குள் (heyday) நுழைந்தது. குடும்பப் பரம்பரைகள் கிராமப்புற மற்றும் நகர்புறங்களின் பரந்த மூலகங்களிலிருந்து தனியார் இராணுவங்களை பெற்றது. தேர்தல்களில் ஊழல் மட்டும் மிகுந்திருக்கவில்லை. அவை இரத்தந்தோய்ந்த சம்பவங்களாக இருந்தன, அவற்றில் போட்டியாளர்கள் கொல்லப்பட்டார்கள், வாக்காளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டார்கள்.

அமெரிக்க காலனி காலத்தின் போது, பல முன்னணி குடும்பங்கள் அமெரிக்க சந்தைக்கான சிறப்பு அனுமதி மூலம் அவர்களின் செல்வவளத்தை உருவாக்கி கொண்டார்கள். படிப்படியாக சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில், கட்டணங்களும், வர்த்தகத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டன, இவை இலாபத்தை கடுமையாக குறைத்தன.

இதை, அந்த அதிகார ஆளும் தட்டினர், அரசின் நிதி அதிகாரத்தில் செல்வாக்கைக் பயன்படுத்தி ஈடுகட்டியது. "பொருளாதார சுதந்திரத்தையும், இறக்குமதிக்கு மாற்றான தொழில்துறை ஆக்கத்தையும் ஊக்குவித்தல் என்ற வெளிவேடத்தின் கீழ், செலாவணி விகிதங்களில் மோசடி செய்யப்பட்டன, ஏகபோக (Monopolistic) உரிமைகள் பொட்டலம் கட்டப்பட்டன, பெரிய-மலிவான-பொதுவாக திரும்ப செலுத்தப்படாத வங்கி கடன்கள் இரத்து செய்யப்பட்டன, மற்றும் ஒரு ஒழுங்கற்ற சட்ட அமைப்பினால் தேசிய பட்ஜெட் சிதறடிக்கப்பட்டது. பெரிய நிறுவன அமைப்புகளைக் கொண்ட பரம்பரைகளில் சில, நகர்புற ரியல் எஸ்டேட், ஓட்டல்கள், பொது சேவைகள், காப்பீடு, பரந்த ஊடகம், மற்றும் இவை போன்றவற்றில் தங்களை மாற்றிக் கொண்டன." (பெனிடிக்ட் ஆண்டர்சன் எழுதிய The Spectre of Comparisons என்ற புத்தகத்தில், "Cacique Democracy in the Philippines" என்பதில் உள்ள கூற்று, இலண்டன்: Verso, 1998, பக்கம் 208). அரசியல்வாதிகள் தேசியவாத சொற்றொடர்களையும், படுமோசமான முடிவுகளுக்கு உதவுக்கூடிய கருத்தற்ற வார்த்தைகளையும் உச்சரிக்க கற்று கொண்டார்கள். இந்த மலர்ச்சிக்காலத்தின் போது தான் பினிங்னோ "நினாய்" அகினோ மற்றும் பெர்டினாண்ட் மார்கோஸ் அரசியலில் நுழைந்தார்கள்.

பெர்டினண்டும், இமெல்டா மார்கோஸூம்

மார்கோஸ் சிறந்த அறிவாளியாக இருந்தார். அவரும், அவர் மனைவியும் அளவற்ற ஆசைகளைக் கொண்டிருந்தார்கள், அவர்கள் சொத்துக்களையும் அதிகாரபலத்தையும் கொண்ட ஆளும் வர்க்க சிறுகுழுவின் கீழ்மட்டத்திலிருந்து பிலிப்பைன்ஸ் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் மட்டத்திற்கு உயர்ந்தார்கள். cacique அரசியல்வாதிகளுக்கும், அவர்களின் தனியார் இராணுவத்திற்கு எதிராகவும், பெருமளவில் இருப்பில் இல்லாத கம்யூனிசத்திற்கு எதிராகவும், 1960களில் பிலிப்பைன்சில் உருவாக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் மார்கோஸ் ஓர் ஈர்ப்பான பிரச்சாரத்தை (charismatic campaign) நடத்தினார்.

நகர்புற நடுத்தர வர்க்கத்தின் ஆதரவை வென்ற அவர், ஒழுங்குமுறையாக செயல்படும் அரசிற்குள் தொழில்நுட்ப அறிஞராட்சி கோட்பாட்டாளர்களை (technocrats) விரும்பினார். மார்கோஸ், வடக்கு பிலிப்பைன்சின் இலோகனோ (Ilokano) பேசும் பகுதியிலிருந்து வந்தவராவார், இலோகனோ (Ilokano) விவசாயிகள் மற்றும் நகர்புற ஏழைகளின் சில பிரிவுகளின் ஆதரவை அவர் வென்றெடுத்தார். வர்க்க அடிப்படையில் கிடைத்த ஆதரவான இது, 1965ல் மார்கோசை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது.

டான்டெமில் (Tandem) பணியாற்றி வந்த பெர்டினாண்ட் மற்றும் இமெல்டா (Imelda), அதிரடி வெற்றியுடன் அவர்களின் சுய செழிப்பிற்காக ஜனாதிபதி அலுவலகத்தை பயன்படுத்தினார்கள். அழகாகவும், அதேசமயம் கோமாளித்தனமாக இருந்த இமெல்டா, உலக தலைவர்களை சந்திப்பதற்காகவும், பொருட்கள் வாங்குவதற்காகவும் உலகமெங்கும் சுற்றி கொண்டிருந்தார். பெர்டினாண்ட், இராணுவ படைகளை கணிசமாக விரிவாக்கி கொண்டதன் மூலமாகவும், அவருக்கு நன்றிகடன்பட்ட இலோகனோ அதிகாரிகளின் பதவிகளை உயர்த்தியதன் மூலமாகவும் தம் அரசியல் அதிகாரத்தை வலிமைப்படுத்தி கொண்டார். இராணுவத்தின் மேற்தட்டு படைவீரர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார்கள், இது cacique தலைவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. இராணுவ ஆட்சியின் போது, மார்கோஸ் அரசியல் போட்டியாளர்களிடமிருந்து பெருநிறுவனங்களை பறிமுதல் செய்த போது, அவர் நம்பிக்கையான தளபதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் அவற்றை ஒப்படைத்திருந்தார். உடன்நிகழ்வாக இராணுவம் அரசியல்மயமாக்கப்பட்டது, அத்துடன் மார்கோஸின் ethno-nepotismத்தால் துண்டாக்கப்பட்டது.

இமெல்டா மார்கோஸ், மார்கோஸின் வெளிநாட்டு கொள்கையின் பலவற்றை நடைமுறைப்படுத்தினார். உலக தலைவர்களை சந்தித்த அவர், இராஜாங்க சூழ்ச்சிகளையும், சுய சொற்புரட்டுகளையும் பயன்படுத்தி இராணுவம், அரசியல் மற்றும் நிதி உதவிகளைப் பெற்றார். அவர் தேவைகளுக்கு அது பயன்பட்டபோது, அவர் கபடமில்லாமல் தென்பட்டார். அவர் ஏமாற்றி இணங்கச் செய்தார், மயக்கினார் மற்றும் இறுமாப்புடன் வற்புறுத்தினார். ஐந்து அமெரிக்க ஜனாதிபதிகளை தனியாக சந்தித்த அவர், நான்சி ரீகனின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார்.

வேறெந்த அமெரிக்கரையும் விட அவரும், அவர் கணவரும் அமெரிக்க அரசியலின் மற்றும் கொள்கையின் அகத்தையும், புறத்தையும் மிக நன்றாக புரிந்து வைத்திருந்தார்கள். இதை அவர்கள் தங்களின் சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்தினார்கள், அவர்களின் பக்கம் உதவ அமெரிக்க அரசியல்வாதிகளை இயங்க வைத்தல், கம்யூனிச எதிர்ப்பு அச்சங்கள் மீது விளையாடுதல், பிலிப்பைன்சில் அமெரிக்க தளங்களின் ஒத்தியை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகளுடன் எப்போதும் நாணமுடன் மயக்குதல் போன்றவற்றை அவர்கள் செய்தார்கள். 1968 நிக்சனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு 1 மில்லியன் டாலரும், 1972ல் மற்றொரு மில்லியனையும் மார்கோஸ்கள் அளித்தார்கள். உண்மையில், இந்த பணம் பிலிப்பைன்ஸ் அரசின் கருவூலத்திலிருந்து வந்ததாகும்.

1969ல் மார்கோஸ் இரண்டாவது முறையாக பதவிக்கு வந்தார், மிகவும் அதிர்ச்சி உண்டாக்கும் வகையில் அவர் பிரச்சாரத்திற்கு செலவிடப்பட்டது, பிலிப்பைன்சில் பணவீக்கம் 18 சதவீதமாக உயர்ந்தது. பணவீக்கத்தை மூடிமறைக்க, பிலிப்பைன்சில் அமெரிக்க இராணுவ தளத்தின் வாடகைக்கு முன்பணமாக மார்கோஸ் 100 மில்லியன் டாலர் கோரினார், அவ்வாறே அதை பெற்றார்.

அமெரிக்காவின் நேரடி மாதிரியாக உருவாக்கப்பட்டிருந்த பிலிப்பைன்ஸ் அரசியல் அமைப்பு, எந்த ஜனாதிபதியும் இரண்டு முறை மட்டுமே அப்பதவிக்கு வர முடியும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது. 1973ல் நடக்கவிருந்த தேர்தல் மார்கோஸின் மனதில் ரீங்காரமிட்டது. பதவி வரையறைகளை தவிர்க்க, 1971ல் அவர் அரசியல் அமைப்பைத் திருத்த முயன்றார். நினோய் அகினோவின் தலைமையிலான போட்டி அரசியல் குடும்பங்களிடம் இருந்து கிளம்பிய கூரிய எதிர்ப்பை அவர் சந்தித்தார், மற்றும் திருத்துவதற்கான அந்த முயற்சியில் தோல்வி அடைந்தார். அவரின் சட்டரீதியான சூழ்ச்சிகள் பயனடையவில்லை என்றவுடன், அதற்கு மாறாக ஓர் இராணுவ சட்ட அறிவிப்பிற்கு வந்தடைந்தார்.

தளபதிகள் மற்றும் இரண்டு குடிமக்களைக் கொண்ட ஒரு கழகத்துடனும், கோரியின் உறவினரும், போட்டியாளருமான Eduardo "Danding" Cojuangco உடனும், மற்றும் பாதுகாப்பு மந்திரி Juan Ponce Enrile ஆகியோருடன் கூடி வேலை செய்து, மார்கோஸ் அவரின் அறிவிப்பை தீட்டினார். 1965ல் இந்தோனேஷியாவில், இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சியின் (PKI) 500,000த்திலிருந்து ஒரு மில்லியன் வரை உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் கொன்று குவித்த ஓர் இரத்த குளியலில் அதிகாரத்தைக் கைப்பற்றிய சுஹார்டோவின் தளபதிகளிடம் இருந்தும் அவர் ஆலோசனைகளைப் பெற்றார்.

1972 ஆகஸ்டிலிருந்து செப்டம்பர் வரையில், மணிலா முழுவதும் முக்கிய வியாபார மற்றும் அரசு கட்டிடங்களில் நடுஇரவில் தொடர்ச்சியான குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தது. மார்கோஸ் இந்த குண்டுவெடிப்புகளுக்கு ஒத்து பாடினார்; அவர் கம்யூனிஸ்டுகளை குற்றஞ்சாட்டினார். இராணுவ சட்டத்தின் முக்கிய சிற்பியான என்ரெல், ஆயுததாரிகளினால் அவர் வாகனத்தை துப்பாக்கியால் சுட்டு, ஒரு திடீர் தாக்குதலை அவருடைய சொந்த சகாக்களினால் அரங்கேற்றினார். உண்மையில் அவருடைய சிறப்பு பாதுகாப்பு படையினருடன் அவர் ஒரு பிறிதொரு காரில் பயணித்தார். மார்கோஸ் மீண்டும் கம்யூனிஸ்டுகளை குற்றஞ்சாட்டி, இராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்தி அதிகாரபூர்வமான பிரகடனம் 1081ல் கையெழுத்திட்டார்.மேலும் அவர் அவருடைய அரசியல் எதிரிகள் அனைவரையும் கைது செய்ய துருப்புக்களை அனுப்பினார். முதலில் கைது செய்யப்பட்டவர் - நினோய் அகினோ.

பல விஷயங்களில் மார்கோஸைப் போலவே அகினோவும் ஓர் ஈர்ப்புமிக்க அரசியல்வாதியாக இருந்தார். அவரின் அரசியல் வாழ்க்கை பல தொடர்ச்சியான சாதனைகளை அமைத்தது: அவர் 35 வயதில், பிலிப்பைன்ஸ் வரலாற்றில் இளவயது மேயராக, இளவயது துணை-ஆளுநராக, இளவயது செனட்டராக இருந்தார். அவர் ஒரு முக்கிய அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவராவர்.

அவர் தந்தை ஜப்பானிய ஆக்கிரமிப்பின் கீழ் அவை தலைவராக இருந்தார். அமெரிக்க படைகள் திரும்பி சென்றதாலும், புதிய சுதந்திர பிலிப்பைன்சின் முதல் நிர்வாகத்தாலும் அதிகாரத்துவ ஒத்துழைப்பாளர் உயர்தட்டினராலும் உடனடியாக அவரை மன்னித்து விட்டார்கள். அமெரிக்கர் இல்லாதபோது ஜப்பானியர்களுக்கு எதிராக சண்டையில் ஈடுபட்ட விவசாய இராணுவமான ஹக்பலாஹப் (Hukbalahap), மிக மோசமாக விலை கொடுத்ததுஅவர்கள் மொத்தமாக நிராயுதபாணி ஆக்கப்பட்டார்கள், பலர் கைது செய்யப்பட்டார்கள்.

ஈர்ப்பும் மற்றும் அரசியல் செல்வாக்கிற்கும் கூடுதலாக, கொஜாங்கோ குடும்பத்தின் நிதியுதவியையும் நினோய் கொண்டிருந்தார். 1973ல் ஜனாதிபதியாக இருந்திருக்க வேண்டிய மனிதர் அவர், ஆனால் 1973 அவரை Aguinaldo முகாம் சிறையில் தான் கண்டது. நீதிமன்றத்தின் முன் கைதிகளை நிறுத்தும் எழுத்தாணை (The rit of habeas corpus) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மார்கோஸ் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களை கைது செய்தார். போட்டியாளர்களின் குடும்பங்களின் சொத்துக்களின் கட்டுப்பாடுகளை அவர் பறிமுதல் செய்தார், அவற்றை அவர்தம் கூட்டாளிகள் குழுவின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தார், மேலும் அவற்றை சூறையாடினார். சொத்துக்களையும் அதிகாரபலத்தையும் கொண்ட ஆளும் வர்க்கச் சிறுகுழு குறிப்பிட்ட பிரிவுகள் மார்கோஸின் கீழ் மலர்ச்சி பெற்றார்கள்; பிறர் கொள்ளையடிக்கப்பட்டார்கள்.

பெருந்திரளான எதிர்ப்பு காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையைச் சந்தித்தார்கள். கடத்தல், சித்திரவதை, மற்றும் மொத்தமாக தூக்கிலிடப்படல் ஆகியவை வழக்கமாக இராணுவத்தால் நடத்தப்பட்டது; இந்த பழக்கம் salvaging என்று அறியப்பட்டது. 1970கள் நகர்ந்து கொண்டிருந்த போது, மார்கோஸ் அவரின் வர்க்க அடிப்படையிலான ஆதரவை இழந்தார். நகர்புற மத்திய வர்க்கம், முன்னர் விருப்பமுற்றிருந்த தொழில்நுட்ப அறிஞராட்சி கோட்பாட்டாளர்கள், மெதுவாக மருட்சியிலிருந்து விடுபட்டது. நாட்டிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள்; தங்கள் தலையைக் கவிழ்க்க முடியாதவர்கள் மெளனமாகவும், செயலற்ற வகையிலும் மார்கோஸ் ஆட்சியின் ஒரு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். மார்கோஸின் செல்வாக்கு அப்போது இராணுவத்தின் மீதிருந்த அவரின் இறுக்கமான கட்டுப்பாட்டின் அடித்தளத்தில் இருந்தது, அவர் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து இராணுவத்தின் அளவு மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.

இராணுவ சட்டத்தால் இரண்டு குழுக்கள் இலாபம் அடைந்தன: இராணுவமும், புதிய பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of the Philippines - CPP) மற்றும் அதன் ஆயுதப்பிரிவான புதிய மக்கள் இராணுவமும் (New People's Army - NPA)

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியும், இராணுவச் சட்டமும்

1950களின் மத்தியபகுதியில், பிலிப்பைன்ஸ் மொழியில் Partido Komunista ng Pilipinas (PKP) என்றழைக்கப்பட்ட பிலிப்பைன்சின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி, செயலற்றநிலை மற்றும் சிதைவுக்குமான ஒரு காலத்தில் நுழைந்தது. PKP இன் கெரில்லா இராணுவத்தின் கிளர்ச்சியாளர்களை (Hukbo Mapagpalaya ng Bayan (HMB) அதாவது விவசாய Hukbalahap இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் மறுவடிவம் பெற்றது) மேக்சேசே(Magsaysay) நிர்வாகம், உளவியல் யுத்தமுறையாலும் "ஹக்களை" (Huks) சுற்றியுள்ள இடங்களில் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நில சீர்திருத்தத் திட்டத்தின் மூலமாகவும் ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையைப் பயன்படுத்தி அவர்கள் வெற்றிகரமாக ஒடுக்கப்பட்டார்கள்.

இந்த திட்டமும், மேங்சேசேவின் ஜனாதிபதி பதவியும் சிமிகில் இருந்த Edward Lansdaleஆல் முழுமையாக ஆதரவு கொடுக்கப்பட்டது) 1957ல், கெரில்லா யுத்தமுறையில் இருந்து சட்டபூர்வமான போராட்டத்திற்கு உத்திகளை ஏற்கனவே மாற்றியிருந்த றிரிறின் தலைமை, அதன் "single-file" கொள்கையை அறிவித்தது. அனைத்து உறுப்பினர்களும் ஒரேயொரு கட்சி உறுப்பினரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது, மேலும் இந்த "single file" முறையில் வாய்வார்த்தையாக பொதுக்கட்டளைகளும் அளிக்கப்பட்டன. றிரிறின் வலையமைப்புகளும், ஒருங்கிணைக்கும் குழுக்களும், சாரத்தில், சுய-சிதைவிற்குள்ளாகி இருந்தன. ஒரு சில கெரில்லா பிரிவுகள், சட்டரீதியாக போராடி வந்தவர்களின் மெய்பாதுகாப்பிற்கும், பாதுகாப்பு வேலைகளிலும் ஈடுபட்டு தங்களை காப்பாற்றிக்கொண்டன. காப்பாற்றப்பட்ட பிரிவுகளில் Kumander Dante's central Luzon commandம் இருந்தது, இது தான் புதிய மக்கள் இராணுவத்தை (NPA) உருவாக்கிய பிரிவாகும்.

இவ்வாறு 1950களின் பிற்பகுதியில் பிலிப்பைன்ஸ் சமுதாயம் முழுவதும் ஒரேசமயத்தில் முதலாளித்துவ தேசியவாத கொள்கைகளும், மாணவர் எதிர்ப்பெழுச்சியும் வெடித்த போது பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி, ஏறத்தாழ செயலற்று போன அமைப்பாக இருந்தது. 1960 காலப்பகுதி முழுவதும் அதனுடைய அழிவுநிலை அதற்கு தொடர்ந்தது. லிஙியி மற்றும் நிக்சனுடன் நடந்த பிரத்யேக உரையாடல்களில் இமெல்டா மார்கோஸ், கம்யூனிஸ்ட் கிளர்ச்சியை பகிரங்கமாக குற்றஞ்சாட்டி மில்லியன் கணக்கான டொலர்களை பெற்றுக்கொண்டார். பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி, அவர்களின் அனைத்து விருப்பங்களுக்காகவும் தேவைகளுக்காகவும் முடிவில்லாமல் உயிர்வாழ்ந்தது.

ஜோமா என்றழைக்கப்பட்ட ஜோஸ் மாரியா சிசன், 1969ல் பிலிப்பைன்சில், CPP என்ற முதலெழுத்துக்களை கொண்ட ஒரு புதிய கம்யூனிஸ்ட் கட்சியை இப்போது உருவாக்கினார். ஜோமா, ஐலோகோஸிலிருந்து வந்த நிலவுடைமைகள் கொண்ட மெஸ்டிஜோ குடும்பத்தின் ஒரு குழந்தை ஆவார். 1950களில் பகட்டு ஆரவார அரசியல்வாதிகளுடன் வளர்ந்த அவர், அவர்களின் தேசியவாதத்தால் ஆழமாக ஈர்க்கப்பட்டிருந்தார்.

1960களின் தொடக்கத்தில், அவர் இந்தோனேஷியாவிற்கு சென்றார், அங்கு அவர் Aidit இன் கீழ் றிரிமி இன் மாவொயிசத்தின் (Maoism) அறிமுகத்தைப் பெற்றார். பிலிப்பைன்சிற்கு திரும்பிய அவர், PKP இல் இணைந்து ஒரு சுறுசுறுப்பான இளைஞர் அணியை உருவாக்கினார். அவரின் தீவிர நடைமுறைவாதம் அப்போதிருந்த தலைமையை பற்றிய அவரின் கூரிய விமர்சனமும் மத்திய குழுவின் கோபத்தை அவருக்கு ஈட்டி தந்தது, மேலும் 1960களின் பிற்பகுதியில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

1969 ஜனவரியின் தொடக்கத்தில், மேங்கடரிம் (Mangatarem), பேன்ங்கசினன் (Pangasinan) ஆகியவற்றின் ஓர் மிகப் பின்தங்கிய தொலைதூர பகுதியில், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க ஜோமா சிசன் 11 கூட்டாளிகளை சந்தித்தார். ஜனவரி 3ல் அந்த மாநாடு தொடங்கியது, ஆனால் Mao Zedong இன் பிறந்தநாளை கெளரவிக்கும் வகையில், கூட்டு ஒப்பந்தப்படி காங்கிரஸின் தேதி டிசம்பர் 26, 1968 என்று பதிவு செய்யப்பட்டது. அந்த காங்கிரஸில், "Rectify Errors and Rebuild the Party" என்ற தலைப்பில் முன்னரே எழுதப்பட்ட ஓர் அறிக்கையை சிசன் சமர்ப்பித்தார். பிலிப்பைன்ஸ் சமுதாயம், அரை நிலபிரபுத்துவத்தையும், அரை காலனித்துவ உற்பத்தி முறையையும் கொண்டிருக்கிறது என்று கூறிய அவர், "நகரத்தை சுற்றிவழைக்க கிராமப்புறத்தை பயன்படுத்துவது என்ற உலக உண்மை தத்துவம் தோற்கடிப்பட முடியாதது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு "நீண்ட மக்கள் யுத்தம்" தான் இதற்கு ஒரே உருப்படியான தீர்வு என்று அவர் அறிவித்தார்.

இந்த "மக்கள் யுத்தத்தை" நடத்த மக்கள் இராணுவத்தின் தேவைக்காக, பிவிஙி கெரில்லாக்களில் களத்தில் கடைசியாக மீதமிருந்தனவற்றில் ஒன்றான Kumander Dante என்றழைக்கப்பட்ட Bernabe Buscayno ஐ ஜோமா சிசன் அணுகினார். Kumander Dante இன் தலைமையின் கீழ், மார்ச் 29, 1969ல் சிறிறின் ஆயுதந்தாங்கிய பிரிவு, புதிய மக்கள் இராணுவமாக (NPA) உருவானது.

CPP-NPA ஒரு சிறிய, குறிப்பிடத்தக்கதல்லாத ஓர் அமைப்பாக இருந்தது. அது சிலரை நியமித்தது, சிலரை சேர்த்துக் கொண்டது. எவ்வாறிருப்பினும், இராணுவச் சட்டம் மற்றும் அமைப்புகளின் சட்ட வடிவங்கள் மீதான அடுக்குமுறையின் அறிவிப்பால், NPA இலும், மலைகளில் கெரில்லாக்களின் ஆயுதந்தாங்கிய போராட்டங்களில் சேர்வதைத் தவிர பலருக்கு வேறு மாற்று இல்லாமல் இருந்தது. குட்டி-முதலாளித்துவ அறிவுஜீவிகள், அதிருப்தி அடைந்திருந்த விவசாயிகள், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் தலைவர்கள் அனைவரும் "கிராமப்புறங்களில் இருந்து நகரைச் சுற்றி வளைக்க" அனுப்பப்பட்டார்கள். மார்கோஸின் சர்வாதிகாரம் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட, NPA மேலும் அதிகமாக வளர்ச்சி அடைந்தது. சித்தாந்தரீதியாக தோற்றுபோன சிறிறி க்கு இராணுவ சட்டம் தான் மிக சிறந்ததாக அமைந்தது.

1970èOTM NPA 60 உறுப்பினர்களில் இருந்து 12,000 உறுப்பினர்களாக வளர்ந்தது.

நினாய் அகினோவின் படுகொலை

1981ல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மூலப்பொருட்களின் சர்வதேச விலையுயர்விலும், அமெரிக்காவின் மற்றும் பல்தரப்பு கடன்வழங்கும் அமைப்புகளின் தொடர்ச்சியான வெளிபுறத்திலிருந்த ஆதரவிலும் 1970 காலப்பகுதி முழுவதும் பிலிப்பைன்ஸ் பொருளாதாரம் மிதக்க வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தற்போது, மார்கோசின் நெருங்கிய நண்பர்களாலும் நடத்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் மோசமான கடன்சுமைகளாலும், cost of debt சேவைகள் மீது அமெரிக்க டாலரின் மதிப்பின் உயர்வால் ஏற்பட்ட விளைவுகள் பிலிப்பைன்ஸ் பொருளாதாரத்தில் ஒரு கணிசமான சுருக்கத்தை ஏற்படுத்தின. மார்கோஸிற்கு மிஞ்சியிருந்த மத்தியதர வகுப்பின் ஆதரவும் காணாமல் போனது.

எவ்வாறிருப்பினும், பொருளாதாரம் மட்டும் நலிவுற்றிருக்கவில்லை. மார்கோஸிற்கு தோல் நோயும் இருந்தது; அவர் இறந்து கொண்டிருந்தார். இது மார்கோஸ் கூட்டாளிகளின் வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். மார்கோஸ் பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வதில்லை. அவர் மெதுவாகவும், கரகரப்பாகவும் பேசினார். அவரின் நெருங்கிய உறவினர்கள் மத்தியில், மார்கோஸிற்கு அடுத்து யார் பதவிக்கு வர வேண்டும் என்ற ஒரு போட்டியாக, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டி இருந்தது.

மார்கோஸ் பதவியில் இருந்து இறங்கிய பின்னர், பாதுகாப்பு மந்திரியும், இராணுவ சட்டத்தை உருவாக்கியவருமான என்ரைல் (Enrile) அவ்விடத்திற்கு வருவார் என்று நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மார்கோஸ் வேறு திட்டங்கள் வைத்திருந்தார், அவர் இமெல்டாவை (Imelda) அவ்விடத்திற்கு கொண்டு வர விரும்பினார். மார்கோஸின் கீழ் அவரின் பிரத்யேக மெய்காப்பாளராக இருந்து பின்னர் பிலிப்பைன்சின் ஆயுதந்தாங்கிய படைக்கு தலைவராக உயர்வு பெற்ற ஓர் ஐலோகனோ (Ilokano) படையினரும், மார்கோஸின் காட்டுமிராண்டித்தனமான கொள்ளைகளின் நம்பிக்கைக்குரிய வேலையாளுமான ஜெனரல் வெர் (General Ver) மூலமாக தன் விருப்பத்தைச் செயல்படுத்த மார்கோஸ் நம்பிக்கை கொண்டிருந்தார். அதிகாரத்தைக் கைப்பற்ற நயவஞ்சகமான என்ரைல் வேறு வழிச் சதிகளைத் திட்டமிடத் தொடங்கினார்.

மார்கோஸின் நோய் பற்றியும், அவரின் மரணம் குறித்தும் வதந்திகள் பரவின. போஸ்டனில் நாடு கடத்தப்பட்டிருந்த நினோய் அகினோ, இந்த வதந்திகளைக் கேள்வியுற்று பிலிப்பைன்ஸிற்கு திரும்ப முடிவெடுத்தார், ஜனாதிபதி பதவி எப்போது சாத்தியமோ அப்போது அங்கிருக்க (பிலிப்பைன்சில்) அவர் முடிவெடுத்தார். 1983, ஆகஸ்டு 21ல், அகினோ மணிலாவில் வந்திறங்கினார். அவர் டார்மேக் விமானநிலையத்தின் படிகளில் மேலிருந்து கீழே இறங்கி வரும் போதே, தலையின் பின்புறம் அவர் சுடப்பட்டார்.

ஒரு பலியாடு குற்றஞ்சாட்டப்பட்டது; பாதுகாப்பு படைகளால் துப்பாக்கி குண்டுகளால் சல்லடையாக துளைக்கப்பட்ட நிலையில், டார்மேக்கில் அகினோக்களின் முன்னால் அவர் உடல் கிடந்தது. இமெல்டாவும், வெரும் இதில் நிச்சயமாக சம்பந்தப்பட்டிருந்தார்கள். அதிகாரத்தைத் அவர்களுடைய பிடியில் தக்க வைக்க அவர்கள் முடிவெடுத்தார்கள்.

அவருடைய கணவரின் இறுதிஊர்வலத்தில் கலந்து கொள்ள கோரஜன் அகினோ பிலிப்பைன்சிற்கு திரும்பினார். அவருடைய கணவர் தொடப்படாமல் இருக்க வேண்டும் என்றும், திறந்த பெட்டியில் இரத்தக்கறையுடனான அவரின் உடல் காட்சிக்கு வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதன் மூலம், அவர் அவருடைய அரசியல் மதிநுட்பத்தைக் காட்டினார். நினாயின் இறுதி ஊர்வலம் மார்கோஸிற்கு எதிரான ஓர் அரசியல் பேரணியாக மாறியது, இதில் இரண்டு மில்லியன் மக்கள் திரண்டு சென்றனர்.

நினாய் படுகொலையால் எழுந்த போராட்டங்களைக் கட்டுப்படுத்த ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. தேசிய முதலாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவ்வமைப்பு, பிலிப்பைன்ஸ் பொருளாதாரத்தின் மீதான மார்கோஸின் சூறையாடலை எதிர்த்தது, ஆனால் தொழிலாளர் வர்க்கத்தின் சக்தியையும், சோசலிச புரட்சி ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் அது அஞ்சியது. அகினோவிற்கான நீதி, அனைவருக்குமான நீதி (JAJA) என்றழைக்கப்பட்ட அந்த அமைப்பு, மார்கோஸ் எதிர்ப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பிலிப்பைன்ஸ் தொழிலாளர் வர்க்கத்தையும், விவசாயிகளையும் ஒன்று திரட்ட விரும்பியது, ஆனால் அவர்களின் சொந்த வர்க்க நலன்களைத் தொடர்வதிலிருந்தும் அவர்களைத் தடுக்க விரும்பியது. நாளாந்த அடிப்படையில் இந்த நிலைநோக்கைச் செயல்படுத்துவதில் JAJA தயங்கியது.

"மக்களின் சக்தி"

1985ன் பின்பகுதியில் ஏற்பட்ட சர்வதேச மற்றும் உள்நாட்டு அழுத்தம், 1986 பெப்ரவரியில் ஓர் திடீர்தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் நிலைக்கு மார்கோஸைக் கட்டாயப்படுத்தியது. எதிர்தரப்பின் போட்டிப்போடும் குடும்ப நலன்கள், ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரத்தில் அவர்கள் ஈடுபடுவதைத் தடுக்கும், அதன் காரணமாக, அவரால் தேர்தலின் முடிவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ள முடியும் என்று மார்கோஸ் நம்பிக்கையாக இருந்தார். பிலிப்பைன்ஸ் கத்தோலிக் ஆலயத்தின் தலைவர் ஜேம்ஸ் கார்டினல் சின் உள்ளே நுழையாமல் இருந்திருந்தால், மார்கோஸின் கணிப்புகள் ஓரளவிற்கு சரியாக கூட இருந்திருக்கலாம்.

1970களில் இருந்து 2005ல் அவர் மரணம் அடையும் வரையில், கார்டினல் சின் பிலிப்பைன்ஸின் மதிப்பார்ந்த ஒப்பனையாளராக-அதாவது ஒரு கிங்மேக்கராகவும், திறமையுடன் கணிக்கும் அரசியல் சூத்திரதாரியாகவும் விளங்கினார். அவரின் அங்கீகாரம், ஓர் அரசியல் வேட்பாளரை உருவாக்கியது, அவரின் அங்கீகாரமறுப்பு, ஓர் அரசியல் வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவதாக இருந்தது. துயரப்பட்ட விதவையான Cory ஜனாதிபதியாக இருக்கலாம் என்றும், எதிர்தரப்பின் முக்கிய போட்டியாளராக இருந்த சால்வடோர் லாரல் (Salvador Laurel) துணை ஜனாதிபதியாக இருக்கலாம் என்று கூறி, எதிர்தரப்பின் உட்பூசல்களில் கார்டினல் சின் தலையிட்டார்.

பெப்ரவரி 1986 தேர்தலில் மார்கோஸின் வெளிப்படையான மோசடித்தனம், சர்வாதிகாரத்தால் அமைக்கப்பட்ட மிகுதியான தரங்கள் கூட ஆட்டங்காணுவதாக இருந்தன. வாக்குப்பெட்டிகள் வாக்குகளால் திணித்து நிரப்பப்பட்டன; மற்றவை திருடப்பட்டன; வாக்காளர்கள் பட்டியலில் இருந்து மில்லியன்கணக்கான பெயர்கள் காணாமல் போயின. மாபெரும் ஏமாற்றுத்தனத்திற்கு இடையில், அகினோவின் வெற்றி வெளிப்படையாக இருந்தது.

மார்கோஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அகினோவின் பிரதிபலிப்பு, தேசிய முதலாளித்துவத்தின் பலவீனத்தின் ஒரு தெளிவான உதாரணமாக இருந்தது-நேச நிறுவனங்களை ஒத்துழையாமைக்கு அவர் அழைப்பு விடுத்தார். அவர் ஆதரவாளர்கள், மார்கோஸ் கூட்டாளிகளின் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதைக் கைவிட்டார்கள். மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு உட்பட, பல எண்ணிக்கையிலான பொருட்களின் மீதிருந்த பெரும்பாலான கூட்டாளிகளின் ஏகபோகம் இருந்த ஒரு நாட்டில், இந்த அழைப்பு வலிவற்று இருந்ததுடன், சாத்தியமற்றும் இருந்தது.

எவ்வாறிருப்பினும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அவரின் சந்தர்ப்பமாக இதை என்ரைல் கருதினார். இராணுவத்தின் மீதான மார்கோஸின் பிடியும் முறிந்து கொண்டிருந்தது. மார்கோஸின் இனவாத நெபோடிசத்தால் (Ethno-nepotism) the favouring of relatives or friends, especially by giving them jobs.) மத்திய மற்றும் கீழ்நிலை அதிகாரிகளின் பதவி உயர்வு தள்ளிப்போடப்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த அவர்கள், அந்த சர்வாதிகாரம் தொடர்வதை எதிர்க்க ஓர் அதிருப்தி எதிர்ப்பு அணியை உருவாக்கினார்கள்.

ஜனநாயகம் அல்லது கொரஜன் அகினோவின் வெற்றியில் இந்த வலது-சாரி இராணுவ அணிக்கு எவ்வித ஆர்வமும் இருக்கவில்லை. ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவ படையை விரும்பிய அவர்கள், மார்கோஸின் பாரபட்ச நடவடிக்கைகள் அதிகாரத்திற்கும், இராணுவத்தின் திறனிற்கும் குழிபறிப்பதாக அவர்கள் பார்த்தார்கள். என்ரைலும், மார்கோஸின் உறவினரான (Second cousin) ஜெனரல் பெடல் ராமோசும் இந்த எதிர்ப்பை ஒருங்கிணைத்தார்கள். நடைபெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்த பெருங்குழப்பத்தில், மணிலா மாநகரத்தின் முக்கிய பெருவழியான Epifanio de los Santos Avenue (Edsa)ல் இரண்டு இராணுவ தளங்களை அவர்கள் கைப்பற்றினார்கள். என்ரில், மார்கோசை வெளியேற்றி பிரதமராக தன்னை அறிவிக்க எண்ணியிருந்தார்.

மார்கோஸ் நோய்வாய்பட்டு வலுவற்றிருந்தார். அவரால் எழுச்சிக்கு சரியான பிரதிபலிப்பைக் காட்ட முடியவில்லை. இருபத்தி நான்கு மணி நேரங்கள் கடந்தது, மேலும் மேலும் துருப்புகள் தோற்கடிக்கப்பட்டன, கார்டினல் சின் மீண்டும் தலையிட்டார். கோரியின் ஆதரவாளர்கள் Edsaல் வெள்ளமென திரள வேண்டும் என்றும், பதவி கவிழ்ப்பு திட்டம் தீட்டுபவர்களைச் சுற்றி ஒரு மனித முற்றுகை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறி கத்தோலிக்க ரேடியோ வெர்டாசில் அவர் தமது கோரிக்கையை ஒளிபரப்பினார். அந்த பதவி கவிழ்ப்பு, கோரி அகினோவின் சார்பில் நடக்க வேண்டும் என்று அவர் வெளிப்படையாக அறிவித்தார்.

பத்து நூறாயிரக்கணக்கான பிலிப்பைனியர்கள் அந்த அழைப்புக்கு செவிமடுத்தார்கள். இறுதியாக பதவிக் கவிழ்ப்புக்கு எதிராக டாங்கிகளை மார்கோஸ் அனுப்பிய போது, அவர்கள் பாதை முழுவதுமாக எதிர்ப்பாளர்களால் மறிக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டார்கள். சர்வதேச ஊடகத்தால் நிராயுதபாணியான செவிலியர்கள் டாங்கிகளின் முன்னால் மண்டியிட்டிருந்த அந்த திகைப்பூட்டும் படங்களை அளித்த அந்த நிகழ்வு, "மக்கள் சக்தி" என்று அழைக்கப்பட்டது. டாங்கிகளைச் சுடச் சொல்லி உத்தரவிட வெர் விரும்பினார், ஆனால் மீண்டும் மார்கோஸ் தயங்கினார்.

அமெரிக்க அரசுதுறைகளில் இருந்த பலர், மார்கோஸூடனான ரீகனின் நெருங்கிய உறவை நீண்டகாலமாக வெறுத்து வந்தார்கள். மக்கள் தொடர்பில் மார்கோஸ் மிகவும் மோசமாக இருந்தார்; அவர் வியாபாரத்திலும் மோசமாக இருந்தார். குரோனியின் கட்டுப்பாட்டிலிருந்த வியாபாரங்களும், கட்டற்ற ஊழல்களும் மற்றும் இலஞ்சமும் பலரால் விரும்பப்பட்ட நவதாராள கட்டுப்பாடற்ற சந்தை கொள்கைக்குள் ஊடுறுவ முடியவில்லை.

எவ்வாறிருப்பினும், 1960கள் வரையில் ரீகனியர்கள் மார்கோஸிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். கலிபோர்னியாவின் ஆளுநராக ஓர் அரசு விஜயத்தில் ரோனால்டும் நான்சியும் கூட பிலிப்பைன்ஸிற்கு வந்திருந்தார்கள். நான்சியும், இமெல்டாவும் வார அடிப்படையில் பலமுறை தொலைபேசியில் ஒருவருடன் ஒருவர் பேசி இருக்கிறார்கள். 1980களில் உதவி ஜனாதிபதி புஷ்ஷின் பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது, "ஜனநாயக கொள்கைகளுக்கான மார்கோசின் பற்றை" அவர் பிரபலமாக புகழ்ந்தார். 1986ல் நடத்தப்பட்ட இடைத்தேர்தலுக்குப் பின்னர், "இரண்டு தரப்பிலும்" வன்முறையும், மோசடியும் நடந்திருப்பதாக ரீகன் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார்.

பெப்ரவரியின் நிகழ்வுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதற்கு பின்னர், ரீகனின் நெருக்கமான ஆலோசகர்கள் கூட மார்கோஸைக் கைவிட்டார்கள். பெப்ரவரி 25, ஞாயிறன்று, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், மார்கோஸ் அதிகாரத்தை கைவிட வேண்டும் என்று மூத்த ஆலோசகர்களான Shultz, Wolfowitz, Armacost and Poindexter ஆகியோர் வாதிட்டார்கள். மத்திய புலனாய்வு ஆணையத்தின் இயக்குனர் இராபர்ட் கேட்ஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் காஸ்பர் வென்பெர்கர் மார்கோசை தாக்கினார்கள். ரீகனும் அவ்வாறே செய்தார்.

பல பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், மார்கோஸ் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. பெப்ரவரி 26, இரவு 9.00 மணிக்கு இந்த செய்தி மார்கோஸிற்கு தெரிவிக்கப்பட்டது, அவரையும் இமெல்டாவையும், அவர்களின் குழந்தைகள் மற்றும் வெர் ஆகியோரையும் நாட்டை விட்டு வெளியேற்றிக்கொண்டு நான்கு ஹெலிகாப்டர்கள் பறந்து சென்றன. ஜனாதிபதியாக அறிவிக்கப்படும் நிலையில் இருந்த அகினோவிற்கு அமெரிக்கா அதன் ஆதரவைத் தெரிவித்தது, சின்னின் தந்திரங்களுக்கு அகினோ நன்றி தெரிவித்தார். அகினோவின் கீழ் பாதுகாப்பு மந்திரியாக இருக்க என்ரைல் சம்மதம் தெரிவித்தார்.

அகினோவின் ஜனாதிபதி பதவிக்காலம்

சர்வாதிகாரியின் வெளியேற்றம், எப்போதுமே அகினோவின் சிறப்பு திறமையாக வர்ணிக்கப்படுகிறது. அவர் பிலிப்பைன்சில் மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்டியதாக அனைத்து பத்திரிக்கை செய்திகளும் குறிப்பிடுகின்றன. அவர் ஒரு சிறந்த ஜனாதிபதியாக இல்லை, ஆனால் "ஒரு சாதாரண வீட்டுப்பெண்ணின் ஊக்கத்திலிருந்து அதிகாரத்திற்குள்" உங்களால் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? என்று அவர்கள் விட்டுகொடுத்தார்கள்.

ஆனால் இது இட்டுக்கதைகளின் மடத்தனமான தொடர்ச்சியாகும். மார்கோஸ், ஓர் இராணுவச் சதியாலும் ஒரு தலைமை மதகுருவின் அரசியல் சூழ்ச்சிகளினாலும் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் காலங்கடந்த தலையீட்டாலும் தான் அவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார்.

"மக்கள் சக்தி" பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தில் ஓர் அசகாய முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தது. மேரி மீதான பக்தியையும், வர்க்கமாக பிரிக்கப்படாத பெருந்திரளான மக்களின் கூட்டத்தையும் Edsa and Ortigas Avenueஇன் முனையில், வித்தியாசமாக ஒன்று கூட்டுவதன் மூலம், அது பிலிப்பைன்ஸ் சமூகத்தில் எவ்வாறாயினும் நிரந்தரமான மாற்றத்தை உண்டாக்கும் என்ற கருத்து இருப்பதைக் காட்டுகிறது.

எவ்வாறிருப்பினும், இது கட்டுக்கதை மட்டுமல்ல. அகினோ ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட்டபோது, அவர் ஒரு சாதாரண "குடும்ப பெண்ணாக" மட்டும் இருக்கவில்லை. இது, அநீதியால் பாதிக்கப்பட்ட ஒரு சாதாரண குடும்ப பெண்ணின் ஒரு சர்வாதிகாரிக்கு எதிரான போராட்டம் என்ற அவரின் பிரச்சாரத்தில் அவரை அவரே எவ்வாறு நிலைநிறுத்தி கொண்டார் என்பதிலும், நிச்சயமாக, வெளிப்பட்டது. அதுவொரு சக்தி வாய்ந்த கருத்துரு தான், ஆனால் அது உண்மையிலிருந்து வெகு தூரத்திலுள்ளது.

அவர் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட்டபோது, கொஜாங்கோவின் 13 ஆண்டு கால சாம்ராஜ்ஜியத்தில் கோரஜன் அகினோ கருவூல கணக்காளராக இருந்தார். அவர் சிறந்த அறிவுநுட்பமுடையவராகவும், கணக்குவழக்குகளில் துல்லியமாகவும் இருந்தார், அதிகாரத்திற்கு பழக்கப்பட்ட ஒரு பெண்மணியாக இருந்தார், செல்வ வளங்களைக் கையகப்படுத்தவும், அவற்றை தக்க வைத்து கொள்ளவும் அவரால் முடிந்தது. மேலும் அவர் மத பக்தி உடையவராகவும் இருந்தார்.

இது அவரின் ஜனாதிபதி பதவிக்கு அகநிலைமைகளை உருவாக்கியது. அவர் ஒரு பண்ணையாரின் உளவியலையும் மிகப் பரந்த பண்ணைக்கு அவர் சொந்தகாரராகவும் இருந்தார் ஒரு பாரம்பரிய கத்தோலிக்க மனோபாவத்தையும் கொண்டிருந்தார்.

ஹிஸ்பானிய சீன கலப்பின சொத்துக்களும் அதிகாரபலமும் கொண்ட ஆளும் வர்க்க சிறுகுழு கடந்த நூற்றாண்டில் மாறிவிட்டிருந்தது. சீன வழிதோன்றலின் எவ்வித அடையாளமும் கவனமுடன் துடைத்தழிக்கப்பட்டது. ஸ்பானிஷ் பாரம்பரியம் காஸ்டிலியன் (Castilian) போலித்தனத்தில் மட்டும் நீடித்து நின்றது&ஸீதீsஜீ; சொத்துக்களும் அதிகாரபலமும் கொண்ட ஆளும் வர்க்க சிறுகுழு தொடர்ந்து அவர்களை அவர்களே டான்களாகவும், டோனாக்களாகவும் (Don and Donas) (a Spanish title prefixed to a male and female forename) நிலைநிறுத்திக் கொண்டார்கள்.

சொத்துக்களும் அதிகாரபலமும் கொண்ட ஆளும் வர்க்கச் சிறுகுழு, பிலிப்பைன்சிலும், வெளிநாடுகளிலும் நிதி மற்றும் தொழில்துறை முதலாளித்துவத்தின் ஒவ்வொரு சாத்தியப்பட்ட வடிவத்திலும் அவர்களின் வழியைக் கொண்டு வந்ததால், நில பண்ணைகளுடனான அவர்தம் உறவினர்களின் தொடர்புகளும் வெளுத்துப்போனது. அவர்கள் அவர்களின் தோட்டங்களில் நீண்டகாலம் வாழவில்லை. அவர்கள் மணிலாவிலுள்ள மாளிகைகளில் வாழ்ந்தார்கள் எங்கும் பரந்திருந்த சேரிகள் மற்றும் கடுமையான ஏழ்மை ஆனால் சற்று தூரத்தில் பாரியளவில் பாதுகாவலர்களால் பாதுகாக்கப்பட்ட செல்வவளம் மிக்க அரண்மனைகள் இருந்தது.

கோரியின் உளவியலும், கொஜாங்கோ பரம்பரையின் தளிருமான அப்பெண்மணி ஜனாதிபதி பதவியில் இருந்த போது ஏற்பட்ட புறநிலைமைகளுக்கு அவர் எவ்வாறு பிரதிபலித்தார் என்பதை இது வடிவமைத்தது.

பதவி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட கனிஷ்ட நிலை அதிகாரிகள், அகினோ நிர்வாகத்திற்கு ஆதரவாக என்ரைலுக்கு சென்றார்கள். அவர்கள் இராணுவ படைகளில் ஒரு சீர்திருத்தத்தை எதிர்பார்த்தார்கள், முன்னர் மரணமடைந்தவர்களின் பதவிகளுக்குத் தங்களின் விரைவான பதவி உயர்வையும், மார்கோஸின் ஆட்சியின் போது நன்றாக வளர்ந்திருந்த கம்யூனிஸ்டு கட்சியின் மீது கடுமையான அடக்குமுறையையும், மற்றும் நன்கு செயலூக்கம் பெற்ற நகர்புற தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு புதிய அமைப்பையும் அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

மார்கோசின் ஆட்சியின் போது, பதவியிலிருந்து நீக்கப்பட்ட அனைத்து சொத்துக்களும் அதிகாரபலமும் கொண்ட ஆளும் வர்க்கச் சிறுகுழுவின் குடும்பங்களின் ஆதரவையும் அகினோ பெற்றிருந்தார். அவர்கள், தங்களின் சொத்து மற்றும் அரசியல் அதிகாரம் மீண்டும் மீட்டளிக்கப்படும் என்று எதிர்பார்த்தார்கள்.

மார்கோஸின் சகாப்தத்தின் போது, நாட்டிலிருந்து வெளியேறிய நகர்புற மத்திய வர்க்க உறுப்பினர்களிடமிருந்தும் அகினோ ஆதரவைப் பெற்றிருந்தார். அவர்கள், மீண்டும், ஒரு திறமையான, மேற்கத்திய பாணியிலான ஜனநாயகம், இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத ஒரு அறிஞராட்சி பாத்திரத்தை விரும்பினார்கள்.

அவற்றுடன், கார்டினல் சின் மற்றும் கத்தோலிக்க தேவாலயத்தின் முழு ஆதரவையும் அகினோ பெற்றிருந்தார்.

இறுதியாக, CPP-NPAஆல் நீண்டகாலத்திற்கு முன்னரே பாதிக்கப்பட்டிருந்த குட்டி-முதலாளித்துவ அறிவுஜீவிகள், தளர்வாக வரையறுக்கப்பட்ட சமூக ஜனநாயக இலக்குகளின் திசையில் அப்பெண்மணியின் கொள்கைகளைத் திசைத்திருப்பி கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையில், இப்போது அகினோவின் நிர்வாகத்தில் ஓர் இடத்தை அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஜனாதிபதியாக அவர் பதவியேற்ற முதல் ஆண்டில், அவர் ஜனாதிபதியாவதற்கு காரணமாக இருந்த வர்க்க சக்திகளின் கூட்டணி, அதிகரித்த விரோத எதிர்ப்புகளால் தெறித்துடைந்தன. அனைத்து குழுக்களையும் சமாதானப்படுத்த விரும்பிய அகினோ, ஒவ்வொருவரையும் கோபமூட்டி மனத்துயர் அடைந்தார். கிரேகோரியோ ஹோனசனின் தலைமையின் கீழ் இருந்த பாதிக்கப்படாத இராணுவ அதிகாரிகள், தொடர்ச்சியாக ஏழு சதிமுயற்சிகளில் ஈடுபட்டார்கள், ஒவ்வொன்றும் அதிகளவில் இரத்தந்தோய்ந்திருந்தது. 1986ன் பின்பகுதியில், பாதுகாப்பு மந்திரி பதவியை இராஜினாமா செய்த என்ரைல், பல இராணுவ சதிகளில் நேரடியாக தொடர்புபட்டிருந்தார்.

சதிகளுக்கு பிரதிபலிப்பாக, அகினோ அவரின் அரசாங்கத்தை முற்றிலுமாக வலதின்பக்கம் மாற்றினார். அவரின் மந்திரிசபையிலிருந்த சமூக ஜனநாயக அறிவுஜீவிகளை அவர்களின் பதவிகளிலிருந்து அவர் நீக்கினார். CAFGUs (Civilian Armed Forces Geographical Units) என்றழைக்கப்பட்ட ஆயுதந்தாங்கிய குண்டர்களை வைத்து இராணுவத் துணை கம்யூனிச-எதிர்ப்பு குழுக்களின் உருவாக்கத்திற்கு அவர் ஆதரவளித்தார். இந்த இராணுவத் துணைக் குழுவின் உறுப்பினர்கள், உத்தியோகப்பூர்வமான கம்யூனிச-எதிர்ப்பு பாதுகாப்பு என்பதன்கீழ் தொல்லைகள், பயங்கரவாதம், சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றில் ஈடுபட்டன. பிலிப்பைன்ஸ் இராணுவத்தால் இதற்கு நிதியுதவி வழங்கப்பட்டது. அகினோ, இழிவார்ந்த முறையில் இந்த CAFGUக்களை "மக்கள் சக்தியின் ஓர் உதாரணம்" என்று முத்திரை குத்தினார்.

நிலச்சீர்த்திருத்த கோரிக்கைகளுடன் நகர்புற மத்திய வர்க்கம் பத்திரிகைகளில் வெள்ளமென திரண்டது. அவர்கள் ஒரேசமயத்தில் சொத்துக்களும் அதிகாரபலமும் கொண்ட ஆளும் வர்க்க சிறுகுழு அதிகாரத்தையும் மற்றும் நிலப்பிரபுக்களின் முறைகேடுகளுக்கு பிரதிபலிப்பாக உறுப்பினர்களின் எண்ணிக்கையில் உயர்வு கண்டிருந்த NPA இன் அதிகாரத்தையும் உடைக்க விரும்பினார்கள். இங்கு அகினோவின் உண்மையான வர்க்க கூட்டணிகள் வெளிப்பட்டது. Comprehensive Agrarian Reform Program (CARP) என்று தவறாக பெயரிடப்பட்டதை இல்லாதொழிப்பதில், அவர் அரைமனதுடனான தொடர் முயற்சிகளில் ஈடுபட்டார். பெரிய நில உடைமையாளர்கள், அவர்களுடைய வர்த்தக அல்லது தொழில்துறை நிலம் என்று கூறியோ அல்லது நிலத்தின் உரிமையை கூட்டு பங்கு உரிமைக்கு மாற்றியும், கூலி விவசாயிகளுக்கு ஒரு சிறு பகுதியை மட்டும் மறுபங்கீடு செய்ததன் மூலமாகவும், இந்த சட்டத்தின் கீழ் குத்தகை அல்லது வாடகைதாரர்களுக்குத் தங்களின் நிலங்களை மறுப்பங்கீடு செய்வதை அவர்கள் தவிர்த்தார்கள்.

கொஜாங்கோகாரர்கள் இரண்டையுமே அவர்களின் நிலங்களில் செய்தார்கள். அதன் ஒரு பகுதியை மறுபங்கீடு செய்த அவர்கள், கூட்டு பங்கு உரிமையின் கீழ் மீதியை கொண்டு வந்தார்கள். கோரி அவரின் குடும்ப பண்ணையை வைத்து கொண்டார். இவ்வாறு நகர்புற மத்திய வர்க்கம் படிப்படியாக அகினோவிடமிருந்து மயக்கத்திலிருந்துதெளிந்தது.

1987, ஜனவரி 22ல், அகினோ நிர்வாகத்திடமிருந்து நியாயமான நில சீர்திருத்தத்தை வலியுறுத்த, மென்டியோலா பாலத்திற்கு குறுக்காக 10,000 விவசாயிகளின் ஒரு குழு பேரணி சென்றது. பாதுகாப்பு படைகள் துப்பாக்கி சூடு நடத்தின, இதில் பதிமூன்று பேர் கொல்லப்பட்டனர், ஐம்பது பேர் காயமடைந்தனர். இது மென்டியோலா படுகொலை என்று அழைக்கப்படுகிறது. இது அகினோவின் தொடர்ச்சியான இரக்கமற்ற பண்பையும், சொத்துக்களும் அதிகாரபலமும் கொண்ட ஆளும் வர்க்கச் சிறுகுழு நலன்களை வன்முறையுடன் பாதுகாக்க விரும்பிய அவரின் விருப்பத்தையும் தான் உட்கொண்டிருந்தது.

1987, மே மாதம் தேசிய தேர்தல்கள் நடத்தப்பட்டன. 200 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையில், 169 இடங்கள் செல்வாக்கு மிக்க குடும்பங்களிடமிருந்து வந்த பிரதிநிதிகள் வசம் சென்றது. இதில், 102 நபர்கள், 1986க்கு முந்தைய காலத்திய மார்கோஸ்-எதிர்ப்பு இயக்கத்தில் இருந்தவர்கள், மீதமிருந்த சொத்துக்களும் அதிகாரபலமும் கொண்ட ஆளும் வர்க்க சிறுகுழு சக்தியின் பல் வண்ணக் காட்சிக் கருவியில் (kaleidoscope) ஒரு குலுக்கலாக" இருந்தது. (Benedict Anderson, "Cacique Democracy in the Philippines," in The Spectre of Comparisons, London, Verso, 1998, p. 222).

அகினோ, அமெரிக்க தளங்களின் விரிவாக்கத்தை எதிர்க்க முடியும் என்ற ஆழ்ந்த உணர்ச்சித் துண்டலைக் கொடுத்து அவர் பதவிக் காலத்தைத் தொடங்கினார். 1991ல் இந்த ஒப்பந்த குத்தகையை புதுப்பிக்க வேண்டி வந்த போது, அகினோ அரசாங்கம், தவிர்க்க முடியாமல் நிதியின் தேவை இருந்த நிலையில், இந்த புதுப்பித்தலில் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினார்.

1991, ஜூனில் Mount Pinatubo எரிமலை வெடித்து கிளம்பி கிளார்க் விமானத் தளத்தை அழித்தானது மீள்புதுப்பித்தல் பேச்சுவார்த்தை செய்யும் விடயமாக இதை ஆக்கியது. அகினோ நிர்வாகம், அமெரிக்க இராஜதந்திரிகளுடன் சுபிக் கப்பற்தளத்தை புதுப்பிக்க பேச்சுவார்த்தை நடத்தியது, ஆனால் மாற்றியமைக்கப்பட்ட மீள்ஒப்பந்த குத்தகையை பிலிப்பைன்ஸ் மந்திரிசபையில் ஏற்கும்படி செய்ய அவரால் முடியவில்லை. 1992ல் அமெரிக்க கப்பற்படை பிலிப்பைன்சிலிருந்து வெளியேறியது.

அதிகரித்து வந்த வறுமை மற்றும் தொடர்ச்சியான வர்க்க மோதல் அகினோ நிர்வாகத்தைச் சூழ்ந்து கொண்டிருந்தது. மின்வெட்டுகளும், தொலைதொடர்புகளின் தடைகளும் தொற்றுநோய்கள் போல் தொடர்ந்தன. சொத்துக்களும் அதிகாரபலமும் கொண்ட ஆளும் வர்க்கச் சிறுகுழு அரசியல் தொடர்ந்தது. 1992 தேர்தலில், பிற வேட்பாளர்கள் மத்தியில், டேன்டிங் கொஜாங்கோ, இமெல்டா மார்கோஸ் மற்றும் பெடல் ராமோஸ் ஆகியோர் பதவிக்கு போட்டியிட்டார்கள். ராமோஸ் ஒரு சிறிய பெரும்பான்மையுடன் ஜனாதிபதி பதவியை வென்றார். அதே அரசியல் நடிகர்கள், அதே அரசியல் சூழ்ச்சிகளைத் தொடர்ந்தார்கள். அப்போது என்ரைல் செனட் தலைவராக இருந்தார்; கிரிகோரியோ ஹோனசன் ஒரு செனட்டராக இருந்தார்.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியும், முதலாளித்துவ தேசியவாதமும், இரண்டு கட்ட புரட்சித் தத்துவமும்

அகினோவின் மறைவுக்கு பிலிப்பைன்ஸ் ஊடகத்தின் புகழுரைகள் பல ஆதாரங்களிலிருந்து மையம் கொண்டிருந்தது. சிலருக்கு, கோரியைப் பற்றிய அவர்களின் பாராட்டு நியாயமாக, அதாவது வரலாற்றின் தவறான படிப்பின் விளைவாக இருந்தது. அவர்கள், அகினோவின் அதிகார உயர்வை ஓர் அரசியல் களங்கமற்ற கருத்துருவாக பார்த்தார்கள். கலக்கமோ அல்லது மோசடியோ இல்லாமல் பிலிப்பைன்ஸ் சர்வதேச பார்வைக்குள் வந்த ஒரு நாளை அவர்கள், அப்பெண்மணியின் நினைவுநாளாக கொண்டாடுகிறார்கள்.

பிறரை பொருத்த வரையில், கோரியின் நினைவுநாளில் அவர்கள் மடத்தனமாக பங்கேற்பதென்பது, முக்கிய நிகழ்வுகளில் கடந்த கால பங்களிப்பின் ஒரு வரலாற்றுரீதியான பார்வைகோளாறின் நினைவு கூர்வாகும். இது குட்டி முதலாளித்துவத்தின் வெறுமையான மற்றும் வரலாற்றுரீதியாக கண்டறியப்படாத கடந்த காலத்தை பற்றிய நாட்டமுடைய நினைவாகும், இது தற்கால ஜனாதிபதியான Gloria Macapagal-Arroyoன் பழமைக்கு முன் செயலற்று இருந்தது. இவர் சர்வாதிகார விருப்பங்கள் கொண்ட ஒரு குறுகிய அடாங்காப் பெண்ணும், திறமையோ அல்லது ஈர்ப்போ இல்லாத ஒரு மார்கோஸூம் ஆவார்.

ஆனால் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியையும், அதனுடைய பண்பைப் பொறுத்த வரையிலும், அகினோ மறைவின் மீதான புகழுரைகள், மார்க்சிய-எதிர்ப்பு இரண்டு கட்டப் புரட்சித் தத்துவத்தின் மீதான திவாலான கொள்கைகளின் தொடர்ச்சியாக இருந்தது.

1986ன் திடீர்தேர்தலின் போது, செயலற்று தவிர்ப்பு பங்களிப்பைச் செய்யுமாறு மக்களுக்கு CPP அழைப்பு விடுத்திருந்தது. அது மார்கோஸ் அல்லது அகினோவிற்கு மாற்றாக எதையும் முன்வைக்கவில்லை. அதன் புறக்கணிப்பிற்கான அழைப்பு, மக்களை தேசிய முதலாளித்துவத்தின் மற்றும் அகினோவின் கைகளில் கொண்டு சேர்த்தது.

தேர்தல் நெருங்கிய நாட்களில் சிறிறி ஆனது, மார்கோசிற்கும் அகினோவிற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்று அறிவித்தது. அகினோ பதவியேற்ற பின்னர், "சமரச இணக்கம்" மற்றும் "ஒரு கூட்டணி அரசாங்கம்" குறித்து அறிவுறுத்தி, CPP அகினோவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பியது, இது குறித்து ஜோமா சிசோன், அவரின் 1986 மே மாத தொடர் உரைகளில் வாதிட்டிருந்தார். இந்த சமரச இணக்கம் அல்லது ஒரு கூட்டணி அரசாங்கமானது, "அகினோவின் அரசாங்கத்திற்கும் புரட்சிகர படைகளுக்கும்" "பரஸ்பர ஆதாயமாக" அமையும் என்றும் வாதிட்டார்.

இந்த கூட்டணி அரசாங்கம் தோல்வியடைந்தால், "மத்திய வர்க்கத்திலிருந்து புதிதாக நியமிக்கப்பட்ட பரிவாரங்களும் மற்றும் மக்களை ஒடுக்க தோல்வியடைந்த பாசிச சர்வாதிகாரத்தால் பயன்படுத்தப்பட்ட அதே இராணுவத்தின் பயன்பாடும் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு துணை கருவிகளாவிருக்கும் பெரும் தரகர்களும், நிலச்சுவான்தார்களின் ஒரு புதிய அணியினுடைய அரசியல் அதிகாரத்தின் ஏகபோகமானது, பாசிச சர்வாதிகாரம் வருதலும் மற்றும் ஆயுதமேந்திய புரட்சிகர இயக்கத்தின் வெற்றியின் சாத்தியத்தை மட்டுமே விரைவுபடுத்துவதற்கு சேவையே செய்யும்." என்று அவர் தொடர்ந்தார். சர்வாதிகாரத்தின் மறுநிலைநிறுத்தம், புரட்சியின் வெற்றிக்கு உதவக் கூடும்.

அவுஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பான சோசலிச தொழிலாளர் கழகத்தின் நிக் பீம்ஸ், 1987ல் தொழிலாளர் செய்தியில் எழுதும் போது, "சிசோன் மற்றும் CPPன் அரசியல், இரு மடங்கு வீரியமிக்க விஷமாக இருக்கிறது என்று எழுதினார். இராணுவ சர்வாதிகார அபாயங்கள் வெளிப்பட்டுவளரும் வேளையில், ஒருபுறம் அவர்கள் அகினோ ஆட்சியின் பொய்தோற்றங்களை ஊக்குவிக்கிறார்கள், இதுபோன்ற ஒரு சர்வாதிகாரம் புரட்சிகர படைகளின் வெற்றியையும் விரைவுபடுத்தும் என்ற தத்துவத்தால் தொழிலாளர் வர்க்கத்தைத் தான் அவர்கள் நிராயுதபாணியாக ஆக்குகிறார்கள்" என்று விடையளித்தார்.

எட்சாவில் இருந்த மக்களின் இயக்கமும், பெர்டிணான்ட் மார்கோஸின் வெளியேற்றமும் பிலிப்பைன்ஸில் தொழிலாளர் வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற ஒரு புரட்சிகர இயக்கத்திற்கு வழியை திறந்துவிட்டது. தேவைப்பட்டதென்னவென்றால் புரட்சிகர தலைமை தான். பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி முதலில் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு கூறியது, பின்னர் புறக்கணிப்பிற்கான CPPன் அழைப்புகளை மக்கள் நிராகரித்த போது, முதலாளித்துவ தலைமையின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தை உட்படுத்த CPP முயற்சித்தது.

CPP, ஸ்ராலினிச இரண்டு கட்ட புரட்சி தத்துவத்தைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது. பிலிப்பைன்சில் புரட்சிக்கான பணிகள் தேசிய ஜனநாயகமே தவிர, சோசலிசம் அல்ல என்று அது கூறுகிறது. பிலிப்பைன்ஸ் அரை நிலப்பிரபுத்துவமும் அரை காலனித்துவமுடைய ஒரு நாடாகும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பிலிப்பைன்ஸ் மீது ஒரு பிற்போக்கு நிலை திணிக்கப்பட்டிருக்கிறது என்பது தான் CPPன் கருத்து. ஆகவே ஏகாதிபத்தியத்தை தூக்கி எறிவதற்கும், தொழில்துறைமயமாக்குவதற்கும் மற்றும் பிலிப்பைன்ஸின் ஜனநாயக அபிவிருத்திக்கும் தேசிய முதலாளித்துவம் ஒரு புரட்சிகர பாத்திரத்தை ஆற்ற வேண்டும்.

இந்த கொள்கையால் ஏற்பட்ட துயரமான விளைவுகளின் சான்றுகள் இருபதாம் நூற்றாண்டில் சிதறி கிடக்கின்றன. 1925-1927ல், சீன கம்யூனிஸ்டுகளை தேசிய முதலாளித்துவமான Kuomintangக்கு அவர்களை கீழ்ப்படுமாறு ஸ்ராலின் உத்தரவிட்டார். Kuomintangன் தலைவரான சாங் கேய்-ஷேக் ஷாங்காயின் தொழிலாள வர்க்கத்தை படுகொலை செய்தார்.

1965ல் இந்தோனேஷியாவில், இரண்டு கட்ட புரட்சித் தத்துவத்தின் அடிப்படையில் ஸ்ராலினிச PKI சுகர்னோவின் தேசிய முதலாளித்துவ நிர்வாகத்துடன் ஒத்துழைத்தது. சுகார்டோ அதிகாரத்தைக் கைப்பற்றிய போது அது நிராயுதபாணி ஆக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து 500,000 முதல் 1,000,000 வரையிலான PKI உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய காலத்தில் இந்தியா, சூடான் மற்றும் ஈராக் மற்றும் பிற நாடுகளிலும் இதே அடிப்படையிலான ஸ்ராலினிச கொள்கையால் இதேபோன்ற இரத்த விளைவுகள் தொடர்ந்தன. இரண்டு கட்ட புரட்சி தத்துவம், பாட்டாளிகளை அவர்களின் வர்க்க எதிரியான முதலாளித்துவத்தின் முகத்திற்கு முன்னால் நிராயுதபாணியாக்குகிறது.

இவ்வாறு CPP, 'தேசிய ஜனநாயக" புரட்சியை முன்னெடுத்துச் செல்ல கூடிய ஒரு முதலாளித்துவ தலைமையை கண்டறிய மூர்க்கமாய் முயல்கிறது. அதன் வெற்றுஆரவாரங்களில், தேர்தலுக்கு முன்னர் அகினோவிற்கும் மார்கோஸிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை; அமைதி பேச்சுவார்த்தைகளின் போது, அவரே ஒரு சாத்தியமான நட்புகூட்டாளியாக இருந்தார்; பேச்சுவார்த்தைகள் முறிந்த போது, அவர் மீண்டும் ஒரு பாசிசவாதியாகிவிட்டார்; இப்போது அவர் இறந்திருக்கிறார், அவரை கொண்டு அவர்கள் என்ன செய்ய இருக்கிறார்கள்?

CPPன் சட்டபூர்வ முன்னணியான தேசிய ஜனநாயக முன்னணியின் ஜோமா சிசோனும், பிற தலைவர்களும் ஆகஸ்ட் 2ல் பின்வருமாறு எழுதினார்கள்: "மார்கோஸ் சர்வாதிகாரத்திற்கு எதிராக பாசிச-எதிர்ப்பு கூட்டணியில் கொரஜோன் அகினோ ஒரு தன்னிகரில்லாத மற்றும் ஆக்கப்பூர்வமான பிரபலமாக இருந்தார்." தொழிற்சங்கங்களுக்கான CPPன் அமைப்பான Kilusang Mayo Uno (KMU) எழுதியதாவது: "பிலிப்பைன்ஸ் மக்களில் ஒருவராக இருந்து அவர் மறைந்துள்ளார்... பிலிப்பைன்ஸ் மக்களின் ஒற்றுமை சக்தியின் (எல்டா 1) வரலாற்று அடையாளத்தின் ஒரு பகுதியாக அவர் விளங்கினார். நியாயமான ஜனநாயகம் மற்றும் சமூக மாற்றத்திற்காக போராட்டத்தின் தீர்க்கப்படாத பணிகளைத் தொடர பரந்த ஐக்கியத்தை உருவாக்க இன்று நாம் வரலாற்றால் அழைக்கப்பட்டிருக்கிறோம்."

கொரஜன் கொஜாங்கோ அகினோ "மக்கள் சக்தி"யைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இவர் பிலிப்பைன்ஸில் முதலாளித்துவ நிலக்கிழார்களின் ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு உதவிய அவர், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவியாகவும் இருந்தார். "கொடுங்கோலாட்சியின் எதிரி" அல்லது "ஜனநாயகத்தின் அன்னை" என்று அவரை புகழ்ந்துரைப்பது, பிலிப்பைன்ஸ் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு கூறப்படும் பொய்யுரைகளாகும்.

தேசிய முதலாளித்துவம், நிலையான புரட்சிகர பாத்திரத்தை வகிக்கும் தகுதியையோ அல்லது பின்தங்கிய நாடுகளில் முற்போக்கான பாத்திரம் வகிக்கும் தகுதியையும் கூட இழந்து விட்டிருக்கிறது. அது ஏகாதிபத்திய மூலதனத்துடனும், நில உடைமையாளர்கள் வர்க்கத்துடனும் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது. இந்த குழுக்களுக்கு இடையில் பதட்டம் தோன்றும் போது, தொழிலாள வர்க்கத்தின் விரோதத்தையும் அச்சத்தையும் அவர்கள் அவைகளை பங்கிட்டு கீழ்ப்படுத்த வைக்கப்படுவார்கள்.

பிலிப்பைன்ஸ் போன்ற தாமத முதலாளித்துவ அபிவிருத்தி அடையும் நாடுகளில், தேசிய முதலாளித்துவத்தால் முதலாளித்துவ ஜனநாயக புரட்சி இலக்குகளை அடைய முடியாது. இந்த இலக்குகள், ஒரு தொழிலாளர் அரசை உருவாக்கும் மற்றும் ஜனநாயகத்தை மட்டுமில்லாமல், சோசலிச வழிவகைகளையும் ஆரம்பிக்கும், விவசாயிகளின் ஆதரவுடனான பாட்டாளி வர்க்கத்தினால் தலைமை தாங்கிச் செல்லப்படும் ஒரு புரட்சியால் மட்டுமே அடையப்பட முடியும். அவை ஒரு தேசிய கட்டமைப்பிற்குள் நிறைவேற்றப்பட முடியாது, ஆனால் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் ஒரு பரந்த சர்வதேச இயக்கத்தின் ஒரு பகுதியாக மட்டுமே நிறைவேற்றப்பட முடியும்.

ஒரு புரட்சிகர போராட்டத்திற்கு முன்னோக்கு வழிகாட்டுதல் சர்வதேசவாதத்தின் அடிப்படையில் தான் அமைக்க முடியும். பிலிப்பைன்ஸில் முதலாளித்துவ அபிவிருத்தியின் அளவானது, பூகோள முதலாளித்துவத்தின் ஒருங்கிணைந்த மற்றும் சமச்சீரற்ற அபிவிருத்தியின் ஒரு பகுதியாக உள்ளது. பிலிப்பைன்ஸ் தொழிலாள வர்க்கம், பிலிப்பைன்ஸ் முதலாளித்துவத்திற்கும் பெரிய நில உரிமையாளர்களுக்கும் எதிரான அதன் போராட்டத்தை, சர்வதேச ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பாகமாகவும் மற்றும் ஆசியா மற்றும் சர்வதேச பூராகவுமுள்ள அனைத்து தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்தையும் நனவுபூர்வமாக நடத்த வேண்டும்.

பாட்டாளி வர்க்கம் ஒரு சர்வதேச வர்க்கம்; அதன் பணிகள் சர்வதேசமயப்பட்டது. சர்வதேசியளவில் மட்டுமே சோசலிசம் அடையப்பட முடியும்; அது வெற்றி அடைய வேண்டுமானால், பாட்டாளி வர்க்க புரட்சி ஒரு சர்வதேச புரட்சியாக இருக்க வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்தின் நலன்கள் முதலாளிகளின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானது. ஒரு "தேசியவாத ஜனநாயக புரட்சியைப்" பின்பற்றி முதலாளித்துவத்தின் எந்த பிரிவிற்கும் பாட்டாளி வர்க்கத்தை அடிபணிய வைப்பதென்பது "பரந்த ஐக்கியத்தை உருவாக்க" தொழிலாள வர்க்கத்தை மோசமான தோல்விகளுக்கு தயார்படுத்துவதாகும்.

1986ல் நிக் பீம்ஸ் பின்வரும் சொற்களில் அவருடைய கட்டுரையை நிறைவுசெய்தார், அந்த சொற்கள் உள்ளது உள்ளவாறே இன்று பொருத்தமாக அமைந்துள்ளன:

"பிலிப்பைன்ஸ் தொழிலாள வர்க்கத்தின் எதிர்காலம், ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டுவதிலும் அதை அதிகாரத்திற்கு இட்டு செல்வதிலும் தான் தங்கியுள்ளது. ஆகவே தான், பிலிப்பைன்ஸின் புரட்சியாளர்களும் போராளிகளும் அவர்களின் வர்க்க நலனுக்காக போராட, அவர்களை ட்ரொட்ஸ்கிச கொள்கையின் கீழ் நிலைநிறுத்தி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிலிப்பைன்ஸ் பிரிவை கட்டும் பணியை தொடங்க, நாங்கள் அவர்களுக்கு அழைப்புவிடுக்கிறோம்".